Friday, July 26, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 26.7 2013 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1.பட்டத்து யானை - விஷாலின் பட்டத்து யானை படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. 


மலைக்கோட்டை படத்துக்குப் பிறகு விஷால்-பூபதி பாண்டியன் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம்தான் பட்டத்து யானை. அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைத்துள்ளார்.


நகைச்சுவை நடிகர் சந்தானம் ஹோட்டல் அதிபராக நடிக்க, அவரிடம் வேலை பார்ப்பவராக நடித்திருக்கிறார் விஷால். பட்டத்து யானை திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படம் தணிக்கைக் குழு பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான யு சான்றிதழ் கொடுத்துள்ளது.


மலைக்கோட்டை படத்தை தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால்-பூபதி பாண்டியன் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கும் படம் பட்டத்து யானை.


இதில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா. திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை தனது மகளுக்கு இருந்ததால்தான் பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகம் செய்தாராம் அர்ஜூன். அதோடு படப்பிடிப்பு சென்னையில் நடந்த போது கூட தன் மகளை பார்ப்பதற்காக ஸ்பாட்டுக்கு செல்லவில்லையாம். காரணம் என்னவென்றால் தன்னை பார்த்தால் மகளுக்கு நடிப்பு சரியாக வராது என்பதால்தான்.


இருப்பினும் ஐஸ்வர்யாவின் நடிப்பு குறித்து இயக்குனர் மற்றும் விஷாலிடம் அடிக்கடி கேட்டு தெரிஞ்சிகிடுவாராம். அந்த வகையில் தனது மகள் முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு நடித்திருப்பதாக சொல்கிறார்கள். இந்நிலையில் பட்டத்து யானை படம் வெளியாவதற்குள் மேலும் இரண்டு நிறுவனங்கள் ஐஸ்வர்யாவின் கால்ஷீட் கேட்டுள்ளனர்.


ஆனால் அர்ஜூனோ படம் வெளியான பிறகு புதிய படங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறி அனுப்பி வைத்துவிட்டாராம். இதனிடையே பட்டத்து யானை திரைப்படம் வரும் 26ம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஈரோடு அபிராமி , ஆனூர், வி எஸ் பி ரிலீஸ் 

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்   


http://www.adrasaka.com/2013/07/blog-post_1882.html



2. சொன்னா புரியாது -


கலகலப்பு வெற்றிக்குப் பிறகு மிர்ச்சி சிவாவின் கலக்கல் காமெடியில் உருவாகி வரும் திரைப்படம் "சொன்னா புரியாது'.


இந்தப் படத்தை சி.எஸ். அமுதனின் உதவி இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கியுள்ளார். யதீஷ் மஹாதேவ் இசையமைத்துள்ளார்.  சிவாவுக்கு ஜோடியாக வசுந்தரா நடிக்கிறார். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவிட்ட நிலையில் தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. எனவே, இம்மாத இறுதிக்குள் திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் மிர்ச்சி சிவா காமெடியில் முத்திரை பதிக்க இருக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


சொன்னா புரியாது படத்துக்கு இந்தியில் பாடல் எழுதினார் சிவா. தமிழ்படம் ஹீரோ சிவா நடித்திருக்கும் படம் சொன்னா புரியாது. வசுந்தரா ஹீரோயின். இப்படம் பற்றி இயக்குனர் கிருஷ் ணன் ஜெயராஜ் கூறியதாவது: ஹாலிவுட் படங்களுக்கு தமிழில் குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராக நடிக்கிறார் சிவா.


ஜாக்கிசான், ஜெட்லி போன்றவர்களின் படங்களுக்கு தமிழில் பேசும் காட்சிகள் வயிற்றை பதம் பார்த்துவிடும். திருமணம் செய்துகொண்டால் சுதந்திரம் போய்விடும் என்ற எண்ணம் கொண்ட சிவாவுக்கு அவரது அம்மா திருமணம் செய்து வைக்க எண்ணுகிறார். இதிலிருந்து நழுவிச் செல்லும் சிவா, அம்மாவின் வற்புறுத்தலுக்காக திருமணத்துக்கு ஒப்புக்கொள்கிறார்.


 பெண் பார்க்க வசுந்தரா வீட்டுக்கு செல்கின்றனர். அந்த குடும்பம் மிகுந்த கட்டுப்பாடுடன் வாழ்கிறது. செல்போன் பேசக்கூடாது, பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று கண்டிஷன் போடுகின்றனர். வசுந்தராவும் ஒரு கொள்கையுடன் வாழ்கிறார். சிவா, வசுந்தரா சேர்ந்து அடிக்கும் லூட்டி கிளைமாக்ஸ் வரை அமர்க்களப்படுத்தும்.



 இப்படத்துக்காக இந்தியில் ஒரு பாடல் தேவைப்பட்டது. இந்தி எனக்கு தெரியும் என்று சிவாவே அந்த பாடலை எழுதினார். அதில் வரும் வார்த்தைகள் எவ்வளவு சரி என்பது படம் வந்தபிறகுதான் தெரியும். அந்த பாடலை அவரே பாடியும் இருக்கிறார். யதிஷ் மகாதேவ், இசை. ஆர்.சரவணன், ஒளிப்பதிவு.


26ம் தேதி ரிலீஸ்.

 
 3. நஷா -  ஹிந்திப் படத்தில் தாராளமாக நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே.


பிரபல மாடலான பூனம் பாண்டே, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக சாலையில் ஓடுகிறேன் என்று அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.


இப்போது தனது முதல் படமான நஷா மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.


இதுகுறித்து பூனம் பாண்டே கூறியதாவது: நஷா படத்தில் தாராளமாக நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளேன். இதுபோன்ற காட்சிகளில் நடிக்க நான் கூச்சப்படுவதில்லை. ரசிகர்களை திருப்திபடுத்துவதே எனது நோக்கம். மஹாபலேஸ்வரில் இப்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.


தாராளமான காட்சிகள் என்பதால் ஹோட்டல் அறைகளில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது என்கிறார் படத்தின் இயக்குநர் அமித் சக்சேனா. இவர்தான் ஜிஸ்ம் பட புகழ் இயக்குநர் ஆவார்.

இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றால், அவர்களுக்காக, நிர்வாணமாக நிற்பதற்கு தயார் என, 2011ம் ஆண்டு பூனம் பாண்டே என்ற மாடல் அழகி, ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். அதுவரை யாரும், அவரை பெரிய அளவு கண்டுகொள்ளாமல் இருந்த நிலை அதோடு  மாறியது. பின் இடைவிடாது, இதைபோன்ற நாடகங்களை அரங்கேற்றினார். அதோடு, அவரது அரை நிர்வாண படங்களை, அவரே தனது இணைய தளத்திலும், டுவிட்டரிலும் வெளியிட்டுக்கொள்வார்.

இது சம்பந்தமாக, அவருக்கு பெங்களூரூ கோர்ட் ஒன்று "சம்மன் அனுப்பி உள்ளது. இந்த நாடகங்கள் எல்லாம், அவர் பக்கம்  கவனத்தை ஈர்ப்பதற்கும், அதன் மூலம், ஹிந்தி திரைப்படங்களில் வாய்ப்பை  பெறுவதற்கும் என, அனைவருக்கும் தெரிந்ததே. இந்த  முயற்சியில், ஒரு ஆண்டு ”சுய விளம்பரத்திற்கு பின் வெற்றி பெற்று உள்ளார். "நஷா என்ற கவர்ச்சி படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அடுத்து, "இப்போவாவது இவரது நாடகங்கள் ஓயும் என, இந்தி பட வட்டாரங்களில்  பேசப்படுகிறது.

குணச்சித்திரக்குன்று  கண்ணியத்தின் வென்று  ஓப்பன் யுனிவர்சிட்டி சேர்விமன் பூனம் பாண்டே நடித்த (!!!) நஷா ஹிந்திப்படம் ஆடி முதல் வெள்ளிக்கு
















 4.
  வோல்வரின் மிஸ்டீரியஸ் ஆரிஜின்ஸ்

வீர ஜேக்மேன் (மியாமி ஹெரால்டு) "வோல்வரின் நுழைந்து தீ மூச்சுவிடும்" - ஒரு பழிக்கு உடன்! இந்த துடிப்பு-படுவேகமாக நடவடிக்கை திரில்லர் லோகன் / வோல்வரின் மிஸ்டீரியஸ் ஆரிஜின்ஸ் ஒரு ரேஸர்-கூர்மையான அடமண்டியத்தால் நகங்கள் மூழ்கிவிடும்: அவரது epically வன்முறை மற்றும் காதல் கடந்த, விக்டர் கிரீட்டாக / சப்ரிடூத்தின் (இவருடன் லீவ் ஸ்க்ரெய்பர்) தனது சிக்கலான உறவு, மற்றும் அவரது விடுக்கிறது என்று அச்சுறுத்தும் வெப்பன் X நிரலின் நிலையான கோபத்திலிருந்து. வழியில், வால்வரின் மேலும் டெட்பூலாக (ரியான் ரெனால்ட்ஸ்) மற்றும் கேம்பிட் (டெய்லர் கிட்ஸ்ச்) உள்ளிட்ட புகழ்பெற்ற புதிய மரபுபிறழ்ந்தவர்களின், எதிர்கொள்கிறான். இந்த ஆழமான, இருண்ட, இன்னும்-கண்கவர் விட எப்போதும் "berserker" செல்கிறேன் எக்ஸ் மென் வீர காவியத்தின் அத்தியாயம்!

In modern day Japan, Wolverine is out of his depth in an unknown world as he faces his ultimate nemesis in a life-or-death battle that will leave him forever changed. Vulnerable for the first time and pushed to his physical and emotional limits, he confronts not only lethal samurai steel but also his inner struggle against his own immortality, emerging more powerful than we have ever seen him before.



BAJATEY RAHO

There's always a wrong way to do the right thing!

Director:


Writers:

(story), (dialogue)

Stars:

, ,

2 comments:

'பரிவை' சே.குமார் said...

பட்டத்து யானை மட்டுமே பட்டம் சுமக்கும் என்று நினைக்கிறேன்...

'பரிவை' சே.குமார் said...

பட்டத்து யானை மட்டுமே பட்டம் சுமக்கும் என்று நினைக்கிறேன்...