Sunday, January 02, 2011

அல்டாப்பு அரசியல்வாதி VS பில்டப்பு நடிகை

http://www.gtbc.fm/upload/GTBCFM760131156.jpg
1 தலைவர் சொன்னதைக்கேட்டு சி பி ஐ ஆஃபீசர்ஸ் ஆடிப்போயிட்டாங்களாமே?

ஏன் இந்த அளவு ஊழல் செஞ்சீங்கன்னு கேட்டதுக்கு “குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை”ன்னு சொன்னாராம்.

2.தான் ஒரு பச்சைத்தமிழன்கறதை அந்த டைரக்டர் நிரூபிச்சுட்டார்.

எப்படி?

பச்சை பச்சையா வசனம் எழுதித்தான்.

3. இதுதான் என் சம்சாரத்தோட தங்கச்சி...

ஏன் சுத்தி வளைக்கறே? மேரேஜ்க்குப்பிறகு தானா அமைஞ்ச முறைப்பொண்ணுன்னு சொல்லு.

4.தயவு செஞ்சு யாரும் லீவ் மட்டும் கேட்டுடாதீங்க...

ஓகே மேனேஜர் சார்... 24 மணி நேரம் பர்மிஷன் மட்டும் குடுத்துடுங்க.

5. தலைவர் தான் ஒரு தன்னிகரற்ற தமிழர்னு நிரூபிச்சுட்டார்.

எப்படி?

சி பி ஐ இப்படி நெருக்கறாங்களே?ன்னு கேட்டதுக்கு “ தை பிறந்தால் வழி பிறக்கும்”னு நம்பிக்கையா சொன்னாரே?
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgwgH6n4T3OPUVqJ5bwVt1zglYkHTbubvZflroWBm3DehCpVpemeMNhVZpfa4tLTAPD3Jzulw7bzt54FAzooZlwRgzB6vGYnHkltZwIYklJNG63hACRYnnDsomiFtLLBunK8dSClanbFRo/s1600/mallikasarawath.jpg
6. உங்களுக்கு பிடிச்ச வெப்சைட் எது?ன்னு தலைவர்கிட்டே கேட்டது தப்பா போச்சு.

ஏன்?

பொறுப்பான பதவில இருக்கற என் கிட்டே போய் சைட் , பொண்ணுங்கன்னு பேசறது தப்புங்கறாரு...

7. மேடம்,ஒரே ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட ரூ 1 கோடி சம்பளம்            வாய் கூசாம கேக்கறீங்களே?

ஆடியன்ஸ் பார்த்தா கண் கூசற மாதிரி டிரஸ் போட்டிருக்கனும்னா சும்மாவா?

8. வர வர கட்சில யாரும் என்னை மதிக்கறதே இல்லைன்னு தலைவர் புலம்பறாரே?

கட்சில இருக்கறதே அவரோட சம்சாரமும்,மகனும்தான்.எப்படி மதிப்பாங்க?

9.தலைவர் ஏன் மூடு அவுட்டா இருக்காரு?

2010 -ன் டாப் 10 ஊழல்வாதிகள் லிஸ்ட்ல  அவர் பேரு இல்லையாம்.

10. பேசத்தெரியாம பேசி தலைவர் நல்லா மாட்டிகிட்டாரு?

எப்படி?

வெங்காய விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து சாதனை படைத்தது எங்கள் ஆட்சியில்தான் அப்படின்னு உளறிக்கொட்டீட்டாரே?

டிஸ்கி 1 - குத்தாட்ட நடிகை என்ற அடிப்படையில்தான் மாளவிகா ஸ்டில்லும்,மல்லிகா ஷெராவத் ஸ்டில்லும்.மற்றபடி ஜோக்ஸுக்கும் ,ஸ்டில்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ( சம்பந்தா சம்பந்தம் இல்லாம கண்ட ஸ்டில்லை போட்டுட வேண்டியது.. அதுக்கு ஒரு வியாக்கியானமும் ,விளக்கமும் எதுக்கு?)

டிஸ்கி 2 - நியூ இயரை முன்னிட்டு நெட்டுக்கு லீவ் போட்டவங்களுக்கு

சிந்தாமணி கொலை வழக்கு - சினிமா விமர்சனம் 18 +


  டிஸ்கி 3 - 

முன்னணி தமிழ் சினிமா ஹீரோக்கள் ஜோக் அடித்தால்.....

 

டிஸ்கி 4 - நல்ல பதிவு போட்டா யாரு படிக்கறாங்க? அட்டர் ஃபிளாப் ஆன  நல்ல பதிவு

 

புத்தாண்டில் நாம் எடுக்க வேண்டிய சபதங்கள்

 

14 comments:

மாணவன் said...

இந்தா வந்துட்டோம்ல.....

மாணவன் said...

//டிஸ்கி 1 - குத்தாட்ட நடிகை என்ற அடிப்படையில்தான் மாளவிகா ஸ்டில்லும்,மல்லிகா ஷெராவத் ஸ்டில்லும்.மற்றபடி ஜோக்ஸுக்கும் ,ஸ்டில்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ( சம்பந்தா சம்பந்தம் இல்லாம கண்ட ஸ்டில்லை போட்டுட வேண்டியது.. அதுக்கு ஒரு வியாக்கியானமும் ,விளக்கமும் எதுக்கு?)//

இதுதான் செம்ம ஜோக்கு

ஹிஹிஹிஹி.....

மாணவன் said...

இந்த பதிவுக்கு 18+ போடலையாண்ணே.....

மாணவன் said...

//அழகை காட்டுவதில் என்ன தப்பு?//

அழகை காட்டுவதில் ஒன்னும் தப்பு இல்லை... அசிங்கமா காட்டுவதுதான் தப்பு

மாணவன் said...

இந்த மாதிரி படமெல்லாம் எங்கேருந்துண்ணே புடிக்கிறீங்க...

ஹிஹிஹிஹி

Srini said...

” ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா...ஹ்ஹ்ஹா... “

'பரிவை' சே.குமார் said...

சிரிப்பு நல்லாயிருக்கு... கடைசி டிஸ்கி உண்மைதான்னு பல பதிவர்களோட நல்ல பதிவை படிக்கும்போது தோணும்.
சினிமா, அரசியல்ன்னு கலந்து கட்டி அடித்து கல்லாக் கட்டிடுறீங்க.... வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

மீண்டும் தமிழ்மணம் தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் 20-இல் 1-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

ரஹீம் கஸ்ஸாலி said...

நம்ம பக்கம் வாங்கபிரபல பதிவர்களிடம் தலா ஒரு கேள்வி

வெடி முத்து said...

பதிவர்களுக்கு தேவையான பதிவு பாருங்கள்
http://kazhuhu.blogspot.com/2011/01/blog-post.html

சுங் மிங்க் யூ said...

உங்க டவுசர் இங்கே உருவப்பட்டிருக்கே இன்னும் பார்க்கலியா சார்?

ம.தி.சுதா said...

பொறு மாப்பு வாறன் பார்த்திட்டு...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

ம.தி.சுதா said...

ஹ...ஹ...ஹ...

சீபி யாரப்பா இதுக்கக் கூட மைனஸ் போடுறாய்ங்க... அரசியலைப் பத்தி ஒரு சொல் எழுதினாலே மைனஸ் தன்பாட்டில வருதே...

ம.தி.சுதா said...

ஒண்டரை லட்சம் ஒட்டாண்டியலை கலாய்த்த சீபிக்கு மதியொடையில் பாராட்டு விழா.. அத்துடன் விசேட திரைப்படக் காட்சி காணத் தவறாதீர்கள்....