Sunday, August 15, 2010

வம்சம் - அம்சமா?துவம்சமா?

கோடம்பாக்கத்தில் ஒரு செண்ட்டிமெண்ட் உண்டு.முதல் படம் சூப்பர் ஹிட் கொடுத்த பல டைரக்டர்கள் 2வது படத்தில் ச்றுக்குவார்கள்.சில எ.கா


இயக்குனர் பெயர்        ஹிட் ஆன முதல் படம்    ஃப்ளாப் ஆன 2வது படம்

ஆர் பார்த்திபன்              புதிய பாதை                                பொண்டாட்டி தேவை

விக்ரமன்                            புதுவசந்தம்                                பெரும்புள்ளி

மணிரத்னம்                  பல்லவி அனுபல்லவி            இதயகோயில்

ஆர் பாண்டியராஜன்     ஆண்பாவம்                                  மனைவி ரெடி(கன்னிராசி கணக்கில் வராது.)

இந்தப்பட்டியலில் பசங்க எனும் ஹிட் படம் கொடுத்த பாண்டிராஜ் இணைந்தாரா,ஜெயித்தாரா என்பதை விமர்சனத்தின் கடைசியில் காண்க.(இவரு பெரிய ராஜேஷ்குமார்,சஸ்பென்ஸ் வைக்கறாரு)

கிராமத்துக்கதை என்றதும் காலம் காலமாக vamsam_tamil_movie_wallpapers நமது இயக்குனர்கள் கையாளும்  இரண்டு ஊர் பகை தான் கதைக்களம்.

படத்தோட ஓப்பனிங்லயே பருத்திவீரன் பாதிப்பில் கிராமத்துத் திருவிழாக்கள் காட்சிகள் களைகட்டுகிறது.கரகாட்டக்காரன் படத்துக்குப்பிறகு அதிகமான கிராமிய விழாக்காட்சிகள் இந்தப்படத்தில்தான்.
எதிர்காலத்தில் உதவும் என்ற தொலைநோக்கு சிந்தனையில் ஹீரோ அன்பரசு ஊருக்கு உழைப்பவன் எம் ஜி ஆர் மாதிரி ஏழை மாணவர்களுக்கு உதவுவது படத்தின் கதைக்கும்,கேரக்டருக்கும் சம்பந்தமில்லாதது.

கத்திக்குத்து வேணாம்,கத்தாழைக்குத்து வை என்பது,கடுகு ஆயில் எதுவும் மளிகைக்கடயில்  வாங்காதே ஊர்ல திருவிழா என்பது,திருவிழாவுல கருவறுக்கும் பணியை ஆரம்பிச்சிட வேண்டியதுதான் என்பது கிராமத்து மண் வாசனையை புடம் போடும் வசனங்கள்.
முதல் சண்டைக்காட்சியில் பின்னணி இசையாய் குலவைஇடுவது தூள் படத்தில் பரவை முனியம்மா செய்தாகிவிட்டதே.(சிங்கம் போல நடந்து வாரான்).ஆனால் ஃபைட்டின் முடிவில் ஹீரோ கம்பியை கல்லில் கட்டி ஆற்றில் விட்டு கரண்ட் கம்பத்துடன் கனெக்‌ஷன் குடுப்பதாக சொல்லி மிரட்டுவது புதுசு.

ஹீரோ புதுமுகம் என்ற அளவில் ஈஸியாய் பாஸ் மார்க் வாங்குகிறார்.உடல் தோரணையில் விஷால்,தோற்றப்பொலிவில் எம் சசி குமார் என பார்ப்பவர் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.பன்ச் டயலாக் எதுவும் பேசவில்லை என்பது பெரிய ஆறுதல்.
என்னதான் கிராமத்துக்கேரக்டரில் சுனைனா மிளிர்ந்தாலும் எண்ணெய் தடவி,படிய தலை சீவி வரும் காட்சிகள் அவரது அழகை ரேஷன் செய்கின்றன.
மாசிலாம்ணியில் ஓடி ஓடி விளையாடு பாட்டுக்கு ஆட்டம் போட்ட அந்த சுனைனாதான் டாப்.இருந்தாலும் கிராமத்துக்கதை என்பதால்,இயக்குனர் சொல்லிக்குடுத்தபடி கச்சிதமாக நடித்திருக்கிறார்.
.
வில்லனின் அறிமுகத்துலயே கேரக்டரின் கொடூரம் புரிய வைக்கப்படுகிறது.வேலையை விட்டு நின்றவனை வலிய சமாதானப்படுத்திக்கூட்டி வந்து நீ வேலை செஞ்சது சரி இல்லை,உன்னை நிறுத்த்றேன் என சொல்லி அனுப்பி விட்டு நீ என்னடா வேலையை விட்டு போவது,நான் அனுப்பறேன் என்பது பிரமாதம்.
செம்பருதிப்பூ,பருப்பு என அன்றாடம் நாம் உபயோகிக்கும்,பார்க்கும் பொருளுக்கெல்லாம்
பாட்டனி நேம் வைத்து நாயக்னும்,நாயகனும் சதிராடும் சீன் நல்லாருக்கு,அதே போல் கஞ்சா கருப்பு டேய்,முனியப்பா என்னை பெத்துபொட்டுட்டு ஏன் இபடி போய்ட்டே முனியப்பா என புலம்புவது நல்ல காமெடி என்றாலும் அதே சீன் பல முறை ரிப்பீட் ஆகும்போது கடுப்படிக்கிறது.
யார்கிட்டயும் இந்த மேட்டரை சொல்லிடாதே என ஒரு ஓட்டைவாயனிடம் ரகசிய்த்தை பகிர்வதும்,டேய்,ஊரே அவன் தான் என சலம்புவதும் இயக்குனரின் திறமைக்கு சபாஷ் சொல்ல வைக்கும் காட்சிகள்,
பசுவிடம் காதல் தூது விடுவது,துணி துவைக்கும் ஹீரோ மேலுக்குப்போடும் சோப்பை துணிக்குப்போட்டுவிட்டு அதற்குக்கூறும் காரணம்,திருவிழாவில் ஹீரோ &கோ நன்கொடை கொடுத்து சுய விளம்பரம் செய்வது,என பல காட்சிகள் இயக்குனர் சரக்குள்ளவர் என்பதை பறை சாற்றுகின்றன.
ஹீரோவின் அம்மா சுனைனா கூந்தலை புகழும்போது அந்த ஷாட்டை கட் பண்ணி சுனைனா சவுரியை கழட்டி மாட்டுவது கே பாக்யராஜ் டச்.
சுனைனா வில்லனின் மேல் சாணித்தண்ணியை கரைத்து ஊற்றும் அந்தப்பரபரப்பான சீனில் பதற்றம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.பின்னணி இசை அந்த இடத்தில்  இன்னும் ஸ்கோர் செய்திருக்கலாம்.

வசனகர்த்தாவாக பல காட்சிகளில் ஜொலிக்கிறார் இயக்குனர்.சாம்ப்பிளுக்கு சில.

1.அடிக்கறது மட்டும் வன்முறை அல்ல,மிரட்டுறதும் வன்முறைதான்.

2.எதிரிக்கு முன்னால வாழ்ந்து காட்டுனாலே அது ஜெயிச்ச மாதிரிதான்.

3.கெட்டவனை தொட்டா,தொட்டவனும் கெட்டான்.

4.உடம்புலயும்,மனசுலயும் ஈரம் வேணும்,ஆகாரத்துல காரம் வேணும்.

5.ஒரு ஊர்ல மனுஷங்க சரி இல்லைனா சொலிக்குடுத்த வாத்தியார் சரி இல்லைனு அர்த்தம்.

பசங்க படத்தோடு ஒப்பிடுகையில் பாடல் காட்சிகள் சுமார்தான்.
என்னாச்சு என்னாச்சு பாடல் வரிகளில் கண்ணும் கண்ணும் ஒன்னா சேர்ந்து பாலம் போடுதே என்ற வரி நச் ரகம்.மருதாணிப்பூவைப்போல பாடலும் ஓகே.

பின்பாதியில் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் நீளம்.அதோடு ஆடியன்ஸ் ஒன்றிப்போகையில் மிண்டும் படம் நிகழ் காலத்தில் வரும்போது லின்க் ஆக நேரம் பிடிக்கிறது.(ஹீரோவின் அம்மாவாக வருபவர் ஃப்ளாஷ்பேக்கில் நல்ல ஃபிகரா வருதுங்கோ.வாரிசுக்காக மடிப்பிச்சை கேட்பது உருக்கம் என்றாலும் அது சின்னக்கவுண்டர் படத்தின் மொய் விருந்து காட்சியை ஞாபகப்படுத்துவது பலவீனம்.

எப்பாடு பட்டாலும் பிற்பாடு கெடாதவர் என அறிமுகத்தோடு வரும் ஹீரோ குடும்ப முகமன் மொழி நல்ல வீரியம்.சுனேனாவே ஆள் வைத்து ஹீரோவை அடிப்பதும் ,அதை வில்லன் மேல் திருப்புவதும் நல்ல டெக்னிக்.ஊரெல்லாம் வில்லனின் ஆட்கள் ஹீரோவைத்தேட ஹீரோ வில்லனின் வீட்டிலேயே தினம் இரவு வந்து தங்கி செல்வது சுவராஸ்யம் என்றாலும் பல படத்தில் பார்த்ததுதானே.
கிராமத்துமக்கள் சத்தியத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பல காட்சிகளில் இயக்குனர் பகிர்வது ரசனை.
சிலம்பாட்டம் பலவகை இருக்கு ,ஒவ்வொண்ணா சொல்லவா என ஹீரோவின் அப்பா கிஷோர் லிஸ்ட் போடும்ப்போதே அவர்கள் தெரித்து ஒடுவதெல்லாம் ஓவர் பில்டப்.
ஹீரோயின் காத்லில் விழுந்ததும் தோழி “பருவத்தே பயிர் செய் “என கவுண்ட்டர் டயலாக் அடிப்பது சுவராஸ்யம்.பக்கத்து ஊர் பள்ளிக்கூடம் லீவ் என்றதும் ஒரு பையன் ஏக்கமாய் அவங்க பள்ளிக்கூடமெல்லாம் நல்ல பள்ளிக்கூடம்டா என்பதும் சூப்பர்.
கஞ்சா கருப்பு நீங்க எம் எஸ் சி பாட்டனியா,என்னமா எண்ணெய் ஊத்த்றீங்க என்பதும்,கடைசி வரை மேட்டரை என்கிட்ட காட்டவே இல்லையெ என டபுள் மீனிங்கில் பேசுவதும் ,யார் நீங்க என ஹீரோயின் கேட்டதும்  அசினோட
ஓல்டு ஓனர் என்பதும் ரகளையான காட்சிகள்.
போகிற போக்கில் திருவிழாவில் ஒரு ஆள் நன்கொடை கொடுக்கும்போது பெண்களை பார்க்கும்போது கண்களை மூடும் கண்ணன் என தன்னைத்தானே வர்ணிப்பதும் அருமை.
க்ளைமாக்சில் வில்லனின் மகனுடன் ஒத்தைக்கு ஒத்தை சண்டை போடுவது ரன் படத்தை ஞாபகப்படுத்துகிறது.வில்லன் என்ன ஆனார் என்பதைக்காட்டவே இல்லை (எடிட்ட்ங் பிராப்ள்மோ,ஃபுட்டேஜ் பிராப்ளமோ)

சும்மா என்ன வள வளனு இழுவை?படத்தோட ரிசல்ட் என்ன?
அறிவுநிதிக்கு இது வெற்றிப்படம்.பசங்க படத்துடன் ஒப்பீடு செய்கையில் இயக்குனருக்கு ஒரு படி இறக்கம்தான்.பி ,சி செண்ட்டர்களில் படம் 50 நாட்கள் ஓடும்.ஏ செண்ட்டர்களில் சுமாராகப்போகும்.படத்தின் முற்பகுதி அம்சம்.பிற்பகுதி துவம்சம்.

7 comments:

Anonymous said...

அப்போ ரெண்டாவது படம் ஃப்ளாப் கொடுத்தா பெரிய டைரடக்கரு ஆகிடலாமா?

Anonymous said...

வசனகர்த்தா சாம்பிள் எல்லாம் அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

வாப்பா,வம்புத்திலகமே,ஒரு உதாரணம் சொல்ல விடமாட்டியே?

அத்திரி said...

manirathnam first movie pagal nilavu..//??

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே.தெலுங்குலதான் முத படம்

தனி காட்டு ராஜா said...

அப்படிங்களா ?

சி.பி.செந்தில்குமார் said...

ஆம் மிஸ்டர் தனிக்காட்டு ராஜா,வருகைக்கு நன்றி