Saturday, November 13, 2010

தமிழ்மணம் விருதுகள் அறிவிப்பால் ஏற்படப்போகும் பிரச்சனைகள்

1.>>>கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2010க்கு முன்னர் தமிழ்மணத்தில் இணைத்திருத்தல் வேண்டும். டிசம்பர் 1, 2009 முதல் நவம்பர் 10 2010 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்>>>

பொதுவாக ஒரு ஆண்டின் சிறந்த படைப்பு என்றால் அந்த ஆண்டு முழுவதும் வரும் படைப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.உதாரணமாக 2010ம் ஆண்டின் சிறந்த படம் என்றால் 1.1.2010 முதல் 31.12.2010 வரை ரிலீஸ் ஆன படங்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

2.>>>>தமிழ்மணத்தின் முதற்கட்ட வாக்கெடுப்பு வலைப்பதிவர்களுக்கானது. தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள வலைப்பதிவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். ஒரு பதிவருக்கு ஒரு பிரிவுக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் வாக்குரிமை இருக்கும்.>>>

இதில்தான் முக்கியப்பிரச்சனை.ஒரு சாதாரண பதிவர்க்கு குறைந்த பட்சம் 10 பின்னூட்டவாதிகள் அல்லது பிடித்த பதிவாளர்களூம்,பிரபல பதிவாளர்களூக்கு 50  பின்னூட்டவாதிகள் அல்லது பிடித்த பதிவாளர்களூம் இருப்பார்கள்.அவர்கள் எல்லோருக்கும் அல்லது பெஸ்ட் பதிவுகளுக்கு வாக்களீக்க விரும்புவார்கள் ,இப்படி ரேஷன் வைத்தால் மனத்தாங்கல் ஏற்படும்.

3.>>>> தமிழ்மணம் நிர்வாகம், வலைப்பதிவர்களைக் கொண்ட நடுவர் குழு அமைக்கப்படும். நடுவர் குழுவில் இடம் பெறும் நடுவர்கள் தனித்தனியாக இடுகைகளை தேர்வு செய்து தமிழ்மணம் விருதுக்குழுவிற்கு அளிப்பார்கள்.>>>>

சீனியர்  வலைப்பதிவர்களைக் கொண்ட நடுவர் குழு எப்படி தேர்ந்தெடுக்கும் என சொல்லத்தேவை இல்லை,அவர்கள் காலகட்டத்தில் உள்ள வலைப்பதிவர்களுக்கே அதிக முன்னுரிமை கொடுப்பார்கள்.இது இயற்கை மற்றும் மனோவியல் ரீதியாகவும் அப்படித்தான் அமையும்.புது வலைப்பதிவாளர்கள் புறந்தள்ளப்பட வாய்ப்புண்டு.

4 >>>> இந்த விருதுத் தேர்வுக்கான அடிப்படை. அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக எழுதப்படும் படைப்புகளாக அல்லாமல், தன்னெழுச்சியாக வெளிப்பட்ட படைப்புகளே இந்தத் தேர்வுகளுக்கு கணக்கிலெடுக்கப்படுவதால் இதில் போட்டியோ, ஏமாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமென்றே நம்புகிறோம்.>>>

போட்டி என்று அறிவிக்கப்பட்ட பிறகு எழுதப்படும் பதிவுகளும் கணக்கில் சேர்க்கப்பட்டால் படைப்பின் தரம் இன்னும் கூடும்.இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு எழுதுவார்கள்.அது நல்லதுதானே.

5.   >>>> தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.>>>

பெஸ்ட் பிளாக் அவார்டு ஒன்றும் கொடுக்கலாம்.அது ஊக்குவிப்பாக அமையும்.

6. >>>
வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குப் பெற்று முதலிடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.1000ம் (ஆயிரம் ரூபாய்), இரண்டாம் இடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.500ம் (ஐநூறு ரூபாய்) வழங்கப்படும்.>>>

பரிசுத்தொகை மிக கம்மி.ஒரு தனி மனிதனான பரிசல்காரன் கிருஷ்ணகுமார் அறிவித்த போட்டியிலேயே (சவால் சிறுகதை போட்டி) ரூ 1000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக பலருக்கு அளிக்கப்பட்ட போது.இத்தனை பதிவாளர்களை வைத்து நடத்தும் மிகப்பெரிய நிறுவனம் அறிவுத்துள்ள பரிசு யானைப்பசிக்கு சோளப்பொரி.

7. அதே போல் யார் யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது ரகசியமாக இருக்க வேண்டும்.ஏனெனில் வெளிப்படையாக தெரிந்துவிட்டால் நண்பர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்புண்டு.இது பற்றி தெளிவாக ஏதும் கூறப்படவில்லை.

டிஸ்கி - 1 : என் மனதிற்குத்தோன்றியதை நான் எழுதினேன்.இதனால் தமிழ்மணம் போட்டித்தேர்வில் என் படைப்புகள் பரிசு பெறுவதில் பாதிப்பு ஏற்படும் என தமிழ்மணம் அமைப்பு நினைத்தால் எனக்கு தனி மெயிலில் மிரட்டவும்.நான் இந்த இடுகையையே நீக்கி விடுகிறேன்.கொண்ட கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருக்க நான் வீரபாண்டியக்கட்ட பொம்மன் பரம்பரையில் பிறக்கவில்லை.சாதாரண குடும்பம்தான்.

டிஸ்கி - 2 : வழக்கமாக் காமெடிக்காகத்தான் அட்ராசக்க வருகிறோம்,இப்படி சீரிஸ்சாக எழுதினால் எப்படி என கேட்பவர்கள் என் ஃபோட்டோவை ஒரு முறை பார்க்கவும்.அட டம்மி பீஸு என உங்களுக்கே சிரிப்பு வரும்.அப்படியே சிரிச்சுக்கிட்டே ஓட்டும்,கமெண்ட்டும் போட்டுட்டு ஓடி விடவும்.

51 comments:

Philosophy Prabhakaran said...

தமிழ்மணத்தில் இணைக்கவில்லை போல...

சி.பி.செந்தில்குமார் said...

இணைத்தேன் இணையவில்லை

ஜோதிஜி said...

நீங்கள் எழுதியுள்ள விசயங்களை தமிழ்மண குழுவினர் நிச்சயம் பரிசீலிப்பார்கள். மனதில் பட்டதை தெளிவாக சொல்லிக் கொண்டு வந்து கடைசியில் உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொண்டது எனக்கு ஏற்புடையதல்ல.

சி.பி.செந்தில்குமார் said...

உங்கள் கருத்துக்கு நன்றி.இடுகை தான் டிராஜடி,டிஸ்கியாவது காமெடியாக இருக்கட்டும் என்றுதான்,,,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//டிஸ்கி - 1 : என் மனதிற்குத்தோன்றியதை நான் எழுதினேன்.இதனால் தமிழ்மணம் போட்டித்தேர்வில் என் படைப்புகள் பரிசு பெறுவதில் பாதிப்பு ஏற்படும் என தமிழ்மணம் அமைப்பு நினைத்தால் எனக்கு தனி மெயிலில் மிரட்டவும்.நான் இந்த இடுகையையே நீக்கி விடுகிறேன்.கொண்ட கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருக்க நான் வீரபாண்டியக்கட்ட பொம்மன் பரம்பரையில் பிறக்கவில்லை.சாதாரண குடும்பம்தான்.///

அதான் எங்களுக்கு தெரியுமே. வேற ஏதாச்சும் புதுசா சொல்லுங்க பாஸ்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஜோதிஜி said...

நீங்கள் எழுதியுள்ள விசயங்களை தமிழ்மண குழுவினர் நிச்சயம் பரிசீலிப்பார்கள். மனதில் பட்டதை தெளிவாக சொல்லிக் கொண்டு வந்து கடைசியில் உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொண்டது எனக்கு ஏற்புடையதல்ல.//

விடுங்க பாஸ். சில நேரங்கள்ல உண்மை கசக்கும்...

சி.பி.செந்தில்குமார் said...

உங்களுக்கும் தெரிஞ்சிடுச்சா?ச்சே,ரகசியமா எதையும் வெச்சுக்க முடியலையே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என் மனதிற்குத்தோன்றியதை நான் எழுதினேன்.இதனால் தமிழ்மணம் போட்டித்தேர்வில் என் படைப்புகள் பரிசு பெறுவதில் பாதிப்பு ஏற்படும் என தமிழ்மணம் அமைப்பு நினைத்தால் எனக்கு தனி மெயிலில் மிரட்டவும்.//

போங்க பாஸ். நீங்க அந்த அளவுக்கு வொர்த் இல்லை...

சி.பி.செந்தில்குமார் said...

//டிஸ்கி - 1 : என் மனதிற்குத்தோன்றியதை நான் எழுதினேன்.இதனால் தமிழ்மணம் போட்டித்தேர்வில் என் படைப்புகள் பரிசு பெறுவதில் பாதிப்பு ஏற்படும் என தமிழ்மணம் அமைப்பு நினைத்தால் எனக்கு தனி மெயிலில் மிரட்டவும்.நான் இந்த இடுகையையே நீக்கி விடுகிறேன்.கொண்ட கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருக்க நான் வீரபாண்டியக்கட்ட பொம்மன் பரம்பரையில் பிறக்கவில்லை.சாதாரண குடும்பம்தான்.///

அதான் எங்களுக்கு தெரியுமே. வேற ஏதாச்சும் புதுசா சொல்லுங்க பாஸ்..

November 13, 2010 7:45 AM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஜோதிஜி said...

நீங்கள் எழுதியுள்ள விசயங்களை தமிழ்மண குழுவினர் நிச்சயம் பரிசீலிப்பார்கள். மனதில் பட்டதை தெளிவாக சொல்லிக் கொண்டு வந்து கடைசியில் உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொண்டது எனக்கு ஏற்புடையதல்ல.//

விடுங்க பாஸ். சில நேரங்கள்ல உண்மை கசக்கும்...

உண்மைத்தமிழனிடம் போட்டுக்குடுக்கறேன் இருங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//விடுங்க பாஸ். சில நேரங்கள்ல உண்மை கசக்கும்...

உண்மைத்தமிழனிடம் போட்டுக்குடுக்கறேன் இருங்க.///

அட பாவி...

சி.பி.செந்தில்குமார் said...

Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என் மனதிற்குத்தோன்றியதை நான் எழுதினேன்.இதனால் தமிழ்மணம் போட்டித்தேர்வில் என் படைப்புகள் பரிசு பெறுவதில் பாதிப்பு ஏற்படும் என தமிழ்மணம் அமைப்பு நினைத்தால் எனக்கு தனி மெயிலில் மிரட்டவும்.//

போங்க பாஸ். நீங்க அந்த அளவுக்கு வொர்த் இல்லை...

ஒர்த் இல்லையா?கெத்து இல்லையா?

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//விடுங்க பாஸ். சில நேரங்கள்ல உண்மை கசக்கும்...

உண்மைத்தமிழனிடம் போட்டுக்குடுக்கறேன் இருங்க.///

அட பாவி...

விட்டுக்குடுத்துப்பேர் வாங்கையவர்களை விட போட்டுக்குடுத்து பேர் வாங்கியவர்களே அதிகமாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பெஸ்ட் பிளாக் அவார்டு ஒன்றும் கொடுக்கலாம்.அது ஊக்குவிப்பாக அமையும்.///

அப்படியே பெஸ்ட் ப்ளூ அவார்ட,பெஸ்ட் ரெட் அவார்டு, பெஸ்ட் கிரீன் அவார்டுஎல்லாம் கேளுங்க

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பெஸ்ட் பிளாக் அவார்டு ஒன்றும் கொடுக்கலாம்.அது ஊக்குவிப்பாக அமையும்.///

அப்படியே பெஸ்ட் ப்ளூ அவார்ட,பெஸ்ட் ரெட் அவார்டு, பெஸ்ட் கிரீன் அவார்டுஎல்லாம் கேளுங்க

சாரி,நீங்க லேடீஸ் விஷயத்துலதான் வீக்க்னு நினைச்சேன்,இங்கிலீஷ்லயுமா?பிளாக் என்றால் வலைப்பூ என பொருள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்ப நீங்க சாரி போர் late , தாவணி போர் late நு சொல்றது..சாரின்னா மன்னிப்புன்னு அர்த்தம்.. எப்படி நாங்களும் கண்டுபிடிப்போம்ல...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//கொண்ட கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருக்க நான் வீரபாண்டியக்கட்ட பொம்மன் பரம்பரையில் பிறக்கவில்லை.சாதாரண குடும்பம்தான்.///

ஹா ஹா ஹா... முடியல.. :-)))

மேல அவ்ளோ விவரமா பேசிட்டு.. டிஸ்கில இப்புடி காமெடி பண்ணிட்டீங்க.. :-))

a said...

//
எனக்கு தனி மெயிலில் மிரட்டவும்.நான் இந்த இடுகையையே நீக்கி விடுகிறேன்.கொண்ட கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருக்க நான் வீரபாண்டியக்கட்ட பொம்மன் பரம்பரையில் பிறக்கவில்லை.சாதாரண குடும்பம்தான்.
//

அய்யோ அய்யோ......... போங்க பாஸ் : ஒங்க கூட எப்பவுமே காமெடி தான்..........

அருண் பிரசாத் said...

2, 3 பாயிண்ட் மிகச்சரி... மற்றவை ஒன்னு சொல்லமுடியாது அது தமிழ்மணத்தின் விருப்பம்

2 டிஸ்கியும் டாப்பு

தினேஷ்குமார் said...

பாஸ் கூல் கூல்

சூளுரைத்து
வாள்பிடிக்க
கட்டபொம்மன்
இல்லை நான்..........

சபாஷ் சரியான போட்டி

ஜெயந்த் கிருஷ்ணா said...

என் ஃபோட்டோவை ஒரு முறை பார்க்கவும்.அட டம்மி பீஸு என உங்களுக்கே சிரிப்பு வரும்.அப்படியே சிரிச்சுக்கிட்டே ஓட்டும்,கமெண்ட்டும் போட்டுட்டு ஓடி விடவும்.

//

ஓடிட்டேன்...

நீச்சல்காரன் said...

பரிசு தொகையை பொறுத்த மட்டில் இருபது பிரிவுகள் உள்ளதையும் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
வாக்களித்தவர்கள் பெயர்கள் வெளிவாறது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கல்வியாண்டு, நிதியாண்டு போல இது தமிழ்மண பதிவு ஆண்டு நவம்பருடன் முடிகிறது.
இரண்டாவதைத் தவிர மற்ற கருத்துக்களில் எனக்கு உடன் பாடில்லை.

'பரிவை' சே.குமார் said...

//ஜோதிஜி said...

நீங்கள் எழுதியுள்ள விசயங்களை தமிழ்மண குழுவினர் நிச்சயம் பரிசீலிப்பார்கள். மனதில் பட்டதை தெளிவாக சொல்லிக் கொண்டு வந்து கடைசியில் உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொண்டது எனக்கு ஏற்புடையதல்ல.//

//விடுங்க பாஸ். சில நேரங்கள்ல உண்மை கசக்கும்... //

உண்மை கசந்தாலும் உங்கள் மனதில் பட்டதை சரியாக பதிந்துவிட்டு உங்காளையே நீங்க ஏன் தாக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் புரியவில்லை.

மங்குனி அமைச்சர் said...

பாரு தம்மாத்தூண்டு மூளைக்குள்ள எப்படி ஒரு குழப்பம் , எத்தினை சந்தேகங்கள் ???? எல்லாம் பிரம்ம

Anonymous said...

மனதில் பட்டதை தெளிவாக சொல்லிக் கொண்டு வந்து கடைசியில் உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொண்டது எனக்கு ஏற்புடையதல்ல//
ஆம்..நல்ல பதிவாக வர வேண்டிய இந்த பதிவு டிஸ்கியால் தரம் கெட்டு விட்டது...
மொக்கை பதிவர் நல்ல பெயர் எடுக்க முடியாது என்பதற்கு இது உதாரணம்

Anonymous said...

வாழ்க்கை சமூக நலன் பிரிவில் உங்களுடைய ,
சீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை என்னும் பதிவு நிச்சயம் தேர்வு பெறும் வாழ்த்துக்கள்

Anonymous said...

விருது வாங்குறவன் பாடு விருது கொடுக்குறவங்க பாடு நமக்கு எதுக்கு தேவையில்லாத ஆத்திரம்,கோபம்..புண்ணாக்கு எல்லாம்...போய் பிட்டு படம் எதையாவது பார்த்து விமர்சனம் போடுங்க பாஸ்

R. Gopi said...

முதலில் கையைக் கொடுங்கள். நீங்கள் போட்ட இடுகையிலேயே நல்ல இடுகை இதுதான். இவ்வளவு நல்ல மொழித்திறமையை வைத்துக்கொண்டு எப்படித்தான் மொக்கையாக எழுத மனம் வருகிறதோ உங்களுக்கு!

சரி பதிவிற்கு வருவோம்.

1. எப்படியும் 12 மாதங்களும் வந்து விடுகின்றன. டிசம்பரில் ஆரம்பித்து நவம்பரில் முடிவதால் தவறேதும் இல்லை என்று எனக்குப் படுகிறது.

2. நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. நல்ல பதிவிற்குக் கிடைக்க வேண்டிய பரிசு நிறைய வாக்குகள் பெற்றதாலேயே ஒரு சுமாரான பதிவிற்குப் போய்ச சேரும் அபாயம் உள்ளது.

3. பார்ப்போம். எனக்கென்னவோ புதுப் பதிவர்களையும் அந்தக் குழுவில் இடம் பெறச் செய்வார்கள் என்றே தோன்றுகிறது.

4.உடன்படுகிறேன். பரீட்சை என்று சொன்னால்தானே நாம் படிக்கவே ஆரம்பிப்போம்!

5. நீங்கள் சொல்வதை அவர்கள் பரிசீலிக்கலாம்

6. பரிசுத்தொகை கம்மி என்று நினைக்கக் கூடாது. அங்கீகாரம்தான் முக்கியம்.

7. உடன்படுகிறேன்.

இரண்டு டிஸ்கியும் சூப்பர். எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இப்படி எழுத வருதோ!

அப்பப்போ இந்த மாதிரி கொஞ்சம் சீரியசான விஷயமும் எழுதுங்க. வாசிக்க நல்லா இருக்கு.

ஆர்வா said...

தமிழ்மணத்துக்கு கேட்டுச்சா செந்தில் சார் சொன்னது??????????

செல்வா said...

எனக்கு அந்த போட்டி பத்தி தெரியாதுங்க .,நான் என்னனு பார்த்துட்டு வரேன் .. ஆனா நீங்க சொல்லுறது படி பார்த்தா நிறைய குறைகள் இருக்கற மாதிரி தெரியுது ..!! இருந்தாலும் போட்டி போட்டிதானே .. நல்லா நடக்கட்டும் ..

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அப்ப நீங்க சாரி போர் late , தாவணி போர் late நு சொல்றது..சாரின்னா மன்னிப்புன்னு அர்த்தம்.. எப்படி நாங்களும் கண்டுபிடிப்போம்ல...

iwdha இந்த ஆண்டின் பெஸ்ட் கொலம்பஸ் அவார்டு கோஸ் டூ போலீஸ்

சி.பி.செந்தில்குமார் said...

Ananthi said...

//கொண்ட கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருக்க நான் வீரபாண்டியக்கட்ட பொம்மன் பரம்பரையில் பிறக்கவில்லை.சாதாரண குடும்பம்தான்.///

ஹா ஹா ஹா... முடியல.. :-)))

மேல அவ்ளோ விவரமா பேசிட்டு.. டிஸ்கில இப்புடி காமெடி பண்ணிட்டீங்க.. :-))

hi hi நான் அடைப்படைல ஒரு காமெடி பீசுங்க,சீரியஸ் வரமாட்டேங்குது

சி.பி.செந்தில்குமார் said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
எனக்கு தனி மெயிலில் மிரட்டவும்.நான் இந்த இடுகையையே நீக்கி விடுகிறேன்.கொண்ட கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருக்க நான் வீரபாண்டியக்கட்ட பொம்மன் பரம்பரையில் பிறக்கவில்லை.சாதாரண குடும்பம்தான்.
//

அய்யோ அய்யோ......... போங்க பாஸ் : ஒங்க கூட எப்பவுமே காமெடி தான்..........

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

அருண் பிரசாத் said...

2, 3 பாயிண்ட் மிகச்சரி... மற்றவை ஒன்னு சொல்லமுடியாது அது தமிழ்மணத்தின் விருப்பம்

2 டிஸ்கியும் டாப்பு

நன்றி அருண்

சி.பி.செந்தில்குமார் said...

dineshkumar said...

பாஸ் கூல் கூல்

சூளுரைத்து
வாள்பிடிக்க
கட்டபொம்மன்
இல்லை நான்..........

சபாஷ் சரியான போட்டி

நான் ஆல்வேஸ் கூல்தான்,குடிக்கரதும் கம்மங்க்கூழ்தான்

சி.பி.செந்தில்குமார் said...

வெறும்பய said...

என் ஃபோட்டோவை ஒரு முறை பார்க்கவும்.அட டம்மி பீஸு என உங்களுக்கே சிரிப்பு வரும்.அப்படியே சிரிச்சுக்கிட்டே ஓட்டும்,கமெண்ட்டும் போட்டுட்டு ஓடி விடவும்.

//

ஓடிட்டேன்...

போகாதே போகாதேஎ என் நண்பா...

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார் said...

//ஜோதிஜி said...

நீங்கள் எழுதியுள்ள விசயங்களை தமிழ்மண குழுவினர் நிச்சயம் பரிசீலிப்பார்கள். மனதில் பட்டதை தெளிவாக சொல்லிக் கொண்டு வந்து கடைசியில் உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொண்டது எனக்கு ஏற்புடையதல்ல.//

//விடுங்க பாஸ். சில நேரங்கள்ல உண்மை கசக்கும்... //

உண்மை கசந்தாலும் உங்கள் மனதில் பட்டதை சரியாக பதிந்துவிட்டு உங்காளையே நீங்க ஏன் தாக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் புரியவில்லை.

அது சும்மா காமெடிக்கு..

சி.பி.செந்தில்குமார் said...

மங்குனி அமைச்சர் said...

பாரு தம்மாத்தூண்டு மூளைக்குள்ள எப்படி ஒரு குழப்பம் , எத்தினை சந்தேகங்கள் ???? எல்லாம் பிரம்ம

வாழ்த்துக்கள் மங்குனி,நெம்பர் டூ பிளேச்க்கு

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மனதில் பட்டதை தெளிவாக சொல்லிக் கொண்டு வந்து கடைசியில் உங்களை நீங்களே தரம் தாழ்த்திக் கொண்டது எனக்கு ஏற்புடையதல்ல//
ஆம்..நல்ல பதிவாக வர வேண்டிய இந்த பதிவு டிஸ்கியால் தரம் கெட்டு விட்டது...
மொக்கை பதிவர் நல்ல பெயர் எடுக்க முடியாது என்பதற்கு இது உதாரணம்

எல்லாரும் கேட்டுக்குங்க நான் ஒரு மொக்கைப்பதிவர்தான்,யாரும் சீரிய்ஸ் ஆக வேணாம்

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வாழ்க்கை சமூக நலன் பிரிவில் உங்களுடைய ,
சீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை என்னும் பதிவு நிச்சயம் தேர்வு பெறும் வாழ்த்துக்கள்

நல்ல நையாண்டி

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விருது வாங்குறவன் பாடு விருது கொடுக்குறவங்க பாடு நமக்கு எதுக்கு தேவையில்லாத ஆத்திரம்,கோபம்..புண்ணாக்கு எல்லாம்...போய் பிட்டு படம் எதையாவது பார்த்து விமர்சனம் போடுங்க பாஸ்

என்னை இவ்வளவு தூரம் கேவலப்படுத்தியதால் இனி பிட்டுப்படத்துக்கு விமர்சனம் போடுவதில்லை என முடிவெடுத்துட்டேன்,தயவு செய்து யாரும் எழுதச்சொல்லி கம்பெல் பண்ணாதீங்க....

சி.பி.செந்தில்குமார் said...

Gopi Ramamoorthy said...

முதலில் கையைக் கொடுங்கள். நீங்கள் போட்ட இடுகையிலேயே நல்ல இடுகை இதுதான். இவ்வளவு நல்ல மொழித்திறமையை வைத்துக்கொண்டு எப்படித்தான் மொக்கையாக எழுத மனம் வருகிறதோ உங்களுக்கு!

சரி பதிவிற்கு வருவோம்.

1. எப்படியும் 12 மாதங்களும் வந்து விடுகின்றன. டிசம்பரில் ஆரம்பித்து நவம்பரில் முடிவதால் தவறேதும் இல்லை என்று எனக்குப் படுகிறது.

2. நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. நல்ல பதிவிற்குக் கிடைக்க வேண்டிய பரிசு நிறைய வாக்குகள் பெற்றதாலேயே ஒரு சுமாரான பதிவிற்குப் போய்ச சேரும் அபாயம் உள்ளது.

3. பார்ப்போம். எனக்கென்னவோ புதுப் பதிவர்களையும் அந்தக் குழுவில் இடம் பெறச் செய்வார்கள் என்றே தோன்றுகிறது.

4.உடன்படுகிறேன். பரீட்சை என்று சொன்னால்தானே நாம் படிக்கவே ஆரம்பிப்போம்!

5. நீங்கள் சொல்வதை அவர்கள் பரிசீலிக்கலாம்

6. பரிசுத்தொகை கம்மி என்று நினைக்கக் கூடாது. அங்கீகாரம்தான் முக்கியம்.

7. உடன்படுகிறேன்.

இரண்டு டிஸ்கியும் சூப்பர். எப்படித்தான் உங்களுக்கு மட்டும் இப்படி எழுத வருதோ!

அப்பப்போ இந்த மாதிரி கொஞ்சம் சீரியசான விஷயமும் எழுதுங்க. வாசிக்க நல்லா இருக்கு.

150 இடுகைல ஒண்ணுதான் தேறிச்சா?இன்னும் நிறைய கத்துக்கனுமோ

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை காதலன் said...

தமிழ்மணத்துக்கு கேட்டுச்சா செந்தில் சார் சொன்னது??????????

உங்களுக்கே கேட்டுடுச்சு,அவங்களுக்கு கேஇகாம இருக்குமா?எப்படியும் எனக்கு அடி கன்ஃபர்ம்

சி.பி.செந்தில்குமார் said...

ப.செல்வக்குமார் said...

எனக்கு அந்த போட்டி பத்தி தெரியாதுங்க .,நான் என்னனு பார்த்துட்டு வரேன் .. ஆனா நீங்க சொல்லுறது படி பார்த்தா நிறைய குறைகள் இருக்கற மாதிரி தெரியுது ..!! இருந்தாலும் போட்டி போட்டிதானே .. நல்லா நடக்கட்டும் .

சரி சரி சீரியச் ஆகாதீங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீங்க சொன்ன விஷ்யமெல்லாம் கரெக்டா தான் இருக்கு, அப்புறம் எதுக்கு பம்முறீங்க? நாங்கள்லாம் இருக்கோம்ல?

yeskha said...

இந்தப் பையனுக்குள்ள என்னமோ இருந்திருக்கு பாரேன்....

ILA (a) இளா said...

புதிய மொந்தையில் பழைய கள்

ILA (a) இளா said...

வருசா வருசம் ஒருத்தர் இப்படி ஒரு பதிவு போட்டுகிட்டே இருப்பாங்க போல. என்னமோ புதுசா விருது தர்றா மாதிரி?

-/பெயரிலி. said...

/இத்தனை பதிவாளர்களை வைத்து நடத்தும் மிகப்பெரிய நிறுவனம் அறிவுத்துள்ள பரிசு யானைப்பசிக்கு சோளப்பொரி. /

அத்துதானே! எம்மாம்பெர்ய என்ஆர்ஐ நிறுவனம் இத்தனை பதிவர்கிட்டயும் துட்டு வாங்கி நடத்திக்கிட்டிருக்கு, இலாபத்துல கைய விசுக்கிப் பங்கு குடுத்தா என்னா கொறைஞ்சா போவப்போவுது?

I hope the bloodsucking bastards who run Tamilmanam for profit would realize how much they hurt the bloggers.

ம.தி.சுதா said...

சகோதரா பல ஆணித்தரமான விசயங்களை சொல்லியுள்ளீர்கள்.. ஏழை என்றைக்கம் எழை தான் பணக்காரன் என்றைக்கும் பணக்காரன் தான்.. அதை நிருபிக்கத் தான் தமிழ் மணம் செய்யப்போகிறது... காரணம் எங்க நாட்டிலையெ என் பதிவுகளை யாரும் (ஒருசிலர் தவிர) திரும்பிப் பார்ப்பதில்லை பக்கத்த நாட்டக்காரரா திரும்பிப் பார்க்கப் போகிறார்கள்.. (இது ஒரு உதாரணத்திற்கு மட்டுமே)

-/பெயரிலி. said...
This comment has been removed by the author.
ம.தி.சுதா said...

சகோதரங்களே இதை நான் தமிழ் மணத்தின் அளப்பரிய சேவையை குறை காண்பதற்காக சொல்லவில்லை... எமக்கான பாதையை தான் கேட்டிருக்கிறேன்... (அப்படியானால் இந்தச் சிறியவனின் ஒரு சிறிய கருத்து.. இது வரை தமிழ் மணத்தில் அதிக வாக்கிட்டவர்களை மட்டும் கவனத்தில் எடுத் தால் என்ன அதே போல் அதிக அல்லது ஒரு சராசரி எண்ணிக்கைக்கு மேல் கருத்திட்டவர்களை மட்டும் கணக்கில் எடுத்தால் என்ன..???)
இப்போ விளங்கியிரக்குமே நான் ஏன் எழை பணக்காரன் கதையை சொன்னேன் என்று..!!!!!