Sunday, February 13, 2011

THE MECHANIC - ஹாலிவுட் சினிமா விமர்சனம் 18 +


காதலர் தினத்தை முன்னிட்டு கோலிவுட்டில்தான் லவ் சப்ஜெக்ட் படம் எதையும் ரிலீஸ் பண்ணலை,, சரி ஹாலிவுட்டிலாவது ஏதாவது அஜால் குஜால் படம் ரிலீஸ் பண்ணுவாங்களா?ன்னு பார்த்தா அங்கேயும் ஜோடி சுத்தம் # விளங்கிடும். ( காதலர் தினத்தன்னைக்கு சீன் படம் பாத்தா சாமி குத்தமா? # டவுட்டு)

த ட்ரான்ஸ்போர்ட்டர் புகழ் ஹீரோ நடிச்ச மெக்கானிக் தான் கடைசில சிக்குச்சு.ஈரோடு வி எஸ் பி - ஏ சி டி டி எஸ் ல படம் பார்த்தாலே கொண்டாட்டம்தான்.டைட்டில் கிளாமரா இல்லை.  I THINK BETTER AS " THE PROFESSIONAL KILLER" ( இங்கிலீஷ் படத்துல அங்கங்கே இங்கிலீஷ்ல ஒரு லைன் இருக்கனுமாம் # விமர்சன விதி)

புரொஃபஷனல் கில்லரா வர்ற ஹீரோ ஏன்? எதுக்கு?ன்னு கேள்வி கேட்காம மேலிடம் சொல்ற ஆட்களை ஸ்கெட்ச் போட்டு போட்டுத்தள்ளிடற ஆளு .ஒரு இக்கட்டான நேரத்துல தன்னோட ஃபிரண்டையே கொலை செய்ய வேண்டிய சூழல்.அதுக்கான காரணம் முக்கியமான ஒரு ஆளை ஹீரோவோட ஃபிரண்ட் கொன்னுடறதா ஹீரோவோட மேலிடம் சொல்லுது.

ஆனா ஹீரோ தன்னோட ஃபிரண்டை கொலை செய்த பிறகுதான் உண்மை தெரிய வருது, தன்னோட ஃபிரண்ட் கொலை செய்ததா சொல்லப்பட்ட ஆள் உயிரோட தான் இருக்கார். . ஹீரோவோட மேலிடம் சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஹீரோவை வஞ்சித்து விட்டது.

இப்போ கொலை செய்யப்பட்ட ஹீரோவின் நண்பரின் மகன் ஹீரோவிடமே வேலைக்கு சேர்றாரு. அவருக்கு ஹீரோ தான் அப்பாவைக்கொன்னார்ங்கற விஷயம் தெரிய வர்றப்ப எல்லாப்படத்துலயும் வர்ற மாதிரி ஹீரோவை பழி வாங்க திட்டம் போடறாரு.
திரைக்கதைல என்ன பாராட்ட வேண்டிய அம்சம்னா  வில்லன் டாக்டர் ராம்தாஸ் மாதிரி கூட இருந்தே குழி பறிக்கப்போறாரா? வை கோ மாதிரி எதிர்த்து நின்னு  பழி எடுக்கப்போறாரா? என்ற விஷயத்தை கடைசி வரை சஸ்பென்ஸாவே கொண்டு போனது தான்.


இதே கதையை தமிழ்ல எடுத்திருந்தா ஹீரோவுக்கு ஜோடி, 3 டூயட், அம்மா செண்ட்டிமெண்ட்னு போட்டு கொன்னெடுத்திருப்பாங்க.ஆனா ஹாலிவுட்ல கதை ஒரே நேர் கோட்டுல பயணிக்குது. ஹீரோயின் கிடையாது..(அப்போ மேலே உள்ள ஸ்டில்?அது சும்மா பத்து செகண்ட் சொர்க்கம்.( நன்றி - சுஜாதா)

நம்ம ஊர் பிரேமானந்தா மாதிரி ஒரு கேரக்டர் வருது. போலி மத குரு கேரக்டர். அந்த ஆளை போட்டுத்தள்ளும் சீன் செம விறு விறுப்பு.ஆன்மீகத்துல இருக்கற ஆளுங்க பெண்மீகத்துல -பெண் மோகத்துல கேடிங்க என்பது ஆல் ஓவர் வோர்ல்டுலயும் இருக்கு போல.

http://www.thebuzzmedia.com/wp-content/uploads/2011/01/Mini-Anden-in-The-Mechanic.jpg
மேலே உள்ள ஸ்டில்0- தியேட்டர்லதான் நோட்டீஸ் போர்டுல இருந்தது.. தேடி தேடிப்பார்த்தும் படத்துல காணோம்.பொண்ணுங்க வாசனையே படாம படத்தை ஓட்டுன இயக்குநருக்கு என் வன்மையான கண்டனங்கள்.

படத்தில் தனது தந்தையை கொலை செய்த ஹீரோவிடம் வில்லன் கடைசி நேரத்துல எங்கப்பாவுக்கு ஏதாவது சான்ஸ் கொடுத்தீங்களா? என ஆரம்பித்து கேள்விக்கணைகளாக தொடுக்கும் இடங்களில் செண்ட்டிமெண்ட் டச்

படம் பார்க்கறவங்க ஹீரோ மர்டர் பண்ற அழகையே ரசிச்சிட்டு இருக்கறதால கூடவே இருக்கற நண்பரின் மகன் ஹீரோவைக்கொல்லப்போறாரா? என்ற பதட்டம் தோணவே இல்லை.இது திரைக்கதையில் ஏற்பட்ட மாபெரும் சறுக்கல்.ஏதோ ஜாலியா ஒரு படம் பார்த்தமா? வந்தமா?ன்னு இருக்கறவங்க இந்தப்படம் பார்க்கலாம்.

படத்தில் ரசனையான வசனங்களில் நினைவில் நின்றவைகள்


1.யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும்.. ஆனா சுட்டது யார்னு மத்தவங்களுக்கு தெரியாமயே சுடறதுதான் புத்திசாலித்தனம்.


2. வீல் சேர்ல இருக்கறவனை சுட்டுக்கொல்றவன் எப்படிப்பட்ட கோழையா இருப்பான்,,?

3. வாழ்க்கைல எப்பவும் மனசு சொல்றதை கேளு.. சரியோ தப்போ அதுதான் பெஸ்ட்டா இருக்கும்.அதை ஃபாலோ பண்ண தயங்கக்கூடாது.

4.முடியாதுன்னு நீ எப்பவும் சொல்லக்கூடாது.. எதையும் முடிக்கறவன் நீ...

5. இன்னைக்கு நான் சாத்தானை சந்திக்க விரும்பறேன்.. 

இந்த ஊசியை போட்டுக்கிட்டா நீங்களே சாத்தானா ஆகிடுவீங்க.. ( விஷ ஊசி)

வழக்கமான ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களில் வரும் கார் சேஸிங்க் சீன்கள்,டமால்,டுமீல்,இதிலும் உண்டு. எதுவும் ஓவர் டோஸ் ஆகி விடாமல் சரியான கலவையில் தந்த இயக்குநருக்கு ஒரு ஷொட்டு.

டிஸ்கி -

அனகாவின் வர்மம் - சீன் படமா? - சினிமா விமர்சனம் 18 +

 


தம்பிக்கோட்டை - சந்தானம் காமெடி + மசாலா - சினிமா விமர்சனம்

 

33 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

me the first?

சி.பி.செந்தில்குமார் said...

மீ த செகண்ட்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

yes i am the first one/

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

hiiiii....hi....... sema comedy......

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

machchi.... still i am working..... thalai eluththu...

சி.பி.செந்தில்குமார் said...

ஏய்ய்யா ஜோக் பதிவு போட்டா சிரிக்கரதில்லை. விமர்சனம் போட்டா காமெடியா? ரைட்டு

சி.பி.செந்தில்குமார் said...

என்னது? இன்னுமா? நாலைக்கு லீவ் தானே? காதல் பதிவா போட்டு தாக்குங்க

Unknown said...

நான் நாளைக்கு பாக்கலாம்னு இருக்கேன் இங்க release ஆகி இருக்கும்னு நெனைக்கிறேன்.

உங்க விமர்சனம் தூளு அப்போ $10 no problem!?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

sema comedy nu sonnathu...... me the second? comment ku... pathivu innum padikkala... kadaiyil customars jaasthi...

சி.பி.செந்தில்குமார் said...

எங்க ஊர்ல ரூ 40க்கு பார்த்தேன் , மோசம் இல்ல.

சி.பி.செந்தில்குமார் said...

Delete
Blogger மாத்தி யோசி said...

sema comedy nu sonnathu...... me the second? comment ku... pathivu innum padikkala... kadaiyil customars jaasthi...

ரைட்டு.. கடைல ஃபிகர்ஸ் வந்தா ஃபோட்டோவுடன் ஒரு பதிவு தேத்தவும்

வைகை said...

மாத்தி யோசி said...
sema comedy nu sonnathu...... me the second? comment ku... pathivu innum padikkala... kadaiyil customars jaasthi..////////


விடுங்க பாஸ்..தல பதிவுன்னு போட்டாலே காமெடிதானே.....இதுல என்ன தனி தனியா பிரிச்சுக்கிட்டு?

Unknown said...

கடப்பக்கம் வராததுக்கு கண்டனங்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

நாளைக்கு ஒரு சோகக்கவிதை ப்[ஓடறேன். யாராவது செம காமெடின்னு கமெண்ட் போடுங்க
அட்ராசக்க ஒரு வாரம் லீவ்

சி.பி.செந்தில்குமார் said...

விக்கி உலகம் said...

கடப்பக்கம் வராததுக்கு கண்டனங்கள்!


இப்படி எல்லாம் சின்னப்பைய்னை மிரட்டுனா எப்படி? பதிவு போட்டதும் 9842713441க்கு ஒரு மெசேஜ் அனுப்பினா வந்துட்டுப்போறேன்

Unknown said...

இனி தகவல போட்டுட்டா போச்சி!!

வருகைக்கு நன்றி சார்

King Viswa said...

//மேலே உள்ள ஸ்டில்0- தியேட்டர்லதான் நோட்டீஸ் போர்டுல இருந்தது.. தேடி தேடிப்பார்த்தும் படத்துல காணோம்.பொண்ணுங்க வாசனையே படாம படத்தை ஓட்டுன இயக்குநருக்கு என் வன்மையான கண்டனங்கள்.//

நீங்க படத்தை சரியா பாக்கலைன்னு தோணுது. இந்த சீன படத்துல வருது. இவ ஒரு பிராஸ்டிடுயூட். சீன முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த மாதிரி இருப்பா. இவ கிட்ட தான் லாஸ்ட்'ல நம்ம ஆள் அந்த சின்ன நாய் குட்டிய குடுப்பாரு.

கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

King Viswa said...

உண்மையில் இந்த படம் ஒரு மொக்கை ரீமேக். இதன் ஒரிஜினல் சுமார் நாப்பது வருஷம் முன்னாடி வந்தது. ரிச்சர்ட் பிரான்சன் நடிச்ச்சு பின்னி இருப்பாரு. அது ஒரு மனோதத்துவ ரீதியில் எடுக்கப்பட்ட த்ரில்லர் படம். அதனை (கதை, க்ளைமேக்ஸ் மாற்றி) இப்படி எடுத்து அந்த படத்த கொன்னுட்டாங்க.

உண்மையில் ஒரு நல்ல படத்த ரசிக்க விரும்புபவர்கள் 1972ல் வந்த தி மெக்கானிக் படத்தை தேடிப்பிடித்து பார்க்கவும். அதற்க்கு முன்பு கம்பேர் பண்ணும்போது இது சும்மா தூசு.

கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

தமிழ்வாசி பிரகாஷ் said...

எங்க தான் இதுமாதிரி படங்கள பிடிகுறீங்க?

இதையும் படிங்க: இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி

பொன் மாலை பொழுது said...

எப்பா கண்ணுகளா.... ஆள விடுங்க, ஒலக சினிமா பத்தி எல்லாம் நமக்கு தெரியாது. ஜூட் !

ம.தி.சுதா said...

////.யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும்.. ஆனா சுட்டது யார்னு மத்தவங்களுக்கு தெரியாமயே சுடறதுதான் புத்திசாலித்தனம்////

உண்மையில் காதலர் தினத்துக்கான நல்லதொரு தத்துவம் சீபி... (உள்குத்திருப்பதாக கருதினால் சோற்றுச் சங்கம் பொறுப்பேற்காது..)

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

Philosophy Prabhakaran said...

தல எப்படி இருக்கீங்க...

Philosophy Prabhakaran said...

// விக்கி உலகம் said...நான் நாளைக்கு பாக்கலாம்னு இருக்கேன் இங்க release ஆகி இருக்கும்னு நெனைக்கிறேன். //

பாருங்க சிபி... எத்தனை பேரை கெடுத்து வச்சிருக்கீங்கன்னு நீங்களே பாருங்க...

Philosophy Prabhakaran said...

// அட்ராசக்க ஒரு வாரம் லீவ் //

ஹய்யா ஜாலி...

சி.பி.செந்தில்குமார் said...

உண்மையில் ஒரு நல்ல படத்த ரசிக்க விரும்புபவர்கள் 1972ல் வந்த தி மெக்கானிக் படத்தை தேடிப்பிடித்து பார்க்கவும். அதற்க்கு முன்பு கம்பேர் பண்ணும்போது இது சும்மா தூசு.

கிங் விஸ்வா
தமிழ் காமிக்ஸ்

ரைட்டு பார்த்துடுவோம்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger தமிழ்வாசி - Prakash said...

எங்க தான் இதுமாதிரி படங்கள பிடிகுறீங்க?

இதையும் படிங்க: இந்த சர்தார்ஜி காமடி தாங்க முடியல சாமி

February 13, 2011 10:29 PM

ரைட்டு

சி.பி.செந்தில்குமார் said...

ம.தி.சுதா said...

////.யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும்.. ஆனா சுட்டது யார்னு மத்தவங்களுக்கு தெரியாமயே சுடறதுதான் புத்திசாலித்தனம்////

உண்மையில் காதலர் தினத்துக்கான நல்லதொரு தத்துவம் சீபி... (உள்குத்திருப்பதாக கருதினால் சோற்றுச் சங்கம் பொறுப்பேற்காது..)

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

ஓ. சங்கம் ஆரம்பிச்சாச்சா?

சி.பி.செந்தில்குமார் said...

Philosophy Prabhakaran said...

தல எப்படி இருக்கீங்க...

ம் ம் மெசேஜ் அனுப்புனா கண்டுக்கறதே இல்ல...பிரபல பதிவர் ஆகிட்டாலே இப்படித்தான்

சி.பி.செந்தில்குமார் said...

Blogger Philosophy Prabhakaran said...

// விக்கி உலகம் said...நான் நாளைக்கு பாக்கலாம்னு இருக்கேன் இங்க release ஆகி இருக்கும்னு நெனைக்கிறேன். //

பாருங்க சிபி... எத்தனை பேரை கெடுத்து வச்சிருக்கீங்கன்னு நீங்களே பாருங்க...

இன்னைக்கு லவர்ஸ்டே .. நீங்க யாரை.....?

சி.பி.செந்தில்குமார் said...

Philosophy Prabhakaran said...

// அட்ராசக்க ஒரு வாரம் லீவ் //

ஹய்யா ஜாலி...

நண்பேண்டா

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது உலக சினிமாவா........................அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்....................

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மேலே உள்ள ஸ்டில்0- தியேட்டர்லதான் நோட்டீஸ் போர்டுல இருந்தது.. தேடி தேடிப்பார்த்தும் படத்துல காணோம்.பொண்ணுங்க வாசனையே படாம படத்தை ஓட்டுன இயக்குநருக்கு என் வன்மையான கண்டனங்கள்.//////

சிபி இதுக்கு நீங்க திட்ட வேண்டியது, தியேட்டர் மேனேஜரையும், ஆப்பரேட்டரையும் தான் டைரக்டர இல்ல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இருந்தாலும் அந்த போட்டோவையாவது இங்கே போட்டு மக்களின் தாகம் தீர்த்த சிபியின் தொண்டுள்ளத்தை பாராட்டுகிறோம்...!