Monday, August 02, 2010

VEDAM- சினிமா விமர்சனம்

  1. வேதம் என்ற அழகான தெலுங்குத் தலைப்புக்கு தேகம் என கிளுகிளுமொழிபெயர்ப்பு செய்த அந்த தமிழறிஞர் யார் என சரியாகத்தெரியவில்லை.அநேகமாக மழு என்ற மலையாள டைட்டிலுக்கு மாமனாரின் இன்ப வெறி என்றும்,ரதி என்ற  மலையாள டைட்டிலுக்கு பவுர்ணமி ராத்திரியில் ரதிதேவி என்றும் மொழி பெயர்த்த புண்ணியவானின் வழித்தோன்றலாகவும் இருக்கலாம்
  • இப்பவே சொல்லிடறேன்,அஞ்சரைக்குள்ள வண்டி டைப் படம் அல்ல இது.ராக் ஸ்டாராக ஆசைப்படும் மிலிட்டரி குடும்பத்து பெங்களூர்கார இளமை துள்ளும் இளைஞன்,மருமகளின் கிட்னியை விற்க ஹைதராபாத் வரும் ராமுலு,சொந்தமாக தொழில்(!) செய்ய ஆசைப்பட்டு,  ஹைதராபாத் வருகிற. அயிட்டம் அனுஷ்கா,தன் தகுதிக்கு மீறி மிகப்பெரிய பணக்கார பெண்ணை தானும் பணக்காரன் என்று நம்ப வைத்து எப்படியாவது அவளை திருமணம் செய்ய ஆசைப்படும் பேராசைக்காரன்.,ஹைதராபாத்தில் நடந்து ஒரு ஹிந்து ஊர்வலத்தில் தன் நிறைமாத கர்பிணியின் கர்ப்பம் கலைந்து, இனிமேல் இந்தியாவில் இருக்கக்கூடாது என்று முடிவு செய்து துபாய் போக விசா எல்லாம் ரெடியாகி, ஹைதராபாத்திலிருந்து கிளம்ப வருகிற ஒரு முஸ்லிம் இந்த 5 பேரும் ஒரு ஹாஸ்பிடலில் சந்திக்க நேரிடுகிறது.

  • இவர்கள் ஐந்து பேரும் வ்ந்து சேரும் இடமான மருத்துவமனையை, தீவிரவாதிகள் வளைத்து, கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ள,படம் ஒரு ஆக்‌ஷன் படத்துக்கே உரிய ஸ்பீடோடு சூடு பிடிக்கிறது.
  •  
  • சீன் படம் என்று நினைத்து வந்தவர்கள் கூட படத்தோடு ஒன்றி விடும் அளவுக்கு திரைக்கதை செம ஃபாஸ்ட்.. .
  •  
  • இன்னொரு முக்கியத்தகவல்,இந்தப்படத்தைத்தான் சிம்பு நடிக்க வானம் என தயாராகிறது.
  •  
  • நான் ஒரு டிஸ்ட்ரிபியூட்டரிடம் கேட்டேன்,போஸ்டரில் அனுஷ்கா விபச்சார அழகியாக நடிக்கும்னு போட்டு விளம்பரம் பண்ணியதுக்குப்பதிலா ,சிம்புவின் வானம் இதன் ரீமேக்தான் என விளம்பரம் பண்ணி இருக்கலாமே என. அதற்கு அவர் “தம்பி,30 வருஷம் இந்த சினி ஃபீல்டுல பழம் தின்னு கொட்டை போட்டவன் ,எனக்கு தெரியாதா?அனுஷ்கா ரசிகர்களும் வருவாங்க,பிட் பட ரசிகர்களும் வருவாங்க .ஒரே கல்லுல 2 மாங்கா என்றார்.

 
உலகத்திலேயே அனுபவம் குறைவுன்னா அதிக பணம் சம்பாதிகிற்து நம்ம தொழில் தான்” எனறு அனுஷ்கா டயலாக் பேசும்போது கைதட்டல் தியேட்டரை நிரப்பி விடுகிறது. 

அல்லு அர்ஜுன் தான் பணக்காரன் என்று காட்டிக் கொள்ள, அவ்வப்போது சட்சட்டென ப்ரெசென்ஸ் ஆப் மைண்டுடன் பொய் சொல்வதும், பணத்தை திருடப் போகும் போது குறுக்கே அழைக்கும் குழந்தையை கவனிக்காமல் இருப்பவர், பணத்தை திரும்ப திருடிய இடத்திலேயே வைத்தது விட்டு திரும்பி வரும் போது அந்த மழலையிடம் நிம்மதியாக விளையாடும் இடத்தில்  தான் ஒர் சிறந்த நடிகர் என்பதையும் நிருபித்திருக்கிறார்.

மணிரத்னத்தின் திருடா திருடா படத்தில் வருவது போல் எல்லா கேரக்டர்களும் ஓடிக்கொண்டே இருப்ப்து நல்ல ஸ்பீடுக்கான லீட்,

பணத்தை அபகரிக்கும்போது சரண்யாவின் மாமனாரின் நடிப்பு மிக அருமை.


5 கேரக்டர்களும் ஒரே புள்ளியில் சந்திக்கும் வரை சாதாரண ரசிகனுக்கு கொஞ்சம் பொறுமை தேவை.அதற்குப்பிறகு படம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்கிறது.

பாடல் வைக்க பல இடங்களூம் ,வாய்ப்பும் இருந்தும் டைரக்டர் தவிர்த்திருப்பது புத்திசாலித்தனம்.அனுஷ்கா அச்சு அசல் டிக்கெட் மாதிரியே நடித்து (அது எப்படி எனக்கு தெரியும் என சந்தேகம் கூடாது,ஒரு கேள்வி ஞானம்தான்)அப்ளாஸ் பெறுகிறார்.எனக்கு தெரிந்து தனம் பட சங்கீதாவுக்குப்பிறகு இந்த மாதிரி கேரக்டரில் வெளுத்து வாங்குவது நம்ம(!)
அஸ்கா அனுஷ்காதான்.


டிஸ்கி -போஸ்டரில்” என்னை ரிசர்வ் செய்து கொள்ளுங்கள்”  என அனுஷ்கா கூறுவது போல் ஒட்டி இருந்ததுதான் செம காமெடி

7 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

vedam super mv

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க ரமேஷ்,எங்கேயும் எப்போதும் நீங்கதான் முதல்

Anonymous said...

கருத்தாழமிக்க படம் போல தெரியுது.மக்களுக்கு போய் சேர வேண்டிய ஒரு படைப்பை விஸ்தாரமாக விளக்கிய தங்களுக்கு நன்றி.தொடரட்டும் தங்கள் புனித பணி.அடுத்தவாரம் கோயம் பேடு கோகிலா படம் வருதாம்.

shortfilmindia.com said...

தலைவரே படம் பெயர் வேதம்

கேபிள் சங்கர்

சி.பி.செந்தில்குமார் said...

ஆமாண்ணே,ரியல் நேம் அது தான்.நம்மாளுங்க போஸ்டர்ல மாத்திப்புட்டாங்கண்ணே+ஏமாத்திப்புட்டாங்கண்ணே.வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி அண்ணே

சி.பி.செந்தில்குமார் said...

சதிஷ்,கோயம்பேடு எல்லாம் அடுத்த வாரம் பார்த்துக்கலாம்.இப்போ ஈராட்ல புக் எக்ஸிபிஷன்ல சுகி சிவம் பேசறாரு .வர்றியா? 7 pm yo 9 pm

இடைவெளிகள் said...

ஜோக்ஸ் எழுதி அது பிரபல வார இதழில் வெளிவந்தால் அதை படிக்கும்போது எப்படி வாய் விட்டு சிரிப்போமோ அதைப்போலவே தேகம் சினிமா விமர்சனத்தையும் எழுதியிருக்கிறீர்கள்.
உங்களின் நகைச்சுவை உண்ர்வுகளுக்கு நன்றி.