Saturday, July 13, 2013

காதலே என்னை காதலி -சினிமாவிமர்சனம்

 

பஞ்சத்துக்குப் பிறந்த  பஞ்சப் பரதேசிங்க  2 பேரு  ஒரு 65 மார்க்ஃபிகரை யாருமே இல்லாத ஒரு அத்துவானக்காட்டில் துரத்தறாங்க. ( டேய், அதான் 3 பேரு இருக்காங்களே, அப்புறம் எப்படி யாருமே இல்லாத காடு ? ) . அட, ஓப்பனிங்க்லயே செம கிளுகிளுப்பா இருக்கேன்னு நிமிர்ந்து உக்கார்ந்தா அவனுங்க 2 பேரும் அந்த ஃபிகர் ஹேண்ட் பேக்கை பிடுங்கிப்பார்த்து அதுல காசு ஏதும் இல்லைன்னு அப்படியே அவளைதள்ளி விட்டுட்டுப்போய்டறானுங்க . அடேங்கப்பா , உத்தமவில்லன் கமல் இல்லை. இவனுங்க தான்.


ஹீரோ அங்கே வர்றார்.ஹீரோயினை தூக்கி ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு போய்டறார்.அகத்தியன் ன்  காதல்கவிதை ரேஞ்சுக்கு 2 பேரும் ஓவரா ஃபீல் பண்ணி லவ்வறாங்க.

இதுல என்ன பிரச்சனைன்னா ஹீரோயின் ஃபாரீன்ஃபிகரு. தம் அடிக்குது , சரக்கு அடிக்குது . இன்னும் என்ன  என்ன எல்லாம் அடிக்குதோ? 
ஹீரோ ஒரு   உலக மகா உத்தமன். எந்த கெட்ட பழக்கமும்  இல்லாதவர், எம் ஜி ஆர் , ராமராஜன்  வரிசைல 


இப்போ தான்  திரைக்கதைல செம ட்விஸ்ட். ஹீரோவோட அப்பா இவங்க மேரேஜ்க்கு  ஒத்துக்கலை. மேரேஜ்க்குத்தானே  ஒத்துக்கலை? நாம லவ்விட்டு  இருப்போம்னு  2  பேரும்  தெருத்தெருவா  ரோடுரோடா  ஹோட்டல் ஹோட்டலா சுத்தறாங்க.. கொடுமை என்னான்னா  எந்த வித சுவராஸ்யமான  சம்பவங்களோ,திருப்பங்களோ இல்லாம சும்மா சுத்திட்டு மட்டும் இருக்காங்க


இப்போ 6 ரீல் முடியுது.இடைவேளை ட்விஸ்ட் வேணுமே?ஹீரோயின் பெட்ரோல் கேன் எடுத்து  தன் மேல  ஊத்திக்கிட்டு   ஹீரோ அப்பாவை   மிரட்ட பத்த வெச்சுக்கறார். டொட்டடொய்ங்க். இடைவேளைஇடைவேளை முடிஞ்சு பதட்டத்தோட வந்து பார்த்தா யாருக்கும்  எதுவும் ஆகலை.ஹீரோவோட அப்பா  ஹீரோயினை கேவலமா  திட்டிடறாரு . கட்சிமாறுன   எம் எல் ஏக்களை கேப்டன் திட்டுன  மாதிரி . ஹீரோ  செம  காண்ட் ஆகி  தேவதாஸ் மாதிரி தண்ணி  அடிக்க ஆரம்பிச்சுடறாரு. 5 ரீல் இப்ப்டியே ரோடுரோடா  மப்புல  கிடக்காரு . காசு  கொடுத்து டிக்கெட் வாங்கி உள்ளே வந்த பாவத்துக்கு   இதை எல்லாம் பார்த்து  தொலைக்க வேண்டி இருக்கு.


 திடீர்னு  ஹீரோ அப்பா மனசு மாறிமேரேஜ்க்கு  ஓக்கே  சொல்லிடறாரு. ஹீரோ  ஹீரோயின்  2 பேரும்  செம சந்தோஷம்  ஆகி காரில்  வரும்போது  ஹீரோ கிஸ்  கொடுக்கறார். டிரைவிங்க்  பண்ணிட்டு  இருந்த ஹீரோயின் விபத்துல மாட்டி ஆள் அவுட். புன்னகை  மன்னன் ரேஞ்சுக்கு திங்க்கிங்க் .


இதுக்குப்பிறகு  என்னாஆகுது  என்பது  கேவலமான சஸ்பென்ஸ்

 அடங்கப்பாசாமி டைரக்டரு  .. முடியலப்பா 


ஹீரோ சந்தோஷ்தான்  தயாரிப்பாளர் போல . தாடி  , பரட்டைத்தலை, துவைக்காத  பேண்ட் , அயர்ன் பண்ணாத கேவலமான சட்டை, அக்மார்க்  தமிழ் சினிமா ஹீரோ  மாதிரியே...ஹீரோயின் அனாரா  நிஜமாவே ஃபாரீன்ஃபிகர்  போல.  இலியானாவுக்கு ஒரு தங்கச்சி  இருந்து அதுக்கு  10 நாள் டைபாய்டு காய்ச்சல்  வந்து படுத்தா எப்படி இருக்கும்? அப்டி இருக்கு.எந்த மாடல் சுடிதார் போட்டாலும்  துப்பட்டாவே  தேவைப்படாத  ஒல்லி தேகம். ஆனா அவர் இடை இருக்கே இடை .எல்லா தமிழ் ஹீரோயின்களும்  பார்த்து பொறாமைப்படும் உள்ளடங்கிய  ஏழையின் பசி வயிறு மாதிரி அபாரம் .


இவர் காதல் வந்து  தடுமாறும் காட்சிகள்,தமிழ்  கற்கும்  காட்சிகள்  எல்லாம் படு செயற்கை. அதேபோல் வேண்டுமென்றே  வலிய  திணிக்கப்பட்ட   ஹீரோயினின்  தம் அடிக்கும்  தண்ணிஅடிக்கும் காட்சி எடுபடவில்லை.

 ஆனா ஒருவிஷயம்.கிளாமர் காட்டுவதில்  அம்மணி அபாரம் . ஐ லைக் இட்.


படத்துல  பாராட்டவோ , திட்டவோ  வேற யாருமில்லை

இயக்குநர் பாராட்டுப்பெறுமிடங்கள்


1.படம்  முழுக்க  லண்டனில் படமாக்கப்பட்டது என விளம்பரம்  போட்ட போஸ்டர்  ஊர் எங்கும்  ஒட்டியது. ஏதோ   லவ்  க்ரைம்  த்ரில்லர்  ரேஞ்சுக்கு பில்டப்   குடுத்தது.


2.ஹீரோயினுக்கு அழகழகான  டிரஸ் வாங்கிக்குடுத்து  உலாவவிட்டது. கேமராமேனை   நல்லாகவனிச்சு  ஹீரோயினை  சரியான ஆங்கிள்ல கேமரா  ஷாட் வெச்சது


3. ஒளிப்பதிவு  லண்டன்  நகரை அழகாக படம்  பிடித்தது

இயக்குநரிடம் சில கேள்விகள்1.ஹீரோ  வோட  ஷூ  அழுக்காகி   இருக்கு  ஒருசீன்ல. ஹீரோவோட அப்பா  நிழல்கள் ரவி   தன்   கர்ச்சீப்பால அதை துடைக்கறார் .அடுத்தஷாட்லயே ஹீரோ சாப்பிட  வரும்போது  எனக்கு  சுத்தம் தான்  முக்கியம், போய்வாஷ் பண்ணிட்டு வான்னு  விரட்டறார். ஏனிந்தமுரண்?  2. டேய்.. நீங்க  எங்கடா  இங்கே? என  ஹீரோ  தன் 4 நண்பர்களிடம்  கேட்பதும்  அவர்கள்  வழிவதும் செம  போர்.  இந்தலட்சணத்துல  3   டைம்  இதே மாதிரி   காட்சிவருவது


3.மனோரமா   மயில்சாமி  சரக்கு அடிக்கும்  காட்சி உவ்வே. மரியாதைக்குரிய  ஆச்சியை  நைட்டியுடன்  காட்டி  சரக்கு அடிக்கவைத்து  இப்படிஅவமானப்படுத்தி இருக்க வேணாம்


4. ஹீரோ ஒரு   சீன்ல   ஹீரோயின் கிட்டே”நீ ஏன் கம்மலே போடறதில்லை? போட்டா   நல்லாருக்கும் அப்டிம்பாரு. ஆனா ஹீரோயின்  4  டைம்காதுல ஸ்டெட்டோடவருது ( நாங்க   ஹீரோயின்  காதை  மட்டும் தான்  கவனிச்சோம்)


5. ஹீரோயின்   சரக்கு அடிச்சுட்டு ஹீரோ மேல  வாமிட் எடுப்பதும்  , ஹீரோ சரக்கு அடிச்சுட்டு  ரோட்டில்  வாமிட்  எடுப்பதும்  உவ்வே. காமிராஆங்கிள்ல யாவது கவுரமா  காட்டி  இருக்கலாம்


6. சார் , படத்துல திரைக்கதை  அப்டினு ஒரு அம்சமேஇல்லையே? நீங்க ஒரு ஃபாரீன்ஃபிகரை  உஷார் பண்ணிட்டு  போறதை   ஒரு படமா  எடுக்கனுமா?

 மனம் கவர்ந்த வசனங்கள்1.வெள்ளைக்காரப்பொண்ணா  இருந்தாலும்  மனசு ரொம்பப்பெருசு


 ஆமா,கொழுக் மொழுக்னு அழகா


 டேய்...... 
2. விண்ட்டருக்கு போர்த்திட்டு   இருந்தவங்க   எல்லாம் சம்மருக்கு   கழட்டி வெச்சிருப்பாங்க3. டாடி , 15வயசுல இருந்து  25வயசு வரை  தான் பசங்க ஜாலியா சுத்தும் வயசு. ஃப்ரீயா விடுங்க ( அதைஏன் 34வயசான ஹீரோ சொல்றரு, ? ) 4. அடடா , அவ மிஸ் ஆகிட்டாளே,போய்ட்டாளே 


 மிஸ் ஆகாம  இருந்தா மிசஸ் ஆக்கி  இருக்கலாம்னு  பார்த்தியா? 5  ஹீரோ பஞ்ச்  - நான்  சரக்கு அடிக்க  மாட்டேன். ஏன்னா நான் தமிழன்  ( அடங்கப்பா சாமி , காது வலிக்குது) 6.  ஆஃபீஸ்  இருக்குன்னு  சொன்னீங்க,இப்படி  சின்னதா உள்ளடங்கி இருக்கு? 

 சீக்ரெட் ஆஃபீஸ் ஹிஹி 7.  குற்ற வாளி முத   டைம்   தப்பு  பண்ணும்போதுதான்    பயப்படுவான் , அப்புறம் அவன்  தைரியமா   தப்பு   பண்ணுவான்


8  குடிச்சுட்டு போனா   தூக்கம் தூக்கமா   வருது 


 பின்னே ? வருமானமாவரும் ?  ஆனந்த  வி கடன்   எதிர்பார்ப்பு மார்க் - 32


குமுதம்  ரேங்க் - ம்ஹூம்  தேறாது ரேட்டிங்க்  -      1  /  5


சி.பி கமெண்ட் -   ஃபாரீன் ஃபிகரை சைட் அடிக்க நினைக்கும் ஆட்கள் மட்டும் போலாம் . மத்தவங்க   எஃப்  டிவி பார்க்கவும்  . இந்த  குப்பையை   சிதம்பரம்  வடுகநாதன் தியேட்டர்ல பார்த்தேன்

1 comments:

'பரிவை' சே.குமார் said...

எப்படி படம் எடுத்தாலும் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் நிறைய பேர் இப்படி உருப்படாத கதையோடு வருகிறார்கள்...