Saturday, May 11, 2024

ஜெயில் (2021) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ஆக்சன் டிராமா ) @ அமேசான் பிரைம் , ஆஹா தமிழ்


   இயக்குநர் ஜி  வசந்த  பாலன்  இயக்கிய  முதல்  படம்  ஆல்பம்  (2002)  தான்   என்றாலும்  தோல்வி  அடைந்த  மனிதனின்  கதையைப்பேசிய  வெயில் ( 2006)  தான்  அவரை  அடையாளம்  காட்டிய  படம் . விமர்சன  ரீதியாகவும், கமர்ஷியல்  ஆகவும்   ஒருங்கே  வெற்றி  பெற்ற  ;படம். அங்காடித்தெரு (2010)  அவர்  இயக்கிய  மைல்  கல். பிரமாதமான  படம் . பிரம்மாண்டமான  மாறுபட்ட  படம்  என்றாலும்  அரவாண்  (2012)  கமர்ஷியலாகப்போகவில்லை    


யானைக்கும்  அடி  சறுக்கும்  என்பதை  நிரூபிக்கும்  படம்  தான்  இவர்  இயக்கிய  ஜெயில். கஞ்சா  கேஸ் , ரவுடி , போலீஸ்  கதை  என  மாமூல்  கதையை  ஏன்  தேர்ந்தெடுத்தார்  என்பது  தெரியவில்லை . இவருக்கு  ஒரு   சறுக்கல்  படம்  இது      


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  தன்  அம்மாவுடன்  ஒரு  குப்பத்தில்  வாழ்ந்து  வருகிறார்.இவர்  ஒரு  திருடன். இவருக்கு  இரண்டு  நண்பர்கள்  உண்டு . நண்பர்களில்  ஒருவன்  ஒரு  கஞ்சா  கேசில்  மாட்டுகிறான். நண்பனிடம்  கோடிக்கணக்கான  மதிப்புள்ள  கஞ்சா ( ஹெராயின் ) மாட்டுகிறது , அதை  ஒரு  இடத்தில்  மறைத்து  வைக்கிறான்


 நாயகனின்  நண்பனை  ஒரு  கும்பல்  கொலை  வெறியுடன்  துரத்துகிறது. அந்த  கும்பலில்  ஒருவன்  நாயகனின்  நண்பனைக்கொலை  செய்து  விட  கோபத்தில்  அந்ந்தக்கொலை  காரனை  நாயகனின்  இன்னொரு  நண்பன்  கொன்று  விடுகிறான்


 இப்போது  நண்பன்  ஜெயிலில்  இருக்கிறான்  நண்பனை  விடுவிக்க  நாயகன்  போராடுகிறான். அதில் நாயகன்  வெற்றி  பெற்றானா? இல்லையா? என்பது  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  ஜி  வி பிரகாஷ் . அசல்  குப்பத்து  வாலிபன்  ஆகவே  அவர்  கெட்டப்  அமைந்து  விட்டது , ஆனால்  சேரி  பாஷை  தான்  சரியான  உச்சரிப்பில்  வரவில்லை , பாடல் காட்சிகளில்  நாயகியுடன்  நன்றாக  ரொமான்ஸ்  செய்கிறார். சோகக்காட்சியில்  சோபிக்கவில்லை  என  பல  ஹீரோக்கள்  பேர்  எடுத்தாலும்  எந்த  ஒரு  ஹீரோவும்  காதல்  காட்சியில்  சரியாக  நடிக்கவில்லை  என்ற  கெட்ட  பெயர்  வாங்கியதே  இல்லை , ஆண்கள்  ராக்ஸ் 


நாயகி  ஆக   அபர்ணதி  அழகாக  வந்து  போகிறார். அவரது  சிறந்த  , சிவந்த  உடல்  அமைப்புக்கும் , குப்பத்துக்கும்  பொருத்தம்  இல்லை . அதைப்பற்றி  நமக்கு  வருத்தம்  இல்லை .  சிரிக்கும்போது  அழகாக  இருக்கிறார் 


 நண்பர்களில்  ஒருவர்  ஆக  பசங்க  பாண்டி  கச்சிதமாக  நடித்திருக்கிறார்.  அவருக்கும்  ஒரு  ஜோடி  உண்டு . அங்காடித்தெரு  காதல்  காட்சிகளை  நினைவுபடுத்துகிறது , குட் 


கொலை  செய்ய[படும்  நண்ப்ர்  ஆக   நந்தன்  ராம்  அதிக  காட்சிகளில்  வராதது  மைனஸ்


நாயகனின்  அம்மாவாக  ராதிகா  டெம்ப்ளேட்  அம்மா  நடிப்பு குட்  சரண்யா  ரவிசந்திரன் , மரிய  புஷ்பம்  என  அனைவருமே  கொடுத்த  கதாபாத்திரத்தை  கசிதமாக  செய்திருக்கிறார்க:ள்  


 வில்லன்  ஆக  ரவி  மரியா  கனகச்சிதமாக  நடித்திருக்கிறார்


ஜி  வி  பிரகாஷின்  இசையில்  9  பாடல்கள் /. எல்லாமே  கேட்கும்படி  உள்ளன. அவற்றில்  இரண்டு  பாடல்கள்  செம  ஹிட்டு 


ரேமண்ட்  டெரிக்  கிரிஸ்டா  தான்  எடிட்டிங்.  130  நிமிடங்கள்  ஓடும்படி  ட்ரிம்  செய்து  இருக்கிறார் 


கணேஷ்  ஒளிப்பதிவு  குட் 


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  வசந்த  பாலன் 




சபாஷ்  டைரக்டர்


1   நாயகன்  - நாயகி  லவ் போர்சன் ,  நண்பன்  - காதலி  லவ்  போர்சன்  இரண்டுமே  மனம்  கவரும்படி  அமைந்தது 


2    நாயகிகள்  இருவரையும்  கண்ணியமாகக்காட்டியது 



  ரசித்த  வசனங்கள்  ( எஸ்  ராமகிருஷ்ணன் + பாக்கியம்  சங்கர் + பொன்  பார்த்திபன் ) 


1    சார் , ஒரு  சிகரெட்  கிடைக்குமா?


 இருக்கறது  லாக்கப்ல , கேட்கறது  சிகரெட், ஏன்  ஒரு குவாட்டர்  கிடைக்குமா?னு கேளேன் 


2  அவ  துரத்தறா, அதனால  நான்  ஓடறேன்னு  நினைக்காதீங்க , ஜாகிங்க்  போய்க்கிட்டு இருக்கேன் 


3  போலீஸ்  கேசே  நம்ம  மேல  இருக்கக்கூடாதுன்னா  ஏதாவது  அரசியல்  கட்சில  சேரனும், இல்லைன்னா  நாமே  ஒரு  கட்சி  ஆரம்பிக்கனும்


4  ஐஸ் வாட்டர்  கூட  குடிக்க  மாட்டான் , இப்போ  அவனை  ஐஸ்  பாக்ஸ்ல  வெச்சிருக்காங்க 


5  நான்  ஏன்  உன்னை  லவ் பண்ணேன்  தெரியுமா?  என்  கிட்டே  மட்டும்  பணம்  இருந்தா  இந்த  ஊரையே  உன்  பேருக்கு  எழுதி  வெச்சுடுவேன்னு  சொன்னியே  அதுக்குத்தான் 


6  சார்  , ஸ்டேஷன்ல  வெச்சு  லீகலா  என்கொயர்  பண்ணுங்க 


  பண்றது

  இல்லீகல்  இதுல  எப்படி  லீகலா  புரொசீஜர்  பண்ண? 


7  நம்ம  கைல  பணம்  இருந்தா  சட்டம்  நமக்கு  சல்யூட்  அடிக்கும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  ஒரு  கட்டத்தில்  தற்கொலை  முயற்சியாக  தன்  மணிக்கடடை  பிளேடால்  இரு  முறை  வெட்டிக்கொள்கிறான். அப்போது  நாயகி  அங்கே  வந்து  அவனைத்தடுத்து  பிளேடைத்தட்டி  விடுகிறாள் . டயலாக்  பேசுகிறாள் , கிஸ்  கொடுக்கிறாள் . ரத்தம்  பாட்டுக்குப்போய்க்கிட்டே  இருக்கு , டூயட்  பாட  ஆரம்பிச்ட்டாங்க 


2   வில்லனோட  அடியாட்கள்  அரைக்கிறுக்கனுங்களா  இருக்கானுங்க , நாயகன்  கீழே  ஓடிட்டு  இருக்கான். அவன்  மேல  கல்லை  எடுத்து  எறியலாம். ஆனா  10  மாடி  உய்ரத்துல  இருந்து ஒப்வொரு  டிவி யா  எறிஞ்சு  உடைச்சுட்டு  இருக்கானுங்க  புரொடியூசர்  பாவம் 


3  ஒரு  காரக்கொழம்பு  மண்டையன்  கைல  2  அடிக்கு  கத்தி  வ்ச்சுட்டு  2  பக்கத்துக்கு  டயலாக்  பேசிட்டு  இருக்கான்,  முதல்ல  நாயகனைக்குத்திட்டு  அப்றமா பேசி  இருக்கலாமில்ல? 


4  நாயகன்  பெரிய  தியாகியா  இருக்கான் . நண்பன்  செய்த  கொலையை  தான்  தான்  செய்ததா  சொல்லி  தன்னை  கைது  பண்ணசொல்றான், நண்பனின்  அக்கா  கஞ்சா  கேசில்  கைது  ஆனதும்  அந்தக்கேசை  தன்  மேல்  எழுதச்சொல்றான் . இதெல்லாம்  மனதில்  ஒட்டவே  இல்லை 


5  நாயகனின்  அம்மா  ராதிகா  நடத்தும்  த்ற்கொலை  நாடகம்  காமெடிக்கா? செண்ட்டிமெண்ட்க்கா? ரெண்டுக்கும்  ஒர்க்  அவுட்  ஆகவில்லை , எரிச்சல் தான்  வருது 


6  போலீஸ்  அஃபீசர்  ஆன  ரவி மரியா  பப்ளிக்காக  ஒரு  பார்ட்டியில்  ஒரு  பெட்டி  கேஸ்  திருடனான  நாயகனுடன்  பேசிக்கொண்டு  சரக்கடித்துக்கொண்டு  இருக்கார் . இப்படித்தான்  போலீஸ்  ஆஃபீசர்கள்  நடந்துக்குவாங்களா? திருடன்  கூட  சகவாசம்  இருந்தாலும்  வெளில  தெரியாத  மாதிரி தானே  பார்த்துக்குவாங்க ? 


7  வில்லன்   நாயகனிடம்  ஒரு  வீணாப்போனவனைக்காட்டி  இவர்  தான்  ஜட்ஜ் இவர்  நினைச்சா  உன்  ஃபிரண்டை  ரிலிஸ்  செய்வார்  என  அளந்து  விட  அதை  நாயகன்  நம்புவதெல்லாம்  டூ  மச்


8  நாயகனின்  அம்மா  ராதிகா  திடீர்  என  இறந்து  விட  தகவல்  சொல்ல  ஆட்கள்  போன  அஞ்சாவது  நிமிஷமே  இரங்கல்  அஞ்சலி  போஸ்டர்  எல்லாம்  ஃபோட்டொவோட  ரெடி  ஆவது  எப்படி ?   அவ்ளோ  க்யிக்கா  பிராசஸ்  ஆகுமா? 


9 நாயகன் சரக்கு  அடிச்ச  மப்பில்  மயக்கத்தில் இருக்கான் அம்மாவுக்கு  இறுதிச்சடங்கு  நடத்தி    எரிச்சுடறாங்க , அடுத்த  நாள்  நாயகனுக்கு  அம்மா இறந்த  நியூசே  கிடைக்குது . இருக்கும்  ஒரே  சொந்தம்  நாயகன்  தான். அவன்  இல்லாமல்  அவ்ளோ  அவசரமா  ஏன்  டெட்  பாடியை  எரிக்கனும் ? கொஞ்சம்  கூட  ஒட்டாத  செயற்கையான  காட்சி 


10   நாயகன்  வசிப்பது  குப்பத்தில். எல்லோரும்  ஏழைகள்  , ஆனால்  அஞ்சலி போஸ்டர்  ஆங்கிலத்தில்  இருக்கே? 


11  போலீஸ்  ஆஃபீசர்  ஆன  ரவி மரியா  ஸ்டேஷனில்  மஃப்டியில்  இருக்கார் , பைக்கில்  போகும்போது  ஹெல்மெட்  இல்லாமல்  போறார் 


12  வில்லன்  ஒரு  போலீஸ்  ஆஃபீசர். நண்பன் கண்  முன்  நாயகனை  சுடுகிறார். கண்னால்  கண்ட  சாட்சியை  அவரே  ஓடி  விடு  என  சொல்லி  அனுப்புவது  ஏன் ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  யூ  , ஆனால்  லிப் லாக்  காட்சி  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   வசந்த  பாலன்  ரசிகர்களுக்கு  ஏமாற்றம் , ரேட்டிங்  2.25 / 5 



Jail
Theatrical release poster
Directed byVasanthabalan
Written byS. Ramakrishnan
Bakkiyam Shankar
Pon Parthiban
Produced bySk kailash film international
StarringG. V. Prakash Kumar
Abarnathi
Radhika Sarathkumar
CinematographyGanesh Chandhrra
Edited byRaymond Derrick Crasta
Music byG. V. Prakash Kumar
Production
company
Krikes Cine Creations
Distributed byStudio Green
Release date
  • 9 December 2021
CountryIndia
LanguageTamil

0 comments: