Sunday, August 22, 2010

ஜாலிலோஜிம்கானா விருதுகள்


1.இந்த வாரத்தின் சிறந்த சால்ஜாப்பு சாஞ்சனா விருது குணச்சித்திர நடிகை நமீதாவுக்கு.த டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழ் கேட்ட “வர வர நீங்க குண்டாகிட்டே இருக்கீங்களே?” என்ற கேள்விக்கு தமிழக ரசிகர்கள் குண்டான ,புஷ்டியான நடிகைகளைத்தான் விரும்புகிறார்கள் என்று கூறி சமாளித்ததற்காக.

2. இந்த வாரத்தின் சிறந்த புலம்பல் புலிகேசி + லபோ திபோ லவகுசா விருது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு, எங்கள் தயவில் ஆட்சி செய்பவர்கள் சுகபோகமாக வாழ, எங்களுக்கு கோவில் தர்மகர்த்தா போஸ்ட் கூட கிடைப்பதில்லை என இந்தியா டுடே, புதிய பார்வை இதழ்களில் புலம்பியதற்காக.

3. இந்த வாரத்தின் சிறந்த அன்லக்கி அண்ணாசாமி விருது வை.கோ விற்கு,6% ஓட்டு வாங்கி இருந்தால்தான் கட்சிக்கான அங்கீகாரம் என வலியுறுத்திய தேர்தல் கமிஷனிடம் 5.98% என்பது 6% என்றுதான் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும் என வாதாடித்தோற்றதற்காக.

4. இந்த வாரத்தின் சிறந்த அதிகப்பிரசங்கி அய்யாசாமி விருது கவிஞர் வைரமுத்துவின் மகன் கார்க்கிக்கு,எந்திரன் படம் பற்றி சம்பந்தப்பட்ட இயக்குனர்,ஹீரோ இருவரும் அடக்கி வாசிக்க,இவர் மட்டும் என் டி டி வி க்கு அளித்த பேட்டியில் “இந்தப்படத்தில் ரஜினியின் வழக்கமான ஸ்டைல் இல்லை,இது ஒரு இயக்குனரின் படம்”என கூறி ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டதற்கு.

5. இந்த வாரத்தின் சிறந்த ஏட்டிக்குப்போட்டி ஏகாம்பரம் விருது கலைஞருக்கு,திருச்சியில் நடந்த மீட்டிங்கில் திருக்குவளையின் தீய சக்தி என ஜெ தன்னை வர்ணித்த 7வது நிமிடத்தில் “வாய்தா ராணி “எனப் பட்டப்பெயர் இட்டு முரசொலியில் நக்கலடித்ததற்கு.6.அய்யய்யோ,வட போச்சே என புலம்பும் வடக்குப்பட்டி ராமசாமி விருது இயக்குனர் கே பாக்யராஜ் அவர்களின் மகன் சாந்தனுக்கு,களவாணி படத்தில் இயக்குனர் சற்குணம் நடிக்க அணுகியபோது கதை பிடிக்கவில்லை எனக்கூறி ஒதுக்கி விட்டு,இப்போது படம் ஹிட் ஆனதும்  சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் பேட்டியில் புலம்பியதற்கு,

7.சீ... சீ... இந்தப்பழம் புளிக்கும் எனும் நொந்து நூடுல்ஸ் நரி விருது இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு,அஜித் வேண்டாம் என புராஜக்ட்டை கை விட்ட பிறகு ,எனக்கு இனி அஜித் தேவை இல்லை என வீராப்பாக ஸ்டார் டஸ்ட்,ஆனந்த விகடன் ஆகிய  இதழ்களில்  பேட்டி அளித்ததற்கு.

8.இந்த வாரத்தின் சிறந்த நாட்டு நலப்பணி ஆற்றிய நல்ல தங்காள் விருது 
குமுதம் வார இதழுக்கு,3 பக்கத்துக்கு கட்டுரை போட்டு விஜய்யின் அடுத்த பட டைட்டில் காவல் காதல் அல்ல,காவலன் என உலகிற்கு அறிவித்து சமுதாய விழிப்புணர்ச்சியை ஊட்டியதற்காக.

9. இந்த வாரத்தின் சிறந்த செண்ட்டிமெண்ட் செண்பகம் விருது டான்ஸ் மாஸ்டர் கலாவிற்கு,கலைஞர் டி வி யில் மானாட மயிலாட நிகழ்ச்சியில்  அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு நம்மை பயமுறுத்தியதற்கு.

10.இந்த வாரத்தின் சிறந்த ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒப்பிலியப்பன் விருது விஜய்காந்துக்கு,22 8 10 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில் தி மு க ,அ தி மு க தவிர வேறு எந்தக்கூட்டணியாக இருந்தாலும் தலைமை ஏற்க தயார் என அறிவித்ததற்காக.

19 comments:

புரட்சித்தலைவன் said...

nice....

சி.பி.செந்தில்குமார் said...

முத வடை உங்களுக்குத்தான்.நீங்க ஹைக்கூ ரசிகரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//இந்த வாரத்தின் சிறந்த நாட்டு நலப்பணி ஆற்றிய நல்ல தங்காள் விருது
குமுதம் வார இதழுக்கு,3 பக்கத்துக்கு கட்டுரை போட்டு விஜய்யின் அடுத்த பட டைட்டில் காவல் காதல் அல்ல,காவலன் என உலகிற்கு அறிவித்து சமுதாய விழிப்புணர்ச்சியை ஊட்டியதற்காக.///

ithu superu

Anonymous said...

கலக்கலோ கலக்கல்...
நாட்டு நலப்பணி ஆற்றிய நல்ல தங்கா//நல்லதங்காளுக்கும் நாட்டு நலப்பணிக்கும் என்னங்க சம்பந்தம்? நல்லா பிடிக்கிறாங்கய்யா டைட்டிலு...அனைத்து விருதுகளும் சூப்பர்.வாரம் ரெண்டு விருது போட்ருங்க..ரெண்டு சினிமா விமர்சனம்...அரசியல் கட்டுரை ஒண்ணு...உங்க டிரேடு மார்க் ஆகிடும்.விருதுகள் பதிவு ..கொத்து புரோட்டா போல ஃபேமஸ் ஆகும்.

சி.பி.செந்தில்குமார் said...

அப்பாடா,ரமேஷே பாராட்டியாச்சு அப்புறமென்ன?கட்சி ஒண்ணு ஆரம்பிச்சிட வேண்டியது தான்

சி.பி.செந்தில்குமார் said...

சதிஷ்,ஏன் லேட்?பெஞ்சின் மீது ஏறி நில்.எந்தப்பதிவு போட்டாலும் மைனஸ் ஓட்டு போடறது யார்னு தெரியுதா பாரு.

Anonymous said...

சதிஷ்,ஏன் லேட்?பெஞ்சின் மீது ஏறி நில்.எந்தப்பதிவு போட்டாலும் மைனஸ் ஓட்டு போடறது யார்னு தெரியுதா பாரு//
பெஞ்ச் மேல ஏறி நின்னா தெரியுமா பாஸ்.நமக்கு நண்பன் கம்மிதான் எதிரிதான் அதிகம் போல..பதிவுலகத்துல எங்க கால் வெச்சாலும் முள்ளு குத்துது.போன பதிவுல 3 மைனஸ்.இது பரவால்ல.நிம்மதியா தூங்குங்க

Anonymous said...

புரட்சி தலைவா எப்போ பதிவு எழுதப்போறிங்க..நாங்க எப்போ மொய் மரியாத செய்யறது..

சி.பி.செந்தில்குமார் said...

திரைமணத்துல முகப்புல வர்லையே.

ஷைலஜா said...

கலக்கல் பதிவு செந்தில்குமார்!

Anonymous said...

திரைமணத்துல முகப்புல வர்லையே.//எனது புது பதிவுக்கு மேல வர்றீங்க பாருங்க...அப்பவாவது என் தளத்துக்கு வர்றீங்களான்னு பார்க்குறேன்
http://sathish777.blogspot.com/2010/08/blog-post_22.html

சி.பி.செந்தில்குமார் said...

தாய்க்குலமே வருக வருக நன்றி,இந்த மாதிரி பதிவு பெண்களுக்குப்பிடிக்காதுன்னு நினைச்சேன்,அடடே நன்றி சைலஜா மேடம்

சி.பி.செந்தில்குமார் said...

சதிஷ்,விளம்பர சார்ஜ் ஒரு மொக்க பட டிக்கெட் போட்டு கூட்டிசெல்

ரசிகன் said...

விருதுகள் சூப்பரு:) தொடருங்க.

சி.பி.செந்தில்குமார் said...

நான் உங்கள் ரசிகன்.நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

சி.பி.செந்தில்குமார் said...

நான் எந்தப்பதிவு போட்டாலும் மைனஸ் ஓட்டுப்போடவே என் பிளாக்கிற்கு வருகை தரும் மைனஸ் ஓட்டு மைனர்களுக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

சதிஷ்,ஓட்டுப்பட்டை இணைத்ததற்கு,நமீதா ஸ்டில் தந்துவதியதற்கு,நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

சே.குமார்,சாரி,உங்க பதிவுக்கு கமெண்ட் போட முடியலை,சிஸ்டம் ஃபால்ட்

sasibanuu said...

Attagasam... Pls continue...