Wednesday, January 12, 2011

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் - 3

http://www.inneram.com/images/2010/kumudam.gif 
பத்திரிக்கை உலகின் ரஜினி என பெயர் பெற்றதும்,இந்தியாவிலேயே அதிகம்
விற்கும் தமிழ் வார இதழ் என முத்திரை குத்தப்பட்ட்டதும் குமுதம் வார இதழ்.
மேல்தட்டு மக்கள் எப்படி ஆனந்த விகடனை விரும்பி படிக்கிறார்களோ ,அதேபோல் கீழ்தட்டு மக்கள், மற்றும் கிராமப்புற மக்கள் குமுதத்தை அதிகம் விரும்பி படிக்கிறார்கள்.


1. வாசகர் கடிதம் - இந்தியா டு டே இதழுக்கு அடுத்த படியாக  வாசகர் கடிதத்துக்கும் பரிசு கொடுப்பது குமுதம்தான். அஞ்சல் அட்டை என்ற பெயரில் வரும்.புதன் கிழமை வெளியாகும் புக் பற்றி உங்கள் விமர்சனங்களை சனிக்கிழமைக்குள் அனுப்பினால் அடுத்த புதன் கிழமை புக்கில் அது வந்துவிடும்.(வேறு எந்த புக்கும் இவ்வளவு ஃபாஸ்ட்டாக
வாசகர் கடிதத்தை பரிசீலிப்பது இல்லை.)எழுத்துத்துறைக்குப்புதியவர்கள் அஞ்சல் அட்டை பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம்.

அதேபோல் ஜால்ரா அடித்துத்தான் எழுத வேண்டும் என்பதில்லை.க்ளிக் கலாட்டா என்ற பகுதியில் வரும் ஃபோட்டோ கமெண்ட்ஸ்களை நக்கல் அடித்துப்போடும் லெட்டர்ஸ்க்கு முன்னுரிமை தருவார்கள்.அரசு கேள்வி பதில்களில் சொல்லப்பட்ட பதில்களை சிலாகித்தோ திட்டியோ எழுதும் கடிதங்கள் போடப்படும். குறிப்பாக லேனா தமிழ்வாணன் எழுதும் கட்டுரைகள்
பற்றியோ,ஆசிரியர் தலையங்கம் பற்றியோ எழுதினால் போட்டுடுவாங்க.

இதற்குப்பரிசு ரூ 50. படைப்பு வந்தால் காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்பிடுவாங்க. ( இதில் எல்லா வார இதழ்களும் ஒரு டெக்னிக்கை கடைப்பிடிப்பர்கள்.இதழ் கடைக்கு வந்து 7 நாட்கள் கழித்தே காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்பி வைக்கப்படும். ஆர்வக்கோளாறில் நாம் கடையில் வாங்கட்டும் என.)

பிளாக்கில் எப்படி பின்னூட்டமோ அது போல் வாசகர் கடிதம்,நான் ஆரம்பத்தில்  வாசகர் கடிதம் எழுதுவது கேவலம் என நினைத்தேன்.பின் என் எண்ணம் மாறியது. அதிலும் நம் தனி முத்திரையை பதிக்கலாம் என எண்ணம் ஏற்பட்டது.நண்பர்களுடன் சவால் விட்டு ஒரே இதழில் 4 கடிதங்கள் வர வைத்துள்ளேன்.

2. கவிதை - வாரா வாரம் 2 பக்கங்கள் கவிதைக்காக ஒதுக்குவார்கள்.பெரும்பாலும் குட்டிக்கவிதைகள் அனுப்புவது நலம். 4 வரிகள் - 6 வரிகளுக்குள் இருந்தால் நலம். செலக்‌ஷன் செக்‌ஷனில் உள்ளவர்கள் குழந்தைகள் நல விரும்பி போல. பெரும்பாலும் மழலைகள் பற்றிய கவிதைகளே அதிகம் வருகிறது.

திருமயம் பாண்டியன், தஞ்சை அனார்கலி இருவரும் இதில் முத்திரை பதித்தவர்கள். கவிதைக்கான லே அவுட்டும், டிராயிங்கும் பக்காவாக இருக்கும். நமது கவிதை சாதாரணமாக இருந்தால் கூட அவர்கள் பிரசண்ட்டேஷன் அசத்தலாக இருக்கும். எனது கவிதைகள் 28 இதில் வந்துள்ளது.சன்மானம் ரூ 50. குமுதத்தின் சேல்ஸ்,லாபம் இதனுடன் ஒப்பிட்டால் அவர்கள் தரும் சன்மானம் ரொம்பக்கம்மி.
http://www.desikan.com/blogcms/media/1/20080308-Kumudam_sujatha_2.jpg
எஸ் ஏ பி ஒரு முறை லேனாவிடம் டிஸ்கஸ் செய்தபோது சொன்ன வார்த்தை -
குமுதம் புக்கிற்கு வரும் விளம்பர வருமானத்தை கணக்கு போட்டால் ரூ 10 க்கு
விற்கப்படும் புக்கை எல்லாருக்கும் இலவசமாக கொடுத்தாலே ஒரு புக்குக்கு ரூ 1.70 லாபமாம். அப்போ கணக்கு போட்டுக்குங்க. கிட்டத்தட்ட 8 லட்சம் புக் சேல்ஸ் ஆகுது.

3.ஒரு பக்கக்கதை. - குமுதத்தில் ஒரு பக்கக்கதை. ரொம்ப ஃபேமஸ்.சும்மா 20 லைன் இருந்தா போதும்.கடைசில ஒரு நீதி இருக்கனும்.தேவை இல்லாத வர்ணனை தவிர்த்து டைரக்டா மேட்டருக்கு வந்துடனும்.புதுமுக எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இதற்குப்பரிசு ரூ 100.  ப . உமா மகேஷ்வரி ஷேக் சிதார் மந்திர், சேலம் செல்வராஜா, சாயம் வே ராஜாராமன், எஸ். ராமன் ,ஐரேனிபுரம் பால்ராசய்யா போன்றர்கள் இதில் கில்லாடிகள்.எனது கதைகள் 30 வந்துள்ளன.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxzIGWZpsMKWZYZ9v975qViv32bibotQ_9jFMSgajsYqn8n0Bv_Ee8wRMqx7DlTk-Stlpw7aIfK7MD4VgVed2gJ-Lkh1dJzom3lbvY45QqHo3eciNnE-V9DMXXxcRrVJjcYIVRv8P_D3s/s320/sap-manaian1.jpg
4. சிறுகதை - இப்போது ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் சிறுகதை இலக்கியம் அழிந்து வருவது வேதனைக்குரிய விஷயம். ரூ 400 பரிசு தர்றாங்க.பெரும்பாலும் இப்போ பிரபல நாவல் ஆசிரியர்கள் படைப்புதான் வருது. வாசகர் சிறுகதை அதிகம் வர்றது இல்லை.ரொம்ப அரிதா சில சமயம் வாசகர்களுது போடுவாங்க.அனுப்பி 2 மாதத்தில் தேர்வானா போட்ட்டுடுவாங்க. என்னுடையது 2 கதைகள் வந்துள்ளன்.ரா கி ரங்கராஜன்,கீதா பென்னட் இவங்க கதைகள்
அதிகம் வந்திருக்கு,

5. ஜோக் - கடைசியா நம்ம மேட்டர்.வாரா வாரம் சராசரியா 27 ஜோக் போடறாங்க. இதுக்கும் சன்மானம் ரூ 50 தான்.பெரும்பாலும் அரசியல், டாக்டர் ஜோக் போடறாங்க. என்னுடையது கிட்டத்தட்ட 700 ஜோக்ஸ் வந்திருக்கும். குமுதத்துல ஜோக் எழுதியே வீடு கட்டுனாருன்னு வி சாரதி டேச்சு பற்றி ஒரு ஜோக் உண்டு.

குமுதத்தில் பணியாற்றும் ஜெயாப்பிரியன்,குட்டி மு வெங்கடேஷன் இருவருக்கும் 2 பக்கங்கள் ரெகுலரா ஒதுக்கிடறாங்க. அது போக வாசகர்களுக்கு 16 ஜோக்ஸ் போடறாங்க.20 நாட்களில் போட்டுடுவாங்க. நல்ல ஸ்பீடுதான்.எஸ் எஸ் பூங்கதிர், ப உமா மகேஷ்வரி, தஞ்சை தாமு,எஸ் மோகன்,பா ஜெயக்குமார்,ஜோ ஜெயக்குமார் ஜோக் உலகில் கலக்குபவர்கள்.


குமுதம் எனக்கு எப்பவும் செல்லப்பிள்ளைதான். காவேரி நீர்ப்பிரச்ச்னையை
தீர்ப்பது எப்படி? என்ற கட்டுரைப்போட்டியில் நான் ரூ ஒரு லட்சம் பரிசு
வென்றது 2002 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி. (டாக்ஸ் போக
கைக்கு ரூ 68,000 தான் வந்தது என்றாலும் என்னைப்பொறுத்தவரை
தொகை அதிகம்)

1998 -ல் தீபாவளி மலரில் போட தமிழ்நாட்டின் டாப் 10 ஜோக்
ரைட்டர்ஸை அழைத்தார்கள்,அதில் நானும் ஒருவன்.ஹாய் மதன் எங்களுக்கெல்லாம் ரூ 2000 மதிப்புள்ள வாட்ச் பரிசாக குடுத்து எப்படி ஜோக்ஸ் எழுதலாம் என டிப்ஸ் குடுத்தார்.

பொதுவாக பத்திரிக்கைகளில் நம் படைப்பு வந்தால் அந்த புக் நம் கண்களுக்கு
அழகாக தோன்றும். வர்லைன்னா என்ன புக் போடறாங்க என சலிப்பினை  ஏற்படும். அது மனிதனின் மன ரீதியான தடுமாற்றமே. சிலர் குமுதம் புக்கை
சேல்ஸூக்காக தரம் இழந்ததாக சொல்வார்கள். ஆனால் எல்லா பத்திரிக்கைகளுக்கும் ரோல் மாடலாக குமுதம் விளங்குகிறது.

வெற்றியாளர்களை ஏதாவது குறை சொல்வது நம்உலக வழக்கம்.
ஆனால் வெற்றியாளனாக மிளிர அவர்கள் பட்ட கஷ்டங்கள் அவர்களுக்கு
மட்டுமே தெரியும்.

படைப்புகளை தபாலில் அனுப்ப முகவரி
குமுதம்
த பெ எண் - 2592
சென்னை 600031

கூரியரில் அனுப்ப

குமுதம்
151,புரசைவாக்கம் நெடுஞ்சாலை
சென்னை 600010

டிஸ்கி - டைட்டிலைப்பார்த்து வெறும்  சுய புராணமாத்தான் இருக்கும் என எண்ணி எனது பழைய பாகங்களை மிஸ் பண்ணியவர்களுக்காக

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் 2

(ஆனந்த விகடன்)

 

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி?

(தினமலர் - வாரமலர்)

 

41 comments:

ம.தி.சுதா said...

(சிரியசான பின் ஊட்டம்) சீபி நீங்க பலருக்கு ஏணியாக மாறிவிட்டீர்கள் உண்மையாகவே சந்தோசப்பட்டேன்... பலர் எணி என்று சொல்லிக் கொண்டாலும் சாக்கடைக்கள் இறங்கும் ஏணியாகவே இருக்கையில் நீங்க உங்களை முந்தவதற்கு வழி சொல்லுறிங்களே... வாழ்த்துக்கள்...

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

Philosophy Prabhakaran said...

இதுல நம்மால முடிஞ்சது வாசகர் கடிதம் மட்டும்தான்...

Philosophy Prabhakaran said...

வாசகர் கடிதத்துக்கே ஐம்பது ரூபாய் ன்னா சூப்பர் தான்...

Philosophy Prabhakaran said...

இன்னும் எத்தனை பாகங்கள் கைவசம் வச்சிருக்கீங்க.,...

மாணவன் said...

மிகவும் உபயோகமான தகவல் பதிவுக்கு நன்றி அண்ணே,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மிகவும் உபயோகமான தகவல் பதிவுக்கு நன்றி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மிகவும் உபயோகமான தகவல் பதிவுக்கு நன்றி

சசிகுமார் said...

பயனுள்ள பதிவு செந்தில் நன்றி.

THOPPITHOPPI said...

வாரா வாரம் சராசரியா 27 ஜோக் போடறாங்க. இதுக்கும் சன்மானம் ரூ 50 தான்
/////////////

என்னங்க பாஸ் ஒரு ஜோக்குக்கு ரெண்டுரூபாய் கூட தரமாட்டாங்களா?

. said...

Useful post... Thanks to shared

http://hari11888.blogspot.com

Srini said...

" பட்டய கெளப்பறீங்க.. இப்பவே நானும் கெளம்பிட்டேன் NEW YORK TIMES & WASHINGTON POST -க்கு எழுத... “ சீரியஸாத்தாங்க..!! நல்ல டிப்ஸ்.. “
PS : ஆமாம், நீங்க பத்திரிக்கைல எழுதி புகழ் அடைய டிப்ஸ் தர்றீங்களா இல்ல, பணம் சம்பாதிக்க டிப்ஸ் தர்றீங்களா ?

இம்சைஅரசன் பாபு.. said...

சி பி ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல பதிவு (எனக்கு பிடித்தது ) இது தான் .இத இத மாதிரி தான் உங்ககிட்ட எதிர் பார்கிறேன் .அப்ப.......அப்ப ........ஜோக்ஸ் .....(ரொம்ப வெளிபடையா சொல்லுறதுக்கும் பயமா இருக்கு ....)

Robin said...

நல்ல பதிவு.

Arun Prasath said...

பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் - 3//

நமக்கு புகழ்ச்சி பிடிக்காது தல... அப்ப என்ன பண்ணலாம்

karthikkumar said...

Arun Prasath said...
பிரபல பத்திரிக்கைகளில் எழுதி புகழ் பெறுவது எப்படி? பாகம் - 3//

நமக்கு புகழ்ச்சி பிடிக்காது தல... அப்ப என்ன பண்ணலாம்///
valakkampola ponnuga kaila adi vangittu iru machi

அஞ்சா சிங்கம் said...

ரைட்டு நானும் கெளம்பிட்டேன்..............

Unknown said...

சூப்பர் பாஸ்! நல்ல தகவல்கள்!

IKrishs said...

படைப்புகளுக்கென்று ஏதாவது format உண்டா? Like
* அட்ரஸ் எல்லா பக்கங்களிலும் எழுதவேண்டுமா?
* 1 ஜோக் 1 பேஜ் இல் மட்டும் இருக்கனுமா?

Chitra said...

Thank you .

சிவானந்தம் said...

சூப்பர்ப்! தொடருங்கள் இந்த சேவையை.

Unknown said...

மிகவும் உபயோகமான தகவல் பதிவுக்கு நன்றி

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு நண்பரே...
படைப்புக்களை அனுப்ப மின் அஞ்சல் முகவரி கிடைக்குமா?

Unknown said...

//1998 -ல் தீபாவளி மலரில் போட தமிழ்நாட்டின் டாப் 10 ஜோக்
ரைட்டர்ஸை அழைத்தார்கள்,அதில் நானும் ஒருவன்.//
உங்கள் ஜோக்ஸ் பலவற்றை குமுதம், ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் படித்துள்ளோம். நீங்கள் பதிவு எழுதுவதும், எங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதும் எங்களுக்கான அங்கீகாரம்.

Unknown said...

உங்கள் வலைத்தளம் சரியான திசையில் பயணிப்பதாகவே தெரிகிறது. கவிதை, சமூகம் , விமர்சனம், நகைச்சுவை என ஜனரஞ்சக முகம் தெரிகிறது. இது தொடரரும் வரை உங்களை அசைச்சுக்க முடியாது..

Unknown said...

உங்கள் வலைத்தளம் சரியான திசையில் பயணிப்பதாகவே தெரிகிறது. கவிதை, சமூகம் , விமர்சனம், நகைச்சுவை என ஜனரஞ்சக முகம் தெரிகிறது. இது தொடரரும் வரை உங்களை அசைச்சுக்க முடியாது..

தினேஷ்குமார் said...

பாஸ் நல்ல பதிவு எல்லாருக்கும் ஊக்கமளிக்கும் உங்கள் எழுத்துகள் வலியது நேற்று நேற்று நண்பர் தமிழ்க்காதலன் அவருக்காக நம் பதிவுலகத்திர்க்காக நல்ல எண்ணம் கொண்டு உதவிகரம் நீட்டும் தங்கள் உள்ளம் உன்னதமானது பாஸ்

Unknown said...

நல்ல பதிவு தல

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிகவும் உபயோகமான தகவல்

செல்வா said...

// ( இதில் எல்லா வார இதழ்களும் ஒரு டெக்னிக்கை கடைப்பிடிப்பர்கள்.இதழ் கடைக்கு வந்து 7 நாட்கள் கழித்தே காம்ப்ளிமெண்ட்ரி காப்பி அனுப்பி வைக்கப்படும். ஆர்வக்கோளாறில் நாம் கடையில் வாங்கட்டும் என.)
//

அட , அப்பத்தானே அவுங்களுக்கும் கொஞ்சம் வியாபாரம் அஆகும்

செல்வா said...

//எஸ். ராமன் ,ஐரேனிபுரம் பால்ராசய்யா போன்றர்கள் இதில் கில்லாடிகள்.எனது கதைகள் 30 வந்துள்ளன.
//

எப்படி அண்ணா இப்படியெல்லாம் ? அண்ணா உண்மைலேயே உங்களோட உழைப்பு வாய்ப்பே இல்ல .. பாராட்டியே ஆகணும்

வார்த்தை said...

பொங்கல் சீசன் பதுவுலகத்துல ஒண்ணும் சிறப்பா இல்லீங்களே .....

இந்த பதிவ வச்சி ஹி ஹி ஹி

எதுனா சுறுசுறுப்பு ஊட்டலாமா ...?

yeskha said...

இன்னோரு டெக்னிக் சொல்றேன். நீலக்கலரை விட்டு விட்டு வித்தியாசமான வேறு கலர் (எப்போதும்) பேனாக்களை உபயோகப்படுத்திப்பாருங்கள். உங்கள் கார்டு மட்டும் தனியாகத்தெரியும். ஆனால் இதில் ரிஸ்க்கும் உண்டு. நீங்கள் நன்றாக எழுதி பல ஜோக்குகள் பிரசுரமாகும் பட்சத்தில் இந்த ஐடியா பலன் தரும். ஆனால் நாம் தத்தா புத்தா என்று எதையாவது எழுதி சொதப்பினால் இந்த ஐடியா ரிவர்ஸில் திரும்பி விடும். உங்கள் லெட்டரை, கார்டை பார்த்ததுமே தூக்கிப்போட்டு விடுவார்கள்.

ரொம்பவும் முக்கியமான ஒரு விஷயம். ஜோக்குகளும் கடிதங்களும் போஸ்ட் கார்டில் மட்டுமே அனுப்புதல் நலம். A4 பேப்பரில் எழுதி பிரவுன் கவரில் போட்டு அனுப்பாதீர்கள். மூட்டை மூட்டையாக வரும் கடிதங்களில் முதலில் அவர்கள் பார்ப்பது கார்டுகளை மட்டுமே... - சேலம் எஸ்கா

yeskha said...

குமுதத்தில் ஜோக்ஸ், வாசகர் கடிதம் இரண்டுக்கும நான் இதே டெக்னிக்கை பின்பற்றுவது வழக்கம். சுமாராக என்னுடைய நூறு ஜோக்குகள் வெளியாகியுள்ளன. அதே போல் வாசகர் கடிதம் பகுதியில் ஏ.எஸ்.யோகானந்தம் மற்றும் உங்களுடையவை (வேறு வேறு பெயரில்) இரண்டு மூன்று கடிதங்கள் வந்ததைப்பார்த்து நானும் எழுதி அனுப்புவேன். (சுமார் ஐம்பது கடிதங்கள்) ஒருமுறை ஒரே பக்கத்தில் மூன்று கடிதங்கள் பிரசுரமானதைப்பார்த்து ஒரே குஷி. அதுவரை மணியார்டராகத்தான் பணம் வீட்டுக்கு வரும், ஆனால் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக செக் அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள். ஒருமுறை 750 ரூபாய்க்கு ஒரே செக் காக வந்தது. அப்போது என்னுடைய மாதச் சம்பளமே 2500 ரூபாய் தான். அப்போ தஞ்சை தாமுவை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கும். என்னய்யா இந்த மனுஷன் எல்லா புக்குலயும் எழுதுறாரு.. மாசா மாசம் அவருக்கு எவ்வளவு வரும்? என்று கணக்குப்போட்டுப்பார்ப்பேன்..

- சேலம் எஸ்கா

yeskha said...

நான் கவிதைக்கு டெக்னிக் எதையும் பின்பற்றாமல் தோன்றுவதை எழுதி அனுப்பி விடுவேன். அதனால் பிரசுரமானவை என்னுடைய இரண்டே இரண்டு கவிதைகளே.. ஒருபக்கக் கதைகளில் ஐரேனிபுரம் பால்ராசய்யா பற்றி நினைத்தாலே பற்றிக்கொண்டு வரும். எப்படிய்யா இந்த ஆளு அடிக்கடி கதை எழுதுறாருன்னு.. நானும் இரண்டு கதைகள் அனுப்பிப்பார்த்தேன். வரவில்லை. சரி இது நமக்கு வேலைக்காகாது. நாம பேசாம ஜோக் எழுதறதோட நிறுத்திக்க வேண்டியது தான்னு ஒருபக்கக் கதை அனுப்புறதையே நிறுத்தி விட்டேன்.

இந்த ஐடியாக்களை எல்லாம் என்னுடைய நண்பர்களுக்கும், இதே போல் எழுத ஆசைப்படுபவர்களுக்கும் சொல்வது உண்டு. ஆனால் இப்படி பதிவாய்ப் போட்டு பலருக்கும் உபயோகமாக ஆக்கும் எண்ணம் எனக்குத்தோணவே இல்லை. சி.பி. உண்மையாவே பெரிய ஆளுதான் நீங்க.

- சேலம் எஸ்கா

yeskha said...

இன்னோரு முக்கியமான விஷயம்.. சாதாரண போஸ்ட் கார்டு ஐம்பது பைஸா.. மேக்தூத் போஸ்ட் கார்டு என்று ஒன்று உண்டு. மேக்தூத் கார்டு இருபத்தைந்து பைஸா மட்டுமே. ஆனால் அட்ரஸ் எழுதும் இடத்திற்கு பக்கத்தில் உள்ள ஏரியாவில் நாம் எழுத முடியாது... அந்த இடத்தில் விளம்பரம் வரும் (அரசாங்கத்திற்கு மிச்ச இருப்பதைந்து காசு கிடைப்பது அந்த விளம்பர வருமானம் தான்) அது லிமிடெட் எடிஷன். எப்போதாவது தான் வரும். வந்த இரண்டு தினங்களில் கார்டே தீர்ந்து போய் விடும். அதனால் லோக்கல் போஸ்ட் மாஸ்டரை ஃபிரண்டு பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.. இன்றைய கால கட்டத்தில் மொபைல் போன் நம்பர் கிடைக்கும். மேக்தூத்த கார்டு வந்தால் அவர் உங்களுக்கு போன் செய்வார்.. ஓடிப்போய் பல்க்காக ஒரு ஐம்பது, நூறு ரூபாய்க்கு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். கவலை வேண்டாம். நாம் எழுதி எழுதி அது தீர்வதற்குள் அடுத்த செட் மேக்தூத் கார்டு வந்து விடும்.. வேறு யாராவது விளம்பரம் கொடுப்பார்கள். அப்படி வந்த முதல் விளம்பரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "பாபா"..

yeskha said...

ஸோ... மேக்தூத் கார்டின் உள்ளே உள்ள அகன்ற பக்கத்தில் நம் ஜோக்கை எழுதி விட்டு கீழே நம் அட்ரஸை நுணுக்கி நுணுக்கி எழுத வேண்டும். அதற்கும் ஒரு ஐடியா. ஐம்பது ரூபாய் கொடுத்து ரப்பர் ஸ்டாம்பு செய்து வைத்துக்கொள்ளுங்கள்... (சுஜாதா எழுதியது ஞாபகம் இருக்கிறதா? குளச்சல் ஜார்ஜ் என்பரை ஓட்டு ஓட்டு என்று ஓட்டியிருப்பாரே - நாங்கள்லாம் குளச்சல் ஜார்ஜ் கோஷ்டி "சுஜாதா வீட்டில் ஒரு நாய் இருக்கிறது, அது ஆங்கிலத்தில் பேசினால் புரிந்து கொள்கிறது") நம் அட்ரஸ் மட்டுமல்ல. தனித்தனியாக ஆனந்த விகடன் அட்ரஸ், குமுதம், குங்குமம் மற்றும் வேறு என்னவெல்லாம் பத்திரிகைகளுக்கு நாம் அனுப்புகிறோமோ அவை அனைத்தின் அட்ரஸூம். (என்னிடம் கல்கி அட்ரஸூக்கு கூட ஸ்டாம்பு உள்ளது. (என்ன நக்கலா? சிரிக்காதீர்கள். எத்தனை கார்டில் அட்ரஸ் எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி எழுதி அனுப்புவீர்கள். இம்போசிஷன் மாதிரி, முட்டி பெயர்ந்து விடும்) ஒரு ஜோக் பிரசுரமாக வேண்டுமென்றால் பத்து ஜோக் அனுப்ப வேண்டும். சமயத்தில் இருபது முப்பது (விகடனுக்கு) அனுப்பினால் போனால் போகிறதென்று ஒன்றே ஒன்று தான் பப்ளிஷ் ஆகும்..

yeskha said...

சமயத்தில் ஒரு மாதம் அதாவது நான்கு வாரங்களாக நம் ஜோக்கே வராது எந்தப்பத்திரிகைகளிலும். அந்த சமயத்தில் ஒரு உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.. சொந்தக் காசில் புக்கும் கார்டும் வாங்க மாட்டேன்.. பரிசாக வந்த பணத்தில் மட்டுமே வாங்குவேன் என்று. ஸோ போனமாதம் பரிசாக வந்த பணத்தில் மட்டும் விகடன், குமுதம், இந்தியா டுடே, கல்கி, ஆனந்த ஜோக்ஸ் எல்லாம் வாங்கினால் அந்த காசு தீர்வதற்குள் நமது அடுத்த கடிதமோ அல்லது ஜோக்கோ பிரசுரம் ஆக வேண்டுமே என்ற வெறி வரும்... எழுதித்தள்ளுவோம். கண்டிப்பாக அடுத்த வாரமே பப்ளிஷ் ஆகும். (மறுபடியும் நக்கலாய் சிரிக்காதீர்கள். எனக்குத் தெரிந்த ஜோக் எழுத்தாளர் ஒருவர். அவருக்கு மாதச் சம்பளம் கம்மி. இந்த மாதிரி மாதா மாதம் வரும் பணத்தில் தான் அவர் தனது பையனுடைய ஸ்கூல் ஃபீஸே கட்டுகிறார்)

சி.பி.செந்தில்குமார் said...

ஃஅடேங்கப்பா எஸ்கா ஒரு பதிவே போட்டிருக்கலாம்

சி.பி.செந்தில்குமார் said...

கிருஷ்குமார் said...

படைப்புகளுக்கென்று ஏதாவது format உண்டா? Like
* அட்ரஸ் எல்லா பக்கங்களிலும் எழுதவேண்டுமா?
* 1 ஜோக் 1 பேஜ் இல் மட்டும் இருக்கனுமா?
January 12, 2011 11:20 AM

அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எப்படி வேணும்னாலும் அனுப்பலாம்

பிரபாஷ்கரன் said...

நல்ல புள்ளி விவரமா இல்ல கொடுதுருகிங்க வாழ்த்துக்கள்

Asiya Omar said...

வலைச்சர அறிமுகத்தில் இந்த இடுகையை பார்த்தேன்,பகிர்வுக்கு மிக்க நன்றி.பத்திரிக்கைதுறையில் நிறைய சாதனை.வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு மிக்க நன்றி.