Monday, May 28, 2012

நீ தாவர வகை...உன்னை வகை தொகை இன்றி காதலிப்பேன் சாகற வரை




1.பள்ளிகளில் 6ம் வகுப்பிலேயே சாதி சான்றிதழ் வழங்கப்படும்: ஜெயலலிதா # வாங்கிட்டு அப்படியே ஜோடியா ஊரை விட்டு ஓடிடப்போறானுங்க :)


--------------------


2.  ஈரோடு  டாஸ்மாக்கில்  ரூ 47 ,000 ரொக்கபணத்தை கொள்ளையர்கள் கொள்ளை # டாஸ்மாக்ல சரக்குதானே அடிப்பாங்க, பேங்க்ல தான் கொள்ளை அடிப்பாங்க?


-------------------------------

3. நரகத்திலும் அட்டு ஃபிகர் தான் பேயா சுத்திட்டு இருக்கும், அதை நினைச்சுப்பார்த்தா தற்கொலை நினைப்பே வராது


-----------------------------


4. திருமணமான பெண்கள் சீதை போல வாழ வேண்டும்... மும்பை உயர் நீதிமன்றம்! #  அதாவது புருஷன் எங்கே போனாலும் பின்னாலயே போய் உளவு பார்க்கனும்?


---------------------------

5. சுவாமி , நீங்க கட்சி தொடங்கப்போறீங்களாமே? நிஜமா? 


ஹா ஹா எனக்கு பாட்டிலையும், பட்லியையும் தான் ஓப்பன் பண்ணி பழக்கம், எதுக்கு கட்சி? 


-------------------------------



தலையை காய வைக்க டைம் இல்லை, ஆஃபீஸ்க்கு டைம் ஆச்சு,. ஸோ..



6.  பில்லா 2 நாயகி பார்வதி ஓமனக்குட்டன் பேசாம தன் பேரை பாரு ஓமனா


 கட்டை-னு பேர் வெச்சுக்கலாம்


------------------------

7. டியர், உன்னை எப்பவும் கை விடவே மாட்டேன்.. 


அது ஓக்கே, இப்போ கையை விடுங்க, நான் வீட்டுக்குப்போகனும்  # பீச் கட்லை


---------------------

8. திருமணமான பெண்கள் சீதை போல வாழ வேண்டும். # அப்போ மேரேஜ் ஆகாத பெண்கள் ராதை போல் வாழனுமா?



--------------------

9. மிஸ்... ஐ லைக் யூ... 


எதனால என்னை உங்களுக்கு பிடிச்சுது?


 அதெல்லாம் தெரில , காலேஜ்ல 1790 பேரும் சொன்னாங்க, மீ ரிப்பீட்டீங்க்



------------------------------

10.  வரும் 19ந் தேதி முதல் கார்களில் சன் கன்ட்ரோல் ஃபிலிமுக்கு தடை. # விரைவில் சன் டி வி எடுக்கும் ஃபிலிம்க்கும் தடை விதிக்க பரிசீலனை - ஜெ


-------------------------





11.  சிறுவாணித்தண்ணீர் கைக்கு எட்டும் தொலைவில் இருந்தாலும், கானல் நீர் தேடி பயணிக்கும் முட்டாள் தாகக்காரனின் தேடலாய் சில பெண்களின் காதல்



--------------------------------

12. வில் வித்தையில் இந்தியாவுக்கு தங்கம் உறுதி ! உன் புருவத்தை கொஞ்சம் உயர்த்து!


------------------

13. என்னை அலைய வைக்கும் நோக்கத்தில் நீ கண்ணாமூச்சி விளையாட்டை தேர்ந்தெடுத்தாய்! உன்னை நிலை குலைய வைக்க தொட்டு விளையாட்டை தேர்ந்தெடுத்தேன்



---------------------------

14. ஹாய், கெமிஸ்ட்ரி மிஸ்! பொட்டாசியம் அயோடைடும், சல்ஃபரும் சேர்ந்தா என்ன வரும்?


ம் ம் யூ டெல் ..


  KI + 2S = KISS  #  கிஸ்ஸாலஜி, மிஸ்ஸாலஜி


--------------------------

15. நீ தாவர வகை... அதாவது உன் அம்மா பக்கம் அடிக்கடி தாவற வகை.. உன்னை வகை தொகை இன்றி காதலிப்பேன் சாகற வரை


-----------------------------


இதற்கு பேர்தான் எட்டி உதைப்பதா???


16. கொடுத்துக்கொடுத்துச்சிவந்த அதரம் என்னுது.. அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தியின்  உதிரம் உன்னுது


-------------------------------

17. நேர்மையான ஃபிகரை கண்டு பிடிப்பது ஈசி. ஹமாம் சோப் போட்டு குளிக்கற ஃபிகரெல்லாம் நேர்மையான ஃபிகர்ஸாம் ஹி ஹி


-----------------------------

18. காதலிக்கும் ஆண் மனசு பித்து.. ஏம்மாற்றிச்செல்லும் பெண் மனசு கல்லு # சீட்டிங்காலஜி இன் லவ்வாலஜி



------------------------

19. சித்தார்த் - பவர்ஸ்டார் மோதல்!தேசிய நெடுஞ்சாலை டைட்டில் யாருக்கு? # நல்ல வேளை ,ஜோடிப்பிரச்சனைக்காக அடிதடி இல்லை


---------------------------

20. உடல் குண்டானதால் சினிமாவுக்கு முழுக்கு? ஐஸ்வர்யாராய் முடிவு!! # நீங்க உண்டாகும்போதே உங்க உடம்பு குண்டாகும்னு தெரியாதா?


------------------------------


eet Vinu's photo.

Sunday, May 27, 2012

கும்கி -ஒரு மாறுபட்ட சினிமா

''நடிக்கிற ஆசை எனக்கு இருக்குனு அப்பாவுக்குத் தெரியும். அதை நானா எப்போ சொல்லப்போறேன்னு என்னை ஆழம் பார்த்துட்டே இருந்தார். ஒருநாள் தயங்கித் தயங்கிச் சொன்னதுமே, 'இதோ பார் தம்பி, இன்னார் பேரன், இன்னார் மகன், எப்படி நடிப்பாரோங்கிற எதிர்பார்ப்பு நிறைய இருக்கும். ஆனா, அதைச் சமாளிக்கணுமேங்கிற பயமோ, தயக்கமோ இல்லாம இயல்பா நடி. ஒவ்வொரு சீனுக்கும் உன் உழைப்பைக் கொட்டு. எல்லாம் நல்லபடியா நடக்கும்’னு வாழ்த்தினார். எல்லாம் நல்லபடியா நடந்துட்டு இருக்கு!''- தன் சினிமா அறிமுகம் குறித்து கண்கள் மின்னப் பேசுகிறார் விக்ரம் பிரபு.


 அன்னை இல்லத்தின் மூன்றாவது தலைமுறையும் வெள்ளித் திரை தொடுகிறது. நடிகர் திலகம் சிவாஜியின் பேரன், இளைய திலகம் பிரபுவின் மகன், 'கும்கி’யின் கதை நாயகன்... விக்ரம் பிரபு!

 ''லிங்குசாமி சார்... எங்க குடும்பமே மதிக்கும் இயல்பான மனிதர். 'இனி சினிமா தான்’னு முடிவு பண்ணினதும் அவரைத் தான் சந்திச்சேன். 'என்ன மாதிரி படம் பண்ணலாம்?’னு ஆரம்பிச்சு, 'இந்த மாதிரி இருக்கணும், இப்படிலாம் இருக்கக் கூடாது’னு நிறைய விஷயங்களைப் புரியவெச்சார். பிரபு சாலமன் சார் படத்தில் கமிட் ஆனதும், 'நம்ம புரொடக்ஷன்லயே படம் பண்றீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு’னு சொல்லி என்னை அணைச்சுக்கிட்டார். எனக்குக் கிடைச்ச நல்ல அண்ணன் அவர்!''

''காடு, யானைனு முதல் படத்துலயே நிறைய சவால் போல..?'

'
''நிச்சயமா! ஒரு யானைப் பாகனாகவே வாழ வேண்டிய கேரக்டர். 'நம்ம ஹீரோ மாணிக்கத்தை முதல்ல ஃப்ரெண்ட் ஆக்கிங்கோங்க’னு பிரபு சாலமன் சார் சொல்லிட்டார். சும்மா ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்புனா, அக்செப்ட் பண்ற ஆளா மாணிக்கம்? மாணிக்கம் என்ற யானையை ஃப்ரெண்ட் பிடிக்க கேரளா போனேன். மாணிக்கம் மேல் எப்படி ஏறுவது, இறங்குவது, அவர் நடக்கும்போது எப்படி ஃபேலன்ஸ் பண்ணி உட்கார்றதுனு பதினஞ்சு நாள் பயிற்சி. மாணிக்கத்தோட பாகன் அதை மலை யாளத்தில் பழக்கியிருந்தார்.


 அதனால அதுக்குத் தெரிஞ்ச மலையாள வார்த்தை களை நானும் கத்துக்கிட்டேன். யானைகள் ரொம்ப ஸ்மார்ட். நம்ம கண்ணுல பயம் தெரியாத வரைக்கும்தான் நாம சொல்ற தைக் கேட்கும். 'இவன் பயப்படுறான்’னு அதுக்குத் தெரிஞ்சுட்டா... அவ்வளவுதான். அதனால உள்ளுக்குள்ள உதறுனாலும் வெளிய காமிச்சிக்காம கொஞ்ச நாள்லயே மாணிக்கத்தை நல்ல ஃப்ரெண்ட் ஆக்கிக்கிட்டேன்!''

''நடிக்க வர்றதுக்கு முன்னாடி ரஜினி, கமலைச் சந்திச்சு வாழ்த்து வாங்கினீங்களே... என்ன சொன்னாங்க?''


''கமல் சார் எனக்கு என்னென்ன தெரியும்னு முழுசாக் கேட்டுட்டு, இன்னும் என்னென்ன தெரிஞ்சுக்கணும்னு டீடெய் லாப் பேசினார். 'எந்த மாதிரி புத்தகங்கள் படிக்கணும்... ஒரு படத்தை எப்படிப் பார்க்க ணும்னு அவர் சொல்லிக்கொடுத்த எல்லாமே சினிமா பாடங்கள்.


 'முதல் படத்திலேயே ஹீரோயிசம், பெர்ஃபார் மன்ஸுனு மாட்டிக்காம எல்லாத்தையும் கலந்து பண்ணுங்க. ரசிகர்களின் எதிர்பார்ப்பு, நம்மை அவங்க எப்படி ஏத்துகிறாங்கங்கிறதைப் பொறுத்து அப்புறம் முடிவு பண்ணலாம்’னு ரஜினி சார் சொன்னார். ரெண்டு பேருமே அவங்கவங்க சக்சஸ் ஃபார்முலாவையே எனக்கு சொல்லிக் கொடுத்ததாத் தோணுச்சு!''

''சினிமா குடும்பப் பின்னணியோட நடிக்க வர்றதும், முதல் வெற்றியும் ஈஸிதான். ஆனா, அதைத் தக்கவெச்சுக்கிறது வாழ்நாள் போராட்டமாச்சே...


''
''உண்மைதான்! ஆனா, அதுக்கு நான் தயாரா இருக்கேன். கலிஃபோர்னியா சாண்டியாகோ ஸ்டேட் யுனிவர்சிட்டியில் தியேட்டர் பெர்ஃபார்மன்ஸ்ல ஆரம்பிச்சு, கார்பென்டரி, ஆடை வடிவமைப்பு, இயக்கம், நடிப்புனு சினிமா தொடர்பா 'ஏ டு இசட்’ கத்துக்கிட்டுதான் வந்திருக்கேன்.


'சர்வம்’ படத்தில் விஷ்ணுவர்தன் சாரிடம் உதவி இயக்குநரா வேலை பார்த்திருக்கேன்.என்னை சினிமாவுக்காக எப்படியும் வளைக்கலாம்கிற அளவுக்கு மாத்திக்கிட்டேன். தினம் தினம் கத்துக்கிட்டே இருக்கேன். நேர்மையா உழைச்சா எந்த விஷயமும் சாத்தியம்னு நம்புறவன் நான்!''

சாப்பாட்டுக்கடை - மதுரை - உழவன் உணவகம்

மதுரையைக் கலக்கும் உழவன் உணவகம் !

\

யல்நாட்டின் பீட்சாவையும் பர்கரையும் விற்பனை செய்வதற்காக குளுகுளு ஏ.சி. உணவகங்கள், சாலையோர கோபுரங்களாக உயர்ந்து நிற்கின்றன. அதேசமயம்... களி, கம்பஞ்சோறு, சோளப் பனியாரம், வல்லாரை சுடுச்சாறு, ராகி தோசை... பரம்பரைப் பரம்பரையாகத் தமிழ் மண்ணில் மணக்கும் இயற்கை உணவுகள்... இன்னும் ஃபிளாட்பார கடைகளில்தான் இருக்கின்றன.

இத்தகையக் கொடுமையை மாற்றுவதற்காகவும்... விவசாயிகள் மதிப்புக்கூட்டல் முறையில் லாபம் அடைவதற்காகவும், 'உழவன் உணவகம்' என்ற பெயரில் உழவர் சந்தையில் உணவகத்தை, நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது உருவாக்கினார் சகாயம். ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே மிகுந்த வரவேற்பைப் பெற்றது இந்த உழவன் உணவகம்!


தற்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருக்கும் சகாயம், நாமக்கல் பாணியில் இங்கேயும் 'உழவர் உணவகம்' தொடங்கச் செய்திருக்கிறார். மதுரை-நத்தம் சாலையில் உள்ள நாராயணபுரம் பகுதியிலுள்ள ராமகிருஷ்ணமடத்தில் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில்... தினை, கம்பு, சாமை, வரகு போன்ற சிறுதானியங்களில் செய்யப்படும் பாரம்பரிய உணவுகள் மற்றும் மூலிகை உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அத்திப்பழ அல்வா, முள்முருங்கை தோசை, செம்பருத்தி இட்லி, குதிரைவாலி பொங்கல், தினை சேவு, பனியாரம்... என நீளும் உணவு வகைகளை மக்கள் ஆர்வத்துடன் சுவைத்து வருகிறார்கள்.


உழவன் உணவகத்தில் கடை வைத்துள்ள பழையூர் சீனிவாசன், ''இதனால எங்க வருமானம் அதிகரிச்சுருக்கு. தினமும் 8 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்குது. குறைஞ்ச விலையில, உடம்புக்கு ஆரோக்கியமான உணவுகள நாங்க கொடுக்கறதால... நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகமாயிட்டே இருக்காங்க. வெளிநாட்டுப் பயணிகளும் ஆர்வமா வந்து சாப்பிட்டு பாத்து, பாராட்டுறாங்க.


 அடுத்தக் கட்டமா... பால் பொருள்களை வெச்சு இயற்கையான நறுமணப்பால், குளிர்பானங்களைத் தயாரிச்சு விக்கலாம்னு இருக்கோம். இதெல்லாம் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு சவால் விடுற வகையில இருக்கும்'' என்று சொன்னார்.


'கப்பலோட்டிய தமிழன்' வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்தி தனலட்சுமியும் இங்கே ஒரு கடை வைத்திருக்கிறார். ''வறுமையில வாடிக்கிட்டிருந்த என்னைக் கூப்பிட்டு, பயிற்சி கொடுத்து, இங்க கடையும் வெச்சுக் கொடுத்திருக்காரு, கலெக்டர் சகாயம். இந்த வயசுலயும் சுயமா உழைச்சு சாப்பிடறது எனக்கு சந்தோஷமான விஷயமாவே இருக்கு. இந்த வியாபாரம் மூலமா, தினமும் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்குது'' என்று உற்சாகமாகச் சொன்னார் தனலட்சுமி.

உழவன் உணவகத்தை நிர்வகித்து வரும் மதுரை வேளாண் விற்பனைத்துறை அலுவலர், ஆறுமுகம். ''உள்ளூர் மக்களை மட்டுமல்லாமல்... உலக அளவில் தனக்கான சந்தையை ஏற்படுத்தி வருகிறது, இந்த உழவன் உணவகம். இங்கிருந்து இலங்கை, ஆஸ்திரேலியா, ஓமன் போன்ற நாடுகளுக்கு ஆர்டரின் பேரில் உணவு வகைகளை ஏற்றுமதி செய்து வருகிறோம்.


 சமீபத்தில் மதுரையில் நடந்த வடமாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சந்திப்புக் கூட்டத்துக்கு, இங்கிருந்துதான் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. அவர்களெல்லாம் இந்த விவசாயிகளை மனதாரப் பாராட்டினார்கள். மொத்தத்தில் விவசாயிகளின் வருமானத்துக்கு வழிகாட்டியாகத் திகழ்வதுடன், நுகர்வோருக்கும் ஆரோக்கியமான உணவுகளைக் குறைந்த விலையில் கொடுத்து வருகிறது இந்த உழவன் உணவகம்'' என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

மதுரையில் இருக்கும் 'உழவன் உணவகம்' இப்படி சிறப்பாக செயல்பட ஆரம்பித்துள்ள நிலையில், ஏற்கெனவே சகாயத்தால் நாமக்கல்லில் துவங்கப்பட்ட 'உழவன் உணவகம்' கிட்டத்தட்ட மூடுவிழா நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்கிற செய்தி வேதனையைத் தருகிறது! 'உழவர்சந்தையில் உழவன் உணவகம் நடத்தக்கூடாது என்று அங்கு உணவகங்கள் நடத்தி வருபவர்கள் மிரட்டப்படுகிறார்களாம்!

Posted Date : 12:05 (17/05/2012)Last updated : 12:05 (17/05/2012)
பசுமை விகடனில் இருந்து...


ஜிஞ்ஜிதா

1.நடிகை ரஞ்சிதா என்னுடன் இல்லை: காஞ்சி சங்கராச்சாரியாருக்கு நித்யானந்தா பதில் # இப்போ பிரச்சனை இதானா? அடங்கப்பா சாமி


-----------------------------


2. ஆதீனம் என்றால் மொட்டை அடித்திருக்க வேண்டும் - சங்கரச்சாரியார் # அப்படிப்பார்த்தா ஃபைனான்ஸ் கம்ப்பெனிகாரங்க கூட பலரை மொட்டை அடிச்சிருக்காங்க


---------------------------

3. நானும் 1 சொல்றேன், ட்விட்டர்ல இருக்கற பெண்ணை லவ் பண்ணலாம், மேரேஜ் பண்ணலாம், ஆனா அதுக்குப்பிறகு அந்த பொண்ணு ட்விட்டர்க்கு வரக்கூடாது


--------------------------------

 4. எப்போதும் ரஞ்சிதாவுடன் உள்ள நித்தியானந்தாவை ஆதீனமாக ஏற்க முடியாது- ஜெயேந்திரர் #  எப்போதும்  இல்லையே? ராக்காலங்களில் மட்டும் தான்


------------------------

5. நான் யாருடன் இருந்தால் என்னை ஆதீனமாக ஏற்றுக்கொள்வீர்கள்? சங்கராச்சாரியாரிடம் நித்தி கேள்வி  @ கற்பனை



-------------------------



6. ஃபிகருங்க ஃபேஸ்புக்ல அடிக்கடி லொள்-னு டைப்பறாங்க..ஆக்சுவலி அவங்க அடிக்க வேண்டிய வார்த்தை - ஜொள்


-----------------------

7. புதுகோட்டையில் டி.ராஜேந்திரர் பொது வேட்பாளர் # முன்னாள் மாமனாருக்காக பிரச்சாரத்துக்கு புதுக்கோட்டை போவீங்களா?ன்னு இன்னுமா யாரும் கிளம்பலை? @ நயன் தாரா


------------------------

8. அணை பலமாக உள்ளது என நம்பமுடியாது-உம்மன்சாண்டி # "எங்க” நமீதாவை ஒரு குத்தாட்டம் போடச்சொல்றோம், உடையாம இருந்தா நம்புவிங்களா?


-----------------------------

9. கோதுமை, நெல்லை பாதுகாக்க சாக்கு பைகள் தட்டுப்பாடு: பிரணாப் #  இதெல்லாம் ஒரு சாக்கா? தமிழ் நாடு, கெரளாவுல பைக்கு தட்டுப்பாடா? ஹய்யோ அய்யோ 


---------------------------

10. ஷாப்பிங்க் போலாம்னு ஃபிகர் சொல்றப்போ, வேணாம்னு எந்த கடை கண்ணியும் இல்லாத பீச்சுக்கு கூட்டிட்டு வந்து சிக்கனமா லவ்வறவன் தான் தமிழன்


------------------------



11. ஏ ஆர் முருகதாஸ் நித்தியானந்தாவை வெச்சு படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பாரு?  1. ஆ”தீனா” 2.காமனா 3. கில்மா அறிவு 4  மஜினி



----------



12. இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் - விஜய் மீண்டும் உறுதி #  அட, அப்போ மற்ற காட்சிகளில் நடிப்பீங்களா?என்னவோ போடா மாதவா


--------------------------

13.'கணவனைப் பெண்ணின் பாதுகாவலனாக நாம் இன்னும் ஏன் பார்க்க வேண்டும்?''- கனிமொழி # செக்யூரிட்டி இருக்கறப்பவே ஆட்டையப்போட பார்க்கறாங்க மேடம்

-------------------

14. தென்னிந்திய நடிகைகளில் இலியானாவுக்குத்தான் ட்விட்டரில் டாப் மவுசு - செய்தி # அவ்ளவ் ”டாப்”பாவா இருக்கு?


-------------------------

15. டல் சீஸனுக்கு மத்தியில் கேரளத்தில் 'ஆர்டினரி’ படம் மெகா ஹிட் அடித்திருக்கிறது # படம் பார்த்தவங்க மவுத் டாக் மூலம் ஆர் டி 2( RT) ?


----------------------------

d shared Funny Pictures's photo.


16. என்  கோபம் மொத்தத்தையும் உன்னிடம் காட்டுகிறேன்.. பொறுமையுடன் அதை நீ வடிகட்டிப்பார்த்தால் என் அதீத அன்பு மட்டுமே மிச்சம் இருக்கும்


------------------------------

17.  என் கண் முன் நீ விம்மி அழுகையில் நான் நரக வாசல், மரண வாசல் இரண்டுக்கும் போய் போய் வந்தேன்


--------------------------

18. தன் பெற்றோரின் காதல் திருமணத்தின் எதிர் மறை விளைவுகளை கண் முன் காணும் பிள்ளைகள் பாடம் கற்றுக்கொள்கின்றன



---------------------------

19. என் மீது நீ வைக்கும் முதல் குற்றச்சாட்டே உன் பேச்சை காது கொடுத்துக்கேட்பதில்லை என்பதே!உன் உதடுகள் மட்டுமே தெரிகிறது,ஒலி கேட்கவில்லை


-----------------------------

20. நிராகரிப்புதான் நீ எனக்குத்தரும் பரிசு! மாறாத அன்புதான் நான் உனக்குத்தரும் பரிசு!


--------------------------------
--------------------------------

Saturday, May 26, 2012

பெட்ரோல் விலை உயர்வு ஏன்? ஜூ வி கட்டுரை

ரத்தம் கொடுத்தாத் தான் பெட்ரோல் கொடுப்பாங்களா?

மக்களை உறிஞ்சும் மத்திய அரசு
 

ப்பாவி மக்களைப் பற்றி மத்திய அரசாங்கத்துக்கு எவ்வளவு அலட்சியம் இருக்கிறது என்பதன் அடை​யாளம்தான் பெட்ரோல் விலை உயர்வு. மூச்சுக் காற்றைப் போல முக்கிய​மானதாக ஆகிவிட்டது பெட்ரோல். அதைப் பெறு வதற்கு இனிமேல் பாக்கெட் பணத்தை மட்டுமல்ல... உடம்பில் இருந்து ரத்தத்தையும் எடுத் துக் கொடுத்தால்தான் பெற முடியும் என்ற நிலைமையை மத்திய அரசு உருவாக்கி விட்டது! 


'பிரணாப் முகர்ஜியை நிதி அமைச்சரா வெச்சிருந்தா, இப்படித்தான் பண்ணுவார். பேசாம ஜனாதிபதி ஆக்கிடுங்க’ என்று, பொதுமக்கள் கொந்தளிக்கும் அளவுக்கு பெட் ரோல் விலையை உயர்த்தி விட்டார்கள்.


'பெட்ரோல் விலை விரைவில் உயரப்​போகிறது’ என்பதை, கடந்த 9.5.12  இதழில் எழுதி இருந்தோம். எண்ணெய் நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு 7.67 இழப்பை சந்தித்து வருவதையும் சொல்லி இருந்தோம். ஆனால், ஒரேயடியாக லிட்டருக்கு 7.98 உயர்த்தி, மக்களின் வயிற்றில் இடியை இறக்கி இருக்கிறது மத்திய அரசு. படிப்படியாக உயர்த்தினாலாவது ஓரளவுக்கு அரசாங்கத்துக்கு தங்களது பிரஜைகள் மீது கரிசனம் இருப்ப​தாகச் சொல்லலாம். ஆனால், ஒட்டு​மொத்தமாக உயர்த்துவது ஆட்சியாளர்​களின் சர்வாதிகார மனோபாவத்தையே காட்டுவதாகப் பொது​மக்கள் கதறுகிறார்கள்.


விலை ஏற்றம் பற்றி செய்தி கிடைத்தவுடன் உயர்​ரக சொகுசு காரில் இருந்து சாதாரண டி.வி.எஸ். 50 வரை, பழைய ரேட்டில் பெட்ரோல் போட்டுக்கொள்ள வேகவேகமாக பங்க் வாசலில் தவம் கிடந்தன. ஆனால், பெட்ரோல் தீர்ந்து விட்டதாக பல பங்க்குகளும் அடைக்கப்பட்டு இருந்தன


. (அவர்களால் முடிந்த சேவை அது!) அதனால் அவசரத்துக்குப் பெட்ரோல் போட வந்தவர்களும், அவதிப்பட நேர்ந்தது.
இதுவரை இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் என்று விலை ஏற்றி வந்த அரசு, இப்போது திடுமென ஒரேயடியாக உயர்த்தியதைத்தான் ஜீரணித்துக்கொள்ள முடியாமல் கொதிக்கிறார்கள் மக்கள். 


இத்தனைக்கும் கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறையவே செய்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 105 டாலர்களாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய், இப்போது 90 டாலர்களாகச் சரிந்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல் விலையும் குறைவதுதானே நியாயம். ஏன் கூடுகிறது?



எல்லாம் டாலர் செய்யும் மேஜிக்!


கடந்த சில மாதங்களாகவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே வருகிறது. கடந்த இரண்டே மாதங்களில் சுமார் 15 சதவிகிதம் அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது. முன்பு 49 ரூபாய் கொடுத்து ஒரு டாலர் வாங்கினால், இப்போது 56 ரூபாய் கொடுத்து ஒரு டாலரை வாங்க வேண்டிய நிலை. நாம் வாங்கும் கச்சா எண்ணெய்க்கான தொகையை டாலரில்தான் கொடுக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கவில்லை என்றாலும் டாலருக்கு நிகராக அதிக ரூபாயைச் செலவழிக்க வேண்டி இருப்பதால், நாம் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கிறது. அந்த விலை ஏற்றம் நம் தலையில்தான் விடிகிறது.


அது சரி. ரூபாய் மதிப்பு ஏன் திடீரென சரிகிறது? அதற்குக் காரணமும் கச்சா எண்ணெய்தான்.


அமெரிக்க டாலருக்கும் இந்திய ரூபாய்க்குமான சப்ளை மற்றும் டிமாண்டைப் பொறுத்துத்தான் ரூபாயின் ஏற்றம் இருக்கிறது. இந்திய அரசு செய்யும் ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருக்கிறது. அந்த இறக்குமதிக்கான பணத்தை இந்திய அரசு, டாலரில்தான் கொடுக்க வேண்டும். இதனால் டாலருக்கு அதிக டிமாண்ட் ஏற்படுகிறது. அதனால் டாலரின் மதிப்பு உயர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டே செல்கிறது.


இறக்குமதிக்காக நாம் செய்யும் செலவு​களில் மிகவும் முக்கியமானது கச்சா எண்ணெய்க்கானதுதான். இந்தியாவின் கச்சா எண்ணெய்த் தேவையில் 80 சதவிகித்தை நாம் இறக்குமதிதான் செய்கிறோம். அதிகஅளவில் இறக்குமதி செய்ய வேண்டி இருப்பதால், ரூபாய் மதிப்பு சரிகிறது. ரூபாய் சரிவதால் நாம் பயன்படுத்தும் பெட்ரோல் விலை உயர்கிறது.


இந்திய அரசாங்கத்தால் பெட்ரோல், டீசல் நுகர்வையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ரூபாயின் சரிவையும் தடுக்க முடியவில்லை. எதிர்காலத்தில் விலை ஏறாமல் தடுக்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை. அதாவது, எதுவும் செய்யத் தெரியவில்லை என்பதே இதற்கு முழுமையான அர்த்தம்.


பெட்ரோல் விலை உயர்வுக்கு கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள், மாநில முதல்வர்கள் என்று பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வருகின்றன. ஆனால், எந்த மாநில முதலமைச்சரும், மாநிலங்கள் வசூலிக்கும் வரியில் சலுகை காட்டிவிடாமல், ஒட்டுமொத்தமாக மத்திய அரசையே போட்டுத் தாளிக்கிறார்கள். (மாநிலம் வசூலிக்கும் வரியில் சலுகை காட்டாத காரணத்தால்தான் டெல்லியைவிட சென்னையில் நான்கு ரூபாய் விலை அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டன அறிக்கை விடும் ஜெயலலிதா உணர வேண்டும்!)


இப்போது எழுந்திருக்கும் கடும் கண்ட னம் காரணமாக, ஓரிரு ரூபாய் வரை விலைக் குறைப்பு செய்யப்படலாம். ஆனால், இதில் சந்தோஷப்பட எதுவும் இல்லை. இன்று இல்லா விட்டால் நாளை மீண்டும் விலை உயரத்தான் போகிறது. வயிற்றெரிச்சலுடன் பங்க் வாசலில் நிற்கப்போகிறோம். அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாகவும் பெட்ரோல் ஆகிவிட்டது. வாங்கவும் முடியவில்லை. வாங்காமல் இருக்கவும் முடியாது என்ற நிலைமையில் மத்தியதர வர்க்கம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்கிறது. அக்னி வெயிலை விட மத்திய அரசாங்கம் நடத்தி இருக்கும் இந்த அவஸ்தை வெயில் ரொம்பவே மக்களை வாட்டு கிறது!


'ஜக்குபாய்’ டூ-'கோச்சடையான் - கே எஸ் ரவிக்குமார் பேட்டி @ vikatan

ன் மகள் ஜனனியின் திருமணத்தை முடித்த பூரிப்பும் கல்யாண வேலை களைப்பும் சரிவிகிதமாகப் பிரதிபலிக்கிறது கே.எஸ்.ரவிகுமார் முகத்தில். ''முறுக்கு சாப்பிடுங்க... பலகாரக் குடத்துக்காக வீட்ல ஸ்பெஷலா செஞ்சது!'' என்று உபசரிக்கிறார்.


http://chennaionline.com/images/gallery/2012/May/20120505100929/KS_Ravikumar_Daughter_Wedding_Reception_48.jpg


 1''ஒரு காலத்தில் ரஜினியைவெச்சு அடுத்தடுத்து படங்கள் இயக்கியவர் நீங்கள். ஆனா, இப்போ 'ஜக்குபாய்’ தொடங்கி 'கோச்சடையான்’ வரை ரஜினிக்காக ரொம்ப வருஷமாக் காத்திருக்கீங்களே... வருத்தமா இல்லையா?''



'' 'ஜக்குபாய்’ படத்தின் இரண்டாம் பாதி சரியா இல்லைனு அப்போ ரஜினி சார் நினைச்சதால்தான் அந்தப் படத்தைப் பண்ண முடியலை. 'ராணா’ ஆரம்பிக்கும்போது திடீர்னு அவருக்கு உடல் நலப் பிரச்னை. ரெண்டாவது படமும் இப்படி ஆச்சேனு வருத்தப்பட்டவர், 'கோச்சடையான்’ படத்தை முதல்ல என்னைத்தான் இயக்கச் சொன்னார். ஆனா நான்தான், 'அனிமேஷன் தொழில்நுட்பத்தில் எனக்கு அனுபவம் இல்லை. அந்தத் தொழில்நுட்பம் தெரிஞ்ச சௌந்தர்யாவே இயக்கினால் நல்லா இருக்கும்’னு சொல்லி, அந்தப் படத்தை இயக்குறதில் இருந்து விலகினேன். 


'ரஜினியை அடுத்து இவர் இயக்குகிறார், அவர் இயக்குகிறார்’னு ஏதேதோ செய்தி வரும்போது எல்லாம், 'அடுத்த படம் எந்தப் படம், யார் படமா இருந்தாலும், உங்ககிட்ட சொல்லாம எதையுமே கமிட் பண்ண மாட்டேன். நீங்க இல்லாமப் பண்ண மாட்டேன்’னு சொல்லி இருக்கார் ரஜினி!''



'2. 'நீங்க சொல்லுங்க... இப்போ ரஜினி எப்படி இருக்கார்?''



''ரஜினி சார் நல்லா இருக்கார். ரொம்பவே நல்லா இருக்கார். பழைய ஃபார்முக்கு வந்துட்டார். ஆனா, இப்பவே 'ராணா’வுக்கு இழுத்துட்டுப் போய், அவரை டயர்ட் ஆக்க வேணாம்னு நினைச்சோம். 


அதான் 'ராணா’வைத் தள்ளிவெச்சுட்டு 'கோச்சடையான்’ ஆரம்பிச்சோம். அனிமேஷன் படம்கிறதால, லொகேஷன் அலைச்சல், காஸ்ட்யூம், மேக்கப்னு எந்த டென்ஷனும் இல்லை. மாஸ்க் மாட்டிக்கிட்டு ஏ.சி. ஹால்லயே நடிச்சா போதும். மோஷன் கேப்ச்சரிங் டெக்னாலஜியில் இந்தியாவில் உருவாகும் முதல் படம் இது. சாதாரண ஷூட்டிங்கில் நூறு, இருநூறு பேர் வெயில், மலை, காடுனு வேலை பார்த்தால், இந்தப் படத்தில் அதைவிட ஐந்தாறு மடங்கு ஆட்கள் ஏ.சி. ஹால்ல வேலை பார்க்கணும். ரொம்பப் பெரிய பட்ஜெட். ரஜினிங்கிறதால சாத்தியமாச்சு.''


3. ''சமீபத்தில் பார்த்த படங்கள், நம்பிக்கை தர்ற இயக்குநர்கள்?''


'' 'மௌன குரு’, 'மெரினா’, 'ஆரண்ய காண்டம்’னு நிறையப் படங்கள் ஈர்த்தன. முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கை மட்டுமே டார்கெட் வெச்ச 'ஒரு கல் ஒரு கண்ணாடி’யும் பிடிச்சிருந்தது. சற்குணம், பாண்டிராஜ்னு நிறைய இயக்குநர்கள் பளிச்னு செய்தி சொல்றாங்க. மெகா பட்ஜெட் படங்களையும் தாண்டி, சின்னப் படங்களும் நல்ல விஷயங்களோட வந்து ஹிட் ஆறதுதான் ரொம்ப நல்ல விஷயம்.''



4. ''வழக்கமான கமர்ஷியல் படங்கள் தவிர்த்து 'புரியாத புதிர்’ மாதிரியான படங்களை உங்களிடம் இருந்து இனி எதிர்பார்க்க முடியாதா?''



'' 'புரியாத புதிர்’ எனக்கு ரொம்பத் திருப்தி கொடுத்த படம். ஆனா, அப்போ அது சிட்டியில் மட்டும்தான் ஓடுச்சு. தயாரிப்பாளர்களிடம் நல்ல பேர் வாங்கணுமேனு நான் ரூட் மாறிட்டேன். ஆனா, இப்போ கிராமங்களில்கூட கம்ப்யூட்டர் வந்துடுச்சு. சினிமா தொழில்நுட்பம் பேசுறாங்க. பேய்ப் படம் எடுத்தாக்கூட இன்னைக்குப் பிரமாதமாப் போகும். இப்போ அந்த மாதிரிப் படங்கள் எடுக்கலாம். பார்க்கலாம்.''






5. ''ஆட்சி மாற்றத்தால் சினிமாவுக்கு எதுவும் நல்லது நடந்திருக்கா?''


''அறிவிச்ச ஸ்டிரைக்கை நிறுத்தி இருக்காங்களே... அதுவே நல்ல விஷயம்தானே? படத்துக்குத் தமிழ்ல பேர் வெச்சா மட்டும் பத்தாது, அது தரமான படமா இருந்தாத்தான் வரிவிலக்குனு சொல்லியிருக்கிறதும் நல்ல விஷயம். இன்னும் நல்லது நடக்கும்னு நம்பிக்கை இருக்கு.''



6. ''ஃபெப்சி, தயாரிப்பாளர் சங்கம் மோதல்ல நீங்க எந்தப் பக்கம்?''


''நான் எப்பவும் சினிமா பக்கம்.''



சம்சாரம்-சக்கரை வள்ளிக்கிழங்கு , சேனைக்கிழங்கு - சமாச்சாரம் ( ஜோக்ஸ்)

ஒரு வேளை கின்னஸ் ரெக்காடுக்கு முயற்ச்சி பண்றாரோ???????

 1. தட்கல்ல ரயில்வேல ரிசர்வேஷன் ஓப்பன் பண்ணினதும் புரோக்கர்சே எல்லா டிக்கெட்ஸையும் புக் பண்ணிடறாங்களே. இது தப்பு இலையா?

ஒயில் டிக்கெட்டுக்கே புரோக்கர் இருக்கும்போது ரயில் டிக்கெட்க்கு புரோக்கர் இருந்தா தப்பா?



----------------------------

2. லவ்வர்ஸ் டே கொண்டாடற மாதிரி ஒயிஃப் நைட் அப்டினு கொண்டாடற  பழக்கம் ஏன் யார் கிட்டேயும் இல்லை?


-----------------------------------

3. நோ அட்டு = நாம் பணி புரியும் இடத்திலோ, குடி இருக்கும் இடத்திலோ அட்டு ஃபிகர்ஸே இல்லை


---------------------------


4.  ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை! | # அய்யய்யோ, இனி அவர் யார் கூடவும் ஒண்ணா வாழவே கூடாதா?


-----------------------

5. குடியரசுத் தலைவர் வேட்பாளர் சங்மாவுக்கு ஜெயலலிதா ஆதரவு! # அப்போ சங்க்மா இனி அம்மாக்கு சிங்க் சக் மா?



------------------

6. இன்றைய அரசு ஜெவால் குடிகாரர் என்று போற்றப்பட்ட கேப்டனை ஏன் குடியரசுத்தலைவர்  பதவிக்கு ஜெ சிபாரிசு செய்யக்கூடாது?


--------------



மீன் விழியாள்............

7. கஷ்டப்பட்டும் வெற்றிச்செல்வி கிடைக்கலைன்னா அவ தங்கச்சி தமிழ்ச்செல்வியை ட்ரை பண்ணனும் # காதல் தத்ஸ்



------------------------

8. கடும் நிதி நெருக்கடியில் மத்திய அரசு தள்ளாட்டம்: செலவுகளை குறைக்க அதிரடி உத்தரவு # முதல்ல பிரதீபா பாட்டிலை வீட்டுலயே இருக்க சொல்லுங்க


----------------------

9. கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம் # அடேங்கப்பா, அப்போ செம கலெக்‌ஷன் ஆகிடும்


----------------------


10. டியர், எனக்கு ஒரு ஃபிரெஞ்ச் கிஸ் குடேன்...


 அய்யய்யோ, எனக்கு ஃபிரெஞ்ச் தெரியாதே?


 நோ பிராப்ளம், லிப்ஸ் இருக்கற இடம் தெரியும் தானே? 


-----------------------------------

11. ரெய்டு வர்றப்போ எல்லாரும் ஓடிடுவாங்க, எவன் ஒருவன் கடைசி வரை உங்களோடயே இருக்கானோ அவன் தான் உங்களை கடைசி வரை “வெச்சு” காப்பாத்துவான் 


-----------------------------


12. ஜட்ஜ் - மேரேஜ் ஆன நீங்க ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்ல ஏன் சிங்கிள்-னு அப்டேட் பண்ணீங்க?


 கைதி -என் சம்சாரம் ஆஃபீஸ் போய்ட்டா, நான் வீட்ல சிங்கிளாத்தான் இருந்தேன்


-------------------------------


வட போச்சே................

13. பேக்கு ஐ டி ல இருக்கறவங்க தான் ஃபேக் ஐ டி வெச்சு வெட்டி பொழுதை போக்கறாங்க 


----------------------

14. கோயிலுக்கு போய் ஒழுங்கா சாமி கும்பிடாம அங்கே இருந்தும் ட்வீட் போட்டால் நீயும் ஒரு தமிழனே!



---------------------------------

15. உலகத்துல என்ன நடந்தாலும் மாப்ளை அதை ஃபிங்கர் டிப்ஸ்ல வெச்சிருப்பாரு..



 ஓஹோ, எப்போதும் கையிலஏன் நியூஸ் பேப்பர் வெச்சிருக்காரு?


--------------------------------------


16. ஆண்டவனா இருந்தாலும் காணிக்கை போட்டால் காரியம் ஆகிடும்னு நினச்சவன் தான் தமிழன்


----------------------------

17. ஃபிகரோட கன்னம் சிவந்திருந்தா அதுக்கு 1000 அர்த்தம், தூங்காம கண் சிவந்திருந்தா அதுக்கு ஒரே அர்த்தம் # கில்மாலஜி


-----------------------


18. ஒத்தை ஜடை ஃபிகர் = ஒத்தை தலைவலி, ரெட்டை ஜடை ஃபிகர் = ரெட்டைத்தலைவலி, கொண்டை போட்ட ஃபிகர் = மண்டை வலி # சும்மா 


---------------------------------




19. சர்க்கரை வள்ளிக்கிழங்கு போல் மனைவி இருந்தாலும், சேனைக்கிழங்கு போல் துணைவி வைத்துக்கொண்டால் நீயும் தமிழனே!



-----------------------------------


20. மிஸ், உங்க ரோல் மாடல் உங்க மம்மியா? எப்படி? 


 ஜாம் ரோல், பிரட் ரோல் எல்லாம் எப்படி செய்யறதுன்னும், சாப்பிடறதுன்னும் அவங்கதான் டீச்சிங்க்


---------------------------------


21.மேட்ச் ஃபிக்சிங்க்ல பாதிக்கப்படறது லட்சக்கணக்கான மக்கள், மேரேஜ் ஃபிக்சிங்க்ல பாதிக்கப்படறது ஒரே ஒரு அப்பாவி ஆண்




-----------------------------

22. எனக்காக எதையும் சந்திக்கத்தயாரா? என்றாள். உன்னை மட்டும் சந்திக்கத்தயார் என்றேன் # எஸ்கேப் 7 மலை



------------------


23. 24 மணி நேரமும் உனக்கு விக்கல் வரும் என்ற ஒரே ஒரு குறையைத்தவிர என் காதல் எந்த வகையிலும் உன்னை துன்புறுத்தாது


--------------------

24. நீ ஒரு வேதாளம்! நான் உன் விக்கிர மாதித்தன். என் தோளில் பயணிக்கும் தேர் நீ! # காதல் கவுஜ


--------------------


அட்ரா.................அட்ரா...................


25. டாக்டர், நீங்க பல் டாக்டர்ங்கறதால பொண்ணுங்க உங்க கிட்டே பல்லைகாட்டி பேசுனா பிடிக்குமா?


 ரியாஸ் - ஹி ஹி ஏதோ 1 காட்டுனா சரி :)


-----------------------------------

26. மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்-ஜெ  #  கட்சில இருக்கற இரும்புக்கை மாயாவி யாருங்க மேடம்?


--------------------------------

27. சரக்கு' போட்டுவிட்டு ரகளை செய்தார் ஷாருக்கான்? #  சரக்கோட பேரு என்ன? வயசு என்ன? ஹி ஹி



---------------------

28. ஐ மிஸ் யூ = நான் தான் உன் டீச்சர்

ஐ மேரி யூ = நான் உனக்கு மட்டும் மேரி , (மற்றவங்களுக்கு மேரியம்மா)
# மொக்கைகள்


-------------------------

29. உன் அருகில் நான் இருக்கையில் எந்த நினைவும் இல்லை உன் வாசத்தை தவிர, உன்னை விட்டு விலகி இருக்கையில் ஏதும் மனதில் இல்லை என் நேசத்தை தவிர



------------------------------------

30. எவ்வளவு கோபத்தில் நீ இருந்தாலும் உன் உள்ளங்கைகளை பற்றி உன் கண்களை நோக்கி நான் மன்னிப்புக்கேட்கையில் நீ என்னை ஏற்றுக்கொள்வாய்!







31. ஒவ்வொரு முறை நான் சாப்பிட்டு விட்டு கைகழுவிய பின் கை துடைக்க நீ தரும் முந்தானைத்தலைப்பிற்காகவே  நான் கைக்குட்டை தவிர்க்கிறேன்


----------------------------

32. பொது இடங்களில், விழாக்களில் உன்னையும் அறியாமல் நீ தர்ம தரிசனம் தரும் பொழுதுகள்  எனக்கு தர்ம சங்கடமானவை


-------------------------

33. எங்கிருந்தாலும் வாழ்க! என்று தன் காதலியின் நலனுக்காக  பால் காவடி எடுப்பவர்களை அன்னக்காவடி ஆக்குவதே பல பெண்களின் குணம்



------------------------

34.  டர்ட்டி பிக்சர் படம் எனக்கு வேண்டாம் -நயன்தாரா # ஓஹோ, யூ ஆர் சர்ச்சிங்க் மிக்சர் பார்ட்டி?


------------------------------

35. நயன் தாரா சீதையாக நடித்த சினிமாப்படத்தில் கூட சீன் இருக்குமா? என்று ஆர்வமாக விசாரிப்பவரே உண்மைத்தமிழர்


-----------------------------





--


Friday, May 25, 2012

MEN IN BLACK - 3 - ஹாலிவுட் ஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்

http://4.bp.blogspot.com/-AvmhTlJAvLo/T1cgK81xLhI/AAAAAAAAMUw/m_lv-4KyrZs/s1600/men_in_black_3+(+iii+).jpg 

வில் ஸ்மித் எல்லாருக்கும் பிடிச்ச ஆக்‌ஷன் ஹீரோ.. லொட ,லொடன்னு காமெடியா அவர் பேசிட்டே பண்ற அதிரடி ஆக்‌ஷன்கள் அசத்த வைக்கும்.. மென் இன் பிளாக் ஆல்ரெடி 2 பார்ட்ல வந்த அதே டைப் ஆக்‌ஷன் கதை தான் இதுவும்.. 


போரஸ் அப்டினு ஒரு வில்லன் .. நம்ம ராகுல் மாதிரி.. அவனை பிடிச்சு ஜெயில்ல போட்டுடறாங்க .. 40 வருசமா அவன் ஜெயில்ல இருக்கான். அப்போ எல்லாம் எதும் செய்யலை.. தப்பிக்க முயற்சி பண்ணலை.. 40 வருஷம் போய் காலம் போன காலத்துல தப்பிச்சு உலகத்தை அழிக்க கிளம்பறான்.. அவன் ஒரு ஏலியன்ஸ் .. அதாவது வேற்றுக்கிரக வாசி..

 சாதா தமிழ்ப்படம்னா ஹீரோ என்ன பண்ணுவாரு அவனை துரத்தி உலகத்தை அழிவில் இருந்து காப்பாத்துவாரு/ ஆனா இது ஹாலிவுட் படம்.. அதனால கொஞ்சம் ரிச்சா காதுல பூ சுத்தனும்..( அந்த ரிச்சா இல்லை.. )அதனால அவங்க என்ன பண்றாங்கன்னா  கடந்த காலத்துல போய் அவனை அழிக்க ட்ரை பண்றாங்க.. 

 அதாவது நிகழ்காலத்துல அவனை தேடி கஷ்டப்பட்டு கண்டு பிடிக்கறதை விட கடந்த காலத்துல போனா ஈசியா கொன்னுடலாம்.. அதுவும் இல்லாம இன்னொரு சாவு பற்றியும் துப்பு கண்டு பிடிக்க வேண்டி இருக்கு,...  ஒரே சைட்ல 2 ஃபிகரு.. அதாவது ஒரே கல்லுல 2 மாங்கா.. 

 ஏஜெண்ட் ஜே, ஏஜெண்ட் கே  2 பேரும்  எப்படி இணைஞ்சு இந்த வேலையை செய்யறாங்க என்பதை சரியா 108 நிமிஷத்துல ஜாலியா , விறு விறுப்பா சொல்லி இருக்காங்க .. 


வில் ஸ்மித் எப்பவும் போல சுறுசுறு நடிப்பு துறு துறு பேச்சு.. அழகிய டிரஸ்சிங்க் சென்ஸ்.. ஜைஜாண்டிக் பாடி லாங்குவேஜ்.. குட் பர்ஃபாமென்ஸ்.. கீப் இட் அப்..



படத்துல ஹீரோயின் இல்லாதது பெரிய குறை ( படத்துக்கோ, கதைக்கோ அல்ல என்னை மாதிரி யூத்ங்களுக்கு ஹி ஹி )

Tommy Lee Jones இன்னொரு ஏஜெண்ட்டா நடிச்சிருக்காரு.. அவர் ஆள் முகம் பாறை மாதிரி எந்த உணர்ச்சியையும் காட்டாத சுபாவம் செம கலக்கல் .



http://www.redcarpetdivas.com/images/nicole-scherzinger/nicole-scherzinger-men-in-black-3-premiere.jpg.


 படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இவ ஆபத்தானவ இல்லை, இவ அழகுல மயங்குனாத்தான் ஆபத்து.. 


2.  வெட்டியாத்தானே நிக்கறே.. இந்த கேக்கை வெட்டேன்?


3.. நீ ஜெயிச்சுடுவேன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா? 

 வெற்றிக்கு தோல்வியே கிடையாது.. 


4. ஃபிளைட்ல போறப்ப செல் ஃபோனை எல்லாரும் ஆஃப் பண்ணிடுங்க.. அப்படி பண்ணலைன்னா செல் ஃபோன் ஆன் ல இருக்கும், ஆனா நீங்க எல்லாம் ஆஃப் ஆகிடுவீங்க..


5. என்னோட இரங்கல் கூட்டத்துலயாவது ஒழுங்கா பேசுவியா?

செத்தாலும் அப்படி பேச மாட்டேன்



6. எனக்கு கடந்த கால கருவி வேணும்.. 

 எதுக்கு?

 கடந்த காலத்துல என் கையை வெட்டுனவனை பார்த்து அவன் என் கையை வெட்டும் முன்னே அவன் தலையை வெட்டனும்.. 


7. என்னை அடிக்கடி தெளீவா குழப்பறதே உன் வேலையாப்போச்சு.. 

8.  டேய் கண்ணா .. 40 வருஷ ஜெயில் தண்டனை எப்படி இருந்தது?


நீ அனுபவிக்கப்போறதை விட சுமாரா தான் இருந்தது.. 


9.  பல வருஷங்களூக்கு முன்பே அவனை ஜெயில்ல போட்டது தப்போன்னு இப்போத்தோணுது
\
 ஏன்? 

 அவனை கொன்னிருக்கனும்.. 


10.  ஏய்யா,.. அவனை யூத்தான என்னாலயே சமாளிக்க முடியலையே.. வயசான நீ எப்படி சமாளிக்கப்போறே?


11.  நீ ஓவரா வாய் பேசறே.. உன்னை 2 வாரம் சஸ்பெண்ட் பண்றேன்

 போய்யா லூசு


4  வாரம்


12. மம்மி.. அந்த அங்க்கிள் என்கிட்டே இருந்து சாக்லெட் ஃபேவரை பிடுங்கிட்டாரு

 ம் ம் 

 அது கூட தேவலை, ஒரு தாங்க்ஸ் கூட சொல்லலை.. 


13. நீங்க யாரா இருந்தாலும் பரவாயில்லை.. 5 அடி தள்ளியே நில்லுங்க.. குரல் வளையை  கடிச்சுடப்போறேன்


14.  ஏஜெண்ட் கே எப்படி இருப்பாரு?

 அவர் ரொம்ப அழகா இருப்பாரு.. ஆனா அவர் சிரிச்சா ரொம்ப கேவலமா இருக்கும்


15. எதுக்காக இப்போ சிரிச்சே?

 ஜோக் அடிச்சா சிரிப்பேன்.. இப்போ நீ சொன்னது ஜோக் தானே? 



http://www.etunlimited.com/wp-content/uploads/2012/04/MIB-3-WALLPAPER-3.jpg

16.  காஃபி ஏன் மண் மாதிரி இருக்கு?

 ஏன்னா காஃபிக்கொட்டை மண்ல இருந்துதானே விளையுது?



17. ஸாரி சார்.. சம்பளம் அதிகமா வாங்கற  ஹை கிளாஸ் ஆஃபீசர்ங்க கிட்டே தான் அதெல்லாம் சொல்லுவோம்.. உங்க கிட்டே சொல்ல முடியாது.. நீங்க லோயர் கிரேடு 

 அப்போ என் சம்பளத்தை உயர்த்திடுங்க ஹி ஹி


18. என்னை மாதிரி கறுப்பா இருக்கறவங்க  கலரா கார் ஓட்டிட்டு வந்தா அது திருட்டுக்காரா?


 ஏன் அப்படி சொல்றீங்க? இது திருட்டுக்கார் தான்.. 

 ஆனா அதுக்கும் என் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லை



19. எதுக்காக என் கிட்டே கன்னை காட்டறீங்க? என் கிட்டே புல்லட்ஸ் ஏதும் ஸ்டாக் இல்லை.. 

 புல்லட் நீயே வெச்சுக்கோ,.,. காட்ட வர்லை மிரட்ட வந்திருக்கோம்


20. இந்த பொருள் சரியா வேலை செய்யுமா?ன்னு செக் பண்ணீயாச்சா?


 நீ உயிரோட இருந்தா சரியா வேலை செய்யுதுன்னு தெரிஞ்சுக்கலாம் ஹி ஹி 


21. எனக்கு பழசெல்லாம் மறந்துடுச்சு.. நான் இப்போ குழந்தை மாதிரி

 அதை எப்படி நாங்க நம்பறது?

 அப்பா.. நான் பூமில இருக்கேன்.. என்னை ஜாமீன்ல கூட்டிட்டு போங்க .. 


22.  இந்த கன்ஸ், வெப்பன்ஸ் எல்லாம் ஏது?

 தேர்க்கடைல ரிங்க் போட்டு மாட்னது ஜ்ஹி ஹி


23.  நான் எல்லா லேடீசையும் ஓ-ன்னு தான் கூப்பிடுவேன் 

 யோவ்1 


 டோண்ட் மிஸ்டேக்கன் மீ..  ஓக்கேவான்னு அர்த்தம்


24.  என்னமோ ஐ டெஸ்ட்னு கூட்டிட்டு வந்திருக்கீங்க ஆனா  இது பார்த்தா நியூராலாரிஸம் போல இருக்கே.. 

 உனக்கு பல உண்மைகள் தெரிஞ்சுருக்கு 



25.  உனக்கு என்ன வயசு? 

 29


 எது? இந்த 28க்க்குப்பிறகு வருமே அதுவா?

26. அவனுக்கு 5 பரிமாணம் இருக்கு..  இருந்த இடத்துல இருந்தே 5 வெவ்வேற வடிவம் எடுத்து அவன் நினைச்சதை சாதிக்க முடியும் 


27. எங்க தாத்தா அடிக்கடி என்ன சொல்லுவாருன்னா உன்னால ஒரு பிரச்சனையை சமாளிக்க முடியலைன்னா ஆறப்போடு.. போய் சாப்பிடு..  அப்புறமா அது பற்றி யோசின்னு.. 


28. கசப்பான உண்மை இனிப்பான பொய்யை விட பெஸ்ட்


29. மரணத்தை தடுக்கனும்னா இன்னொரு மரணத்தால தான் அது முடியும்..


30. லேடி - ஏஜெண்ட் கே எப்படி இருக்கீங்க? 



 யோவ்.. இந்த குசலம் விசாரிக்கறது, கடலை போடறது இதெல்லாம் போய்க்கிட்டே பேசலாமே?




http://im.in.com/media/download/wallpapers/2012/May/mib3_seoulpremiere18_1024x768_420x315.jpg


வில்லனோட ஆள் தலையை தனியா கட் பண்ணி பேஸ் பால் விளையாடும் சீன் தியேட்டரில் செம கிளாப்ஸ்.. 

 ஏஜெண்ட் கே, ஏஜெண்ட் ஜே, இன்னொருத்தர் 3 பேரும் பாலத்துல நின்னு பேசிட்டு இருக்கும்போது வில்லன் பைக்ல அசுர வேகத்துல வந்து அந்த இன்னொரு ஆளை அலேக்கா தூக்கி பைக்ல உக்கார வெச்சு கடத்துவது கலக்கல் ஆக்‌ஷன் 




இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஓப்பனிங் ஷாட்ல வில்லன் தனக்கு உதவின லேடியை எதுக்கு சம்பந்தமே இல்லாம கொல்லனும்? இதுல “என்னை நம்புனது உன் தப்புன்னு பஞ்ச் டயலாக் வேற 

2. அபார சக்தி, அளப்பறிய மேஜிக் எல்லாம் தெரிஞ்ச அந்த வில்லன் 40 வருஷங்கள் ஏன் மன்மோகன் சிங்க் மாதிரி டம்மியா இருக்கனும்?

3. வில் ஸ்மித் காலக்கருவி\யோட 1969க்குப்போறாரு. க்ளைமாக்ஸ்ல ஏஜெண்ட்  கே கூட அந்த சின்னப்பையன் ( ஸ்மித்தின் சின்னப்பையன் வடிவம்) போறதை வேடிக்கை பார்த்துட்டே நிக்கறார்.. அவர் கைல காலக்கருவி இருக்கு அது 2012 உலகத்துக்கு ஒப்படைக்க வேணாமா? அதை ஏன் ஏஜெண்ட் கிட்டே அதை கொடுக்கலை?

 ஆர்ட் டைரக்‌ஷன், இசை, ஒளிப்பதிவு எல்லமே அசத்தல்..  பிரம்மாண்டம் காட்சிக்கு காட்சி.. 


சி.பி கமெண்ட் -  ஆக்‌ஷன் ரசிகர்கள், வில் ஸ்மித் ஃபேன்ஸ் அனைவரும் பார்க்கலாம், பெண்களும் பார்க்கற அளவு கண்ணியமான நெறியாள்கை தான்

 ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன்

நயன் தாராவுடன் காதலா? ஆர்யா பேட்டி - கிடாவெட்டு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKz5h7Joupr3U37Qylq03nhXGJV0CwM_3pIxvZsyz5C3Yhyy5DqJijorA9Oxt56CHTz-kGJhiBwnKyGQgi6r4aV9A3ZSihwdGrcSwTlCditvBDESb6XD91yuz71prX8c9a0_-qdGy8lBsx/s1600/Nayanthara+(11).jpgவேட்டை’யை முடித்துவிட்டு 'சேட்டை’யில் இறங்கிவிட்டார் ஆர்யா. நான்வெஜ் ஜோக்ஸ், டாய்லெட் காமெடி என்று இந்தியில் பட்டையைக் கிளப்பிய 'டெல்லி பெல்லி’யின் தமிழ் ரீ-மேக் இது. சந்தானம், ஹன்சிகா, அஞ்சலி என செம கலகலப்பில் இருந்த ஆர்யாவை மட்டும் தனியே தள்ளிக்கொண்டு வந்தேன்...


சி.பி - பெல்லி கில்லின்னு டைட்டில் வெச்சிருக்கலாம் அல்லது சேட்டைக்காரன்னு வெச்சிருக்கலாம் கெத்தா இருந்துருக்கும்


1. ''செம போல்டான 'டெல்லி பெல்லி’யை அப்படியே இங்கே எடுக்க முடியுமா?''



சி.பி - நாங்க எல்லாம் அப்பவே அப்படி, இப்போ கேக்கனுமா? எதை எடிட் பண்ணனும்? எதை சேர்க்கனும்னு தெரியாதா?
''கொஞ்சம் காரம் குறைச்சிருக்கோம். நான், சந்தானம், பிரேம்ஜினு காம்பினேஷன். வெடிச்சுச் சிரிக்கவைக்கும். ஆக்ஷன் சொன்னதும் யூனிட்டே சிரிச்சு உதறுது. சந்தானத்தோட சேர்ந்து சேர்ந்து எனக்கும் இப்போ காமெடி ஈஸியா வொர்க் - அவுட் ஆகுதுங்க!''


சி.பி - அது வேணா உண்மை தான், பாஸ் எ பாஸ்கரன் நல்லா காமெடி களை கட்டுச்சு, கல்லாவும் கட்டுச்சு


2. ''அதேசமயம் செல்வராகவன் படத்திலும் நடிக் கிறீங்க... அது வேற ஸ்கூல் ஆச்சே..?''


 சி.பி -அது ஸ்கூல்  இல்லிங்கோவ் சைக்கோ யுனிவர்சிட்டிங்கோவ்



''அது ஸ்கூல் இல்லை... யுனிவர்சிட்டி. 'ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பார். அவர்கிட்ட எந்த ஜாலியும் வேலைக்கு ஆகாது’னு சொல்வாங்க. ஆனா, 'இரண்டாம் உலகம்’ ஷூட்டிங்ல கேமரா ரோல் ஆகும்போது மட்டும்தான் அப்படி இருப்பார். 'கட்’ சொன்ன அடுத்த நொடியே, அவர் வேற ஆளா மாறிடுவார். உறவுகள்... நமக்குப் பரிசளிக்கிற உயரம், கொடுக்கிற துயரம்னு ரொம்ப சென்சிட்டிவ்வான கதை. எனக்கு ஜோடி அனுஷ்கா. செம ஃப்ரெண்ட்லி  பொண்ணு. எதைப் பத்தியும் அவங்ககிட்ட பேசலாம். ஒவ்வொரு நாளும் ரசனையா, திருப்தியா போகுது.''


 சி.பி - இரண்டாம் உலகம் இரண்டாம் மயக்கம் என்ன மாதிரி இல்லாம இருந்தா சரிதான்..



''3. அஜீத்கூட நடிக்கிறீங்கபோல... அதுவும் வில்லனா?''


சி.பி - இந்த மாதிரி கேள்வி கேட்டே நல்லா நட்பா இருக்கறவங்களையும் யோசிக்க வெச்சுடுங்க 
''எனக்கு அஜீத்தை ரொம்பப் பிடிக்கும். 'மங்காத்தா’வில் அறிமுக நடிகர்களோடு எந்த ஈகோவும் இல்லாம நடிச்சு இருப்பார். அவரை நான் மீட் பண்றப்போ, என் படங்களைப் பத்தி நிறைய விஷயங்கள் பேசுவார். அவரோட ஒவ்வொரு வார்த்தையுமே அவர் நம்ம மேல் வெச்சிருக்கிற அக்கறையைச் சொல்லும். இந்தத் தடவை அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொன்னேன். 'விஷ்ணு சொன்னார், நாம இரண்டு பேரும் சேர்ந்து கலக்குவோம்’னு சொல்லிச் சிரிச்சார். விஷ்ணுவர்தன் எனக்கு செம ஃப்ரெண்ட். அவர் தன்னோட படத்தில் என்னை ஜூனியர் ஆர்ட்டிஸ்டா நடிக்கச் சொன்னாலும் நடிப்பேன்.''



4. ''என்னங்க, எங்கே பார்த்தாலும் உங்க புது வீட்டுக்கு நயன்தாரா வந்தாங்கனுதான் பேச்சு...''



சி.பி - வந்தாரு, ஓக்கே ஆனா மறுபடியும் ரிடர்ன் போக 36 மணி நேரம் ஆச்சாம். 

''பத்து ஹீரோ, பத்து டைரக்டர்கள் வந்திருந்தாங்க... நயன்தாராவும் வந்திருந்தாங்க. ஆனா, அவங்க வந்தது மட்டும் நியூஸ் ஆகிடுச்சு. 'எங்க வீட்டுக்கு நிறையப் பேர் வந்திருக்காங்க. நீ வந்ததுதான் பரபரப்பாகிடுச்சு’னு நயன்கிட்ட சொல்லிச் சிரிச்சேன். அவ்வளவுதான்... இதுல பெரிய விசேஷம் எதுவும் இல்லை.''



சி.பி - அடேங்கப்பா மொத்தம் 21 பேரா? ஹி ஹி 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhw7LYX52PMopZMZ-e2bjAd9mNFPmjdnLNlB5jlkklCs3gc7tWDccfbo2KDMYpJvoBOKNnxZv5c3XUwUZHVyy-1EUgjrE-YvY5QRWBU7qbzX4IW1QZE4opdLXN0UmCu_nLihwoRsyIE2_bT/s1600/Nayanthara1.jpg

5. ''என்னங்க இது, 'வெல்கம் பேக் நயன்தாரா’னு எழுதி, கேக் வெட்டி வெல்கம் சொல்லியிருக்கீங்க... விசேஷம் எதுவும் இல்லைன்னா எப்படி?''


சி.பி - அதானே, வெல்கம் ஃபிராண்ட், வெல்கம் சைடு என ஏன் எழுதல இதை வன்மையாக கண்டிக்க்றேன் :) 







''அவங்க கொஞ்சம் அப்செட்டா இருந்தாங்க. அதனால, வீட்டுக்கு வந்தவங்களைக் குஷிப்படுத்த அப்படிப் பண்ணேன். அவ்ளோதான் பாஸ்!''


சி.பி - நயன் தாராவை குஷிப்படுத்திய ஆர்யான்னு டைட்டில் வைக்கலாமா? 
6. ''இப்பவும் நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தானே?''


சி.பி - ஆமா திக் ஃபிரண்ட்ஸ்.  



'' 'பாஸ்’ படத்துல இருந்தே பழக்கம்.  'பாஸ்’ பட ஷூட்டிங் சமயம் அவரோட செம 'லவ்’வில் இருந்தாங்க. அப்பவும் நான் ஃப்ரெண்டுதான்... இப்பவும் நான் ஃப்ரெண்டுதான்!''


7. ''உங்க ஃப்ரெண்டோட காதல் பிரிவுக்கு என்ன காரணம்னு விசாரிச்சீங்களா?''


''அதை எப்படிங்க கேட்க முடியும்? 'என்னாச்சு’னு மட்டும் கேட்டேன். 'வொர்க் - அவுட் ஆகலை’னு ஒரே வரியில் முடிச் சுட்டாங்க. காதல், கல்யாணம் எல்லாம் அவங்களோட ரொம்ப பெர்சனல்.''



சி.பி - அது என்ன ஜிம்ல போய் பண்ற எக்சசைஸா? ஒர்க் அவுட் ஆகாம இருக்க?


http://media5.onsugar.com/files/2011/06/22/5/1756/17567308/ca/nayanthara-hot-sexy-gallery-4.jpg

8. ''அப்ப ஆர்யா - நயன்தாரா நடுவில் காதல் இல்லவே இல்லையா?''


''என்னங்க... ஒரு முடிவோடதான் வந்திருக்கீங்களா? கிசுகிசு வருதேனு காதல், கல்யாணம்லாம் பண்றதுன்னா...  எப்பவோ நான் கல்யாணம் பண்ணியிருக்கணும். என் அப்பா - அம்மா எனக்குச் சுதந்திரம் கொடுத்து வளர்த்திருக்காங்க. நம்ம மனசுக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணு வரட்டும். அப்புறம் பண்ணிக்கலாம் கல்யாணம். நாம எப்பவும் அப்பா - அம்மாவுக்கு நல்ல பிள்ளையா இருக்கணும். நான் இருக்கேன். அது போதும் சார்.''


சி.பி - அண்ணன் என்ன சொல்ல வர்றாருன்னா நயன்க்கு ஆறுதலா இருப்பாரு, குஷிப்படுத்துவாரு, சந்தோஷப்படுத்துவாரு. ஆனா கல்யாணம் பண்ணி படுத்த மாட்டாரு.. 

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (25.5..2012 ) 5 படங்கள் முன்னோட்ட பார்வை


http://moviegalleri.net/wp-content/gallery/ishtam-tamil-movie-posters/ishtam_tamil_movie_posters_vimal_santhanam_8148.jpg


1. இஷ்டம்". வாகை சூட வா படத்திற்கு பிறகு, பாலாஜி ரியல் மீடியா கம்பெனி சார்பில் ‌ரமேஷ் தயாரிப்பில், விமல் நடித்து வரும் புதிய படத்தின் பெயர் "இஷ்டம்". படத்தில் விமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலின் தங்கை, நிஷா அகர்வால் நடித்துள்ளார். இவர்களுடன் அனுப், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதல் கதையை ரொம்ப வித்யாசமாக இயக்கி வருகிறார் பிரேம் நஷீர். இந்தபடத்திற்காக விமல் தனது, நடை, உடை, பாவனை என எல்லாவற்றையும் மாற்றியுள்ளார். தமன் இசையமைக்க, ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். திரையில் இதுவரை பார்த்த விமலுக்கும், இனி இந்தபடத்தில் பார்க்க போகும் விமலுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்குமாம்.


களவாணி விமல் முதன்முதலாக ஐ.டி., கம்பெனி இளைஞராக சிட்டி பேக்கிரவுண்டில் நடிக்கும் இஷ்டம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தின் இயக்குநர் தயாரிப்பாளர் காமெடி நடிகர் சந்தானம் உள்ளிட்டவர்களுடன் துணிச்சலாக மேடையில் இருந்தார் அப்பட ஹீரோ விமல்! என்ன ஆச்சர்யம்?! மனிதர் மைக்கையும் பிடித்து.,இதுநாள் வரை கிராமத்து இளைஞராக கதாநாயகனாக திரையில் வந்த நான் இஷ்டம் படத்தில் முதன்முதலாக சிட்டி சப்ஜெக்டில் நடித்திருக்கிறேன் என் மற்ற படங்களுக்கு தந்த ஆதரவை மீடியா இதற்கும் தரவேண்டும் நன்றி வணக்கம் என்று உ.பா., உந்துதலில் இருந்த மாதிரியும் இல்லாத மாதிரியும் ஒரு வழியாக பேசி அமர்ந்துவிட்டார்.


http://images.south365.in/2012/01/Nisha-Agarwal-From-Ishtam-Tamil-Movie-HQ-Stills-4.jpg

 ஆனால், அடுத்து மைக் பிடித்த சந்தானமோ., எனக்கு கிரீடம் படத்தில் துணை நடிகராக வந்ததில் இருந்து விமலைத் தெரியும். அவரது நல்ல கேரக்டர் தான் அவரை இவ்வளவு உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. டேலண்ட் 10% இருந்தால் போதும் கேரக்டர் 90% நன்றாக இருந்தால் சினிமாவில் சாதிக்கலாம் என்பதற்கு விமல் உதாரணம். கேரக்டர் 90,90 என்று திரும்ப திரும்ப சந்தானம் சொன்னது., கேட்டு விமலே மறந்திருந்தாலும் சந்தானம் விடமாட்டார்., போல என விமல் உ.பா., 90 பற்றி தெரிந்த சில பத்திரிகையாளர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தது ஹைலைட் காமெடி! ஈரோடு அபிராமியில் ரிலீஸ்.. இது நான் இஷ்டானு என்ற தெலுங்கு படத்தின்டப்பிங்க் ப்டம். நேரடி தமிழ்ப்படம் அல்ல

 http://s.paadal.net/album_images/album/urumi.JPG
2. உருமி   - இயக்குநர் சந்தோஷ் சிவத்தின் கனவு திட்டமான உருமி படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. வரலாற்றுக் கதையை அடைப்படையாக வைத்து மிக அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு.தமிழகத்தில் சுமார் 250 திரையரங்குகளில் இப்படம் வெள்ளியன்று திரையிடப்பட உள்ளது. 

இப்படத்தின் பலம் கதை என்றாலும், அதற்கு மேலும் பலம் சேர்க்கும் விதத்தில் பிருத்விராஜ், ஆர்யா, பிரபுதேவா, ஜெனிலியா, நித்யா மேனன், வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இந்த படம் பொதுமக்களிடம் எந்த விதமான வரவேற்பைப் பெறப் போகிறது என்று தெரிந்து கொள்ள சந்தோஷ் சிவன் மிகுந்த ஆவலோடு உள்ளார்.


http://www.bollyketchup.com/wp-content/uploads/2011/03/Urumi-Malayalam-Movie.jpg


வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் தமிழ் சினிமாக்களுக்கு ரசிகர்கள் நிச்சயமாக வரவேற்பு அளிக்க வேண்டும். வெறும் சதையை வைத்து படம் எடுக்காமல், கதையை வைத்துப் படம் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை இயக்குநர்களுக்கு வந்தால்தான் தமிழ் சினிமா சிறப்படையும் என்பது நமது ரசிகர்கள் அறிந்ததே

http://www.onlinemoviesfreee.com/wp-content/uploads/HLIC/ca151e128950586028e1cd1360b9c366.jpg


 3. MEN IN BLOCK 3 - An alien criminal kills the young Agent K in 1969, altering the timeline, changing the Agency and placing the Earth in danger. Veteran Agent J (Will Smith) must travel back in time to 1969 to before the murder and work with the young Agent K (Josh Brolin) to save him, the Agency, the Earth and humanity itself. Written by Anonymous  ERODE VSP

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0K0c8KbWlL5HaHPPb50s9GY70QxJ5DpEFhxqN25zqnofpJVLDF48XP-yik5kZZbrxzx-V-mljSL1S-79Q-LgFxpYQPyAhpQIRixfcl8ASJyW8QycG-1R5Fmz-AYFp-SNI_cE8d957N4eB/s1600/Konjum+Mainakkale+Movie+Posters.jpg

4.கொஞ்சும் மைனாக்களே  - இதுல இளம் தம்பதிகளின் வாழ்க்கை பிரச்சினைகளை மையமா வச்சி உருவாக்கியிருக்காங்க.காதலித்து திருமணம் செய்வதைவிட அமையும் மனைவியை ஆயுள் வரை காதலிப்பது சிறந்தது என்ற கருத்தும்,

'புரிதலும், பொறுமையும்' இல்லேன்னா மணவாழ்க்கை புண்ணாகிவிடும்னு அட்டகாசமான கருத்தை சொல்லியிருக்கும் படம்தான் 'இந்த கொஞ்சும் மைனாக்களே..'

இந்தப் படத்தில புதுமுகங்கள்தான் மூணு பேர். உதய், மோனகப்பிரியா, அக்ஷதா.இவங்களைத் தவிர நம்ம டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், எம்.எஸ். பாஸ்கர் கூட நடிச்சிருக்காங்க.
http://www.vidikural.com/wp-content/uploads/2012/04/konjum_mainakkale-1.jpg

ஒளிப்பதிவு; ஏ.என். தமிழ்மாறன்,  வசனம்: எஸ்.எஸ்.  ஷோபனசந்தர், கதை, திரைக்கதை, இயக்கம் ஏ.பி.கே. கார்த்திகேயன்.  தயாரிப்பு சத்யா கிரியேஷன்ஸ் எஸ்.எஸ். நாராயணன்..

 ஈரோடு ஸ்ரீலட்சுமியில் ரிலீஸ் 


http://southtamil.files.wordpress.com/2010/02/anbulla-maan-vizhiye-movie-pics.jpg?w=300

5. அன்புள்ள மான் விழியே - அன்புள்ள மான்விழியே" முத்துவேல் மூவீஸ் சார்பாக புலவர் வ.சிவசனகரன் தயாரிக்கின்ற படம். புது முகங்கள் சுனில், நசீர், ஹாசினி, ரிஷா வடிவுக்கரசி உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.

 அவ்வைநடராஜன் வெளிட்ட ஆடியோவை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், அரு.அழகப்பன், திருப்பூர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். மொத்தம் 6 பாடல்கள் உள்ள இந்த படத்திற்கு இசையமைத்தவர் அரவிந்த் ஸ்ரீராம். இதை இயக்கியவர் இயக்குனர் பிரம்மன்.

 "அன்புள்ள மான்விழியே" படத்தை பற்றி இயக்குனர் பிரம்மன் கூறுகையில்-"குழந்தை பருவத்தில் இரண்டு குழந்தைகளுக்கு இடையில் இருக்கும் நட்பு எப்படி பின்னாளில் காதலாக மாறுகிறது என்பதை காட்டுகிறது. அது மட்டுமில்லாமல் ஒரு குழந்தை மேல் தாயுக்கு இருக்கும் பாசத்தை பற்றியும் காண்பித்துள்ளோம். குடும்பத்துடன் கண்டுகளிக்க ஏற்ற ஒரு நல்ல பொழுதுப்போக்கு படம்" என்றார் ..





6. ரஜினி நடிச்ச பாட்ஷா படத்தின் ஹிந்தி டப்பிங்க் ரிலீஸ்/..


7. திருடன் திருடி அப்டினு ஒரு தெலுங்கு டப்பிங்க் ரிலீஸ்




டிராஃபிக் ராமசாமி நித்தியானந்தாவை ஆதரிப்பது ஏன்?ஆராய்ச்சி ( ஜோக்ஸ்)

1.மேரேஜ் இன்விடேஷன் வைக்க வந்தவங்க ஒரு சில்வர் தட்டுல பத்திரிக்கை வெச்சு குடுத்தாங்க, ஆனா தட்டை திருப்பி கேட்கறாங்க :((



---------------------------------

2. கல்யாண மண்டபத்துல சாப்பாடு வீணாவதைத்தவிர்க்க வந்தவங்க கிட்டேயே பார்சல் சாப்பாடு கொடுத்து விட்டா நல்லாருக்கும் :)


--------------------------


3. இத்தனை பேர் இப்படித்திட்டறாங்களே, உனக்கு உறைக்காதா?ன்னு சிலர் கேட்கறாங்க, நல்ல வேளை, என் சம்சாரம் திட்டுனதை அவங்க கேட்கலை :)



---------------------------

4. மக்களின் கண்ணீர் ,மத்திய அரசின் ஆட்சியை வெளியேற்றும்-ஜெ # மாநில  அரசை அது ஏதும் செய்யாதுங்களா?



-----------




5. இரு புறமும் தர்மசங்கடங்கள் எனும் கரைகள் நெருக்கும்போதும் வாழ்க்கை நதி அதன் போக்கில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது



------------------


6. நமக்கு ஏற்படும் தோல்வியை விட நம்மை அதிகம் பாதிப்பது அதை வேடிக்கை பார்ப்பார்களே என்ற எண்ணமே


-----------------------


7. நெருங்கிய நண்பர்களின் கொடூர முகங்கள் வெளிப்படுகையில் நமக்கு ஏற்படும் ஆயாசம் ஆறுதலுக்கு அடங்காதவை



------------------------------------


8. ஆதலினால் காதல் செய்வீர் , ஆகாவிட்டால் வீட்டில் பார்த்த பெண்ணை கல்யாணம் செய்வீர் 


-----------------------------

9. கேரளா ஃபிகரை லவ் பண்ணுனேன், அவங்க மேரேஜ்க்கு தாம்பூலப்பைல  2 தேங்காய் வெச்சுக்குடுத்தாங்க, மத்தவங்களுக்கு  எல்லாம் 1 தான் :)



-----------------------------------

10. ஒரு ஃபிகர் என்னை பளார்னு அடிச்சது, அப்போ பஸ்ல ஒரு பாட்டு - நான் கொடுத்ததை திருப்பிக்கொடுத்தா முத்தமா கொடு அதை மொத்தமா கொடு :)



----------------------------------








11. மேரேஜ்க்குப்பிறகு நான் கோதுமை ஸ்டாக் வெச்சுக்கறதே இல்லை, ஏன்னா வீட்டோட (WHEAT) மாப்ளை இருக்கார்னு பேர் வந்துடக்கூடாதே?



---------------------------------


12. என்னை போலி என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.'
- ம.நடராசன் # உங்களுக்கு யார் தகவல் சொன்னது? போலீஸேதான் 


-----------------------------

13. டெங்கு காய்ச்சல் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் - ஜெ #  மேடம், உங்க ஆட்சி வந்த பின் எதுக்குமே நாங்க கவலைப்படறதில்லை, அவ்ளவ் விரக்தி


--------------------


14. அக்காவை விட தங்கை அட்டு ஃபிகரா இருப்பது  தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை - காஜல் அகர்வால் - நிஷா அகர்வால் # சினிமா ஜி கே


-----------------------

15. நித்தி - பெட்ரோல் விலை அடிக்கடி ஏறும் என்று தெரிந்துதான் குதிரை மாதிரி இருக்கும் ஃபிகரை நான் செட் பண்ணிக்கிட்டேன்




----------------------------------



16. சுவாமி! நித்தி ஜிஞ்சிதா கூடவே இருக்கறதுல உங்களுக்கு என்ன கஷ்டம்?



 ஜெயேந்திரர் - எனக்கும் ஜிஞ்சிதான்னா வல்லிய இஷ்டம் ஹி ஹி



----------------------------------


17. பெட்ரோல் விலை ஏற்றத்தை முன்னிட்டு பைக்கில் லிஃப்ட் கேட்கும் கேர்:ள் ஃபிரண்ட்சை கழட்டி விட்டுட்டா நீயும் மிடில் கிளாஸ் தமிழனே!



-------------------------------


18. மினிஸ்டரை ஏன் ட்ரோல்னு திட்டுனே?


 பெ”ட்ரோல் ” விலையை இப்படி தாறுமாறா ஏத்துனா பின்னே கொஞ்சவா செய்வாங்க?



---------------------------------------


19. நீங்க ஏன் நித்தியை எதிர்க்கலை?


டிராபிக் ராம்சாமி - அவர் ரஞ்சிதாவை மெதுவாதான் ஓட்டிட்டு போனாரு ஹி ஹி


-----------------------------------------


20. இனிமே வீட்டுக்கு ஆட்டோ வரும்னு எவனும் மிரட்ட மாட்டான் # பெட்ரோல் ரேட்


----------------------------------------



நோ.... நோ.....அப்படியெல்லாம் பார்க்கக்கூடாது மிஸ்டர் ஒபாமா....நீங்க ஒரு நாட்டோட ஜனாதிபதி......சாதாரண சாமியார்கள் போல நடந்துக்கிறீங்க.......

(நீங்க எல்லாம் நல்லா வருவீங்க........நல்லா வருவீங்க...)

21.  காயங்களால் நமக்கு ஏற்படும் வலியை விட நமது சறுக்கல்களில் சந்தோஷப்படுபவர்களின் கை தட்டல் ஒலியே நம்மை அதிகம் பாதிக்கிறது


------------------------------------


22. நமக்குப்பிடிச்சவங்களை இழந்துட்டா எவ்ளவ் கஷ்டம்னு அவங்களை இழந்த பின் தான் உணர முடியுது.மனிதனின் பெரிய பலவீனமே அதுதான்



-----------------------------------


23. எவ்ளவ் புத்திசாலித்தனமா திட்டம் போட்டாலும் பல சமயங்கள்ல விதியை யாராலும் மாற்ற முடியாமல் போய் விடுகிறது


-------------------------------


24.  தள்ளாடிக்கொண்டே தடுமாறிக்கொண்டிருப்பவனை விட தானாக ஒரு முறைதடுக்கி விழுந்து எழுந்தவனே வெற்றி பெறுவான்


----------------------------------

25 காதல் தோல்வி உட்பட எல்லா தோல்விகளுக்கும் பிராந்தி சாந்தி தரும்னு நினைப்பது மனப்பிராந்தி


------------------------------

26 பெண்கள் அழக்கூடாது என்று சொன்னவன் பெண் அழும்போது சகிக்க முடியாத சூழலில் தான் சொல்லி இருப்பான்


---------------------------

27. பெண் வயது வந்ததும் முன்னேற தொடங்கிவிடுகிறாள்!, ஆண் வயசுக்கு வந்திருந்தாலும், வர்லைன்னாலும் அவளை ஃபாலோ பண்ணத்தொடங்கி விடுகிறான் ஹி ஹி 


-----------------------------

28 ரேஷன் கடைல கொடுத்த பொங்கல் ஸ்பெஷல் வேட்டி கட்டி இருப்பதால் என்னை கேவலமாக பார்க்கும் ஃபிகரே! என்னை குறைச்சு எடை போடவேண்டாம் # 84 கே ஜி


-------------------------

29. ஆண்கள் அதிகம் பேசுவதில்லை, ஏன்னா அவன் ஒரு ஓட்டை வாய், பேசுனா பல உண்மைகளை உளறிடும் அபாயம் இருக்கு ஹி ஹி


----------------------------

30 மேடம், உங்க புருஷனை வாடா போடான்னு டா போட்டு கூப்பிடறீங்களாமே,ஏன்?


 போடான்னு மட்டும் தான் சொன்னேன், வாடா சொல்லலை புருஷன் பேரை நோடெல்

----------------------------

31.  பஸ்சில் ஆண்கள் உரசினால் பெண்கள் சேஃப்டி பின்னால் தாக்குகிறார்கள், ஆனால் பெண் மேலே பட்டால் ஆண் அப்படி செய்வதில்லை # நீதி - ஆண் அமைதி :)


---------------------------------

32 தி.மு.க., மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் வீட்டில் ரெய்டு # அசையும் சொத்து ஏதாவது பெட்ரூம்ல இருந்து ஓடி வந்ததா


--------------------------

33. என் மனதில் இருக்கும் உன் மீதான உரிமைகளை  அத்து மீறல் என நீ நினைத்துக்கொண்டது என் துர் அதிர்ஷ்டமே!

------------------------------


34 ஏய் ,MR, எப்போ பாரு, என் பின்னாலயே சுத்திட்டு இருக்கியே, உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு?


நோ மிஸ், உங்களைத்தான் பிடிச்சிருக்கு # MAD


-------------------------

35 ஃபைட் ஃபார் ரைட் = உன் ஆளு கண்டக்டரா?
கீப் லெஃப்ட் = உன் ஆள் கீப்பா? # மொக்கைஸ்



--------------------------------


36. முன்பெல்லாம் மழை வரும்போதெல்லாம் உன் சமீபம் நினைவு வரும், இப்போது உன் கண்ணீர்!



---------------------------------

37. .நம் விழிகள் சந்திக்கையில் வெப்பம் கிளர்ந்து எழுந்தது, அதை ஆற்றி விட  சாமரம் வீசி குளுமைப்படுத்துகின்றன் உன் இமை மயில் தோகை தொகுப்பு


-----------------------------

38. ஆதீன மீட்புக்குழுவில் உள்ளவர்களில் பலர், மறைமுகமாக என்னை தேடி வந்து ஆசீர்வாதம் பெற்று சென்றனர். -நித்தி # பகல்லயா? நைட்லயா?


-------------------------------


39.  ஜெ., ஆட்சி குறித்து ராமதாஸ் வர்ணனை #   நல்ல வேளை , ஆட்சியை பற்றி மட்டும் வர்ணிச்சாரு


------------------------------

40. . எல்லாம் மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்-கேப்டன் # ஆண்டு கொண்டு இருப்பவரை ஆண்டவன் பார்த்துக்குவார்னா எதிர்க்கட்சிக்காரருக்கு என்னா வேலை?





பயப்படும் படியா ஒன்னும் இல்ல.......