Wednesday, October 19, 2011

தில்லு துர ஜோக்ஸ்



1.டியர், நான் பக்கத்துலதானே இருக்கேன், எதுக்கு ஃபிளையிங்க் கிஸ் தர்றீங்க? 

நீ ஏர்ஹோஸ்டல் ஆச்சே?அதானே பிடிக்கும்?

------------------------

2.இதயம் என்பது துக்கங்களையும், சோகங்களையும் வைத்திருக்கும் குப்பைக்கூடை அல்ல, அது ரோஜாக்களை, மகிழ்ச்சிகளை வைத்திருக்கும் தங்கப்பெட்டி

-----------------------------

3. குளிப்பதற்கு டெமோ காட்டுகிறார் பூனம் பாண்டே! # அடச்சே, வெறும் டெமோ தானா?

-------------------------

4. டியர், நாம டெய்லி கோயிலுக்குபோனா நம்ம காதல் தெய்வீகக்காதல் ஆகிடுமா? 

தேவை இல்லை, டிவைன் லவ்வர்ஸ்னு ஒரு கில்மா படம்,அதுக்குப்போனாலே போதும்

----------------------------
5. வாழ்க்கையில் கசப்பான உண்மைகளை விட இனிப்பான பொய்களே அவசியமாய் இருக்கின்றன மனதிற்கு

--------------------------

6. சாதாரண மனிதன் புத்தகத்துடன் இருப்பான், சாதனை மனிதன் புத்தகத்தில் இருப்பான்

--------------------------



7. வேலாயுதம் படத்துக்கு அனைவரும் பார்க்கலாம் என யு சான்றிதழ் வழங்கியது சென்சார் # அனைவரும் பார்க்கலாமா?அப்போ அதுல விஜய் இல்லையா?

-------------------------------

8. நீர் நிலைகளின் மேற்பரப்பில் தோன்றும் வாத்துகள் அமைதியாய் இருப்பதாய் தோன்றினாலும் உள்ளே அது கால்களால் நீந்திக்கொண்டே இருக்கும்

----------------------------

9. எல்லோராலும் விரும்பப்படும் நபர் என யாரும் இல்லை.. அனைவராலும் வெறுக்கப்படும் நபர் எனவும் யாரும் இல்லை

-------------------------------

10.இன்றைய லட்சியம் நாளைய மாற்றம், இன்றைய அலட்சியம் நாளைய ஏமாற்றம்

-------------------------

three musketeers by Marcin Nawrocki

11. வார்த்தைப்பரிமாறல்கள்தான் காதல் என்றால் இதழ்கள் போதுமே, இதயம் எதற்கு?

------------------------

12. சிநேகங்களின் சோகங்கள் சுலபமாக இறக்கி வைக்கப்படுகின்றன, கேட்கும் நமக்குத்தான் மனதில் பாரம் ஏறுகிறது, கண்ணில் ஈரம் ஊறுகிறது

-------------------------

13. பெண்ணை கோபப்படுத்தாமல் பேசுவது எப்படி? என்ற கலையை இன்னும் எந்த ஆணும் கற்றுக்கொள்ளவில்லை

----------------------------

14. கண்ணீரும், புன்னகையும் ஒரே நேர்கோட்டில் சந்திப்பது அபூர்வம்,வாழ்வின் மறக்க முடியாத அந்த சந்திப்பு உன்னுடனான ஒரு சந்திப்பில் நிகழும் 

--------------------------------

15. பெற்றோரை எதிர்த்து செய்த காதல் திருமணங்கள் 10% என்றால், பெற்றோர் மனம் நோகக்கூடாது என்பதற்காக பிரிந்த காதல் 50 % 

----------------------------


Piddling

16. வாய்ப்புகள் நம்மைத்தேடி வரும்போது அதன் முக்கியத்துவம் நாம் உணர்வதில்லை, நம் கை விட்டு நழுவிய பின் தான் உணர்கிறோம்

----------------------------

17. க்ரைம்கதை எழுதுபவர்களை யாரும் கொலை செய்த அனுபவம் உண்டா? என கேட்பதில்லை, ஆனால் கவிதை எழுதுபவர்களை காதல் அனுபவம் உண்டா? என கேட்கிறார்கள்

-------------------------
18. காதலிப்பது யாராக இருந்தாலும் கஷ்டப்படுவது நான் தான் - மொபைல் ஃபோன் # SMS

--------------------------------

19. உண்மை, தூய்மை, சுய நலமின்மை இந்த 3ம் அமையப்பெற்ற ஒருவனை இந்த உலகமே எதிர்த்தாலும் எதுவும் செய்ய முடியாது # காலண்டரில் கண்டது

-------------------------


20.பொறுப்பை ஏற்றுக்கொள்வதுதான் ஒருவரின் இதயத்தை ஆக்ரமிக்க உதவும் சிறந்த ஆயுதம்

-------------------------------


Art by Erik Johansson


Tuesday, October 18, 2011

AJAAN - பாலிவுட் அர்ஜூன் டைப் ஆக்‌ஷன் படம் - சினிமா விமர்சனம்

http://musicjalsha.info/wp-content/uploads/Azaan-2011.jpg 

படத்தோட போஸ்டர்ல இதுவரை காணாத பிரம்மாண்டம்னு போட்டிருந்தாங்க.. இது பொதுவா எல்லா ஆக்‌ஷன் படங்களுக்கும் யூஸ் பண்ற ஒரு ஸ்லாகன் தான்.. ஆனா சப் டைட்டிலா ஒரு நாடு ஒரு தனி மனிதன் ஒரே ஒரு வழி அப்டினு போட்டிருந்தது நல்லாருந்தது.. அதனாலயும் ஹீரோயின் நல்ல ஃபிகரா என் கண்ணுக்கு தட்டுப்பட்டதாலும் போனேன்..


ஹீரோ புது முகம்.. Sachiin J Joshi, Candice Boucher, Aarya Babbar, Amber Rose Revah, Dalip Tahil, Sachin Khedekar, Alyy Khan, Ravi Kissen, Sajid Hassan இவங்க எல்லாம் இதுல நடிச்சிருக்காங்க..


படத்தோட கதை என்ன? ஹீரோ  ரா எனும் உளவுத்துறைல பணி புரியும் சீக்ரெட் ஏஜென்ட்.. அவரோட தம்பி தீவிரவாதி... பயலாஜிக்கல் வார் எனப்படும் ஒரு வைரஸ் கிருமியை பரப்பி இந்தியாவை அழிக்க தீவிரவாதிங்க முயற்சி பண்றாங்க.. அந்த வைரஸ் கிருமியை அழிக்க ஒரே வழி.. விஞ்ஞானிகள் அதற்கான எதிர்ப்பு சக்தியை ஒரு சிறுமியிடம் புகுத்தி ஆராய்ந்து வெற்றி கண்டிருக்காங்க. அந்த பொண்ணோட பிளட் சாம்ப்பிள் வேணும்.. அந்த சிறுமி ஹீரோயின் கூட இருக்கு.. ( அப்போ தானே ஹீரோ ஹீரோயின் லவ் வரும்?)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi19sWOkG1Go9gfcXIIrBvMAa-QcIs0jj06OpDQHoWdhULMUERePZHdy5q-9VWrvhw24J5VMG5ULGBHlGvNB3PanteGpW4JxyqbB_iJz4o1_bT5ztkvhVvv1WkovNmoioTXTuiBmbTm2NZA/s1600/azaan.jpg

ஹீரோவுக்கு 3 வேலை 1. தீவிரவாதிகளை கண்டு பிடிச்சு ஒழிக்கனும் ( ஆக்‌ஷன் பார்ட் ஓவர்) 2. ஹீரோயினை கண்டு பிடிச்சு லவ்வனும் ( கிளாமர் )  3. தன் தம்பி தீவிரவாதியா? இல்லையா?ன்னு கண்டு பிடிக்கனும்

( ரொம்ப ஈஸி. தாடி வெச்சிருந்தா தீவிர வாதி.. இல்லைன்னா மித வாதி )



ஹீரோ பார்க்க நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம் சன் டி வி ல வந்த ரிஷி மாதிரி இருக்கார்.. அண்ணன் எப்பவும் ஒரே மாதிரி முக பாவம் தான்.. வில்லனை பார்க்கும்போதும் சரி.. ஹீரோயினைப்பார்க்கும்போதும் சரி.. ( 2 மே ஆபத்தான ஆள்ங்க என்பதால் இருக்கலாம்.. )


ஹீரோயின் எபவ் ஆவரேஜ்.. ரசிக்கற அளவு இருக்கு.. ஆனா தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்காது.. ( அப்போ நீ  தெலுங்கு ரசிகனா?)

http://static.ibnlive.in.com/ibnlive/pix/slideshow/10-2011/stargaze-stargaze-playboy/candice_630.jpg
படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. டெரரிஸ்ட்டோட தம்பி ரெரரிஸ்ட்டாத்தான் இருக்கனும்?



உன் ஃபேஸ்ல ஒரு ரீ ஆக்‌ஷனையும் நீ காட்டலை.. ஆஸ்கார் தரலாம்..


2. நன்றியைப்பற்றி எனக்கு சொல்லித்தரத்தேவை இல்லை, ஏன்னா நான் வளர்ந்த மண் அப்படி.. இந்தியா..



3. ஒரு டெரரிஸ்ட்ட்க்கு காதலியா இருக்க நான் விரும்பலை... நான் லவ் பண்றவர் நல்லவரா இருக்கனும்..


4. கண்டிப்பா என் பிரதர் செத்திருக்க மாட்டான்..


எப்படி சொல்றீங்க?

....

அவன் செத்திருந்தா  என் மனசுக்கு முதல்ல தெரிஞ்சிருக்கும்..


5. ஐ ஆம் மாலன்..


தோத்துட்டு என்ன இண்ட்ரடக்‌ஷன் வேண்டிக்கிடக்கு?

http://img1.gomolo.in/images/gallery/L/GL110830006.jpg

6. ஒரு உயிரைக்காப்பாத்தறது ஒரு நாட்டையே காப்பாத்தறதுக்கு சமம்.


7. உன் வாழ்க்கையை என் வாழ்க்கை கூட இணைச்சுக்கிட்டா நீ எங்கேயோ போயிடுவே.. ( ஹீரோ ஹீரோயின் கிட்ட பேச வேண்டிய டயலாக் இது , ஆனா வில்லன் ஹீரோ கிட்டே பேசறார்.. )


8. புரொஃபசர்.. நான் மனுஷங்களை கொல்றதில்லை.. அது ஓல்டு ஃபேஷன்..


9. யுத்தம் மாறிட்டே இருக்கு, யுத்தம் செய்யற விதமும் மாறிட்டு இருக்கு..பயலாஜிக்கல் வெப்பன்.. இந்த வைரஸ் பரப்பிட்டா இந்தியாவுல இருக்கற எல்லாருமே  தற்கொலை செஞ்சுக்குவாங்க அவங்களாவே,.. ( அடேங்கப்பா, எல்லாருமே கல்யாணம் பண்ணிக்குவாங்களா? )


10. ஒரு பெண்ணை பெட்ரூம்ல திருப்திப்படுத்த  ஆக்ரோஷம் தான் தேவை, மென்மையான ஆண் அல்ல.. ( பட சப்ஜெக்ட்க்கு சம்பந்தமே இல்லாத ஆனா ரசிக்க வைத்த வசனம் )


11. நான் உன்னைப்பார்த்ததுமே நான் தேடிட்டு இருந்த ஆள் நீ தான்னு புரிஞ்சுக்கிட்டேன்.. ( ஃபிகர்ங்க எப்படித்தான் இளிச்சவாயன்களை ஈசியா கண்டுபிடிக்கறாங்களோ? )
http://www.mastione.com/wp-content/gallery/shaan-and-ravi-kissan-at-chitkabre/shaan-and-ravi-kissan-at-chitkabre-5-mastione.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. காசைப் பற்றி கவலைப்படாத தயாரிப்பாளர் கிடைத்ததும்  சகட்டுமேனிக்கு திரைக்கதையை பல வெளிநாடுகளில் பயணிக்கும்படி அமைத்தது ( பாரீஸ்,சூடான், பாங்காங்க் )


2. ஹீரோ, ஹீரோயின் செலக் ஷன்... ஒளிப்பதிவு


3. தம்பி தீவிரவாதி என்று தெரிந்ததும் அண்ணனே சுட்டுக்கொள்ளும் அரதப்பழசான சீனைக்கூட ரசிக்கும்படி எடுத்தது..


4. ஹீரோ - ஹீரோயின் கண்ணிய காதல்..

http://enjoypaki.com/blog/wp-content/uploads/2011/06/azaan-movie-hot.jpg

இயக்குநர்க்கு சில கேள்விகள் , சந்தேகங்கள்,ஆலோசனைகள் ( எப்படியும் அண்ணனுக்கு தமிழ் தெரியாது.. புகுந்து விளையாடலம்.. )



1. ஹீரோ இடுப்பில் கயிறு கட்டி மொட்டை மாடில இருந்து குதிக்கறார் , ஓக்கே.. எதுக்கு ஓடி வந்து ஜம்ப் பண்ணி குதிக்கனும்? அவர் என்ன லாங்க் ஜம்ப்பா பண்றார்?


2.  ஹீரோ கயிற்றில் கட்டப்பட்டு ஒரு ரூமில் ஜம்ப் பண்றார்.. அப்போ வில்லன் ஆளூங்க 5 பேர் ரிவால்வரோட ரெடியா இருக்காங்க.. ஆனா அவங்க சுடலை... ஹீரோவை வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க. ஹீரோ ஜன்னல் வழியா ஜம்ப் பண்ணி ரூமில் லேண்ட் ஆகி, அப்புறமா சூட் பண்ணி அந்த 5 பேரையும் கொன்னுடறார்.. என்ன கொடுமை சார் இது?


3. ஹீரோவும் , ஹீரோயினும் துரத்தப்படறாங்க வில்லனின் ஆட்களால்.. அவங்களை திசை திருப்ப 2 பேரும் பிரிஞ்சு வெவ்வேற திசைல ஓடறாங்க.. ஆனா வில்லன்க 2 பேரும் அதே போல் பிரிஞ்சு 2 பேரையும் துரத்தாம ஹீரோவை மட்டும் துறத்ஹறாங்களே.. அவ்ளவ் மஞ்ச மாக்கான்களா?


4.  க்ளைமாக்ஸ்ல எல்லா படங்களீலும் இப்படி ஒரு சீன் வந்துடுது.. அதாவது வில்லனோட ஆளுங்க எல்லாம் கோட்டைல, மாளிகைல உயரமான இடங்கள்ல காவலுக்கு நிப்பாங்க.. அப்போ ஹீரோ சூட் பண்ணுவாரு.. அவங்க எல்லாம் நெல்லிக்காய் மூட்டை மாதிரி சரிஞ்சு கீழே தொப்ப்னு விழறாங்க.. ஏன் அங்கேயே தரைல விழ மாட்டாங்களா?


5.  முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற சித்தரிப்பு எதற்கு? தீவிரவாதக்கூட்டம் என 50 பேரை காட்டும்போது 5 இந்து, 5 கிறிஸ்டியன் காட்டக்கூடாதா?
http://www.a2zpictures.com/wp-content/uploads/2011/06/azaan-hindi-movie-2011-hot-wallpapers.jpg

இந்தப்படம் ஸ்ரீ கிருஷ்ணாவுல பார்த்தேன்

சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் பிரியர்கள் பார்க்கலாம்.. நாட் சூப்பர், நாட் பேடு


காதல் கடலைகள் போட்டிடும் நேரம்.......இதழோரம்......(ஜோக்ஸ்)


1.வேட்பாளர் ஆயுள் கைதியா ஜெயில்ல இருக்கார்.எப்படி ஜெயிச்சார்.? 

வெளில வந்து யாருக்கும் எந்த கெடுதலும் செய்ய மாட்டார்னு ஒரு நம்பிக்கைதான்

------------------------------

2. டீச்சர், என் பையனுக்கு மெம்மரி பவர் கம்மி, என்ன மேல் படிப்பு படிக்க வைக்கலாம்?..

எதுவும் வேணாம், அவன் நிதி அமைச்சர் ஆனாலும் ஆகிடுவான்

--------------------------------

3. தலைவரே! மணல் கொள்ளைல உங்க பேரும் அடிபடுதே? 

கொள்ளை அடிச்சது உண்மை தான், போயும் போயும் மணலையா? நெவர்

------------------------------

4.  ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் பாடி கெமிஸ்ட்ரி பிரமாதமா இருக்கே?எப்டி?

சும்மாவா? 2 பேருக்கும் ஜாதகப்பொருத்தம் 10 பொருந்தி இருக்கே?

------------------------------

5. தலைவரே! செயின் திருடர்கள் ஆந்திராவுக்கு போய்ட்டாங்கன்னீங்களே? 
 மறுபடி நகைத்திருட்டு நடந்திருக்கே?

ஆந்திரா போரடிச்சிருக்கும்,6 மாசம் இங்கே

--------------------------------




6. ஸாரி மிஸ்டர், எனக்கு காதல், கத்திரிக்காய் எல்லாம் பிடிக்காது. 

வாவ்! எனக்கும்தான் மிஸ்.நம்ம 2 பேருக்கும் எவ்ளவ் ஒத்துமை பார்த்தீங்களா?

-----------------------------------

7.  எங்களுக்குத்தான் ஓட்டு போடனும்னு மக்கள்ட்ட வீடு வீடா போய் சத்தியம் வாங்குனீங்களா? 

நோ நோ பொய். வாட் எ சத்திய சோதனை?

--------------------------------------

8. சிம்பு ரசிகரை லவ் பண்ணுனது தப்பா போச்சா ஏண்டி? 

லவ் பண்ணும்போது நான் தான் ”ஒஸ்தி”ன்னார், மேரேஜ்க்குப்பிறகு லைஃபே நாஸ்திங்கறார்

-----------------------------------

9.கோடம்பாக்கத்தின் கொலம்பஸ் பட்டம் விஜய்க்கு எப்படி கிடைச்சுது?

வேல் ஒரு ஆயுதம்னு கண்டு பிடிச்சாரே? # வேலாயுதம் ராக்ஸ்

-------------------------------

10. போதிதர்மன் யார்னே தெரியாதுன்னு தலைவர் சொன்னாராமே?

ம்க்கும், அவருக்கு மகாபாரதத்துல வர்ற தருமனையே தெரியாது

--------------------------------

 



11. சிம்புவும், பிரபுதேவாவும் இணைந்து ஒரு படம் பண்றாங்களாமே?

ஆமா, டைட்டில் -  சட்டி சுட்டதடா, கை விட்டதடா..

---------------------------------

12. உள்ளாட்சித்தேர்தல்ல யாராவது பணம் கொடுத்தா உடனே போலீஸ்க்கு தகவல் கொடுங்க..

ஏன்? அவங்களுக்கு அங்கே வந்து தர மாட்டாங்களா?

-------------------------

13. திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வித்தியாசமில்லை - விஜயகாந்த் # சிம்புவுக்கும், பிரபு தேவாவுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை - 9 தாரா

----------------------------------

14. ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்.. இதற்குப்பிறகும் எங்களை ஜெயிலில் அடைத்தால் நாங்கள் ஆளுங்கட்சிக்குத்தாவுவதை தவிர வேறு வழி இல்லை என எச்சரிக்கிறோம்

--------------------------------

15. இந்த ஃபிகருதான் என்னோட நாளைய இயக்குநர்...

புரியலையே?

என் வருங்கால மனைவிடா.

--------------------------------


nice shift photography


16. தலைவரே! நீங்க எத்தனையோ பெண்களை ஏமாத்தி இருக்கீங்க.. இப்போ உங்க மேல போட்டிருக்கற நம்பிக்கைதுரோக வழக்கு எந்த பெண் தொடுத்த வழக்கு?

------------------------------

17. தான் உண்டு தன் வேலை உண்டுன்னு அவர் இருப்பாரு..

சும்மா கதை விடாதே.. அவருக்குத்தான் வேலையே கிடையாதே?

------------------------------

18. தலைவர் ஏன் கடுப்பா இருக்காரு?

நிரந்தர வருங்கால முதல்வரே!ன்னு கட் அவுட் வெச்சாங்களாம்

-------------------------------

19. என் காதலர்ட்ட வாயைக்குடுத்து மாட்டிக்கிட்டேன்..

அடடா.. என்னாச்சு? வேறென்ன? லிப் கிஸ் தான்

----------------------------

20. உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவில் மந்தநிலை!-  நிற்பவை எல்லாம் மந்தியாக இருந்தால்!!!!!!!!

-----------------------------

Monday, October 17, 2011

கலக்கலாய், கலாய்த்தலாய் சில ஜோக்ஸ்

Umang Sabarwal is organizing India's first Slut Walk in New Delhi, inspired by Toronto's event. Um

1.பல நாடகங்கள் நடத்தினார் கருணாநிதி- ஜெயலலிதா குற்றச்சாட்டு#பல சினிமாக்களில் நடித்தார் ஜெ -கலைஞர் குற்றச்சாட்டு@இமேஜினேஷன்

--------------------------------

2. ராம்தேவை காங்கிரஸ்காரர்கள் மட்டும் சந்திக்கலாம்,பிஜேபி தலைவர்கள் சந்திக்கக்கூடாதா?#சுஷ்மா ஸ்வராஜ் #பயங்கர ஜொள்ளு பார்ட்டிங்க சந்திக்கலாம்

------------------------

3. ஜெயலலிதா அறிவிப்பு நம்பிக்கையூட்டுகிறது - வைகோ// #வைகோவிற்கு தனிமை வாட்டுகிறது,அண்ணன் நைஸா பிட்டை போட்டுப்பார்க்கறாரு போல

--------------------------------

4. கனிமொழியின் ஜாமின் மனுவை நிராகரித்தது டில்லி ஐகோர்ட்: சாட்சிகளை கலைப்பார்'#ஏன்?ஆளுங்களை ஏவி விட்டு கலைக்க மாட்டாங்களா?சினிமால காட்றமாதிரி

--------------------------

the hottest lickers07 The Hottest Lickers

5.ஆயுதங்களுடன் வருமாறு சீடர்களுக்கு ராம்தேவ் அழைப்பு!# விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்,வேலாயுதம் பட பேனர்களுடன் கிளம்பினர்#இமேஜினேஷன்

-----------------------
6. லஞ்ச ஊழலை தடுக்க 1970ம் ஆண்டே தி.மு.க., சட்டம் இயற்றியது: கருணாநிதி#தலைவரே.. சிம் கார்டு வாங்குனா போதுமா? ஆக்டிவேட் பண்ணாம விட்டா எப்படி?

-------------------------

7. ராமதாஸ்- சமச்சீர் கல்வி தொடர்பாக, பா.ம.க.,வின் நிலைப்பாடு, எப்போதுமே தெளிவாகத் தான் உள்ளது#நீங்க எப்பவும் தெளிவுதான்,நாங்க தான்  மப்புல

-----------------------

8. பெண் தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை #தப்பிச்சோம்னு சந்தோஷப்படறதை விட்டுட்டு தனக்குத்தானே சங்கு ஊதிக்கிட்டீங்களே தம்பி

---------------------

9. உடலாலும்,உள்ளத்தாலும் ஒரே ஒரு பெண்ணுடன் மட்டும் இணைந்த ஆண்கள்  இருப்பது உலகில் எங்கு தேடினாலும் அரிதிலும் அரிதே

------------------------

10. தினமும் 12 மணி நேரம் குடும்பத்துக்காக உழைக்கும் ஆண்கள் குடும்பத்தோடு குதூகலமாக செலவிடும் நேரம் 30 நிமிடம் கூட இல்லை

---------------------------

Finally a book for all MEN to understand WOMEN

http://thunder2012.files.wordpress.com/2010/02/indian-girls-peperonity-com042.jpg?w=60411.எனக்காக எது வேணும்னாலும் செய்வாயா? என்றாள் காதலி.ஆம்,உன் காதலை தியாகம் செய்வதை தவிர என்றேன் #முன் ஜாக்கிரதை முனுசாமி

----------------------------

12. த்ரிஷா நீச்சல் உடையில் நடிக்க ரூ.25 லட்சம் எக்ஸ்ட்ரா சம்பளம்.#ஸ்விம் டிரஸ்ல சும்மா வந்தாலே போதுமே? எதுக்கு கஷ்டப்பட்டு நடிக்கனும்?டவுட்டு

------------------------

13. சமச்சீர் கல்வியை பற்றி சட்ட மன்றத்தில் காடுவெட்டி குரு பேச்சு#அடுத்து செமச்சீர் கலவி பற்றி நித்யானந்தா பேட்டி ,ஆசிரமம் அதிரடி அறிவிப்பு

-------------------------
14.சி.பி.ஐ. விசாரணையை தயாநிதி மாறனே சந்திப்பார்: கருணாநிதி பேட்டி # சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை நொந்துவிட்டேன் தலைவா

-------------------------

15.ராம்தேவை சந்திக்கிறார் சுஷ்மா #அண்ணன் சுடிதாரிலும்,மேடம் ஜீன்ஸ் டிசர்ட்டிலும் கலக்குவார்கள் என மீடியாக்கள் வெயிட்டிங்க்

-------------------------

http://www.trhits.com/wp-content/uploads/2011/06/Smoking_Hot_Indian_Girls_3_thumb.jpg

16.என் பிறந்தநாளை கொண்டாடவேண்டாம்.சமூக நலப்பணிகளை செய்யுங்கள்- விஜய் # அப்படி செய்யும்போதே நாளைய முதல்வர்வாழ்கன்னு ஒரு கோஷம் போட்டுக்கனுமா?

----------------------

17. சோனியாவோ,பிரதமரோ ஹாஸ்பிடல் சென்று உயிருக்கு போராடும் மக்களை பார்க்கவில்லை-சுஷ்மா ஸ்வராஜ்#உங்க டான்ஸை நேர்ல பார்க்கலைனும் வருத்தமோ?

----------------------------

18. நீச்சல்உடையில் நடிக்க மறுத்த த்ரிஷா ரூ 25 லட்சம் அதிகம் கொடுப்பதாக சொன்னதும் ஓக்கே சொன்னார்#அம்மா ஆட்சியில் சாதனை நெம்பர் ஒன்

----------------------
19. இலவச அரிசி வழங்கும் திட்டம்: விரும்பும் அரிசியைப் பெறலாம்- ஜெ#எனக்கு பொன்னி அரிசிதான் விருப்பம்,கிடைக்குமா?மேடம்

---------------------------

20.இலங்கை மீதான ஜெவின் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு #போயஸ் தோட்டத்தில் ஜெ திடீர் மயக்கம்,கலைஞர் நேரில் சந்தித்து ஆறுதல்#நடந்தாலும் நடக்கும்


http://www.indianchessfed.org/News/2009/July2009/Indian%20Girls%20team%20%28from%20left%29%20%20Padmini%20Rout,Soumya%20Swaminathan,Meenu%20Rajendran,Kiran%20Manisha%20Mohanty,S%5B1%5D.Harini%20and%20P.Uthra.JPG

நாளைய இயக்குநர் - காமெடி ,த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

இன்னைக்கு ( 16.10.2011) கீர்த்தி செம காமெடி பண்ணுனாங்க.. நானும் கே பாக்யராஜ் சாரும் ஒரே கலர் டிரஸ்..2 பேருமே ப்ளாக்னாங்க.. நல்லவேளை சேம் பிஞ்ச்னு சொல்லி கிள்ளிக்கலை.. ஜஸ்ட் மிஸ்டு..

1. ராஜ்குமார் - எதுவும் எனதில்லை ( காமெடி)

ஓப்பனிங்க் ஷாட்லயே இது பக்கா காமெடி ஸ்கிரிப்ட்னு புரிஞ்சிடுச்சு... ஒரு சாக்லெட் விளம்பரத்தை நக்கல் அடிச்சு முத சீன்.. பஸ் ஸ்டாப்ல ஒரு 70 மார்க் ஃபிகர் நிக்குது.. பாப்பா கிட்டே ஹீரோ சாக்லெட் தர்றார்..

ஏய்.. மிஸ்டர்.. என்னை முன்னே பின்னே பார்த்திருக்கியா? (எங்கே கொஞ்சம் திரும்புங்க பார்த்துக்கறேன்- சி.பி  )

இல்லை...

அப்புறம் எதுக்கு எனக்கு சாக்லெட் தர்றே?

எங்காயா சொன்னாங்க.. நல்ல காரியம் பண்றப்போ ஸ்வீட் சாப்பிடனும்னு..

அப்படி என்ன நல்ல காரியம் பண்ணப்போறே?

உன்னை பிக்கப் பண்ணி உங்க வீட்ல டிராப் பண்ணலாம்னு இருக்கேன்..

தேவை இல்லை.. வேற ஆள் எனக்கு இருக்கான்.. நீ உன் வேலையை பாரு..

ஹீரோவுக்கு நோஸ்கட் குடுத்துட்டு அந்த ஃபிகர் லவ்வரோட கிளம்பிடுது..

ஹீரோ அடுத்து வேற ஒரு ஃபிகர் கரெக்ட் பண்றார்.. அதுக்கு தன் ரூம் மேட்ஸ்கிட்டே ஒருத்தன் கிட்டே இருந்து பைக் ஓசி வாங்கறார்..(2 மணி நேரத்துல திருப்பி தந்துடறேன்கற கண்டிஷன்ல.. )இன்னொருத்தன் கிட்டே டி சர்ட் ஓசி வாங்கறார்..ஃபிகர் கூட ரவுண்ட் அடிக்கறார்.. ஒரே இளநில 2 ஸ்ட்ரா போட்டு குடிக்கறார்.. திடீர்னு 3 பேர் அவரை வழி மறிக்கறாங்க.. ரூம் மேட்ஸ்தான்..

பைக் குடுத்தவன் பைக்கை பிடுங்கிக்கறான்,  டி சர்ட் குடுத்தவன் டி சர்ட்டை பிடுங்கிக்கறான் (அட பறக்கா வெட்டி).. 3 வது ஆள்..? அதுதான் சஸ்பென்ஸ் காமெடி..

“ஏண்டா.. என் ஃபிகரையே தள்ளிட்டு வந்துட்டியா.?ன்னு சொல்லி அவன் ஃபிகரை ஓட்டிட்டு சார்.. கூட்டிட்டு போயிடறான்.. விஷுவலா பார்க்க செம காமெடியாத்தான் இருந்தது..

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. கதைல வர்ற 2 ஃபிகர்ங்களுமே அழகு ஃபிகர்தான்.. நடிப்பும் ஓக்கே..

2. ஆடியன்ஸை யோசிக்கவே விடாம திரைக்கதை செம ஸ்பீடு.. 

2. பின்னணி இசை கதையின் மூடை அப்படியே காமெடியாக்குது..


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. என்னதான் காமெடின்னாலும் ஃபிகரையே தள்ளிட்டு போறது ஓவர்.. காதலையே கேலி பண்ற மாதிரி இருக்கு.. 

2. ஹீரோ ஃபிகரோட பைக்ல போற ரூட் அவங்க 3 பேருக்கும் எப்படி தெரியும்? கரெக்ட்டா எதிர்ல வர்றாங்களே எப்படி?

3. பைக்கை திருப்பி வாங்கறது ஓக்கே, யாராவது டி சர்ட்டைக்கூட அப்படி நடு ரோட்ல பிடுங்குவாங்களா?

4. ஓப்பனிங்க் ஷாட்ல பஸ் ஸ்டாப் ஃபிகர் ஹீரோவைப்பார்த்து கோபமா பேச வேண்டிய டயலாக்கை காமெடியால லைட்டா சிரிக்குது.. அதை அவாய்டு பண்ணி இருந்திருக்கலாம்


படம் முடிஞ்சதும் படத்தோட இயக்குநர் கே பாக்யராஜ் கிட்டே

என் முயற்சி எப்படி சார்?

என் வேலையையே மாத்திடுவீங்க போல.. நாங்க ஜட்ஜா? மாமாவா?

சுந்தர் சி - படம் ஓக்கே.. ஒரு குறும்படத்துக்குக்கூட சாங்க் கம்போஸ் பண்ணி நல்லா பண்ணி இருக்கீங்க ஹார்டு ஒர்க்.. 


2.  பாக்யராஜ் - ஆந்தை (த்ரில்லர் ஆக்‌ஷன்)

சட்டமும், சமூகமும் இல்லை என்றால் மனிதன் மிருகத்தை விட கேவலமாக நடந்து கொள்வான் அப்டினு ஒரு சப் டைட்டிலோட படம் ஓப்பன் ஆகுது..

போலீஸ் வேலைக்கு எல்லா டெஸ்ட்லயும் பாஸ் ஆகற ஒருத்தன் ரிட்டர்ன் டெஸ்ட்ல ஃபெயில் ஆகிடறான்.. தன் ஃபிரண்ட் கிட்டே புலம்பறான்.. போலீஸ் வேலைல செலக்ட் ஆகனும்னா தனக்கு 4 லட்சம் பணம் வேணும்கறான்.. அவனோட ஃபிரண்ட் இல்லீகல் வேலை செய்பவன்.. அவன் இவனுக்கு அட்வைஸ் பண்றான்.. நேர்மையான வழில போனா பணம் கிடைக்காது.. குறுக்கு வழிலதான் சம்பாதிக்கனும்.. 

ஒரு ஆட்டோவை வழி மறிச்சு ஒரு கொள்ளை அடிக்கறான்.. அந்த பணத்தை அவன் கிட்டே கொடுக்கறான்..

அப்போ 2 பேருக்கும் வாக்குவாதம் வருது.. 

இல்லீகலா சம்பாதிச்சது எனக்கு வேணாம்கறான், இல்ல பரவால்ல எடுத்துக்கோ..சான்ஸ் கிடைக்கறப்ப யூஸ் பண்ணிக்கனும், தான் முன்னேறனும்னா  ஒருத்தனை கவுக்கறதுல தப்பில்லைங்கறான்.

இப்போதான் ஒரு ட்விஸ்ட்.. இது வரை நேர்மைன்னு பேசிட்டு இருந்தவன் இல்லீகலா நடக்க அட்வைஸ் பண்ண ஃபிரண்டையே போட்டுத்தள்ளிடறான்..

இந்தப்படம் ராம்கோபால் வர்மா படம் பொல் எஃப்ஃபக்ட்டா இருக்குன்னு சுந்தர் சி பாராட்னாரு..

ஆனா எனக்கு படத்தோட கான்செப்ட்டும் சரி,, அதை கொண்டு போன விதமும் சரி.. க்ளைமாக்ஸூம் சரி பிடிக்கலை.. 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. தானே வலியனா ஓசில 4 லட்சம் தர்ற ஃபிரண்டை எதுக்கு மெனக்கெட்டு கொலை செய்யனும்? அவன் ஒண்ணும் பணத்தை திருப்பி கேட்கலையே?

2. 4 லட்சத்துக்காக கொள்ளை அடிச்சது ஓக்கே.. தேவை இல்லாம கொலை எதுக்கு?

3. இந்தக்கதை மூலம் சமூகத்துக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்க/?
Pancake Floor Pillows


3. அஸ்வத் - கார்த்திக்  ஒரிஜினாலிட்டி ( காமெடி)

என்ன கான்செப்ட்னா சினிமால கார்த்திக் அப்டிங்கற பேர்ல வர்றவங்க எல்லாம் ஈசியா ஒரு ஃபிகரை பிக்கப் பண்ணிடறாங்க.. அதனால ஹீரோ நாராயனன் தன் பேரை கார்த்திக்னு மாத்திக்கலாமா?ன்னு ஃபிரண்ட்ஸ் கிட்டே ஐடியா கேக்கறான்.. அவங்க வேணாம், உன் ஒரிஜினாலிட்டி போயிடும்கறாங்க

காலேஜ்ல ஜூனியர் ஃபிகரை ஹீரோ ராகிங்க் பண்றார்.. பேரு ,ஊரு எல்லாம் விசாரிக்கறார். அதே சமயம் இன்னொரு பையனை கூப்பிட்டு அந்த ஃபிகர் பக்கத்துல நிக்க வெச்சு அவனுக்கு ஐ லவ் யூ சொல்லுன்னு ராக் பண்றார்..

அந்த ஃபிகர் அந்தப்பையனை பார்த்து ஐ லவ் அப்டின்னு சொல்லி ஹீரோ நாராயணைப்பார்த்து யூ அப்டின்னு முடிக்கறா..

உடனே ஹீரோ டூயட் பாடறாரு.. ஃபிகர் பிக்கப் ஆகிடுச்சுன்னு..

அடுத்த ஷாட்ல அவ ஃபோன் பண்ணி நாராயணனை வரச்சொல்றா..

சார்.. உங்க கிட்டே ஒரு மேட்டர் சொல்லனும் எப்படி சொல்றதுன்னுதான் தெரியலை..

ஆஹா.. சொல்லுங்க சொல்லுங்க

அன்னைக்கு ஒரு பையனை ராக் பண்ணி என்னை அவன் கிட்ட ஐ லவ் யூ சொல்ல வெச்சீங்களே அவனை நான் லவ் பண்றேன்.. முதல்ல உங்க கிட்டே தான் இந்த மேட்டரை சொல்லலாம்னு.. 

அடங்கோ..

அடேய்.. உன் பேரு கார்த்திக்கா?

எப்படி சார் கரெக்ட்டா கண்டு பிடிச்சீங்க?

எத்தனை படம் பார்க்கறோம்?

நல்ல காமெடி பேக்கேஜ். காலேஜ்ல நடக்கறதை நேர்ல பார்க்கற மாதிரி இருந்துச்சு...இயக்குநரே ஹீரோவாநடிச்சிருந்தார்..

இதுக்கு ஜட்ஜூங்க கமெண்ட் பண்றப்ப ஹீரோயின் வெவ்வேற கால கட்டத்துல வர்ற 3 சீன்லயும் ஒரே காஸ்ட்யூம் தான் போட்டிருக்காரு.. அதை கவனிக்கலையா?ன்னாங்க.. 

பட் சின்ன சின்ன மைனஸ் தாண்டி இது நல்ல காமெடி.. இதுக்குத்தான் பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வரும்னு நான் நினைச்சேன்.. ஆனா .....


4. கிஷோர் - ஃபோன் கால் (PHONE CALL)

ஒரு வீட்ல 4 ஃபிரண்ட்ஸ்.. ஏதோ பார்ட்டி கொண்டாட்டம்.. மாடிப்படி ஏறி வரும் ஒரு நண்பனுக்கு ஒரு ஃபோன் வருது.. அவனோட பழைய ஃபிரண்ட் பிரவீன்..

மேலே வந்ததும் டேய் பிரவீன் ஃபோன் பண்ணுனான்ன்னு சொன்னதும் எல்லாரும் அதிர்ச்சி ஆகறாங்க// டேய்.. உனக்கு விஷயமே தெரியாதா?அவன் இறந்துட்டான்.. எப்படி ஃபோன் வரும்?


இவன் உடனே ஷாக் ஆகிடறான்..

இப்போ மறுபடி பிரவீன்கிட்டே இருந்து கால்...

அவன் திகில் ஆகி பார்க்கறப்ப ரூம்ப இருந்து இன்னொரு ஃபிரண்ட்  பிரவீன் ஃபோனோட வர்றான்.. சும்மா கலாட்டா பண்ண..
இப்போதான் சஸ்பென்ஸ் உடையுது.. கேமரா அப்படியே  டேபிள்ல இருக்கற நியூஸ் பேப்பர்ட்ட போகுது.. இப்போ நாம பார்த்த எல்லாருமே ஆல்ரெடி இறந்துட்டாங்க என காட்டுது..

யூகிக்க முடியாத திருப்பம்...

ஓப்பனிங்க் ஷாட்ல கதைக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி ஒரு பேப்பர் போடற ஆளை காட்னது எதுக்குன்னு இப்போ புரியுது.. வெல் மேக்கிங்க்..
இதுக்கு கமெண்ட் பண்ணுன ஜட்ஜூங்க ஒரே ஒரு குறை சொன்னாங்க.. நைட் எஃபக்ட படம் பண்ணி இருந்தா இன்னும் டெரரா இருந்திருக்கும்னு..
சின்ன குறைகள் இருந்தாலும் இது ஒரு பாராட்டத்தக்க  படமே..

இந்த வாரம் வந்த 4 படங்கள்ல 3 படம் குட்..

Saturday, October 15, 2011

பிரபு தேவாவுக்கு அல்வா கொடுத்த நயன் தாரா - காமெடி கும்மி கலாட்டா


http://pradeep3100.files.wordpress.com/2010/09/nayantara-3.jpg
1.  எங்கள் ஆட்சியிலே மலர்ந்தது என்பதற்காக ஆணவ ஜெ அரசு திட்டமிட்டு தம்பி பிரபுதேவா - தமக்கை நயன் தாரா காதலை அழிக்க முயற்சி - கலைஞர் @ கற்பனை

-------------------------------

2.  நயன் தாரா பிரபுதேவாவை கழட்டி விட்டாரா? பிரபுதேவா நயன் தாராவை கழட்டி விட்டாரா?  சன் டி வியில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி பட்டி மன்றம்!!

-------------------------------


3  மேடம், எதுக்காக புது லவ்வரை கழட்டி விட்டீங்க? 

இப்போதான் பழைய லவ்வரே ”ஒஸ்தி” னு கண்டு பிடிச்சேன்

-----------------------

4.புதிய தமிழ் படத்தில் சிம்பு , பிரபு தேவா இணைகிறார்கள்,இருவருக்குமே ஜோடி ஒரே ஆள் தான். அது யார்னு மட்டும் கேட்காதீங்க, சஸ்பென்ஸ்

----------------------------

5. நயன்தாராவை காதலித்த பின் ரிலீஸ் ஆன எங்கேயும் காதல், வெடி டப்பா ஆனதால் அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுத்த பின் தான் காதல் - பிரபு.தேவா@கற்பனை

---------------------------------


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKTDlqmgLvTK2JIEsbVsa7h8cHcdgv5-Wlg0K8cnLd8qByRr-O3sK7Qk7U19uPb7sTjGJYEaFTMuF7B5QyKuflfJlH2pczdvFDWCbgQjv2qTJHJ-yjOV6UeTgyZLifii3sOdq10LifFt0/
6.  டியர், 2 மணி நேரமா வெயிட் பண்றேன், ஏன் வீட்டுக்குள்ள என்னை விடலை..?


யோவ், க்யூ பாரு.. வரிசைப்பிரகாரம்தான் விட முடியும்..

-------------------------------


7. மீண்டும் ரம்லத் வீட்டுக்கு போலாமா? ஹன்சிகா மோத்வானிக்கு  ஒரு பிட்டு போட்டுப்பார்க்கலாமா? - பிரபுதேவா அவசர ஆலோசனை @ இமேஜினேஷன்

--------------------------


8. சீதையா நடிக்கறப்பவே நினைச்சேன், வன வாசம் வரும்னு.- நயன் தாரா 

-------------------------


9. நடிகைகளுக்கு ஒரு அபாய அறிவுப்பு - பிரபுதேவா கள்ளக்காதல் தோல்வி சோகத்தில் இருப்பதால் அருகில் யாரும்செல்லவேண்டாம் #  கட்டிப்பிடிச்சுடுவார்

---------------------------


10. சிம்பு உட்பட 5 முன்னணி ஹீரோக்கள் நடிக்கும் புதிய படம்,இயக்கம் மணிரத்னம், கதை மகாபாரத உல்டா , பாஞ்சாலியாக நயன் தாரா  @ இமேஜினேஷன்

---------------------------------------

Nayantara


11. புதியகாதல் கூட்டணிக்காக 24 மணி நேரமும் என் வீட்டு வாசல் கதவுகள் திறந்தே இருக்கும் - நயன் தாரா அறிவிப்பு # முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை

------------------------------


12. இந்த வருஷம் தான் எனக்கு உண்மையான தீபாவளி - சிம்பு மகிழ்ச்சி, டி ஆர் நெகிழ்ச்சி , நயன் தாரா மட்டும் அயற்சி

----------------------------

13.வெடி ராசி இல்லாத டைட்டில் போல விஷால்க்கு மார்க்கெட் அவுட்டு , பிரபு தேவாவுக்கு காதல் டவுட்டு, மாறனுக்கு ரிவீட்டு

--------------------------



14. இன்னும் ஒரு வருடத்துக்குள் தமிழகத்தில் மின் வெட்டுப்பிரச்சனையும்,நயன் தாரா யாருக்கு என்ற பிரச்சனையும் தீர்த்து வைக்கப்படும் - ஜெ #@ இமேஜினேஷன்

-------------------------------

15.  காதலில் ஏமாற்றம் அடைந்த நடிகைகள்க்கு இங்கு ஆறுதல் சொல்லப்படும் - நித்யானந்தா ஆசிரமம் வித் வீடியோ கான்ஃபிரன்ஸ் மீட்டிங்க் & சீட்டிங்க்

------------------------------

http://tontenk.files.wordpress.com/2011/01/nayanthara-hot-photos252822529.jpg

ஈரோடு என்கேகேபி ராஜா -SPB சரண் என்ன வித்தியாசம்..? (ஜோக்ஸ்)

1.வேலாயுதம் 350 தியேட்டர்களில் ரிலீஸ் .# ஆடியன்ஸை பற்றி கவலை இல்லை, பாதிலயே அவங்க எஸ் ஆகிடுவாங்க, எனக்கு ஆபரேட்டர்ஸ் நினைச்சுத்தான் கவலை

---------------------------------

2. தலைவர் ஏன் டல்லா இருக்காரு? ஜலதோஷமா?

இல்ல, மினரல் வாட்டர் ஊழல் இன்னும் வெளில வர்ல. நில தோஷம் , நில மோசடி வழக்கு

------------------------

3. DR,என் கணவருக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருக்கு.

அவரோட ரத்தத்துல ஹூமோக்ளோபின் அணுக்களுக்குப்பதிலா ”ஹோமோ” க்ளோபின் அணுக்கள் இருக்கு

--------------------------

4. பொண்ணுங்களுக்குப் ”பூ”ன்னா ரொம்ப பிடிக்கும்,  ”சாரி”ன்னாலும் (சேலை) பிடிக்கும்,ஆனா பூசாரின்னா பிடிக்காது!!!

--------------------

5. மேடம், யூ டியூப் நிறுவனம் மீது கேஸ் போட்டிருக்கீங்களாமே? ஏன்?

  என் கில்மா டிவிடியை ஒளிபரப்பி அவங்க மட்டும் செமயா சம்பாதிச்சாங்க,?

----------------------



6. 10 வருஷம் முன்பு ரிலீஸ் ஆன படத்துக்கு இவ்ளவ் ரேட் சொல்றீங்க?

உனக்கு மேட்டரே தெரியாதா? அதுல சோனா ஒரு குத்தாட்டம்ஆடி இருக்காங்க!

----------------------------

7. ஈரோடு என்கேகேபி ராஜா -SPB சரண் என்ன வித்தியாசம்..?

புறம்போக்கு நிலத்தை மட்டும் தான் ராஜா அபகரிப்பாரு!!!!!!!

-----------------------------

8. எல்லா உயிர்களிடமும் அன்பாக இருங்கள், மனிதர்களிடம் மட்டும் விழிப்பாக இருங்கள்

--------------------------

9. உலகின் மிக வேகமான தகவல் தொடர்பு சாதனங்கள் 1. ஈ மெயில் 2.  எஸ் எம் எஸ் 3 . பெண்கள்

----------------------

10. அத்தான்! காட்டன் புடவைல காஷ்மீர் மேப் எதுக்கு?

நீ தானே பார்டர் வெச்ச புடவை கேட்டே? இந்தியாவோட பார்டர்தானே காஷ்மீர்?

-------------

11. என் கண் முன்னால் நீ உன் விழி வழியே பனித்துளிகளை உதிர்த்தபோதுதான் உயிர் பிரியும் வலியை உயிருடன் இருக்கும்போதே அறிந்தேன்

------------------

12. பாவி! இவதான் உன் சின்ன வீடா?

சனியனே! அது ஃபோட்டோ ஃபிரேம் இல்ல, கண்ணாடி!

--------------

13. எல்லோர் வீட்டிலும் கோலம் போட்டு பிள்ளையார் வைத்து பின் பூ வைப்பார்கள், ஆனால் அவள் வீட்டில் மட்டும் தான் கோலம் போடறதுக்கே ஒரு பூவை


-----------------

14. திருப்பூர் முத்தூட் பைனான்ஸ் ல் 3500சவரன் நகைகள் கொள்ளை # கலைஞர் - யாரய்யா அது? நம்ம கிட்டே தகவல் சொல்லாம திருப்பூர் போனது?


-------------

15. ஈரோடு டூ கோவை 100 கிமீ, கோவை டூ ஈரோடு 100 கிமீ, ஆனா மண்டே டூ சண்டே 7 நாட்கள்,சண்டே டூ மண்டே ஒரு நாள் தான் அது ஏன்? # மாப்ள மொக்கச்சாமி

Friday, October 14, 2011

ஊர்வசி டிவைன் லவ்வர் டிவைன் லவ்வர்ஸ் பார்ட் 2 - டோலிவுட் கில்மா - சினிமா விமர்சனம்

http://imovies4you.net/wp-content/uploads/2010/03/divine-lovers-1997-movie-b-grade.jpg 

ஏற்கனவே வந்து ஹிட் ஆன படத்தின் 2 வது பாகம் எடுக்கறது நமக்கு புதுசில்ல, பேசிக் இன்ஸ்டிங்க்ட், கல்யாண ராமன், தூம்  அப்டினு பல மொழிகள்ல பார்த்துட்டுதான் இருக்கோம்.. ஆனா 2 வது பாகம்னு விளம்பரம் பண்ணிட்டு முதல் பாக கதையையே அப்படியே அட்சரம் பிசகாமல், சீன் பை சீன்  ஆர்ட்டிஸ்ட்களை  மட்டும் மாற்றி எடுத்துட்டு பாகம் 2ன்னு போடறதை இப்போதான் பார்க்கறோம்..

படத்தோட கதை என்ன? முன் ஜென்மத்துல ஹீரோ ஒரு மாடல்.. வில்லன் ஒரு சிற்பி.. ஹீரோயின் ஒரு அழகி கம் ஏழை..  தான் வடிக்கப்போகும் சிற்பத்துக்காக அழகியை அவங்கம்மா கிட்ட இருந்து விலை பேசி வாங்கிட்டு வர்றார் வில்லன்.. ( ஆனா ஹீரோயின் அம்மாவை காட்டவே இல்லை -ரொம்ப முக்கியம்.. )


Divine Lovers 2 Tamil Movie Stills
ஹீரோவையும், ஹீரோயினையும் பக்கத்து பக்கத்துல நிக்க வெச்சு வில்லன் சிற்பம் வடிக்கறாரு.. நம்மாளுங்க ஹீரோயின் 500 கி மீ தள்ளி இருந்தாலே மெயில்ல வீடியோ சேட் பண்ணி கணக்கு பண்ற ஆளுங்க, 5 இஞ்ச் தூரத்துல ஃபிகர் இருந்தா சும்மா இருப்பானா? கிஸ் அடிச்சுடறான்.. அது வில்லனுக்கு பொறுக்கலை.. சுத்தியலால  மடார்னு ஹீரோ தலைல அடி.. அவ எனக்கு மட்டும் தான் சொந்தம்..எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்க 2 பேரும் சேரவே முடியாதுன்னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம பஞ்ச் டயலாக் பேசராரு.. 

ஆனா ஹீரோ ஹீரோயின் 2 பேரும் கேட்கலை.. பழையபடி வாசம் பார்த்துட்டு நேசம் செய்யறாங்க.. வில்லன் ஹீரோவை போட்டுத்தள்ளிடறான்.. 

இப்போ இந்த ஜென்ம கதை... சிற்பியா போன ஜென்மத்துல வந்தவன்  இப்போ ஒரு தொழில் அதிபர்  .. அவரோட சம்சாரம்தான் போன ஜென்மத்துல மாடலிங்க் கேர்ள் ஆக வந்தவ,...ஹீரோ ஒரு ஆர்க்கி டெக்கர்... ஹீரோவுக்கு மட்டும் முன் ஜென்ம நினைவுகள் வந்துடுது.. வில்லனும், ஹீரோயினும் கணவன் , மனைவியா இருந்தும் அவங்களுக்கும்  நோ யூஸ் , நமக்கும் நோ யூஸ்.. 2 பேருக்கும் சீனே இல்லை.. 

ஆனா ஹீரோவுக்கும்  ஹீரோயினுக்கும் லவ் இருக்கு, சீன் இருக்கு.. ஆனா முதல் பாகம் அளவு இல்லை..

ஆனா இந்த ஜென்மத்துல ஹீரோ ஹீரோயினை அந்த குகைக்கு கூட்டிட்டு வந்து முன் ஜென்ம கதையை நினைவு படுத்தி கில்மாக்கு ட்ரை பண்றப்ப ( வெறும் ட்ரை மட்டும்தானா?) வில்லன் அங்கே எண்ட்டர்.. ஃபைட்.. ஹீரோ வில்லனை போட்டுத்தள்ளிடறான்.. சுபம்.. 

ஆர்ட்டிஸ்ட் செலக்‌ஷன் மகா மட்டம்.. வில்லன், ஹீரோ 2 பேரும் தேறாத கேஸ்.. ஹீரோயின்ஸ் 2 பேரும் ஓக்கே..  ஆனா முதல் பாகத்து ஹீரோயின்ஸ் விட ஃபேஸ் கட் நல்லா இருந்தாலும் மற்ற விஷயங்கள் எடுபடலை.. 

http://cdn1.supergoodmovies.com/FilesOne/divine-lovers-2-one-more-sequel-ffc84f0a.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  டியர்.. என் புது சேலை எப்படி இருக்கு?

ரொம்ப கேவலமா இருக்கு.. நீ மட்டும் இல்ல.. எந்தப்பொண்ணு இந்த மாதிரி உடம்பு ஃபுல்லா துணியை சுத்திட்டு வந்தாலும் எனக்கு சுத்தமா பிடிக்காது..ஐ டோண்ட் லைக் இட்.. 



2. பல வருஷங்களுக்குப்பிறகு உங்க உதடுகள் சிரிக்குதுன்னு நினைக்கிறேன்..

பல வருஷங்களுக்குப்பிறகு என் கண்கள் ஒரு சிரிச்ச முகத்தைப்பார்க்கறதால இருக்கும்.. 

3. உங்க ஒயிஃபை பார்த்தேன் சார்.. சோ க்யூட்.. 

தம்பி, நான் ஒண்ணு சொல்லவா?அடுத்தவன் பொண்டாட்டி எப்பவும் அழகாத்தான் நம்ம கண்ணுக்கு தெரிவா.. ( அதானே.. )

4. அழகான உங்க முகத்துல கண்ணீர்த்துளிகள் அமிலமாத்தெரியுது.... ப்ளீஸ் அவாய்டு இட்.. 

Divine Lovers 2 Tamil Movie Stills

5. உனக்கு என் லைஃப்ல இடம் குடுத்து இருக்கேன்கறதுக்காக நீ என் தலை மேல உக்காந்து ஆடனும்னு நினைக்காத.. எப்பவும் நீ என்  காலுக்கு கீழேதான் இருக்கனும்.. 

6. நான் செருப்பைக்கூட தொட விடாம என்னை தாங்கறீங்களே.. உங்க பார்வைல நான் ராஜ குமாரியா?

ஆமா.. நீ என்னைக்கும் என் ராஜகுமாரிதான்././ ( அடேய்... டேய்.. )

7. கை விரல்களுக்கிடையே ஏன் இடைவெளி இருக்கு தெரியுமா?
. ஏன்?

இன்னொரு கையை சேர்க்கத்தான்  ( இதெல்லாம் கலித்தொகை  எட்டாம் கிளாஸ்லயே நாங்க படிச்சுட்டோம் பாஸ்.. )

8.  இங்கே பாருடி.. நீ பார்ட்டிக்கு வர்றியா?ன்னு கேட்க ஃபோன் பண்ணலை.. நீயும் பார்ட்டிக்கு வான்னு தான் ஆர்டர் பண்றேன்..


divine-lovers-2-movie-stills-1

இயக்குநருக்கு சில கேள்விகள், சில சந்தேகங்கள், பல ஆலோசனைகள்

1.அண்ணே.. முதல் பாகத்தை காப்பி அடிக்கறதுன்னு முடிவான பின்னாடி அதை ஒழுங்கா செய்ய வேணாமா? டெக்னிக்கலா பல முன்னேற்றங்கள் அடைந்த பின்னும் முதல் பாகத்தை விட எல்லா விஷயங்களிலும் மோசமா இருக்கே படம் எப்படி?



2. என்னதான் பணக்கார தொழில் அதிபரா இருந்தாலும் சொந்த வீட்ல மனைவி இருக்கும்போதே வேற ஒரு ஃபிகரை கூட்டிட்டு வந்து ஜல்சா பண்ணுவாரா? அதுவும் பெட்ரூம் கதவை தாழ் போடாம? அவ்ளவ் கேனயனா அந்த தொழில் அதிபர் கம் வில்லன்?

3. ஹீரோயின் ஒரு சீன்ல ஸ்விம்மிங்க் பூல்ல 17 நிமிஷம் குளிக்கறாங்க.. அது தப்பில்லை... எவ்வளவ் நேரம் வேணாலும் குளிக்கட்டும்.. அவங்க நல்லா முழுகி எந்திரிச்சும் குங்குமம் நெற்றில , நெற்றி வகிட்டுல அட்சரம் கலையாம இருக்கே அது எப்படி?அவ்ளவ் திக்கான குங்குமமா?

4. கவர்னர் மாளிகைல பார்ட்டி நடக்குது.. அங்கே போக சிட்டி மெயின் ப்ளேஸ்க்கு போனா போதும்.. எதுக்கு வில்லன் அந்த குகை இருக்கற இருக்குற ஒதுக்குப்புறமான வனாந்திரப்பிரதேசத்துக்கு வரனும்?

5. எந்த ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் என் கண்வரை கேட்டுத்தான் செய்வேன்னு பேசற ஹீரோயின் , அடுத்த ஷாட்லயே ஹீரோ கூட ஊர் சுத்தறா.. ஒரு ஃபேமசான தொழில் அதிபர் மனைவி அப்டி பப்ளிக்கா சுத்துறதை யாரும் பார்த்து போட்டுத்தர்லையா? அவளுக்கு எப்படி அந்த தைரியம் வருது?

6. வில்லனா வர்ற தொழில் அதிபர்.. ஒரு சீன்ல தன் மனைவியை கில்மா கோலத்துல பார்க்க ஆசைப்படறார்.. அது நியாயமான ஆசைதானே? என்னமோ கொலைக்குத்தம் செய்யச்சொன்ன மாதிரி ஹீரோயின் ஏன் பதறனும்? ( அநியாயமா ஒரு சீன் மிஸ் ஆச்சேன்னு ஒரு ஆதங்கம் தான் , வேறேன்ன?)

divine-lovers-2-movie-stills-2


சி.பி கமெண்ட் - முதல் பாகம் பார்க்காதவங்க மட்டும் இதை பார்க்கலாம்.. பார்த்தவங்க அதே படத்தை ரிப்பீட்டாய்  பார்க்கவும்.. இது அந்த அளவு ஒர்த் இல்லை.. 

இந்த சீன் கம்மியா உள்ள சுமாரான கில்மா படத்தை ஆனூர் தியேட்டர்ல பார்த்தேன் ( தகவல் ரொம்ப முக்கியம்.. )

படம் 12 ரீல் தான்.. காலைல 11.20 க்கு போட்டு மதியம் 12.40க்கு முடிச்சுட்டாங்க,... இதுல இண்ட்டர்வெல் 10 நிமிஷம் வேற,.. முதல் பாகம் 1997ல வந்துச்சு.. அப்போ அபிராமில பார்த்தேன்

டிஸ்கி - முதல் பட ஸ்டில் முதல் பாகத்திலிருந்து எடுத்தது.. 2 வது மற்றும் மற்ற ஸ்டில்கள் 2 ம் பாகம்.. அப்போ 3 வது ஸ்டில் 3ஆம் பாகமா?ன்னு கேட்காதீங்க.. அதே போல் ஊர்வசி என்பது இந்தப்படத்து நாயகியின் கேரக்டர்பெயர்.. அதற்கும், தமிழ் நடிகை ஊர்வசிக்கும் சம்பந்தம் இல்லை

Share 
divine-lovers-2-movie-stills-5

கடலை போடும் விடலை ஜோக்ஸ்

1.என் வீட்டின் முகவரி தெரியாதவளுக்கு என் இரவின் முகவரி மட்டும் எப்படியோ தெரிந்திருக்கிறது, கனவில் வந்து விடுகிறாளே?

-----------------------------------

2. திமுக வும் அதிமுகவும் தமிழகத்தை கொள்ளையடித்த கட்சிகள்- கேப்டன்#  அப்போ தேமுதிக வெள்ளையடிக்கிற கட்சிங்க்ளா?

---------------------------------

3. பல குழப்பங்களுக்கும், பல பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு அழகான புன்னகை சரியான தீர்வாக இருக்கிறது

------------------------------

4. பதவில இருக்கற எல்லோருமே ஊழல் பண்ணுனா அது மக்கள் ஆட்சி, ஒரே ஒருவர் மட்டும் ஊழல் செஞ்சா அது சர்வாதிகார ஆட்சி # கலைஞர் VS ஜெ

--------------------------------

5. அவரு கேப்டன் ரசிகராம்..

அதுக்காக லவ் பண்ற ஃபிகர்ட்ட “ ஒரே ஒரு தடவை வாய்ப்பு குடுங்க, எடு புடி புருஷனா வாழ்ந்து காட்டறேன்” அப்டிங்கறதா?

-------------------------------



6. அந்த பேஷண்ட்க்கு பொறாமை ஜாஸ்தி.

ஏன் டாக்டர்?

நாங்க மட்டும் சிஸ்டர்னு கூப்பிடறோம்? நீங்க மட்டும் நர்ஸுன்னு கூப்பிடறீங்களே?ங்கறானே?

---------------------

7. வாழ்க்கைல அடிக்கடி வெறுப்பு வந்தா அவன் குடும்பஸ்தன், பொது வாழ்க்கைல வெறுப்பே வர்லைன்னா அவன் அரசியல்வாதி

----------------------

8. கடலும் கடல் சார்ந்த இடமும்னு தலைவர் கவிதை எழுத ஆரம்பிச்சுட்டாரே?

ஆமா, கடலூர் ஜெயில்ல அவரை தள்ளிட்டாங்க, வேற என்ன பண்ணுவார்? பாவம்

-----------------------------

9. உங்க பையனுக்கு விவசாயத்துல ஆர்வம்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

24 மணி நேரமும் ஃபிகர்ங்க கூட கடலை போட்டுட்டு இருக்கானே?

-----------------------------------

10. உன் மனைவி ஒரு குடும்பத்து குத்து விளக்காமே?

ஆமா, ஏதாவது பிரச்சனைன்னா பேசி விளக்க மாட்டா, கும்மாங்குத்து குத்தி விளக்குவா..

--------------------------------------



11. வயிறு எரியுதுன்னு மனைவி சொன்னா  ஸ்டொமக் ஸ்பெஷலிஸ்ட் கிட்டே கூட்டிட்டு போகாம சைக்காலஜி ஸ்பெஷலிஸ்ட் கிட்டே கூட்டிட்டு போறீங்களே?



அவளுக்கு பக்கத்து வீட்டுக்காரி புது வீடு கட்டிட்டான்னு பொறாமைல வயிறு எரியுதாம்..

--------------------------------

12. அழகிப்போட்டில நான் தோத்துட்டேன்...ஏன்? நான் அழகி  ஆக தகுதி இல்லையா?

அழகிப்போட்டில கலந்துக்கவே தகுதி இல்லை..

--------------------------------

13. ஜட்ஜ் - மக்கள் நடமாட்டம் உள்ள பகுதில கொள்ளை அடிச்சிருக்கே.. ஏன்/

கைதி - அப்போதாங்க டக்னு மக்களோட மக்களா கலந்துட முடியும்?

----------------------------------

14. கவர்ச்சி நடிகையிடம் டைரக்டர் - என்ட்ரி எப்படி இருக்கணும் தெரியுமா... எல்லாமே ரெக்கார்ட் டான்ஸ் ஆகணும்... ஆடனும்

--------------------------------

15. டாக்டர், 4 ஆம் வார்டு பேஷண்ட்டோட போக்கே சரி இல்லை..

நர்ஸ்.. கண்டுக்காதீங்க, வயிற்றுபோக்குன்னு அட்மிட் ஆன பேஷண்ட். அவரு..

---------------------------------

16. தலைவருக்கு தொலை நோக்குப்பார்வை ஜாஸ்தின்னு எப்படி சொல்றே?

12 கி மீ தூரத்துல நடந்து வர்ற மகளிர் அணித்தலைவி என்ன கலர் டிரஸ் போட்டிருக்காங்கன்னு சரியா சொல்றாரே?

------------------------------------

17. போயஸ்கார்டன் போய் அவமானப்படாமல் திரும்பியவர்கள் இல்லை: சுப.வீரபாண்டியன் #  ஏன்? சசிகலா இல்லையா?

-----------------------

18. LIFE IS NO WHERE   என்பது நெகடிவ் சிந்தனை, LIFE IS NOW HERE  என்பது பாஸிடிவ் சிந்தனை # SMS

----------------------------

19.  மிஸ்! உங்க பேர் என்ன?ன்னு சொல்ற வரை உங்களை அனாமிகான்னு கூப்பிடறேன்.

ஆ.. அஸ்கு புஸ்கு, இப்படி சொன்னா என் பேரு செல்வின்னு சொல்லிடுவேனா?

---------------------------------

20. சாஸ்திரம், சம்பிரதாயம் எதுலயும் எனக்கு நம்பிக்கை இல்லை.

. அதுக்காக? லவ் மட்டும் தான் செய்வேன் நோ மேரேஜ், நோ தாலின்னா எப்படி?

-------------------------------------

Wednesday, October 12, 2011

சன் டிவி பெண் ஊழியர் மர்ம மரணம் -அவிழ்ந்த மர்ம முடிச்சுகள்

சுமார் எட்டு மாதங்களுக்கு முன்  எங்கள் ஊர் பெண்ணின் மர்ம மரணம் குறித்து எனக்கு தோன்றிய சில கேள்விகளை கேட்டிருந்தேன்.. அவர் சன் டி வி யில் பணி புரிந்தவர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகி விட்டது..அது பற்றி படிக்காதவர்கள் இங்கே சென்று படிக்கவும்

சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?



 பதிவு போட்டு 4 நாட்கள் கழித்து அந்த பெண்ணுடன் சென்னையில் பணி புரிந்தவர்கள் வாயிலாகவும், பெண்ணின் பெற்றோர், தோழிகளை விசாரித்த போதும் சில கசப்பான உண்மைகள் தெரிய வந்தன.. அப்போதே அது பற்றி விளக்கப்பதிவு போட நினைத்திருந்தேன்..ஆனால் பெண்ணின் பெற்றோர் கொஞ்ச நாளுக்கு அது பற்றி எதுவும் எழுத வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள். காரணம் துக்கம் விசாரிக்க வருபவர்கள் அது பற்றியே பேசி எங்கள் வேதனையை மேலும் அதிகரிப்பார்கள் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் நான் அது பற்றி பதிவு போடுவதை தள்ளி வைத்தேன்..

இப்போது எல்லாம் ஆறிப்போய் இருப்பதால் வெளியிட சரியான தருணம் என தோன்றியது


http://www.dexternights.com/wp-content/uploads/2011/01/Sun-TV.jpg

சன் டி வியில்   நிருபராக வேலை பார்த்த சங்கீதாவுக்கு அவரது அறைத்தோழி ஒருவருடன் ஓர் பால் உறவு ஏற்பட்டது.. தனது லெஸ்பியன் சிநேகம் குறித்து அவர் எந்த வித தயக்கமும் இன்றி தன் பெற்றோர்களிடம் சொல்லி இருக்கிறார்.. எந்த பெற்றோர் தான் தமிழகத்தில் அதை ஒத்துக்கொள்வர்கள்?அவசர அவசரமாக அவருக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார்கள்..

சென்னையை சேர்ந்த மாப்பிள்ளையிடம் பெண்ணின் ஆஃபீஸ் அட்ரஸ் சொல்லி பார்க்க சொல்லி விட்டார்கள்.. பெண்ணிடம் கண்டிப்பாக திருமணம் செய்தே தீர வேண்டும் என கொஞ்சம் அழுகை, நிறைய கண்டிப்புடன் மிரட்டி இருக்கிறார்கள்.. சங்கீதாவுக்கு ஆணுடனான திருமணத்தில் விருப்பம் இல்லை.இருந்தாலும் தனக்குப்பார்த்த மாப்பிள்ளையிடம் அவர் எந்த உண்மையையும் சொல்லாமல் பெற்றோரின் விருப்பம் போல் மாப்பிள்ளையுடன் பேசி இருக்கிறார்.. 

அது வரை சங்கீதாவுக்கு தினமும் வெளியே சென்று  ஃபீல்டு ஒர்க் வேலையாக இருந்த பணி அவரது பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க ஆஃபீஸ் விட்டு வெளியே போக முடியத படி ஆஃபீஸ் ஒர்க்காக மாற்றப்பட்டது.. சங்கீதாவின் தோழி சங்கீதாவின் பெற்றோரால் மிரட்டப்பட்டு வேறு இடம் அனுப்பப்பட்டார்.

சங்கீதாவால் அவரது தோழியை தொடர்பு கொள்ள முடியவில்லை.. திருமணத்தில் இஷ்டம் இல்லை.. எனவே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.. 

தற்கொலை என்றால் என்ன காரணம்? என வெளியே சொல்வது? என்ற நியாயமான ஒரு பெற்றோருக்கே உரிய அச்சத்தில் விபத்தாக மாற்றப்பட்டது.. மற்றபடி சன் டி வி நிர்வாகத்துக்கும், அந்தப்பெண்ணின் மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை

19.02.2011 சனி அன்று தான் சம்பவம் நடந்தது.. ஞாயிறு அன்றே அவரது உடல் சென்னிமலைக்கு கொண்டு வரப்பட்டது.. அடுத்த நாளே அதாவது 21.02.2011 அன்றே அந்த பெண்ணின்  குடும்பத்தார் நடத்தும்  ஜவுளிகடை, ஃபேன்சி ஸ்டோர் எல்லாம் இயங்கியது.. பொதுவாக இது போல் துக்க சம்பவம் நடந்தால் குறைந்த பட்சம் 3 நாட்களாவது லீவ் விடுவார்கள். எனவே எனக்கு சந்தேகம் வந்து விசாரித்தபோது தான் மற்ற தகவல்கள் தெரிய வந்தன.. 

மேலும் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளக்கூடும் அல்லது தனது தோழியுடன் எங்காவது போய் விடுவார் என எதிர்பார்த்தே அவர்கள் இருந்திருகின்றனர்.. 


நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

1. பையனோ, பெண்ணோ வெளியூரில் படிக்க வைப்பதை முடிந்த வரை தவிர்க்கலாம்.. தனிமை பல தவறுகளை செய்யத்தூண்டுகிறது.. 

2. நடைமுறைக்கு சாத்தியம் இல்லாததாக தோன்றினாலும் குழந்தை நலன் கருதி படிக்கவோ, பணி புரியவோ வெளியூர் போகும் பெண்ணுடன் கூடவே அம்மாவும் போனால் நல்லது.. 

3. ஒரே அறையில் இரு ஆண்கள், அல்லது இரு பெண்கள் தங்குவது இந்தக்காலத்தில் தேவை அற்ற சர்ச்சைகள், பிரச்சனைகள் தோற்றுவிக்கும் என்பதை உணர வேண்டும்.. நான் எல்லாரையும் அப்படி சொல்லவில்லை.. 

4. வெளியூரில் வேலை செய்தால் ரூ 30,000 சம்பளம் , உள்ளூரில் வேலை செய்தால் ரூ 10,000 சம்பளம் என்றால் எல்லோரும் வெளியூர் செல்லவே ஆசைப்படுகிறோம்.. பணத்தை விட முக்கியமான விஷயங்கள் பல உள்ளன என்பதை உணர வேண்டும்.. 

5. எல்லாவற்றையும் மீறி இது போல் ஏதாவது நடந்தால் அவர்கள் போக்கில் விட்டு விடுவது நல்லது.. அவர்களே பட்டு தெரிந்து கொள்வார்கள்... இளம் வயதில் இப்போது தற்கொலை எண்ணங்கள் பட் பட் என வந்து விடுகிறது என்பதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கவுன்சிலிங்க் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். 

6. மன உறுதியுடன் பல ஆண்களும், பெண்களும் தனிமையில் , அல்லது கம்பைன் ஸ்டடி, கம்பைன் ஒர்க் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. எல்லோரும் அப்படி அல்ல.. மன உறுதி இல்லாதவர்கள் தடம் புரள வாய்ப்பு உண்டு அவ்வளவுதான்

டிஸ்கி - ஓர் பால் உறவு சரியானதா? தவறானதா? என்ற விவாதத்திற்கான தளம் இது அல்ல... எனவே கமெண்ட் போடுபவர்கள் அந்த கோணத்தில் கருத்து சொல்வதை தவிர்க்கவும்.. ஒரு பெண்ணுக்கு தந்தை என்ற கோணத்தில் சிந்தித்து கமெண்ட் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

காதல் ரசம் சொட்டும் கவிதைகள்

1.உன்னைப்பார்க்கும்போது மட்டும் என் இதயம் 2 மடங்கு வேகத்துடன் வேலை செய்கிறது மூளையை ஓய்வெடுக்கச்சொல்லிவிட்டு

-------------------------------

2. என்கிட்டே எதுவும் வெச்சுக்காதீங்க.

. உளறாதே.. உன் தங்கையை வெச்சுக்கறதே ஏகப்பட்ட செலவு, இதுல நீ வேறயா?

------------------------------

3. அடிக்க அடிக்க பந்து எழுவது போல திமுகவும் எழும்-கலைஞர் # எத்தனை படம் ஃபெயிலியர் ஆனாலும் நான் பஞ்ச் டயலாக் பேசுவதை நிறுத்தமாட்டேன்-விஜய்

---------------------------

4. மிஸ், என்னைப்பார்த்து 143ன்னு சொல்றீங்களே? ஐ லவ் யூன்னு அர்த்தமா? 

இல்லடா லூசு.இது வரை உன்னை மாதிரி 142 பேர் என் கிட்ட143 சொல்லிஇருக்காங்க, நீ 143 வது ஆள்.. 

-----------------------

5. டைரக்டர் - என் படம் 100 நாள் ஓடுன பிறகுதான் நம்ம கல்யாணம் ..

நடிகை - நடந்த மாதிரி தான்

-------------------------------

Wallpapers Fantasias Mix

6. ஆறறிவு உள்ள எந்த ஆளுக்குமே இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியலை.. 

அடேங்கப்பா.. அப்டி என்ன வார்த்தை? ரிங்கா ரிங்கா..

--------------------------------

7. உன் மாமியாரை எப்படியாவது கரை சேர்க்கனும்னு நீ ஆசைப்படறியா? 

ஆச்சரியம் தான்!!  ஹி ஹி இடிந்த கரைல....

------------------------------

8. யுவர் ஆனர், தலைவருக்கு ஸ்போர்ட்ஸ்ல ஆர்வம் அதிகம்..

. இப்படி சொல்லி பல பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடியதை ஏத்துக்க முடியாது

----------------------------

9. கடலில் என்னை தூக்கிப்போட்டாலும் செம கட்டையாக நான் இருப்பதால் நான் மூழ்க மாட்டேன், மிதப்பேன்... - கவர்ச்சி நடிகை கில்மா ஸ்ரீ

-------------------------------------

10.வாழ்வில் சிலரை மறக்க முடியாது, சிலரை பிரிய முடியாது. என்னை மறக்காமல் நீ இரு, உன்னைப்பிரியாமல் நான் இருக்கிறேன்

------------------------------


11. உனக்கான மகிழ்ச்சிகளை பென்சிலால் எழுதுவதை விட உன் வருத்தங்களை ரப்பரால் அழித்து விடவே விருப்பம் எனக்கு

-----------------------------------

12. சந்தோஷம் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன் , அல்லது நான் இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துவேன் - மழலை

-----------------------------

13. அம்மா என்ற சொல்லைக்கேட்க பல முறை அம்மா அம்மா என அரற்றுகிறாள்  -பிரசவ வலியில்  இருக்கும் பெண்

-----------------------------

14. உன் வாழ்க்கையைப்பற்றிய திட்டமிடலை பென்சிலால் செய்து கொள்.. தேவைப்பட்டால் அழித்து மாற்றிக்கொள்ளலாம்.. 

---------------------------

15. நாம் ஏன் சோகமாக இருக்கிறோம் என்பதை விளக்கிக்கொண்டிருப்பதை விட  ஒரு மெல்லிய புன்னகையை அணிந்து கொள்வதன் மூலம் நாம் நிம்மதியாக இருக்க முடிகிறது

----------------------------


16. என் உயிரே.. என SMS அனுப்பினியே?  

ஆ... அதுல கொஞ்சம் மிஸ் ஆகிடுச்சு.. என் உயிரே. போனாலும் உன்னை எல்லாம் லவ் பண்ண மாட்டேன்னு சொல்ல வந்தேன்

-----------------------
17. செல்லும் பாதை சரியாக இருந்தால் மெதுவாக ஓடினாலும் வெற்றி கிடைக்கும்.. 

-----------------------

18. எவ்வளவு காயப்படுத்தினாலும் மனதிற்குப்பிடித்த உறவை வெறுக்கவோ, மறக்கவோ முடிவதில்லை



---------------------------------

19. அவள் சொன்ன பொய்களிலேயே நான் ரசித்த, நேசித்த ஒரு அழகிய பொய் உன்னை என்றும் பிரிய மாட்டேன்

------------------------------

20. கவிதைகளை எல்லோரும் அமைதியாக வாசியுங்கள், ஏன் எனில் அது அமைதியை இழந்த ஏதோ ஒரு இதயத்தின் அழுகையாக இருக்கக்கூடும்

----------------------------

Tuesday, October 11, 2011

ROMEO MUST DIE - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://sfappeal.com/culture/romeo_must_die_dvd.jpg 

ஒரு நைட் கிளப்.. அதுல நடக்கற பார்ட்டிக்கு லோக்கல் சைனீஸ் கேங்க்லீடரோட  2வது பையன் தன் 5 வது  கேர்ள் ஃபிரண்டோட போறாரு..அங்கே தகராறு.. லோக்கல் சரக்கடிக்கற நம்மாளுங்களே தகராறு பண்றப்ப ஃபாரீன் சரக்கடிக்கற அவங்க தகராறு பண்ண மாட்டாங்களா? கேங்க்லீடரோட  2வது பையன் தனது பாடிகார்டால் வார்ன் பண்ணப்பட்டும் அவன் கேட்கலை.. அப்புறம் அவனை துரத்திடறாங்க.. அடுத்தா நாள் காலைல பார்த்தா அவனை யாரோ அடிச்சு தூக்குல  தொங்க விட்டிருக்காங்க.. 

அதைப்பற்றி இன்வெஸ்டிகேட் பண்ண ஒரு பக்கம் போலீஸ்,. இன்னொரு பக்கம் கேங்க்லீடரோட  முதல் பையன் ஜெட் லீ வர்றாங்க.. கொலை செய்யப்பட்ட பையனோட அப்பா ஒரு கேங்க் லீடர் இல்லையா? அவனுக்கு எதிரான இன்னொரு கேங்க் லீடர் தன்னோட மகள், மகனை ஜாக்கிரதையா இருக்க சொல்லி வார்ன் பண்றான்.. அந்த மகள் தான் ஹீரோயின்.. 

இப்போ ஹீரோவும் , ஹீரோயினும் சந்திக்கறாங்க.. கிட்டத்தட்ட லவ் பண்றாங்க.. வில்லன் தன் மக கிட்டே தமிழ் பட வில்லன் மாதிரி சொல்றாரு.. அவன் எதிரியோட பையன்.. வேணாம். விட்டுடுனு.. எந்த பொண்ணு அப்பா பேச்சை கேட்டு இருக்கு?

யார் உண்மையான கொலையாளி? ஜெட்லீயோட லவ் என்னாச்சு?என்பதே மிச்ச சொச்ச திரைக்கதை.. 

ஜெட் லீ ஹீரோ என்பதால் ஆக்சன் காட்சிகளுக்குப்பஞ்சம் இல்லை.. அங்கங்கே காமெடியையும் தூவி விட்டிருக்காங்க.. ஹீரோயின் அழகு ஃபிகர் தான்..
http://content.internetvideoarchive.com/content/photos/334/014038_26.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்

1.  உன் பேர் எம் ல தானே ஸ்டார்ட் ஆகும்?

அட, ஆமா, எப்படி கண்டு பிடிச்சே?

மடையன்னு பார்த்தாலே தெரியுது.. 

2.  ஹாய்.. இந்த டாக்ஸியை எங்கே இருந்து சுட்டீங்க?

அது உனக்கு தேவை இல்லாதது.. உன்னை எங்கே இறக்கி விடனும்னு சொல்லு..

3. உங்க பேரென்ன மிஸ்..?

ஏன்? ஃபோன் பண்ணப்போறிங்களா?

இல்லை,என் கிட்டேதான் ஃபோனே இல்லையே?

அடடா.. இருந்திருந்தா நல்லாருந்திருக்கும்.. 

4.  என்ன பண்ணிட்டு இருக்கே?

பார்த்தா தெரில? சாப்பிட்டுட்டு இருக்கேன்.. 

ஹி ஹி பார்த்தேன், எதுவும் தெரில.. 

5.  நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லை..

சரி.. புரிய வை..

என்னைத்தவிர வேற யாராலும் உன்னை மடக்க முடியலையே?

திமிரா பேசாதே!!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0hyphenhyphenOKrsUAqk23a82qDyPui4q7F8rLsS7YlvX-kfbhjozLylq1T8U0FUQKjK6KLgbcT550oiKzZ5BZQfvQj7IJQytm5W5FFXJmlC7rMHTerr_Axt502tTmcA3hODgvxDJGUF-ImJ4BYJ4e/s1600/aaliyah11.jpg
6. மிஸ்.. பார்க்க டக்கரா இருக்கீங்க.. 


அட!!!! உங்களுக்கு என்னை சுத்தறதை தவிர வேற வேலை இல்ல போல...

7.  நீ குங்க்ஃபூல வேணா கிங்கா இருக்கலாம்.. ஆனா.. இந்த கேம்ல...???

8. நண்டுகள் போலத்தான் மனிதர்களும்.. ஒருத்தன் முன்னேற விடமாட்டாங்க... இப்போ பாரு.. அந்த ஜாடி திறந்தே தான் இருக்கும்.. ஒரு நண்டு ஏறுச்சுன்னா இன்னொரு நண்டு பிடிச்சு இழுத்து விட்ரும்.. சோ நோ கவலை... இந்த மாதிரி தான் அவனுங்களுக்குள்ள அடிச்சுக்கிட்டு இருக்கற வரை நமக்கு தான் லாபம்.. 

9. உன்னை கொல்லப்போறதா டிப்ஸ் கிடைச்சிருக்கு.. 

எப்போ?

இப்போ... டுமீல்..

http://moviesmedia.ign.com/movies/image/article/865/865749/sfcast_1207937648.jpg

சில சந்தேகங்கள், கேள்விகள்

1. மலையூர் மம்பட்டியான் பார்த்து உல்டா பண்ணுன மாதிரி ஒரு சீன் . ஜெட்லியை தலைகீழா கட்டி வெச்சிருக்காங்க.. அப்போ 3 பேரு அவரை சுத்தி நிக்கறாங்க.. அவரு நிராயுத பாணி. ஆனா 3 பேர் கைலயும் ஆயுதம்.. ஆனா அவர் தான் ஃபைட் பண்ணி வின் பண்றாரு.. யப்பா நம்பவே முடியலை.. காட்சிலயாவது கொஞ்சம் சமாளிச்சு இருக்கலாம், நோ நம்பகத்தன்மை.. 

2. போலீஸ் யூனிஃபார்ம் போட்டுட்டு ஜெயிலை விட்டு ஜெட் லீ தப்பிக்கற சீன் நம்பும்படியே இல்லை.. கேட்ல ஐ டி கேட்க மாட்டாங்களா?கைதிக்கும் ,போலீஸ்க்கும் வித்தியாசம் தெரியாதா? வீடியோ கேமரா ஏன் கேட்ல இல்லை?

3. ஜெட்லீ, ஜாக்கிசான், புரூஸ்லீ படங்கள்ல ஃபேமஸே மார்ஷியல் ஆர்ட்சூம் , ரியல் ஃபைட் சீனும் தான்.இந்தப்படத்துல ஏகப்பட்ட கிராஃபிக்ஸ் சீன் துருத்தலா தெரியுது..  

4. ஹீரோ தன் தம்பி கொலை செய்யப்பட்ட விதம் ஆள் யார்னு கண்டு பிடிக்கத்தான் வர்றார். ஆனா மொத்த 12 ரீல் படத்துல 8 ரீல் ஹீரோயின் பின்னால தான் சுத்தறார்.. ஏன்?

5. ஜெட்லியோட தம்பிக்கு பாடி கார்டுகள் எப்பவும் கூடவே இருக்கு, ஆனா ஜெட்லீக்கு மட்டும் எந்த பாடிகார்டும் இல்லை.. அது ஏன்?

http://images.allmoviephoto.com/2000_Romeo_Must_Die/aaliyah_romeo_must_die_001.jpg


 ரசித்த காட்சிகள்

1. ஹீரோயின் முன் உதார் காட்ட ஹீரோ வில்லன் கோஷ்டிகளின் ரக்பி பந்தாட்டத்தில் ஆடுவதும், அதில் முதலில் நையப்புடைக்கப்பட்டு பின் அவர்களை பந்தாடும் சீன் 


2. ஹீரோவுக்கு தன் மேல் காதல் என்பதை உணர்ந்தும் தெரியாதது போல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஹீரோயின் கலாய்க்கும் சீன்

 3. ஹீரோயினின் தம்பி வெறுப்பாய் மேலுக்கு பேசினாலும், தங்கை மீது வைத்திருக்கும் பாசத்தை ஜஸ்ட் லைக் தட் சொல்வது, காட்டுவது நீட்..

4. கதையும், திரைக்கதையும் அனுமதித்தும் தேவை அற்ற வன்முறைக்காட்சிகளையோ, முகம் சுளிக்கும்படியான  காட்சிகளையோ வைக்காமல் இருந்ததற்கு ஒரு சபாஷ்.


ஈரோடு வி எஸ் பி தியேட்டரில் போன வருடமே பார்த்த படம்.. 



http://youknowigotsoul.com/wp-content/uploads/2011/05/Aaliyah_23.jpg















































குண்டக்க மண்டக்க கமெண்ட்டக்க ஜோக்ஸ்

1.சாதாரண பலம் கொண்ட நம்மை அசுர பலம் கொண்டவராக மாற்றுவதால் நாம் நம் எதிரிகளை பாராட்ட வேண்டும்!


-------------------------------------

2. பலராலும் அறியப்படாத திறமைசாலிகளை தூக்கி விட குனிபவனே உலகின் சிறந்த , உயர்ந்த மனிதன்

---------------------------

3. பூஜை அறை இல்லாத மிடில் கிளாஸ் வீடுகளில்  சாமி படம் போட்ட காலண்டர் மாட்டப்பட்ட ஹாலே பூஜை அறையாக பாவிக்கப்படுகிறது

-----------------------------------------

4. உன்னிடம் எனக்குப்பிடிக்காதது என்னை கண்டு கொள்ளாத அலட்சியம், என்னிடம் உனக்குப்பிடிக்காதது உன்னை விட்டு விடாத ,விட்டுத்தராத என் லட்சியம்

---------------------------------

5. ஈகோ பார்ப்பதுதான் தம்பதிகளுக்குள் தோன்றும் பெரிய பிரச்சனை, விட்டுக்கொடுத்தல்தான் அதற்கான ஒரே தீர்வு

-------------------------------------

6.  அவமானங்களை இரைத்து என்னை காட்சிப்பொருள் ஆக்குகிறாய் நீ! அன்பு ஆபரணங்களால் இழைத்து உன்னை என் காதல் சாட்சிப்பொருள் ஆக்குகிறேன் நான்

-------------------------------------

7. உன் அழகில் வீழ்பவர்கள் பட்டியல் நீளவேண்டும் என்ற பேராசை உனக்கு. உன் அன்பால் வாழ்பவர் பட்டியலில் நான் மட்டுமே இருக்கவேண்டும் என்ற ஓராசை எனக்கு

--------------------------------------------

8. உங்க ஃபர்ஸ்ட் நைட் ரொம்ப காம்ப்ளிகேட்டடா இருந்ததாமே? 

ஆமா, அவ ரொம்ப கூச்ச சுபாவி, தொடாம, மேல படாம என்ன வேணா செஞ்சுக்குங்கன்னுட்டா!

--------------------------------------------

9. ரூ.200 கோடி நிலத்தை அபகரிக்க அதிமுக அரசு முயற்சி- கருணாநிதி -- சரி விடுங்க, 5 வருஷம் உங்களுக்கு, 5 வருஷம் அம்மாவுக்கு

----------------------------------

10. ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் தமிழகத்தை அமைதி பூங்காவாக மாற்றியுள்ளேன்-ஜெ # அப்போ வந்த வேலை முடிஞ்சது, ரிசைனிங்க்?

----------------------------------



11. வடிவேலு சேர்ந்ததால் திமுக அழிந்தது-சிங்கமுத்து # சிம்ரனுக்கு திருமணம் ஆனதால்தான் தமனாவுக்கு வாய்ப்பு கிடைத்தது - தீபக்

-----------------------------------

12.  இண்ட்டர்வியூவுக்கு வந்திருக்கேன்..  

அப்டியா உக்காருங்க.

. தாங்க்ஸ்.. கம்ப்பெனில இருக்கற டாப் 10 ஃபிகர்ஸை கூப்பிடுங்க, பார்க்கலாம்!

-----------------------------------------

13. டியர்.. எந்தப்பெண்ணிடமும் இல்லாத ஏதோ ஒன்று உன்னிடம் இருக்கு.. 

ஓஹோ, அப்போ பல பெண்களை பார்த்துட்டு கடைசியாத்தான் இங்கே வந்தியா?

-------------------------------------

14.  தலைவரே! நீங்க ஒரு பொய்யர்தானே? 

ஆமா... அதுக்கென்ன? 

பொய் வழக்கு போடறாங்கன்னு ஏன் குதிக்கறீங்க?

---------------------------------

15. தொண்டனுக்கும் பதவி கொடுத்து அழகு பார்ப்பவர் ஜெ- நடிகர் தியாகு # தொண்டனுக்கு கொடுப்பேன், குண்டருக்கோ, குடிகாரருக்கோ தர மாட்டேன் - ஜெ

----------------------------


16. எந்த நடிகர் வந்தாலும் ஏற்றுக்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது :EVKS # காங்கிரஸ் கட்சி என்ன நயன் தாராவா?

-------------------------------

17. நில மோசடி வழக்கு எதிர்க்கட்சி ஆளுங்க மேல மட்டும் தான் பாயுதாமே? 

ச்சே, ச்சே, அப்படி இல்லை, ஆளுங்கட்சி ஆளுங்க மேல பாயாது, அவ்ளவ் தான்

---------------------------------------

18. டாக்டர், பேஷண்ட்டோட கண்டிஷன் இப்போ எப்படி இருக்கு? 

எங்கே இருக்கு?ன்னு கேளுங்க.. ஏர்கண்டிஷன்ல

------------------------------

19. அவர் ரொம்ப அப்பாவி,


எப்படி சொல்றே?

வெளுத்ததெல்லாம் அமலாபால்னு நம்புபவர்...

-----------------------------------------

20. சென்சஸ் ஆஃபீசர் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்டி சொல்றே? 

வீட்ல எத்தனை லேடீஸ் இருக்காங்க? நான் அளவெடுக்கனும்கறாரே?

------------------------------------