வேண்டாம் என்று நீ
விலகிப்போனாலும்
காற்றின் ஒரு மூலக்கூறாய் மாறி
உன் சுவாசத்தில் நிரம்புவேன்.
நான் பார்க்கின்ற
அதே நிலாவையும்,சூரியனையும்
எங்காவது ஒரு மூலையில் இருந்து
நீயும் பார்க்கிறாய் என்பதால்
அங்கே குடியேற குறுக்கு வழியோ ,
என் முகம் அதில் பிரதிபலிக்க
விஞ்ஞான முறையோ தேடுகிறேன்.
திட்டமிட்ட பயணத்திலோ,
எதேச்சையாகவோ
நம் சந்திப்பு ஒருமுறை
நிச்சயம் நிகழும்.
அப்போது
உன் உதடுகளால் முடியாவிட்டாலும்
கண்கள் மூலமாவது
ஒரு புன்னகை சிதறவிடு.


