Saturday, August 14, 2010

குறுக்குப்புத்தி - சினிமா விமர்சனம் 18+

என்னதான் கணையாழி,ஏழைதாசன் போன்ற இலக்கிய இதழ்களை நாம் வாசித்து வந்தாலும்,பதின்ம வயதில் படித்த சரோஜாதேவி,விருந்து,சினிமித்ரன் மாதிரி ஒளித்து வைத்துப்ப்படித்த புக்குகளிலும் நமக்கு அவ்வப்போது ஆர்வம் வந்துகொண்டுதான் இருக்கிறது.அதேபோல் உலகப்படங்கள்,உள்ளூர்ப்படங்கள் என கலந்து கட்டிப்பார்க்கும்போதும் அவ்வப்போது வரும் இது மாதிரி அடாஸ் படங்களையும் பார்த்துத்தான் தொலைக்க வேண்டி இருக்கிறது.இந்த மாதிரி படங்கள் காலம் காலமாய் ரசிகனை சுண்டி இழுக்கக்காரணம் படத்துல சீன் இருக்குமா,இருக்காதா,இருந்தாலும் நம்ம எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி இருக்குமா? இடைவேளையின்போது பிட் ஓட்டுவாங்களா ,மாட்டாங்களா ,இந்த சஸ்பென்ஸ்தான் .கே பாலச்சந்தரின் ஒரு வீடு இரு வாசல் மாதிரி படத்துல 2 கதைகள்(கே பி மன்னிப்பாராக).அந்த 2 கதைகளுக்கும் ஒரு லிங்க் கொடுத்திருக்கார் பாருங்க டைரக்டர் அடடா புஷ்பா தங்கதுரையின் லிங்க் கூட இவ்வளவு சுவராஸ்யம் இல்லை.
படத்துல ஏகப்பட்ட காமெடி சீன்கள்.

1.எல்லா ஸ்கூலிலும் சுடிதார் யூனிஃபார்ம் அமல்படுத்தப்பட்ட இந்தக்காலகட்டத்தில் எந்த ஸ்கூலில் இப்படி ரம்பா தெரியும்படி(அதாங்க தொடை )ஸ்கர்ட் இருக்கோ டைரக்டருக்கே வெளிச்சம்.2.படத்தின் ஹீரோயின் 10வது படிப்பதாக காட்டுகிறார்கள்.ஆனால் அம்மணிக்கு 32 வயசு இருக்கும்.3.படத்தின் வில்லன் அஜய் ரத்னம் மிக அசட்டுத்தனமாக ,ஹீரோயினுக்கு மாமாவாக ,அவரை அடைய நினைக்கும் கேரக்டரில் வரும் ஒவ்வொரு சீனும் செம காமெடி,4.படத்தோட க்ளைமாக்ஸ்ல பாரதிராஜா கணக்கா டைரக்டர் படத்தோட கருவை 10 நிமிஷம் விளக்கறார் பாருங்க,அடடா.5.வில்லன் அஜய் காலிங்பெல்லை அடிப்பார்.2வது செகண்ட்லயே கதவைத்திறக்கும் அவரது மனைவியை பளார் என அறைந்து ஏன் லேட் என கேட்பார்.
முதல்ல படத்தோட கதை என்னனு பார்த்துடுவோம்.
ஹீரோயின் பாட்டி வீட்டில் தங்கி இருக்கிறாள்,பெற்றோர் ஃபாரினில் இருக்கிறார்கள்.(அப்பதானே தனிமையில் அவள் இருப்பதை அடிக்கடி காட்ட முடியும்.)அவளின் மாமா அவளை அடைய நினைக்கிறார்.ஹீரோயினின் தோழி பற்றிய ஒரு கிளைக்கதையும் உண்டு,அவள் காதலனுடன் அம்மா அப்பா விளையாட்டு விளையாண்டதை செல்ஃபோனில் படம் பிடித்த காதலன்  செல்ஃபோனை தொலைத்து விடுகிறான்.அது எப்படியோ ,யாரிடமோ சிக்கி அம்பலம் ஆகி தோழியின் பெற்றோர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.


படம் பார்க்கற நாமதான் சாகனும்,இவங்க எதுக்கு சாகறாங்க என்ற கேள்வியோடு ரசிகர்கள் நொந்து போய் வெளியேறுகின்றனர்.ஓரவல்லி சூரவல்லியே (அடடே,என்னா ஒரு கவிதை லைன்) என்ற பாட்டு அப்படியே 4 ஸ்டூடண்ட்ஸ் படத்தின் லஜ்ஜாவதியே என்னை அசத்துறே ரதியே பாடலின் உல்டா.நடன வடிவமைப்பு,காட்சிப்படித்திய விதம்,லொக்கேஷன் என எல்லாம்.என்ன கொடுமை சார் இது.பொழுது சாயும் நேரம் என்ற பாட்டு சிம்புவின் குத்து படப்பாட்டான சாணக்யா
சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் பாட்டின் அப்பட்டமான காப்பி.வில்லன் அஜய் திரையில் தோன்றும்போதெல்லாம் கேவலமாய் ஒரு பின்னணி இசை தர்றாங்க பாருங்க ,அய்யோ சாமி.அப்புறம் வில்லன் ஹீரோயினை நெருங்கும்போதெல்லாம் உள்ளத்தை அள்ளி தா பட ஹிட் சாங்கான அழகிய லைலா பாட்டின் ஆரம்ப ஹம்மிங்கை போடறாங்க பாருங்க,போதுண்டா சாமி.


படத்தின் இயக்குனர் சொந்தமாக சிந்தித்து எடுத்த ஒரே காட்சி அந்த ரெஸ்டாரண்ட் சீன் தான்.ஹீரோயின் &கோ சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்.லேடி ஓனர் வந்து அதட்டல் போடுவார்.உடனே அவரது பின்பக்கத்தில் நோ சர்வீஸ் என நோட்டிஸ் ஒட்டி விடுவார்கள் (ராகிங்காம்)
சொல்ல மறந்த முக்கிய காமெடி சீன் ஒன்று.ஹீரோயினின் தோழி அவளது பாய் ஃப்ரெண்டை ஹீரோயினிக்கு அறிமுகப்படுத்துவாள்,அடுத்த சீனிலேயே டூயட்,அதற்கடுத்த சீனில் 2 பேருக்கும் அறிமுகமே இல்லாதது போல் காட்சிகள்.எடிட்டர் எல்லாம் என்ன பண்ணிட்டு இருந்தாங்க?கடைசியாக ஒரு கேள்வி சென்சார் ஆஃபிசருக்கு.இந்தப்படத்துக்கு என்ன இதுக்கோசரம் ஏ சர்ட்டிஃபிகேட் குடுத்தீங்க? U/A  கொடுக்கக்கூட யோக்யதை இல்லாத படத்துல சும்மா விளம்பரத்துக்காகவும்,கூட்டத்தை வரவைக்கறதுக்காகவும் பணம் குடுத்து ஏ சர்ட்டிஃபிகேட் வாங்கி இருப்பாங்களோ?12 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

பொறுமையுடன் காத்திருப்பேன்... டி வி டி வரும் வரை...(காத்திருக்க வேண்டிய நிலை வராதுன்னு நினைக்கிறேன்)

சி.பி.செந்தில்குமார் said...

வாங்க,முத விருந்தாளி.காலமெல்லாம் காத்திருப்பேன்னு இருக்க வேண்டியதுதான்.அண்ணே,இதுக்கு எல்லாம் டி வி டி விட்டா லாஸ் ஆகிடும்

Anonymous said...

இந்த படத்துக்கு தான் எதிர்பார்ப்பு அதிகம்.சிபியே வம்சம் விட்டுட்டு இந்த படத்துக்கு முட்டி மோதி டிக்கெட் வாங்கி நமக்காக விமர்சனம் போட்ருக்கார் பாருங்க மக்களே

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

தலைவரே, உங்க விமர்சனம் தமன்னா மாதிரி அழகுன்னா... நீங்க போட்டிருக்கிற படங்கள் அனுஷ்கா மாதிரி ஜில்ஜில்!(படங்களுக்காகவே உங்க தளத்துக்கு வரலாம்)

ponsiva said...

இந்த படத்தை நான் போன மாசமே cooltamil . com ல் பார்த்துட்டேன்...
இப்போதான் தியர் பக்கமே வருதா? இல்ல நீங்க இப்போதான் பாத்திங்களா?

உண்மைத்தமிழன் said...

ஹா.. ஹா.. இது எப்படி என் கண்ணுல சிக்காம போச்சு..? அப்பாடா தப்பிச்சேண்டா சாமி.. 60 ரூபா மிச்சம்..!

நன்றி செந்தில் ஆண்டவா..!

நறுமுகை said...

photo session mattum than olunga nadathuvangalo??

thanks..
www.narumugai.com

சி.பி.செந்தில்குமார் said...

சதிஷ்,மக்களே என நீ விளித்து சொன்ன கமண்ட் செம நக்கலே(எப்படி எதுகை மோனை)

சி.பி.செந்தில்குமார் said...

பொன்சிவா,நான் பார்த்த ஃபிகரை நீங்க 30 நாள் முன்னாலயே பாத்துட்டீங்களா?அட போங்கப்பா,எப்பவும் நான் லேட்

சி.பி.செந்தில்குமார் said...

உண்மைத் தமிழன் அண்ணே,வாங்க,எனக்கு ரூ 30 தந்துடனும்,உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

புரட்சித்தலைவன் said...

no cmments

சி.பி.செந்தில்குமார் said...

திட்டுனாலும் பரவாயில்லை,ஏதாவது சொல்லிடுங்க