Showing posts with label வசனம். Show all posts
Showing posts with label வசனம். Show all posts

Thursday, March 06, 2014

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -இறங்கி அடிக்கிறீங்களா? -ஆர் பார்த்திபன் பேட்டி @ விகடன்.

 பேட்டியில் நான் கதை பத்தி எதுவுமே சொல்ல மாட்டேன். ஏன்னா, தயாரிப்பாளர்கிட்டகூட நான் கதை சொல்லலை. அட, கதை ஏங்க..? 'க’கூட சொல்லலை!'' - ஆரம்பத்திலேயே பன்ச் வைத்தார், 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தை இயக்கிவரும் பார்த்திபன்.
'' 'இதுவரை நான் யாரையும் காப்பி அடிச்சது இல்லை. என் ஒவ்வொரு படத்தையும் சின்சியரா எடுத்திருக்கேன். காலத்துக்கும் பேசப்படும் படம்’னு சொல்றதெல்லாம் எனக்கான பெருமைதானே தவிர, 'ஓடுச்சா... இல்லையா?’ங்கிறதுதான் இங்கே கடைசியாத் தொக்கி நிக்கிற கேள்வி. அதனால், 'குடைக்குள் மழை’ பட ரிஸ்க் எல்லாம் எடுக்காம, என் அடையாளத்தையும் மிஸ் பண்ணாம, கல்லா நிறைப்பதற்கான கமர்ஷியலைச் கச்சிதமாக் கலக்கியிருக்கேன்!
இந்தப் படத்துக்குள்ளேயே இன்ஃபிலிம் மாதிரி ஒண்ணு பண்ணியிருக்கேன். அதில் ஒருத்தன், 'ஏண்டா... வசனமே இல்லாம கமல் 'பேசும் படம்’ எடுத்திருக்கார். நாம கதையே இல்லாம ஒரு படம் பண்ணா என்ன?’னு கேப்பான். '120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு வர்றவன், 'கதை எங்கடா?’னு சொக்காயைப் பிடிச்சுக் கேட்டா, என்னடா பண்ணுவ?’னு சொல்வான் இன்னொருத்தன். 'அப்ப, 'எ ஃபிலிம் வித்தவுட் எ ஸ்டோரி’னு டேக் லைன் போட்டு, ரசிகர்களை ஆரம்பத்திலேயே ட்யூன் பண்ணிக் கூட்டிட்டு வருவோம்’பான். அவ்ளோதான் படம்! மெல்லிய இழைக்கும் அடுத்த ரக மெல்லிய இழை அளவுகூட படத்தில் கதை இல்லை!''
''ஆக, இப்போ கமர்ஷியல் பக்கம் திரும்பிட்டீங்களா?''
''சமீபத்தில்... 82 வயசுப் பெரியவர் ஒருத்தரைச் சந்திச்சேன். 'அப்பப்ப நினைவு தப்புது தம்பி. எதுவும் ஞாபகம் இருக்கிறது இல்லை. உங்க 'ஹவுஸ்ஃபுல்’ பாத்திருக்கேன்’னு சொல்லி சீன் பை சீன் சொல்லிப் பாராட்டினார். நினைவு தப்புதுனு சொல்றவர் நினைவில், நம்ம படம் இருக்கிறது சந்தோஷம்.
நான் சினிமாவுக்காக அம்மா-அப்பாவை விட்டு, ஊரைவிட்டுக் கிளம்பி வந்தவன் இல்லை. சென்னை அரும்பாக்கத்துல வீடு. சினிமா வாய்ப்புத் தேடி தேனாம்பேட்டை லாட்ஜ் ரூம்ல தங்கியிருந்தேன். அந்தப் பிரிவுக்கே தினமும் மூணு தடவை அழுவேன். முதல் வெற்றி, தொடர் தோல்வினு ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களைப் பார்த்தாச்சு. இருந்தாலும் நான் விரும்பும் சினிமாவை, நான் ஆசைப்பட்ட மாதிரி எடுத்திருக்கேன்னு ஒரு சந்தோஷம் மனசுல இருக்கு. இப்போ இந்தப் படத்தில் ஒரு டைரக்டர் கேரக்டர், 'இனிஷியல் மட்டும் இல்லை... குழந்தையும் எனக்குப் பிறந்ததா இருக்கணும்’பார். அப்படி என் படங்கள் என் படங்களா மட்டுமே இருந்திருக்கு. அது இங்கே ரொம்பப் பெரிய விஷயம்!''
''படத்துல வேற என்ன புதுமை?''
''தலைப்பே புதுமை... அதுலயும் ஒரு புதுமை வெச்சிருக்கேன். 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’கிற நான்கு வார்த்தைகளை ஆளுக்கொரு வார்த்தையா நான்கு இயக்குநர்கள் எழுதியிருக்காங்க. அந்தக் கையெழுத்தையே டைட்டில் டிசைன் ஆக்கிட்டோம். 'இந்தத் தலைப்பை எழுதித் தந்த அந்த நான்கு மாஸ்டர் இயக்குநர்கள் யார்னு கண்டுபிடிக்கச் சொல்லி ஒரு போட்டி வெக்கலாம்னு யோசனை. பார்ப்போம்!''
''புதுமுகங்களோட களம் இறங்கிருக்கீங்க... ஆனா, விஜய் சேதுபதி, ஆர்யானு பெரிய தலைகளும் தட்டுப்படுறாங்களே!''
''நான் நடிக்காம டைரக்ஷன் மட்டுமே பண்ணும் முதல் படம் இது. 'மைனா’ல ஆரம்பிச்சு 'குக்கூ’ வரை நான் சம்பந்தப்படலைன்னாலும், என்னை இம்ப்ரெஸ் பண்ணின படங்கள், டிரெய்லர் பத்தி முடிஞ்சவரைக்கும் தகவல் பரப்புவேன். இப்படி என் சினிமானு இல்லாம, எனக்குப் பிடிச்ச சினிமாக்களையும் புரமோட் பண்றதை முழு நேர வேலையாவே வெச்சிருக்கேன். அதன் பாசிட்டிவ் சைடு எஃபெக்ட்தான் விஜய் சேதுபதி உள்பட பல பிரபலங்கள் என் படத்தில் நடிக்கிறது. விஜய் சேதுபதிகிட்ட, 'நீங்க அப்படியே விஜய் சேதுபதியாகவே வந்துட்டுப் போற மாதிரி ஒரு சீன்’னு சொன்னதும், 'நான் நாளைக்கே வந்துடவா சார்?’னு கேட்டார். இதேபோல சேரன், ஆர்யா போல சில பிரபலங்கள் நிஜ முகத்தோடவே வர்றாங்க!''

''இளைஞர்களின் குறும்பட டிரெண்டுக்கு ஏத்த மாதிரி நீங்களும் இறங்கி அடிக்கிறீங்களா?''
''என் மகன் ராக்கி, விஸ்காம் படிக்கிறார். நான் 100 வார்த்தை பேசினா, மூணு வார்த்தையில பதில் சொல்வார். அவர்கிட்ட, 'நீ வந்து ஒருதடவை என் படத்தைப் பார்த்துட்டு போ...’னு சொன்னேன். 'விச் ஃபிலிம்?’னு கேட்கிறார். அவங்க வேவ்லெங்த்துக்கு நான் இல்லைங்கிற ஃபீலிங்ல இருக்காரோ என்னவோ!
சமயங்கள்ல அவரை கார்ல லாங் டிரைவ் அழைச்சுட்டுப் போய், இம்ப்ரெஸ் பண்ண முயற்சி பண்ணுவேன். ஆனா, அவர் வெளியே பார்த்துட்டே இருப்பார். ஒருதடவைகூட அவர் என்னை இம்ப்ரெஸ் பண்ண முயற்சி பண்ணதே இல்லை. அவருக்கு போட்டோகிராஃபியில் ரொம்ப இஷ்டம்.
சமீபத்துல, ஒரு ஆள், ஒரு நாய், ஒரு பாட்டில் சேர்ந்து இருக்கும் போட்டோ எடுத்து, அதுக்கு 'தேவதாஸ்’னு கேப்ஷன் வெச்சு ஃபேஸ்புக்ல போட்டிருந்தார் ராக்கி. 'உனக்கு தேவதாஸ் பத்தி எப்படித் தெரியும்?’னு கேட்டேன். 'சும்மா பழைய படங்களை கோ-த்ரூ பண்ணேன். அதில் இருந்து பிடிச்சேன்’னு சொன்னார். இதெல்லாம் எதுக்குச் சொல்றேனா, இன்றைய இளைஞர்கள் எதிர்காலம் குறித்த எந்த அச்சமும் அவசரமும் இல்லாமல் இருக்காங்க. ரொம்பத் தெளிவாவும் இருக்காங்க. அவங்கவங்களுக்கு அவங்கவங்க ஸ்டைல்!
என்ன கேட்டீங்க இறங்கி அடிக்கிறீங்களானுதானே? நான் இறங்கவே இல்லை. இன்னும் இளைஞனாவே இருக்கிறதுனால அவங்க எதிர்ப்பார்ப்பை ஈடு செய்யிறது ஒண்ணும் கஷ்டமா இருக்காது. அதை இந்தப் படம் மூலம் நீங்க புரிஞ்சுப்பீங்க!'


thanx - vikatan

Tuesday, September 25, 2012

அரசுப்பள்ளி -சாட்டை அடி வசனங்கள்

1.பசங்க நம்மள நம்புறாங்க சார். ஆனா பெத்தவங்க நாமதான் அவங்களை நம்புறது இல்லை .


--------------------------


2. பிடிச்சிருக்கோ, பிடிக்கலையோ எல்லா பொண்ணுங்களும் பசங்களை திரும்பிப் பார்க்கத்தான் செய்வோம் ஏன்னா சனியன் இன்னும் இருக்கா போயிருச்சான்னு பார்க்கத்தான்”


-----------------------------


3. ஏணியை கூரை மேல போடாதீங்க வானத்துக்கு போடுங்க---------------------


4. 18 வருசமா இங்கேதான் குப்பை கொட்டிட்டு இருக்கேன் ..


 நிறைய சேர்ந்திருக்குமே? ----------------------


5. நம்ம நாட்டுல அன்றாடங்காய்ச்சிகளைத்தவிர எல்லாருமே தனியார் ஸ்கூல்லதான் நம்ம குழந்தைகளை சேர்த்தறோம்,இந்த நிலை மாறனும்-------------


6. இந்த ரூம்ல பேடு ஸ்மெல் வருதே?


 நாட் ஒன்லி திஸ் ரூம், டோட்டல் ஸ்கூல்லயே வருது


----------------------7. ஹார்ஸ் ஆன ஸ்டூடண்ட்ஸ் வெச்சுக்கிட்டு ஹானஸ்ட்டான ரிசல்ட்டை எதிர்பார்க்கறது எந்த வகைல சார் நியாயம்?----------------------


8. திறமையான ஸ்டூடண்ட்ஸை மட்டும் ஸ்கூல்ல சேர்த்தி 100 % ரிசல்ட் காட்டறதுதான் நல்ல ஸ்கூலுக்கான இலக்கணமா?-------------------------


9. எவனோ எப்படியோ போய்ட்டுபோறான்னு நினைக்கறீங்களே. நம்ம பசங்களா இருந்தா இப்படியே விட்ருவோமா?


--------------------


10. அடப்பாவி, வாத்தியார் அடிக்குப்பயந்து ஒரே ஆள் இத்தனை டவுசராடா போடறது?----------------------


11. நேத்து என்னமோ மாத்தறேன்னீங்க. இப்போ லட்டு தர்றீங்க? 

 இந்த லட்டை உதிர்த்தா பூந்தி, மறுபடி பிடிச்சா மறுபடி லட்டு. மாற்றம் நிலையானது --------------------12. பிடிச்சு வெச்சா பிள்ளையார், வீசி எறிஞ்சா சாணி, எல்லாமே நாம கையாள்வதைப்பொறுத்தே இருக்கு.. ---------------13. சார் சார் அப்படியே அவ அட்ரசும் கேளுங்க சார்.. 


 டேய். யூ ஆர் மிஸ்யூசிங்க் மீ ====================


14. டேய் பார்த்துப்போடா , வழுக்க போகுது.. 

 சார் உங்களைத்தான் வழுக்கைனு மறைமுகமா திட்டறான்------------------


15. கமூகதே கவி அப்டின்னா என்ன ?


 கட் ஆல் க.. மூதேவின்னு அர்த்தம் ---------------------


16. பெரும்பாலும் எல்லாருக்கும்  வலது மூளைதான்  அதிகம் யூஸ் ஆகும் இடது மூளையும் அதே அளவு வேலை செஞ்சா அதாவது யூஸ் பண்ணிக்கிட்டா எல்லாரும் மாஸ்டர் ஆகிடலாம் டீ மாஸ்டராவா? ---------------------


17. அந்தப்பொண்ணு இருக்கும்போது எதுக்குடா  என்னை அடிச்சே?


 சும்மா வெயிட் காட்ட.. -------------------------


18. ஐஸக், நீ ஏண்டா இப்போ க்ளாஸ் ரூமை வெட்டு வெளீல போனே\?


 ஐ செட், யூ கெட் அவுட்னு சொன்னீங்களே? சார்.. 


 உஷ் அப்பா அது உன்னை இல்லைடா. --------------------


19. இவன் பண்ணுன தப்புக்கு ஏண்டா ஜாதியை இழுக்கறே? ----------------20. லேடீஸ் டாய்லெட்டை இனி எட்டிப்பார்க்க மாட்டேன்னு 1008 தடவை இம்ப்போசிஷன் எழுத வச்சா அது அவன் மனசுல ஆழமாப்பதியுமா? மறையுமா? அது என்ன பைபிளா? குரானா?
---------------------


21. எதுக்குடா ஸ்கூல் பெஞ்ச்சை எடுத்துட்டு போறீங்க? காதுகுத்துக்கு


 டேய், இது கவர்மெண்ட் பிராப்பர்ட்டிடா.. -------------22. எதிரிகளை கற்பனையிலாவது உருவாக்கிக்குங்க, அப்போ உன் தகுதிகள் தானா உயரும்  
--------------------------


23. கம்ப்யூட்டர் படிச்சு அவங்க என்னத்தை கிழிக்கப்போறாங்க?

 கொடுத்துப்பார்த்தாத்தானே தெரியும்? 
----------------------24. பசங்களுக்கு படிப்பு மேல விருப்பு இல்லாம கூட இருக்கலாம், ஆனா வெறுப்பு வர்ற மாதிரி நாம பண்ணிடக்கூடாது
--------------------


25. உங்க கிட்டே டியூஷன் வர்லைங்கறதுக்காக நீங்க பழி வாங்கறதில்லை?----------------------26. இப்போ நாம திருத்த வேண்டியது பசங்களை இல்லை, வாத்தியாருங்களை
----------------27. இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பது சட்டம் இல்லை, சட்டத்துல இருக்கற ஓட்டைகள் தான்-----------


28. ஹேவ் யூ ஃபினிஸ்டு யுவர் லஞ்ச்?


 யா ஃபுல், ஹவுஸ் ஃபுல்-----------------29. மாங்காய் ஊறுகாய்னா பொட்டாசியம் சல்பேட் தானே? 
-------------------


30. எனக்கு ஒருத்தரை பிடிக்கலைன்னா அவனுக்கு பேனா கிஃப்டா கொடுப்பேன், இப்போ புரியுதா? நான் ஏன்  உனக்கு பேனா தந்தேன்னு.?-----------------------


31. ஒரு பொண்ணு வயசுக்கு வந்த பின் பார்க்கும் முதல் ஆணை எப்படி மரக்க முடியாதோ அதே மாதிரி அவளை முதன் முதலில் கட்டிப்பிடிச்ச ஆணையும் மறக்க மாட்டா. 


-------------------


32. நீயாவது + 2 படிக்கும்போது வாத்தியார் கையை பிடிச்சே, நான் டென் த் படிக்கும்போதே வாத்தியார் கையை உடைச்சேன்-------------------


33. நூத்துக்கு 4 மார்க்கா? வெரி குட்  போன டைம் 2 இப்போ 4 நல்ல முன்னேற்றம் தானே? 
 ----------------------

34. தப்பே செய்யலைன்னாலும் சில விஷயங்கள்ல முதல்ல பாதிக்கப்படறது பொண்ணுங்க தான்
-----------------------


35. எல்லாரும் ஒரு ரூட்ல போய்ட்டு இருக்கும்போது நீ மட்டும் ஏன் தனி ரூட்ல போறே.. இரிட்டேட்டிங்க் ஃபெலோ--------------------36. பொண்ணுங்க முத டைம் ஏதாவது புகார் சொல்லும்போது அதை காது குடுத்து கேட்டிருந்தா எப்போ எது நடந்தாலும் அவ முதல்ல நம்ம கிட்டேதான் வந்து சொல்வா, நீங்க கேட்டீங்களா சார். --------------------


37. இந்த உலகத்துல உருப்படாதவங்கன்னு ஒரு கேட்டகிரியே கிடையாது, எல்லார்ட்டயும் தனித்திறமை இருக்கு---------------------


38. நான் செத்தாத்தான் அவனுக்கு நிம்மதின்னா வாழறோம், நாம நல்லா வாழறோம்.. 

--------------------


39. போட்டில தோற்பது வெட்கக்கேடான விஷயம் தான், ஆனா அதை விட வெட்கக்கேடு போட்டில கலந்துக்காம வெளில நின்னு வேடிக்கை பார்ப்பது---------------------


40. ஒரு ஸ்கூல்ல படிப்பு சொல்லித்தர்றதை விட முக்கியம் தனி மனித ஒழுக்கம் பற்றி சொல்லித்தர்றது.. நீங்களே இப்படி இருந்தா உங்க கிட்டே இருந்து வர்ற ஸ்டூடண்ட்ஸ் எப்படி இருப்பாங்க? 
-----------------------


41. இந்த உலகத்துல பசங்க புலம்பல்ஸ் என்ன தெரியுமா? எப்போ பாரு பேரண்ட்ஸ் படி படின்னு டார்ச்சர் பண்றாங்க... பேரண்ட்ஸ் தரப்புல என்ன சொல்ராங்க? பசங்க எங்க பேச்சை கேட்கரதே இல்லை.. பலூன்ல எவ்ளவ் காத்து போக முடியுமோ அவ்ளவ் தான் போகும் , அதிகமா திணிச்சா வெடிச்சுடும். --------------------


42. ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் ஏன்  கற்பித்தலில் கவனம் இல்லாம இருக்கார்னா அவர் சரியா வேலை செய்யலைன்னா டி பிரமோஷன்னு ஒண்ணு கிடையது, அதான்-------------------------


43. நாலெட்ஜ் டெவலப் பண்ணின அளவு  பசங்க தங்களோட பெற்றோரை புரிஞ்சிக்க தெரியலையே?-----


4 4  கில்லி தான் கிரிக்கெட்.. பச்சைக்குதிரைதாண்டறதுதான் ஹை ஜம்ப்------------------------45. ஒரு உண்மையான குருவிடம் கல்வி கற்றவங்க குரு உயிரோட இருந்தாலும் சரி இல்லைன்னாலும் சரி குரு பேரை காப்பாத்தற மாதிரி நடந்துக்குவாங்க, நடந்துக்கனும்


---------46. தேடல் உள்ள ஒவ்வொரு மனுஷனும்  ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல எதையாவது இழந்தே தீரனும்----------


47. கபடி கபடி இதுல க வை கட் பண்ணி படி


 படி படி -------------------48. போர்டுல சிவப்புன்னு எழுதி இருக்கேன் . இது என்ன கலர்?னு கேட்டா சிவப்புன்னு சொல்லக்கூடாது , வெள்ளை நிற சாக்பீஸ்ல தான் எழுதுனேன், அதனால் வெள்ளைன்னு தான் சொல்லனும், இதுதான் க்ரியேட்டிவிட்டி பார்வை--------

டிஸ்கி - சாட்டை விமர்சனம் -http://www.adrasaka.com/2012/09/blog-post_7166.html

Saturday, June 23, 2012

சந்தானம் கலக்கிய சகுனி காமெடி டிராக் வசனங்கள்

http://tamilmaxs.in/wp-content/gallery/saguni-movie-gallery-and-wallpapers/saguni_-movie_-gallery_-and_-wallpapers-3.jpg

1.  எங்கே போகனும்?

 ஒவ்வொரு ஒயின்ஷாப் ஒயின்ஷாப்பா போ.. 

 ஹூம், காலைலயேவா?2. முதல்ல  ஒரு ஆஃப் சொல்லு.. 


 எனக்கு அந்த  பழக்கமே இல்லையே?


 ஹலோ, நான் ஆஃப் சொல்லச்சொன்னது எனக்கு... 3. அண்ணே,, கோவிச்சுக்காதீங்க.. இதுவரை 2000 லிட்டர் சாராயம் குடிச்சிருப்பீங்க.. எப்போதான் என் வேலையை முடிச்சுத்தருவீங்க..?


4. கமல் சார்.. உங்க தம்பிங்க யாரு?

 ம்.. சாருஹாசன், சந்திர ஹாசன்


5. என்னடா.. ஹீரோ வந்து இவ்ளவ் நேரம் ஆகியும் லவ் போர்ஷன் ஓப்பன் ஆகலையேன்னு பார்த்தேன்..


6.. ஆமா, உனக்குதான் தெலுங்கே தெரியாதே.. எப்படி அவ சொன்னதுக்கு அர்த்தம் தெரிஞ்சது?


 அதுக்கு லேங்குவேஜ் தெரியனும்னு அவசியம் இல்லை, பாடி லேங்குவேஜ் சொல்லிடுமே?


7. மேடம், நீங்க கூட அடுத்தவன் ஒயிஃப் தான்.. விசாரணைங்கற பேர்ல இவ்ளவ் பக்கமா நிக்கறீங்க.. நான் ஏதாவது தப்பு செஞ்சேனா?


8. எங்க ஆச்சி எப்படி மீன் குழம்பு வைப்பாங்க தெரியுமா?

 கதைக்குள்ள கதையா? உஷ் அப்பா.. முடியல...... 


9. கடைசில அவ என்ன சொன்னா தெரியுமா? “ எல்லா பொண்ணுங்களுக்கும் உன்னை பிடிக்கும்.. அப்டினு,,,

 இது அவங்களா சொன்னதா? நீயா சும்மா பிட்டு சேர்த்துக்கிட்டியா?என் கிட்டேயே பில்டப்பா?


10.  ராஜேஷ்குமார் நாவல்ல கூட 2 வது பக்கத்துலயே ஹீரோயின் அறிமுகப்படுத்திடுவாரு.. நீ ஏண்டா இன்னும் டிலே பண்ணிட்டு இருக்கே?http://2.bp.blogspot.com/-YF1TIGO1g2M/Th8SrVU1-ZI/AAAAAAAAKqI/KNze7VLUijc/s1600/Anushka_Hot_Saree_05.jpg


11. சின்னப்பையனா இருக்க சொல்ல,  சொல்லப்பட்ட கதைல தேவதை 3 கோடாலியை தனித்தனியா கொடுத்தப்போ வேணாம்னு சொன்ன விறகு வெட்டி மாதிரி அனுஷ்கா,  ஆண்ட்ரியா அப்டினு எல்லா ஃபிகர்சையும் மிஸ் பண்ணிட்டே போறியே.. எனி மெகா பிளான்..?


12.  டேய்.. அய்யய்யோ உன் ஆள் யார்னு சீக்கிரம் சொல்லித்தொலைடா.. என் ஆளா இருந்துடப்போகுது.. அதோ அதுவா?

 ச்சே ச்சே. அதை எல்லாம் மனுஷன் பார்ப்பானா?

 டேய்.. அது என் ஆளு.. 


13.கடசில  நீ சொன்ன பொண்ணு உன் சொந்த அத்தை பொண்ணுதானா?அதுக்கா இந்த பில்டப் கொடுத்தே.. 


14. லவ் பண்ற எல்லாரும் தாஜ்மகாலையே கிஃப்டா தர்றீங்களே.. ஒரு வள்ளுவர் கோட்டம், வண்டலூர் ஜூ இப்படி வித்தியாசமா ஏதாவது தரலாமே?


15. நல்ல வேளை.. உன் மாமியாருக்கு தாஜ்மகால் பொம்மை கொடுத்தே.. அல்வாவும் ,மல்லிகைப்பூவும் தர்லை.. 

 தந்திருந்தா?


 மாமியார் மாசம் ஆகி இருப்பாங்க .. போடாங்..... 16. .கார் ஓட்டப்போறீயா? உன் ஆளை ஓட்டப்போறியா?17. என்னை லவ் பண்றியா?ன்னு கேட்டதுக்கு அவ எதுவும் சொல்லலை.. சொல்லி இருந்தா ஆத்துல மீன் பிடிச்சிருப்பேன்.. 

 ம் சொல்லி இருந்தா மீனையாடா பிடிச்சிருப்பே..?


18.. அட போப்பா.. உனக்கு ஆண்ட்ரியா, அனுஷ்கா அப்டி ஏதேதோ பொண்ணுங்க செட் ஆகுது. ஆனா சொந்த அத்தை பொண்ணு செட் ஆக மாட்டெங்குதே?


இந்த அத்தை பொண்ணுங்களே இப்படித்தான் மச்சான் அதுப்பு காட்டுவாளுங்க ( அதுப்பு = அல்டாப்பு )


19. அவளுங்க எல்லாம் பசிக்கு சாப்பிடற ஆள்ங்க இல்லை, பந்தாவுக்கு சாப்பிடறவங்க.. நாம தான் இன்னும் பழசை எல்லாம் மறக்காம சாப்பிட்டுட்டு இருக்கோம்.. அவங்க பர்கர், பீட்சா அப்டினு அசத்திட்டு இருக்காங்க.. 


20.  அறிவு இருக்கறவன் அப்படி எல்லாம் செய்ய மாட்டான். ஆல் அறியாத வயசு.. நம்புப்பா..


http://1.bp.blogspot.com/-1bdyqH7HeDU/Talg95MYkRI/AAAAAAAALKc/nwq7JQdrNrg/s1600/andriya+%252812%2529.jpg21. பீச்சில் - குடைக்குள்ளே குடித்தனம் நடத்திட்டு இருக்கற அண்ணே.. டைம் சொல்லுங்க.. 


 என்ன இவ்ளவ் லேட் பண்றாரு.. ஜஸ்ட் டைம் தானே கேட்டோம்?

 அட இருப்பா.. அவர் முதல்ல தன் கை எங்கே இருக்குன்னு தேடி எடுக்கனும் இல்லை.. அதுக்குள்ளே அவசரப்பட்டா எப்படி?22.  அது ஏன் எல்லாரும் யூரின் போக கரண்ட் கம்பத்துக்கு வந்துடறீங்க.. ?

பல்லவர் காலத்துல இருந்தே அது பழக்கம் ஆகிடுச்சு.. 

 சோழர் காலத்துல அது இல்லையே? ( ஆயிரத்தில் ஒருவன் )


23.  டேய்,.. அங்கே என்ன எழுதி  வெச்சிருக்கு?

 பொறுக்கி நாய்கள் இங்கே யூரின் போகக்கூடாதுன்னு எழுதி  வெச்சிருக்கு சார்.இது கூட படிக்கத்தெரியலயே.. போலீஸா எப்படி காலம் தள்ளறீங்க?. 

டேய்..  அப்புறம் என்ன இதுக்கோசரம் யூரின் போனிங்க.?


 பொறுக்கி நாய்கள் இங்கே யூரின் போகக்கூடாதுன்னு தானே  எழுதி  வெச்சிருக்கு ? நாங்க  தான் கவுரவமான ஆள்ங்க ஆச்சே?24. அட.. நீயும், நானும் இங்கே ஒண்ணா ஒண்ணுக்குப்போனதால ஒண்ணுக்குள்ளே ஒண்ணு ஆகிட்டோமா?


25. டேய்.. ஒண்ணு சொல்றேன்.. உலகத்துலயே மூத்திரக்கேஸ்ல முன் ஜாமீன் கேட்டது நீ ஒருத்தன் தாண்டா..


26. கெட்ட நேரம் வந்தா ராஜா கூட தெருவுக்கு வந்தே தான் ஆகனும் ( என் காதுக்கு ஆ ராசாவுக்கு-ன்னு கேட்குது)


27. சேஞ்ச் இல்லை சேஞ்ச் இல்லைன்னு நான் தான் ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டே இருந்தேனே?

\
 டேய்.. உதை வாங்குவே.. சேஞ்ச் இல்லைங்கறது வேற, காசு இல்லைங்கறது வேற.. இரண்டையும் போட்டு குழப்பிக்கக்கூடாது.. 28.  பிரச்சாரத்தை கோயில்ல இருந்து ஆரம்பின்னு சொன்னாங்க.. பசியைப்போக்கற இடம்தானே கோயில்.. அதுதான் இங்கே வந்தேன்.. 


29. உன்னை எங்கேயோ பார்த்திருக்கேனே?

 இருக்காது சார்... நான் ஆட்டோ ஸ்டேண்ட்ல தான் எப்பவும் இருப்பேன்... அங்கே வேணா பார்த்திருப்பீங்க..


என்னது? ஆட்டோ ஸ்டேண்ட்டா?

 பின்னே கொசுவர்த்தி  ஸ்டேண்ட்டா? எதுக்கு இவ்ளவ் ஜெர்க்?


30. கட்சில தன்னைத்தவிர யாரும் சம்பாதிக்கக்கூடாதுன்னு நினைக்கற தலைவர்கள்ல நீங்களும் ஒருத்தர் தலைவரே..


ரொம்ப ஓவரா பேசறே.. வாக்கிங்க் போக முடியாது பார்த்துக்கோ..http://3.bp.blogspot.com/-qD1wPzlos0Q/Tix9CDOkg9I/AAAAAAAALuc/kDF12Ub6CT0/s1600/Actress%2BRoja%2Bhot%2Bin%2Bsilk%2Bsaree%2Blatest%2Bstills%2B%252812%2529.jpg


31. ரமணிட்ட நான் வேணா வந்து பேசிப்பார்க்கவா?


அவர் என்ன பேச ஆள் இல்லாம உக்காந்து இருக்காரா?


32. அக்கா.. உங்க ஃபேஸ் பவர் ஃபுல் ஃபேஸ்க்கா.. 

 அவன் பாட்டுக்கு நம்மளை போட்டுக்குடுத்துட்டே இருக்கான்..  என்னடா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?


33. விரலை வெட்டுனாத்தாண்டா நீ அடங்குவே,, 

 என்னமோ பர்த் டே கேக்கை வெட்டற மாதிரி சர்வ சாதாரணமா சொல்றீயே.. 


34. உன் பிரச்சனையே டிப்பர் லாரி அளவு இருக்கு.. நீ ஏன் ஊர்ப்பிரச்சனைக்கெல்லாம் போறே. ? போய் பொழப்பை பாரு.. 35. பிரச்சனையை அவுக்கறதுல ஒரு சுவராஸ்யம்னா அவிழ்க்க முடியா முடிச்சை போடறதுல தனிசுவராஸ்யம்.. 


36. அடப்பாவிகளா? இப்படி அநியாயம் பண்றதுக்குப்பேருதான் பாலிடிக்ஸா? அதான் எங்க தலைவர் ரஜினி அரசியலுக்கு வர பயப்படறாரா?


37.  யார்யா இந்த பிச்சைக்காரன்?


 யோவ்.. அவர் சாமியார்யா


38. மனசு சரி இல்லைன்னா எல்லாரும் டாஸ்மாக் , அல்லது சாமியார் இருக்கற ஆசிரமம் தேடிப்போவாங்க.. என் கிட்டே  காசு இல்லை, அதனால இங்கே வந்தேன்.. 


39.  என்ன சாமி நீங்க.. நீங்க சொல்றது சரியா போய் ரீச் ஆகலையே?உங்க உபதேசத்தை இந்த கூட்டத்துல எத்த்னை பேரு கேட்பாங்க?

 100ல 2 பேர் கேட்டாக்கூட போதுமே?

 அதுதான் தப்பு .. நீங்க 100 பேருக்கு சொன்னா  அது 1000 பேருக்கு போய் சேரனும்.. அதுதான் மார்க்கெட்டிங்க்.. 


40. அம்மா.. எனக்கு டிரைவர் வேலை வேணும்,.. டிரைவர் தேவைன்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்தேன்.. 

 இதுக்கு முன்னால எங்கே கார் ஓட்டிட்டு இருந்தே?


 ரோட்ல..

 என்னது?


http://gallery.southdreamz.com/cache/actress/pranitha/exclusive-masala-stills/indian-glamour-actress-praneetha-hot-spicy-stills-13_720_southdreamz.jpg

  41.. உனக்கு வாய் ஜாஸ்தி மாதிரி தெரியுதே?

 என்னை மாதிரி ஆளை வெச்சாத்தான் உங்க பொண்ணுக்கு சேஃப்டி.. இல்லைன்னா வர்றவன் உங்க பொண்ணை ஓட்டிட்டு போயிடுவான்.. நான் காரை மட்டும் தான் ஓட்டுவேன்

42. சாமியாரை யார் கிட்டேயும் பேச வேண்டாம்னு சொன்னியே அந்த ஐட்யா உனக்கு எப்படி வந்துச்சு?


 இந்த பொண்ணுங்க எல்லாம் நாம போய் போய் பேசறப்போ கண்டுக்கவே மாட்டாளுக.. அப்போதான் எனக்கு இந்த ஐடியா உதயம் ஆச்சு.. 


43.. சாமி.. நான் சொல்றதை கேளுங்க.. ஒரு நாளுக்கு யாராவது ஒருத்தர் கூட மட்டும் பேசுங்க..  அப்போ எல்லாரும் நீங்க என்ன சொன்னீங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருப்பாங்க


44. அரசியல் ஒரு வியாபாரம் தான்..கோடி கோடியா நாங்க இங்கே கொட்டித்தான் இந்த இடத்துக்கு  வந்திருக்கோம்.. போட்ட காசை எடுக்க வேணாமா?


45.  இந்த சி எம் ப்ளெஸ்க்கு நான் ரிப்பன் கட் பண்ணி வர்லை.. பல தலைகளை கட் பண்ணி வந்திருக்கேன்.. 


46.  அறிவுக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?


47.  ஹாய்.. மச்சி.. என்ன ? ஜாலியா டீ சாப்பிடறே போல.. 

 அடேய்.. டீ சாப்பிடறதுல என்னடா ஜாலி.. ?


48.  நான் கண் அசைச்சா என்ன அர்த்தம்? காலை அசைச்சா என்ன அர்த்தம்? இன்னும் எதை எதை அசைச்சா என்ன அர்த்தம்னு டியூஷன் சொல்லித்தர்றேன்


49.  குடிக்கறதுக்கு உனக்கு ஒரு காரணம் வேணும்.. அவ்ளவ் தானே?


50. ஜெயில்ல இருக்கற என்னை ஜாமீன்ல எடுக்கவா வந்தே?

 பின்னே? ஜாக்கெட் பிட் எடுக்கவா வருவாங்க?http://www.chitramala.in/photogallery/d/555740-1/praneetha-hot-stills.jpg


51. அய்யய்யோ.. தலைவர் ஜெயிலுக்குள்ளே வரப்போறாரா?

 பார்த்தியா? எப்படி ஃபீல் ஆகறான்னு..

 பொறு .. என்ன சொல்றான்கறதை கவனி.. 

 அவர் வெளியே இருந்தா எந்த தொந்தரவும் இல்லை.. உள்ளே வந்தா கண்டதை எழுதி படி படின்னு உயிரை வாங்குவார்.. 


52.  மத்தவங்க எப்படியோ அரசியல்ல இருக்கறவங்க ஆல் கரண்ட் மேட்டர் அத்துபடியா இருக்கனும்.. நீ என்னடான்னா கம்ப்யூட்டர் தெரியாது. அது தெரியாதுன்னு கதை சொல்லிட்டு இருக்கே.. 53.கட்சியோட  மேல்மட்டக்குழுவே இவ்லவ் கேவலமா இருக்கே? கீழ்மட்டக்குழு எப்படி இருக்குமோ?


54. இந்த தேர்தல்ல பணமும், பிணமும் தான் வெற்றியை நிர்ணயம் செய்யும்.. 55. நீங்க ஒருத்தருக்கு குழி பறிச்சா  உங்க பின்னால ஒருத்தன் உங்களுக்கு குழி பறிச்சுட்டு இருப்பான்கறதை மறந்துடாதீங்க..


56. மக்களை முட்டாள்னு தயவு செஞ்சு நினைக்காதிங்க.  நீங்க தான் முட்டாள் ஆவீங்க.. அவங்களூக்கு யாரை எப்போ எங்கே உக்கார வைக்கனும்னு நல்லாத்தெரியும்.. 


57.. என்னய்யா சிரிப்பு இது? கைக்குழந்தை கக்கா போன மாதிரி? 58. என் குடும்பத்தை தப்பா பேசுனாக்கூட பொறுத்துக்குவேன், ஆனா குடிகாரங்களைத்தப்பா பேசுனா மன்னிக்கவே மாட்டேன்http://3.bp.blogspot.com/-iajB33xDVN0/Then0ulWlpI/AAAAAAAAB9E/n9g7owXah9A/s640/1.jpgaடிஸ்கி - சகுனி திரை விமர்சனம் -http://www.adrasaka.com/2012/06/blog-post_477.html
 

Sunday, June 10, 2012

முன்னணி வசனகர்த்தாக்களின் - 'நான் ரசித்த வசனம்'

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்று விளங்கும் திரைக்கதை - வசனகர்த்தாக்கள் சிலரிடம், ''நீங்கள் எழுதிய வசனங்களிலேயே, நீங்கள் ரசித்து மகிழ்ந்த வசனம் எது?'' என்று கேட்டோம். அவர்கள் ரசித்த சில வசனங்கள்:  'வியட்நாம் வீடு’ சுந்தரம்: 


பிரஸ்டீஜ் பத்மநாபன் ரிட்டையரான அன்று வீட்டுக்குள்ளே வந்ததும், தான் யூஸ் பண்ணின டிஃபன் கேரியர்வைத்த கூடையிடம் பேசுவார்: ''நாளைலேருந்து நீ ஆபீஸுக்குப் போக மாட்டே... இன்னி யோடு சரி!'' அடுத்து, கோட்டுகிட்டே சொல்வார்: ''இனிமே யூ ஆர் நாட் நெசஸரி... என் சர்வீஸே கம்பெனிக்கு நாட் நெசஸரின்னுட்டா... இவ்வளவு வருஷம் வேலை செஞ்சோம்... அட, வயசாயிடுத்துன்னு அவன் ஆத்துக்கு அனுப்பிச்சுட் டான்... நானாவது கேட்டிருக்கலாம். நேக்கு ஒரு பிரஸ்டீஜ். பிரஸ்டீஜ் பத்மநாபனோல்லியோ... வந்துடுத்து... குழந்தைகள்லாம் சின்ன குழந்தைகள்... விவரம் தெரியாம வளர்த்துட்டேன்... பொறுப்பு வரல்லே... சாவித்திரிக்கே இன்னும் பொறுப்பு வரலை...'' என்று சொல்லிவிட்டுத் தாயார் படத்தின் முன்னே நின்று, ''அம்மா! நான் ரிட்டையராயிட்டேன்... உன் குழந்தைக்கு 55 வயசாயிடுத்து... ஹி இஸ் கௌன்ட்டிங் ஹிஸ் டேஸ் டு தி க்ரேவ்''னு சொல்லிண்டே அழுவார் சிவாஜி.கடைசியில் ஆஸ்பத்திரிக்குப் பத்மநாபன் கிளம்பும் முன், தன்னை வளர்த்து ஆளாக்கின அத்தையிடம் பணத்தைக் கொடுத்து... ''நீ காசிக்குப் போகணும்னு சொன்னே பார்... இந்தா, வெச்சுக்கோ'' என்பார். ''இப்ப எதுக்கப்பா?'' என்று அத்தை கேட்பாள்.


''இருக்கட்டும்... வெச்சிக்கோ... நீ முந்திண்டா நோக்கு... நான் முந்திண்டா நேக்கு...'' என்று குலுங்கக் குலுங்க அழுது மற்றவர்களையும் அழவைத்தார் பத்மநாபனாக வரும் சிவாஜி!ஏ.எஸ்.பிரகாசம்: 


'புகுந்த வீடு’ படத்தில் மனைவி ஒரு புதிர் போடுகிறாள். விடுகதைபோலச் சொல்லி விடையும் சொல்லும் அந்த வசனம்: ''சேர்ந்தது ரெண்டு பேரு... சிக்கினது ஒரு புதையல்... ஒருத்தருக்குத் தெரியும், ஒருத்தருக்குத் தெரியாது... இதிலே சேர்ந்தது நீங்களும் நானும்... புதையலைத் தெரிஞ்சது நான். தெரியாதது நீங்க. புதையல்... இப்ப என் வயித்துலே வளர்ந்துக்கிட்டிருக்கற உங்கக் குழந்தை...'''வீட்டு மாப்பிள்ளை’ படத்தில் மாமனார் சுந்தர்ராஜன் தன் இரு மாப்பிள்ளைகளில் பணக்கார மாப்பிள்ளையைத் தன் 'பைப்’புக்கும், ஏழை மாப்பிள்ளையைச் செருப்புக்கும் உதாரணம் காட்டு வார்.


ஏழை மாப்பிள்ளையான ஏவி.எம்.ராஜன் சொல்வார், ''மாமா!... நீங்க கையிலே பிடிச்சுக்கிட்டிருக்கிற 'பைப்’ உங்களைத் தேச்சிக்கிட்டு இருக்கு... நீங்க கால்லே போட்டிருக்கற செருப்போ உங்களுக்காகத் தேஞ்சிக்கிட்டிருக்கு...''விசு: 'அவன்... அவள்... அது’ படத்தில் 'குழந்தை மேல் பாசம்கொண்டு சொந்தம் கொண்டாடக் கூடாது’ என்று கண்டிஷன் போடும் லட்சுமியிடம், ஸ்ரீப்ரியா பதில் சொல்வார்: ''பெத்த பொண்ணை ரயில்வே லைன்லே போட்டுட்டுப் பக்கத்து வீட்டுக்காரனோட ஓடினவளுக்குப் பொறந்தவம்மா நான். என் பரம்பரைக்கே பாசம் கிடையாது... நீ என்னை நம்பலாம்...''


'சதுரங்கம்’ படத்தில் லஞ்சம் வாங்காத ரஜினியை லஞ்சம் வாங்கத் தூண்டுவார் பிரமீளா.


பிரமீளா: உங்க ஆபீஸ் கிளார்க் சிவகுமார் தன் பொண்டாட்டிக்கு வைர மூக்குத்தி வாங்கிக் கொடுத்திருக்கார்... என்ன மூக்குத்தி... வைர... வைர... மூக்குத்தி...


ரஜினி: சிவகுமாரோட பொண்டாட்டி ஊர்லே கண்டவனோட போறாளாம்... நீயும் போறியா..? அப்ப நானும் வைர மூக்குத்தி வாங்கித் தரேன்...மணிவண்ணன்: 


'அலைகள் ஓய்வதில்லை’ படத்தில்:


அம்மா: ஏண்டா விச்சு, பேச முடியாம படுத்துண்டிருக்கியா..? இல்லே, பேசக் கூடாதுன்னு படுத்துண்டிருக்கியா?


விச்சு: அம்மா... அவ இல்லாம என்னாலே இருக்க முடியாதும்மா... பசிக்குது... என்னாலே சாப்பிட முடியலே... தூக்கம் வருது... என்னாலே தூங்க முடியலே... நா அவளைப் பார்க்கணும்... அவளோட பேசணும்... அவளோட வாழணும்... இல்லே, அவளோட சாகணும்மா...


அதே படத்தில் இன்னொரு சீன்ல...


பாதிரியார்: கவலைப்படாதீங்க... கர்த்தரோட ஆசீர்வாதத்தால் எல்லாம் நல்லபடியா நடக்கும்மா...அம்மா: எல்லாம் நல்லபடியா நடந்தா சரிங்க... அது கர்த்தரோட ஆசியிலே நடந்தாலும் சரி, கந்தனோட கருணையாலே நடந்தாலும் சரி...மௌலி: 


பள்ளிப் பருவத்தில் தன் தந்தை மிகவும் கண்டிப்பாகத் தன்னை வளர்த்ததைத் தனக்கு இழைத்த கொடுமையாக எண்ணிக்கொண்டு தன் மகனுக்கு அளவுக்கு மீறி வசதிகள் செய்துதருகிறார் தந்தை. இதனால் பாட்டனார் உள்ளே இருக்கும் ரூமில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடம்பெயர்ந்து வாசல் கதவு வரை வந்துவிடுகிறார்.வாய் மூடிக்கிடக்கும் பாட்டனாரைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வீட்டுக்கு வரும் குடும்ப நண்பன் கான் ஆச்சர்யப்பட்டுக் கேட்கிறான்.


கான்: என்ன பெரியவரே... இங்க மூலையிலே குந்தியிருக்கீங்க...?


பெரியவர்: பேரனுக்கு விவரம் தெரியாம இருந்தப்ப உள்ளாற இருந்தேன். விவரம் தெரிஞ்சுது - ஹாலுக்கு வந்தேன். வேலைக்குப் போனான் - இங்கே வந்துட்டேன். நாளைக்கு வெளியே வராந்தாவில் போடறதுக்குள்ளாற போயிடணும்பா...'ஒரு வாரிசு உருவாகிறது’ படத்தில் இடம்பெறும் இந்த வசனத்தை வயதானவர்களும் ரசிப்பார்கள் என நம்புகிறேன்!நன்றி - விகடன் 

Tuesday, March 06, 2012

சுஜாதாவின் வசனம் எழுதும் ஸ்டைல் - ஷங்கர் சிலாகிப்பு பேட்டி

http://www.extramirchi.com/wp-content/uploads/2010/01/Shankar-Rajini-and-Aishwarya-Rai-at-endhiran-the-robot-on-location.jpg

1.  ''எழுத்தாளர் சுஜாதாவுடன் நீங்கள் படத்துக்கு வசனம் அமைக்கும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன். சில சிரமமான சீன்களுக்கு சுஜாதா சார் பளிச் என்று நச் வசனம் பிடித்த உதாரணம் ஏதேனும்? அப்படி சுஜாதா சார் எழுதிய வசனங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?''

சி.பி - சுஜாதாவின் நாவல்களில் பஞ்ச் கொடுக்கும் ஹீரோயிசம் செமயா இருக்கும்.. வரலாற்று பின்னணியில்  குமுதத்தில் தொடராக வந்த ரத்தம் ஒரே நிறம் நாவலில் கூட அப்படிப்பட்ட பஞ்ச் ஏகத்துக்கும் இருக்கும்..

 ''நாங்க வெளியூருக்கு கதை டிஸ்கஷன் போறதுக்கு முன்னாடி, 'கதை ஃபுல் லைன் ரெடியா இருக்கா, சுபம் போடற வரைக்கும்?’னு கேட்டுக்குவார். டிஸ்கஷன் ஆரம்பிச்சதும் அவர் அமைதியாக் கவனிப்பார். எந்த வசனமோ, கதையோ, காட்சிகளோ, சொல்ல மாட்டார். கதைப் போக்குல, காட்சிகள்ல ஏதாவது சிக்கல் வந்து முக்கி நிக்கிறப்போ மட்டும், எதனால சிக்கல்னு தெளிவுபடுத்தி, 'இந்த ரூட்ல யோசிங்கம்பார். அப்பப்போ சில படங்களையும் சில காட்சிகளையும் ரெஃபரன்ஸுக்கு சுட்டிக்காட்டுவார்.

தீர்க்க முடியாத பிரச்னை ஏதும் வந்தா, மறுநாள் 'Syd Field, Robert Mckee, இவங்க எல்லாம் ஸ்க்ரீன் ரைட்டிங்ல இந்தந்தப் பிரச்னை வந்தா, இந்தந்த சொல்யூஷன் சொல்லியிருக்காங்க. இதை ஃபாலோ பண்ணுங்கம்பார். டிஸ்கஷன் எங்கேயும் தேங்கித் தடை இல்லாம வேகமாப் போறதுக்கு வழிகாட்டுவார். டிஸ்கஷன் முடிஞ்சதும் சீன் ஒண்ணுல இருந்து சுபம் வரைக்கும் என்னை கேசட்ல விவரிக்கச் சொல்லி வாங்கிட்டுப் போயிடுவார்.
ஒரே வாரத்துல ஃபர்ஸ்ட் ஹாஃப் வசனம் வந்துடும். அடுத்த வாரத்துல செகண்ட் ஹாஃப் வந்துடும். செம ஃபாஸ்ட். டிஸ்கஷன்ல உள்வாங்கின அத்தனை விஷயங்களையும் தான் நினச்சதையும் சேர்த்து நிறையவே எழுதி விளாசிப் பின்னித் தள்ளியிருப்பார். சுஜாதா சார், படிச்சுக் காமிக்கும்போது அவரோட ஒன் லைனர்களை எல்லாம் கை தட்டி ரசிப்பேன். அவர் எழுதினதுல இருந்து என்னென்ன எந்த அளவுக்குத் தேவையோ எடுத்து, எனக்கு எப்படி வேணுமோ அப்படி ஒரு டிராஃப்ட் எழுதி திருப்பி அவர்கிட்ட அனுப்புவேன். அதுல அவர் ஒண்ணு ரெண்டு எக்ஸ்ட்ராவா இருக்கிற வார்த்தைகளை அடிப்பார். அசிஸ்டென்ட் டைப் பண்ணப்ப விட்டுட்ட க், ச், ஞ், சின்ன '’, பெரிய 'பிழைகளைச் சரிபண்ணி அனுப்புவார். இதான் எங்க வொர்க்கிங் ஸ்டைல்!

http://2.bp.blogspot.com/_TEAmSL5MboQ/R9QI3Tt2f-I/AAAAAAAAAoE/UXp6XfpK61w/s320/sujatha_OEA_family_3.jpg
'இந்தியன் சந்துரு (கமல்): 'இந்த உலகத்துல இருக்கற எல்லா வழியும் குறுக்கு வழியா மாறிடுச்சு... இது எங்க அப்பாவுக்குப் புரியல!’
'முதல்வன்க்ளைமாக்ஸ்ல ரகுவரன்: இறக்கும்போது சொல்ற, 'That was a good interview...’
'அந்நியன்: 'தப்பு என்ன பனியன் சைஸா? ஸ்மால், மீடியம், லார்ஜ்னு... விளைவுகளோட சைஸைப் பாருங்க... எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ்தான்!’
'சிவாஜி ரஜினி சார்: (ஒரு ரூபாயைச் சுண்டி இறந்துகிடக்கும் சுமனின் நெத்தியில் அடித்து) 'இதைக்கூட நீ எடுத்துட்டுப் போக முடியாது...’
'எந்திரன் சிட்டி: 'என்னைப் படைச்சவர் டாக்டர் வசீகரன்... கடவுள் இருக்கார்...’
- இப்படிப் பல சிரமமான காட்சிகள்ல வர்ற விஷயங்களை ஒரே வரில நச்சுனு சொல்றதுல சுஜாதா சார், சுஜாதா சார்தான்!
அவர் எழுதினதுல எனக்குப் பிடிச்சது 'இந்தியன்தாத்தா பேசற, 'மத்த நாடுகள்ல எல்லாம் லஞ்சம் இருக்கு... அங்க எல்லாம் கடமையை மீறுறதுக்குத்தான் லஞ்சம்... இங்கதான் கடமையைச் செய்றதுக்கே லஞ்சம்கிற வசனம்தான்.
மொத்தப் படத்தோட விஷயமும் வீரியமும் இந்த ஒரே வரியில எவ்வளவு அழகா வந்திருக்கு பாருங்க!''


சி.பி - சுஜாதாவின் இழப்பு இலக்கிய உலகுக்கு மட்டும் அல்ல, சினிமா உலகத்துக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.. அவர் இருந்திருந்தா  இன்னும் பல சயின்ஸ் ஃபிக்சன் ஸ்டோரியும், பல நல்ல சினிமாக்களும் வந்திருக்கும்

http://4.bp.blogspot.com/_AW6skA94IQQ/RofY2vGIbCI/AAAAAAAAAGY/H-SgaLWLKh0/s320/rajini_kamal_05.jpg
2. ''ஒரே படத்தில் கமலையும் ரஜினியை யும் சேர்த்து இயக்கும் எண்ணம் உண்டா?''

சி.பி - அவருக்கு எண்ணம் ஆசை எல்லாம் இருக்கு.. கமல் ரஜினி கூட ஓக்கே சொல்லிடலாம், ஆனா தியேட்டர்ல ரசிகர்கள் நிலைமை? கண்டிப்பா கலவரம் தான் வரும்.. 

 '' 'சிவாஜிரிலீஸுக்கு அப்புறம் ரஜினி சாரே, 'நானும் கமலும் சேர்ந்து ஒரு படம் பண்ணா எப்படி இருக்கும்? நான் வேணா கமல்கிட்ட பேசுறேன்னு சொன்னார். 'ரெண்டு பேரும் சேரும்போது வர்ற பெரிய எதிர்பார்ப்பைத் திருப்திப்படுத்துற அளவுக்கும் ரெண்டு பேரும் கன்வின்ஸ் ஆகிற அளவுக்கு சப்ஜெக்ட்டும் அமைஞ்சா பண்ணலாம்னு நான் சொன்னேன். 'எந்திரன் பார்ட் 2’ கதையைக்கூட ரெண்டு பேரையும்வெச்சு சில சமயம் நான் கற்பனை பண்ணிப் பார்த்திருக்கேன்!
பார்ப்போம்... நாளை நமக்கு என்னவெச்சிருக்குனு யாருக்குத் தெரியும்!''


சி.பி - இதுல என்ன கவனிக்க வேண்டியதுன்னா கமலை ஹீரோவா போட்டு ரஜினியை வில்லனா போட்டாக்கூட ரஜினிதான் ஈசியா பேர் சம்பாதிக்கற மாதிரி அசால்ட்டா ஸ்டைலிஸ் ஆக்டிங்க் கொடுத்து அப்ளாஸ் அள்ளுவார்..
3. ''நீங்கள் நன்றாகக் கவிதை எழுது வீர்களாமே? எனக்காக ஒரு கவிதை சொல்லுங்க, ப்ளீஸ்...''
 ''அப்படியா... யார் சொன்னா..?!

- இது கவிதையானு பாருங்க!''

சி.பி - இதை எங்க ஊர்ல மொக்கைம்போம்..

4. ''சினிமாவில் ஓர் இடம் தேடித் தவித்த ஐஸ்வர்யா ராயையும் இயக்கி இருக்கிறீர் கள்... இந்தியாவின் அடையாளமாக உருவெடுத்த 'மோஸ்ட் வான்டட் அழகிஐஸ்வர்யா ராய் பச்சனையும் இயக்கி இருக்கிறீர்கள். இரு காலகட்டத்திலும் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களைக் கொஞ்சம் சொல்லுங்களேன்?''


சி.பி - கேள்வி சுத்தி வளைச்சு என்ன கேட்க வருதுன்னா மேரேஜ்க்கு முன்னால மேரேஜ் ஆன பிற்பாடு ஃபிகர்ட்ட என்ன மாற்றம்கறதை கொஞ்சம் நாகரீகமா, சுத்தி வளைச்சு கேக்குது.. 

 
 '' 'ஜீன்ஸ்அவங்களுக்குக் கிட்டத்தட்ட முதல் படம்தான். முதல் நாள் பாடல் ஷூட்டிங்லயே டான்ஸ் ரொம்பப் பிரமாதமா ஆடினாங்க. சீன்ஸ் எடுக்கும்போது எல்லா வசனங்களையும் முதல் நாளே வாங்கிட்டுப் போய்ப் படிச்சிட்டு வருவாங்க. கஷ்டமான காட்சிகள்ல, நடிச்சுக் காட்டச்சொல்லி அதை அப்படியே ஃபாலோ பண்ணுவாங்க. சில நாள் லேட்டா வரும்போது கோபமா 'ஏன் லேட்டுனு கேட்டா, 'உடம்பு சரியில்ல... காஸ்ட்யூம் சரியில்லனு சொல்வாங்க. 104 டிகிரி ஜுரம் அடிச்சுத் துவண்டு படுத்திருப்பாங்க. 'ஷாட் ரெடின்னா, அதை வெளிக்காட்டிக்காம உடனே கேமரா முன்னாடி அற்புதமா வொர்க் பண்ணிட்டு, 'கட்சொன்னதும் பொத்துனு போய் பெட்ல விழுந்துடுவாங்க.
உலக அதிசயங்கள்ல பாட்டு எடுத்துக்கிட்டு இருக்கோம். ஒரு நாட்டுல ஷூட் முடிச்சு, சாயங்காலம் ஃப்ளைட் பிடிச்சு இன்னொரு நாட்டுக்குப் போகணும். மிஸ் ஆனா மறுநாள் மொத்த ஷூட்டிங்கும் காலி. மொத்த யூனிட்டும் ஏர்போர்ட் போய், எல்லாரோட லக்கேஜ், எக்யூப்மென்ட்ஸ்லாம் கொண்டுவந்து சேர்த்து, கஸ்டம்ஸ், இமிக்ரேஷன்னு புரொடக்ஷன் ஆளுங்க ஒரு பக்கம் குழம்பி அலைஞ்சுக்கிட்டு இருந்தப்போ, ஐஸ்வர்யா ராய் சட்டுனு எல்லாரோட பாஸ்போர்ட், டிக்கெட்லாம் வாங்கிட்டுப்போய் பத்தே நிமிஷத்துல செக் இன், போர்டிங் பாஸ், லக்கேஜ்னு எல்லாத்தையும் ஒரே ஆளா முடிச்சிட்டு வந்து நின்னாங்க. இப்ப நினைச்சுப்பார்த்தாலும், எப்படி ஒரே ஆளா அதெல்லாம் முடிச்சாங்கனு ஆச்சர்யமா இருக்கு!

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன்ல கடைசி நாள் ஷூட்டிங். கடைசி ஷாட் முடிஞ்சதும் என் காலைத் தொட்டு, 'என்னை பிளெஸ் பண்ணுங்கன்னாங்க. 'அய்யோனு நான் அலறி, எகிறி, 'மூணு படம்தான் பண்ணியிருக்கேன்னேன். 'நோ... யூ ஆர் மை டீச்சர்ன்னாங்க.
இன்னைக்கும் அதேதான். 'ஹி இஸ் மை டீச்சர்னுதான் பேட்டிகள்லயும் மேடைகள்ல யும் சொல்றாங்க. ஒரு சீனியரா ரஜினி சார் கிட்ட அவங்க காட்டுற மரியாதை, அவர் கிட்ட இருந்து எடுத்துக்கிற பிளெஸ்ஸிங்ஸ், மச்சுபிச்சுல உடல் முழுக்க சிவப்புச் சிவப்பா, தடிக்கத் தடிக்கப் பூச்சி கடிச்சும், அதை எல்லார்கிட்டயும் காட்டி சீன் போடாம, க்ரீம் போட்டு மூடி நடிச்ச டெடிகேஷன்... இப்படிச் சொல்லிக்கிட்டே போகலாம்.
என் திருமண நாள் அன்னைக்கு, என் வீட்டுக்கு ரஜினி சார், ஐஸ்வர்யா ராய், சாபுசிரில், ரத்னவேல், எல்லாரும் வந்திருந்தாங்க. ஒரே அரட்டையும் சிரிப்புமா இருந்தது. சாப்பிட எல்லாரும் தயங்கிட்டு இருந்தப்போ சட்டுனு எழுந்த ஐஸ்வர்யா ராய், குழம்புல கரண்டியைப் போட்டு எல்லாருக்கும் பரிமாற ஆரம்பிச்சுட்டாங்க. சாபுவுக்கு ஆச்சர்யத்தில் பேச்சே வரலை.
ஒரு குடும்பப் பெண்ணா, இந்தியப் பெண்ணா, நடிகையா, உலக அழகியா, எல்லா வகையிலும் முழுமையானவர் ஐஸ்வர்யா ராய். அன்றும் இன்றும் மேலும் பண்பட்டவராக!''


சி.பி - ஷங்கர் உருகறதை பார்த்தா இன்னம் கூட ஒரு படத்துல  அவரை யூச் பண்ற ஐடியா இருக்கும் போல ( ஹீரோயினா நடிக்கவைக்க யூஸ் பண்ற ஐடியாப்ப்பா)

5. ''நீங்கள் சமீபத்தில் படித்த புத்தகம்.... ரசித்த சினிமா..?''
 ''லா..ரா. எழுதிய 'அபிதா’.
The Battle of Algiers.''
http://www.behindwoods.com/hindi-tamil-galleries/prabhu-daughter-wedding/Prabhu-07.jpg

6. ''.ஆர்.ரஹ்மானுடனான சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''
''.ஆர்.ரஹ்மான்... நான் சந்தித்தவர்களிலேயே மிகக் கடின உழைப்பாளி. இன்னொரு பக்கம் அவர் ஒரு மிகச் சிறந்த மனிதாபிமானி.
என் மகன் அர்ஜித் பிறந்ததுல இருந்து தொடர்ந்து விரல் உடையறது, தாடை உடையறது, உடல்நிலை சரியில்லாமப் போறதுனு என்னென்ன துயரங்கள் உண்டோ... எல்லாத்தையும் அனுபவிச்சுக்கிட்டு இருந்தான். வாரம் ஒரு தடவையாவது டாக்டர்கிட்ட எதுக்காகவாவது அவனை அழைச்சிக்கிட்டுப் போக வேண்டியிருந்தது. ஆறு வயசுலயே எல்லா டாக்டர் களும் மருந்துகளும் அவனுக்கு அத்துப்படி.
இதைக் கேள்விப்பட்ட ரஹ்மான், 'ஷங்கருக்கு நம்பிக்கை இருக்கோ இல்லையோ... பையனை அழைச்சுக்கிட்டு மவுன்ட் ரோடு தர்ஹாவுக்கு வரச் சொல்லுங்கனு அவர் மனைவி மூலமா என் மனைவிகிட்ட சொல்லியிருக்கார். நானும் பையனுக்குச் சரியானாப் போதும்னு போயிருந்தேன். பார்த்தா, ரஹ்மானே அவங்க அம்மாவோட தர்ஹா வுக்கு வந்திருந்தார். என் பையனுக்காக அரை மணி நேரம் ப்ரே பண்ணாங்க. மந்திரிச்சுக் கயிறு எல்லாம் கட்டினாங்க.
எவ்வளவு பிஸியானவர்? எவ்வளவு பேர் அவர் ஸ்டுடியோவில் அவர் இசைக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கனு எனக்கு நல்லாவே தெரியும். எல்லாத்தையும் விட்டுட்டு, ஒரு மிகச் சிறந்த மனிதாபி மானியா சில மணி நேரங்களை அர்ஜித்துக்காகச் செலவழிச்சது என்னை நெகிழவெச்சுக் கண் கலங்க வெச்சிருச்சு.
நம்ப மாட்டீங்க... ஆச்சர்யமான ஆச்சர்யம்! ரெண்டு மூணு நாள்லயே என் மகனுக்கு இருந்த எல்லாத் தொல்லைகளும் நீங்கி நல்லபடி ஆகிட்டான். 'எப்படி இது சாத்தியம்னுலாம் நான் எந்த ஆராய்ச்சிக்கும் போகலை. பையன் நல்லாகிட்டான். அவ்ளோதான். ரொம்ப சந்தோஷப்பட்டேன். நான் என்னன்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன்பட்டு இருக்கேன்!''


சி.பி - ஹா ஹா அதெல்லாம் ஓக்கே , அந்நியன் படத்துல ஹாரீஸ் ஜெயராஜை மியூசிக் போடச்சொன்னப்போ குமுதத்துல வந்த பேட்டில  என்ன சொன்னீங்க? என்பதை ரீ வைண்ட் செய்யவும் ஹி ஹி  


http://tamilwire.com/images/2008/07/rajini-kamal.jpg