Thursday, April 02, 2026

MADE IN KOREA (2026) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ நெட் பிளிக்ஸ்

                            

  

  நித்தம் ஒரு வானம்  (2022)  என்ற தரமான   படத்தைக்கொடுத்த  இயக்குனர்  ர கார்த்திக்  அவரது  பாணியில்  இருந்து  கொஞ்சம்   மாறி   தந்திருக்கும்  ஒரு வித்தியாசமான படம் தான் இது .சமூக   வலைத்தளங்களில்  வெறித்தனமான  ரசிகர்களை  வைத்திருக்கும் பிரியங்கா மோகன்  பூவே  பூச்சூடவா   நதியா   மாதிரி   ஒரு கேரத்டரில்  நடித்திருக்கும் படம்   தான் இது  

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகிக்கு சின்ன வயதில் இருந்தே கொரியா போக வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை இருக்கிறது.இதனால் இவர் பார்க்கும் சினிமாக்கள் கூட கொரியன் படஙகள் தான்.


நாயகியின் அப்பா ஒரு மெஸ் வைத்து நடத்தி வருகிறார்.நாயகிக்கு சின்ன வயதில் இருந்தே தன்னுடன் படித்த மாணவனுடன் காதல் உண்டு .இது நாயகியின் பெற்றோருக்குத்தெரியாது.


நாயகியின் காதலனுக்கு வேலை ,வெட்டி எதுவும் இல்லாததால்  கல்யாணத்தைத்தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறான்.


ஒரு கட்டத்தில் நாயகியின் பெற்றோருக்கு நாயகியின் காதல் விஷயம் தெரிய வர வீட்டில் கடும் எதிர்ப்பு.இதனால் ஊரை விட்டுப்போக திட்டம் போடுகிறார் நாயகி.

நாயகி தன் காதலனுடன் சென்னை வருகிறார்.அங்கே இருந்து இருவரும் கொரியா போகத்திட்டம்.


ஆனால் இங்கே தான் ஒரு ட்விஸ்ட்.நாயகியின் காதலன் நாயகியின் அப்பா தந்த பணத்துடன். எஸ்கேப் ஆகி  விடுகிறான்.


அறிமுகம் இல்லாத இடம் ,மொழி தெரியாத இடம் என்று நாயகி கொரியா போய் என்ன செய்தார்?என்பது மீதித்திரைக்கதை.


நாயகி செண்பாவாக பிரியஙகா மோகன் நடிப்பு அருமை.அவரது உடைகள் ,அலங்காரங்கள் எல்லாம் கலர்புல் கலக்கல்.


நாயகியின் இளம் வயது தோற்றத்தில் ரியா மனோஜ் நடிப்பும் குட்.

நாயகியின் காதலன் ஆக வரும் ரிஷி காந்த்  கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.


மற்ற அனைவரின் நடிப்பும் ஓக்கே ரகம்.

அந்தோணியின் எடிட்டிங் கில் படம் 113 நிமிடங்கள் ஓடுகிறது.

பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு படத்தின் முதுகெலும்பு.

தரண் குமார் பின்னணி இசையில் முத்திரை பதித்து இருக்கிறார்.

கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ரா கார்த்திக்.



சபாஷ்  டைரக்டர்


1   நாயகி  கொரியா போன  பின்  கதை  நன்கு  செட்  ஆகி விடுகிறது . பிரமாதமான  ஒளிப்பதிவு , அருமையான லொக்கேஷன்கள்      கண்களுக்குக்குளிர்ச்சி 


2  நாயகியின்   முக பாவனைகள் , உடல் மொழி ,  டயலாக்   டெலிவரி   என்று  அனைத்தும்   அசத்தல் . ஒன விமன்  ஆர்மியாக  படத்தில்  கோலோச்சுகிறார் 


3 கொரியன்   பாட்டி  , அவளது   பையன் , காதலன்   நடிப்பு   அருமை . 


4  நாயகி  கொரியா   வில்    அழும்   சீனில்  கிதாரில்  பூங்காற்றினிலே  உன் சுவாசத்தை ( உயிரே)  பாடலை  வாசிக்கும் சீன டச்சிங்க் 

5 பாட்டி + நாயகி காம்போ சீன்கள் பூவே பூச்சூடவா பத்மினி-நதியா காம்போ சீன்களை நினைவுபடுத்தும் அளவு எமோஷனல் கனெக்ட் கொடுத்த விதம்.


 6. நான் எவ்வளவு பெரிய வலியில் இருக்கிறேன் என்பதை சொல்லக்கூட அருகில் ஆள் இல்லை என்பதே ஒரு பெரிய வலி என நாயகி சொல்லும் உணர்ச்சிப்பூர்வமான காட்சி கிளாசிக்.


7 பெண்களுக்குக்கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் காட்சிகள்,உறவுகள் நம் வாழ்வின் வசந்தம் என்பதை சொல்லும் காட்சிகள் அருமை.

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 கங்கனா ரனாவத்  நடித்த   க்யூன் (2013) , ஸ்ரீ  தேவி  நடித்த  இங்க்லீஷ் விங்க்லீஷ் (2012)  ஆகிய   இரு படங்களில்  வரும்  பல  காட்சிகள்   இந்தப்படத்தில்  பயன்படுத்தப்பட்டிருப்பது  இயக்குனர்  அட்லி ரசிகரோ ? என்ற  சந்தேகத்தை  எழுப்புகிறது 


 2   நாயகி  வெளிநாட்டில்  வந்து  கஷ்டப்படுவது  போல்  காட்சிகளே   இல்லை . அவர் சந்திப்பவர்கள்     எல்லோரும்   நல்லவர்களாகவே இருப்பது எப்படி ? இயக்குனர்  விக்ரமன்  படத்தில்  தான்   எல்லோரும் நல்லோர்   என்று  பாசிட்டிவாக காட்டுவார்  


3 பாட்டி,நாயகி தவிர   படத்தில்   வரும்   வேறு எந்தக்கேரக்டரோடும்  எமோஷனல்   கனெக்ட்  கொடுக்கவில்லை 


4   நாயகியின்   அப்பா  தான்   கொண்டு  வந்த பணத்தை  நாயகியின்  காதலனிடம்  தந்து  ஏமாறுவது   நம்பும்படி இல்லை 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -க்ளீன் யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கும்..ரேட்டிங்க் 3/5

Made in Korea
Release poster
Directed byRa. Karthik
Written byRa. Karthik
Produced bySreenidhi Sagar
Starring
CinematographyPrasanna Kumar
Edited byAnthony
Music bySongs:
Hesham Abdul Wahab
Simon K. King
Dharan Kumar
Score:
Dharan Kumar
Production
company
Rise East Entertainment
Distributed byNetflix
Release date
  • 12 March 2026
Running time
113 minutes[1][2]
CountriesIndia
South Korea
LanguagesTamil
Korean