Thursday, October 25, 2012

ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை

http://static.flickr.com/90/205023921_20231f4f25.jpg

சின்மயி VS கீச்சர்கள்! (ட்வீட் தமிழர்கள்)

க.ராஜீவ்காந்தி

ட்விட்டர், ஃபேஸ்புக் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் சின்மயி. காரணம், அவர் பதிவிட்டதாகச் சொல்லப்படும் சில ட்வீட்களும் அதற்கான எதிர்வினைகளும். போலீஸ் புகார், இணைய உலகில் கருத்து மோதல் என்று கலவர நிலவரம்.
 பிரச்னைகளுக்கு சின்மயியின் ட்வீட்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள் பிரபல ட்வீட்டர்கள் 'ராஜன்லீக்ஸ்’ ராஜன், 'தோட்டா’ ஜெகன், 'ஃப்ரீயாவிடு’ டேவிட். ராஜனிடம் பேசினேன்...



''2011 ஜனவரி மாசம் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக இணைய எழுத்தாளர்கள் ஓர் இயக்கம் ஆரம்பிச்சோம். அதில் இணையச் சொல்லி சின்மயியிடம் கேட்டோம். மறுத்துட்டாங்க. அது வரைக்கும் அவங்க உரிமை. ஆனா, 'மீனவர்கள் மீன்களைக் கொல்லலாம். கப்பல் படை மீனவர்களைக் கொன்றால் தப்பா?’னு ட்வீட் பண்ணாங்க. கோபத்தில் நாங்க சின்மயியை விமர்சிச்சு ட்வீட் பண்ணோம். அப்போ ஆரம்பிச்ச பிரச்னை. தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய ட்வீட்களை சின்மயி போஸ்ட் பண்ணிட்டே இருந்தாங்க.


இட ஒதுக்கீடு தொடர்பான ஒரு விவாதத்தில், 'தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது. அரசியல்வாதிகள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் காண்பித்து, சலுகைகள் பெற்றுத் தருகின்றனர்’னு எழுதினாங்க. இப்படி அதிகப்பிரசங்கித்தனமா அவங்க போடுற ட்வீட்களுக்கு நாங்க பதிலடி கொடுத்துட்டே இருப்போம். அது அவங்களுக்குப் பிடிக்கலை. தமிழ்நாட்டின் பிரபல பதிவர்கள் பட்டியலில் அவங்களுக்கு அடுத்து என் பேர் இருந்தது அவங்களை எரிச்சல்படுத்தி இருக்கு.


http://akamai.maastars.com/wp-content/uploads/2012/04/Chinmayi_Cool_Saree_00.jpg
 அதைப் பத்தியும் தப்புத் தப்பா ட்வீட் பண்ணிஇருந்தாங்க. இது எல்லாம் சேர்ந்துதான் இப்போ போலீஸ் புகார் வரை போயிருக்கு. இத்தனைக்கும் சின்மயியுடன் ஆரோக்கியமான விவாதத்தில் இருந்த பலரைப் பற்றியும் புகார் சொல்லி இருக்காங்க சின்மயி. இணையவெளி ஒரு கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுக்கும். அந்தத் தைரியத்தில் சிலர் சின்மயியை பெர்சனலாப் பேசியிருக்கலாம். ஆனா, அதுக்காக ஏதோ சின்மயி தப்பே பண்ணாத மாதிரி பேசுறது நியாயம் இல்லை. பிடிக்காதவங்களை, தன்னைப் பத்தித் தப்பாப் பேசுறவங்களைத் தன் அக்கவுன்ட்டில் பிளாக் பண்ணியிருக்கலாம். பிரச்னையே இருந் திருக்காது!'' என்றார்.



சின்மயி அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் தொடர்புச் சட்டம் 66ஏ பிரிவின் கீழ் ராஜனைக் கைது செய்திருக்கிறார்கள் போலீஸார். சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்காக தமிழகத்தில் முதல்முறையாகக் கைது செய்யப் பட்டு இருக்கும் நபர் ராஜன்தான்.



சின்மயியிடம் பேசினேன், ''இதைப் பத்தி நான் திரும்பத் திரும்பப் பேச விரும்பலை. நான் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கேன்னு என் அம்மாகிட்ட கேட்டுக்கங்க!'' என்று ஒதுங்கிக்கொண்டார்.


http://static.ibnlive.in.com/pix/slideshow/06-2012/in-pics-south/simmaardpart34222612_11.jpg



சின்மயியின் தாயார் பத்மஹாசினி பேசினார். ''ஃபேஸ்புக், ட்விட்டர்ல என் பொண்ணைப் பத்தித் தப்பாப் பேசுறது இன்னைக்கு நேத்து இல்லை. பல வருஷமாவே இருக்கு. எத்தனை நாள்தான் நாங்களும் பொறுமையா இருக்கிறது? என் பொண்ணைத் தப்பாப் பேச ஆரம்பிச்சு, அப்புறம் என்னையும் தப்பாப் பேசி... ரொம்ப தனிப்பட்ட தாக்குதலா இருந்ததுனாலதான் போலீஸ்ல புகார் கொடுத்தா சின்மயி.



'ஜெயலலிதாவையே கேள்வி கேக்குறோம். நீ என்னடி பெரிய இவளா?’னு கேட்டா, எங்களால் என்ன சொல்ல முடியும்? மீனவர் பிரச்னையோ, இட ஒதுக்கீட்டுப் பிரச்னையோ ஒவ்வொருத்தருக்கும் தன் தனிப்பட்ட கருத்தைச் சொல்ல உரிமை இல்லையா? இதே சின்மயிதான் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டிச்சும் ட்வீட் பண்ணியிருந்தா. அதுக்கு, 'நாங்க குழந்தைகளை ரேப் பண்ணினா உனக்கு என்னடி?’னு ட்வீட் போடுறாங்க. இளையராஜா ரசிகர்கள்லாம் சேர்ந்துக்கிட்டு, 'நீ ரஹ்மான் குரூப்தானே’னு திட்டித் திட்டி ட்வீட் போடுறதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?




முதல்வர் பதவிக்கு உண்டான மரியாதைகூடக் கொடுக்காம ஜெயலலிதாவை ரொம்ப மோசமா விமர்சிக்கிறாங்க. கனிமொழி, குஷ்பு, நயன்தாரானு எல்லாரையும் ரொம்ப ரொம்ப ஆபாசமா விமர்சிச்சு எழுதுறாங்க. இப்ப இந்த வரிசையில சின்மயி. த்ரிஷா ஒரு நாயைத் தத்தெடுக்கப் போறேன்னு எழுதினா, அதுக்கு உடனே, டபுள் மீனிங்ல கமென்ட் பண்றாங்க. ஒரு டான்ஸ் மாஸ்டரோட பிரா சைஸ் என்ன இருக்கும்னு விவாதிச்சுட்டு இருக்காங்க. பெண்கள் மீதான வக்கிரத்தை வெளிப்படுத்தத்தான் இவங்களுக்குக் கருத்துச் சுதந்திரம் பயன்படுதா? சின்மயி, சாதி பத்தி பெருமையாப் பேசித் தம்பட்டம் அடிச்சதா சொல்றாங்க. சாதிப் பெருமை பேசுற, 'இந்த சாதிக்காரன்’னு சொல்லி போஸ்டர் அடிச்சுக்கிற ஆட்கள் இங்கேதானே இருக்காங்க. அவங்களை எல்லாம் ஏன் இவங்க தட்டிக் கேட்கலை?




ஃபேஸ்புக்லயோ, ட்விட்டர்லயோதலைவர் களைத் திட்டிட்டா போதுமா? அது தமிழர் களுக்காகப் பாடுபட்டோம்னு அர்த்தம் ஆகிடுமா? ஆபீஸ்ல இருக்கிற வரைக்கும்,  வீட்ல கரன்ட் இருக்கிற வரைக்கும் ட்வீட் பண்ணிட்டு, அப்புறம் சொந்த வேலைகளைப் பார்க்கப் போறவங்கள்லாம், ஒவ்வொரு பிரச்னைக்காகவும் வீதியில் இறங்கிப் போராட லாம்ல. இதோ... சோஷியல் நெட் வொர்க்கிங் சைட்களில் பெண்கள் மீது அவதூறு பரப்புறவங்களை எதிர்த்து என் பொண்ணு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து போராட ஆரம்பிச்சுட்டா. நீங்களும் அப்படி வாங்களேன் பார்ப்போம்!'' என்றார் கோபமும் வேகமுமாக!


http://www.moviecloudz.com/wp-content/uploads/2012/10/Chinmayi-Playback-Singer.jpg



பின்குறிப்பு: இதழ் அச்சுக்குச் செல்லும் சமயம் இரு தரப்பினரிடையே சமாதானப் பேச்சுகள் துவங்கிவிட்டதாகத் தகவல்!

 நன்றி - விகடன்

Wednesday, October 24, 2012

திருத்தணி - சினிமா விமர்சனம்

http://www.tamilstar.com/cinema-images/news-images/barath-thiruththani-06-09-11.jpg 

அண்ணன் ராமராஜன் , அங்கிள் டாக்டர் சீனிவாசன் உள்ளிட்ட  பலர் நடிச்ச குப்பைப்படங்களுக்கு எல்லாம் போகக்கூடாதுன்னு ஒரு வைராக்யத்தோடதான் இருந்தேன். ஆனா பாருங்க, விதி வலியது , கூட இருக்கற ஆளுங்க  உசுப்பேத்தி விட்டுட்டாங்க.. தானா அழிவது பாதி , கூட இருக்கறவங்களால கிழிவது மீதி என்ற லேட்டஸ்ட்  ஃபார்முலா படி இந்தப்படத்தை பார்க்க நேர்ந்தது . இந்தக்காவியத்தின் கதைச்சுருக்கம் என்னான்னா. 



ஹீரோ ஜிம் மாஸ்டர். அங்கே எக்சசைஸ் பண்ண ஹீரோயின் வருது. அவர் எக்சசைஸ் பண்ற அழகைப்பார்த்து மயங்கி ஹீரோ லவ்வுக்கு பிட்டைப்போடறார்.அந்த கேன ஹீரோயின்  என்ன சொல்லுதுன்னா “ எனக்கு நல்ல , பெரிய குடும்பம் உள்ள மாப்ளை தான் வேணும், ஏன்னா நான் ஒரு அநாதை”ன்னு சொல்லுது. உலகத்துலயே மாப்ளை எக்கேடு கெட்டா என்ன? அவன் என்ன வேலை செஞ்சா என்ன? ஃபேமிலி கூட்டமா இருந்தா சரின்னு சொன்ன ஒரே பெண் இவர் தான். 


ஹீரோ உடனே கிரேசி மோகன் படங்கள்ல வர்ற மாதிரி  ஹீரோயினை தன் அத்தை பொண்ணா அதாவது பூர்வ ஜென்ம அத்தையோட அடுத்த பிறப்பா நடிக்க வெச்சு எல்லாரையும் ஏத்துக்க வைக்கறார். இந்த கேவலமான எபிசோடு 4 ரீல்க்கு போகுது. 


ஊர்ல எங்கே அநியாயம் நடந்தாலும் , வாக்கிங்க், ஜாக்கிங்க்  போனாலும் ஹீரோ கண்டுக்க மாட்டேங்கறார், தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்கார். அது ரிட்டயர்டு மிலிட்ரி மேன் ராஜ் கிரணுக்கு பிடிக்கலை.அநியாயத்தை தட்டி கேட்கனும்னு அட்வைஸ் பண்றார். 


http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/10/thiruthani-movie-stills08.jpg


 உடனே  ஹீரோ அரதப்பழசான ஒரு ஃபிளாஸ்பேக்கை எடுத்து விடறார். அதாவது அண்ணன் அழகிரி மாதிரி  வாட்டசாட்டமான ஒரு அரசியல் ரவுடி  அநியாயமா  ஹீரோவோட அம்மாவை கொலை பண்றான். அப்போ ஊரே வேடிக்கை பார்க்குது. அவங்க மட்டும் வேடிக்கை பார்த்தப்போ நான் மட்டும் ஏன் தட்டி கேட்கனும்கறார். 


இப்போ ஹீரோவுக்கு ஆக்சிடெண்ட் ஆகுது. கோடம்பாக்க வழக்கப்படி  டாக்டர் ஹீரோவுக்கு கெடு விதிக்கறார்.இன்னும் 6 மாசம் தான் டைம். அதுக்குள்ளே நீ என்னென்னெ சாதிக்கனுமோ அதை எல்லாம் சாதிச்சுக்கோங்கறார். துப்பாக்கி , விஸ்வரூபம் இந்த 2 படம் மட்டும் தான் பார்க்க முடியும் அந்த 6 மாசத்துல . ஆனா பாருங்க ஹீரோ டொப்பு டொப்புன்னு எல்லாரையும் ஐ மீன் ஆல் ரவுடிஸ் , வில்லன்ஸ் சுட்டுத்தள்ளறார்.


 இதான் கதை. சின்ன குழந்தை கூட கணிக்கும் ட்விஸ்ட் என்னான்னா அந்த டாக்டர் 6 மாச கெடுன்னு சொன்னது பொய்.  4 பேரு நல்லாருக்கனும்னா  400 ரவுடிங்க நாசமா போகனும்னா எதுவுமே தப்பில்லை . அவ்வ்வ் 


 ஹீரோ பரத். மனசுக்குள்ளே  பெரிய விஜய்னு நினப்பு.. சிவகாசி , திருப்பாச்சி விஜய்யை அச்சு அசலா காப்பி அடிச்சு சின்னத்தளபதி சின்னத்தனமான தளபதி ஆகறார்.அவருக்குன்னு நல்ல டான்ஸ் டேலண்ட் இருக்கு, ஏன் விஜயை காப்பி அடிக்கனும்? அவர் பாட்ஷா ஸ்டைலில் பஞ்ச் டயலாக் பேசும்போதெல்லாம் ஊட்டி சூசயிடு பாயிண்ட்டே பெட்டர்னு தோணுது. அட்லீஸ்ட் 50  படமாவது முடிச்சவங்க  பஞ்ச் டயலாக் பேசுனா ரசிக்கலாம்.. ஹூம்.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnFm0jHarGbCY2azAht4qhJYV7kKmapuOpBsmk239Vu7mhnIcRKRB8rSrNiWZu_SYE02Wfje-rVcumfycbQr3POk3hqNl55tinYYthIru9VpA09GIXrZ6hGMoqKTZXSqPTJhPMiSUU3glQ/s400/Sunaina_(2).jpg


 ஹீரோயின் அழகிய உதட்டழகி சுனைனா. சைபர் க்ரைம் போலீஸ் கிட்டே மன்னிப்பு கேட்டுட்டு ஒரு பேரா வர்ணிச்சுடறேன். பிளவு பட்ட  ஒரு கட்சி பார்க்க சகிக்காது. ஆனா பிளவு பட்டிருக்கும் இவர் உதடுகள் நந்தியா வட்டப்பூக்களாக அலங்கரிக்கப்பட்ட அழகிய பற்களை காட்டும்போது இந்தா பாப்பா என்னை கொஞ்சம் கடி என சொல்ல வைக்குது. பன்னீர் திராட்சை  கறுப்பா இருக்கும், சீட்லெஸ் திராட்சை பச்சை கலர்ல இருக்கும், இதென்ன லைட் ரோஸ் கலர்ல 2 திராட்சைன்னு பார்த்தா அது சுனைனாவின் உதடாம்.. அடடே..


மாடர்ன் டிரஸ் போட்ட மாடப்புறாவாக வரும்போதும்  சரி , பட்டுப்புடவை அணிந்து வரும் பங்கஜமா வரும்போதும் சரி சொக்க வைக்கறார்.மற்றபடி அவர் நடிப்பு எல்லாம் போலீஸ் ரகம் ஐ மீன் மாமூல் ரகம்.. அவர் ஜிம்ல படுத்த வாக்குல செஸ்ட்க்கான பென்ச் பிரஸ் எக்சசைஸ் பண்ணும்போது கேமரா மேன் நம்மளை அவர் பக்கத்துலயே கூட்டிட்டுப்போறார்..

 ராஜ் கிரண் இதுல ஜீன்ஸ் பேண்ட் போட்டுட்டு வர்றாரு. செம காமெடியா இருக்கு.. 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtTuQ4ZgxGCxBeR6nYn3yBmK5eMtYeAe3YLQ9QBJ3q8yCTms8XVZd-eRGAnor2NR1AeyArY0QQhzn7bLVgUTCYVv0VO1eFIoeGikA0X6awfO91i1psaZlF8rgIzC_hcviZDh9xtIBbsYk/s1600/sunaina-notecinema+%25282%2529.jpg


 மனம் கவர்ந்த வசனங்கள்  ( குப்பையில் பொறுக்கிய மாணிக்கங்கள் )


1. சுனைனா - யோவ், எங்கங்கயோ தொடறே?


 இது டச்சிங்க் இல்லைம்மா, டீச்சிங்க் 



2. ஆம்பளைங்க ஜிம்க்கு வர்றது  சிக்ஸ் பேக்குக்காக , பொம்ப்ளைங்க ஜிம்முக்கு வர்றது  செக்ஸ் லுக்குக்காக 



3. சுனைனா - யோவ், உன் சர்ட்டை கழட்டு


 அய்யய்யோ, எதுக்கு?

 உன் பாடி எக்சசைஸ் செஞ்ச ஒரிஜினல் பாடிதானா?ன்னு பார்க்கனும்


( நல்ல வேளை ) 



4. யோவ், வக்கீலு, இந்த பொண்ணு மேல கேஸை போட்டு பீசை பிடுங்குய்யா. 


 நான் ஒண்ணும் ஈ பி ஆபீஸ் இல்லை, பீசை பிடுங்க, காசை மட்டும் தான் பிடுங்குவேன்


5. சுனைனா - நான் இங்கே இருக்கும்போது வீடு சுண்ணாம்பு அடிச்சு வெள்ளை வெளேர்னு இருந்துச்சு, இப்போ மஞ்சள் கலர்ல இருக்கே? 


 ம், மஞ்சள் காமாலை நோய் வந்திருச்சு 



6. ஏண்டி.. உங்கப்பன் பரம்பரைத்திருடனா? நைஸா சுட்டுட்டுப்போறானே? 



7. யோவ், என்னய்யா? உன் ஃபிளாஸ் பேக்  ரொம்ப பழசா இருக்கு../ ஆனா சொம்பு ரொம்ப புதுசா இருக்கு/? 


 அவ்ளவ் தானே, கொண்டா கிணத்துல போட்டுடறேன்


 அடப்பாவி, ஆதாரத்தை சேதாரம் ஆக்கிட்டானே? 



8. இது சுயநலம் நிறைஞ்ச உலகம். யாருக்கு என்ன நடந்தாலும் அதை வேடிக்கை பார்க்க  மட்டும் ஆள்ங்க ரெடியா இருப்பாங்க



9. சின்ன வயசுல செத்துப்போன எல்லாருமே சரித்திரத்துல இடம் பிடிச்சவங்களாத்தான் இருக்காங்க.. உதா - பாரதியார், வாஞ்சிநாதன், விவேகானந்தர்


10. இப்படி அடுக்கு மொழில பேசிட்டுப்போறியே? நீ டி ஆரா? 


 பேரரசு - இல்லை. அவர் சிம்புக்கு அப்பன், நான் வம்புக்கு அப்பன் ( இந்த சீன்ல அப்பா-ன்னு வசனம் சொல்லி இருக்கலாம்)


11. நீங்க நினைக்கற மாதிரி திருத்தணி யங்க் இல்லை , சிங்க்..


 அவ்வ்வ்வ் 


12. இப்பவெல்லாம் இலவசம் தான் அரசியல்ல பெரிய முதலீடா இருக்கு 


13. சிகப்பா இருக்கற நீ தீக்குளிச்சு என்னை மாதிரி கறுப்பா ஆக ஏன் ஆசைப்படறே? 


14. இந்த உலகத்துல ரெண்டே ஜாதிதான் இருக்கு 

1. தான் பட்ட கஷ்டத்தை எல்லாரும் படட்டும்னு நினைக்கற மிருக ஜாதி 


2. தான் பட்ட கஷ்டத்தை வேற யாரும் படக்ல்கூடாதுன்னு நினைக்கற மனித ஜாதி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCj_oWVAeTr9q3d2jWYjKZG7uZfAW18YDXsKhi2AT5TbbTf7leuzPdPCPoBQb3FOsdA7EPCnHj4BgN9IiuDmS1crK7jizv3w5sUyvd2q-4wZUaBMdROGQlSqK7hB8DXsJfYrm46TeI75sH/s600/Sunaina+Hot+Photos+08.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. தான் இயக்கிய சிவகாசி படங்கள்ல இருந்து  ஒரு ரீல் ஓட்டி விஜய் ரசிகர்களை குதிப்படுத்துனது. அதனால அஜித் ரசிகர்கள் ஆதரவு இல்லாம போயிடக்கூடாதுன்னு படத்துக்கு சம்பந்தமே இல்லாம அஜித்தின் மங்காத்தா பட சீன் 2 சீன் காட்னது 


2. சுனைனாவை ஹீரோயினா புக் பண்ணி அவரை ஜிம்ல நல்லா திறமையை காட்டு காட்டுன்னு காட்ட வெச்சது.. டைட் டிரஸ் வேற 


3. பரத்தை பஞ்ச் டயலாக்ஸ் ஜஸ்ட்  ஏ ஃபோர்  சீட் 4 பக்கம் மட்டும் பேச வெச்சது 


4. உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக   ராஜ் கிரணை தொடை காட்டாமல் நடிக்க வெச்சது, அவருக்கு ஒரு ஜீன்ஸ் பேண்ட்டை மாட்டி விட்டது


5. நீ எனக்கு நான் உனக்கு, மெலோடி சாங்க் வானவில்லே , வண்ணாரப்பேட்டை குத்துப்பாட்டு, முமைத்கான் குத்தாட்டம் என சி செண்ட்டர் ரசிகர்களை திருப்திப்படுத்தும்  பாடல்கள்



http://www.shotpix.com/images/49829221999221857108.jpg

இயக்குநரிடம் ஜாலியாய் சில கேள்விகள்



1. வில்லன்னா ஹீரோ கூட சண்டை போடனும், அல்லது ஹீரோயினை ரேப் பண்ண ட்ரை பண்ணனும், அதை எல்லாம் விட்டுட்டு 4 வயசுக்குழந்தை தீபாவளிக்கு விட்டுட்டு இருக்கும் நில புருஷை ( வாணம் ) காலால மிதிச்சு அது கிட்டே போய் பஞ்ச் டயலாக் பேசுனா அதுக்கு என்ன புரியும்? 


2. அருகம்புல் ஜூஸ் என்பது ரத்தத்தை சுத்தீகரிக்கும், சுகர் பேஷண்ட் சாப்பிடுவாங்க, வாக்கிங்க் போறப்ப நாங்க எல்லாம் கிரவுண்ட்ல அதை பார்த்துட்டு ஒரு டம்ளர் வாங்கி குடிப்போம், ஆனா படத்துல ராஜ் கிரண் அருகம்புல் ஜூஸை ஹார்லிக்ஸ், போர்ன் விடா ரேஞ்சுக்கு உயர்த்தி சொல்றதெல்லாம் ஓவர், அதை குடிச்சுட்டு பசங்க ஓட்டப்பந்தயத்துல ஜெயிப்பதும் ஓவரோ ஓவர்


3. ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் , 6 கான்ஸ்டபிளும் சேர்ந்து ஒரு கொலை பண்றாங்க. வில்லனுக்காக. அதுக்கு ஜஸ்ட் ஒரு லட்சம் தானா? ரொம்ப கம்மியா இருக்கே? இந்தக்காலத்துல சப் இன்ஸ் பெக்டரே 5 லட்சம் கேட்கறாங்க.. 


4. ஹீரோ அவர் பாட்டுக்கு கொலை பண்ணிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தானே? அவர் யார்னே யாருக்கும் தெரியாது. இவர் பெரிய இவரு மாதிரி ஒவ்வொரு கொலை பண்ணினதும் போலீஸ்க்கு ஃபோனை போட்டு சொல்லிட்டு இருக்காரு? ? வேற வெலைப்பொழப்பே இல்லையா? 



5. யாரோ ஒரு அநாமதேயக்கால் - அதுல ஒருத்தன் ( ஹீரோ) என் பேரு திருத்தணி, நான் தான் இந்தக்கொலைகளை எல்லாம் செய்யறவன்னதும் உடனே ஏரியாவில் இருக்கும் 12 திருத்தணி பேர் உள்ள ஆட்களை அரெஸ்ட் பண்றது செம காமெடி.. டென் த் படிச்சவனுக்கு கூட அது புனை பெயர்னு தெரியும், டிகிரி படிச்ச இன்ஸ்பெக்டருக்கு தெரியாதா? 


6. வில்லன்ங்க கிட்டே இருக்கற ரவுடிங்க எல்லாம் லோக்கல் கேஸ்ங்க. ஏன் வில்லனே படு லோக்கல். அவங்க என்னமோ பேங்க்  கொள்ளையர்கள் மாதிரி முகமூடி எல்லாம் போட்டுட்டு வர்றதும், அதுல ஹீரோ ஊடால புகுந்து ஜாயின் ஆவதும் செம காமெடி 


7. மிலிட்ரி மேன் ராஜ்கிரண் ஒரு ஆளை சுட்டு கொன்னுடறார். ஒரே ஒரு குண்டு தான் செலவு . அவன் செத்த பின்பு செத்த பாம்பை அடிக்கற மாதிரி 43 தடவை மறுபடி சுடறாரே? மிலிட்ரில இதை எல்லாம் கேட்க மாட்டாங்களா? சிக்கனமா இருக்கலையேன்னு?


8. மிலிட்ரி மேன் ராஜ்கிரண் ஒரு ஆளை கழுத்துல மிதிக்கறார். அப்போ வில்லன் அதை தடுக்க அவர் கால்ல 18 குண்டு படற மாதிரி சுடறான், அவருக்கு ஒரு கால் போயிடுது. ஒரே ஒரு குண்டை அவர் தலைலயும், டைரக்டர் பேரரசு  கைலயும் சுட்டிருந்தா எத்தனை பேரு தப்பி இருப்பாங்க? ஏன் அதை செய்யலை? 


9. ஒரு ஷாட்ல வில்லன் ஃபோன் பண்ணி ஹீரோவை ஒரு இடத்துக்கு வரச்சொல்றான் , உடனே ஹீரோ அங்கே போயிடறார். அதே இடத்துக்கு ராஜ் கிரண் எப்படி வந்தார்? யாரும் அவருக்கு தகவலே சொல்லலையே? அவர் என்ன சுப்ரமணியம் சாமியா? 


10. யம்மா யம்மா நீ ஒத்துக்கறியா?  பாட்டு அப்படியே சிவகாசி பட பாட்டான என்னாத்தை சொல்றதுங்கோ, வடு மாங்கா ஊறுதுங்கோ பாட்டின் இசை, நடன அமைப்பு எல்லாத்தையும் சுட்டு இருக்கிங்களே? ஏன்? 


http://3.bp.blogspot.com/_-yi3NVwqzUc/SzC8euX2p2I/AAAAAAAAAhg/SbmrUWjLIQ8/s1600/Sunaina-046-stills007.blogspot.com.jpg



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38



எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார் 


 சி.பி கமெண்ட் - வாழ்க்கையை வெறுத்தவர்கள் , சம்சாரம் கூட கோவிச்சுக்கிட்டு விரக்தி அடைஞ்சவங்க ,சுனைனா டை ஹார்டு ஃபேன்ஸ் மட்டும் பார்க்கலாம். மத்தவங்க போஸ்டரைக்கூட பார்த்துடாதீங்க. ஈரோடு ராஆஆஆயல்ல படம் பார்த்தேன்


எச்சரிக்கை 1 - டைரக்டர் பேரரசு வழக்கம் போல் ஒரு சீனில் பந்தாவாக வந்து பஞ்ச் டய்லாக் பேசிட்டு  போறார், சகிக்கலை 


 எச்சரிக்கை 2 - இந்தப்படத்துக்கு இசையும் அண்ணன் பேரரசுதான், காது வலிக்குது


http://www.cinespot.net/gallery/d/964285-1/Sunaina+Hot+Gallery+_1_.jpg

சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள்

http://www.tolly9.com/uploads/news/politics/thumb/professor-arrested-for-harassing-female-singer.jpg 

ட்விட்டர் ஆல்தோட்ட பூபதி ( கரூர் ஜெகன்)  எழுதிய கடிதம் -


சகோதரி சின்மயி அவர்களுக்கு வணக்கங்கள். உங்களுக்கு என்னை தெரியுமா என தெரியவில்லை. இதுவரை உங்களுடன் பேசியதில்லை, அதனால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் குரலின் இனிமையை ரசிக்கும் ஒரு கடைக்கோடி ரசிகனால் வைக்கப்படும் ஒரு வேண்டுகோளாய் நினைத்து வாசியுங்கள்.


 இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடைய நீங்கள், வெறும் ஒரு தனி மனிதனின் குடும்பத்திற்காகவும் அந்த பச்சிளம் குழந்தையின் புன்சிரிப்புக்காகவும் தயவு கூர்ந்து பெரிய மனதுடனும், பெருந்தன்மையுடனும் அவர்களை மன்னித்தருள வேண்டுகிறேன். ஒரு அன்பான தாயாரால் வளர்க்கப்பட்டு, வார்த்தைக்கு வார்த்தை அவரின் அன்பையும் அரவணைப்பையும் பற்றி புகழ்ந்து சந்தோஷப்படும் ஒரு மகளான உங்களுக்கு நிச்சயம் இந்த பச்சிளம் பெண் குழந்தையின் பரிதவிப்பு புரியும் என நம்புகிறேன். 



ஒரு விளையாட்டில் ஜெயித்த நான்கு லட்ச ரூபாயை குழந்தைகள் நல அமைப்பிற்கு நன்கொடையாக கொடுக்குமளவு நல்ல நெஞ்சம் இருக்கும் உங்களால் நிச்சயம் இன்னமும் ஒரு பிறந்தநாள் கூட கொண்டாடாத இந்த குழந்தைக்காக  மிக மிக பெருந்தன்மையும் நீங்கள் வளர்ந்த உயர்ந்த முறையையும் காட்டி மன்னிதருளலாம். இது போல ஒவ்வொருவர் வீட்டிலும் இன்னமும் உலகத்தை அறியா குழந்தைகள் இருக்கலாம், வயதானவர்களும் இருக்கலாம். ஒருவரின் செயலுக்காக எல்லோரும் பாதிக்கப்பட வேண்டுமா என கொஞ்சமே கொஞ்சம் யோசியுங்கள். 



உங்களின் வார்த்தைகளின் மூலம், உங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மன உளைச்சலும், பெரும் மன வருத்தமும், இறுக்கமும், கால விரயமும் புரிந்துக்கொள்ள கூடியது. உண்மையில் ஒரு சக மனிதனாக அதற்கு வெட்கமும் வேதனையும் படுகிறேன். நிச்சயமாய் அது மறக்க கூடியது இல்லை, ஆனால் உங்களை போன்ற பெருந்தன்மையான ஆளுமைகளுக்கு அது மன்னிக்க கூடியது தான். புகாரின் பேரில் இருக்கும் அந்த ஐந்து / ஆறு நபர்கள் செய்ததை நியாயப்படுத்த நான் இதனை எழுதவில்லை. அதில் எந்நாளும் எனக்கு உடன்பாடும் கிடையாது. அதில் சிலருடன் (இருவர்) பழகி இருப்பதாலும் இதனை எழுதவில்லை. ஏன், உங்களின் மனதை புண்படுத்தியதற்கு பொதுவிடத்தில் மன்னிப்பு கேட்கவும் வைக்க கூட எனக்கு தோன்றுகிறது.ஏன், ஒரு ஆணாக நானே கூட கேட்கலாம்.


http://lh4.ggpht.com/_leK5390n0fE/TNlabtJQefI/AAAAAAAAEu8/gA4USvRjxd8/Single-Photo-.jpg

நான் இந்த வேண்டுகோளை வைப்பதற்கும் எழுதுவதற்கும் காரணம், நானும் ஒரு ஒன்னரை வயது பெண் குழந்தையின் தகப்பன் என்பதால், ஒரு குழந்தையின் தேடலும் ஆசையும் விளையாட்டும் புன்சிரிப்பும் தவிப்பும் எப்படி இருக்கும் எதை நோக்கி இருக்கும் என்று அறிந்த ஒரு சக சகோதரனாய் தான் இந்த வேண்டுகோளை வைக்கிறேன். இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும், நிராகரிக்கவும், பதில் அளிக்காமல் விடவும் உங்களுக்கு உரிமை உண்டு.



 ஆனால் உங்களின் பெருந்தன்மையால் அவர்களை மன்னித்தால், அது அவர்களை மட்டும் மன்னித்தது இன்றி, அவர்களின் குடும்பத்தையும் காப்பாற்றிய அழியா புகழ் உங்களை வந்து சேரும். இரண்டு நிமிடம் மட்டும் என் வேண்டுகோளுக்கு ஒதுக்கி, நல்ல முடிவை எடுங்கள். உங்களை போன்ற படித்தவர்களுக்கு நிச்சயமாய் தெரிந்திருக்கும் ' இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண / நன்னயஞ் செய்து விடல்'



( இந்த வேண்டுகோளை பற்றி விவாதிக்கவோ, பெரிது படுத்தவோ நான் விரும்பவில்லை. ஏனினில் இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பத்தையும் உரிமையையும் சார்ந்தது.மீண்டும் சொல்கிறேன், இந்த வேண்டுகோளை பரிசீலிக்கவும், நிராகரிக்கவும், பதில் அளிக்காமல் விடவும் உங்களுக்கு உரிமை உண்டு. இதனை உங்கள் இருவரை ( / ) தவிர யாருடனும் பேசவும் விவாதிக்கவும் நானும் விரும்பவில்லை )

PS : Please dont think that am negotiating with sentiment(s), am just writing this by considering and believing you as a real peace lover. And importantly, am requesting you and not forcing you ;) Blesses and wishes ;)


http://lh3.ggpht.com/_leK5390n0fE/TNladS4wikI/AAAAAAAAEvM/ht6YBoimxkw/Single-Photo-.jpg


சின்மயி-யின் அம்மா வின் ரிப்ளை  -1




பிரஷாந்த் , we never wanted this to happen. அதுனால தான் ரெண்டு வருஷம் பொறுத்தோம். இன்னிக்கி மிருகம்னு அழைக்கிரவங்கள நான் approach செஞ்சு as a friend ராஜன் கிட்ட அந்த குழந்தைக்காகவும் அவர் இளம் மனைவிக்காகவும் அவரை சற்று கௌரவமாக இருக்கசொல்லுங்கன்னு கெஞ்சினேனே.. He said no body can talk to Rajan. முயற்சி கூட பண்ண ரெடியா இல்லியே. 


 தொட்டிலையும் ஆட்டி தொடையையும் கிள்ளுவாங்கன்னு சொல்லுவாங்க. அந்தமாதிரி எனக்கு நேற்றைய விஷயங்கள 'அம்மா அம்மா' ன்னு கூப்பிட்டு சொல்லிவிட்டு இன்னிக்கி நல்லவன் போல நடிக்கறதுல என்ன அர்த்தம்னு நான் கேட்டேன்னு கேளுங்க. நல்ல ஒரு ப்ரொஜெக்டை விவரிச்சு அதுல அவர (Rajan) ஈடுபடுத்தி மனசை மாத்தலாம்னு சொன்னேனே. அந்த விஷயத்த ராஜனுக்கு கொண்டு போயானும் சேர்த்தாரா?


 ஒங்க எல்லாரையும் விட நான் தான் தொல்வியடைஞ்சதா நெனைக்கிறேன்.. செந்தில்cp மற்றும் சிலரை நான் அன்பால வென்றது மாதிரி ராஜனையும் வென்றிருந்தா அது என்னோட நிஜமான சந்தோஷமா இருந்திருக்கும் . கூடவே இருந்து இந்தநிலமைக்கி தள்ளி விட்டது வேற யாரும் இல்ல மிருகம்னு அழைக்கிற இவரே தான் . எனக்கும் நிறைய விஷயங்களை அம்மா அம்மான்னு கூப்பிட்டு , தன்மனிதன் போல சொல்லிவிட்டு மனுஷாபிமான இல்லாம இந்த நெலமைக்கி ஆளாக்கினது வேற யாருமே இல்லே இவருக்குத்தான் பெரிய்ய பங்கு .


இனப்பிச்சனை , ஸ்ரீலங்கன் பிரச்சனைன்னு பிறர் வீட்டு இளம் பெண்ணை அவதூறில் மாட்டிவைக்கிறமாதிரி திசை திருப்ப முயற்சி பண்ணற நேரத்தில ஒருமுறை அவரை நல்லதை உணர வைத்திருக்கலாமில்லையா ? யாராவது முயன்றீர்கள ? நான்குநாட்களில் ஒருவருக்கும் தோன்றவில்லையா?


Answering you Prashanth because we feel obligated to you for your stance for Chinmayi in the recent past which made you take a lot of muck. You proved a real anger of a brother when provoked on an issue of his sister. Now that the issue has gone to the police, and judiciery we all have to wait and let us not mince words or be emotional. Let the future bring change in all our minds to be a good and better humanbeings.  


http://gallery.southdreamz.com/cache/music-dance-celebrities/chinmayi/singer-chinmayi-exclusive-photo-gallery-9_720_southdreamz.jpg


பரிசல்காரன் -ன் ( திருப்பூர் கே பி கிருஷ்ணகுமார்) ட்வீட் 

ராஜன் கஸ்டடிக்கு போனது குறித்து மகிழ்ச்சி அடையும் மிருகங்களுக்கு ஆதிரையின் இந்தப் புன்னகையைப் பரிசளிக்கிறேன்.

 ராஜனின் குழந்தை படம் பகிர்ந்தார். அந்த படம் கே டி வி கிருஷ் வேண்டுகோளுக்கிணங்க நீக்கப்பட்டது 
ஆ.ராதாமணாளன்

சின்மயி-யின் அம்மா வின் ரிப்ளை  -2



உங்களை முழுக்க முழுக்க நம்புகிறேன். நீங்கள் திருமதி ரேவதியை பற்றி கவலைப்படாத நேரமில்லை என்பது எனக்கு தெரியும். நானும் அந்த குழதையையும் ரேவதி அவர்களை பற்றியும் எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு தெரியும். உங்களிடம் நான் முதலில் பேசிய போது உங்களின் தொடர்பு ராஜனுடன் அட்வைஸ் செய்யும் அளவில் இல்லை என்பதால் உங்கள் நண்பர் பரிசலிடம் எத்தனை முறை வாதாடினேன். அவர் நிஜமான நண்பராக இருந்திருந்தால் எங்களுக்காக வேண்டாம் அவர் நண்பருக்காக எடுத்துரைத்து இருக்கலாமில்லையா.


 இங்கு தோட்டா அவர்களின் முயற்சியை மதிக்கிறேன். பரிசலுக்கு எப்படி இப்படி ஒரு ....? அவர் எனக்கும் சரி ராஜனுக்கும் சரி நம்பிக்கை துரோகம் தான் செய்திருக்கிறார். திருமண வயதில் பெண்ணை வைத்திருக்கும் ஒரு தாயின் மன வேதனையை நீங்களும் மற்ற சிலரும் புரிந்து கொண்டீர்கள். இன்று தோட்டா அவர்களை retweet செய்த யாரவது பேசி இருப்பார்களா? நானும் அந்த குழதையையும் ரேவதி அவர்களை பற்றியும் எவ்வளவு feel பண்ணினேன் என்று உங்களுக்கு தெரியும். ?


ராஜனை உங்கள் மொழியில் உசிப்பெத்தி உசுப்பேத்தி விட்டு சற்று நேர கேளிக்கை அனுபாவித்தர்களே. அன்று சின்மயி மற்றும் அவளைப்பெற்ற நானும், நிஜமான அண்ணன் போல நீரும் மேலும் சிலரும் துடித்தோம். அதையும் கேளிக்கைப் பொருளாக்கியவர்களுக்கு இன்று ராஜனுக்காக வருத்தப்பட உரிமையில்லை. இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற இந்த குறளை மேற்கோள் காட்டி எத்தனை முறை நான் சின்மயியை சமாதானப்படுத்தினேன் என்று உங்களுக்கு தெரியும்.


எங்கள் பொறுமையை இயலாமை என்றுதானே மிதித்தார்கள்? Please read my tweet reply to .


நானும் சின்மயியும் இந்த கைதுகளால் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை. இன்று நீங்கள் கதறும் இதே possible நிலைமையை சுட்டிக்காட்டி ராஜனை புரியவையுங்கள் என்று பரிசலிடம் கதறினேனே அன்று வீணாக இருந்துவிட்டு இன்று குழந்தையை போட்டோ பிடித்து போடலாமா? குழந்தையை வெளியில் காண்பிக்கலாமா. மீண்டும் மக்களை தூண்டிவிட்டு பிரச்னையை பெரிதாக்கும் பரிசலை வன்மையாக கண்டிக்கிறேன். திரு தோட்டாவின் செண்டிமெண்ட்சை மதிக்கிறேன். 



 தினமணி செய்தி 


பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துகள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக 6 பேர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார்.


தன்னைப் பற்றியும் தன் தாயாரைப் பற்றியும் மோசமாக சித்திரித்து கருத்துகள் எழுதுவதாக அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் நேற்று நிப்ட் மையத்தின் துணை பேராசிரியர் சரவணக்குமார் பெருமாள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

http://haryanaabtak.com/wp-content/themes/NewsTime/thumb.php?src=http://haryanaabtak.com/wp-content/uploads/2012/10/7042_singerchinmayi.jpg&w=568&zc=1&q=80&bid=1

தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையிலும், மேலும் தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடைப்படையிலும், ஏ.ராதாமணாளன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.



இவர் சென்னை பெரியமேட்டில் உள்ள தர்பார் ஹோட்டல் முன்பு செவ்வாய்க்கிழமை இன்று கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறினர்.




திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் இவர். இவர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிகிறார். டிவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் மிகவும் துடிப்பான உறுப்பினர்.



 இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர், சின்மயிக்கு தான் எழுதிய கருத்துகள் குறித்து ஒப்புக்கொண்டார். மேலும், தனது @rajanleaks என்ற பெயரிலான தளம் குறித்தும், தான் அதன் மூலம் சின்மயிக்கு ஆபாசக் கருத்துகளை எழுதியதையும் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டார். பின்னர் இவர் எழும்பூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.




மேலும் சின்மயி கொடுத்த புகாரின் அடிப்படையில், கிரைம் பிரிவு போலீஸார், @losongelesram, @vivajial, @rajanleaks, @senthilchn, @thyirvadai, Asharavkay ஆகிய ஆறு பேர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

@காலைக்கதிர்



@காலைக்கதிர்





டிஸ்கி - சமாதானப்பேச்சு இன்னும் தொடர்வதால் ட்விட்டர் நண்பர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யும்போது பொறுமை காக்கவும், ஆவேசமான, ஆக்ரோஷமான எதிர் வாதங்கள் எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.சின்மயி , மற்றும் அவர் அம்மா பற்றிய தனி மனித தாக்குதல்களை தவிர்க்கவும்.வழக்கை வாபஸ் பெற வைக்க கடைசி நிமிடம் வரை முயற்சிகள் தொடரும். அதற்குள் அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டி சமாதானத்திற்கு யாரும் பங்கம் விளைவிக்க வேண்டாம்


டிஸ்கி 2 - ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்-
http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html


டிஸ்கி 3 - சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்ட பிரபல ட்வீட்டர்கள் விபரம்
http://www.adrasaka.com/2012/10/blog-post_7456.html

Monday, October 22, 2012

ட்விட்டர் ராஜன் கைது ! சின்மயி விளக்கக்கடிதம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN2ud5ChttLCTS4zvqe-FggIP-R5nsF85ZqZz1iB2N2rUdPdgeWjB3RbiVxcx2Hct3V6e7E7vdLlBFSZu_7VTX4zWvIiZgAv91J5yvdhr6AyDtZrtAVxJ1877zzbHWkqhye3xgOeECKbg/s800/Chinmayi-in-city.jpg

 ராஜன் லீக்ஸ் எனும் ஹேண்டிலில் இருக்கும் அவினாசியை சேர்ந்த திரு ராஜன் சைபர் க்ரைம் போலீசால் இன்று கைது செய்யப்பட்டார். அவர் இப்போது சென்னை அழைத்து செல்லபட்டார் -அவர் மீது பாடகி சின்மயி கொடுத்த புகாரே இதற்குக்காரணம். இது பற்றிய செய்தி அறிய 


ட்விட்டரில் பலர் ராஜனுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார்கள். சின்மயி கொடுத்த விளக்கம் இது



ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.

நான் ஒரு தமிழச்சி. பல தமிழர்களின் வீட்டின் செல்லப் பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.

சிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா.ராகவ ஐயங்கார் , முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான்!

உள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம்.

இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான்.

என்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள்.

திடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி #TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள்.



எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன். இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப் பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா? இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா?



http://www.ndtv.com/news/images/story_page/Singer_Chinmayi_case_second_arrest_295.jpg

அடுத்து “நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா?” என்ற கேள்விக்கு “இல்லை. நான் நான் சைவம்” என்று பதில் கூறினேன். ”மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கறிதே” என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, ”நான் மீன் சாப்பிடுவதுஇல்ல, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter” என்று ஒரு ":)" போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hashடேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்! ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன். மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் . இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கth தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன் .

பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு’ தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC’ என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி’ என்று பிரச்னை கிளப்பப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர் கொண்ட கும்பல் ஒன்று.

என்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு. இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது.

இவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள்.

அதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.

இதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்தி பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது.

இந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள்.

இந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.



டிஸ்கி - 1 - சின்மயி போலீசில் புகார் - http://www.adrasaka.com/2012/10/blog-post_3736.html



டிஸ்கி 2 - சமாதான முயற்சிகள் , சின்மயி தரப்பு விளக்கங்கள் | அட்ரா சக்க


http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html

டிஸ்கி 3 -  ஆனந்த விகடனில் சின்மயி சர்ச்சை | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_25.html


டிஸ்கி 4  -சின்மயி - புதிய தலைமுறை - நேர்படப்பேசு - விவாதங்கள் | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_7117.html


டிஸ்கி 5 -  சாருநிவேதிதா சின்மயி புகார் பற்றி சொன்ன கருத்து |

http://www.adrasaka.com/2012/10/blog-post_26.html


டிஸ்கி 6. - ஜெயமோகன் கருத்து - சின்மயி புகார் பற்றி | அட்ரா சக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_27.html

டிஸ்கி 7. -லீனா மணிமேகலையின் ஃபேஸ்புக்கில் நிகழ்ந்த சின்மயி சர்ச்சை விவாதங்கள்

http://www.adrasaka.com/2012/10/blog-post_4186.html

The Possession (I) (2012) - சினிமா விமர்சனம்

http://www.shockya.com/news/wp-content/uploads/the-possession.jpgஅவ்வை சண்முகி  கமல் மீனா மாதிரி  ஹீரோவும் ஹீரோயினும் ( தம்பதி) கருத்து வேற்றுமையால் பிரிஞ்சு வாழறாங்க.. அவங்களுக்கு 2 பெண் குழந்தைகள். ஒரு பொண்ணு டீன் ஏஜ்ல , இன்னொன்னு டீன் ஏஜ்க்கு கிட்டே..  சீதா எப்படி வேற ஒரு டி வி டைரக்டர் கூட வாழறாங்களோ அப்படி ஹீரோயின் லிவிங்க் டுகெதரா  வேற ஒரு ஆள் கூட வாழறாங்க. ஹீரோ ஆர் பார்த்திபன் மாதிரி தனியா வாழறார். அப்பப்ப வந்து தன் குழந்தைகளை தன் அபார்ட்மெண்ட்டுக்கு கூட்டிட்டுப்போய் 2 நாள் வெச்சிருந்து விளையாடிட்டு வருவார். 


 ஒரு டைம் அப்படி தன் வீட்டுக்கு கூட்டிட்டு வர்றப்போ பக்கத்து வீட்ல வீடு காலி பண்றதால  தேவையற்ற பல பொருட்களை விற்கறாங்க. அதுல ஒரு பெரிய சைஸ் கல்லா பொட்டி மாதிரி ஒரு வெத்தலை பொட்டியை குழந்தை ஆசைப்பட்டு கேட்டுதுன்னு வாங்கித்தர்றார்.. அங்கே தான் வினை.. அந்த பாக்ஸ்ல ஏதோ ஒரு தீய சக்தி.. ரொம்ப நாளா அலாவுதீன் பூதம் போல் வாழ்ந்து வருது. 


 அந்த ஆவி இந்த சின்னக்குழந்தையை ஆக்ரமிக்குது.. அந்தப்பொண்ணை எப்படி ஹீரோ காப்பாத்தறார் என்பதே மிச்ச மீதிக்கதை.. 



பேயால் பாதிக்கப்படும் அந்த பெண் குழந்தை  நடிப்பு, பார்வை, பாடி லேங்குவேஜ் எல்லாமே பிரமாதம்.  அப்ளாஸ் அள்ளுது.. ஊஞ்சலில் ஆடிக்கொண்டே முறைத்துப்பார்ப்பது , சந்திரமுகி ரேஞ்சுக்கு கார் டிரைவரை பார்ப்பது  , அப்பாவையே எதிர்ப்பது , அம்மாவை கண்டால் பம்முவது ( பேய் கூட அம்மான்னா பம்முது பாருங்க ) எல்லாமே அபாரம். கேமரா மேனும், இயக்குநரும் இதில் முக்கிய பங்கு வகிக்கறாங்க 


 டீன் ஏஜ் பொண்ணா வர்ற  முதல் பொண்ணுக்கு வாய்ப்பு கம்மிதான். ஆனாலும் ரோஸ் கலர் முகம் . அழகுக்கவிதை .. டான்ஸ் பிராக்டீஸ் பண்றப்போ போடும் ஸ்டெப்ஸ். பேயைக்கண்டு மிரள்வது  என அங்கங்கே பளிச் டச்.. 


ஹீரோ பொறுப்பான அப்பா கேரக்டரை உணர்ந்து செஞ்சிருக்கார். மனைவியிடம் மீண்டும் இணைய வாய்ப்பு உண்டா? என பம்முவது, தன் கண் எதிரே தன் மனைவி இன்னொருவனுடன்  தம்பதி சகிதம்  நடந்து செல்வதைப்பார்த்து ஆற்றாமையுடன் புலம்புவது , தன் குழந்தை படும் துயரத்தைக்கண்டு அரற்றுவது என  அருமையான நடிப்பு.. 



ஹீரோயின் சரி இல்லை.. டப்பா மூஞ்சி.. கிழடு தட்டிய முகம்.. வேற ஆளை போட்டிருக்கலாம்.  அவர் ஏன் கணவரை வெறுத்து ஒதுக்கினார் என்பதற்கான காரணம் தெளிவாக சொல்லப்படாததால் கிட்டத்தட்ட வில்லி மாதிரி தான் அவரை நினைக்க வேண்டி இருக்கு.. 


http://www.apnatimepass.com/the-possession-movie-poster-24.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்




1. அந்த மர்மப்பெட்டியை குழந்தை திறந்து பார்க்கும்போது அதில் உள்ள கண்ணாடியில் அவர் முகம் அலங்கோலமாய்த்தெரிவது கண்டு ஹீரோ அதிர்ச்சி அடைந்து கிட்டே போய் பார்ப்பது பின்னணி இசை அபாரம் அந்த சீனில்.. 


2. போஸ்டர் டிசைன் அட்டகாசம்.. குறிப்பா ஒரு பெண்ணின் வாயில் இருந்து வெளி வரும் கை அந்தப்பெண்ணின் முகத்தையே வளைப்பது போல் இருக்கும் ஸ்டில் இதுவரை வராத புதிய கோணம்.. ஆனால் அந்த சீன் படத்தில் இல்லை.. அதுக்கான லீடு மட்டும் இருக்கு.. ஒரு வேளை சென்சாரில் கட் ஆகி இருக்கலாம்.. 



3. மட்டன் , சிக்கனே பிடிக்காத குழந்தை திடீர் என மாங்கு மாங்கு என மட்டன்  சாப்பிடுவதை பார்த்து அதிர்ச்சி அடையும் ஹீரோயின்  தடுக்கப்போகும்போது நடக்கும் காட்சிகள் .. 



4. பேய் பிடித்த குழந்தையின் அருகே அமர்ந்து பைபிளை வாசிக்கும் ஹீரோவை  சூறாவளிக்காற்று தாக்குதல் நடத்துவது கிரஃபிக்ஸ் கலக்கல் 


5. பேய் பிடித்த குழந்தையின் ரூமில் லட்சக்கணக்கான பூச்சிகள் இருந்தும் அவள் சர்வசாதாரணமாக அமர்ந்திருப்பது உறைய வைக்கும் காட்சி.. 


6. பேய் பிடித்த குழந்தை உடம்பில் இருந்து அது வெளியேறி ஹீரோவின் உடம்பில் புகுவது , ஒரு கை மட்டும் அவர் வாயில் இருந்து வரும் சீன் க்ளைமாக்ஸ் பதட்டம்.. 


7. பனி படர்ந்த லொக்கேஷன் செலக்‌ஷன்ஸ் , ஒளிப்பதிவு  அருமை// 


http://www.apnatimepass.com/the-possession-movie-poster-27.jpg



மனம் கவர்ந்த வசனங்கள்


1. நம்ம குடும்பத்துல  இருக்கற உறுப்பினர்களை ஒருவரை ஒருவர் நாம அடிச்சு சாப்பிடுவோமா?  அதே மாதிரி தான் அசைவம் சாப்பிடுவதும். எல்லா உயிர் இனங்களும் ஒரே குடும்பம் தான்.. நான் அசைவத்துக்கு மாறறாம இருக்க அதுதான் காரணம்..


2. அவனை உனக்கு பிடிச்சிருக்கா? 


 யா.. அவர் உங்களை விட என் கிட்டே அன்பா இருந்துக்கறார். 





http://boxofficebuz.com/content/movies/1740/videos/the-possession-2012-movie-poster-2.jpeg
இயக்குநரிடம் சில கேள்விகள்



1. இந்த மாதிரி பேய்ப்படங்கள்ல  பேய் ஏன் அந்த நபரை பிடிச்சிருக்கு? என்பதற்கு வலுவான காரணம் சொல்லப்படனும், அல்லது அந்த பேய்க்கு ஒரு ஃபிளாஸ் பேக் வைக்கனும்./ மொட்டை சாத்தான் குட்டைல விழுந்த கதையா ஏதோ ஒரு பேய் எதுக்காகவோ குழந்தையை பிடிக்குது. அதுவா போயிடுச்சு என்பதெல்லாம் ஏத்துக்கவே முடியலை.;. 



 2. பேயோட பேரை உச்சரிச்சு அந்த பெட்டிக்குள்ளே ரிட்டர்ன் போ அப்டின்னு சொன்னா போதும் அது பொட்டாட்ட  ( அமைதியா ) போயிடும் என மந்திரவாதி சொல்வது செம காமெடி.. பேய் என்ன ஏ டி எம் கே மினிஸ்டர்ஸா? சொன்னபடி கேட்க? 


3. பைபிள் புக்கோட ஹீரோ பேய்க்குழந்தை பக்கம் உக்காந்து படிக்கும்போது  பேய் சூறாவளிக்காத்தை அனுப்பி அந்த புக்கை பறந்து போக வைக்குது. அப்போ பேய்க்கு சாமியை விட சக்தி இருக்கா? பைபிளையே பறந்து போக வைக்க முடியுமா? 


4.  மத குருமார்கள் எல்லாரும் “ எப்போ அந்த பாக்சை திறந்தாச்சோ அப்பவே உனக்கு அழிவு காலம் நெருங்கியாச்சுன்னு அர்த்தம்.. யாராலும் உன்னை காப்பாத்த முடியாது “ன்னு சொல்றாங்க.. ஆனா அந்த மந்திரவாது “ இதெல்லாம் ஜூஜுபி மேட்டர் , நான் பார்த்துக்கறேன் கறாரு..  இந்த இடம் குழப்பமா இருக்கே? பேய் ஜெ மாதிரி பவர் ஃபுல்லானதா? ஓ பி எஸ் மாதிரி டம்மியா? 


5. ஹீரோ பேய் கிட்டே “ என் குழந்தையை விட்டுடு, என்னை பிடிச்சுக்கோ என்கிறார். உடனே பேய் அவர் சொன்னதை உடனே ஃபாலோ பண்ணி குழந்தையை விட்டு அவரை ஆக்ரமிக்குது.. இந்தக்காலத்துல பெத்த பசங்களே பேரண்ட்ஸ் பேச்சை கேட்பதைல்லை.. முன் பின் பழக்கம் இல்லாத பேய் ஒபீடியன்ஸ்  உள்ளதா இருக்கே? 


6. அது ஒரு பெண் பேய்.. அது எப்படி ஆண் பேய் மேல ஆக்ரமிக்க முடியும்?  இது சாத்தியம்னா அவனவன் நாட்ல பேயை தன் சம்சாரத்து மேல ஏவி விட்டுடுவானுங்க.. 


http://static.guim.co.uk/sys-images/Film/Pix/pictures/2012/5/30/1338370975710/The-Possession---1-008.jpg



 சி . பி கமெண்ட் - இந்தப்படம் சென்னை , கோவை , மதுரை , பெங்களூர் மாதிரி ஏ செண்ட்டர்களில் மட்டுமே எடுபடும்.. பி சி யில் சரியா போகாது..  பேய் பட ரசிகர்கள் பார்க்கலாம்.. ஆபாசம் ஏதும் இல்லை.. ஈரோடு வி எஸ் பி யில் படம் பார்த்தேன்



அட்ராசக்க சி.பி எக்ஸ்க்ளூ “ஜிவ்” பேட்டி - பாகம் 18


நண்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு 


சைபர் க்ரைம் போலீஸில் புகார் செய்யப்பட்ட ஐவரில் ஒருவர் போலீஸ் ரிமாண்டில் இப்போது. எனவே டைம் லைனில் ஜாலி ட்வீட்ஸ் போடுபவர்கள் கவனம் 


பிரச்சனையின் தீவிரம் புரியாமல் யாரும் இந்த சென்சேஷனல் மேட்டர் பற்றி டைம் லைனில் விவாதிக்க வேண்டாம் # பொது நலன் கருதி

நம்ம "கேளுங்க" தளம் சார்பாக கடந்த வாரம் ஆரம்பித்த சூடான மெயில் காணலின் தொடர்ச்சியாக இந்தவாரம்..


சி.பி.இடம் இனி ராபிட் பயர் கேள்விகள் 

1. வலையுலகில் இந்த வலைபூக்கள் இருக்கக் கூடாது என்று நினைக்க வைத்த 2 தளங்கள்  ?
  • தமிழ்காமக்கதைகள்
  • பூனம்பாண்டே ஓப்பன் யுனிவர்சிட்டி
2. வலையுலகில் நமக்கு நேரடி போட்டி இவம் தாம்யா என்று உங்கள் மனதில் நினைத்த பதிவர்?
  • கேபிள் சங்கர்
  • ஜாக்கிசேகர்
  • உண்மைத்தமிழன்
  • சவுக்கு
3.  ஜாக்கி, கேபிள் இருவரும் தேர்தலில் நின்றால் உங்கள் ஓட்டு யாருக்கு?
  • கேபிளுக்கே என் ஓட்டு
  • ஏன்னா அவர் படம் ரிலீஸ் ஆகும் முன்னே ப்ரிவ்யூ ஷோ பார்த்து விமர்சனம் போட்டுடறாரு. அவரை ஜெயிக்க வெச்சு எம் எல் ஏ ஆக்கிட்டம்னா அவர் பாட்டுக்கு அவர் உண்டு ரேப், ஊழல் உண்டுன்னு இருப்பார்.
4. ரஜினி இந்த ஆங்கில பட ரீமேக்கில் நடித்தால் செமையாக இருக்கும் என்று நினைத்த 3 படங்கள்?
  • த டெர்மினேட்டர் 2 ஜட்ஜ்மெண்ட் டே
  • கமாண்டோ
  • செல்லுலார்
5. ஹாய் மதன், ஏன்? எதற்கு? எப்படி? சுஜாதா யார் பெஸ்ட்?
  • சந்தேகமே இல்லாம சுஜாதா தான் பெஸ்ட்
  • ஹாய் மதன் ஜஸ்ட் ஒரு ட்ரான்ஸ்லேட்டர் மட்டுமே
  • சுஜாதா அங்கங்கே தன் டச் சோட குடுப்பாரு
  • சுவராஸ்யம் ஜாஸ்தி  
6. ஒரு லாஜிக் மிஸ்டேக் இல்லாமல் நீங்க பார்த்த ஒரு படம்?

  •  மகேந்திரனின் உதிரிப்பூக்கள்
  • பாரதிராஜாவின் முதல் மரியாதை ( லாஜிக் மிஸ்டேக்ஸ் கம்மி )

7.  இதெல்லாம் புத்தகமாயா என்று விளாசி எறிந்த புத்தகம்?

  • சாரு நிவேதிதாவின் எக்சைல்
  • ஜீரோ டிகிரி

8. திரையில் நம்பர் வன் ஜோடி?

  • ஸ்ரீகாந்த்  சினேகா ( ஏப்ரல் மாதத்தில் )
9. ஆண், பெண் ஒரு வரியில் கதை ஒன்று சொல்லுங்க?
  • சாரி, பெண் என்றால் எனக்கு அலர்ஜி ஹி ஹி
10. இந்த கண்ணாடிய கழட்ட மாட்டிங்களா ஆபிசர்?

இதன் 17 ஆம் பாகம் படிக்காதவர்கள் -http://www.adrasaka.com/2012/10/17.html
  •  

எப்போதும் சேலையில் வரும் ஆபீஸ் ஸ்டெனோ மிடியில் வந்தா....

சீம்பால் கட்டி ( 2 லிட்டர் சீம்பால் ,ஏலக்காய் ,அஸ்கா கொண்டு காய்ச்சப்பட்டது ) -ஒரு லிட்டர் ரூ 100
1.பக்கத்து வீட்டில் ஒரு சின்ன மிஸ் ,மீடியம் மிஸ் அண்டர் ஸ்டேண்டிங்க்.சேர் குடுத்து உக்காரச்சொன்னேன்



-------------------------



2. பிரம்மச்சாரிகள் பெரும்பாலும் மல்லாக்கப்படுத்தே உறங்குகிறார்கள் # அவதானிப்பு




----------------------



3.  ஆத்திரக்காரன் எனக்கு புத்தி மட்டு. ஆத்துக்காரி உனக்கு அதீத புத்தி # ஐஸ்




------------------------


4. அழையா விருந்தாளியாய் நான் ,அலையா மருதாணியாய் நீ! கலையாத தலையணையாய் நம் காதல்




---------------------


5. பஸ் ஸ்டாப்பில் ஒரு பக்கா பிகர். இதுவும் கடந்து போகும்னு அப்டியே விட்ரக்கூடாது.பாலோ பண்ணனும்




------------------------



6. டியர்.ஆபீஸ்க்கு கட் அடிக்கனும்.ஒரு ஐடியா குடுங்களேன்.



இந்தா 2 ஐடியா சிம்.என்னமோ பண்ணிக்கோ :-))



------------------------



7. நான் லேட்டாக வீட்டுக்கு வருவதே நீ தூங்கி இருப்பாய் என்ற நிம்மதியில் தான்




----------------------



8. ஜூன் மாதம் முதல் மின்வெட்டு இருக்காதாம்-அமைச்சர் விஸ்வநாதன் # ம்க்கும், ஜூன் மாசம் ஒண்ணாந்தேதி மட்டும் கரண்ட் கட் பண்ணாம விட்டுடுவாங்க



--------------------------


9. உலக மக்கள் தொகைக்கு இணையாக மொபைல் போன் எண்ணிக்கை அதிகரிப்பு #பெரும்பாலும் 2 ஃபோன் வெச்சிருக்காங்க, டபுள் ஆகி இருக்கும் நல்லா பாருங்க 



-------------------------


10. உங்க மனைவி அடிக்கடி சும்மானாச்சுக்கும் ஃபோன் பண்ணினா  நீங்க ஆஃபீசில் இருக்கீங்களா?ன்னு செக் பண்றாங்கன்னு அர்த்தம் # கி கி 



---------------------------


nthan Velupillai shared Every Night In My Dremzzzz's photo.


11. விமானத்தில் பயணிக்கையில் வாத்தியார் ஆன்சர் பேப்பர் திருத்தி ,மார்க் போட்டா அதுதான் ஆகாய மார்க் கம்




--------------------------


12. மிஸ், நீங்க செம அழகு..


ரொம்ப பழசா இருக்கே இந்த பாராட்டு?


 ம்க்கும், நீங்க மட்டும் ரொம்ப ஃபிரெஷ்ஷோ?


--------------------


13. நான் செம கோபமா இருக்கும்போது நேரா வீட்டுக்குப்போய் அடிச்சு துவைச்சு எடுத்துட்டேன் - என் மனைவியின் புடவையை



--------------------


14. மானே, நீ மாராப்பில் குடை பிடித்த பின் தான் உன் இடை பிடிக்கும் நினைவே வந்தது ;-0





----------------------


15. அன்பான சம்சாரமே! ஊடலால் நீ என்னுடன் பேசாமல் இருந்தால் எனக்கு பணம் மிச்சம்,. அதை வாங்கிக்குடு, இதை வாங்கிக்குடு என்று செலவு தான் வைப்பாய்



------------------------





16. பொண்ணுங்க நம்மைப்பார்த்து முறைச்சா நாமும் பதிலுக்கு முறைக்கக்கூடாது , கேனம் மாதிரி சிரிக்கனும்,அவங்களுக்கும் சிரிப்பு வந்துடும்




-------------------------------


17. விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்: -கேஜரிவால்: # விசாரிக்கா விட்டால் பல பொய்கள் வெளி வராது, நாங்களும் சொல்வோமில்ல ?




 -------------------------


18. ஜெவுக்கு பிடிச்ச நிறம் பச்சை என்பதால் நாம் ஆன் லைனில் இருப்பதை பச்சை நிறத்தில் காட்டுதா?




--------------------


19. அன்பே! நீ சாதா டீ போட்டாலும் அது ஸ்வீட் டீ ஆகிடுதே! ஸ்வீட்டி!




---------------------

20.  எப்போதும் சேலையில் வரும் ஆபீஸ் ஸ்டெனோ மிடியில் வந்தாள் (ல்) - வாட் எ மிடி க்கல் மிராக்கிள்?்




------------------------------------


உன்னுடன்
மழையில் நனைய ஆசை.
நாளையேனும்
குடையில்லாமல் வா.


டிஸ்கி -
டு டே டைம் பாஸ் @ டி வி