Tuesday, August 24, 2010

கைபேசி எண் -சினிமா விமர்சனம்

அன்புள்ள இயக்குனர் விஷ்வக்சேனன் அவர்களுக்கு வணக்கம்,

பொதுவாக விமர்சகர்கள் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டை நீங்கள் என் மேலும் வைக்கக்கூடும்.1000 குறை சொல்லலாம்,நீ செஞ்சு பாரு,அப்பதான் அதன் கஷ்டம் தெரியும்,2 வருஷம் கஷ்டப்பட்டு படம் எடுப்போம் 2 லைன்ல படம் சரி இல்லைனு விமர்சனம் எழுதிட்டு போய்ட்டே இருப்பீங்க என்று நீங்கள் கோபப்படக்கூடும்.ஆனால் என் நோக்கம் படைப்பாளிகளின் திறமையை குறைத்து மதிப்பிடுவதோ,அவர்களை எள்ளல் செய்வதோ அல்ல,மேன்மேலும் அவர்கள் மெருகேற வேண்டும் என்பதே,எனவே பொறுமையாகப்படிக்கவும்.

முதல்ல உங்கப்படத்துல இருக்கற பிளஸ் பாயிண்ட்ஸ் 3 இருக்கு,அதை பார்ப்போம். 1.போஸ்டர் டிசைன். 2.ஹீரோயின் செலக்‌ஷன். 3.இடைவேளைக்குப்பின் வரும் சில காட்சிகள்.

1.போஸ்டர் டிசைன் -ஒரு லேடி ஒரு ஆளோட டெட் பாடியின் ஒரு காலை மட்டும் பிடித்து காட்டில், இரவில் அமானுஷ்யமான சூழ்நிலையில் இழுத்து செல்வது போல் ஒரு ஸ்டில் செலக்ட் பண்ணுனது அருமை.அதுவே படத்துக்கு என்னை இழுத்து வந்தது.
2.ஹீரோயின் செலக்‌ஷன் -படத்தை பொறுமையா கொஞ்சமாவது பாக்க முடியுதுன்னா அது ஹீரோயின் முக தாட்சண்யத்துக்காகத்தான்.நல்ல ஹோம்லி லுக் +கண்ணியமான தோற்றம்,கவர்ச்சியாக காண்பிக்காமல் டீசண்ட்டாக காண்பித்தது.
3.இடைவேளைக்குப்பின் வரும் சில காட்சிகள். -படத்தோட செகண்ட் ஆஃப்ல வர்ற அந்த ஃபிளாஷ்பேக் காட்சிகள்,அமானுஷ்யக்காட்சிகள்.
படத்தோட கதை என்ன?மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு தனது குழந்தையையே கொல்லும் கணவனை கொல்லும் மனைவி தன் வீட்டின் எதிர் வீட்டில் குடி வரும் புதுமணத்தம்பதியுடன் பழகுவதும்,கர்ப்பவதியான புதுமணப்பெண்ணின் குழந்தையை தன் குழந்தையாக பாவிபதும்,அந்த சைக்கோ பெண்ணிடம் இருந்து புதுமணத்தம்பதிகளை காப்பாற்றுவதும்தானே?
சஸ்பென்ஸ்  படமோ,திரில் படமோ எடுக்க ஆசைப்படும் அனைவருக்கும் பொருத்தமான ஒரு ஐடியாவை உங்களுக்கும் கூறுகிறேன்.தயவு செய்து காமெடி காட்சிகள் ,டூயட் காட்சிகள் வைக்காதீர்கள்,அது படத்தின் டெம்போவைக்குறைத்து விடும்.படத்தோட ஓப்பனிங்க் சீன் ல இருந்தே ஒரு பதட்டமும்,பயமும் ஆடியன்சுக்கு வரனும்.அதுக்கு தகுந்த மாதிரி காட்சிகள் வைக்கனும்.
நீங்க லவ் சப்ஜெக்ட் எடுக்கற மாதிரி 4 பசங்க குட்டிசுவர் மேல நின்னு கேர்ள்ஸை கமெண்ட் அடிக்கறது,லவ் பண்றது,காலி ஃபிளவர் கிஃப்டா தர்றது.காத்லுக்கு எதிர்ப்புனு தேவை இல்லாம 5 ரீல் படத்தை இழு இழுனு இழுத்திடீங்க.அதுவும் கற்பனை வறட்சி.
முதல்ல 100வது நாள்,நாளை உனது நாள் போன்ற சஸ்பென்ஸ் படங்களை பாருங்க.ஒரு படைப்பாளன் தனது படைப்பை உருவாக்கும்  முன் தனக்கு முன் அதே துறையில் சாதனை படைத்த திறமைசாலிகள் படைப்பை உணரனும்,கத்துக்கனும்.
அப்புறம் முக்கியமான விஷயம் அந்த லேடி ஹீரோவின் காலைப்பிடித்து இழுத்து செல்லும் காட்சியை 10 நிமிஷமா ஏன் காட்டிட்டே இருக்கீங்க,பயம் போய் சலிப்புதான் வருது.ஹீரோ புரொடியூசர் பையன்னு நினைக்கிறேன்(அறிமுக நாயகன்னு பட்டப்பெயர் இருக்கே)தேறாத கேஸ்.காட்சி அமைப்புகளில் நாடகத்தனம்,அனுபவமின்மை அப்பட்டமாய் வெளிப்படுகிறது.
இசை.ஒளிப்பதிவு எல்லாம் சுமார்தான்.பாடல் காட்சிகள் நோ கமெண்ட்ஸ்.
அமானுஷ்ய லேடி பங்களா ஓகே,லொக்கேஷன் செலக்‌ஷன் குறை சொல்ல முடியாது.படத்தின் முன் பாதியில் டபுள் மீனிங் டயலாக் ஓவர்.படத்துக்கு லேடீஸ் வர்றது டவுட்தான்.(படத்துக்கு ஆடியன்ஸ் வர்றதே டவுட்தான்)
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் டைரக்டர் சார்.

22 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ithayumaa paaththeenga?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப ரசிச்சு பாத்திருப்பீங்க போல..

Anonymous said...

டைரக்டருக்கு நிறைய அட்வைஸ் பண்ணியிருக்கீங்க..இந்த வார சிறந்த அட்வைஸ்ஆனந்தகிருஸ்ணன் விருது உங்களுக்கு!

சி.பி.செந்தில்குமார் said...

ramesh ஹி ஹி ஹி

Anonymous said...

முதல்ல 100வது நாள்,நாளை உனது நாள் போன்ற சஸ்பென்ஸ் படங்களை பாருங்க//
சந்திரமுகி,நீயா?,13ம் நம்பர் வீடு,அதிசய மனிதன்,மை டியர் லிசா,எனக்குள் ஒருவன்,,அந்த வரிசையில இவர் படம் எடுக்கல.முதல் நாள் ஷூட்டிங் ஆரம்பிச்சதுல இருந்து பிட்டு படம் எடுக்கலாமா,காதல் படம் எடுக்கலாமா,சஸ்பென்ஸ் படமா ந்னு செம குழப்பத்துல இருந்துருக்காரு,

சி.பி.செந்தில்குமார் said...

மிஸ்டர் வெரும்பய அவர்களே,எல்லாம் நீங்க ரசிச்சு படிக்கத்தான்

சி.பி.செந்தில்குமார் said...

அடடா சதிஷ்,கலக்கறியே.இன்றைய உன் பதிவு ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற டைட்டிலா?1000 விசிட்டர்ஸ் கன்ஃபர்ம்டு

Mohan said...

படத்தோட தலைப்பு கூட நன்றாக இருக்கிறது!

ராம்ஜி_யாஹூ said...

I thought this post will go into Tiraimanam.

Chitra said...

.படத்துக்கு லேடீஸ் வர்றது டவுட்தான்.(படத்துக்கு ஆடியன்ஸ் வர்றதே டவுட்தான்)

......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... சத்தம் போட்டு சிரிச்சிட்டேன்.

Philosophy Prabhakaran said...

neenga romba nallavar ji...

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

விமர்சன திலகமே... இந்தப் படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுதி உங்க பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டுமா?

Unknown said...

//விமர்சன திலகமே... இந்தப் படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுதி உங்க பொன்னான நேரத்தை வீணாக்க வேண்டுமா//
இந்த மாதிரி விமர்சனம் தான் இந்த கால டைரக்டர்களுக்கு தேவை...குறுக்கு புத்தி'கெல்லாம் போட்டாங்க - இங்க, எங்க குரூப் ஒன்னு படம் பண்ண போகுது... - அதுக்கும் இந்தமாதிரி தேவை தான் ... - அட்ரா சக்க...விமர்சனம் எல்லாமே நல்லா'தான் இருக்கு

சி.பி.செந்தில்குமார் said...

mohan tks

சி.பி.செந்தில்குமார் said...

raamji நன்றி,சித்ரா,நல்ல ரசனை உங்களுக்கு

சி.பி.செந்தில்குமார் said...

pirapaakaraa,நீங்க வல்லவர்

அ.முத்து பிரகாஷ் said...

கறாரான விமர்சனம் ...
சுப்புடு ஞாபகத்திற்கு வருகிறார் தோழர்!

சி.பி.செந்தில்குமார் said...

நன்றி நியோ அவர்களே,வருகைக்கும்,பாராட்டுக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

ஆகாய மனிதன் அவர்களே,உங்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்கிறேன்,நன்றி.பூங்கதிர்,பட்டத்துக்கு நன்றி.எல்லாரும் ஊர்ல பலாப்பழம் விக்கறப்ப நான் மட்டும் எலந்தப்பழம் விற்கக்காரணம் ஒரு தனித்தன்மைக்குத்தான்

சி.பி.செந்தில்குமார் said...

பிரபாகரன் ,நக்கல் அடிக்கறீங்களா?பாராட்டறீங்களா?

Ganesan said...

பாரா, பாரா வா பிரிச்சு எழுதுங்க.

very tough to read.

all the best.

சி.பி.செந்தில்குமார் said...

ok ganesh, thanks for the idea