Tuesday, July 02, 2013

WORLD WAR - Z - சினிமா விமர்சனம்

 

 ஹீரோ ஒரே ஒரு சம்சாரம் , 2 குழந்தைகளோட சந்தோசமா இருக்கார். அவர் ஐ நா வில் வேலை செஞ்சவர். அந்நியன் ல அம்பி நமக்கு தெரியும் . சோம்பி தெரியுமா? அதாவது  மனிதர்களை சாப்பிடும் இனம். ஒரு குறிப்பிட்ட வைரஸ் தாக்கிட்டா  சாதா மனிதன் கூட சோம்பியா மாறிடுவான் , உதாரணத்துக்கு நேர்மை , நாணயம் என வசனம் பேசும் நியாயஸ்தன் கூட திமுக வில் சேர்ந்தாலோ , கலைஞர் கூட சேர்ந்தாலோ ஊழல் வாதி ஆகிடற மாதிரி . (சோம்பி = பிரேத மனிதர்கள் )


எப்படியோ உலகத்துல இந்த சோம்பி பரவிடுச்சு . அவங்க  உலகம் பூரா இருக்கும் ஆட்களை கடிச்சு வைரசை பரப்பாம இருக்க  என்ன வழி?  ஒரு விஞ்ஞானி  அதை ஆராய்ச்சி பண்றாரு. அதுக்கு ஹீரோ உதவி பண்ணனும்.


 ஆரம்பத்துல ஹீரோ முடியாது , நான் தான் ஓய்வு பெற்ற ஆஃபீசர் ஆச்சே? அப்டினு பம்மறாரு. ஆனா  நிர்வாகம் அவருக்கு எப்படி செக் வைக்குதுன்னா  அவர் ஓக்கே சொன்னாத்தான் அவரோட குடும்பத்தை பாதுகாப்பான இடத்துல வெச்சிருப்போம்னு கிட்டத்தட்ட மிரட்டுது
 வேற வழி இல்லாம  ஹீரோ அந்த விஞ்ஞானியோட கிளம்பறாரு. எதிர்பாராத ஒரு விபத்துல அவர் ஆள் அவுட் . இப்போ ஹீரோவே  அந்த வேலையை செய்ய வேண்டிய கட்டாயம் 

 உலக நாடுகள் பூரா சோம்பி பயத்துல இருக்கும்போது இஸ்ரேல் நாட்டில் மட்டும் இப்படி பிரச்சனை வரும்னு முன் கூட்டியே கண்டு பிடிச்சு  அவங்க நாடை சுத்தி சுவர் அரண் எழுப்பி பாதுகாப்பா இருக்காங்க . அவங்களுக்கு மட்டும் எப்படி இந்த மேட்டர் தெரிஞ்சுது .? அதை கண்டு பிடிச்சா  ஏதாவ்து க்ளூ கிடைக்குமேன்னு ஹீரோ இஸ்ரேல் போறார். 


 வேல்ஸ் நகரில் இதை தடுக்கும் மருந்து இருப்பது கண்டு பிடிக்கப்படுது . ஆனா அந்த ஹாஸ்பிடலில் சோம்பி ஆட்கள் இருக்காங்க.  போனா பிடிச்சு கடிச்சு வெச்சுடுவாங்க , ஹீரோ எப்படி எஸ் ஆக முடியும்?  

 என்ன நடக்குது ?  எப்படி ஹீரோ  உலகத்தை ரட்சிக்கிறார்? என்பதே சுவாராஸ்யமான திரைக்கதை 

 ஹீரோ பிராட் பிட் . மிக எளீமையான , யதார்த்த மான நடிப்பு . படம் பூரா இவர் ஆட்சிதான் . நல்லா பண்ணி இருக்கார் . குட்


 ஹீரோயின் மிரில்லி ஈனோஸ் . பிரமாதமான ஃபிகர்னு சொல்ல முடியலைன்னாலும்  ஓக்கே ரகம் தான் 


ஹீரோவுக்கு இன்னொரு ஜோடியும் உண்டு . அந்த ஃபிகர் கூட தேவலை 
இயக்குநர் பாராட்டு பெறும்  இடங்கள்


1. படத்தின் திரைக்கதை மிக சுவராஸ்யமா அமைக்கப்பட்டிருக்கு . நம்ப முடியாத கதையை நம்பும்படி சொல்ல ஒரு கெத்து வேணும், அது இவர் கிட்டே இருக்கு 


2. இஸ்ரேல் நாட்டில் 100 அடி பாதுகாப்பு சுவரில் சோம்பிகள் ஏறி வரும் காட்சி அடேங்கப்பா ,. செம பிரம்மாண்டம் , கலக்கலான ஒளிப்பதிவு , சி ஜி ஒர்க்  ( கம்ப்யூட்டர் கிராஃபிகஸ் ) கலக்கல் 


3. ஹீரோ தன் மனைவி ஹீரோயினை விட்டு ஆக்‌ஷன் பிளாக்கில் இறங்கும்போது ரசிகர்களுக்கு போர் அடிச்சுடக்கூடாதுன்னு இன்னொரு  ஃபிகரை சாமார்த்தியமா சேர்த்துக்கிட்டது 


4. இந்த மாதிரி சோம்பி , டிராகுலா , பேய் வகையறா கதைகளில் அருவெறுப்பான ரத்தம்  சிந்தும் , கோர முகங்க:ள் அடிக்கடி வரும் , நல்ல வேளை இதில் அது தவிர்க்கப்பட்டிருக்கு 


5. நம்ப முடியாத சஸ்பென்ஸ் பட வகையறாவில்  மிக விறு விறுப்பான ஹாலிவுட் படம் கொடுத்ததற்கு ஒரு ச்பாஷ் . ஒரு காட்சியில் கூட முகம் சுளிக்க வைக்கும் விதத்தில் கேமரா ஆங்கிள் இல்லை 


 


  இயக்குநரிடம் சில கேள்விகள்  ( எப்படியும் அவருக்கு தமிழ் தெரியாது ) 


1.  அவ்வளவு பெரிய வல்லரசு நாட்டில் ரிட்டயர்டு ஆன ஒரு ஆஃபீசரிடம் ஒரு உயர் அதிகாரி அப்படி கெஞ்ச வேண்டுமா? வேறு ஆளா இல்லை? விக்ரம் படத்தில் கமலிடம் கெஞ்சுவது மாதிரி . ஹீரோ பில்டப்புக்காக ஓவரா ஏத்தி விடக்கூடாது 


2. ஹாலிவுட் படத்துல டி ஆர் ன் ஒரு தாயின் சபதம் படத்துல இருந்து ஒரு முக்கியமான சீனை உருவி இருக்காங்க ஹா ஹா செம. கோர்ட்டில் விஷம் இல்லை என நிரூபிக்க  டி ஆர் அந்த விஷ பாட்டிலையே எடுத்து விஷத்தை குடிச்சுட்டு  ட்ரீட்மெண்ட் பண்ணிக்குவார். அது போல சோம்பிகள் ஆரோக்கியமான ஆட்களைத்தான் தாக்குது ,நோய் இருந்தா  தாக்காது என கண்டு பிடித்து நோய்க்கிருமிகளை தன் உடம்பில் ஏத்திக்கறது போலவும் , ஜெயிக்கறது போலவும் காட்சி . 


3. அந்த விஞ்ஞானி கேரக்டர் எதுக்கு வருது? அவரை ஏன் தேவை இல்லாம சாகடிக்கனும்?


4. இஸ்ரேல்ல ஹெலிகாப்டர் ரோந்து நடந்துட்டே இருக்கு . காம்பவுண்ட் கேட்ல சோம்பிகள் ஏறுவது அவங்க பார்க்கலையா? ரேடார் எல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கு?  அவங்க ஏறி வரும் வரை ? 


5. சோம்பிகளை தலையில் சுட்டால் செத்துடும்னு ஒரு டயலாக் வருது . வேற எங்கே சுட்டாலும் தப்பிடும்னு சொல்றாங்க , ஆனா ஆளாளுக்கு அதை ஏன் கண்ட இடங்கள்ல சுடறாங்க?
 


 சி பி கமெண்ட் - குடும்பத்துடன் எந்த பயமும் இல்லாம பார்க்கலாம். ஈரோட்டில் 3 டி எஃபக்ட் இல்லை . ஆனா 3 டியில் பார்த்தால் இன்னும் சூப்ப்பராக இருக்கும்னு தோணுது . டோண்ட் மிஸ் இட்