Friday, November 15, 2013

நெட்டில் வெளியான வீரம் பஞ்ச் டயலாக்ஸ் - சிறுத்தை சிவா அதிர்ச்சி

1. தர்மம் தலை காக்கும் பழசு. வீரம் தலை சிறக்கும் # புதுசு


=================


2 வேட்டி கட்டி இருந்தா பொண்ணுங்களுக்குப்பிடிக்காதுன்னு தப்பா எடை போடக்கூடாது.வெட்டியா இருக்கறவனைத்தான் அவங்களுக்குப்பிடிக்காது # வீரம்



=====================

3  இன்று முதல் அஜீத்தின் வீரம் ட்ரைலர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு # அறிவிப்பிலேயே அதிகாரம் இருக்கே? ஜெயா மூவிஸா?


==================


4 வீரம் டீசர் 35 விநாடிதானா? அந்த டைம்ல 10 ஸ்டெப் கூட நடக்க முடியாதே?


==================


5  டீ (சர்) இன்னும் வர்லை


==================


6  கே பாக்யராஜ் டூ அஜித் = சார்.வேட்டி கெட்டப் நல்லாருக்கு.எக்காரணம் கொண்டும் வேட்டியை மடிச்சு கட்டிடாதீங்க


=====================


7  டீசர் லேட்டா வர்றது ஒரு மேட்டரே இல்லை.படம் சொன்ன தேதிக்கு சரியா வந்ததா? என்பதே மேட்டர்


==================


8  சுனாமி ,பூகம்பம் இதெல்லாம் எப்போ வரும்னு யாராலும் கணிக்கவே முடியாது


======================


9 சார்.உங்க கெட்டப் அட்டகாசம் .


தாங்க்ஸ் .


 ஐ மீன் அட்டகாசம் ல ஆல்ரெடி வந்ததுன்னு சொல்ல வந்தேன்


====================


10  வீ ரம் என்பதால் டாக்டர் ராம்தாஸ் டைட்டில் பிரச்சனை பண்ணி போராட்டம் பண்ணலாம் # ஐடியா


=====================


11 என்னய்யா இது? முதல் இரவு அறைக்குள்ளே பொண்ணு எப்போ வரும்? கற மாதிரி ஒரு டீசருக்காக காத்திருக்காங்க? ;-))


===================


12  வீரம் காஸ்ட்யூம் வெள்ளை வேட்டி சட்டை என்பதால் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் பெப்பர்க்கு பெப்பே காட்டிட்டு புல்லா ஒயிட் ஹேரில் வர்றாராம்


====================


13  வீரம் ல விஜய் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடறாராம். பதிலுக்கு அஜித் ஜில்லா ல 2 பர்லாங் நடந்துட்டுப்போறாராம் # நட்புக்காக


===================


14  வீரம் காமெடிப்படம் னு நினைச்ட்டு இருந்தேன்.செம ஆக்சன் படம் போல # துள்ளிக்கிட்டு அள்ளிக்கிட்டு வருது வேட்டி கட்டிய ஜல்லிக்கட்டு


====================


15  வீரம் டீசரில் தமனாவை காட்டவே இல்லையாமே? ரசிகர்கள் அதிர்ச்சி ;-))


=================


16  வீரம் டீசரை அஜித் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் தான் ரிப்பீட்டாய் பார்த்திருப்பாங்க # ஏதாவது குறை சொல்லனுமே


===================


17  கமல் - வீரம் னா  பயப்படாத மாதிரி நடிப்பது .


அஜித் - எதிர் ல 8 கேமரா ஓடிட்டு இருந்தாலும் ஒரு கேமராவைக்கூட பார்க்காம நடிப்பதும் வீரம் தான்


=\======================

18  சார்.உங்க டீசர் தீம் இசைக்கு என்ன அர்த்தம்?



 இந்தக்காலத்துல பாட்டுக்கே அர்த்தம் தெரியறதில்லை.புரியறதில்லை.பெருசா வந்துட்டாரு


=====================


19 வீரம் டீசர் # பஞ்ச் - என் நெத்தில ஒரு சொட்டு ரத்தத்தை வர வெச்சதுக்கு ஒரேயடியாய் குதிக்காத.இப்போ உன் உயிர்வெளியே வர நீயே பார்க்கப்போறே !


====================


20 எதிரிங்க தாக்க ஓடி வரும்போது எத்தனை பேர் னு எண்ணிட்டிருக்க மாட்டேன்.அவங்க கதி என்ன ஆகப்போகுதோன்னு எண்ணிட்டு இருப்பேன் # வீரம் பஞ்ச்

======================

21 வீரம் -கேப்சன் - வேட்டி சொல்லைத்தட்டாதே ! # ஐடியா

====================


22  பத்து பேரு துரத்திட்டு வரும்போது கூட ஒத்தை ஆளா நின்னு சத்தம் இல்லாம சமாளிக்கிறது தான் வீரம் # பஞ்ச் டயலாக் டீசர்

====================
23 வெள்ளை உடையை அன்னை தெரேசா அணிஞ்சா அது அமைதியின் சின்னம். அதையே அஜித் அணிந்தா அது வீரம்


===================

24 புத்தி"மானா" இருக்கறவன் எதிரிங்க துரத்த்தும்போது ஓடித்தப்பிப்பான்.யானை பலம் கொண்ட சக்திமானா இருக்கறவன் நின்ன இடத்துல இருந்து அடிப்பான்



=====================

25 வெள்ளையும் சொள்ளையுமா இருக்கறதால வெள்ளந்தியா இருப்பேன்னு நினைக்காதீங்க.தடுக்க முடியாத வெள்ளம்.அணைக்க முடியா தீ நான் # வீரம் பஞ்ச்


=====================


26  எல்லா ஜில்லா லயும் வீரம் ரிலீஸ் ஆகும் னு அஜித் ரசிகரால சொல்ல முடியும்.


=====================


27 வீரம் டீசர் பஞ்ச் - மாரியம்மன் கோவில்ல கூழ் ஊத்தறப்ப ஓடி வர்ற மாதிரி இத்தனை பேரு வராங்க.பொங்கல் சாப்ட்டுதான் போவாங்கனு நினைக்கறேன்


=========================


28 அஜித்-ரதகஜதுரகபதாதிகள் எதிர்ப்பினும்
அதகளம் புரிந்திடும்மதபுஜம் 2ம் மலையென எழுந்திட செருக்களம் சிதறிடும் 



.விஜய் - வாங்கண்ணா வணக்கங்கண்ணா


========================


29 வீரம் பஞ்ச் - நான் ஒயிட் ல இருக்கும் வரை கொயட் டா இருப்பேன்.என்னை ரெட் டுக்கு மாற வெச்சுடாதீங்க



====================================



30 சார், கிராமத்துக்கதை உங்களுக்கு செட் ஆகுமா? 



வில்லன் ரோலே செட் ஆகும்போது வில்லேஜ் ரோல் செட் ஆகாதா?



=============================


31மகாத்மா காந்தி - வீரம் என்னைக்கும் ஆபத்து.அஹிம்சை தான் பாதுகாப்பு .




அஜித் - எந்த சூழ்நிலைலயும் அஹிம்சை வழில போவதும் வீரம் தான்


======================


32  வெற்றியை முதல் முறை ருசிப்பவன் அதைக்கொண்டாடுவான்.வெற்றிக்குப்பழக்கப்பட்டவன் அடுத்த வெற்றிக்கு உழைக்க ஆரம்பிப்பான்



=======================


33 சார்.2 படங்களுக்கிடையே போதிய இடை வெளி வேணாமா ? 




கேப் விட்டு ரிலீஸ் பண்றது வீரம் இல்லை.கேப் விடாம ஜெயிக்கனும்


========================


34  முதல் இரவில் அஜித் FAN=இந்த ஜில்லாவுலயே உன்னை மாதிரி அழகியைப்பார்த்ததில்லை



 .விஜய் FAN ம்க்கும்.உங்க் வீரம் என்ன?னு இன்னைக்கு தெரிஞ்சிடும்


=========================


35  தலை முறை இடைவெளி என்பது அஜித் ரசிகர்களைப்பொறுத்தவரை 2 அஜித் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு உண்டான இடைவெளியே!


========================


36 சார்.உங்க படம் ஹிட் ஆகியும் ஏன் சக்சஸ் பார்ட்டி கொண்டாடலை ?



உழைப்புக்கு மட்டும்தான் மூளையை செலவுபண்ணனும்.வெற்றியை தலை ல ஏத்திக்க மாட்டேன்


==========================


0 comments: