Showing posts with label இயக்கம் -இறங்கி அடிக்கிறீங்களா? - பார்த்திபன்.. Show all posts
Showing posts with label இயக்கம் -இறங்கி அடிக்கிறீங்களா? - பார்த்திபன்.. Show all posts

Thursday, March 06, 2014

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -இறங்கி அடிக்கிறீங்களா? -ஆர் பார்த்திபன் பேட்டி @ விகடன்.

 பேட்டியில் நான் கதை பத்தி எதுவுமே சொல்ல மாட்டேன். ஏன்னா, தயாரிப்பாளர்கிட்டகூட நான் கதை சொல்லலை. அட, கதை ஏங்க..? 'க’கூட சொல்லலை!'' - ஆரம்பத்திலேயே பன்ச் வைத்தார், 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்தை இயக்கிவரும் பார்த்திபன்.
'' 'இதுவரை நான் யாரையும் காப்பி அடிச்சது இல்லை. என் ஒவ்வொரு படத்தையும் சின்சியரா எடுத்திருக்கேன். காலத்துக்கும் பேசப்படும் படம்’னு சொல்றதெல்லாம் எனக்கான பெருமைதானே தவிர, 'ஓடுச்சா... இல்லையா?’ங்கிறதுதான் இங்கே கடைசியாத் தொக்கி நிக்கிற கேள்வி. அதனால், 'குடைக்குள் மழை’ பட ரிஸ்க் எல்லாம் எடுக்காம, என் அடையாளத்தையும் மிஸ் பண்ணாம, கல்லா நிறைப்பதற்கான கமர்ஷியலைச் கச்சிதமாக் கலக்கியிருக்கேன்!
இந்தப் படத்துக்குள்ளேயே இன்ஃபிலிம் மாதிரி ஒண்ணு பண்ணியிருக்கேன். அதில் ஒருத்தன், 'ஏண்டா... வசனமே இல்லாம கமல் 'பேசும் படம்’ எடுத்திருக்கார். நாம கதையே இல்லாம ஒரு படம் பண்ணா என்ன?’னு கேப்பான். '120 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு வர்றவன், 'கதை எங்கடா?’னு சொக்காயைப் பிடிச்சுக் கேட்டா, என்னடா பண்ணுவ?’னு சொல்வான் இன்னொருத்தன். 'அப்ப, 'எ ஃபிலிம் வித்தவுட் எ ஸ்டோரி’னு டேக் லைன் போட்டு, ரசிகர்களை ஆரம்பத்திலேயே ட்யூன் பண்ணிக் கூட்டிட்டு வருவோம்’பான். அவ்ளோதான் படம்! மெல்லிய இழைக்கும் அடுத்த ரக மெல்லிய இழை அளவுகூட படத்தில் கதை இல்லை!''
''ஆக, இப்போ கமர்ஷியல் பக்கம் திரும்பிட்டீங்களா?''
''சமீபத்தில்... 82 வயசுப் பெரியவர் ஒருத்தரைச் சந்திச்சேன். 'அப்பப்ப நினைவு தப்புது தம்பி. எதுவும் ஞாபகம் இருக்கிறது இல்லை. உங்க 'ஹவுஸ்ஃபுல்’ பாத்திருக்கேன்’னு சொல்லி சீன் பை சீன் சொல்லிப் பாராட்டினார். நினைவு தப்புதுனு சொல்றவர் நினைவில், நம்ம படம் இருக்கிறது சந்தோஷம்.
நான் சினிமாவுக்காக அம்மா-அப்பாவை விட்டு, ஊரைவிட்டுக் கிளம்பி வந்தவன் இல்லை. சென்னை அரும்பாக்கத்துல வீடு. சினிமா வாய்ப்புத் தேடி தேனாம்பேட்டை லாட்ஜ் ரூம்ல தங்கியிருந்தேன். அந்தப் பிரிவுக்கே தினமும் மூணு தடவை அழுவேன். முதல் வெற்றி, தொடர் தோல்வினு ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களைப் பார்த்தாச்சு. இருந்தாலும் நான் விரும்பும் சினிமாவை, நான் ஆசைப்பட்ட மாதிரி எடுத்திருக்கேன்னு ஒரு சந்தோஷம் மனசுல இருக்கு. இப்போ இந்தப் படத்தில் ஒரு டைரக்டர் கேரக்டர், 'இனிஷியல் மட்டும் இல்லை... குழந்தையும் எனக்குப் பிறந்ததா இருக்கணும்’பார். அப்படி என் படங்கள் என் படங்களா மட்டுமே இருந்திருக்கு. அது இங்கே ரொம்பப் பெரிய விஷயம்!''
''படத்துல வேற என்ன புதுமை?''
''தலைப்பே புதுமை... அதுலயும் ஒரு புதுமை வெச்சிருக்கேன். 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’கிற நான்கு வார்த்தைகளை ஆளுக்கொரு வார்த்தையா நான்கு இயக்குநர்கள் எழுதியிருக்காங்க. அந்தக் கையெழுத்தையே டைட்டில் டிசைன் ஆக்கிட்டோம். 'இந்தத் தலைப்பை எழுதித் தந்த அந்த நான்கு மாஸ்டர் இயக்குநர்கள் யார்னு கண்டுபிடிக்கச் சொல்லி ஒரு போட்டி வெக்கலாம்னு யோசனை. பார்ப்போம்!''
''புதுமுகங்களோட களம் இறங்கிருக்கீங்க... ஆனா, விஜய் சேதுபதி, ஆர்யானு பெரிய தலைகளும் தட்டுப்படுறாங்களே!''
''நான் நடிக்காம டைரக்ஷன் மட்டுமே பண்ணும் முதல் படம் இது. 'மைனா’ல ஆரம்பிச்சு 'குக்கூ’ வரை நான் சம்பந்தப்படலைன்னாலும், என்னை இம்ப்ரெஸ் பண்ணின படங்கள், டிரெய்லர் பத்தி முடிஞ்சவரைக்கும் தகவல் பரப்புவேன். இப்படி என் சினிமானு இல்லாம, எனக்குப் பிடிச்ச சினிமாக்களையும் புரமோட் பண்றதை முழு நேர வேலையாவே வெச்சிருக்கேன். அதன் பாசிட்டிவ் சைடு எஃபெக்ட்தான் விஜய் சேதுபதி உள்பட பல பிரபலங்கள் என் படத்தில் நடிக்கிறது. விஜய் சேதுபதிகிட்ட, 'நீங்க அப்படியே விஜய் சேதுபதியாகவே வந்துட்டுப் போற மாதிரி ஒரு சீன்’னு சொன்னதும், 'நான் நாளைக்கே வந்துடவா சார்?’னு கேட்டார். இதேபோல சேரன், ஆர்யா போல சில பிரபலங்கள் நிஜ முகத்தோடவே வர்றாங்க!''

''இளைஞர்களின் குறும்பட டிரெண்டுக்கு ஏத்த மாதிரி நீங்களும் இறங்கி அடிக்கிறீங்களா?''
''என் மகன் ராக்கி, விஸ்காம் படிக்கிறார். நான் 100 வார்த்தை பேசினா, மூணு வார்த்தையில பதில் சொல்வார். அவர்கிட்ட, 'நீ வந்து ஒருதடவை என் படத்தைப் பார்த்துட்டு போ...’னு சொன்னேன். 'விச் ஃபிலிம்?’னு கேட்கிறார். அவங்க வேவ்லெங்த்துக்கு நான் இல்லைங்கிற ஃபீலிங்ல இருக்காரோ என்னவோ!
சமயங்கள்ல அவரை கார்ல லாங் டிரைவ் அழைச்சுட்டுப் போய், இம்ப்ரெஸ் பண்ண முயற்சி பண்ணுவேன். ஆனா, அவர் வெளியே பார்த்துட்டே இருப்பார். ஒருதடவைகூட அவர் என்னை இம்ப்ரெஸ் பண்ண முயற்சி பண்ணதே இல்லை. அவருக்கு போட்டோகிராஃபியில் ரொம்ப இஷ்டம்.
சமீபத்துல, ஒரு ஆள், ஒரு நாய், ஒரு பாட்டில் சேர்ந்து இருக்கும் போட்டோ எடுத்து, அதுக்கு 'தேவதாஸ்’னு கேப்ஷன் வெச்சு ஃபேஸ்புக்ல போட்டிருந்தார் ராக்கி. 'உனக்கு தேவதாஸ் பத்தி எப்படித் தெரியும்?’னு கேட்டேன். 'சும்மா பழைய படங்களை கோ-த்ரூ பண்ணேன். அதில் இருந்து பிடிச்சேன்’னு சொன்னார். இதெல்லாம் எதுக்குச் சொல்றேனா, இன்றைய இளைஞர்கள் எதிர்காலம் குறித்த எந்த அச்சமும் அவசரமும் இல்லாமல் இருக்காங்க. ரொம்பத் தெளிவாவும் இருக்காங்க. அவங்கவங்களுக்கு அவங்கவங்க ஸ்டைல்!
என்ன கேட்டீங்க இறங்கி அடிக்கிறீங்களானுதானே? நான் இறங்கவே இல்லை. இன்னும் இளைஞனாவே இருக்கிறதுனால அவங்க எதிர்ப்பார்ப்பை ஈடு செய்யிறது ஒண்ணும் கஷ்டமா இருக்காது. அதை இந்தப் படம் மூலம் நீங்க புரிஞ்சுப்பீங்க!'


thanx - vikatan