Thursday, August 30, 2012

சென்னை பதிவர் சந்திப்பு கொண்டாட்டம் பாகம் 2

சென்னை பதிவர் சந்திப்பு பற்றி பலரும் பல பதிவுகள் போட்டுட்டு வர்றாங்க. நான் படிச்ச 16 பதிவுகள்ல  4 பேர் மட்டும் விழாவில் பதிவர்கள் அறிமுகம் பகுதில நானும் , கேபிள் சங்கரும்  மற்றவர்களை ஓவராய் கலாய்த்ததாகவும், அது பெண்களுக்கு பிடிக்காது எனவும், தனிப்பட்ட முறையில் பதிவர்களை கலாய்ப்பது  தவறு எனவும் சொல்லி இருக்காங்க.. 



 அவங்களை நினைச்சு சிரிப்புதான் வருது,. நரசிம்ம ராவ் மாதிரியோ, மண் மோகன் மாதிரியோ அறிக்கையை பார்த்து படிச்சா தூக்கம் வந்துடும். இதெல்லாம் ஜாலிக்கு.  தருமன் கண்ணுக்கு எல்லாமே நல்லதா தெரியும்.. துரியோதணன் கண்ணுக்கு எல்லாமே கெட்டதா தெரியும். அதுக்கு மனசை பக்குவப்படுத்திக்கனும்.. 

  மேடையில் இருந்தவாறே நாங்க 2 பேரும் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸை கவனிச்சுட்டுதான் இருந்தோம்.. அப்படி யாரும் ரசிக்காம இருந்த மாதிரி தெரியல.. பெண்கள் அதை ரசிச்சிருக்க மாட்டாங்க என்பதும் கற்பனையே? ஏன்னா  4 பதிவர்களிடம் தனிப்பட்ட முறையில் கருத்து கேட்ட போது அப்படி எல்லாம் ஏதும் இல்லை என்றே சொன்னார்கள். மேடையில் அமர்ந்த படி எஸ் எம் எஸ் மூலம் அவ்வப்போது நான் கருத்து கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.. அவர்கள் சொன்ன ஆலோசனைகளை ஃபாலோ பண்ணிட்டுதான் இருந்தேன்..


 இதுல இன்னொரு விஷயமும் சொல்லிக்கறேன். 150 பதிவர்கள் தங்களை அறிமுகம் பண்ணிக்கிட்டாங்க.. அதுல நான் கலாட்டா செஞ்சது மொத்தம் 16 பேரை மட்டுமே. தனிப்பட்ட முறையில் எனக்கு அவர்கள் பழக்கம்.. அதே போல் அப்படி கிண்டல் அடிக்க எனக்கு உரிமை உள்ளது. அதே போல் கேபிள் சங்கர் கலாட்டா செய்தது மொத்தம் 7 பேரை மட்டுமே.



டி வி சீரியல்கள் பார்த்து பார்த்து தமிழர்கள் பலர் உம்மணாம்மூஞ்சிகளாக மாறி வருவது மனதுக்கு கஷ்டமாக இருக்கு.. அவர்கள் மன நலம் அடைந்து சிரிச்ச முகமாக மாற இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்.குறை சொல்லி எழுதிய மற்ற பதிவர்கள் எனக்கு அதிகம் பழக்கம் இல்லை.. ஆனா ஜாலி டைப்பான பலா பட்டறை சங்கர் கூட  அது போல் ஒரு கருத்தை சொன்னது ஆச்சரியமா இருக்கு


இதை விட காமெடி இன்னொரு அதி புத்திசாலி பதிவர்  12 பக்கம் ஏ 4 ல வர்ற மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கார்.. அதனோட சாராம்சம் பதிவர் அறிமுக நிகழ்ச்சி தேவை அற்றது . 2 மணி நேரம் வீண் என்றார். பதிவரை பற்றித்தான் நமக்கே தெரியுமே? டெயிலி பதிவு வாசிக்கிறோமே என்றார்.


அவருக்கு என் பதில் இணைய  தளங்கள் 1000க்கும்  மேல் இருக்கு. அதில் நாம் ரெகுலரா பார்ப்பது ஒவ்வொருவரும் குறிப்பிட்ட 20 பதிவுகள் தான். எத்தனையோ பதிவுகள் விடுபட்டிருக்கும். தெரியாமல் இருக்கும். 2 வருடங்கள் வலை உலகில் இருக்கும் எனக்கே இதுவரை சென்னை பதிவர் சந்திப்பில் வந்த பதிவர்கள் பாதிப்பேர் தெரியாது. ( இந்த லைனில் எனக்கே என்ற வார்த்தையில் தலைக்கனம் இல்லை ) அப்படி இருக்க புது ஆட்களுக்கு யாரை தெரியும்.. இந்த சந்திப்பின் மூலம் பலரும் பலரை அறிய வாய்ப்பு.. அவ்ளவ் தான்.


புதிய தலைமுறை வார இதழில் இருந்து  ஒரு மேடம் வந்திருந்தாங்க. அவங்க சொன்ன அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பதா இருந்தது. அதாவது ஆனந்த விகடன் இதழ்ல என் விகடன் புக்ல வாரா வாரம் வலை ஓசை பகுதியில் ஒரு பதிவரை அறிமுகம் செய்வது போல் புதிய தலைமுறை வார இதழில் அனைத்து பதிவர்களுக்கும் எழுத வாய்ப்பு கொடுப்பதாக சொன்னார்கள்.

அதற்காக துறை வாரியாக அதாவது இலக்கியம், சமையல்
, சமூகம், கவிதை, சிறுகதை, கட்டுரை, சினிமா விமர்சனம் இப்படி இயங்குபவர்கள்  அந்தந்த பிரிவை குறிப்பிட்டு மெயில் ஐ டி வலைத்தள முகவரியை ஒருங்கிணைத்து தரச்சொன்னார்கள்

இது நல்ல வாய்ப்பு, அனைவரும் பயன்படுத்தி கொள்ளலாம்
 1.30 மணிக்கு லஞ்ச்..  அறிவிச்ச பின்னும் பாதிப்பேர் சாப்பிடப்போகாம வந்த பதிவர்களுடன் அளவளாவிப்பேசிக்கொண்டிருந்தது அவங்க ஆர்வத்தை காட்டுச்சு.


 சைவ விருந்து , வெஜிடபிள் சூப், மைசூர் பாக், கோக், இட்லி, தோசை ,பூரி . இதுதான் மெனு. எல்லாரும் ஒரு வெட்டு வெட்டிட்டு மீண்டும் மேடைக்கு வந்தோம்.. ஷாக் சர்ப்பரைஸ் என்னன்னா பி கே பி சத்தமே இல்லாம மேடைல அமர்ந்திருந்தார்.. வழக்கமா வி ஐ பி ங்க வந்தா உடனே மேடைல உக்கார வைக்க மாட்டாங்க.. மைக்ல பில்டப் கொடுத்து அப்புறமா தான் உக்கார வைப்பாங்க.. ஆனா இவர் சோ சிம்ப்பிள்.. மேன்..



 கவியரங்கம் நடந்தது.. இதுல பிரபல ட்விட்டரும், பாடல் ஆசிரியருமான சுரேகாவின்  ஆளுமை வெளிப்பட்டது.. அருமையான பேச்சு. அழகான மொழி நடை.. அங்கதம் என மேடையில் கலக்கினார்.. அவரது பேச்சும், அறிமுகமும், கவிஞர்கள் கவிதையும்  டைப் பண்ண 3 மணி நேரம் ஆகும் என்பதால் அது அடுத்த பாகத்தில். 


 அடுத்து பி கே பி பேச வந்தார்






அவர் நல்ல மேக்கப்பில் இருந்தார்.. மிக இயல்பாக பேசினார்..

வலைப்பதிவர்களின் விழா சென்னையில் இவ்வளவு பெரிய முறையில் நடப்பது இதுவே முதல் முறை. பெண்கள் இவ்வளவு பெரிய அளவில் கலந்து கொண்டதும் அதுவும் நாள் முழுதும் அமர்ந்து கேட்டதும் விழாவின் வெற்றி என  நினைக்கிறேன்

Photo


விழாவுக்கு என்னை அழைத்த போது மின்னல் வரிகள் கணேஷ், “  நீங்கள் பேசும் நேரம் இருந்தால் போதும், பிறகு  நீங்கள் கிளம்பிக்கலாம்என்று தான் சொன்னார். ஆனால் அது சபை நாகரிகம் அல்ல; அந்த பகுதி முழுமைக்கும் நான் இருப்பதே நல்லது; நானும் ஒரு வலைப்பதிவர் தான். அதனால் முழுதும் இருக்க விரும்பினேன். அனைத்தையும் சந்தோஷமாக நீங்கள் பேசுவதை ரிசீவ் செய்து கொண்டிருந்தேன்.
தென்றல் சசிகலாவின் கவிதை புத்தகத்தை நான் வெளியிட்டேன். அது பற்றி சிறிதேனும் பேசுவது தான் முறை என சில நல்ல கவிதைகளை குறிப்பிட்டு இப்பகுதியில் பேசினார்





லஞ்சம் 



பலூன் விற்பவன்
பிறக்கப் போகும் தன் குழந்தைக்கு ..
வாங்கிய சட்டையின் விலை இருபது
பிறந்த குழந்தை
ஆணா பெண்ணா என
தெரிந்து கொள்ள கொடுத்த விலை ஐநூறு .


கோபம் வரத்தான் செய்கிறது

குடுமி பிடித்து
மண்ணில் உருண்டு புரண்டு
சண்டையிடும்
மழலைகளை காணும் போதெல்லாம்
கொஞ்சம் கோபம் வரத்தான் செய்கிறது .
என்னோடு சண்டையே ..
போட்டிராத அக்காவின் மேல் .


என் அன்பைப்போல !

எவர் தடுப்பினும்
நடுவழியிலேயே
நின்றுவிடப்போவதில்லை மழை
உன் மீதான என் அன்பைப்போல !



தென்றல் கவிதை புத்தகம் வெளீயிடுபவர்  பி கே பி , பெறுபவர் சேட்டைக்காரன் அண்ணன், அருகில் கவிதாயினி சசிகலா



முதலில் கையெழுத்து பத்திரிக்கை என்ற ஒன்று இருந்தது. அதன் நீட்சியாக தான் இன்றைய வலைப்பூவை பார்க்கிறேன்

நாங்கள் எழுதிய போது பத்திரிக்கைக்கு அனுப்பி விட்டு எப்போது பிரசுரம் ஆகும் என காத்திருக்க வேண்டும். ஆறு மாதம் கழித்து " உங்கள் படைப்பை பிரசுரம் செய்ய முடியாமைக்கு வருந்துகிறோம் " என கடிதம் வரும். ஆனால் நீங்கள் காத்திருக்க தேவையின்றி உங்கள் படைப்புகளை வெளியிடுகிறீர்கள். ஆயிரக்கணக்கானோர் உடன் வாசித்து கருத்துக்கள் சொல்கிறார்கள்

விஞ்ஞானம் எந்த அளவு வளர்ந்துள்ளது ! எலக்ரானிக் யுகத்தில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வாய்ப்புகள் ! அந்த காலத்தில் போன் பேசவே டிரன்க் கால் புக் செய்து பேசணும் ! அதுக்கு எட்டு பேர் காத்திருப்பாங்க. இப்போ எந்த அளவு வளர்ந்துட்டோம் !



வலைப்பதிவர்கள் உங்கள் அனுபவத்தை எழுதுவதுடன் இன்னும் பலரை எழுத வைக்க வேண்டும். நாம் பேப்பர்லெஸ் சொசைட்டி நோக்கி செல்கிறோம். வருங்காலத்தில் வலைப்பூக்கள் உலகை ஆளும். எனவே " எனது வலைப்பூவை படியுங்கள் " என சொல்வதை விட உங்களை போன்ற நிறைய வலைப்பதிவர்களை உருவாக்க வேண்டும் ! அடுத்தடுத்த கூட்டங்கள் புதிய வலைப்பதிவர்களுக்கு டெக்னிக்கல் விஷயங்களை சொல்லி தரும் கூட்டங்களாக இருந்தால் நலம் !
\
கேபிள்சங்கர், வீடு திரும்பல் மோகன், சி பி


இப்போ வலைப்பூ என்பது தவிர்க்க முடியாத சக்தி ஆகிடுச்சு. இப்போ புதுசா ஒரு பத்திரிக்கை தொடங்குனா  அதுல கண்டிப்பா வலைப்பூ  பக்கங்கள்னு ஒதுக்கியே ஆக வேண்டிய கட்டாய சூழல் இருப்பதை நான் பார்க்கிறேன்.. உல்லாச ஊஞ்சலில் கூட கேபிள் சங்கரை எழுத வைத்தேன்.. அவரும் 17 வலைப்பூக்கள் பற்றி அறிமுகம் செய்தார்.. 


அட்ராசக்க நீண்ட நாள் வாசகரும்,ஆத்ம நண்பரும் ஆன கும்பகோணம் பேராசிரியர் உடன் ஒரு அழகிய சந்திப்பு


உங்கள் சினிமா விமர்சனங்கள் திரை உலகினரால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. பத்திரிக்கையில் விமர்சனம் வர தாமதம் ஆகும். உங்கள் விமர்சனம் தான் முதலில் வாசிக்கிறார்கள். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் போன்றோரின் விமர்சனம் அனைத்து இயக்குனர்களும் வாசிக்கிறார்கள்.

சில ப்ளாகுகளில் பின்னூட்டங்களில் தனி மனித தாக்குதல் நடப்பதை பார்க்கிறேன். ஒருவனின் எழுத்தை மட்டும் பாருங்கள். விமர்சியுங்கள் அவன் வாழ்க்கையையும், அவனையும் விமர்சிக்காதீர்கள். கண்ணதாசன் இன்றளவும் நினைவு கூறப்படுவது அவர் எழுத்தால் தான். அவர் வாழ்க்கையில் பல்வேறு முறை தடுக்கி விழுந்தார். இன்று யாரும் அதை பற்றி பேசவில்லை.அவர் எழுத்துக்களால் நிலைத்து நிற்கிறார் !


பத்திரிக்கைகளுக்கு தணிக்கை உண்டு. எழுத்தாளர்கள் படைப்புகளை எடிட் செய்து தான் பத்திரிக்கைகள் வெளியிடுகின்றன. ஆனால் ப்ளாகில் கட்டற்ற சுதந்திரம் உள்ளது. எனவே வெளியிடுவோர் தான் எச்சரிக்கை ஆக இருந்து தேவையற்றவற்றை தவிர்க்க வேண்டும்.


வலைப்பூவை எளிதில் எடுத்து கொள்ளாதீர்கள். அங்கு தெரிவது ஒரு மனிதனின் பெர்சனாலிட்டி. உங்கள் முகம், உங்கள் சுயம் அதில் தெரிகிறது. நீங்கள் யார் எத்தகையவர் என ஒவ்வொரு பதிவிலும் வெளிப்படுத்துகிறீர்கள். அதை நினைவில் கொண்டு எழுதுங்கள்.


Unparliamentary
வார்த்தைகள் , அல்லது விஷயங்கள் எழுதினால் பெண்களால் எப்படி வாசிக்க முடியும்? அப்படி நீங்கள் தொடர்ந்து எழுதினால் உங்களை பலரும் புறக்கணித்து விடுவார்கள். ஒரு மீட்டிங்கில் உங்களை பார்த்தால் உங்களை வந்து சந்தித்து பேசணும். இவரிடம் பேசாமல் இருப்பதே நல்லது என போகும் அளவில் இருக்க கூடாது !  





சினிமா விமர்சனம் முக்கியம் தான் எனினும் எல்லாரும் அதை எழுத வேண்டும் என்பது இல்லை. சினிமா பற்றிய அறிவும் ரசனையும் உள்ளவர்கள் அதை எழுதினால் நல்லது.விமர்சனத்தில் ஒரு நேர்மை இருக்க வேண்டும்.


சினிமா விமர்சனம் எழுதியே ஆகனும் என்பதற்காக யாரும் அப்படி எழுதிட்டு இருக்காதீங்க.. வேறு பல விஷயங்கள் எழுத இருக்கு..



பதிவுலகின் ஒரு சூப்பர் ஸ்டார் ஜாக்கி சேகர் பேச அதை ரசிப்பவர் இன்னொரு சூப்பர் ஸ்டார் கேபிள் சங்கர் 


வலைப்பூவில் படித்த ஒரு குட்டிக்கதையை இங்கே பகிர்ந்து என் பேச்சை நிறைவு செய்கிறேன்... “ஒரு டிபார்ட்மெண்ட்டர்ல்  ஸ்டோர்,, அங்கே ஒரு கஸ்டமர் வந்து அரைக்கிலோ பட்டர் வேணும்னு கேட்றார். சேல்ஸ்மேன் சொல்றார். சார், எங்க கிட்டே ஒரு கிலோ பட்டர் பாக்கெட் தான் இருக்கு.. பேக் பண்ணினது.. அதை பிரிக்க முடியாது, அது பேக் பண்ணி இருக்கு.

 யோவ்,.. நான் கஸ்டமர்.. நான் சொல்றதுதான் வேணும். என்னை சேட்டிஸ்ஃபை பண்றதுதான் உன் வேலை .. உன் கிட்டே என்ன பேச்சு? நான் ரெகுலரா இங்கே வந்து  அரை கிலோ தான் வாங்கிட்டு இருக்கேன். நீ மேனேஜர்ட்ட போய் கேளு


 சேல்ஸ் மேன் உடனே  மேனேஜர் கிட்டே போய்  “ சார், இங்கே ஒரு லூஸ் , மெண்டல் , சாவு கிராக்கி வந்து   பட்டர் பாக்கெட்ல லூஸ்ல கேட்குது சார்.. “

 இப்படி சொல்லிட்டு இருக்கும்போது திடீர்னு கஸ்டமர் அங்கே வந்துட்டார்.. 

 இப்போ  2 பேருக்கும் அதிர்ச்சி.. கஸ்டமரை லூஸ்னு சொல்லியாச்சு,.. என்ன சொல்லி சமாளிக்கறதுன்னு தெரியல.. 

 உடனே அந்த சேல்ஸ் மேன் ஸ்மார்ட்டா   ரிப்ளை பண்ணான்.. ” ஆனா இந்த ஜெண்டில்மேன் அரைக்கிலோ வாங்கிக்கறேன்னு சொல்றார் சார்.. “ என சமாளிச்சார்


 உடனே மேனேஜரும் “ அப்புறம் என்னய்யா? அவருக்கு அரைக்கிலோ பிரிச்சு குடுத்துடு” என்றார்


 கஸ்டமர் போனதும் மேனேஜர் அந்த சேல்ஸ்மேனை தனியா அழைச்சு “ வெரிகுட்யா.. நீ கஸ்டமரை நக்கல் அடிச்சே, கமெண்ட் பண்ணினே.. ஆனா கஸ்டமர் வந்ததும் டக்னு சமாளிச்சியே,  நீ எந்த ஊருப்பா? 

 மெக்சிகோ சார்.. மெக்சிகோ தெரியுமில்ல சார்? ஃபிட்பால்  மேட்சுக்கு பேர் போன  இடம்.. அது போக  பிராஸ்டிடியூட்க்கும் பேர் போன இடம் “

 உடனே மேனேஜர் செம காண்ட் ஆகி “ யோவ், என்னை நக்கல் அடிக்கறியா? என் சம்சாரம் கூட மெக்சிகோ தான் “

 உடனே சேல்ஸ் மேன் டக்னு “ஓஹோ அவங்க அந்த ஃபுட் பால் டீம்ல இருக்காங்க சார்? 


 என்றானாம்.. அதுலயும் அவன் தன்னோட ஸ்மார்ட்னெசை காண்பிச்சுட்டான்.. 

 அது மாதிரி உங்க  வலைப்பூவை எல்லாரும் வாட்ச் பண்ணிட்டுதான் இருக்காங்க என்ற உணர்வுடன் ஸ்மார்ட்டாக நடந்துக்குங்க.. வாழ்த்துகள்.. “















a
“படங்கள் உதவி வீடு திரும்பல் மோகன்

கேப்டனுடன் கூட்டணி -ஸ்டாலின் சூசக பேட்டி @ ஆனந்த விகடன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYML7yE0zxUeED6eWA_yuDMGHIoCoY352zlsIs3hh_MBD0OeCyvert9X-cnjNagMaaZzEwQsxx2cJCppIqCxc6UQQtqVTHOk3irMrVTIky5_AdmVA-rEHClK7Xpkk93fQWRsABLMxNpdk/s1600/thuglak+dated+14.04.2010.jpg 

நண்பர் விஜயகாந்த் நிச்சயம் ஜெயலலிதாவுக்கு பாடம் கற்பிப்பார்!"


செம பிளான் ஸ்டாலின்
 
ப.திருமாவேலன்
 
படங்கள் : சு.குமரேசன்
 
'தளபதி’ ஸ்டாலினைச் சந்திக்கச் சென்றால், சுட்டி குட்டி சோல்ஜர்கள் சூழ விளையாடிக்கொண்டு இருந்தார்.



 கையில் வைத்திருந்தால், தோளுக்கு மேல் ஏறுகிறாள் தன்மயா. அதைப் பார்த்துவிட்டு முட்டி மோதி தாத்தாவின் மறு தோளில் ஏறுகிறான் நளன். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து நடந்து காட்டும் நிலானி பாப்பாவையும் இழுத்து அணைத்துக்கொள்கிறார். 'என்னையும் சேர்த்துக்கோங்க’ என்று ஓடி வந்து ஒட்டிக்கொள்கிறான் இன்பா.


''பேரன், பேத்திகளுக்கான நேரத்தில் பேட்டிக்கு வந்திருக்கிறீர்களே'' என்று துர்கா ஸ்டாலின் வரவேற்க, ''அரசியல் சூட்டைத் தணிக்கும் சுகமான சுமைகள் இவர்கள்தானே'' என்று அர்த்தம் சொல்லிச் சிரிக்கிறார் ஸ்டாலின்!

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbZAR27ep4ytKPRtL7QtlGoNiCgOJ2Mz504pJufN3mmj821C50PfrT7n4VYqF5aWd7XrE9X8MortC0bC2sw5HsWRKPNs0caaFtGv1z5FtsKj1PQ1_LlyI-6GhCcw6g3EkXZFCFStw2OCQF/s1600/tamilmakkalkural_blogspot_muperum_vizha.jpg

''முதல்வர் ஜெயலலிதா உங்கள் மீது தொடர்ந்து வழக்குகளைத் தாக்கல் செய்து உஷ்ணத்தைக் கூட்டிவருகிறாரே?''



''அவருக்குத் தெரிந்ததே வழக்குப் போடுவதும் கைதுசெய்வதும்தானே. 'இம் என்றால் சிறைவாசம்... ஏன் என்றால் வனவாசம்’ என்பது பிரிட்டிஷார் ஆட்சியில் மட்டும் அல்ல; ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்கிறது.


 ஒரு நாட்டின் முதலமைச்சரின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்வதே தவறு, பொதுமக்களுக்கு நிகழும் சுகாதாரக் குறைபாடுகளை எடுத்துச் சொல்லவே கூடாது என்றால், எதிர்க் கட்சிகளே இருக்கக் கூடாது என்று ஜெயலலிதா நினைக்கிறாரா? எதுவும் பேசக் கூடாதா? ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான கருத்துரிமையைக் காலில் போட்டு மிதிக்க முயற்சிக்கிறாரா? இப்போது என்ன மிசா சட்டமா நடைமுறையில் இருக்கிறது?''



''எப்படி இருக்கிறது ஓர் ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சி?''



''ஜெயலலிதா வந்தால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று எதிர்பார்த்து இருந்தால் ஏமாற்றம் அடைந்திருப்போம். அவர் ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயரும், பேருந்துக் கட்டணம் உயரும், பால் விலை அதிகரிக்கும் என்பது தமிழ்நாட்டின் தலைவிதி. தேர்தல் நேரத்தில் அவர் கொடுக்காத இந்த வாக்குறுதிகளை மட்டும்தான் உடனடியாக நிறைவேற்றுவார். 



தலைமைச் செயலகத்துக்குச் சாதாரணமாக வந்து செல்லும் ஒரு அப்பாவி மனிதனுக்குக்கூடத் தெரியும், அந்தக் கட்டடத்தில் இட நெருக்கடி மிகுந்திருக்கிறது, பலவீனமாக இருக்கிறது என்று. அதனை மாற்றி புதிய தலைமைச் செயலகத்தை சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில், காண்பவர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வடிவத்தில் அமைத்து, அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கையால் திறப்பு விழாவும் நடத்தினார் கலைஞர்.


'அந்தக் கட்டடத்துக்குள் நான் வர மாட்டேன்’ என்று சிறு பிள்ளைத் தனமாகச் சபதம் போட்டு, கோடிக்கணக்கான அரசாங்கப் பணத்தை அப்படியே கேட்பாரற்றுத் தெருவில் கிடக்கட்டும் என்று நினைப்பவர் ஒரு பொறுப்புள்ள மாநில முதலமைச்சராக எப்படி இருக்க முடியும்?


ஆசியாவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறப்பில் அமைக்கப்பட்டது அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகம். அந்தப் பெருமை கலைஞருக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே, அதை மருத்துவமனையாக்கத் துடிக்கிறார்.


தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் வாதப்பிரதிவாதங்களை வைத்து மோதிக்கொள்வதைத் தவிர்க்க முடியாது. ஆனால், ஆட்சியைப் பிடித்த கட்சி, அரசியல் உள்நோக்கங்களை ஒதுக்கிவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். ஜெயலலிதாவிடம் கடந்த இரண்டு முறையும் அது இல்லை. இப்போதும் இல்லை. வந்ததும் நில அபகரிப்பு வழக்குகளைப் போட்டார். இப்போது எதிர்க் கட்சித் தலைவர்கள் மீதும் பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்குகளைப் போடுகிறார்.


பழிவாங்கும் நோக்கில் வழக்குகள் - கைதுகள்; சரிந்து, சிதைந்துவரும் சட்டம் - ஒழுங்கு நிலை; குறுவை பொய்த்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குமுறல்; விலைவாசி ஏற்றத்தால் பொதுமக்களின் வேதனை; பேருந்துக் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றால் பரிதவிப்பு... இவைதான் இந்த ஓர் ஆண்டு கால ஆட்சியின் சுருக்கம்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja6y-3oPMROkp8KZRsI4Y259Nsm1W869BVx93x_BtXD-F-fhvnwVmSYjx-ulshXIIuYYnhtYQj3wG50K8FEknlIhQd0YwH9K4BEb-BVKm3_zdScedp-RSffJfnqGrw_D8eHccnlWq1LeE/s400/p7b2.jpg


''தி.மு.க. புள்ளிகள் மீது நில அபகரிப்புப் புகார்கள் கொடுத்தது அனைத்துமே பாதிக்கப்பட்டவர்கள்தானே? அரசாங்கமோ, போலீஸோ, இந்த வழக்குகளைப் போடவில்லையே?''


''சம்பந்தப்பட்ட வழக்குகளின் தன்மைக்குள் நான் நுழைய விரும்பவில்லை. ஆனால், தி.மு.க-வினர் மீது புகார் கொடுத்தால் மட்டும் சட்டப்படி முதல் நிலை விசாரணை ஏதும் இன்றி உடன டியாக போலீஸ் கைதுசெய்த ஆர்வத்துக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம்தானே இருக்கிறது?


இரண்டு மூன்று புகார்களைச் சேர்த்துக்கொண்டு உடனே குண்டாஸில் கைதுசெய்கிறார்கள். ஜெயலலிதா செய்தது நியாயமான நடவடிக்கை என்றால், குண்டாஸில் கைதான அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்கிறதே... அது எப்படி? இதில் இருந்தே பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இந்தக் கைதுகள் நடக் கின்றன என்று தெரியவில்லையா?''


''கொடநாட்டில் இருந்தாலும், முதல்வர் அங்கிருந்தே அரசு நடவடிக்கைகளைக் கண்காணித்துச் செயல்பட்டு வந்ததாகத்தானே சொல்கிறார்கள்?''


''ஒன்றரை மாத காலம் அவர் கொடநாட்டில் இருந்தது அவரது விருப்புரிமை. அதனை விமர்சிப்பது ஒரு மக்கள் பிரதிநிதியின் கடமை. பொதுமக்களின் எண்ண ஓட்டத்தைத்தான் நாங்கள் பிரதிபலிக்கிறோம்!''


''தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் சோர்வுதான் அதிகம் தெரிகிறது. எந்த எழுச்சியும் இருப்பதாகத் தெரியவில்லையே?''


''வெற்றி - தோல்விகளைக் கணக்கிட்டுச் செயல் படும் கட்சி அல்ல தி.மு.க. தோல்வியைப் பார்த்து சோர்வு அடைந்திருந்தால், தலைவர் கலைஞர் அறிவித்த சிறை நிரப்பும் போராட்டத்துக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருக்க மாட்டார்கள். இந்தத் தோல்விகூட, கழகத் தொண்டனை மேலும் எழுச்சி அடைய வைத்துள்ளது என்றுதான் சொல்வேன்.


அதேபோல், மிகக் குறுகிய இடைவெளியில் டெசோ மாநாட்டுக்குப் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டார்கள். கட்சிப் பொதுக் கூட்டங்கள் அனைத்து ஊர்களிலும் சிறப்பாக நடக்கின்றன. ஆலோசனைக் கூட்டங்கள் சின்னச் சின்னக் கிளைக் கழகங்களில்கூட முறையாக நடக்கின்றன. எனவே, கழகத் தொண்டர்கள் சோர்வு அடைந்து விட்டதாகச் சொல்வது, அவர்களைச் சோர்வுஅடையச் செய்ய வேண்டும் என்று நினைப் பவர்களின் அபவாதம்!''



''தொண்டர்களின் உற்சாகத்தைக் கோஷ்டி அரசியல்தான் குறைத்துவிடுகிறது என்கிறார்களே? ஸ்டாலின் கோஷ்டி, அழகிரி கோஷ்டி, கனிமொழி கோஷ்டி போன்று பிரிந்து செயல்படுவதாகச் செய்திகள் வருகின்றனவே?''



''திராவிட முன்னேற்றக் கழகம் ஒட்டுமொத்தமாக கலைஞர் கோஷ்டி மட்டும்தான். நீங்கள் சொல்வது வெறும் காட்சிப் பிழை. இவை எல்லாம், ஊடகங்களின் கற்பனை.


 'ஒரே தாயின் வயிற்றில் பிறக்க முடியாமல் தனித் தனி வயிற்றில் பிறந்தாலும் நாம் அனைவரும் உடன் பிறப்புகள்தான்’ என்று பிரகடனம் செய்தவர் பேரறிஞர் அண்ணா. கட்சியில் அனைவரும் உடன்பிறப்புகளே என்ற ஒன்றுபட்ட சிந்தனையுடன், பாசத்துடன்தான் அனைவரும் செயல்பட்டுவருகிறோம். பேதங்களுக்கோ, பிரிவினைகளுக்கோ இங்கே இடம் இல்லை!''



''உங்களது தலைமையைக் கட்சியில் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?''


''கலைஞர் நல்ல ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். எனவே, இப்படிப்பட்ட கேள்விக்கே இடம் இல்லை!''




''உங்களுக்குத் தலைமைப் பதவியைக் கொடுத்து கருணாநிதி வழிகாட்ட வேண்டும் என்று உங்களது ஆதரவாளர்களில் சிலர் நினைக்கிறார்களே?''



''என்னுடைய ஆதரவாளர்கள் என்று பிரித்துக் கேள்வி கேட்பதே தவறு!''

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXXMIc-ITEjqBKGxaF6nghqb_zY1WSTVKvbphZ02wVTLthLPTRPG0_HbZ204nlzwj3i8s-p5TECzS9ziOkrulmITT3atrGPo9VD1QCbfDDw4SwWQAg57QjDHhdEttEl3O2SP0gqMFzLFXl/s1600/p10.jpg

''அடுத்த தலைமைப் பதவிக்காகத்தான் நீங்கள் ஓடியாடி உழைத்துக்கொண்டு இருக்கிறீர்களா?''



''பகவத் கீதையின் சிந்தனைக்கு நாங்கள் மாறுபட்டவர்கள் என்றாலும், 'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்பதற்கு ஏற்ப, பலனைப் பற்றிக் கவலைப்படாமல் எனது கடமையை நான் ஆற்றிக்கொண்டு இருக்கிறேன்.



மிகச் சிறு இளைஞனாக கோபாலபுரம் கிளைக் கழகத்தின் சார்பில் நாடகம் நடத்திய காலத்தில் என் உள்ளத்தில் இருந்த உற்சாகம் இன்னமும் இருக்கிறது. கட்சிரீதியாக இளைஞர் அணியில் இருந்தாலும், பொருளாளராகத் தொடர்ந்தாலும், ஆட்சிரீதியாக சென்னை மாநகராட்சி மேயராக இருந்தாலும், துணை முதல்வராக இருந்தாலும் என்னுடைய பொறுப்புகளின் தன்மையை உணர்ந்து நிறைவேற்றி இருக்கிறேன். 


எதிர்க் கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் என்னுடைய பயணங்களை நான் குறைத்துக்கொள்ளவில்லை. கழகத் தலைவர் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு இதுவரை 14 முறை சிறை சென்றுள்ளேன். அனைத்து அடக்குமுறைகளையும் சந்தித்து உள்ளேன். நான் உழைப்பது எனது உணர்வுகளின் வெளிப்பாடே தவிர, எந்தப் பதவியையும் குறிவைத்து அல்ல!''



''தலைவரின் மகன் என்பதால், கழகத்தில் தனி மரியாதை கிடைப்பது இயல்புதானே?''


''தலைவரின் மகன் என்பது பிறப்பால் நான் பெற்றிருக்கும் சிறப்பு. அந்தச் சிறப்பு மட்டுமே தனி மரியா தைக்கான தகுதியைத் தந்துவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்!''

http://img.photobucket.com/albums/v144/annakannan/risingson.jpg



''நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவது இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே?''


''அப்படிச் சொல்பவர்களுக்கு பேரறிஞர் அண்ணா சொன்னதை ஞாபகப்படுத்துகிறேன்... 'அதிமாக முறுக்கேறிய கயிறு அறுந்துவிடும்’ என்றார் அந்தப் பெருந்தகை!''



''கட்சித் தொண்டர்களுடன் அதிக நெருக்கம் காட்டுவதில் உங்களுக்குத் தயக்கம் இருக்கிறதா?''


''ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுடன் உறவாட என்ன தயக்கம் இருக்க முடியும்? வீட்டிலும் அறிவாலயத் திலும் என்னைச் சந்திக்கக் காத்திருக்கும் அனைவருடனும் அன்போடும் நெருக்கமாகவும்  இருக்கிறேன்.


 வெளியூர் பயணங்களில் தொண்டர்கள் துணையுடன்தான் இருக்கிறேன். அவர்களது வீட்டு விசேஷங்கள் அனைத்துக்கும் உரிமையுடன் செல்கிறேன். கட்சித் தோழர்களோடு நெருங்கி இருப்பதை இன்பத்துள் இன்பம் என்று எண்ணி இருப்பவன் நான். அதில் தயக்கமும் இல்லை. கலக்கமும் இல்லை!''


''நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா?''


''தலைவர் கலைஞரின் படை எப்போதும் எந்தப் போட்டிக்கும் தயாராகவே இருக்கும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றனவே!''




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-4w42h7SXtRO2ri6YyWe9BtoVzTQ5KIMjDvTGBquho4FaqEwXTdgkgsApcQCCxj8KHCeTZFNns-ut5guNgrJw-r6SEBrhN_UE0fF7V4_AND0qGYP2DsEdNIQ_L7vK3UCRagi62ph9qRo/s400/dm25-07-09.jpg

''வெற்றி வாய்ப்பு?''


''சந்தேகம் என்ன... நாங்கள் பெரு வெற்றி பெறுவோம்!''


''ஒரு வலுவான கூட்டணியைச் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அமைத்தார். அது வெற்றியைக் கொடுத்தது. அப்படிப்பட்ட திட்டம் தி.மு.க-வுக்கு உண்டா? குறிப்பாக, விஜயகாந்தை உங்களது அணிக்குள் இணைத்துக்கொள்வீர்களா?''



''தலைவர் கலைஞர் எப்போதும் வலுவான அணியைத்தான் அமைப்பார். நண்பர் விஜயகாந்தைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே ஒரு தவறைச் செய்துவிட்டோம் என்று அவரே ஒப்புக்கொண்டு உள்ளார். ஜெயலலிதாவுக்குப் பாடம் கற்பிக்கத் தேவையான அரசியல் முடிவை நாடாளுமன்றத் தேர்தலில் எடுப்பார் என அவரது கட்சியினரே அவரிடம் எதிர்பார்க்கிறார்கள்!''

நன்றி - விகடன் 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA9fHwjbkXXMwG_j1rUvZlHntVg43m4iV5N5qoKEZIywFwOSmyFDa_SOFsFftLiEXEt2ycA-kB91QTE1akrgEpT-Di0s7YrfG5sm2VGDDkO537ptqJYQNM0l7OIUE1-cACFoTJY6zL7yw/s1600/216413_178366115546485_100001192933610_417874_940375_n.jpg


டிஸ்கி - ஃபாத்திமா பாபு பேட்டி விரைவில் வர இருக்கு, அதுக்கான முன்னோட்ட படம் தான் மேலே உள்ளது, மற்றபடி  இந்த பதிவுக்கும், படத்துக்கு, எந்த ஒரு சம்பந்தமும் இல்லை ;-0

பியூட்டி பார்லர் போகத்தேவை ஏற்படாத ஒரே பெண் யார்? கண்டு பிடிப்பு

1.14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலையில் அமர்த்தினால் 3ஆண்டு சிறை # திருப்பூர்ல மட்டும் அப்டி 50,000 பேர் இருக்காங்க, ஜெயில் போதுமா?



-----------------------------------


2. விரைவில் அறிவிக்கிறார்கள் முகமூடி பார்ட்-2  # யோவ், முதல்ல முதல் பாகம் ஊத்திக்குதான்னு பாருங்க



---------------------


3.  என் ஆழ்ந்த உறக்கங்களில்   கனவில் மட்டும்  நீ  கொஞ்சமாவது அழகாக  இருப்பதாக நினைத்து கொள்கிறேன் # எ கீ 



-------------------



4. கேரளான்னா மொதல்ல ஷகிலா  ஞாபகம் வந்தா நீ 40+  , மீரா  ஜாஸ்மின் நினைவு வந்தா நீ 30 + , 5 1/2 க்குள்ள வண்டி நினைவு வந்தா நீ 18 +


-------------


5. தோழி மனைவியானா சோலி முடிஞ்சுது,மனைவி தோழியாவும் ஆவது  பூனையை மடில கட்டிட்டு சகுனம் பார்ப்பது # எ கீ




--------------------


Lol... P

6. ஹாய் மிஸ்! நீங்க என்னை தப்பா நினைக்கலைன்னா தாப்பா போட்டுக்கறேன் ;-0 



-----------------------


7. எங்க வீட்ல வேலைகளை ஷேர் பண்ணிப்போம், நான் சமைப்பேன், அவ சாப்பிடுவா, நான் பரிமாறுவேன், அவ கை கழுவிக்குவா # சும்மா



-------------------------------


8. கேரள பெண்களை நம்ம ஊர்ப்பெண்களுக்கு பிடிக்காமல் போக காரணங்கள் 1. தினமும் தலைக்கு குளிப்பாங்க 2 தாராள மனசு 3.சந்தன நிற தேகம் 4 செழிப்பு 



-------------------------------


9. நீ தீயாய் இருப்பதால்தான் நான் உன்னிடத்தில் வந்ததும் நானாக சாம்பலாகி விடுகின்றேன் :-)  # எ கீ 




-----------------------


10. நீ சத்து + சமத்து , நான் தத்தி + நோ புத்தி 



-----------------------




11. இக்கரைக்கு அக்கரை அழகு # கேரளா



-----------------

12. பியூட்டி பார்லர் போகத்தேவை ஏற்படாத ஒரே பெண் - ஏவாள் # போட்டிக்கு யாரும் இல்லை, தொல்லை இல்லை 



-----------------------



13. ஜட்ஜ் - நீங்க அடிச்சது மொத்தம் 20,000 கோடி, மக்கள்பணம்னு கொஞ்சமாவது எண்ணிப்பார்த்தீங்களா?



  கைதி - கவுண்ட் பண்ணிட்டு இருந்தா அடுத்த கொள்ளை எப்டி அடிக்க?


--------------

14. காவிரி பிரச்சனையில் MGR கவுரவம் பார்க்கவில்லை :: விஜயகாந்த் பேச்சு # சிவாஜி நடிச்ச படத்தை எம் ஜி ஆர் ஏன் பார்க்கனும்?- ஜெ ?



----------


15. குஷ்புவுக்கு கூவத்தின் வரலாறு தெரியாது - ராதாரவி #கழகத்தில் பணிஆற்ற அதன் பூர்வாங்க வரலாறு அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை - மு க



-------------------

இந்த குழந்தைக்கு இருக்கிற அறிவு கூட பக்கத்துக்கு state ஆளுங்களுக்கு இல்ல என் தண்ணி தரமாட்டேன் விடமாட்டேன்னு சொல்றாங்க



16.  கசாப் தூக்கு தண்டனையால் கசாப் கடைக்காரர்கள் பீதி.மட்டன் சிக்கன் தட்டுப்பாடு# சும்மா


-------------------


17. தீண்டாமை ஒரு பாவம்.குற்றம்.வா கண்ணே!நாம் புண்ணியம் சேர்ப்போம்


-------------------


18. மென்மையான மனம் கொண்ட ஆண்கள் ஜீன்ஸ் அணிந்ததும் ஒரு முரட்டுத்தனமான கம்பீரம் அடைகிறார்கள்,


------------------


19. புது டிரஸ் போட்டா அது ஓணம், புதுசோ, பழசோ டிரஸ் எதும் போடலைன்னா அது பூனம் # பூனம் பாண்டே வழுக்குப்பாறைகள்



------------------

20. ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ் #  ஏன்?ஆசிரியர்க்கு தகுதி ஏதும் தேவை இல்லையா?



-----------------
கூடங்குளம் அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரின் வெப்பம்....கடல் நீரின் இயல்பான வெப்பம் 30 டிகிரி யை விட அதிக பட்சமாக 7 டிகிரி மிகாமல் இருக்கும் படி மாசு கட்டுபாடு வாரியத்திற்கு...சென்னை நீதிமன்றம் அறிவுறுத்தல்.

Wednesday, August 29, 2012

The Dirty Picture -வித்யாபாலன் -ன் சில்க் ஸ்மிதா ஸ்டோரி - யூ டியூப் ஓ சி ஃபிலிம்

a http://www.adrasaka.com/2011/12/dirty-picture.html - படத்தின் விமர்சனம் படிக்க

ஈரோடு , சேலம் மாவட்ட மக்களே! உஷார் ! புதிய மோசடிகள் உலா

'ஈமு, நாட்டுக் கோழியைத் தொடர்ந்து அகர் மரம்



ஈமு கோழியை வைத்து ஏமாற்றப்பட்ட அதிர்வலையில் இருந்து மீள்வதற்குள், நாட்டுக் கோழி, ஆடு, கொப்பரைத் தேங்காய், டேட்டா என்ட்ரி என்று வரிசையாகப் புகார்கள் கிளம்பவே, கொங்கு மண்டலம் அதிர்ந்து கிடக்கிறது!



ஈரோடு நசியனூரைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படும், நந்து கொப்பரா பவுல்ட்ரி கேட்டில் ஃபார்ம்ஸ் நிறுவனம் தங்களை ஏமாற்றிவிட்டதாக ஈரோடு, சேலம் மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகங்களில் புகார் கொடுத்தபடி உள்ளனர். இவர்கள் அனைவரும் கொப்பரைத் தேங்காய், நாட்டுக் கோழி, உயர்ரக ஆடு திட்டங்களில் முதலீடு செய்தவர்கள். புகார் கொடுத்தவர்கள் ஏமாந்த தொகை 100 கோடி ரூபாயைத் தாண்டிச் செல்கிறது. கம்பெனியின் எம்.டி. நந்தகுமாரும், அவருக்கு மூளையாகச் செயல்பட்ட ராஜ்குமாரும் தலைமறைவாகி விட்டனர்.




நாட்டுக் கோழித் திட்டத்தில் ஏமாந்த சேலம் இருப்பாலை பகுதியைச் சேர்ந்த தர்மராஜ், ''ஒன்றரை லட்சம் ரூபாய் வைப்பு நிதி செலுத்தினால், 300 நாட்டு கோழிக் குஞ்சுகளைத் தருவார்கள். அவர்களே பண்ணை அமைத்துக் கொடுத்து தீவனம், மருந்து, ஊசி எல்லாம் போடுவதாகவும் சொன்னார்கள். கோழிக் குஞ்சுகளைக் கவனமாக மூன்று மாதம் வளர்த்துக் கொடுத்தால், வாரம்தோறும் 2,500 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகச் சொன்னார்கள். கடன் வாங்கித்தான் ஒன்றரை லட்ச ரூபா கட்டினேன்.


 சொன்னபடியே 300 நாட்டுக் கோழிக் குஞ்சுகளைக் கொடுத்தவங்க, மூன்று வாரங்கள் சம்பளமும் கொடுத்தாங்க. அதுக்குப் பிறகு வரலை. என்னை மாதிரி எங்க ஊரில் மட்டும் பணத்தைக் கட்டி நான்கு பண்ணைகள் போட்டிருக்காங்க. எங்களைப் பார்த்து 20-க்கும் மேற்பட்டவங்க வைப்புத் தொகை கட்டி ரெண்டு மாசமாகுது. அவங்களுக்குக் கோழிக் குஞ்சுகளும் தரலை. ஓமலூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்டவங்க ஏமாந்து இருக்காங்க'' என்றார் கவலையுடன். 




சேலம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்த ராணி, கொப்பரைத் தேங்காய் ஸ்கீமில் பணம் கட்டி ஏமாந்துள்ளார். ''எங்க வீட்டுக்காரர் மூட்டை தூக்கும் தொழிலாளி. நானும் ஏதாவது தொழில் செஞ்சா குடும்பக் கஷ்டம் தீரும்னுதான் இந்த ஸ்கீம்ல சேர்ந்தேன். ஒரு லட்சம் வைப்பு நிதியாகக் கொடுத்தால், வாரா வாரம் வெள்ளிக்கிழமை 4,000 கொப்பரைத் தேங்காய் போடுவாங்க. அதை உறிச்சு, தேங்காயை உடைச்சுக் காயவைச்சுக் கொடுத்தால், வாரத்துக்கு 3,500 ரூபாய் சம்பளம் கொடுப்பதாச் சொன்னாங்க. அதனால், வட்டிக்குக் கடன் வாங்கிப் பணத்தைக் கட்டினோம். ரெண்டு வாரம் தேங்காய் போட்டாங்க. அதுக்குப் பிறகு வரலை. கம்பெனியில் போய் பார்த்தால், பூட்டிக்கிடக்குது'' என்று கண்ணீர் சிந்தினார்.



சேலம் மாவட்டப் பொருளாதாரக் குற்றப் பிரிவுத் துணைக் கண்காணிப்பாளர் கணேசனிடம் பேசியபோது. ''இவர்கள் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் கைவரிசையைக் காட்டி இருக்கிறார்கள். ஈரோட்டில்தான் நிறைய பேர் ஏமாந்து இருக்கிறார்கள். அத்தனை புகார்களையும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கிறோம். விரைவில் அதிரடிகள் அரங்கேறும்'' என்றார்.



ஈரோடு சென்னிமலை தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பொன்னையன், '''பண்ணைக் கோழி வளர்வதற்கு மூன்று மாதங்கள் வரை ஆகும். இந்த மூன்று மாதங்களுக்கும் நிறுவனங்கள் சொல்லும் கணக்குப்படி, செட் அமைத்துக் கொடுத்து தீவனம் தந்து, பராமரிப்புத் தொகையையும் கொடுப்பதாக இருந்தால், அந்த நிறுவனத்துக்கு ஒரு பண்ணைக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். பண்ணை முறையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு பெரிய சந்தையும் கிடையாது. கோழி மற்றும் ஆடு பற்றி நம் மக்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் தங்களுடைய பேராசை காரணமாக ஏமாறுகிறார்கள்.



ஒவ்வொரு நிறுவனமும் தாங்கள் அரசு பதிவு பெற்ற நிறுவனம் என்றும் ஐ.எஸ்.ஓ. தரச் சான்று பெற்றவர்கள் என்றும் கொட்டை எழுத்துகளில் விளம்பரம் செய்கின்றனர். இதை ஏன் கால்நடைத் துறையோ மாவட்ட நிர்வாகமோ கவனிப்பது இல்லை? புகார் வந்தால் நடவடிக்கை எடுப்போம் என்பது தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் கதை. இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க கடுமையான சட்டங்களை அரசு கொண்டுவர வேண்டும்'' என்றார்


.

கால்நடைத் துறை அமைச்சர் சின்னையாவிடம் பேசினோம். ''தனியார் நாட்டுக் கோழிப் பண்ணைகளுக்கு அரசு அங்கீகாரம் எதுவும் வழங்க வில்லை. அரசு அங்கீகாரத்துடன் செயல்படுகிறோம் என்று தனியார் ஒப்பந்தப் பண்ணைகள் கூறினால், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.



இந்தச் சிக்கல்கள் போதாது என்று இப்போது, 'அகர் மரம் வளர்ப்போம்... அரசனாய் வாழ்வோம்!’ என்ற புதிய திட்டம் கொங்கு மண்டலத்தில் பரபரக்கிறது. 'ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால் 200 மரக்கன்றுகளும், ஆறு வருடங்களுக்கு வருட போனஸ் 10 ஆயிரம் ரூபாயும், 6-வது வருட இறுதியில் 10 லட்ச ரூபாயும் கொடுப்போம்’ என்று தூண்டில் போடுகிறார்கள். 'மச்சி இந்த ஸ்கீம் நம்பிக்கையாத் தெரியுதே... பணம் கட்டலாமா?’ என்று ஏமாறத் தயாராகிறது இன்னொரு குரூப்!

நன்றி - ஜு வி

ஓணம் பண்டிகை @ கேரளா - ஒரு பார்வை

http://www.result.dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_81919062138.jpg 

ஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்பாடும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். கொல்லவர்ஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. பருவ மழைக் காலம் முடிந்ததும் எங்கும் பசுமையும் ஈரமும் நிறைந்திருக்கும் கேரளாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் கொண்டாடப்படுகிறது .


கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். இதை கேரளாவின் "அறுவடைத் திருநாள்" என்றும் அழைப்பர். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் துவங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது. ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாகக் கேரளாவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரு முக்கியமான பண்டிகை என (கி.பி 861 தேதியிட்டுக் கிடைத்த தாமிரத்தகட்டில்) ஓணம் பண்டிகை பற்றிப் பொறிக்கப்பட்டுள்ளது.


ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலெ எழுந்து குளிது வழிபாட்டில் ஈடுபடுவர்.கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினால் ஆண கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர். நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்து கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகையின் முதல் நாள் அத்தம் , இரண்டாம் நாள் சித்திரா, மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும்.

http://tamil.sudarnila.com/wp-content/uploads/2012/08/sabari-300x204.jpg

அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர். ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகை செலுத்துவது இதன் சிறப்பம்சம். ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) , ஏழாம் நாள் மூலம். எட்டாம் நாள் பூராடம். ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத்திருவிழா முடிவடைகிறது.



மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும் போது திருமால் வாமணனாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் தந்தான். ஒரு அடியால் இந்த பூமியையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையேக் கொடுத்தான் பலி மகாராஜா.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN7oSt3cE4RS5GjalTbD9xj7-XKxtnpxBldBYvRJT04u67tJvJJMS6hATOzUtesKQSFiGTEVsVQbOFGecVzKp06w1fFVXmiS8fn0MFiPkrlp-Xhpow3MPlmAuRXoZ9-HiSnhkFEbG9BdM/s1600/Onam_Festival_9834_medium.jpg

அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன்தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால். தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் பலி. அதன்படி, ஒவ்வொரு திருவோணதிருநாள் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.


ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவை பறித்துக் கொண்டு வருவர்.



 பூக்கோலத்தில் அதை தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

http://moonramkonam.com/wp-content/uploads/2012/08/oanam-elephant.jpg

கேரள உணவுகள் என்றதுமே, புட்டு, கிழங்கு, பயறு என்பவை நினைவுக்கு வரும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா" என்ற உணவு தயரிக்கப்படுகிறது.


புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கப்படும். பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக " இஞ்சிக்கறி", "இஞ்சிப்புளி" ஆகியவற்றை உணவுடன் எடுதுக் கொள்வர்.


"புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்க்ளி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓனம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.




ஓணம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் "கைகொட்டுக்களி". கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்க்ளைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.




ஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்கு சிறப்பு உணவுகளும்




ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் என 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.


http://www.vikatan.com/news/images/onam.jpg
கேரளாவின் ஓணம் பண்டிகையைப் போன்றே ஒரு பூத்திருவிழா தாய்லாந்து மக்களால் கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் அணிந்து, வீட்டைப் பூக்களால் அலங்கரித்து பல வகையான உணவு வகைகளை சமைத்து உண்டு மகிழ்வர். பூக்களால் ஆன வண்டிகளில் ஊர்வலம் நடைபெறும்.



நாகர்கோவில்: ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட் களைகட்டியுள்ளது.


கேரள மக்கள்  திருவோணம் பண்டிகை கொண்டாடுகின்றனர். ஓணம் அன்று அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிடுவது வழக்கம். இதனால் ஓணம் என்றாலே பூ விற்பனை சூடுபிடிக்கும். அதிலும் குமரி மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து பூ வாங்கிச் செல்ல கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவார்கள்.



ஓணம் பண்டிகை கொண்டாடவிருப்பதையடுத்து  காலை முதலே தோவாளை பூ மார்க்கெட்டில் திரும்பும் திசையெல்லாம் கேரள வியாபாரிகள் கூட்டம் தான். கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது தோவாளை மார்க்கெட்டில் பூக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டு அப்படி எதுவும் நடக்காமல் இருக்க தர்மபுரி, சத்தியமங்கலம், ஒசூர் பகுதிகளில் இருந்து ஏராளமான லாரிகளில் பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் நேற்று மார்க்கெட்டில் பூக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் இருந்தது.\

http://tamil.boldsky.com/img/2012/08/28-ela-ada-recipe-300.jpg

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின்போது ரூ.2000க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பிச்சிப்பூவின் இன்றைய விலை ரூ.750 ஆகும்.



தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் இன்றைய விலை(1 கிலோ)



மல்லிகைப் பூ - ரூ.700
வாடாமல்லி - ரூ. 50
கேந்தி - ரூ.30
சம்பங்கி - ரூ.200
கோழிப்பூ - ரூ. 25



ஓணம் என்றால் அத்தப்பூக்கோலம் தவிர அறுசுவை விருந்தும் உண்டு. விருந்துக்கு தேவையான காய்கறிகளை கேரள வியாபாரிகள் தமிழகத்தில் இருந்து தான் வாங்கிச் செல்கின்றனர்.



ஓணம் வ்ந்தாலே நாகர்கோவில் அப்டா மார்க்கெட், வடசேரி கனக மூலம் சந்தை, பஞ்சலிங்கபுரம் சந்தை, மார்த்தாண்டம் காய்கறி சந்தை, தக்கலை வாழைத்தார் சந்தை,குலசேகரம் காய்கறி சந்தை ஆகியவற்றில் வியாபாரம் சூடுபிடித்துவிடும். நேற்று காலை முதல் இந்த சந்தைகளுக்கும் கேரள வியாபாரிகள் படையெடுத்தனர்.
http://suriyantv.com/wp-content/uploads/2012/04/4-6-2012-5-the-10-day-annual-festival-of.jpg


கதளி, ரஸ்தாளி, பச்சை வாழை, செவ்வாழை பழத்தார் ஒன்று ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. ஆனால் வாழை இலைக்கு தான் கடும் தட்டுப்பாடாக இருந்தது. அதனால் ஒரு வாழை இலை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்பட்டது. பண்டிகை அன்று வாழை இலையில் விருந்து உண்பது தான் சிறப்பு என்பதால் அதிக விலை கொடுத்து வாழை இலைகளை வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.



மேலும் வெள்ளரிக்காய், சேனை, பூசணிக்காய், தடியங்காய், சீனி அவரைக்காய், முள்ளங்கி, முட்டைக் கோஸ், காலி பிளவர், உருளைக்கிழங்கு போன்றவையும் இன்று அதிக விலைக்கு விற்கப்பட்டன.


நன்றி - விக்கி பீடியா, கூகுள், அமஸ் மேடம்

BSNL நிறுவனத்தின் கணிணி மோசடி , பொது மக்கள் அதிர்ச்சி

http://chennai.bsnl.co.in/News/netone221108.jpgபி.எஸ்.என்.எல். நடத்திய கம்ப்யூட்டர் சீட்டிங்!''



மாட்டிக்கொண்ட திண்டுக்கல் மக்கள்



'ஒன்பதாயிரம் ரூபாய் பணம் செலுத்தினால் இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர் தருவதாக விளம்பரம் செய்தனர். அதை நம்பிப் பணம் செலுத்திய எங்களுக்குப் பட்டை நாமம் சாத்திவிட்டனர்’ என்று, வாயிலும் வயிற் றிலும் அடித்துக்கொள்கின்றனர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மலைக் கிராம மக்கள். அவர்களை ஏமாற்றியது ஏதோ ஒரு தனியார் நிறுவனம் அல்ல... பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். என்பதுதான் அதிர்ச்சி!



பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வல்லரசு விடம் பேசினோம். இவர், கொடைக்கானலில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள மண்ணவனூரில் செல்போன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். ''நான் செய்யும் தொழிலுக்கு கம்ப்யூட்டருடன் நெட் கனெக்ஷன் இருந்தால்தான் தொழில் போட்டியைச் சமாளிக்க முடியும். அதனால், கம்ப்யூட்டர் வாங்க ஆசைப்பட்டேன்.

 அப்போது, கொடைக்கானல் டெலிபோன் ஆபீஸில் (பி.எஸ்.என்.எல். அலுவலகம்) 'ஒன்பதாயிரம் ரூபாய் செலுத்தினால், கம்ப்யூட்டருடன் நெட் கனெக்ஷன் கொடுக்கப்படும். இந்தச் சேவையை பி.எஸ்.என்.எல். மற்றும் அமரன் அசோசியேட் நிறுவனம் இணைந்து தருகிறது. தேவைக்கு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இருக்கும் அமரன் அசோசியேட் நிறுவனத்தாரைத் தொடர்பு கொள்ளவும்’ என்று விளம்பரம் செய்து இருந்தனர்.




குறைந்த பணத்தில் கம்ப்யூட்டரும் நெட் இணைப்பும் கிடைக்கிறது என்ற ஆசையில் என்னைப் போல பலர் பணம் கட்டினோம். வில்போன் இணைப்புக்கு 500 ரூபாய் தனியாகக் கட்ட வேண்டும் என்று சொன்னார்கள். அதையும் கட்டினோம். மூன்று நாட்களில் போன் இணைப்பு வந்தது. இரண்டு நாட்கள் கழித்து போனில் பேசிய அமரன் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், 'ஒரு வாரத்தில் உங்கள் வீடு தேடி கம்ப்யூட்டர், மோடம் வந்து சேரும்’ என்றார். ஒரு வாரம் கழித்தும் யாரும் வரவில்லை. மலைப் பகுதி என்பதால் தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன். அடுத்த ஒரு வாரத்துக்குப் பிறகும் வராததால், அமரன் அசோசியேட் நிறுவனத்தாரின் மொபைல் நம்பர்களில் தொடர்புகொண்டேன். அனைவரது போன்களும் சுவிட்ச்ஆஃப் செய்யப்பட்டு இருந்தன.

http://chennai.bsnl.co.in/News/Instn_En.jpg


அப்போது. வில்போன் நம்பரில் பேசிய தேவி என்பவர் 'அமரன் அசோசியேட் மதுரைக் கிளையில் இருந்து பேசுகிறோம். நிர்வாகம் மாறிவிட்டது. நாங்கள்தான் உங்களுக்கு கம்ப்யூட்டர் கொடுக்கப்போகிறோம். இரண்டு நாட்களில் உங்களைச் சந்திக்கிறோம்’ என்றார். அவரும் பேசியதோடு சரி... ஆறு மாதங்களாகியும் கம்ப்யூட்டர் வரவில்லை.



'உங்களை நம்பித்தானே பணம் கட்டினோம்’ என்று கொடைக்கானல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கேட்டோம். 'எங்களுக்கு எதுவும் தெரியாது. வத்தலக்குண்டு டி.இ-யை சந்தியுங்கள்’ என்றனர். அவரைச் சந்தித்துக் கேட்டால், 'இது மத்திய அரசின் திட் டம். எங்களுக்கு எதுவும் தெரியாது. உங்களைப்போல நூற்றுக்கணக்கானோர் எங்களிடம் வந்து பணம் கேட் கிறார்கள். உங்கள் புகாரைக் கொடுங்கள். நாங்கள் சென்னை அலுவலகத்துக்கு அனுப்புகிறோம்’ என்று பொறுப்பே இல்லாமல் பதில் சொன்னார்.



மதுரையில் தெற்கு ஆவணி மூல வீதியில் இயங்கிய அமரன் அசோசியேட் அலுவலகத்தைக் கண்டுபிடித் தோம். 'இங்கு ஆபீஸ் இருந்தது உண்மைதான். அதைக் காலிசெய்து ஆறு மாசமாச்சு’ என அருகில் உள்ளவர்கள் சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் முதல்வர் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் புகார் அனுப்பிவிட்டுக் காத்திருக் கிறோம். எந்த நடவடிக்கையும் இல்லை'' என வருத்தத்தைக் கொட்டினார்.



பி.எஸ்.என்.எல். தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் பேசினோம். ''ஆறு வருடங்களுக்கு முன் தனியார் ஒத்துழைப்புடன் அந்தத் திட்டத்தை அறிமுகப் படுத்தினர். தொழில்நுட்பக் குறைபாடுகளால் அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. அந்தத் திட்டத்தில் பணம் கட்டிப் பலரும் ஏமாந்தனர். இந்தத் திட்டத்தில் அதிக அளவுக்கு மோசடி வடகிழக்கு மாநிலங்களில்தான் நடந்துள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இந்த மோசடி அதிகம் நடந்துள்ளது. அரசியல்வாதிகளுக்கு வேண்டப்பட்டவர்கள் ஏதாவது ஒரு திட்டத்தைப் போட்டு இப்படி மோசடிக்கு வழிவகுக்கிறார்கள். அலுவலர்களான எங்களால் இதைத் தடுக்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவோ முடியவில்லை. ஏன், ஒழுங்கான பதிலைக்கூட சொல்ல முடியவில்லை'' என்று வருத்தப்பட்டனர்.



வத்தலக்குண்டு டி.இ.விசாலாட்சியிடம் பேசினோம். ''இந்தத் திட்டம் மத்திய அரசின் திட்டம். பாதிக்கப்பட்டவர்களின் புகார் குறித்து சென்னைக்குத் தகவல் கொடுத்துள்ளோம். அமரன் அசோசியேட் நிறுவனத்தார் சிலருக்கு செக் கொடுத்தும், அது பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் பி.எஸ்.என்.எல். மீதும் வழக்கு தொடுத்துள்ளனர்'' என்றார்.

http://telecomtalk.info/wp-content/uploads/2010/06/BSNL-Ties-Up-With-Indian-Railways-to-Promote-3G-Services.jpg



இதுகுறித்து தொலைத் தொடர்புத் துறை ஊழல் தடுப்புப் பிரிவு தலைமை பொது மேலாளர் ஜெயராமனிடம் பேசினோம் ''இப்படி ஒரு மோசடி நீங்கள் சொல்லித்தான் என் கவனத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.



இதுவரை அரசு நிர்வாகம் மீது நம்பிக்கையுடன் இருந்தவர்கள் இப்போதுதான் போலீஸில் புகார் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். இனியாவது இவர்களுக்கு விடியட்டும்!


நன்றி - ஜூ வி




http://chennai.bsnl.co.in/homeimgs/megastu_100908.jpg

அஜித் வஞ்சிக்கோட்டை வாலிபன் -ன் ரீ மேக்கில்.........

1.மேலே இருந்து தெய்வம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது - கேப்டன் # யார் அந்த தெய்வம்? பேரு பிரேமலதாவா? 



---------------------


2. பையன் தப்பு செய்தால்,அவனுடைய அப்பாவை தண்டிக்க வேண்டும்-சந்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் # கலைஞர் மேல் அப்படி என்ன காண்டு? 



---------------------


3/ கருத்துக்களை மட்டும் சொல். பின்பற்றாதே.சாலையில் செல்லும் சேலைகளை பார், வீடு வரை பின் தொடராதே! 




----------------------

4. கிளாமரை வெளிக்காட்ட தெரியவில்லை என்பதால் சில நடிகைகளிடம் கிளாமர் இல்லை என்பதில்லை! 



----------


5. அவிவா இன்சூரன்ஸ் கம்பெனில இருந்து ஒரு எஸ் எம் எஸ்.எங்க கம்பெனி பேரை சொல்லி வரும் எந்த எஸ் எம் எஸ்ஸையும் நம்பாதேனு.அப்போ இதை? 



---------------------






6. 4 சுவர் சூழ் அறை நித்திரை நகர நரகம்.மொட்டை மாடி வானம் பார்த்த தூக்கம் கிராமத்து சுவர்க்கம் 




-------------------------


7. என்னை பிடிச்சிருக்கா? என்றேன். பிடிச்சிடுமோன்னு பயம் பிடிச்சிருக்கு என்றாள்.அவள் பதில் புரியலை.ஆனா பிடிச்சிருக்கு 




----------------------


8. என் மவுனம் 1000 பதில்களை விட சிறந்தது-பிரதமர் # ம்க்கும்.இதை சொல்லாம மவுனமா இருந்தே அதை உணர்த்தி இருக்கலாம் 



---------------------


9. காதலிக்கையில் மதி முகமாய் தெரிபவள், கல்யாணத்துக்குப்பின் நம்மை மதிக்காத முகமாய் இருப்பாள் # காதல் திருமண விதிகள்



---------------------

10. 4 நண்பர்கள் சேர்ந்து இருக்கும் காட்சிகள் என்றால் குடிக்கும் காட்சியை சேர்க்கும் பழக்கத்தை கோடம்பாக்கம் இயக்குநர்கள் முட்டாள்தனமா ஃபாலோ



-------------------------------





11. விடுமுறை நாட்களில் வீட்டில் டிஃபன் பூரி என்றால் மனம் ”பூரி”த்து விடுகிறது ;-0



----------------------


12. உன்  வீட்டு சமையல் அறையில் மனைவிக்கு நீ எடுபுடியா? கெடுபுடியா?



-----------


13. என் சம்சாரத்தை நான் எப்பவும் மதிப்பதே இல்லை  # காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை



----------------


14. டீச்சர் - பனியாரம் -2 சுழி ன-வா? 3 சுழி ண வா?




 லொள் மாணவன் - சின்னப்பனியாரம்னா 2 சுழி ன பெரிய பனியாரம்னா  3 சுழி ண


---------------------




15. டியர், நீ சுடியில் தான் அழகு, சேலை அணியும்போது சேலை கொசுவ மடிப்பை என்னை மடித்து விட சொல்வதால்






------------





16. வஞ்சிக்கோட்டை வாலிபன் அஜித் நடித்து ரீ மேக் செய்யப்பட்டால் “ வஞ்சி கோட்  , “டை ”  வாலி   பன்





---------------------


17. அத்தான், நான் அழகா இருக்கேனா?



 கமல் ரசிகன் - இல்லைன்னு சொல்லலை, ஆனா அழகா இருந்தா நல்லாருக்கும்



-----------------



18. மனைவியை மதிக்காதவர்கள் கூட  சில தருணங்களில் “ எதுக்கும் வீட்ல ஒரு வார்த்தை கேட்டு சொல்றேன்” என சொல்வதுண்டு



------------


19. கையை வெச்சுக்கிட்டு சும்மா இருடா = எங்கே இப்போ உன் கை யை  வெச்சு இருக்கியோ அப்படியே அதே லொக்கேஷன்ல கையை வெச்சுக்கிட்டு சும்மா இரு



------

20.கேட்காமல் உதவி செய்தால் நீ உயர்ந்த ஜாதி, கேட்டும் உதவி செய்யவில்லை என்றால் நீ தாழ்ந்த ஜாதி






-------------------

தின இதழ் கண்ணன் shared Bala Murugan's photo.

Tuesday, August 28, 2012

THE EXPENDABLES 2 - ஹாலிவுட் சினிமா விமர்சனம்

http://collider.com/wp-content/uploads/the-expendables-2-poster2.jpgகிரானைட் மோசடி வேலூர்ல நடந்த மாதிரி ப்ளூட்டோனிய மோசடி நடக்குது. அதாவது வில்லன் 5 டன் ப்ளூட்டோனியம் இருக்கும் ஒரு சுரங்கத்தை கண்டு பிடிக்கறான்.( ஒரு கிலோ = 3 பில்லியன் டாலர் ரேட்) அதை வெட்டி எடுக்க அக்கம் பக்க அப்பாவி கிராம மக்களை யூஸ் பண்ணிக்கறான். ஹீரோ அண்ட் கோ  அதை எப்படி முறியடிக்கறாங்க என்பதுதான் கதை. ரொம்ப மொக்கையான படம்.


ஆர்னால்டு ஸ்வார்செனேகர், ஜெட் லீ , ஜீன் க்ளாடு வேண்டம், சில்வர்ஸ்டோலன்,சக் நாரீஸ், ட்ரான்ஸ்போர்ட்டர் ஹீரோ என ஏகப்பட்ட பிரபலங்கள். பொதுவா  இந்த மாதிரி 2க்கும் மேற்பட்ட பிரபல ஹீரோக்கள் இருந்தா படம் ஊத்திக்கும் என்று பொதுவான சினிமா லா உள்ளது.அது மேலும் ஒரு முறை ப்ரூஃப் ஆகி இருக்கு. 



சில்வர்ஸ்டோலன் ரொம்ப பரிதாபமா இருக்கார்.. கோச்சடையான் ரஜினி மாதிரி பார்க்கவே ரொம்ப சோகமா இருக்கு.. பொதுவா இந்த மாதிரி கலக்கல் ஹீரோஸ் ஒரு ஸ்டேஜ்க்குப்பிறகு வி ஆர் எஸ் வாங்கி விடுவது  நல்லது. கலைஞர் மாதிரி உயிர் இருக்கும் வரை ஃபீல்டில் தான் இருப்பேன்னு எல்லாம் அடம் பிடிக்கக்கூடாது. நமக்கு ஒத்து வர்லைன்னு தெரிஞ்சதும் ஒதுங்கின கார்த்திக் மாதிரி எல்லாரும் இருக்கனும்.


அர்னால்டு கமாண்டோ படம் பார்த்தப்போ எப்படி இருந்தார்? இதுல தனுஷ் கணக்கா இருக்கார்., அய்யோ பாவம்


ஹீரோயின் ஒரு மொக்கை ஃபிகர் கம் சப்ப ஃபிகர். ஒரு மொக்கைப்படத்துக்கு ஹீரோயினும் மொக்கையாவே இருக்கட்டும்னு முடிவு பண்ணிட்டாங்க போல.




http://collider.com/wp-content/uploads/expendables-2-movie-poster-yu-nan.jpg
மனம் கவர்ந்த வசனங்கள்



1. உலகத்துல மனிதத்தன்மையே  இல்லாம போச்சோன்னு எனக்கு தோண ஆரம்பிச்சிருக்கு 


2. அவனை மாதிரி என்னாலயும் ஓட முடியும்



ம்க்கும், குனிஞ்சு பாரு, உன் கால் கட்டை விரல் தெரியுதா? இல்லை இல்ல? அப்போ தொப்பை ஜாஸ்தின்னு அர்த்தம்..  உன்னால ஓட முடியாது, பெட் கட்டறியா? 


 வேணாம், நான் முக்கியமான ஃபோன் பேச வேண்டி இருக்கு.. 



3. மரியாதை ரொம்ப முக்கியம்,.,. மரியாதை இல்லாத மனுஷன் மண்ணுக்கு சமம்.


4. போராளிகளை மதிக்கிறேன், ஆனா ஆடு மாதிரி பலி கொடுக்க விரும்பலை


5. டியர் ! உன்னை பிரிஞ்சு இருக்கறதைத்தவிர உனக்கு ஏதாவது நல்லது செய்யனும்னு நினைக்கிறேன் ஆனா முடியலை


6.  வாழ்க்கையை நல்லா வாழனும்னு நினைக்கற இளைஞன் இங்கே செத்துக்கிடக்கறான், சாக வேண்டியவன் ஜாலியா இருக்கான்.. வாழ்வின் புரியாத வினோதம் இது.


7. இவருக்கு ரொம்ப முடியல.. ஓய்வு தேவையாம்..


 டுமீல்


 வேற யாருக்காவது உடம்பு முடியாம இருந்தா இப்பவே சொல்லுங்க, சொர்க்கத்துக்கு பார்சல் பண்ணிடலாம்


8. பழக்கப்படாத பொருளை சாப்பிடுவது தற்கொலைக்கு சமம்


9. ஹீரோயின் - எனக்கு இத்தாலியன் ஃபுட் ரொம்ப பிடிக்கும்



 விட்டா இத்தாலியனை கடிச்சே சாப்ட்ருவா போல


10. எப்போ பார்த்தாலும் நீ ஏன்  சோகமாவே இருக்கே?


பிரச்சனையை விட்டு தள்ளி இருக்க ஆசைப்படறேன்.



http://www.nzwomansweekly.co.nz/wp-content/uploads/2012/08/Arnold-Schwarzenegger.jpg


11. அவளைப்பற்றி நீ இன்னும் நினைச்சுட்டு இருக்கியா?


 யா


 ஆனா  அவளைப்பற்றி நீ எப்போதும் ஏதும் பேசுனதே இல்லையே?


அவளைப்பற்றி பேசுனாலோ நினைக்கறதாலோ எதையும் ,மாத்திட முடியாது



12. கேட்டாலும் கிடைக்காதுன்னு தெரியும், ஆனாலும் கேட்கறேன், எனக்கு ஒரு காபி கிடைக்குமா?



13. ஹாய்! நீ இறந்துட்டதா யாரோ சொன்னாங்க?



என் கிட்டேயும் அப்படித்தான் சொன்னாங்க.



14. கிங்க் கோப்ரா கடிச்சு செத்துட்டதா கேள்விப்பட்டேன்


 ஆமா, ஆனா செத்தது அந்த கிங்க் கோப்ரா தான், நான் அல்ல, 5 நாள் வலி தாங்காம துடிச்சு அப்புறம் செத்துடுச்சு



15. நாம எல்லாரும் துப்பாக்கி முனைல தான் இருக்கோம், ஆனாலும் ஆபத்து இல்லை, ஏன்னா இங்கே யாருக்கும் சுடத்தெரியாது போல



16. உனக்குப்பேராசை


 உனக்கு ஆசை இல்லை?


 உன் ஆசை டைனோசர் மாதிரி, ரொம்ப பெருசு


17.  கேட்கறேனேன்னு தப்பா நினைக்காதே, நாம எல்லாரும் சாகாம இங்கே இருந்து தப்பிக்க ஏதாவது வழி  இருக்கா?



 அதான் நானும் யோசிக்கறேன்


18. யாராவது வெடி மருந்து இருந்தா குடுங்க



 ஆமா, கெமிக்கல் எஞ்சிடியர் கேட்டுட்டாரு, கொடுத்துடுங்கப்பா.


19. அர்னால்ட் - ( நானோ காரை விட 3 மடங்கு சின்ன காரை பார்த்து ) - என் ஷூ சைசை விட இந்த கார் சைஸ் சின்னதா இருக்கே?


20. நீ இங்கே என்ன பண்றே?



இங்கே ஒரு பார்ட்டி நடக்கறதா சொன்னாங்க , நீ என்ன என்னை கூப்பிடவே இல்லை. நீ ஒரு சுயநல வாதி



21. வில்லன் - என்னை பயங்கரமா அடிக்கனும்னு தோணுமே?



உன்னை அடிக்கறதை விட அழிக்கறதுதான் முக்கியம்


22. என்னை எப்படி கொல்லப்போறே? வீரனாவா? ஆட்டுக்குட்டி மாதிரியா?


23. நீ நிஜமாவே அவனை கொன்னுட்டியா?


 நீ சந்தேகப்படுவேனு தெரியும்,அதான் பேக்ல தலையோட வந்திருக்கேன்.

 பின்னிட்டே..


 எங்கே? அதான் ஒட்ட வெட்டியாச்சே?



24. நான் உனக்கு கிடைச்சது உன் லக்.


 அப்டினு நீயா நினைச்சுக்கிட்டா அது உன் தப்பு


 என் உதவி தேவைப்பட்டா என்னை உடனே கூப்பிடு, இல்லைன்னா உதைப்பேன்



25. என் மனசு எவ்ளவ் பழமையை விரும்புது தெரியுமா?


 மியூசியத்துல வைக்கத்தான் லாயக்கு.



26. நான் உன் கிட்டே ஒண்ணே ஒண்ணு சொல்லனும்.. கோபப்படமாட்டியே?

 இல்ல, சொல்லு..

 கொஞ்சம் சிரியேன், உன் முகம் சிரிக்காம இருந்தா கன்றாவியா இருக்கு



http://media.lehighvalleylive.com/entertainment-general_impact/photo/the-expendables-2-399cdce1b28fa616.jpg



 தியேட்டரில் அப்ளாஸ் வாங்கிய இடங்கள்



1. ஹீரோவோட குரூப் ஆளை வில்லன் துப்பாக்கி முனைல வெச்சு மிரட்டி எல்லாரையும் பணிய வைக்கும் சீன்.. அது முடிஞ்சதும்  வில்லன் ஒரு பெரிய பிச்சுவா க்கத்தியை தன் அடியாளிடம் கொடுத்து ஹீரோவின் நண்பன் மார்புக்கு நேர் அதை பிடிக்க வைத்து ஒரு கிக் பை லெக்.. செம ஷாட்..



2. சர்ச்சுக்குள் நடக்கும் அந்த விலா வாரியான ஃபைட் கலக்கல்..  கேப்பே விடாம யார் யாரை அடிக்கறாங்க என்ற குழப்பத்தை மறக்கடிக்கும் ஸ்டண்ட் உத்தி


3. ஹீரோவுக்கும், வில்லனுக்கும் நடக்கும் க்ளைமாக்ஸ் ஃபைட்..


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6Lf7d59powVGO3OzjGhggGVKBY0DpwJTvq9rjGZrMk9tTqy56MokpMIiaXvMW__vQOvEP4PfmME8g9JzwBJamV96cmrbk_DW6nIvQjaXLP7CItrO-a82CCdBaECY-_Ou8wU1orw-dVFo/s1600/the-expendables-2-movie.jpg



 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஹீரோ அண்ட் அவர் குரூப்க்கு இடையே நடக்கும் சம்பாஷைணைகள் மேடை நாடகம் பார்ப்பது போல் இருக்கு


2. வில்லன் குரூப்  வாய்ப்பு இருந்தும் ஹீரோ குரூப்பை முழுசும் கொல்லாம ஒருத்தனை மட்டும் கொன்னுட்டு போறாங்க.. பழி வாங்க வருவாங்கன்னு தெரியாதா?


3. கிரானைட் மாதிரி வெயிட் உள்ள பொருட்களை தூக்க குழந்தைகளை வேலையில் அமர்த்துவது எப்படி? அதென்ன சிவகாசி தீப்பெட்டித்தொழிற்சாலையில் தீக்குச்சி அடுக்கும் வேலையா?


4. ஹீரோயின் செலக்‌ஷன் படு கேவலம்.. அவங்க தான் ஃபைனான்ஸா?


5. பல இடங்களில் செட்டிங்க் போட்டு எடுத்திருப்பது நல்லாத் தெரியுது.. ஆர்ட் டைரக்‌ஷன் மகா மட்டம்.




சி.பி கமெண்ட் - டி வி ல போடும்போது பார்த்துக்கலாம், படு மொக்கையான இந்தப்படத்தை ஈரோடு வி எஸ் பில பார்த்தேன்.


http://www.radaronline.com/sites/radaronline.com/files/photos/image_20120816/82474PCN_Expendables05.jpg

இந்தியாவில் பரவும் வி ஐ பி கலாச்சாரம் - ஓ பக்கங்கள் ஞானி @ கல்கி

ஓ பக்கங்கள்

விலாஸ்ராவ் என்ற வி.ஐ.பி. நோயாளி!

ஞாநி


நிறைய பேர் என்னை ஒரு வி.ஐ.பி என்று கருதுகிறார்கள். பத்திரிகைகளில் எழுதுவதால், டி.வி.களில் தோன்றுவதால், பரவலாகப் பலருக்கு என் முகம் பரிச்சயமாகியிருப்பதால், நான் ஒரு வி.ஐ.பி. என்று அவர்கள் நினைக்கிறார்கள்.


வி.ஐ.பி. என்ற ஜாதியே இந்தியாவுக்கே உரியது. மேலை சமூகத்தில் அதை ஏறத்தாழ ஒழித்துவிட்டார்கள். எல்லோரும் சமம்.



வி.ஐ.பி. என்றால் என்ன அர்த்தம்? எல்லா பொது இடங்களிலும் முன்னுரிமை, சலுகைகளுக்கு உரியவர் என்றே இங்கே அர்த்தம். ஏர்-போர்ட்டில் ஒருமுறை லிஃப்டுக்காகக் காத்திருந்தபோது பார்த்தேன். இன்னும் சிலர் இருந்தார்கள். ஒரு சினிமாப் பாட்டு சக்கரவர்த்தி வந்ததும் எல்லோரும் ஒதுங்கி அவர் முதலில் லிஃப்டுக்குச் செல்ல வழிவிட்டு விட்டார்கள். இப்படிப்பட்ட முன்னுரிமைகளைப் பெற குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், உடற்குறையுடையோர் தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை என்பதே என் கருத்து.



நான் அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்கிறேன். பரிசோதனை நிலையங்களுக்குப் போகிறேன். டோக்கன் வரிசைப்படி என் முறைக்காகக் காத்திருக்கிறேன். நான் ஐந்நூறு ரூபாய் பீஸ் கொடுக்கும் டாக்டரைச் சந்திக்க இரண்டு மணி நேரமெல்லாம் வரிசையில் காத்திருந்திருக்கிறேன். காத்திருக்கும் மற்றவர்களும் அதே பீஸ்தான் கொடுக்கிறார்கள். அவர்களும் காத்திருக்கிறார்கள்.



க்யூவில் நிற்காமல் முன்னே செல்லும் உரிமையுடையவர் வி.ஐ.பி. என்பது நம் சமூகத்தில் நிலவும் கிறுக்குத்தனம். இதை வோட்டுச் சாவடியிலிருந்து ஏர்-போர்ட் வரை எங்கேயும் பார்க்கலாம். தங்கள் முறை வருவதற்காகக் காத்திருக்கக் கூட முடியாத நிலை ஒரு வி.ஐ.பி.க்கு என்ன தான் இருக்க முடியும்? மலம் கழிக்கும் அவசரத்தைத் தவிர வேறெதற்கும் இந்தச் சலுகையைத் தரமுடியாது.



வி.ஐ.பி.யின் நேரம் பொன்னானது. அந்த நேரத்தில் அவர் சமூக மேம்பாட்டுக்காக உழைப்பது வீணாகிவிடும் என்றெல்லாம் கற்பனையாகச் சொல்லப்படுகின்றன. இந்த வி.ஐ.பி. கலாசாரத்தை எல்லா இடங்களிலும் நிச்சயம் ஒழித்துக் கட்டவேண்டும்.



குறிப்பாக மருத்துவத் துறையில் ஒழித்துக்கட்ட வேண்டியிருக்கிறது. வி.ஐ.பி.களால் சாதாரண மனிதர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல. சுமார் 29 வருடங்களுக்கு முன்னால் என் அம்மா ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் அதிகாலையில் இறந்துபோனார். அந்த வார்டுக்குப் பக்கத்து வார்டில் ஒரு முன்னாள் அமைச்சர் சாவதற்கு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். என் அம்மா இறந்த உடனே மருத்துவமனை ஊழியர்கள் அடுத்த நிமிடமே பிணத்தை எடுத்துக் கொண்டு ஓடும்படி என்னைத் துரத்தினார்கள். காரணம் செத்துக் கொண்டிருக்கும் வி.ஐ.பி.யைப் பார்க்க சாகப் போகும் சில வி.ஐ.பி.கள் அடுத்த சில நிமிடங்களில் வந்துவிடுவார்களாம். அப்போது வார்டில் பிணம் இருக்கக்கூடாதாம். மாடியிலிருந்து அம்மாவின் உடலைக் கீழே எடுத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் கேட்டேன். வரவில்லை. அம்மாவின் உடலை என் இரு கைகளில் ஏந்திக் கொண்டு படிகளில் இறங்கி வெளியே வந்தேன். நான் வெளியேறவும் வி.ஐ.பி.களின் கார்கள் நுழையவும் சரியாக இருந்தது!




சிகிச்சையில் ஒரு வி.ஐ.பி.க்கு முன்னுரிமை உண்டா என்ற கேள்வி இந்த வாரம் மனத்தில் அலைமோதியது. காரணம் மத்திய அமைச்சரும் முன்னாள் மராட்டிய முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக்தான்.



மரணப்படுக்கையில் இருந்த விலாஸ்ராவுக்கு கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் முழுக்கக் கெட்டுவிட்டன. அவற்றை உறுப்பு தானமாக வாங்கி அவருக்குப் பொருத்தி அவரைக் காப்பாற்ற முடியுமா என்று அவர் குடும்பத்தினர் முயற்சி செய்தார்கள்.



உறுப்பு தானத்தில்தான் வி.ஐ.பி. பிரச்னை நுழைகிறது. இந்தியாவில் உறுப்பு தானம் செய்பவர்கள் மிகக் குறைவு. மூளைச் சாவு ஏற்பட்டதும் உறவினர் சம்மதத்துடன் ஒருவரின் உறுப்புகளை எடுத்துப் பயன்படுத்த அனுமதிக்கும் சட்டமே நம் நாட்டில் தாமதமாகத்தான் வந்தது.



எப்போதுமே தேவைப்படும் உறுப்புகளின் எண்ணிக்கையை விட, கிடைக்கும் உறுப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். எனவே உறுப்பு பொருத்தப்பட வேண்டிக் காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உறுப்பு கிடைக்கக் கிடைக்க வரிசைப்படி அளிக்கப்படுகிறது. இதுதான் தமிழ்நாடு உட்பட எல்லா மாநிலங்களிலும் பின்பற்றும் நடைமுறை.



விலாஸ்ராவ் இந்தப் பட்டியலில் முதலில் இருக்க வாய்ப்பே இல்லை. அவருக்கு முன்பே பலர் காத்திருந்தார்கள். ஆனால் விதிகளை வளைத்து விலாஸ்ராவுக்கு ஒரு கல்லீரலையும் சிறுநீரகத்தையும் பெற்றுவிடமுடியுமா என்று கொஞ்சம் முயற்சிகள் நடந்திருக்கின்றன.



காத்திருப்போரில் யாருக்கு முன்னுரிமை தருவது என்பதற்கு ஒரு நடைமுறை இருக்கிறது. திடீரென உடல்நலம் குலைந்து உடனடியாக மாற்று உறுப்பு பொருத்தப்படாவிட்டால் இறந்துவிடும் ஆபத்தான நிலையில் இருப்பவரை அக்யூட் நோயாளி என்று சொல்வார்கள். இவர்களிலும் மிக அவசர நிலையில் இருக்கும் சிலரே முன்னுரிமைக்கு உரியவர்கள். நீண்ட காலமாக உடலின் ஒவ்வொரு பாகமாகப் பழுதடைந்து மெல்ல மெல்லச் சீர்குலைந்து வந்த நிலையில் இருப்போர் க்ரானிக் எனப்படுவர். இவர்கள் முன்னுரிமைக்கு உரியவர்கள் அல்ல.




விலாஸ்ராவ் தேஷ்முக்கின் கல்லீரல் பழுதாகி, பல காலம் ஆயிற்று. அதன்பின் அதில் புற்றுநோயும் ஏற்பட்டது. அவரது சிறுநீரகங்கள் பழுதடைந்தன. அவர் க்ரானிக் நோயாளி நிலையில் இருந்தவர்.



வி.ஐ.பி. என்பதற்காக அவருக்கு முன்னுரிமை தர மாற்று உறுப்புகள் தொடர்பான சட்டங்களில் ஒரு வழியும் கிடையாது. அவ்வளவு ஏன், இந்தியாவின் எந்தச் சட்டத்திலும் வி.ஐ.பி. என்ற வரையறையோ, யாருக்கும் சலுகையோ கிடையாது.



எனவே விலாஸ்ராவை க்ரானிக் கேட்டகரியில் இல்லாமல், ஹைப்பர் அல்ட்ரா க்ரிட்டிகல் கேஸ் என்று அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை அறிவித்தது. அந்த முன்னுரிமை பெற்றும் கூட, இன்னமும் அறுவைச் சிகிச்சைக்குத் தயாராக இல்லாத நிலையிலேயே அவர் காலமாகிவிட்டார்.



மும்பையில் கல்லீரல் பெற இயலாத நிலையில் அவரை சென்னைக்குக் கொண்டு வந்து இங்கே விதியை வளைக்க ஏதேனும் செய்யமுடியுமா என்ற முயற்சி நடந்திருக்கிறது. இங்கேயும் சிரமம் என்ற போது மறுபடியும் மும்பையில் முயற்சித்தார்கள். உறுப்பு தான விதிகளின்படி வி.ஐ.பி. என்று யாரும் இல்லை. எனவே அவரை வி.ஐ.பி. யாகக் கருதி முன்னுரிமை தந்து உறுப்பை ஒதுக்கீடு செய்யமுடியாது என்று மும்பையில் சொல்லிவிட்டார்கள். ஆனால் க்ரானிக் நிலையில் இருந்த அவர் உறுப்பு கிடைக்கும் முன்பே காலமாகி விட்டார்.



அமெரிக்கா, மும்பை, சென்னை, ஏர் ஆம்புலன்ஸ் என்றெல்லாம் அலைந்து விலாஸ்ராவுக்கு உறுப்பு தானம் பெற்று பொருத்த முயற்சித்தவர்கள், அவர் இறந்த பின் அவரது கண்களையோ உடலையோ கூட தானமாகத் தரவில்லை. இதுதான் நம் சமூகத்தின் வி.ஐ.பி. மனநிலை. எனக்கு எல்லோரும் தரவேண்டும். நான் யாருக்கும் எதையும் தரமாட்டேன்.



மருத்துவச் சிகிச்சை பெறுவதில் வி.ஐ.பி.க்கு முன்னுரிமை என்று எதுவும் இருக்க முடியாது. எல்லா உயிரும் சமமானவை என்பதே சரியான கோட்பாடு. ஆனால் நாம் உயிர்களை வி.ஐ.பி. உயிர், சாதா உயிர் என்று பிரித்தே நடத்துகிறோம்.



விலாஸ்ராவ் தொடர்பாக வெளியான இணையச் செய்திகளில் கமெண்ட் அடித்த பல வாசகர்கள், ‘விலாஸ்ராவ் ஆதர்ஷ் ஊழலில் தொடர்புள்ள நபர். அவர் இருந்தால் என்ன, இறந்தால் என்ன’ என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். இதுவும் தவறான அணுகுமுறைதான். ஊழலில் தொடர்புடையவர் செத்து ஒழியட்டும் என்று விட முடியாது. அவரை நீதிக்கு முன் நிறுத்திக் குற்றத்தை நிரூபித்து, தண்டிப்பதுதான் சரியான வழி. எந்த மனித உயிரும் காப்பாற்றப்படவேண்டியதுதான் - விலாஸ்ராவ் உட்பட. ஆனால் விலாஸ்ராவ் வி.ஐ.பி. என்பதால் முதலில் காப்பாற்றப் படவேண்டும் என்பதே தவறான அணுகுமுறை.



உண்மையில் எல்லா உயிர்களையும் சமமாக மதித்துக் கவனிப்பவர்கள் மருத்துவ மனையில் இருக்கும் நர்சுகள்தான். எங்கிருந்துதான் இப்படி அற்புதமான நர்சுகள் வருடந்தோறும் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறார்கள் என்று ஒவ்வொரு முறை மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும்போதும் வியக்கிறேன். அவர்கள் தான் நம் நாட்டு மருத்துவத்துறையின் மிகப்பெரிய சொத்து.



எனக்கு மூன்று அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டு அவற்றிலிருந்து மெல்ல மெல்ல முழுமையாகக் குணமடைய ஆறு வாரங்கள் தேவைப்படும் நிலையில், சென்ற இரண்டு வாரங்கள் ஓ பக்கங்களை எழுத முடியாமல் போய்விட்டது. எனக்கு முகம் தெரியாத எண்ணற்ற வாசகர்கள் என்னை நலம் பெற வாழ்த்தியதுதான் ஒருவன் எழுத்தாளனாக இருப்பதில் கிடைக்கும் மிகப்பெரிய வருவாய். அறுவை அனுபவங்களைப் பின்னர் உங்களுடன் பகிர்ந்துகொள்வேன்.



இந்த வாரக் கேள்வி



வடகிழக்கு மாநிலங்களிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்து வேலை பார்த்த ஆயிரக்கணக்கானோர் பதற்றமான மனநிலையில் ஊர் திரும்பியது வருத்தமான விஷயம்தான். ஆனால் எனக்கு ஒரு அடிப்படைச் சந்தேகம். ஏன் இத்தனை ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து புறப்பட்டு இவ்வளவு தூரம் வந்து பிழைக்க வேண்டியிருக்கிறது? அந்த மாநிலங்களில் விவசாயம், தொழில் இவற்றின் நிலை என்ன? ஏன் அங்கே வேலை வாய்ப்புகள் இல்லை? அதற்கு யார் பொறுப்பு?



இந்த வார பதில்



தியேட்டர்களில் கூட்டம் குறைந்ததற்குக் காரணம் என்ன என்று சினிமா பிரமுகர்கள் ஒரு கூட்டத்தில் கேட்டிருக்கிறார்கள்:



இதோ பதில்: காரணம்

1: குப்பையாக படம் எடுக்கிறீர்கள்.

2. பெண்கள் தியேட்டருக்கு வந்து பார்க்க விரும்பாதபடி படம் எடுக்கிறீர்கள்.


3. பெரும்பாலான தமிழ் டி.வி. சேனல்கள் தாங்களே சினிமா கொட்டகை மாதிரி இருக்கின்றன.


 4. கொட்டகைக்கு வந்து காஃபி சாப்பிட்டாலே திவாலாக்கிவிடுகிறீர்கள். அண்மையில் ஒரு சாதாரணக் கொட்டகையில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ. 30 கொடுத்து படம் பார்த்தேன். கேன்டீனில் மோசமான காஃபி குடித்தேன். விலை: பத்து ரூபாய்.




இந்த வாரப் பூச்செண்டு


கட்சி சார்பு இல்லாமல் மக்கள் சார்பாகச் செய்திகளை வழங்கி வெற்றி பெற முடியும் என்று நிரூபித்து இரண்டாம் ஆண்டில் நுழையும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு!

நன்றி - கல்கி, புலவர் தருமி, ஓ பக்கங்கள் ஞானி

பொன்னியின் செல்வன் செல்வராகவன் எடுத்தா என்ன ஆகும்?

good safety idea!
1.டியர்,டாப் அப் பண்ணி விடறீங்களா? 


ஸாரி.அதெல்லாம் மேரேஜ்க்குப்பிறகுதான் 



------------------------------


2. டியர் ,குட் டச் எது?பேடு டச் எது?ன்னு உனக்கு சொல்லித்தரவா? 



ஆணியே புடுங்க வேணாம்,நீங்க தொடறதெல்லாமே பேடு டச் தான் 




---------------------------

3. ஊர்க்கட்டுப்பாட்டை மீறி நீங்க 2 பேரும் காதலிச்சிருக்கீங்க ,அதனால உங்க 2பேரையும் ஊரை விட்டு தள்ளி வைக்கிறேன் . 



 ஐ ஜாலி நன்றிங்க 


---------------------



4. நேர்த்திக்கடன் = பர்பக்ட் லோன்? #சபாஷ் துபாஷ் 



---------------------------


5. விஜய் யின் துப்பாக்கி படம் பார்க்க வருபவர்கள் துப்பாக்கி சுடும் லைசன்சும் எடுத்திருக்கவேண்டும்.ஜெ உத்தரவு விஜய் அதிர்ச்சி#சும்மா 



----------------------






6. ஏ ஆர் முருகதாஸ் - நான் கதையை சுட்டுடறேன் நீங்க எல்லா வில்லன் களையும் சுட்டுடுங்க 

விஜய் - அவ்வ்வ்வ்வ்வ்

------------------------

7. ஒரு கன் போதாதா?ஏன் 87 கன்? 



விஜய் -நான் ஒரு தடவை யூஸ் பண்ண கன்னை மறுபடி நானே யூஸ் பண்ணமாட்டேன் 




----------------------------------

 8. மேனகா - என் பேரு ராணி.கணவர் பேரு ராஜா 




#ஓஹோ செக் வைக்கறது நீங்கதானா? 



-----------------------------


9. டியர் சதா உன் நினைப்பாவே இருக்கு. 



ம்க்கும் என் பேரு சீதா 



-----------------------


10. ஏம்மா ஜாதி மல்லி முழம் என்ன விலை? 



உயர்ந்த ஜாதி மல்லி ரூ 20 ,தாழ்ந்த ஜாதி மல்லி ரூ 10 



-----------------------------


· · · 16 hours ago ·




11. புருஷன் என்ன வாங்கிகொடுத்தாலும் பூ இவ்வளவுதானா என சலித்துக்கொண்டு வைவதால்தான் அவர்கள் பூவையர் 


--------------------


12. டேமேஜர் - ஆபீஸ்ல நான் இல்லாதப்ப பொண்ணுங்களோட பேசறியாமே? 




ஆமா நீங்க இருக்கும்போது நீங்க கடலை போடறீங்களே? 



-----------------------


13. மிஸ்டர் பீன் - பிரெஞ்ச் தாடி வைக்கனும்



 மிஸ் பீனு - முதல்ல என் கிட்டே பிரெஞ்ச் டியூஷன் படிங்க 



------------------------------


14. டாக்டர் காய்ச்சல் சரி ஆகிடுச்ச



பெஸ்ட் ஆப் லக். 


ஆனா இருமல் இருக்கு. 


பெஸ்ட் ஆப் லொக் லொக் 



------------------------


15. உங்க மனைவி உங்க கிட்டே கோவிச்சுட்டு அவங்கம்மா வீட்டுக்கு போய்ட்டா இந்த நாள் இனிய நாள் 


-------------------------


· · 



16. ரத்னா = ரத்தினச்சுருக்கமா பேசுபவர். ரத்தச்சிவப்பு நிறம்?் 



-------------------------


17. காலைல எந்திரிச்சதும் சத்தமா சுப்ரபாதம் ஓட விட்ரனும்.இல்லைன்னா சம்சார ம் சுப்ரபாதம் பாட ஆரம்பிச்சுடுவாங்க



--------------------------


18. டியர் நேத்து என் கனவுல நீ வந்தே. 



லேடி டாக்டர் - ட்ரீம் பீஸ் 100 ரூபா குடுங்க 



--------------------------


19. பொன்னியின் செல்வனை  சினிமாவா எடுக்கப்போறேன் - செல்வராகவன் # எடுக்கப்போறீங்களா? கெடுக்கப்போறீங்களா? # தண்ணி அடிக்கும் செல்வன்



----------------------------


20.  மத்திய அரசுக்கு மக்கள் படும்பாடு எப்படி தெரியும்: முதல்வர் ஜெ.,# கரெக்ட் மேடம், மாநில அரசுக்கே தெரியாதப்போ அவங்களுக்கு எப்டி தெரியும்?



-------------------------------