Sunday, October 18, 2015

மய்யம் (2015)- சினிமா விமர்சனம்

நடிகர் : நவீன் சஞ்சய்
நடிகை :பூஜா தேவரியா
இயக்குனர் :ஆதித்யா பாஸ்கரன்
இசை :காசிப் ரபீக்
ஓளிப்பதிவு :பிர்னா ஹுசைன்
குமரனும் சுஹாசினியும் காதலர்கள். சுஹாசினியின் அப்பா பணக்காரன் என்பதால் காதலைப் பிரிக்கத் தீவிரமாக முயலுகிறார். இந்த காதல் ஜோடி குடும்பத்துக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறது. இவர்களுக்கு குமரனின் நண்பன் ஹாசிம் உதவுகிறார். நாளை ரகசிய திருமணம் நடக்க இருக்கும் நிலையில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஏ.டி.எம். மையத்திற்கு செல்கிறார்கள்.

அதே சமயம் சென்னையில் தங்கி மாடலிங் செய்துவரும் ஜெய் குஹானியும் அதே ஏ.டி.எம். மையத்திற்கு செல்கிறார். குமரன் அவனது நண்பன் மற்றும் மாடலிங் பெண் ஜெய் குஹானி ஆகியோரும் பணம் எடுக்கும் நேரம் அங்கு பெரிய இரும்புக் கடப்பாறையுடன் நவீன் சஞ்சய் வருகிறார். அங்கு இருக்கும் காவலாளியை கொடூரமாகக் கொலை செய்கிறார். இதை பார்க்கும் மூவரும் அதிர்ச்சியடைகிறார்கள்.

மூவரும் வெளியே சென்றால் தங்களையும் கொலை செய்துவிடுவான் என்ற பயத்தில் ஏ.டி.எம் உள்ளேயே இருக்கிறார்கள். நவீன் சஞ்சய் உள்ளே வந்தால் கேமராவில் முகம் பதிந்து விடும் உள்ளே வராமல் இருக்கிறார். பின்னர் அங்கு வரும் போலீஸ்காரரையும் நவீன் சஞ்சய் கொலை செய்கிறார். இந்நிலையில் ஏ.டி.எம் உள்ளேயே இருக்கும் மூவருக்கும் பக்கத்து அறையில் இருக்கும் ரோபோ சங்கர் உதவி செய்ய முயற்சி செய்கிறார்.

இறுதியில் ஏ.டி.எம். உள்ளே இருக்கும் குமரன் அவரது நண்பன் மற்றும் ஜெய் குஹானி ஆகியோர் வெளியே வந்து நவீன் சஞ்சயிடம் இருந்து தப்பித்தார்களா? நவீன் சஞ்சய் யார்? எதற்காக காவலாளி போலீஸ்காரரை கொன்றார்? என்பதே மீதிக்கதை.

படத்தில் மாடலிங்காக வரும் ஜெய் குஹானி, குமரன் அவரது நண்பன் ஹாசிம் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நவீன் சஞ்சய்க்கு பயந்து ஏ.டி.எம் உள்ளேயே இருந்து தவிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ரோபோ சங்கரின் உதவியோடு வெளியே செல்ல முயற்சிக்கும் காட்சிகளிலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நவீன் சஞ்சய்யின் நடிப்பு மிரள வைக்கிறது. காமெடியால் ரசிகர்களை மகிழ்வித்திருக்கிறார் ரோபோ சங்கர்.

2012ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான ஏ.டி.எம். என்ற படத்தின் தழுவலாக ‘மய்யம்’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். வங்கி ஏ.டி.எம் கொள்ளை, பாதுகாப்பின்மையை மையப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கதை திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் ஸ்ரீதர். இவருடைய திரைக்கதைக்கு ஏற்றார் போல் சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஆதித்யா பாஸ்கரன்.

ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் ஏ.டி.எம். வைக்கிறார்கள். ஆனால் அதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லை. சரியான பாதுகாவலர்களும் இல்லை. பாதுகாவலர் பலரும் வயதானவர்கள். அவர்களால் பலன் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக உருவாக்கியிருக்கிறார்கள். படத்தில் சில குறைகள் இருந்தாலும் இன்னும் கல்லூரிப் படிப்பைக் கூட முடிக்காத மாணவர்களின் இந்த முயற்சியை பாராட்டலாம்.

காசிப் ரபீக் இசையில் பாடல்கள் படத்தின் ஆறுதல். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பிர்னா ஹுசைனின் ஒளிப்பதிவு இரவிலும் பளிச்சிடுகிறது. கதை இரவில் நடப்பதால் அதற்கு ஏற்றார் போல் ஒளிப்பதிவு படமாக்கியிருப்பது சிறப்பு.

மொத்தத்தில் ‘மய்யம்’ விழிப்புணர்வு.

ன்றி-மாலைமலர்

1 comments:

ராம்ஜி_யாஹூ said...

ATM உள்ளே மொபைல் போனை தடுக்கும் ஜாமர் உண்டு அல்லது
மூவரின் மொபைல் பேட்டரியும் 0% என்ற காட்சி இல்லையா