Friday, August 24, 2018

= ப்ரிபெய்டு பிளானா? போஸ்ட் பெயிடு பிளானா?

அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் #
# அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிடுமா?இது என்ன புது சிஸ்டம்?


=============


2 கலைஞருக்கு மெரினாவில் தரவில்லை என்றால் நானே போராட்டம் நடத்திருப்பேன்- ரஜினி
// எல்லாத்துக்கும் போராடுனா நாடே சுடுகாடாயிரும் னு"யாரோ சொன்னாகளே?


==============


3 திருவாரூர்..திருப்பரகுன்றம் சட்டமன்ற இடைதேர்தலில் போட்டி இடுவோம்- சீமான்..
# திருப்பரங்குன்ற முருகருக்கு அரோகரா அரோகரா வேட்பாளருக்கு கோவிந்தா கோவிந்தா


==============4 எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா?.. அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க மிரட்டல் # ஜெ,மீண்டும் ஆட்சிக்கு வந்தா ஆண்டவனால கூட தமிழகத்தைக்காப்பாத்த முடியாது"னு சொன்னப்ப ஜெ"டூர் போய்ட்டாரா?


=========


5 அரசியலில் காமராசர்
கக்கன் மாதிரி உதாரணம் காட்டக்கூட இப்போது ஆள் இல்லை நடிகர் பார்த்திபன் வேதனை -செய்தி # உதாரணபுருசனா மாறப்போறேன்னு இவரும் கட்சி ஆரம்பிச்சுடுவாரோ?


=============6 தமிழக முதல்வரைக் கண்டு இயற்கைச் சீற்றங்களே அஞ்சுகின்றன.
-செல்லூர் ராஜூ தில்லாலங்கடி ஆள் னா அவரை கேரளா ஆலுவா ஏரியா க்கு அனுப்பி வைக்கலாமே?


==================


7 மதுரைக்காரர்கள் உண்மையைத்தான் பேசுவோம் -செல்லூர் ராஜு # சிவப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் காமெடி யை மிஞ்சும் காமெடி


======================


8 திமுக வில் கொலை, கொள்ளை குற்றவாளிகளுக்கு இடம் இல்லை ~ஸ்டாலின்
# அப்போ வேட்பாளர்களுக்கு எங்கே போவீங்க? ஏற்கனவே எம் எல் ஏ வா இருந்தவங்களுக்கு சீட் இல்லைங்கறாரா? அண்ணன் அழகிரிக்கான அட்டாக்கா?


=============9 விஜய்க்காக அண்ணாமலை படத்தை டிங்கரிங் செய்யும் அட்லி # டைட்டில் "வடை மாலை"


=================


10 வெள்ளத்தால் பாதித்துள்ள கேரள மக்களுக்கு நடிகர் விஜய் ரூ. 70 லட்சம் நிதியுதவி.
# தமிழ் சினிமா ஹீரோக்களிலேயே இதுவரை அதிகம் தந்தது இவர்தான்,குட்


===================


11 சென்னை வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக மாற்றினால் விரைவாக செல்லலாம்.. 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் # மதுவிலக்கு,சிகரெட் பிரச்சனை,இவற்றைத்தொடர்ந்து பாமக இதிலும் ஜெயிக்க வாழ்த்துகள்.மக்கள் நலனுக்கானது


====================


12 என்னுடைய ஆதங்கத்துக்கு காலம் பதில் சொல்லும்..!" கருணாநிதி நினைவிடத்தில் கொந்தளித்த அழகிரி | மாசமும் அமாவாசை உண்டு,ஒவ்வொரு அரசியல்"கட்சிலயும் அமைதிப்படை அமாவாசை உண்டு,அதிமுக வுக்கு ஒரு ஓபிஎஸ் ,திமுக வுக்கு அழகிரி


========================13 கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை பாஜக அரசு உருவாக்கியுள்ளது - பிரதமர் மோடி # மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அவ்ளோ பேர் இருப்பாங்களா?ஒரு வேளை பக்கோடா ,போண்டா,பஜ்ஜிக்கடை ஓனர்சை சொல்றாரா?===================


14 நீங்கள் பயன்படுத்துகின்ற இணையதளம் கலைஞர் போட்ட பிச்சை - தமிழன்பிரசன்னா.#
நரசிம்மராவ் ஆட்சி மத்தியில் ஜெ அரசு மாநிலத்தில். 1995 ஆகஸ்ட் மாதம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. என்ன வேணா அடிச்சு விடுவாங்க..போல====================


15 திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
# கருணா"நிதி" உயிரோட இருந்தப்பவே பிரச்னை கிளப்பி இருக்கலாமில்ல?===================


16 திமுகவை ஒழிக்க மத்திய அரசு திட்டம்.. சுப்புலட்சுமி ஜெகத பகிரங்க குற்றச்சாட்டு # கவலைப்படாதீங்க தமிழகத்தில்
ஊழல் ,லஞ்சம்,சாராயம் ,திராவிடக்கட்சிகள் இந்த நான்கையும்"ஒழிக்கவே முடியாது


===================


17 காலம் காலமாக தி.மு.க விலும், அ.தி.மு.க விலும், ஓசி சோறு உண்ணும் ஐயா கி.வீரமணி அவர்கள் இதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன்.-தயா அழகிரி # சாம்பார் ,ரசம்,தயிர் அவர் வீட்ல ரெடி பண்ணிக்குவாரோ?===================18 வெளியில் கடையில் ரூ,25க்கு விற்கும் கோதுமையை, ரூ.2 க்கு அரசு கொடுக்கிறது - பிரதமர் மோடி #
ரொம்ப நல்ல விஷயம்.. ஆனா அதை உற்பத்தி செய்யுற விவசாயிக்கு நட்டம் தானே?விவசாயம் தழைக்க,விவசாயி பிழைக்க வழி என்ன?


==================19 தமிழகத்தை காப்பாத்த மூணு ப்ளான் வைத்துள்ளேன்! - ரஜினிகாந்த் # ப்ரிபெய்டு பிளானா? போஸ்ட் பெயிடு பிளானா?ஜியோ சிம் பிளான்தான் இப்ப டாப் ல இருக்கு


===============


20 குடும்ப அரசியல் கூடாது என்பதற்காகவே கட்சி தொடங்கினார் எம்.ஜி.ஆர் - மாஃபா பாண்டியராஜன் "சசிகலா குடும்பம் ஆதிக்கம் ,ஓபிஎஸ் குடும்ப ஆதிக்கம்,
அதிமுக எம்.பி ஜெயவர்தன் (அமைச்சர் ஜெயக்குமாரின் மகன்)இவங்க எல்லாம் எந்த லிஸ்ட்?


===============

1 comments:

சேக்காளி said...

// எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்திருந்தால் ரஜினி நடமாடியிருப்பாரா?.. அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க மிரட்டல்//
அந்தம்மா இருந்தா மைக் டைசன் வாயை தொறக்க முடியுமா?