Saturday, September 17, 2011

எங்கேயும் எப்போதும் - அசத்தலான திரைக்கதை யுக்தி + அஞ்சலியின் அழகு நடிப்பு - சினிமா விமர்சனம்

http://i.indiglamour.com/photogallery/tamil/movies/2011/Aug03/Engeyum-Eppothum/normal/Engeyum-Eppothum_30405rs.jpg 

ஒரு படத்துக்கு திரைக்கதை எப்படி இருக்கனும்னு பார்க்க ஆசையா?ஒரு பஸ் பயணம் நம் மனசில் நீங்கா இடம் பெற நினைக்கறீங்களா.?ஒரே படத்தில் அழகிய 2 காதல் கதைகளை வேறு வேறு கோணத்தில் ரசிக்க எண்ணமா.? சாலை விதிகளை மதிக்காம வேகமா போகும் ஆட்களை திட்டும் நீங்கள் இனி என்றென்றும் அவர்கள் மேல் அனுதாபம் கொள்ள நினைப்பு இருக்கா? இறக்கப்போகும் மனிதர்களின் கடைசி கட்ட ஆசைகளை கண்ணீரோடு பார்க்க துடிப்பா? நீங்கள் அவசியம் காண வேண்டிய படம்தான் எங்கேயும் எப்போதும்.

ஏ ஆர் முருகதாஸ்ட்ட இயக்குநர் ஒன் லைன் கதை சொல்லும்பொதே இது செம ஹிட் ஆகற சப்ஜெக்ட்னு அவர் புரிஞ்சிருப்பார் போல.. அதான் துணிச்சலா தயாரிச்சுட்டார்...

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்லயே 2 பஸ் மோதறதை , அதன் பயணிகள் 80% பேர் இறப்பதை , பலர் படுகாயம் அடைவதை காட்டி விட்டு 4 மணீ நேரம் முன் என சப் டைட்டிலுடன் கதை சொல்லும் யுக்தியை தொடங்கும் போதே டெம்போ ஏறுது. இயக்குநர் சரக்குள்ள ஆள்னு தெரிஞ்சுடுது.

சென்னைக்கு முதல் முதலா இண்ட்டர்வியூவுக்கு வரும் அனன்யா - புது முகம் சர்வா ஒரு ஜோடி. அனன்யாவின் அநியாய அப்பாவித்தனமும்,ஓவர் முன் ஜாக்கிரதையும் ஹீரோவுக்கு எரிச்சலை கொடுத்தாலும் ஆடியன்ஸூக்கு
புன்னகையையே தருகின்றன...அனன்யா சென்னை வந்து ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி அக்கா வீட்டுக்கு போவதை மட்டும் போர் அடிக்காமல் 48 நிமிடம் சுவராஸ்யமான சம்பவங்களுடன் சொன்னதற்காகவே இயக்குநரை பாராட்டலாம்.. 


http://3.bp.blogspot.com/-HUp5FGk92uA/TZ72th5mdCI/AAAAAAAAREg/YXaWMCp2CmA/s1600/Jai_Anjali_In_Engeyum_Eppothum_Tamil_Movie_Gallery_3.jpg
அதிலும் இருவரும் நடந்து போகும்போது அனன்யா தன் ஒரு கையை மட்டும் முதுகுப்பக்கம் மடக்கி போவது செம .. ( கை அவர் மேல் பட்டுடக்கூடாதாம்.. )மெல்ல மெல்ல அவர் மேல் காதல் கொள்வது அழகு... இவர்களது காதல் கதை நாம் பக்கத்தில் இருந்து பார்ப்பது போலவே பிரமதமாய் செட் ஆகி விடுகிறது.. 



அடுத்து ஜெய் - அஞ்சலி.. காதல்.. அஞ்சலி தெனாவெட்டான பொண்ணு, ஜெய் கொஞ்சம் அப்பாவி, பயந்தாங்கொள்ளி...தன்னை விட 4 மாதம் மூத்த ஃபிகரான எதிர்  வீட்டு அஞ்சலியை அவர் வாங்க போங்க என்று  அழைக்கும் அழகும், அஞ்சலி அவரை வா போ என அசால்ட்டாக அழைப்பதும் அசத்தல். 

அஞ்சலி ஜெய்யை ஹாஸ்பிடல் அழைத்துப்போய் எய்ட்ஸ் டெஸ்ட் எடுப்பது, ஜெய்யின் சம்பளப்பணத்திலேயே ஜெய்க்கே டிரஸ் எடுத்துக்கொடுப்பது,காபி ஷாப் போவது, அவர் வேலை செய்யும் இடத்துக்கே  போய் அலப்பறை செய்வது என அஞ்சலியின் ராஜாங்கம் படம் நெடுக.. அங்காடித்தெருவில் ஃபோர் அடிச்சவர் இதில் சிக்சர்!!!!!!!!!!!!!

எல்லோரையும் விட படத்துல எல்லார் மனதையும் பாதிக்கும் இரு கேரக்டர்கள் பற்றி சொல்லியே ஆகனும்.. மனைவி கர்ப்பம் ஆனதும் ஃபாரீன் வேலைக்குப்போகும் கணவன் 5 வருஷம் கழிச்சு திரும்பி வர்றான்.. அவர் அதுவரை நேரில் பார்க்காத தன் மழலையை ஃபோன் மூலம் மட்டும் பேசி கொஞ்சி மகிழ்பவர்...அடிக்கடி எப்போப்பா வருவே? என தன் குழந்தை கேட்கும்போது சமாளிப்பவர்.. அவர் விபத்தில் இறந்த பின் அந்த குழந்தை ஃபோன் செய்கிறது.. கல் நெஞ்சையும் கரைக்கும் காட்சி... 

மணமான தம்பதி- தன்  மனைவியை பஸ் ஏற்ற வரும்  கணவன் அவளைப்பிரிய மனம் இன்றி கொஞ்ச தூரம் வந்துட்டு பின் இறங்கிக்கொள்வதாய் சொன்னவன் பின் இறப்பது பயங்கரம்.!


http://g.ahan.in/tamil/Engeyum%20Eppothum%20Movie%20Stills/Engeyum%20Eppothum%20(52).jpg

எங்கேயும் எப்போதும் நம் காதில் ஒலிக்கும் வசனங்கள்

1.  XQS  மீ, உங்க பொண்ணுக்கு சாக்லெட் தரலாமா?

அவ புது ஆளுங்க யார் குடுத்தாலும் வாங்க மாட்டா!!!!

இல்லம்மா, வாங்கிப்பேன்!!!!!!!!!

2. மேடம், உங்களை சீட் மாறி உட்கார வைக்கறேன்.. வெயிட் ப்ளீஸ்!!!!

யோவ் கண்டக்டர்! அவ உன்னை கேட்டாளா? சரியான பி ஜே பி ய்யா!!

3. நீங்க தம் அடிப்பீங்களா?             ம்

தண்ணி அடிப்பீங்களா?        ம்

அப்போ அந்த 3 வது தப்பு? 

கொள்ளையா? கொலையா?

4. இங்கே பாரம்மா, சென்னைல எல்லாரும் பார்க்க டீசண்டா தான் இருப்பாங்க.. பழைய படத்துல வர்ற மாதிரி கன்னத்துல மருவும்,கழுத்துல கர்ச்சீப்பும் கட்டி இருக்க மாட்டாங்க.. 

5. ஆமா, நீ ஏன் சிவப்பு கலர் டிரஸ்?

என் ஆள் சிவப்பு கலர் டிரஸ்... அதான்.. ஆமா நீ ஏன் மறுபடி ஒரு கலர்  மாத்தறே?

எனக்கு 2 லவ்வர்.. 

நீ ஏன் காக்கி யூனிஃபார்ம்லயே வேலைக்கு வந்துட்டே?

ம், என் ஆள் பாலிடெக்னிக்ல படிக்கரா, அவளுக்கு இதான் யூனிஃபார்ம்.. 

6. ஏண்டா? அம்மாவுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாம சிக்னல் காட்டுவியா? லூஸா? நீ?

7. இங்கே பாரு.. இது வரை எப்படியோ? லவ் பண்ண ஆரம்பிச்சுட்டே இல்ல? இனி பர்மிஷன் லீவ் எல்லாம் இருக்கனும். எடுக்கனும்.. புரியுதா?

8.  ஆஃபீஸ்ல இருந்து வர்றப்ப சம்பள கவரை கொண்டாந்துடு.. 

எதுக்குங்க?

அதான் என்னை லவ் பண்றதா சொல்லிட்டியே?எதுக்கு கேள்வி எல்லாம்/

9. ஆமா.. என்ன உன் உதடு சிவப்பா இருக்கு? லிப்ஸ்டிக்கா போடறே? ஆம்பள அதை போடலாமா?

இல்லீங்க. குச்சி ஐஸ் சாப்பிட்டேன்.. 

10. என்னங்க.. இந்த பேண்ட் கிழிஞ்சிருக்கு.. வேணாம்.. வேற எடுங்க.. 

டேய் லூசு.. அதுதான் ஃபேசனே!!!


http://www.koodal.com/cinema/gallery/events/2011/666/engeyum-eppothum-movie-press-meet-stills_10_152630123.jpg

11.  என்னங்க? காஃபி சூடா இல்லாம ஜில்னு இருக்கு?


டேய் கேனை.. கோல்ட் (COLD)  காபி அப்படித்தான் இருக்கும்.. 


12. என்னது? ஒரு காபி 80 ரூபாவா/ அய்யோ..!!!பீரே 80 ரூபாதான்..

அப்போ நீ பீர் அடிப்பியா?

சத்தியமா இல்லீங்க!!!!

நான் மட்டும் ஆம்பளையா இருந்தா உலகத்துல இருக்கற எல்லா சரக்கும் டேஸ்ட் பார்த்திருப்பேன்.. 

13.  இப்போ பார்த்துட்டு வந்தியே? அவர் யார்னு தெரியுமா? உனக்கு?

ஏட்டு?

அது உனக்கு.. எனக்கு?

ஏங்க.. எனக்கு ஏட்டுன்னா உங்களூக்கும் ஏட்டாத்தானே இருக்க முடியும்?உங்களூக்கு மட்டும் டி ஐ ஜியாவா இருக்கப்போறார்?

ஜோக்கு?

இல்ல, உங்களூக்குப்பிடிக்குமேன்னு......

அவர் தான் எங்கப்பா!!!!!!!!

14.  உங்க ஊர்ல எல்லாம் பொம்பளைங்க சமைக்க மாட்டாங்களா?

ஏன் கேட்கறே?

ஹோட்டல்ஸ்ல இத்தனை பொம்பளைங்க?

அவங்க எல்லாம் வேலைக்குப்பொறவங்க.. 

எங்க ஊர்லயும் வேலைக்குப்போற பொண்ணுங்க சமைச்சு , புருஷனுக்கு சாப்பாடும் குடுத்து விடுவாங்க.. 

15. முதல்ல உங்களை நம்பல்.. அதனால பயமா இருந்தது.. இப்போ உங்களை நம்பறேன் ஆனா என்னை நம்பலை.. எனக்கே என்னைக்கண்டு பயமா இருக்கு.. அதான் உங்களோட ஆட்டோல ஒண்ணா வர்லை.. 

16. இங்கே பாருங்க.. இப்போ நீங்க சிரிக்காதீங்க.. என் ஆஃபீஸ் கொலீக்ஸ் கேட்டா என்னை தப்பா நினைப்பாங்க.. 

டேய் நாயே.. அவங்க சிரிக்கலைன்னாலும் தப்பா தான் நினைப்போம்.. 

17. உங்க ஆள் ரொம்ப நல்லவன்.. எனக்குத்தெரிஞ்ச எல்லா மொழிலயும் அப்ரோச் பண்ணிட்டேன். ஆள் கண்டுக்கவே இல்லை.. அப்புறம் என்னைப்பற்றி நல்லாத்தெரிஞ்ச  ஒரு கேனையை கட்டிக்கிட்டேன்.. அது அதோ அவன் தான்.. 

18.  நான் செம அழகு இல்லைதான். தனியாப்பார்த்தா.. ஆனா அவன் கூட வெச்சு கம்ப்பேர் பண்ணிப்பாருங்க.. நான் ஓரளவு அழகுதான்,,

19. ம்.. சரி சரி.. என்னை கட்டிக்கோ!!!

இல்லைங்க , கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கறேன்.

சரி.. நீ வேணா கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கோ. நான் இப்பவே கட்டிக்கறேன்.. 

20. சரி என் மேல கோபப்படு பார்க்கலாம்?


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglFHEmevCZszYozLMJYsh-kUmMX2pYQAOD8XplISaa6efKzCJAtjkI_Uqxb_LhMyDB9_KmAw5YYJO3p4hsMkf3CrffQGTUbtz376-qARmO_Q-WzOZ4XeWEAs9v-AltUQrbcyEpBSgf5Xk/s1600/ananya+tamil+movies00-9.jpg

சாரிங்க.. முடியாது.. 

1.உன் பேரே தெரியாது. 2.  சொட்ட சொட்ட நினைந்துவிட்டாய்3. கோவிந்தா என 3 பாடல்கள் ஆல்ரெடி ஹிட் லிஸ்ட்டில்.

ஒளிப்பதிவு கலக்கல்.. பெரும்பாலான காட்சிகள் பஸ்ஸுக்குள் தான் என்றாலும் நீட் ஃபோட்டோகிராஃபி..  2 பஸ்களும் மோதும் காட்சிகள், விபத்து நடக்கும் சந்தர்ப்பம் 2ம் அசத்தல்..

படத்துக்கு பின்னணி இசை பக்க பலம்..

கே பாலச்சந்தர் படம் போல் ஒவ்வொரு கேரக்டரையும் மனசில் தங்க வைக்கும் டெக்னிக் ஓக்கே!


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijr9d9Gt9sogoDsrGbixE10HxhjkIlguwTgaopTrVCC0GmkN6RcHxzKL9SMmrnkZApm_19oSQ0m2_SnnyPDJpdUM0RrNJlg-Eb5L4XV9VSocAQGiRPdqFA-69bwnv2X37XyJIBykoMfihv/s1600/1296908491-tamil-hot-actress-anjali-in-saree-photosactressinsareephotos.blogspot.com7.jpg

இயக்குநரிடம் சில சந்தேகங்கள்

1. ஓப்பனிங்க்லயே பஸ் ஆக்சிடெண்ட் ஆகப்போகுதுன்னு சொல்லிட்டதால நிதானமா வர்ற காதல் காட்சிகள் கொஞ்சம் பட படப்பை ஏற்படுத்துது.. அதாவது அழகான காதல் காட்சிகள் வந்தாலும் மனம் அதுல ஒன்றிட முடியல்.. அதுக்குப்பதிலா விபத்து நடக்கப்போவதை முன் கூட்டியே சொல்லாம விட்டிருந்தா சஸ்பென்ஸுக்கு சஸ்பென்ஸூம் ஆச்சு.. காதல் காட்சிகளில் ஆடியன்ஸ் இன்னும் நிதானமா மனம் லயிச்சு பார்த்திருக்கலாம்.. 

2. உடல் தானம் பற்றிய விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட காட்சி தான் என்ராலும் ஒரு பெண் அவள் என்னதான் நர்ஸா இருந்தாலும் லவ் புரொப்போஸ் பண்ண அடுத்த நிமிஷமே அவனை உடல் தானம் பண்ண ஹாஸ்பிடல் அழைத்துச்செல்வாளா?

3. ஜெய் அஞ்சலிக்கு சிக்னல் காட்டிட்டு பல் துலக்கும் காட்சியில் சுவர்க்கடிகாரம் 6.30 என காட்டுது.. அடுத்த ஷாட்ல 7.40 என காட்டுது.. அதுக்கு அடுத்த காட்சில மறுபடி 6.35 காட்டுது.. எடிட்டிங்க் ஃபா;ல்ட்டா?

4. க்ளைமாக்ஸில் ஜெய்க்கு தலையில் அடிப்பட்டு காதில் ரத்தம் வந்து சீரியஸ் என தெரிந்தும் அஞ்சலி அவருடன் செல்லாமல் இங்க்ர்ர்யே தங்கி மற்ரவர்களுக்கு உதவி செய்வது செயற்கையா இருக்கே? தனக்கு மிஞ்சித்தானே தான தர்மம்?

5. க்ளைமாக்ஸில 2 செட் லவ் ஜோடிகள்ல அந்த சைடுல ஒரு ஆண், இந்த சைடுல ஒரு பெண்ணை உயிர் இழக்க வைத்து விட்டு ஆல்ட்டர்நேடிவ் ஜோடியை ஜோடி சேர்க்கலாமா? என திரைக்கதையில் தடுமாறியிருக்கத்தேவை இல்லை.. 

6.அனன்யாவுக்கு அவர் லவ்வர் பற்றி எந்த விபரமும் தெரியாது.. ஊர்ப்பெயர் மட்டும் தான் தெரியும்.. ஆனா அவரைப்பார்க்க எப்படி கிளம்பறார்? ஆனா அவர் ஏன் அனன்யாவைப்பார்க்க அவரோட ஊர்க்கு வர்லை?


http://mimg.sulekha.com/anjali/images/wallpaper/1024-768/anjali-desktop-wallpapers028.jpg

சாலை வாகனங்களின் வேகத்தைப்பற்றிய நல்ல விழிப்புணர்வுப்படம் ,கமர்ஷியலாய்!!!!!!!

ஏ செண்ட்டர்களில் 60 நாட்கள் பி செண்ட்டர்களில் 50 நாட்கள். சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும்... 

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று 

சி.பி கமெண்ட் - மென்மையான மனம் கொண்ட காதலர்கள் பார்க்க வேண்டிய அசத்தலான திரைக்கதை . மார்க் - 50

 ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9sd5dEWp0thF6R6MAY5HXILqlEh8ExwqLKk3e6LOnYX01gP0YGrvw8AoX0JxjI_ZyGi3qnEzeK6qXaDScFTH6QVs96en4igSfjmvUlAo85bqNFqKb-vVokI-b7pFdesuvcIdgg1JGxMo/s1600/Tamil-Actress-Anjali-latest-stills-photos-09.jpgA

டிஸ்கி - பட விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மேட்டர்.. அனன்யா பார்க்க நெக்ஸ்ட் டோர் கேர்ள் போல இருந்தாலும் அவரை ரசிக்க  முடியவில்லை.,. ஏதோ சித்தி பொண்ணு, பெரியப்பா பொண்ணு போல இருக்கார்.. ஃபிகர்னா பார்த்ததும் மாமா பொண்ணு எஃப்க்ட் வேணும். பை சமந்தமில்லாம டிஸ்கி போடுவோர் சங்கம்

டிஸ்கி 2 -

வந்தான் வென்றான் - சந்தானம் பகடி + தப்ஸியின் ஜிகிடி - சினிமா விமர்சனம்

47 comments:

Unknown said...

ME THE FIRST?

Unknown said...

ஆகா போலீஸ் முந்திட்டாரே! :-)

கோகுல் said...

எப்படி தல இவ்வளவு டீடெயிலா படம் பாக்குறிங்க!கலக்குறிங்க போங்க!

Unknown said...

நல்ல ஸ்டைல் விமர்சனம்

படம் நல்ல இருக்கும் போல இருக்கே!!

பார்த்துடுறேன் இன்னைக்கு நைட் ஷோ

Unknown said...

தமிழ்மணம்2 , இன்ட்லி ௨
இருங்க படிச்சிட்டு வரேன்!

அம்பாளடியாள் said...

அருமையான திரை விமர்சனம் வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி பகிர்வுக்கு ........

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 4

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
This comment has been removed by the author.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஆஜர் .

Unknown said...

விமர்சனம் சூப்பர் பாஸ்!

சசிகுமார் said...

ஓஹோ அது எங்கேயும் காதலா என்னடா சிபி பழைய படத்துக்கு விமர்சனம் எழுதி இருக்கார்ன்னு பார்த்தேன் ஹீ ஹீ.

ஏண்டா பேரு கொஞ்சம் விதியாசமா வெச்சா கொறஞ்சா போயிடுவீங்க!! உங்களால ஒரு அப்பாவிய தப்பா நெனச்சிட்டேன் சாரி மாப்பு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்போ படம் பார்க்கலாம்..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி அனன்யாவையாது விட்டு வைங்கண்ணே......

இராஜராஜேஸ்வரி said...
This comment has been removed by the author.
பாலாஜி said...

சின்னதா ஒரு டவுட்!
படம் பார்க்க போகும் போதே கையில பேப்பர் பேனாவோடதான் போவீங்களா?

செங்கோவி said...

நல்ல படத்துக்கு நல்ல விமர்சனம்..இங்க எப்போ வருமோ, தெரியலியே..

பனித்துளி சங்கர் said...

என்ன தலைவா எல்லாம் பார்க்க ஆசையா , ஆசையா என்றுக் கேட்டுவிட்டு ஒன்றுமே இணைக்காம விட்டு விட்டீர்களே !? படம் இன்னும் பார்க்கவில்லை இனிதான் திருட்டு சீடி எதுவும் கிடைக்குதானுப் பார்க்கணும்

Astrologer sathishkumar Erode said...

படம் அவ்ளோ நல்லாருக்கா..பார்த்துடுவோம்

Astrologer sathishkumar Erode said...

அஞ்சலி படம் எதுக்கு இவ்ளோ பெருசு..லே அவுட் சரியில்லை..படங்களை குறைக்கவும்

Astrologer sathishkumar Erode said...

நேத்தே விமர்சனம் போட்ருந்தா ஹிட்ஸ் அள்ளியிருக்கலாம்..தலைப்பு இவ்வளவு நீளமா இருந்தா ஹிட்ஸ் குறையும்

mohana said...

Arumayana vimarsanam!

தமிழ்வாசி பிரகாஷ் said...

ரைட்டு.....

RAMA RAVI (RAMVI) said...

நல்ல இயக்கினரை அறிமுகம் செய்து இருக்கீங்க.
பட விமர்சனம் நல்லா இருக்கு.

K said...

சார் சர்டிஃபிகேட் குடுத்திட்டிங்கல்ல! அப்போ பார்த்துடவேண்டியதுதான்!

K said...

டிஸ்கி - பட விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மேட்டர்.. அனன்யா பார்க்க நெக்ஸ்ட் டோர் கேர்ள் போல இருந்தாலும் அவரை ரசிக்க முடியவில்லை.,. ஏதோ சித்தி பொண்ணு, பெரியப்பா பொண்ணு போல இருக்கார்.. ஃபிகர்னா பார்த்ததும் மாமா பொண்ணு எஃப்க்ட் வேணும். பை சமந்தமில்லாம டிஸ்கி போடுவோர் சங்கம் //////

சார், இந்த சங்கத்துல என்னையும் சேர்த்துக்கோங்க!

K said...

1. ஓப்பனிங்க்லயே பஸ் ஆக்சிடெண்ட் ஆகப்போகுதுன்னு சொல்லிட்டதால நிதானமா வர்ற காதல் காட்சிகள் கொஞ்சம் பட படப்பை ஏற்படுத்துது.. அதாவது அழகான காதல் காட்சிகள் வந்தாலும் மனம் அதுல ஒன்றிட முடியல்.. அதுக்குப்பதிலா விபத்து நடக்கப்போவதை முன் கூட்டியே சொல்லாம விட்டிருந்தா சஸ்பென்ஸுக்கு சஸ்பென்ஸூம் ஆச்சு.. காதல் காட்சிகளில் ஆடியன்ஸ் இன்னும் நிதானமா மனம் லயிச்சு பார்த்திருக்கலாம்.. ////////

நல்ல ஆலோசனை சார்! நீங்க இயக்குனராவது கன்ஃபார்ம்ட்!

Jana said...

அப்ப பார்க்கலாம் :)

Anonymous said...

படங்கள் பார்ப்புது மிகக் குறைவு...இப்படி வாசிப்பது மட்டும் தான்......குட்
வேதா. இலங்காதிலகம்.

சக்தி கல்வி மையம் said...

மாப்ள ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு படத்திற்கு பாஸிடிவா விமர்சனம்..

படம் பாக்கணும் போல தோணுது...

Unknown said...

நாங்களும் நேத்தைக்கு படம் பார்த்துட்டமல்ல.....விமர்சனம் சூப்பர் படமும் சூப்பர்

கும்மாச்சி said...

சி.பி. உங்கள் ஸ்டைலில் விமர்சனம் சூப்பர்.

படத்தை பார்த்துவிட வேண்டியதுதான்.

Anonymous said...

சுவர் கடிகாரம் கூட சிபி சாரின் கண்களில் இருந்து தப்ப முடியவில்லை ...அருமை பாஸ் ...

கடம்பவன குயில் said...

என்ன நல்லமாதிரி விமர்சனம் பண்ணியிருக்கீங்க....??? நம்ப முடியலயே...

ரொம்ப அடக்கிவாசிக்கிறது எதற்கு என்று தெரியலயே...???

கடம்பவன குயில் said...

வசிஷ்டர் வாயால கூட பிரம்மரிஷி பட்டம் வாங்கிடலாம் .... உங்க கிட்ட நல்ல விமர்சனம் வாங்கறது கஷ்டமே..

பரவாயில்லை நிஜமாவே இயக்குநர் நல்லாதான் எடுத்திருக்கிறார் போல. வாழ்த்துக்கள் இயக்குநருக்கு..

ravi said...

ஏன் பாஸ் படம் பார்க்க போகும்போது கூடவே பேப்பரும் பேனாவும் எடுத்துட்டு போயிடுவிங்களா வசனத்த நோட் பண்ண ..?? டவுட்

Rizi said...

சூப்பர் விமர்சனம் சி.பி..

உங்களால் மட்டுமே முடியும் இவ்வாறு

மாதேவி said...

எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம் :)

நல்ல விமர்சனம்.படம் பார்த்திடுவோம்.

கோலா பூரி. said...

ஆமா நீங்க படம் பாக்கும் போதே விமரிசனமா எழுத வேண்டிய வரிகள்ளாம் நினைச்சு கிட்டேதான் படம் பாப்பீங்களா?

குறையொன்றுமில்லை. said...

உங்க விமரிசனம் படிச்சா படம் ஒரு முறை பாக்கலாம்னுதான் இருக்கு நெட்லதான் பாக்கனும்.

ஆர்வா said...

தலைவா விமர்சனம் நச்... அநன்யா கைய பின்னாடி கட்டிட்டு வர்ற காட்சி, தனக்கு எதிர்ல வர்ற பொண்ணுங்க முன்னாடி தன்னோட தொப்பைய காட்டிக்க கூடாதுன்னுதான். லேடிஸ்க்கே உண்டான டிபிக்கல் ஜாப் அது. ஹி.ஹி..

ஆர்வா said...

இயக்குனருக்கான கடைசி கேள்வியில ஒரு சின்ன திருத்தம்.. அவர் அனன்யாவை பார்க்கணுங்கிறதுக்காகத்தான் திருச்சிக்கே பயணம் மேற்கொள்கிறார்..

ponsiva said...

நல்லா detaila படம் பார்க்கின்றிர்கள் என தெரிகின்றது .. இருந்தாலும் ஏன் தவறான தகவலை பதிவு செய்கின்றிர்கள் ...
உதரணத்திற்கு.. "டேய் நாயே" இல்ல டேய் மச்சி னுதான் படுதுல வரும்.. அப்புறம் .. 'முதல்ல உங்கள நம்பல அதுனால பயம் இல்ல , இப்போ நம்புறேன் அதுனால பயமா இருக்கு ' இப்படித்தான் அந்த வசனம் வரும் ..
.

ம.தி.சுதா said...

அஞ்சலியின் துடிப்பை ரசிக்கலமென்று சொல்கிறீர்கள் அப்புறம் என்ன.

உங்க விமர்சன்துக்கு நம்மகிட்ட புரிம்மபா புள்ளித்திட்ம் இருக்கிறது..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

Sivakumar said...

டிஸ்கி - 2 தொலைஞ்சி போச்சா..?

Sen22 said...

செம டிஸ்கி சார்.. :))))

என்ஜாய்டு யுவர் ரிவியு சார்..

Thanks!!

vkbm42 said...

Hi Senthil,

Read engeyum eppodum review. Nice work by you. They way you narrate the story really makes us to see the film immediately. I am regular reader of your reviews. But i deny some of your comments that you have mentioned the accident could have been shown last so as to build the tempo till the end. Really good idea as a viewer but as a creator the director might have discussed this already with his assts and his guru ARM and if it so like you told there are some films have used this formula. So he wanted something differently...

Any way Good Work ...
Keep Going man...

PS: You can initiate a thread to discuss about what is good cinema and how to write a good screen play? Probably this will teach large audiance to what is good screenplay is all about? I hope you will do this...All the best

Gangaram said...

Boss padam paakkum podhu paper pena vechu notes yeduppeengalo... full dialagaum pottuteengale :)