Friday, November 25, 2011

மயக்கம் என்ன - சினிமா விமர்சனம்


http://viswaksena.com/wp-content/uploads/2011/10/mayakkam_enna.jpg 

புது வசந்தம் விக்ரமன் கிட்டே குடுத்துருந்தா 4 நிமிஷ பாட்டிலேயே முடிச்சிருக்கற சாதாரண கதைதான்.. நம்ம செல்வராகவன் தன்னோட திறமையை முடிஞ்சவரை  அந்த சாதா கதையை ஸ்பெஷல் சாதாவா சொல்ல முயற்சி பண்ணி இருக்கார்..

ஹீரோ ஒரு ஃபோட்டோ கிராஃபர்.. அவரோட கனவே பெஸ்ட் ஃபோட்டோ கிராஃபர் ஆகனும்கறதுதான்.. ஆனா பாருங்க அதிர்ஷ்ட தேவதை அவர் பக்கம் இல்ல.. திறமை இருந்தும்  அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலை.. அவரோட திறமையை யூஸ் பண்ணி வேறொரு ஆள் ஜெயிக்கறாரு.. அப்புறம் கஷ்டப்பட்டு முட்டி மோதி ஜெயிச்சு பெஸ்ட் ஃபோட்டோகிராஃபர் அவார்டு இண்ட்டர்நேஷனல் லெவல்ல வாங்கிடறாரு.. அவ்ளவ் தான் கதை..

தல நடிச்ச முகவரி கதையை திருப்பி சுட்ட தோசை மாதிரி இருக்கேன்னு யாரும் நினைச்சுடக்கூடாதே.. அதனால சில ஜிம்மிக்ஸ் வேலையை எல்லாம் டைரக்டர் காட்றாரு.. அதாவது ஹீரோவுக்கு ஜோடி யார் தெரியுமா? போடா லூசு.. ஹீரோயின் தானே-னு அல்ப சொல்பமா கேட்றாதீங்க.. ஹீரோவோட ஃபிரண்ட் ஒரு ஃபிகரை பொண்ணு பார்க்கறாரு.. டேட்டிங்க் போலாம்னு கூப்பிடறாரு... என்னமோ தெருக்கடைசில இருக்கற பொட்டிக்கடைக்குபோலாம் வான்னு கூப்பிடற மாதிரி.... கூப்பிட்டதும்  ஹீரோயின் பயங்கர அப்பாவி போல கூடவே வந்துடுது.. 

அவன் பாப்பாவை ( அதாங்க ஹீரோயின் ) கட்டிப்பிடிக்கறான்.. அங்கே இங்கே தடவறான் ( எங்கே எங்கே-னு எல்லாம் இண்டீசண்ட்டா கேட்கக்கூடாது).. ஆனா பாப்பா அவன் கையை லைட்டா தட்டி விடறதோட சரி..  ஏன் பளார்னு அறைய வேண்டியது தானே.. ?ன்னு டைரக்டர்க்கு ஃபோன் பண்ணி கேட்டா அவர் சொல்றாரு - தம்பி.. இது அடுத்த தலை முறைக்கான கதை..  அவ்வ்வ்

அந்த ஃபிரண்ட் ஹீரோ கிட்டே அவரோட ஆளை இண்ட்ரடியூஸ் பண்றார்.. கொல்லி மலை சேனைக்கிழங்கு மாதிரி இருக்கற ஹீரோயின் , நோய்ப்பூச்சி தாக்குன கரும்பு சல்லை மாதிரி இருக்கற ஹீரோவைப்பார்த்ததும் என்னமோ காணாததை கண்டது போல் பம்முது..  பாவம் ஆம்பளைங்களையே பார்த்ததில்லை போல.. 


http://tamil.oneindia.in/img/2011/11/15-mayakkam-enna1-300.jpg

ஹீரோவுக்கும் , ஹீரோயினுக்கும் லவ் ஆகிடுச்சுன்னு அந்த நண்பர்க்கு தெரிஞ்சுடுது.. காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போன கதையா  அவங்க 2 பேரும் கட்டிப்பிடிச்சிட்டிருக்கறதை அந்த நண்பன் பார்த்துடறார்.. இப்போதான் இடைவேளை.. ( சஸ்பென்ஸாம் அடங்கொய்யால)

போய்த்தொலையுது சனியன்னு 2 பேருக்கும் மேரேஜ் பண்ணி வெச்சுடறாரு.. அந்த தியாக நண்பர்.. இனி கதையை எப்படி நகர்த்த? இங்கே தான் டைரக்டர் தன்னோட டேலண்ட்டை காட்றார்.. ஹீரோ மாடில இருந்து கீழே விழுந்து தலைல அடிபட்டு லைட்டா சைக்கோ ஆகிடறார்.. கொஞ்சம் மெண்டல் மாதிரி..


அவர் ஹீரோயினை கொடுமைப்படுத்த , டைரக்டர் நம்மை கொடுமைப்படுத்த உஷ் அப்பா போதும்டா சாமி.. எப்படியோ எல்லாம் சரி ஆகி க்ளைமாக்ஸ் எல்லாம் சுபம் ஹி ஹி ஹி

தனுஷ்க்கு வழக்கம் போல நல்ல வாய்ப்பு.. நடிக்க.. அண்ணன் படம் என்பதால் சிரத்தையோட நடிக்கறார்.. டான்ஸ் காட்சிகளில் மனுஷன் செம கலக்கு கலக்கறார்.. 

ஹீரோயின் ரிச்சா கங்கா பாத்பாய்.. 60 மார்க் தரலாம்.. கொஞ்சம் மீனா கொஞ்சம் சங்கவி.....சாயல்  நடிப்பு பாப்பாவுக்கு சுமாராதான் வருது.. அழுற சீன்ல எல்லாம் பார்க்க சகிக்கல.. ஒரு நல்ல நடிகை என்பவர் அழும் காட்சியில் கூட ரசிகர் மனம் கவர வேண்டும்னு கே பாலச்சந்தர் சார் சொல்லி இருக்கார்..

படத்துக்கு முதுகெலும்பே ஒளிப்பதிவும் இசையும் தான்.. படம் பூரா கேமரா விளையாடுது.. 3 பாட்டு செம ஹிட்.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjG6Hiy2au6p78vzbFfJTukkghVhjuLXYVzOkfHnoS2S4vM5P2ik3rxjJ18azkJhUfliJmD0aZph1JF2lenzxSUClQzT1_2vL5snAvNIQ_9bYC-8njgTlVJFI50CYPYPRxjLgAbLWsW7Y4/s1600/0.jpg

மனம் கவர்ந்த வசனங்கள்

1. என்னடா பார்க்கறே.. கொஞ்ச நாள் டேட்டிங்க் பண்ணி பார்க்கலாம்னு தோணுச்சு , அதான் கூட்டிட்டு வந்துட்டேன் , தப்பா?

2.  ஹீரோயின் - ஏதாவது திட்டறதுன்னா திட்டு.. டோண்ட் சைலண்ட்..

ஓ..... திருட்டு மூதேவி..... 

3.  என் ஆள் எப்படிடா?

டேய்.. பிரியாணி எங்கே வாங்குனே..?  பழசு போல.. டேஸ்ட்டே இல்லையே? ( டபுள் மீனிங்க்ல அட்டாக் பண்றாராம் ஹய்யோ அய்யோ)

4.  நீ ஒரு முண்டக்கலப்பை

வாட்?

சரி.. இங்கிலீஷ் தெரிஞ்ச முண்டக்கலப்பை ( தூள் படத்துல ஜோதிகா முண்டக்கண்ணி)

5.  டேய்.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்டா.. என் ஆள் எப்படிடா?

உன் அளவுக்கு கொஞ்சம் கம்மிதான்..

6. என் லட்சியமே நல்ல ஃபோட்டோகிராஃபர் ஆகறதுதான்.. 


ஓஹோ.. கலயாண மண்டபடத்துலயா?

ஏய்.. நீ என்ன பெரிய இவளாடி? கவர்மெண்ட் கக்கூஸ்லயா ஒர்க் பண்றே? ( ஏ க்ளாஸ் ரசிகர்களூக்காக  எழுதப்பட்ட வசனமாம் ஹி ஹி )

7.  அவங்கம்மாவை எனக்குத்தெரியும்.. ஹி ஹி அவ யார் தெரியுமா??

8.  ஏய்.. ஹிந்திப்படம் ஓடுதே அதுல வர்ற வசனம் என்ன அர்த்தம்? முஜே கோயி ஃபிரண்ட் நஹி ஹை.. (எனக்கு யாரும் ஃபிரண்ட்ஸ் இல்லை)

நீ எக்கேடோ கெட்டுப்போன்னு அர்த்தம்..

9.  என்னைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? 6 லேங்குவேஜ் ஐ நோ.. யூ நோ?

மத்தது எதுவும் உனக்கு வந்திருக்காது.. 

10.  தப்பான இண்ட்ரஸ்ட்டை  தேர்ந்தெடுத்தா ஃபியூச்சர் ரொம்ப சிரமம்



http://www.tamilnewscinema.com/wp-content/uploads/2011/09/richa.jpg

11. தம்பி.. இந்த ஃபோட்டோ 1 எனக்கு ஒரு காப்பி குடுப்பா.. என் மனைவி அழகா இருந்து நான் பார்த்ததே இல்ல.. ( அவனவன் சம்சாரம் அவனவனுக்கு அழகா தெரியாதுய்யா)

12.  வாழ்க்கைல நாம எஞ்சாய் பண்ற வேலையை செய்யனும்.. இல்லைன்னா செத்துடனும்.. 

13.  டேய்// உங்க ஹனிமூன்க்கு நான் எதுக்குடா?

யாமினிக்கு நீ வந்தா ஓக்கேவாம்.. 

14.  எங்கேடா உன் கேர்ள் ஃபிரண்ட்?

உள்ளே பாத்ரூம்ல குளிச்சிட்டு இருக்கா.. 

கதவு திறந்து இருக்கு?

அவளுக்கு பல்லின்னா பயம்.. 

15.. யாமினி.. உங்க ஆள் வெளீல போய் இருக்காரு....

தெரியும்.. பல்லி வந்தா கூப்பிடறேன்...

16.  ஆமா.. நீங்க பாட்டுக்கு பாத்ரூம் கதவை திறந்து வெச்சுட்டு குளீக்கறீங்களே..?நானா இருக்காங்காட்டி ஆச்சு.. வேற யாராவது இருந்தா?

ம்க்கும்.. நீ பார்ப்பேன்னு நினைச்சேன்..

17.  இப்போ எதுக்கு டி என்னை திரும்பி பார்க்கறே..?

18.  ஆமா.. அவன் உன் கூடவே சுத்தறான்..?

ஆனா நான் அவன் கூட சுத்தலையே? ( விளங்கிடுச்சு)

19.  கிரியேட்டிவிட்டி என்பது கடவுளா  குடுக்கற வரம்.. நக்குனாக்கூட உனக்கு அது கிடைக்காது  ( படத்தில் பார்க்கும்போது விரசம் இல்லை)

20.  உன்னை எனக்கு ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா? நீ செய்யற வேலையை ரசிச்சு பண்றே.. நான் கூட என் வேலைல தப்பு செஞ்சிருக்கேன்.. ஆனா அப்போ எல்லாம் எந்த வருத்தமும் பட்டதில்லை.. ஆனா உன் வேலைல ஒரு தப்பு நடந்தா நீ வருத்தப்படறே. 


http://www.lohan.in/blog/gallery/2011/04/Actress-Richa-Gangopadhyay-in-Bridal-Makeup-001.jpg

21.  கண்டக்டர்.. இந்த பஸ் கடைசியா எங்கே போகுது?

மைசூர்..

அப்போ மைசூர்க்கு ஒரு டிக்கெட்.. 

22. உன்னை லவ் பண்றதா சொல்லிட்டு என்னை லவ் பண்றா... நாளையே என்னை லவ் பண்றதா சொல்லிட்டு வேற யாரையாவது லவ் பண்ணமாட்டா-னு என்ன நிச்சயம்?

23.  என் நிலைமை எவ்ளவ் கேவலமா போச்சு பார்த்தியா?

ஆமாடா.. மச்சான் ரொம்ப கேவலமாத்தான் போச்சு.. 

24.  என் கேர்ள் ஃபிரண்டை கரெக்ட் பண்ணிட்டு.. இவன் எல்லாம் ஒரு ஃபிரண்ட்..?

25. எங்கப்பனைப்பாரு.. கொஞ்சமாவது வருத்தம் இருக்கா?

26..  நீ ஆம்பளை இல்லையா? அதான்.. வீக்னெஸ்... சீக்கிரம் ஒரு மேரேஜ் பண்ணீக்க. உன் பொண்டாட்டியை நீ தான் தேடிக்கனும்.. அடுத்தவன் பொண்டாட்டியை அல்ல.. 

27.  யோவ்.. எதுக்குய்யா போலீஸ் கம்ப்ளெயிண்ட்டு? என் புருஷன் தான் மெண்டல்தான் ஆனா நல்லவன்.. என்ன கேட்டாரு? ஃபோட்டோவுக்கு போஸ் தானே கேட்டாரு? முடிஞ்சா குடு.. இல்லைன்னா மூடிட்டு போ.. ரொம்ப ஓவரா துள்ளுனே என்னை செக்ஸ் டார்ச்சர் பண்றேன்னு பொய் புகார் குடுத்துடுவேன் 

படம் இடைவேளை வரை ஏதோ கொஞ்சம் எதிர்பார்ப்புடன் நகர்கிறது.. அப்புறம் 2 பேருக்கும் மேரேஜ் ஆன பிறகு திரைக்கதையை எப்படி கொண்டு போறதுன்னு டைரக்டருக்கு மகா குழப்பம்.. 



http://surfingall.files.wordpress.com/2010/12/richa-gangopadhyay-hot-in-red-dress.jpg

இயக்குநருக்கு பாராட்டு தருவிக்கும் இடங்கள்

1. வசனம் தான் படத்துக்கு முதல் பிளஸ்.. ஷார்ப்பான வசனங்கள்.. தேவையான இடங்களீல் நறுக் சுருக். ஆனால்.. எல்லாம் முதல் பாதியில்தான்

2. ஓட ஓட பாட்டுக்கான ஒளீப்பதிவு செம.. சுத்துது சுத்துது பூமி பாட்டுக்கான லீட், நடன அமைப்பு, கேரளா ஃபிகர்களின் ஆடை வடிவமைப்பு அனைத்தும் டாப்.. 

3. யூத்களுக்கான பல மேட்டர்கள் ஆங்காங்கே தெளித்து அப்ளாஸ் அள்ளுகிறது உதவி இயக்குநர் டீம்

4. சிக்கலான திரைக்கதையிலும், சர்ச்சைக்குரிய காட்சிகள் வைக்கும் வாய்ப்பு இருந்தும் கண்ணியமாக காட்சிகளை அமைத்த விதம்

5. ஓட ஓட தூரம் குறையில பாட்டு அருமையான  ஒளிப்பதிவு  உத்தி..  கிராஃபிக்ஸ் கலக்கல் தியேட்டரில் அப்ளாஸ் அடங்கவே 2 நிமிடம் ஆகுது//



http://lh4.ggpht.com/_62XV5GGJjBs/S65hTx56ifI/AAAAAAAAHh0/_qMShB1MJFg/actress.richa-gangopadhyay.richa-gangopadhyay-hot-in-black-010.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் , சில ஆலோசனைகள், சந்தேகங்கள்

1. ஹீரோ ஃபோட்டோகிராஃபியில் செம டேலண்ட்.. அவர் ஒரே ஒரு ஆளிடம் மட்டுமே தன் ஃபோட்டோக்களை காட்டி ஏமாந்துடறார். உலகத்துல வேற ஆட்களே இல்லையா? ஏன் மனசு ஒடிஞ்சு போறார்? அவரோட திறமைகள் ஏன் அனைத்து இண்டர்வியூவிலும் மறுக்கப்படுது?

2. இந்தக்கதைல ஹீரோயின் நண்பனின் டாவு என காட்டி இருக்கவே தேவை இல்லையே? எதுக்கு ? சும்மா ஒரு பரபரப்பை கிளப்பவா?

3.  ஏ கிளாஸ் ஆடியன்சின் இயக்குநர் என  உங்களை எல்லோரும் கொண்டாடுறாங்க.. ஏன் சில இடங்களில் வசனம் ரொம்ப லோ கிளாஸா இருக்கு?

4. ஹீரோவின் ஃபோட்டோவை ஒருவர் மிஸ் யூஸ் பண்ணீ தன் படைப்பு என சொல்லி அவார்டு வாங்கறார்.. டெவலப் பண்ணுன ஸ்டூடியோ சாட்சியை வெச்சு தன்னோட சரக்கு என்பதை அவர் தாராளமா நிரூபிக்கலாமே?

5. இந்த ஃபோட்டோக்கள் எல்லாம் வேஸ்ட்-னு அவர் தூக்கி எரிஞ்சதும் ஹீரோ அவைகளை ஏன் கலெக்ட் பண்ணாம வந்துடறார்..?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEierB34Lc5grJUXvIKG9XR-qn4V-cS3y0h622MpYgGiTnxB22IunZ73-WNkfTHSauh512Aq05wgiHrMKMsH6nciKDyIukqfrp3ypaNWaygLxsQkRpF_hs-cgBwVmPqlBvtI8KJyqqfT0Qmp/s1600/richa_gangopadhyay_mirapakaya_hot_stills_06.JPG


6. அந்த ஃபோட்டோவை மிஸ் யூஸ் பண்ணனும்னு வில்லன் நினைச்சா தம்பி குடுத்துட்டுப்போ, பார்த்து சொல்றேன்னுதானே சொல்வாங்க?

7. ஹீரோயின் டேட்டிங்க் பண்ண வந்த ஆள் கூட உரசல் புரசலா இருக்காரே, அதுதான் நவ நாகரிகமா?அப்படி இருந்துக்கிட்டே ஹீரோவை வேற லவ் பண்றாரு? அவ்வ்வ்வ்

8. ஹீரோ பாத்ரூம் போறாரு.. 6 ஃபிரண்ட்சும் ஹால்ல இருக்காங்க.. ஹீரோயினை கட்டிக்கப்போறவரும் அங்கே இருக்கார்.. அப்புறம் என்ன தைரியத்துல ஹீரோயின் உள்ளே போய் ஹீரோவை கட்டிப்பிடிச்சு கிஸ் அடிக்கறார்?

9. இந்தக்காலத்துல ஃபிரண்ட்ஸ் மேரேஜ் லைஃப் வேற , பேச்சிலர் லைஃப் வேறன்னு வாழ்றாங்க.. ஆனா உங்க படத்துல மட்டும் அந்த ஃபிரண்ட் ஹீரோ கிட்டே ஹீரோயினை தாரை வார்க்காத குறையா கிட்டத்தட்ட கூட்டிக்குடுக்கறாரே? ஏன்?

10. உங்க படங்கள்ல வலுக்கட்டாயமா ஹீரோவை சைக்கோவா காட்றது ஏன்?

11. பருத்தி வீரன் க்ளைமாக்ஸ் பார்த்துட்டு அதே மாதிரி பிளட் ப்ளீடிங்க் டூ ஹீரோயின் காட்னது ஏன்?படத்துக்கு அது அவசியமா?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEih0zg333eqrIOxx3ZC-su4F77rxy_pYdWhohhP4LSxoEXeq2Ow-BAWIETwTkaMgdxnhqOMw4inJCf-jhXstxgFIAwONDkxWhLmCQR4cmape0UzZStMmtaUT_lIkwaGQR09qbELI6By8kty/s1600/Richa_Gangopadhyay_Hot_12.jpg


சி.பி கமெண்ட் - இடைவேளை வரை டைரக்டர் டச்.. அதுக்குப்பிறகு ம்ச் ப்ச்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 41

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்கிங்க் - ஓக்கே 

ஈரோடு ஆனூர்- ல் பார்த்தேன்

படம் எல்லா செண்ட்டர்லயும் 10 நாட்கள் கண்டிப்பா ஓடிடும்.. .

41 comments:

Unknown said...

Friday Ramasamy !

Sen22 said...

டைரக்டர் அறை மயக்கத்தில் படத்தை எடுத்திருப்பார் போல... ;)

நல்ல விமர்சனம்...

திரும்பவும் சொல்றேன்... எனக்கு நிறைய காசு மிச்சம் பண்றீங்க... :))

மிக்க நன்றி...

அன்புடன் மலிக்கா said...

விமர்சனம் விலாவரியாக!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:))

Unknown said...

கொல்லிமலை சேனைக் கிழங்கு ஹீரோயின் - (புதுசா பேரு வச்சாச்சோ ?)
நோய் பூச்சி தாக்கின கரும்பு சல்லை ஹீரோ
- சி.பி உங்களோட விமர்சன சள்ளை தாங்க முடியலய்யா...முடியல

Good Review CP !

K.Arivukkarasu said...

காலைல செங்கோவி விமர்சனத்த கொஞ்சம் பயத்தோட படிச்சேன். உங்க விமர்சனத்த படிக்கவே விடமாடேங்கிறீங்களே. சிரிச்சு..சிரிச்சு.. ”டைரக்டருக்கு போன் பண்ணி கேட்டா”.....”கொல்லி மலை”...”இடைவேளை சஸ்பென்ஸ்”...”டைரக்டர் நம்மை கொடுமைப் படுத்த”...நீங்கள் போஸ்ட் செய்திருக்கும் படங்கள், வசனங்கள்,பாராட்டுகள்,கே.ஆ.ச., எல்லமே அருமை...படம் 10 நாள் கண்டிப்பா ஓடும்...ரசித்தேன் செந்தில் :-)

ராஜ் said...

செல்வராகவன் கிட்ட இருந்து மறுபடியும் ஒரு சைக்கோ ஹீரோ படம்மா......?????
நான் நினைக்கிறேன் அவருக்கு ஏதோ மன ரீதியான பிரச்சினை இருக்குன்னு..

Mathuran said...

அப்போ படம் எதிர்பார்த்த அளவு இல்லையா

சத்ரியன் said...

சிபி,

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.

”மயக்கம் என்ன” விமர்சனத்துக்கு நடுவுல, நாயகியோட போட்டோவை மட்டும் நிறைய இடங்கள்ல போட்டிருக்கும் ”மர்மம் என்ன”?

கும்மாச்சி said...

நல்ல விமர்சனம் செந்தில், ஸோ படம் பார்க்கவேண்டாம்.

Jaganathan Kandasamy said...

mayakama varuthu.
super vimarsanam.

Unknown said...

ஹிரோயின் அழும் போதும் அழகாஇருக்கவேண்டும் அது அந்தகாலம்
லோ ஸ்கர்ட் போட்டாலும் ஜட்டி தெரியறமாதிரி கால்மேல் கால் போட்டு உக்காரனும் இது இந்த காலம் கர்மமடா சாமி...தல கேவிச்சுக்காதிங்க படத்தை விட விமர்சனம் சூப்பர்...

Anonymous said...

அது எப்படிண்ணே, படத்துக்கு போகும் போது நோட் பேனா எல்லாம் எடுத்துட்டு போவீங்களா? டயலாக் எல்லாம் கரெக்டா எழுதறீங்களே. அந்த ஹிந்தி டயலாக் உட்பட. தூள்

Anonymous said...

அண்ணே எல்லா ஓட்டும் ம்ம்ம்...

Unknown said...

// ராஜ் said...
செல்வராகவன் கிட்ட இருந்து மறுபடியும் ஒரு சைக்கோ ஹீரோ படம்மா......?????
நான் நினைக்கிறேன் அவருக்கு ஏதோ மன ரீதியான பிரச்சினை இருக்குன்னு..//

கஸ்தூரி ராஜா ஒரு பேட்டியில சொல்லி இருக்காரு..அவரு(செல்வா) சிந்தனையோட lifeல travel பண்றது கஷ்டம்ன்னு..அத புரிந்து கொண்டவர் தாம் இப்ப 2nd மனைவி !

MANO நாஞ்சில் மனோ said...

காசு செலவளிச்சி கஷ்டபடுறவனை பற்றி யாருக்கும் அக்கறை இல்லை, இப்பிடி நோகாம நொங்கு எடுக்கிறியே ஹி ஹி...

MANO நாஞ்சில் மனோ said...

படம் பார்க்கலாமா பூடாதா அதை சொல்லலையே அண்ணே....

MANO நாஞ்சில் மனோ said...

விமர்சனம் "மது மயக்கம்"

rajamelaiyur said...

Kalakkal review

நெல்லை கபே said...

@ராஜ்

ஹா..ஹா...வாய்விட்டு சிரித்தேன்.

Prem S said...

நாயகி படங்களை போல விமர்சனமும் அருமை

தமிழ்வாசி பிரகாஷ் said...

அப்போ போட்டோஸ் எல்லாம் பிரின்ட்ல சரியா வரலியா? இன்னொரு முறை சரியா எடுத்தா ரொம்ப காசு செலவாகுமே...


நம்ம தளத்தில்:
சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு தேவை

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
Unknown said...

அது ஏன்யா எப்ப பாரு எதிர் மறையா பதில் போடுறே...விமர்சனம் அரை புள்ளி குறைச்சலாய்...நன்றி!

ராஜி said...

Super review

Anonymous said...

எனக்கு தெரியும் அண்ணே, பதிவுலகில் நீங்க பெரிய ஆள் ஆகிட்டீங்கள்னா ஓகே. இல்லைன்னு நினைச்சிங்கனாக்கா நல்லா இருங்கண்ணே.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தலைவா... ஆஃப் ஒரு ஆள் சாப்பிட்ட மாதிரி விமர்சம் செம கிக்.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

பார்த்தியா தலைவா... ஆஃப்'ந்னு சொன்னதும் நானே குழம்பிட்டேன்... புரியலையா... விமர்சனத்தை தப்பா எழுதி இருக்கேன்... ஹி...ஹி,,,!

sandy said...

film paakravanga paakattum... ungala mathiri alungalala than nalla padatha kuda mathavanga paakka matranga... unga link ah padikanum apdinrathukkaaha yen intha polappu

Unknown said...

Vimarsanam nallarukku.. nalaikku parkkalamnu irukken..

N.H. Narasimma Prasad said...

விமர்சனம் அருமை அண்ணே.

உணவு உலகம் said...

ரொம்ப விளக்கமா விமர்சனம் போட்டுருக்கீங்க. நன்றி சிபி

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உங்களை போன்றவர்களை நம்பி தானே இப்படிப்பட்ட படங்களும் எடுக்குறாங்க

karthikkumar.karu said...

nalla than irukira nathiri thonuthu.....

அசோக்ப்ரியன் said...

வசனம் எல்லாம் எப்படி தல இவ்வளவு நியாபகமா வசு இருக்கீங்க்க......

அந்த ஹிந்தி பட வசனம் உட்பட

danger said...

intha padam ungaluku pidikalaina ungalukku kandipa 'VELAYUTHAM" "SINGAM' "VILLU" 'ASAL''VETTAIKARAN' PIDIKUM POLA..... PADATHA rasithu paka oru thdavayathu try pannunga boss..padam nalla irukum ...atha vittutu opening song,heroine intro song,thangachi amma sentiment, love propose panra song,aparam appa kuda sandai, villan kuda sandai,climax munnala kuthu song kadaisila villana konnu heroine amma thangachi ya ellam kapathara mathiri mudinja than padama,,,,,innu, ethana nal than ippadiye irupinga.... unmaya sollunga Richa voda character ulla ponnunga nenga real life la pathathe illaya... nengalam(namalam) thanni adikarathu illaya?... padatha rasichu patha arumayana padam than MAYAKAM ENNA arumayana padam boss.... Venumne ippadi podathinga...mudinja alavuku padam odum pothu comment adichukitte pathan ungala mathiri than boss review panna mudiyum... visil adichukitte padam pakanumnna thayavu senju SELVARAGAVAN,GUVTHAM MENAN, JEEVA, K V ANAND,MURUGADOS,SHANKAR,RAJIV MENAN,MANIRATHNAM PADATHUKELLAM POITTU IPPADI COMMENT PODATHINGA,,,,,, RASIKA TRY PANNUNGA..... SORRY -NA ETHUM THAPPA SOLLI IRUNTHAL.....

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் .......

குறுக்காலபோவான் said...

கிண்டல் கேலி நன்று..
விமர்சனம் ஓ.கே..
பிடித்த வசனங்கள் என்று விட்டு படத்தின் பாதி வசனங்களை பதிவு செய்துள்ளீர்களே!
ஏன்? மிகுதி மறந்துருச்சா?

//ஏன் சில இடங்கள வசனம் லோ கிளாசா இருக்கு// என்ன பண்ண சி.பி என் மாதிரி புறம்போக்குகள கவர்வதற்க்கு பதிவின் இடையிடையே ரிச்சாவின் மார்பு தெரியும் அரைகுறை ஆடை படங்களை தாங்கள் சேர்ப்பது போலத்தான் இதுவும்.
செலவில்லாமல் பதிவு எழுதுற நீங்களே இப்படிபண்ணும்போது கோடிகளை லட்சங்களை செலவு செய்யும் அவர்களும் சில நாதாரித்தனங்களை செய்யவேண்டியுள்ளது.

//தூக்கி எறிந்த போடோக்களை ஏன் கலக்ட் பண்ணாம வந்துட்டார்// தனது போடோக்கல் நேராகைக்கபட்டு விடாதே என்ற வெறுப்பு,கோபம் விரக்தி.இப்படி எடுத்துக்க வேண்டியதுதான்.

//ஹால்ல இருக்கிறாங்க என்று தெரிஞ்சு என்ன தைரியத்தில நாயகி கட்டிபிடிச்சு கிச் அடிக்குறாங்க? // அதுதான் சார் உணர்ச்சி. சுந்தர்தான் அவளை காதலிக்கிறானே தவிர அவள் கார்த்திக்கை(தனுஷ்)தான் விரும்புகிறாள்.ஆனால் கார்த்திக் நண்பனுக்காக விளக்க முயச்சிகிறான்.காதல் உணர்ச்சி யாரை விட்டது...
மற்றைய தங்களின் கேள்விகள் பல நியாயமானவையே...
செல்வாவுக்கு வக்காலத்து வாங்குகிறேன்.P .R.O வேலை பார்க்கிறேன் என்று பின்னூட்டம் வரும் என்ற நம்பிக்கையில்......

குறுக்காலபோவான் said...

கிண்டல் கேலி நன்று..
விமர்சனம் ஓ.கே..
பிடித்த வசனங்கள் என்று விட்டு படத்தின் பாதி வசனங்களை பதிவு செய்துள்ளீர்களே!
ஏன்? மிகுதி மறந்துருச்சா?

//ஏன் சில இடங்கள வசனம் லோ கிளாசா இருக்கு// என்ன பண்ண சி.பி என் மாதிரி புறம்போக்குகள கவர்வதற்க்கு பதிவின் இடையிடையே ரிச்சாவின் மார்பு தெரியும் அரைகுறை ஆடை படங்களை தாங்கள் சேர்ப்பது போலத்தான் இதுவும்.
செலவில்லாமல் பதிவு எழுதுற நீங்களே இப்பிடிபண்ணும்போது கோடிகளை லட்சங்களை செலவு செய்யும் அவர்களும் சில நாதாரித்தனங்களை செய்யவேண்டியுள்ளது.

//தூக்கி எறிந்த போடோக்களை ஏன் கலக்ட் பண்ணாம வந்துட்டார்// தனது போடோக்கல் நேராகைக்கபட்டு விடாதே என்ற வெறுப்பு,கோபம் விரக்தி.இப்படி எடுத்துக்க வேண்டியதுதான்.

//ஹால்ல இருக்கிறாங்க என்று தெரிஞ்சு என்ன தைரியத்தில நாயகி கட்டிபிடிச்சு கிச் அடிக்குறாங்க? // அதுதான் சார் உணர்ச்சி. சுந்தர்தான் அவளை காதலிக்கிறானே தவிர அவள் கார்த்திக்கை(தனுஷ்)தான் விரும்புகிறாள்.ஆனால் kaarthik நண்பனுக்காக விளக்க முயச்சிகிறான்.காதல் உணர்ச்சி யாரை விட்டது...
மற்றைய தங்களின் கேள்விகள் பல நியாயமானவையே...
செல்வாவுக்கு வக்காலத்து வாங்குகிறேன்.P .R.O வேலை பார்க்கிறேன் என்று பின்னூட்டம் வரும் என்ற நம்பிக்கையில்......

ம.தி.சுதா said...

சீபி உண்மையச் சொன்னால் நான் இன்னும் படம் பார்க்கல...

ஆனால் வழமை போல உங்க வசனச் சுட்டலை ரசித்துச் செல்கிறேன்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

KUTTI said...

i dont like your comments about this film... in my point of view... this film so good....

mano