படத்தோட விமர்சனத்துக்குப்போகும் முன் இந்தப்படம் போலவே சினிமா விகடன்ஷூட்டிங் சம்பந்தமான கதை அம்சம் உள்ள தமிழ்ப்படங்கள் பட்டியலைப்பார்ப்போம்.
சினிமாவுக்குள் சினிமா என்ற கான்செப்ட்டில் தமிழ் சினிமாவில் உருவான சில படங்களின் வெற்றி தோல்வியைப்பார்ப்போம் .
திரைக்கதை மன்னன் கே பாக்யராஜின் அஸிஸ்டெண்ட் டைரக்டர் ஆன வி சேகர் இயக்கிய முதல் படமான நிழல்கள் ரவி நடித்த நீங்களும் ஹீரோ தான் (1980) மீடியாக்களால் பெரிதும் பாராட்டப்பட்டாலும் , கமர்ஷியல் ஹிட் ஆகவில்லை . இயக்குனர் இமயம் பாரதிராஜா நாயகன் ஆக நடித்த கல்லுக்குள் ஈரம் (1980) மிகப்பெரும் தோல்விப்படம் .முந்தானை முடிச்சு மெகா ஹிட்டுக்குப்பின் பெரிய எதிர்பார்ப்புடன் வந்த தாவணிக்கனவுகள் (1984) தோல்வி அடைந்தது . சிவாஜி +பிரபு நடித்த சாதனை (1984) தோல்வி . ஆர் சி சக்தி இயக்கத்தில் விஜயகாந்த் ,கமல் நடித்த மனக்கணக்கு (1986) சுமார் ஹிட்
பிரகாஷ் ராஜ் , பிருத்விராஜ் நடித்த வெள்ளித் திரை (2008) ஹிட் . சாவித்திரியின் கதை சொன்ன நடிகையர் திலகம் (2018) ஹிட்.துல்கர் சல்மான்,சமுத்திரக்கனி நடித்த காந்தா (2025) மீடியம் ஹிட்.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு சினிமாத்தயாரிப்பாளரின் மகள்.நாயகன் அவர்கள் எடுக்கும் சினிமாப்படத்தின் இயக்குநர்.4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் முடித்துத்தருகிறேன் என்று வாக்குக்கொடுத்தவர் இன்னமும் முடிக்கவில்லை.
இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான நாயகியின் அப்பா பி பி ஏறி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிறார்.
நாயகி நாயகன் மீது கடும் கோபம் கொண்டு அவனை வர வைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறாள்.
ஆரம்பத்தில் உதார் காட்டிய நாயகன் பின்பு நாயகியிடம் பம்மி எனக்கு வாய்ப்புக்கொடுங்கள்.இன்னமும் ஒரே ஒரு கோடி ரூபாயில் மொத்தப்படத்தையும் முடித்து விடுகிறேன் என்று வாக்குக்கொடுக்கிறான்.
நாயகியின் மேற்பார்வையில். நாயகன் இயக்க ஷூட்டிங்க் தொடர்கிறது.
நாயகன் ,நாயகி இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதல் வசப்படுகிறார்கள்.ஆனால் இதயம் முரளி மாதிரி மனதுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள் வெளியே சொல்லவில்லை.
ஒரு கட்டத்தில் நாயகியின் அப்பாவுக்கு விஷயம் தெரிந்து விடுகிறது.
நாயகன் ,நாயகி இருவரும் காதலை க்ளைமேக்ஸ் வரை சொல்லிக்கொள்ளவே இல்லை.இதற்குப்பின் நிகழ்ந்தது என்ன? என்பது தான் சுவராஸ்யமான திரைக்கதை.
நாயகி ஆக கயாடு லோஹர்.இவரது இளமை,அழகு,நடிப்பு இந்த மூன்றும் தான் படத்தின் பெரிய பலம்.பிரமாதமான நடிப்பு.
உயிரே உனக்காக படத்தில் நதியா அணிந்தது போல படம் முழுக்க வெரைட்டியான காஸ்ட்யூம்கள் கலக்கல் ரகம்.வசந்த் இயக்கிய நீ பாதி நான் பாதி படத்தில் நிவேதா என்ற பாடல் காட்சியில் 138 கட் ஷாட்கள் வரும்.ஒரு நாயகி அதிகப்படியான எண்ணிக்கையில் வித விதமான ஆடை அணிந்தது அந்தப்படத்தில் தான்.அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தப்படத்திலும் நாயகிக்கு சேலை,சுடி ,என ஏகப்பட்ட உடைகள்.எல்லாவற்றிலும் அலங்கார தேவதை ஆக வலம் வருகிறார்.
நாயகன் ஆக விஸ்வக் சென் அப்பாவி ஆன கதாப்பாத்திரத்தில் காமெடிக்கலக்கல் ஆன கேரக்டர் டிசைனில் வந்து நம் மனதைக்கொள்ளை அடிக்கிறார்.
நாயகியின் அப்பாவாக வரும் நரேஷ் குணச்சித்திர நடிப்பிலும் சரி.காமெடியிலும் சரி ஸ்கோர் செய்கிறார்.
காமெடி வில்லன் ஆக வரும் சம்பத் ராஜ் சிரிக்க வைக்கிறார்.கொடூரமான வில்லன் ஆகவே பார்த்த அவரை இப்படிக்காமெடிக்கேரக்டரில் பார்க்க வித்தியாசமாக இருக்கிறது.
நாயகனின் அம்மாவாக வரும் ஈஸ்வரி ராவ் கவனிக்க வைக்கிறார்.
இவர்கள் போக படத்தில் நடித்த மற்ற அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
பீம்ஸ் செசிரோலியோ வின் இசையில் நான்கு பாடல்களும் ஹிட்.குறிப்பாக க்ளைமாக்சுக்கு முன்பு வரும் அடியே நான் உனையும் நான் விடுவேனா செம கலக்கல் சாங்க்.கில்லி படத்தில் வரும் அப்படிப்போடு பாட்டுக்கு நிகரான செம ஸ்பீடு பாட்டு.
பின்னணி இசை கச்சிதம்.
நவீன் நூலியின் எடிட்டிங்கில் படம் 128 நிமிடங்கள் ஓடுகிறது.
ஒளிப்பதிவு சுரேஷ் சாரங்கம் ஜால வித்தை காட்டி இருக்கிறார்.ஒவ்வொரு பிரேமையும் செதுக்கி இருக்கிறார்.
நாயகியின் க்ளோசப் ஷாட்கள் கொள்ளை அழகு.
மோகன் சாட்டோ என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார் கே வி அனுதீப்
சபாஷ் டைரக்டர்
1 வில்லனாக வரும் சம்பத் தன் கெத்தைக்காட்ட ஒரு சேரைத்தூக்கிக்கோபமாக விசிற கூடவே வரும் அல்லக்கை அதை சரி செய்து உக்காருங்க பாஸ் என சொல்லும்போது முறைக்கும் சீன் செம காமெடி.படம் முழுக்கவே வில்லன் செய்யும் காமெடிகள் நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
2 நாயகியின் காஸ்ட்யூம் டிசைன், நாயகியின் அழகு ,நடிப்பு.
3. நாயகியின் க்ளோசப் ஷாட்ஸ்க்கு ஒளிப்பதிவாளர் மெனக்கெட்ட விதம்,லைட்டிங்க் எல்லாம் அட்டகாசம்.
4 முதல் பாதியில் சில காட்சிகளும்,பின் பாதியில் பல காட்சிகளும் காமெடிக்கலக்கல் தான்.
5 ஒரு தயாரிப்பாளருக்கு இயக்குநரால் ஏற்படும் மன உளைச்சல்களைக்காமெடியாக சொன்ன விதம்,குறிப்பாக இயக்குநர் ஷங்கரைக்கலாய்த்த விதம்
6 கிரேசி மோகன் டைப் காமெடி வசனங்கள், வார்த்தை ஜால ஜோக்குகள்,எஸ் வி சேகர் டைப் கவுண்ட் டவுன் டயலாக்ஸ் செம
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 முழுப்படமும் காமெடி என்று முடிவெடுத்த பின் க்ளைமாக்சில் பெண்கள் மனம் கவர வைக்கப்பட்ட அந்த அம்மா-மகன் செண்ட்டிமெண்ட் காட்சி படத்தோடு ஒட்டாமல் தனியாகத்தெரிகிறது
2 மொத்தப்படத்திலும் இளவரசி மாதிரி ஆளுமையாக வந்து போன நாயகி க்ளைமாக்சில் ஐ லவ் யூ சொல்லும் முக்கியமான தருணத்தில் செயற்கையான நடிப்பு எடுபடவில்லை.
3 நாயகியின் மனதைக்கவரும் விதமாக நாயகனிடம் எந்த பிளஸ் பாயிண்ட்டும் இல்லை.எதைப்பார்த்துக்காதலில் விழுந்தார் என்பதில் தெளிவில்லை
அடல்ட்ஸ் கண்ட்டெண்ட் வார்னிங் - யு
சி பி எஸ் பைனல் கமெண்ட் - நம்ம ஊர் யாரடி நீ மோகினி மாதிரி தெலுங்கில் செம ஹிட் ஆன படம்.ஜாலி காமெடி பட்டாசு.ரேட்டிங்க் 3/5
| Funky | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | K. V. Anudeep |
| Written by |
|
| Produced by |
|
| Starring | |
| Cinematography | Suresh Sarangam |
| Edited by | Naveen Nooli |
| Music by | Bheems Ceciroleo |
Production companies |
|
Release date |
|
Running time | 128 minutes[1] |
| Country | India |
| Language | Telugu |
.jpg)