Showing posts with label தமிழ்மணம். Show all posts
Showing posts with label தமிழ்மணம். Show all posts

Monday, December 27, 2010

ஈரோடு - போராடு - ஹாட்ரிக் வெற்றியோடு

sonia-agarwal-wallpaper.jpg (564×834)
தொடர்ந்து மூன்று வாரங்களாக நெம்பர் ஒன் இடத்தில் என்னை வைத்த தமிழ்மணம் நிர்வாகம்,நண்பர்கள்,பதிவர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.தமிழ்மணம் டாப் 20 பட்டியல் அறிவுப்பு வந்த பிறகு வினவு,உண்மைத்தமிழன் ஆகிய இருவர் மட்டுமே தொடர்ந்து 2 முறை நெம்பர் ஒன் பிளேஸ் அடைந்துள்ளார்கள்.

எனவே 3வது வெற்றி பெற நான் போன வாரம் கடும் போராட்டத்தை சந்திக்க நேர்ந்தது.23 12 2010 அன்று ஹிட்ஸ் ரேட்டை வைத்து பார்க்கையில் டெரர் கும்மி,ராம்சாமி,கே ஆர் பி செந்தில்,ரமேஷ் ஆகியோர் முதல் 4 இடங்க்ளில் இருந்தனர்.நான் 7 வது இடத்தில் இருந்தேன்.சரியான நேரம் பார்த்து என் லேப்டாப்பில் தமிழ்மணம் ஃபாண்ட் வேலை செய்யவில்லை.சரக்கும் கைவசம் இல்லை.எனவே 2 மீள் பதிவுகள் போட்டு சமாளித்தேன்.

ராம்சாமியின் சிம்ரனோமேனியா சூப்பர்ஹிட் ஆகி கலக்கிக்கொண்டிருந்தது.அதே போல் டெரர் கும்மியின் பதிவுலக அப்பெண்கள்காவலன் பதிவு பிரம்மாண்ட வெற்றி அடைந்து பதிவுலகை கலக்கியது.இனி வரும் வாரங்களில் டெரர் கும்மி எல்லாருக்கும் டஃப் ஃபைட் குடுப்பாங்கன்னு எதிர்பார்க்கலாம்..

வைகை டாப் 10க்குள் வந்துவிடுவார் என்று நான் வியாழன் அன்றே கணித்து அவரிடம் அட்வான்ஸ் வாழ்த்து தெரிவித்தேன்.அவர் நம்பவில்லை.பார்ப்போம் என்றார்.அவரது காமெடி எழுத்துக்கள் வரும் காலங்களில்  இன்னும் பேசப்படும்.

பதிவுலகின் மும்மூர்த்திகள் என அழைக்கபடும் உண்மைத்தமிழன்,கேபிள் சங்கர்,ஜாக்கிசேகர் ஆகியோர் வைத்திருக்கும் ஹிட்ஸ் ரேட் அபாரமானது.ஆவ்ரேஜ் ஹிட்ஸ் தின்மும் 1700 சர்வசாதாரணமாக வும் அதிக பட்சம் 3000க்கும் குறையாமலும் உள்ளதை கவனிக்கிறேன்.அதையும் மீறி அவர்களை விட 3 மடங்கு ஹிட்ஸ் குறைவாகவும்,மொக்கைப்பதிவு போட்டும் எப்படி காலத்தினை  ஓட்டுகிறேன் என்பதை கணக்குபோட்டால் ஒரு உண்மை விளங்குகிறது.தமிழ்மணம் வழியாக வரும் ஹிட்ஸ் மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது.

இயக்குநர் கே பாக்கியராஜ் அவர்கள் அவரது வாசகர் நிகரன் என்பவரிடம் அவரை தொடர்பு கொள்ளச்சொல்லி தனது செல்ஃபோன் எண்ணை தந்திருக்கிறார்.மிக்க மகிழ்ச்சி.ஆனால் நான் ஏற்கனவே அவர் இயக்கிய சித்து பிளஸ் டூ படத்தின் விமர்சனத்தை
நெகட்டிவ்வாக எழுதி விட்டதால் தொடர்பு கொள்ள சங்கடப்பட்டு அவருக்கு மெசேஜ் மட்டும் அனுப்பினேன்.இதுவரை பதில் இல்லை.

நேற்று ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.ஏற்கனவே நான் சொன்னபடி பணீயின் காரணமாக செல்ல முடியவில்லை.வால்பையன்,கோவை டாக்டர் கந்தசாமி
உட்பட பலர் என்னை சந்திக்க ஆவலாய் இருந்ததை அறிந்தேன்.மிக்க மகிழ்ச்சி.எனக்கும் அதே ஆவல்தான் .அடுத்த முறை நிச்சயம் சந்திப்போம்.

கோபி நாகராஜசோழன் ,திருப்பூர் கார்த்தி,சேலம் வெங்கட்,கோவை அருண் நால்வரையும் சந்திக்க நான் ஆவலாய் இருந்தேன்.ஆனால் அவர்களால் வர இயலவில்லை

மாலை 6 மணிக்கு ஈரோடு பிருந்தாவன் பார்க்கில் நான்,நல்லநேரம் சதீஷ்,கோமாளி செல்வா,நண்டு நொரண்டு,சித்தோடு 007 சதீஷ் போன்றோர் சந்தித்தோம்.சங்கவியை தொடர்பு கொண்டபோது கிளம்பி விட்டதாக சொன்னார்.ஜாக்கிசேகரை ஃபோனில் அழைத்தோம்.அவர் ஃபோனை அட்டெண்ட் பண்ணலை.
 ஃபோட்டோவில்

இடம் இருந்து வலமாக  கோமாளி செல்வா, 007 சதிஷ்,நல்ல நேரம் சதீஷ்,நான் ,நண்டு நொரண்டு

சங்கவி பிறகு ஃபோனில் தொடர்பு கொண்டு பேசினார்,நான் வந்து சந்தித்தால் தனியாக மீட்டிங்க் போடறாங்க என சொல்லி விடுவார்கள் எனவே அதை தவிர்த்தேன்  என்றார். அவர்து முன் ஜாக்கிரதை உணர்வுக்கு ஒரு சபாஷ்.

ஈரோட்டில் போட்டியாக ஒரு சங்கம் ஆரம்பிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.என் பிளாக்கை கவனிக்கவே எனக்கு தினமும் 1 மணீநேரம்தான் கிடைக்கிறது.எனவே யாரும் அப்படி நினைக்கத்தேவை இல்லை.
தொடர்ந்து நல்ல பதிவுகள் போடுவோம்.ஆரோக்கியமான போட்டியில் வெற்றி தோல்விகளை பக்குவப்பட்ட மனதுடன் சந்திப்போம்.

டிஸ்கி 1 - லீவ் நாட்களில் நெட் பக்கம் வராதவர்களுக்கு


தென்மேற்குபருவக்காற்று - மண்மணம் மணக்கும் காதல் கதை-

சினிமா விமர்சனம்


டிஸ்கி 2 - 

அரிதுஅரிது - சைக்கோ திரில்லர் - சினிமா விமர்ச


டிஸ்கி 3 - 

மன்மதன் அம்பு - புரொடியூசருக்கு சொம்பு- சினிமா விமர்சனம்


Tuesday, November 16, 2010

தமிழ்மணம் டாப் 20 பிளாக்ஸ் - பதிவர்களிடையே ஏற்பட்டிருக்கும் எழுச்சி

தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!
தமிழ்மணம் டாப் 20 பிளாக் தர வரிசப்பட்டியல் வெளியான பிறகு எங்கே பார்த்தாலும் இதைப்பற்றியே பேச்சு.பதிவர்களிடையே பரபரப்பு..உற்சாகம்.இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படப்போகின்றன.?

பிளஸ்

1.வெற்றி பெறும் பதிவர்களுக்கு பாராட்டுகள்,வாழ்த்துக்கள் குவிவதால் பதிவர்களுக்கிடையே புரிதல்,சந்தோஷம்,படைப்புத்திறனின் ஊக்குவிப்பு வளர்கிறது.

2.இதுவரை ஏதோ ஒரு பதிவு போட்டோம் என்ற எண்ணத்திலிருந்து இனி தரமான நல்ல பதிவு போட்டு பேர் வாங்க வேண்டும்,இடத்தை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்கிறது.

3.ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கூறிக்கொள்வது,கேலி பேசுவது,அடுத்த பதிவு எப்போ என கேட்டுக்கொள்வது என சிந்தனை முழுவதும் பதிவு பற்றியே குவிகிறது.

4.பதிவர்களின் படைப்பில் இப்போது ஒரு மாற்றம் தெரிகிறது.உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.மொக்கைப்பதிவு போட்டவர்கள் அரசியல்,சமூக விழிப்புணர்வு என வெரைட்டி காண்பிக்கிறார்கள்.கவிதை எழுதுவதில் தபுசங்கர்க்கு நிகரானவர் என பெயர் பெற்ற கவிதைக்காதலன் சமீபத்தில் சினிமா விமர்சனம்,சினிமா கட்டுரை என கலக்குவது ஒரு உதாரணம்.

5.அங்கீகாரம் மட்டுமே ஒரு படைப்பாளனை ஊக்குவிக்கும் என்ற நியதியின் படி தமிழ்மணத்தின் அங்கீகாரத்துக்காக படைப்பாளிகள் ஏங்க ஆரம்பித்து விட்டார்கள்,அவர்கள் சிந்தனைகள் எல்லாம் பதிவின் தரத்தை மேம்படுத்துவதில் இருப்பது நல்ல வரவேற்கத்தக்க மாற்றம்.

6.சினிமா விமர்சனத்தின் அடையாளம் என புகழப்பட்ட கேபிள் சங்கரின் மைனா பட விமர்சனத்தின் இண்ட்லி ஓட்டுக்களை விட ஃபிலாசபி பிரபாகரனின் இண்ட்லி ஓட்டுக்கள் அதிகம் ஆனதும்,அந்த விமர்சனத்தை கேபிள் சங்கர் சாரே பாராட்டியதும் ஆரோக்யமான மாற்றம்.

7.விசிட்டர்ஸ் டுடே ஆவ்ரேஜ் 300 டூ 500 கொண்டுள்ள கோகுலத்தில் சூரியன் வெங்கட் ஒரே ஒரு இடுகை மூலம் 1000 விசிட்டர்ஸ் வரவைத்ததும்,அவர் தொடர்ந்து 2 வாரங்களாக நெம்பர் 8 பிளேஸ்சில் இருப்பதும் பாராட்டத்தக்கது.


8.என்கவுண்ட்டர் சரியா ,தவறா என ஒரே ஒரு கேள்வி கேட்டு மங்குனி அமைச்சர் பெற்ற தமிழ்மண ஓட்டுக்கள் பிரம்மிக்கத்தக்க சாதனை.அவரது சொல்லாடல்,நகைச்சுவை நயம் இதெல்லாம் நாம் பின்பற்ற வேண்டியது..

9.பதிவும் நகைச்சுவை,பதிவின் தரத்தை விட பின்னூட்டங்களீன் மூலம் நகைச்சுவையை அள்ளித்தெளித்து கலாய்த்தல் எனும் நவீன காமெடி மூலம் பன்னிக்குட்டி ராமசாமி,மங்குனி,பட்டாபட்டி,சிரிப்புப்போலீஸ் ரமேஷ்  இவர்கள் 4 பேரும் பெறும் பின்னூட்டங்கள் சர்வ சாதாரணமாக 200 தொடுவது உன்னிப்பாக கவனிக்கத்தக்கது.

10.நல்ல நேரம் சதீஷ் சன் டி டி ஹெச்,ஐ சி ஐ சி  2 பதிவுகள் மூலம் தனது பாணீயிலிருந்து விலகி புதிய பாதையில் போய் பாராட்டுக்களையும் ஜீஜிக்ஸில் ரூ 500 பரிசும் பெற்றதும் பாராட்டத்தக்கது.தொப்பிதொப்பி அரசியல் கார்ட்டூன் பதிவின் மூலம் அட்டகாசமான ராஜ் பாட்டையை தொடங்கியதும் நல்ல ஆரம்பமே...

11. புதிய தலை முறை இதழில் வந்த யுவகிருஷ்ணாவின் கட்டுரைப்படி அலெக்ஸா ரேங்க்கிங்க்கில் முதல் 2 இடங்களைப்பிடித்ததாக சொல்லப்படும் கேபிள் சங்கர் (62000 +), ஜாக்கி சேகர் (80000 +) இருவரும் ஜனரஞ்சக பதிவர்கள்,சினிமா விமர்சனம் ,நாட்டு நடப்பு,என சகலமும் கலந்து கட்டி அடிப்பவர்கள்.இவர்களை விட அலெக்ஸா ரேங்க்கில் முன்னிலை வகிக்கும் வந்தே மாதரம் சசி (56670) டெக்னிக்கல் பதிவுகளை மட்டுமே போட்டு குறுகிய காலத்தில் இந்த அளவு வளர்ச்சி பெற்றது அபாரமானது.

டிஸ்கி - நான் தினமும் 2 மணீ நேரம் மட்டுமே நெட்டில் உள்ளதால் அதிகமாக பிற தளங்களுக்கு செல்ல முடிவதில்லை.எனவே என் லிஸ்ட்டில் வராத எத்தனையோ தளங்கள் கலக்கிகொண்டிருக்கலாம்.அவர்கள் என்னை மன்னிக்க.


மைனஸ்

1.ஓட்டுக்கள்,பின்னூட்டங்கள்,ஹிட்ஸ் இந்த 3 மட்டுமே தர வரிசையை நிர்ணயிக்கிறது.நல்ல படைப்புக்கள் பல இந்த 3ம் இல்லாமலே வந்து போய்க்கொண்டிருக்கின்றன.

2.கமெர்சியல் சினிமா,ஆர்ட் ஃபிலிம் என 2 வகையில் படங்களை தர வரிசைப்படுத்துவது போல் பிளாக்கிலும் 15 பிளாக்ஸை ஓட்டுக்கள்,பின்னூட்டங்கள்,ஹிட்ஸ் மூலம் தேர்ந்தெடுத்து 5 பிளாக்சை தர வரிசையில் தேர்ந்தெடுக்கலாம்.

3.அப்படிக்கூறியதற்காக இப்போது வரிசைப்படுத்திய 20 பிளாக்குகளும் தரம் இல்லாதவை என அர்த்தம் அல்ல.இவைகள் தரமானவை தான்.ஆனால் யாராலும் கவனிக்கப்படாத தரமான பிளாக்குகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதே என் வாதம்.

4.எனது அனுபவத்தில் அந்த மாதிரி அதிக பதிவு போடாவிட்டாலும் குவாலிட்டி பதிவர்கள் 1 சேட்டைக்காரன் 2 தொப்பி தொப்பி  3 ஃபிலாசபி பிரபாகரன்  4 குசும்பன்  5 கும்மாச்சி.

5  ராம நாராயணன் மாதம் ஒரு படம் எடுப்பார்,ஷங்கர்,மணிரத்னம் 2 வருடங்களூக்கு ஒரு படம் கொடுப்பார்.ஆனால் அவர்கள் இருவரின் ஒரு படத்தின் தரம் ராம நாராயணன் கொடுக்கும் 24 படங்களை விட அதிகம்.

பிளஸ்களை மேன்மேலும் பிளஸ் ஆக்குவோம்,மைனஸ்களை பிளஸ் ஆக்கும்முயற்சியில் ஈடுபடுவோம்,அனைவரும் உழைப்போம் எல்லோரும் மாற்றி மாற்றி வெற்றி காண்போம்.வெற்றியிலும் ,உழைப்பிலும் தானே மனிதனின் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது?

Saturday, November 13, 2010

தமிழ்மணம் விருதுகள் அறிவிப்பால் ஏற்படப்போகும் பிரச்சனைகள்

1.>>>கலந்து கொள்ளும் பதிவர், தனது பதிவினை 1-11-2010க்கு முன்னர் தமிழ்மணத்தில் இணைத்திருத்தல் வேண்டும். டிசம்பர் 1, 2009 முதல் நவம்பர் 10 2010 வரை எழுதப்பட்ட இடுகைகள் மட்டுமே விருதுகள் தேர்வுக்கு இடம்பெறும்>>>

பொதுவாக ஒரு ஆண்டின் சிறந்த படைப்பு என்றால் அந்த ஆண்டு முழுவதும் வரும் படைப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.உதாரணமாக 2010ம் ஆண்டின் சிறந்த படம் என்றால் 1.1.2010 முதல் 31.12.2010 வரை ரிலீஸ் ஆன படங்களே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

2.>>>>தமிழ்மணத்தின் முதற்கட்ட வாக்கெடுப்பு வலைப்பதிவர்களுக்கானது. தமிழ்மணத்தில் பதிவு செய்துள்ள வலைப்பதிவர்கள் அனைவரும் வாக்களிக்கலாம். ஒரு பதிவருக்கு ஒரு பிரிவுக்கு ஒரு வாக்கு என்னும் அடிப்படையில் வாக்குரிமை இருக்கும்.>>>

இதில்தான் முக்கியப்பிரச்சனை.ஒரு சாதாரண பதிவர்க்கு குறைந்த பட்சம் 10 பின்னூட்டவாதிகள் அல்லது பிடித்த பதிவாளர்களூம்,பிரபல பதிவாளர்களூக்கு 50  பின்னூட்டவாதிகள் அல்லது பிடித்த பதிவாளர்களூம் இருப்பார்கள்.அவர்கள் எல்லோருக்கும் அல்லது பெஸ்ட் பதிவுகளுக்கு வாக்களீக்க விரும்புவார்கள் ,இப்படி ரேஷன் வைத்தால் மனத்தாங்கல் ஏற்படும்.

3.>>>> தமிழ்மணம் நிர்வாகம், வலைப்பதிவர்களைக் கொண்ட நடுவர் குழு அமைக்கப்படும். நடுவர் குழுவில் இடம் பெறும் நடுவர்கள் தனித்தனியாக இடுகைகளை தேர்வு செய்து தமிழ்மணம் விருதுக்குழுவிற்கு அளிப்பார்கள்.>>>>

சீனியர்  வலைப்பதிவர்களைக் கொண்ட நடுவர் குழு எப்படி தேர்ந்தெடுக்கும் என சொல்லத்தேவை இல்லை,அவர்கள் காலகட்டத்தில் உள்ள வலைப்பதிவர்களுக்கே அதிக முன்னுரிமை கொடுப்பார்கள்.இது இயற்கை மற்றும் மனோவியல் ரீதியாகவும் அப்படித்தான் அமையும்.புது வலைப்பதிவாளர்கள் புறந்தள்ளப்பட வாய்ப்புண்டு.


4 >>>> இந்த விருதுத் தேர்வுக்கான அடிப்படை. அறிவிக்கப்பட்ட போட்டிகளுக்காக எழுதப்படும் படைப்புகளாக அல்லாமல், தன்னெழுச்சியாக வெளிப்பட்ட படைப்புகளே இந்தத் தேர்வுகளுக்கு கணக்கிலெடுக்கப்படுவதால் இதில் போட்டியோ, ஏமாற்றமோ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்குமென்றே நம்புகிறோம்.>>>

போட்டி என்று அறிவிக்கப்பட்ட பிறகு எழுதப்படும் பதிவுகளும் கணக்கில் சேர்க்கப்பட்டால் படைப்பின் தரம் இன்னும் கூடும்.இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு எழுதுவார்கள்.அது நல்லதுதானே.

5.   >>>> தனிப்பட்ட இடுகை (post) அல்லது இடுகைத் தொடர்களே விருதுக்கு தேர்வு செய்யப்படும். வலைப்பதிவு முழுமைக்குமான விருது என்று எதுவும் இல்லை.>>>

பெஸ்ட் பிளாக் அவார்டு ஒன்றும் கொடுக்கலாம்.அது ஊக்குவிப்பாக அமையும்.

6. >>>
வாக்கெடுப்பில் ஒவ்வொரு பிரிவிலும் அதிக வாக்குப் பெற்று முதலிடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.1000ம் (ஆயிரம் ரூபாய்), இரண்டாம் இடம் பெறும் பதிவுகளுக்குத் தலா ரூ.500ம் (ஐநூறு ரூபாய்) வழங்கப்படும்.>>>

பரிசுத்தொகை மிக கம்மி.ஒரு தனி மனிதனான பரிசல்காரன் கிருஷ்ணகுமார் அறிவித்த போட்டியிலேயே (சவால் சிறுகதை போட்டி) ரூ 1000 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசாக பலருக்கு அளிக்கப்பட்ட போது.இத்தனை பதிவாளர்களை வைத்து நடத்தும் மிகப்பெரிய நிறுவனம் அறிவுத்துள்ள பரிசு யானைப்பசிக்கு சோளப்பொரி.

7. அதே போல் யார் யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது ரகசியமாக இருக்க வேண்டும்.ஏனெனில் வெளிப்படையாக தெரிந்துவிட்டால் நண்பர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்புண்டு.இது பற்றி தெளிவாக ஏதும் கூறப்படவில்லை.

டிஸ்கி - 1 : என் மனதிற்குத்தோன்றியதை நான் எழுதினேன்.இதனால் தமிழ்மணம் போட்டித்தேர்வில் என் படைப்புகள் பரிசு பெறுவதில் பாதிப்பு ஏற்படும் என தமிழ்மணம் அமைப்பு நினைத்தால் எனக்கு தனி மெயிலில் மிரட்டவும்.நான் இந்த இடுகையையே நீக்கி விடுகிறேன்.கொண்ட கொள்கையில் கடைசி வரை உறுதியாக இருக்க நான் வீரபாண்டியக்கட்ட பொம்மன் பரம்பரையில் பிறக்கவில்லை.சாதாரண குடும்பம்தான்.

டிஸ்கி - 2 : வழக்கமாக் காமெடிக்காகத்தான் அட்ராசக்க வருகிறோம்,இப்படி சீரிஸ்சாக எழுதினால் எப்படி என கேட்பவர்கள் என் ஃபோட்டோவை ஒரு முறை பார்க்கவும்.அட டம்மி பீஸு என உங்களுக்கே சிரிப்பு வரும்.அப்படியே சிரிச்சுக்கிட்டே ஓட்டும்,கமெண்ட்டும் போட்டுட்டு ஓடி விடவும்.