Showing posts with label tamilcinema. Show all posts
Showing posts with label tamilcinema. Show all posts

Wednesday, January 09, 2013

டாப் 10 திரைக்கதை 2012 - தமிழ் சினிமா

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWJqY0BMJ3p76WIoW4QUvaqAyjHdeTJVUx7gjm61UUU5FkRgkQ-bFe4ki7rzMM05Ee__KyK2JvKjs0l8VESPdVdQpVfEGBpzN8E7Yohitig5k6cXcp3vY9VGNjfWiS866qtEMx-i3b0wQ/s1600/Vazhakku-Enn-18-9-Movie-Stills-03.jpg,
2012 ல நிறைய நல்ல படங்கள் வந்திருக்கு. அதுல  மக்கள் ரசிக்கத்தவறிய பல படங்கள் லிஸ்ட்ல இருக்கு. அதாவது படங்கள் குவாலிட்டியா இருந்தும் வசூல் ரீதியா  பிரமாதமா ஓடலை. இப்போ நாம பார்க்கப்போவது  நல்ல திரைக்கதை உள்ள படங்கள் லிஸ்ட் .


 இதுல அஜித்தின் பில்லா 2 , விஜய்யின் துப்பாக்கி மாதிரி மசாலா படங்கள் இடம் பெறாது .மாமூல் மசாலாக்கள் தவிர்த்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் நல்ல சினிமாக்கள் லிஸ்ட் இது .




இதுல புதுமையான விஷயம் கம் ஆச்சரியம் தரும் விஷயம் என்னான்னா  டாப் டென் படங்களில் 3 படங்கள் குறும்பட இயக்குநர்கள் 



காதலில் சொதப்புவது எப்படி? மீராவுடன் கிருஷ்ணா,லீலை,ஒரு கல் ஒரு கண்ணாடி,வழக்கு எண் 18/9, , ராட்டினம், மாலை பொழுதின் மயக்கத்திலே,நான் ஈ,அட்டகத்தி,நான்,சாட்டை,சாருலதா,பீட்சா,நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்,நீர்ப்பறவை, பச்சை என்கிற காத்து ,தடையறத்தாக்க , மதுபானக்கடை என 18 படங்கள் நல்ல வித்தியாசமான திரைக்கதை உள்ள படங்கள்


 பச்சை என்கிற காத்து   வன்முறை ஓவர்  என்பதால் தகுதி இழக்குது , தடையறத்தாக்க  இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம் நீர்ப்பறவை  ஈழப்பிரச்சனை, மீனவப்பிரச்சனை பற்றி அதிகம் சொல்லாம குடிகாரர்களுக்கு எதிரான படமா திசை திரும்பினதாலும் , க்ளைமாக்ஸ் செய்ற்கையா இருந்ததாலும் அவுட். ராட்டினம் இன்னும் நல்லா பண்ணி இருந்திருக்கலாம் ,,  , நான் ஈ நேரடித்தமிழ்ப்பழம் இல்லை டப்பிங் என்பதால் அது தகுதி இழக்குது ( விகடனில் விமர்சனம் கூட போடலை ) மீராவுடன் கிருஷ்ணா  தேவை இல்லாமல் சைக்கோ கேரக்டர் மாதிரி காட்டி  இருப்பதால் அதையும் தள்ளிடலாம், மதுபானக்கடை முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் இருக்கு , ரிஜக்டட்

http://l1.yimg.com/bt/api/res/1.2/jPJuIkjX0Irx2Z8cLXVS2g--/YXBwaWQ9eW5ld3M7Zmk9aW5zZXQ7aD00NzM7cT04NTt3PTYzMA--/http://media.zenfs.com/en_us/News/ybrand.dinamalar.com.ta/film_760_163624000000.jpg


10.   மாலை பொழுதின் மயக்கத்திலே - ஒரே ஒரு காபி ஷாப்ல ஒரு படத்தோட மொத்தக்கதையையும் சொல்ல துணிச்சல் வேணும். சில பல குறைகள் இருந்தாலும் மிகவும் நுணுக்கமான  மூளை இருந்தால் மட்டுமே இப்படி ஒரு ப்டம் எடுக்க முடியும்,இந்தப்பட ஹீரோயின் செம அழகு , ஆனால் பாவம் அல்பாயுசு , படம் ரிலீஸ் ஆகி சில மாதங்களில்  ஏதோ நோய் தாக்கி இறந்து விட்டார்.ஒரு லவ் ஜோடி புதுசா உருவாகுது , இன்னொரு மேரீடு ஜோடி பிரிவதற்காக அங்கே வந்து பின் சேர்ந்துடறாங்க . 2  செட் ஜோடி , காபி ஷாப் ஊழியர்கள் 2 பேர் , ஓனர்  மொட்தமே 5 பேர்தான் மெயின் கேரக்டர்ஸ். வெல்டன் ஒர்க்


பட விமர்சனம் படிக்க -http://www.adrasaka.com/2012/07/blog-post_6127.html



9. அட்டகத்தி -  கதைக்களம் ஒரு டவுன் பஸ் , கிராமத்துக்காதல் , மிக எளிய திரைக்கதை , பார்த்தேன் ரசித்தேன் பட பாதிப்பு ஆங்காங்கே இருந்தாலும்  இது நல்ல முயற்சி . பாடல்கள் படத்துக்கு மிகப்பெரிய பலம் , போஸ்டர் டிசைனில் கூட இயக்குநர் கைவண்ணம்


பட விமர்சனம் படிக்க - http://www.adrasaka.com/2012/08/blog-post_15.html




8. சாட்டை  -விஜய் டி வி ல வந்த 7 சி தொடரின் பாதிப்பில் வந்த படம் போல் தோற்றம் தந்தாலும் இது நம் சமூகத்துக்கு மிகவும் தேவையான சமூக சீர்திருத்தப்படம். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன் உதாரணம். ஹீரோவின் நடிப்பு படத்தின் தரத்தை தூக்கி நிறுத்தியது . இயக்குநர் எந்த வித காம்ப்ரமைசும் செய்ய்யாமல் ( க்ளைமாக்ஸ் தவிர்த்து ) மிக பிரமாதமாக திரைக்கதை அமைத்திருந்தார் .படத்தில் வசனங்கள் கலக்கலாக இருந்தது


பட விமர்சனம் படிக்க - http://www.adrasaka.com/2012/09/blog-post_7166.html




 7. லீலை - இந்தப்படத்தின் பெரிய மைனசே டைட்டில் தான், நிறையப்பேரு இது ஏதோ கில்மாப்படம்னு நினைச்சுட்டாங்க . ஆனா இது ஒரு கண்ணியமான காதல் கதை , ஹீரோ புதுசு , ஹீரோயின் அழகு என்றாலும் மார்க்கெட்டிங்க் சரி இல்லாததால் மக்களை அதிகமா ரீச் ஆகலை



பட விமர்சனம் படிக்க - http://www.adrasaka.com/2012/04/blog-post_5558.html



6. காதலில் சொதப்புவது எப்படி?  -9 நிமிஷ குறும்படத்தை 2 மணி நேரப்படமா டெவலப் பண்றது தனி டேலண்ட் தான். காதலர்களுக்கு இடையே நுழையும் ஈகோ மோதல் தான் கதை . காதலர்கள் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் எப்படி சண்டை போட்டுக்குவாங்க என்பதை இதை விட அழகியலா சொல்லி விட முடியாது .




பட விமர்சனம் படிக்கhttp://www.adrasaka.com/2012/02/blog-post_18.html


http://www.cinegoer.com/telugu-cinema/gallery/exclusive/rupamanjari1/rupa-manjari-pics-in-naan-tamil-movie-2-3.jpg
5.  சாருலதா - பிரியாமணிக்கு லைஃப் டைம் படம் .ட்வின்ஸ்களை வெச்சு காமெடி , ஆள் மாறாட்டக்குழப்பங்கள்  , ஓவர் செண்ட்டிமெண்ட் பார்த்து சலிச்ச கண்களுக்கு இந்த க்ரைம் த்ரில்லர் புதுசு . மாற்றான் இதே கதை என்று சொல்லபப்ட்டதால் மக்கள் அதையே பார்த்துக்கலாம் என இதை தவிர்த்திருக்கலாம். ரிலீஸ் டைமிங்க் சரி இல்லை . ஆனா முக்கியமான படம் . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அபாரம் 


பட விமர்சனம் படிக்க


http://www.adrasaka.com/2012/09/blog-post_7975.html
4. நான்  -விஜய் ஆண்ட்டனிக்கு  மிகப்பெரிய திருப்பு முனைப்படம் , இதுல தான் அவர் அறிமுகம் ஆகறார். ஆனாலும் ஹாலிவுட் படங்களூக்கு இணையான க்ரைம் த்ரில்லர் . மக்கள் கவனிக்காததுக்கு முக்கியக்காரணம்  ஹீரோ புதுசு , மார்க்கெட்டிங்க் டெக்னிக்  சுமார் . மூளைக்காரன் ஒருத்தன் எப்படி எபப்டி எல்லாம் ஃபோர்ஜரி பண்றான் , எப்படி ஜெயிக்கிறான் எற ஆண்ட்டி ஹீரோ கதைதான் , ஆனா அபாரமான திரைக்கதை 


பட விமர்சனம் படிக்க 
3.  வழக்கு எண் 18/9 - இந்தக்கால கலாச்சார சீர்கேடுகளான ஆசிட் வீச்சு , தனக்கு கிடைக்காத ஃபிகர் வேற எவனுக்கும் கிடைக்கக்கூடாது  என்ற டீன் ஏஜ் இன் ஆண்ட்டி ஹீரோயிசங்களை ஆவணப்படுத்தி இருந்தார் . பேக் டிராப்பில்  ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முறை அருமையான  படமாக்கம் 
2.  நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் -கஜினி படத்துல ஏ ஆர் முருகதாஸ்  யூஸ் பண்ண ஷார்ட் டைம் மெமரி லாஸ் மேட்டரை அவர் க்ரைம் ஆக்‌ஷன் க்கு யூஸ் பண்ணார், அதே சப்ஜெக்ட்டை இவர் காமெடிக்கு யூஸ் பண்ணி இருந்தார் . இந்தக்கதையை சொல்லி படம் எடுக்கப்போறேன்னா யாரும் நம்ப மாட்டாங்க , ஆனா இயக்குநர் பட்டாசைக்கிளப்பி இருந்தார் . ஆனா ஏ செண்ட்டர் ரசிகர்களைக்கவர்ந்த  அளவு பி சி சரியாப்போகலை . கமல் , கிரேசி மோகன் சந்தானம் கூட்டணீயா இருந்தா கமர்ஷியலா போய் இருக்கும் , முக்கியமான படம் 


பட விமர்சனம் படிக்க 
1. பீட்சா - நான் பல மொழிகளில் பல பேய்ப்படங்கள் பார்த்திருக்கேன் . ஆனா இந்தப்படம் மிரட்ன அளவு எந்தபப்டமும் மிரட்டுனதில்லை . 40 நிமிட டார்ச்லைட் ஷாட் கலக்கல் . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்கள் அற்புதம்  . இது ஹாலிவுட்ல எடுத்தா அள்ளிக்கும் . தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படம், ஆனாலும் பிரமாதமான வெற்றி பெறவில்லை என்பதில் வருத்தமே  


பட விமர்சனம் படிக்க 
https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-snc6/282363_391384040929634_1381247657_n.jpg
a
diSki - தனிப்பட்ட முறையில் நான் மிகவும் ரசித்துப்பார்த்து சிரித்த படம் 
ஒரு கல் ஒரு கண்ணாடி ( ஓகே ஓகே )  -இதுவும் காதல் கதைதான், காலங்காலமாக வந்த ஒரு தலைக்காதல் கம் தறுதலைக்காதல்தான். ஆனா திரைக்கதைல  போர் அடிக்காம காட்சிகளை அமைச்ச விதம் பிரமாதம் , சந்தானம் தான் ஹீரோ , உதயநிதி அவருக்கு சப்போர்ட்டிங்க் கேரக்டர். சிரிக்க சிரிக்க கதை சொல்லும் விதம் அழகு . இந்தப்படம் ரிலீஸ் ஆகும் முன் வந்த டி வி விளம்பரங்கள் படத்துக்கு பெரும்பலம்.  இந்த ஆண்டின் சிற ந்த  மார்க்கெட்டிங்க் டெக்னிக் என்று ஒரு விருது இருந்தா இதுக்கு தரலாம். அதே போல் இந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்குசித்திரம் விருதும்

பட விமர்சனம் படிக்க - http://www.adrasaka.com/2012/04/blog-post_228.html