Saturday, December 05, 2015

உதவிக்குழுக்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சில டிப்ஸ் By · @_Sangeethaa_


1) கனமான துணி விரிப்பு கிடைக்கவில்லைன்னா,கார்ட்போட் அட்டைகள், பலகை, மேசைகள் மேல் தூங்கலாம்.நேரடி குளிர் நிலத்தில் தூங்க வேண்டாம்

2) சானிடரி நேப்கின் கொடுக்கிறவங்க, காகிதத்தில் தெரியாமல் சுற்றி எடுத்து வந்தால், நீங்களே கொடுக்கலாம். இதில் கூச்சப்பட தேவையில்லை.உதவியே பெரிது

3) உள்ளாடைகளையும் அளவு வாரியாக, இரண்டு அல்லது மூன்றாக பிரித்து,பொதி செய்து பெயரிட்டு எடுத்தால்,கொடுப்பது எளிது.

4) பரசிட்டமோல், பஞ்சு, பிளாஸ்டர், தலைவலி மருந்து போன்றவற்றையும் அன்பளிக்கலாம். இவையும் இப்போதைக்கு மிக அத்தியாவசியமானதே

5) வயதானவர்கள், குழந்தைகள் குளிர்தாங்க மாட்டார்கள்.ஒரு சட்டியில் தணல் போட்டு, தீ பற்றாத வகையில் ஒரு இடத்தில் வைத்தால், குளிரை விரட்டலாம்

6) வெளியூரில் இருப்பவர்கள், அங்கிருந்து சானிடரி நப்கின்கள், உள்ளாடைகளை வாங்கி ரக வரியாக பிரித்து பொதி செய்து அனுப்புவது உத்தமம்

7) முடிந்தால் கொஞ்சம் இனிப்புகளையும் எடுத்துச்செல்லுங்கள்.இந்நேரத்தில் புதுச்சூழலில், பயத்துடன் இருக்கும் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்

8) வெளியூர் நண்பர்கள் சர்க்கரைநோய், சுவாசநோய்கள்,காய்ச்சல் போன்றவற்றுக்கான மருந்துகளை கொடுத்து உதவுங்கள்.வெள்ளப்பகுதியில் தட்டுப்பாடு ஏற்படலாம்

9) மலசலகூடங்களை முடிந்தளவு சுத்தமாக வைத்திருங்கள், குறிப்பாக முகாம்களில் இருப்பவர்கள்.வெளிப்புறத்தை கண்டிப்பாக உபயோகிக்காதீர்கள்

10) வெளியூர் தன்னார்வலர்கள், சுத்தமான குடிநீர் போத்தல்களையும், தீப்பெட்டி, நுளம்புச்சுருள்கள், சிறு துவாலைகளையும் வழங்கலாம்

11) சேற்றுப்புண்ணுக்கான மருந்துகளை இப்போதிலிருந்தே விநியோகிப்பது நல்லது. வெள்ளத்தில் நடக்க வேண்டியிருப்பதால் தேவைப்படும்

12) குழந்தைகளுக்கான நேப்கின்களை அதிகம்வழங்குவது நல்லது.நனைத்தால் துவைத்து புதிதுகட்டுவது இடத்தினை சுத்தப்படுத்துவது போன்றவற்றிலிருந்து தவிர்க்க

13) Wet tissues, wet serviettes களையும் முடிந்தால் கொடுத்து உதவுங்கள். நீரில்லாத நேரத்தில் மாற்றுவழியாக உபயோகிக்கலாம்

14) தனியாயிருப்பதைவிட, குழுக்களாய் இருப்பது சிறந்தது. உங்கள் அயலவர்களுடன் சேர்ந்து தங்குங்கள்.சக்தி சேமிப்பு முதல்,பாதுகாப்பு வரை நல்லது

15) பெரியவர்களுக்கான adult napkins (pamper)களையும் வழங்குங்கள். குறிப்பாக முகாம்களில் இருக்கும் வயதானோர் சர்க்கரைநோய்க்காரர்களுக்கு பேருதவி இவை

16) சானிடரி நாப்கின்கள் இல்லாத வேளையில் மருத்துவமனையில் உள்ள பஞ்சு மற்றும் கோஸ் எனப்படும் வலைத்துணியை நேப்கின்களாக பயன்படுத்தலாம்.

17) முடிந்தால் இனிப்புகள்/சிறு packet சர்க்கரை பொதிகளை கொண்டு செல்லுங்க. சர்க்கரை அளவு குறைந்து தலைசுற்றி விழுபவர்களுக்கு வைத்திருக்ககொடுக்கலாம்

18) முகாம்களில் இருப்பவர்கள் கடும் மனவுழைச்சலில் இருப்பார்கள்.உங்கள் மீது கோபப்படவும் கூடும்.முடியுமானளவு அனுசரணையாய் இருங்கள் தன்னார்வ தோழர்களே

19) முகாம்களில் இருப்பவர்களை ஒழுங்குபடுத்துகிறோம்ன்னு அவர்களை அதிரடியாக, கோபமாக தள்ளிவிடாதீர்கள்.அவர்களுக்கும் இது புதிய சூழலே

20) முகாம்களில்இருப்பவர்கள் கிடைப்பதை தமதாக்க வேண்டும்என்ற எண்ணத்துடனேயே இருப்பாங்க.சகஜமே. பொறுமையாய் அடுத்தவேளையும் வருவோம்என நம்பிக்கையளியுங்க

21) சிறுவர்களுக்கும் வயதானவர்களுக்கும் Socks களை நன்கொடையாய் கொடுப்பது நல்லது. குளிர் வியாதிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்

22) தன்னார்வலர்கள், முகாம்களில் உள்ளோர் சிறுநீர் கழிக்க ஒதுக்குப்புறமாய் குழியொன்றை வெட்டி, பலகையிட்டு,சிறு தடுப்புகளை அமைத்துக்கொடுக்கலாம்

23) இனிவரும் நாட்களில் மனநல ஆலோசகர்களின் தேவை அதிகமாக இருக்கும். மனச்சோர்வும், மன அழுத்தமும் முகாம்களில் இருப்பவர்களுக்கு நிச்சயம் வரும்

24) எதுவுமே கொடுக்க முடியாவிட்டால், ஒரு அனுசரணையான புன்னகையை கொடுங்க. ஐந்து நிமிடம் அமர்ந்து அவர்களின் துக்கத்தை சொல்லக்கேளுங்க.போதும்

25) கர்ப்பிணிகள், நாள் இருக்குதென்று சாவகாசமாய் இருப்பது தவறு. மனவுழைச்சல், உடல்நிலை பாதிப்பு பிள்ளைப்பேற்றை விரைவுபடுத்தலாம், தயாராயிருங்கள்

26) வீடுகளில் வெள்ளம்வரலாம் என்றநிலையுள்ளவர்கள் பொலிதின் பையில் சுற்றி ஓரிரு நாட்களுக்கு தேவையான உடைகள்,அத்தியாவசியபொருட்களை தயாராய் வைத்திருங்க

27) முகாம்களில் கர்ப்பிணிகள், நோயாளர்கள் இருந்தால், அங்குள்ள டாக்டரிடம் பரிச்சயம் செய்து கொள்ளுங்க இல்லை தன்னார்வலர்களிடம் சொல்லுங்க.பலனளிக்கும்

28) முடிந்தளவு உங்கள் சான்றிதழ்கள்,பாஸ்போர்ட்,ஆதார்அட்டை, காணிஉறுதி ஆகியவற்றை பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்.நகலெடுப்பது எவ்வளவு சிரமமென்று சொல்ல?

29) எதுவுமே கொடுக்க முடியலைன்னு நினைக்காதீங்க. வெந்நீர் வைத்து கொடுங்க. சூடாய், சூடு ஆற வைத்து குடிக்க உதவும்

30) அடுத்த கட்ட நடவடிக்கையில் ரப்பர் செருப்புகளையும் இணைத்துக்கொள்ளுங்கள். கட்டாயம் தேவைப்படும்

31) Dry ration packஇல் பருப்பு, சீனி, உப்பு, அரிசி, ரவை, கோதுமை மா, சோயாஉணவு, கடலை, பயறு போன்றவை இருக்கட்டும்.சமைக்க இலகு.சத்தும்கூட

32) இப்போதைக்கு சுய வைத்தியம், கை வைத்தியம் வேண்டாம். வைத்தியர்கள் சொல்வதையே கடைப்பிடியுங்கள்

33) அவசரத்திற்கு வைத்தியர்கள் தான் வேண்டும் என்றில்லை. தாதிகள், மருந்தாளர்களிடமும் ஆலொசனை கேளுங்கள்

34) வயிற்றோட்ட மாத்திரைககளையும், வயிற்றோட்ட நீரிழப்புக்கான மருந்துப் பானத்தினையும் முகாமில், வீட்டில் உள்ளவர்கள் தயார் நிலையில் வைத்திருங்க

35) அடுத்த வருடம் கம்பனி மூலம் சேவை செய்ய நினைக்கிறவங்க, பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு போய் சிறுவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுங்க

36) கொஞ்ச நாட்களுக்கு கடலுணவு எதுவும் வேண்டாமே. காய்கறிகளையும் பச்சையாக உண்ண வேண்டாம். நன்றாய் வேகவைத்து சாப்பிடுங்க

37) கம்பனி CSR பணிகளில் பாதிக்கப்பட்ட பொது இடங்களை புனரமைத்து கொடுக்கலாம்.முதியோர் இல்லம், சிறுவர் இல்லங்களில் சேவை செய்யலம்

38) எதுவுமே கிடைக்காத பட்சத்தில்,சுத்தமான பழைய துணிகளை மாதவிடாய் நேரத்தில் பயன்படுத்துங்க.சுத்தமாயிருக்கணும் + ஒரு முறை மட்டுமே பயன்படுத்தணும்

39) மழை பெய்யும் நேரத்தை விட, மழை ஓய்ந்து நிலம் சகதியாகும் போது தான் அதிக நோய்த்தொற்றுகள் ஏற்படும். அதை எதிர்த்து நிற்க இப்பவே தயாராகுங்க

40) முதல்ல நீங்க பாதுகாப்பாயிருங்க, அப்புறம் மற்றவங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். நீங்க நல்லாயிருந்தா தான் மற்றவர்களுக்கு உதவலாம்.கவனம்

இறுதியாக 

41) மனம் தளராதீங்க.. இதையும் கடந்து செல்லலாம் என்று மனவுறுதியோடு இருங்க. நாளைய நாளுக்கும், நாளைய சந்ததிக்கும் இந்த மனவுறுதி அத்தியாவசியம் !!

0 comments: