Showing posts with label vijaykanth. Show all posts
Showing posts with label vijaykanth. Show all posts

Monday, December 17, 2012

ஊமை விழிகள் (1986) - சினிமா விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiew_AFBWzfRHkC41B7iF6xjeACIA3xTSV_XlfomevaabigV3KV1xA2UvZ2wen7sxRD3xBvD6M5IAfiROTiRhmzKfOVfIQh-kGrl4lkGxfRCzukK01UDHaRK_MJW15rruuDu611lNRF2Jo/s1600/a3.jpgதிரைப்படக்கல்லூரி மாணவர்கள் என்றாலே ஆர்ட் ஃபிலிம் தான் எடுப்பாங்க, கமர்ஷியல் சினிமா அவங்களுக்கு செட் ஆகாது என்றிருந்த காலகட்டத்தில் 1986 இல் ரிலீஸ் ஆகி அந்த எண்ணத்தை , தமிழ் சினிமாவை ஒரு புரட்டு புரட்டிய படம் தான் இந்த ஊமை விழிகள் .பல பிரம்மாண்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம் .

வில்லன்ஒரு 60 மார்க் ஃபிகரை லவ் பண்றார்.அது சஹானா மாதிரி வேற ஒருத்தன் கூட ஓடிடுது. உடனே அவருக்குப்பொண்ணுங்கன்னாலே வெறுப்பு. தன் காதலி கண்கள் பேசிப்பேசி தன்னை மயக்குச்சு. அந்த பாதிப்பில் கண்ணில் பட்ட பெண்களை  கொலை பண்ணி அவ கண்களை எடுத்து வெச்சுக்கும் சைக்கோ பார்ட்டி. சட்ட சிக்கல்களை தவிர்க்க ஒரு பாதுகாப்புக்கு ஒரு அமைச்சரை பார்ட்னர் ஆக்கிக்கறார். ஃபிகர் மினிஸ்டர்க்கு , மேட்டர் முடிச்சதும் கண் இவருக்கு. 

 இந்த விஷயம் ஒரு  பத்திரிக்கை அம்பலப்படுத்துது. எந்த விதப்பின்புலமும் இல்லாத சாதா பத்திரிக்கை. அதை ஒடுக்க நினைக்கறார் வில்லன். அந்த பிரஸ்க்கு ஒரு டி எஸ் பி உதவி பண்றார். வில்லனுக்கு எதிரா அவர் நிகழ்த்தும்போராட்டம் தான் மிச்ச மீதி திரைக்கதை .


படத்தோட ஓப்பனிங்க்கே ஒரு வித அமானுஷ்யமான இரவில் கொண்டாட்டமான பாட்டோட ஆரம்பிக்குது. ராத்திரி நேரத்துப்பூஜையில்  ரகசிய தரிசன ஆசையில் ஆ ஆ அது சுக வேதனை ( இதுல எதுக்கு 2 ஆ? ) . மனோஜ் கியான் + ஆபாவாணன் இணை இசையில் கலக்கலான பாட்டு. 


 பாட்டு முடிஞ்சதும் கொலை  அப்போ டாப் கீர்ல போற படம் க்ளைமாக்ஸ் வரை செம ஸ்பீடு .


நேர்மையான , வறுமை நிலையில் உள்ள பத்த்ரிக்கை ஆசிரியரா ஜெய்சங்கர். ஆல்ரெடி இவர் சொல்வதெல்லாம் உண்மைல இதே ரோல்ல நடிச்சிருப்பாரு , நல்லா சூட் ஆகி இருக்கு. 

 சந்திர சேகர்  ஜெய் ஆஃபீஸ்ல ஒர்க் பண்றவரா வர்றாரு. நல்ல நடிப்பு . கத்திக்குத்து வாங்கி துடிக்கும் இடத்தில் நிஜமாவே குத்திட்டாங்களோன்னு நினைக்க வைக்கும் அநாயசமான உயிரோட்டமான நடிப்பு 


வில்லனாக ரவிச்சந்திரன் . செம்பட்டை விக் , தாடில இவர் குதிரை வண்டில ஏறும்போதே செம திகில். 

மலேசியா வாசுதேவன்  மினிஸ்டர் வில்லன். மினிஸ்டர்னாலே வில்லன்க தானே?  கலகலப்பான நடிப்பு 

 டி எஸ் பி தீனதயாளன். பேருக்கேத்த கம்பீரமான நடிப்பு கேப்டனோடது. படம் போட்டு  50 நிமிஷம் கழிச்சு ஹீரோ எண்ட்ரி . ஈரோடு பாரதி தியேட்டர்ல ரிலீஸ் டைம்ல என்னா ஒரு கைதட்டல். இந்தப்படத்திற்குப்பின் கேப்டன் அட்டகாசமான அப்ளாஸ் வாங்கியது கேப்டன் பிரபாகரன் ஓப்பனிங்க் போலீஸ் ஸ்டேஷன் ஃபைட்டில் தான்  .மனைவி சரிதா இறந்ததும் கதறும்போதும் சரி , புலன் விசாரணையில் கம்பீரம் காட்டும்போதும் சரி அனுபவம் மிக்க நடிப்பு .


இது போக அருண் பாண்டியன், கோகிலா, சசிகலா, கார்த்திக் இன்ன பிற நடிக நடிகைகளும் உண்டு .


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJ5NGu-eoWt8o100ity5M8bIIuw8ry3AZpTAz_U2-z0JwmP0PUJtL86HyXWHetu8mksGrRX5QPavmjEDFrUCHbe1LMdcjyOwdJ-vmmaBb5S_VbTWPecroygxwrLpDrd4yov1fZyszjpR8/s1600/o5.jpg


 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. க்ரைம் படங்கள், த்ரில்லர் படங்களுக்கு பாடல்கள் ஒரு ஸ்பீடு பிரேக்கர்கள் என்ற விதியை உடைத்து  3 மணி நேரப்படத்தில் தைரியமாக 6 பாடல்கள்  சூப்பர் ஹிட்  ஆக்கியது. ராத்திரி நேரத்துப்பூஜையில் செம குத்து சாங்க் , கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் சோக மெலோடி , தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?  இன்றளவும் நிலைத்து நிற்கும் தன்னம்பிக்கை ஊட்டும் பாட்டு ,மாமரத்துப்ப்பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடப்வா கிளு கிளு முதல் இரவுப்பாட்டு ,நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனிதர் ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி  தத்துவ பாட்டு , குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப்பேச்சு  ரகளையான பாட்டு என எதுவுமே  குறை சொல்ல முடியாத பாட்டு. 



2. ரவிச்சந்திரனின் வில்லன் கெட்டப் , பாடி லேங்குவேஜ் திகில் ஊட்டும் விதமாய் அமைத்தது . அவர் கேரக்டரை கடைசி வரை சஸ்பென்சாக காட்டியது 


3.. ஆர்ட் டைரக்‌ஷன் அட்டகாசம் . அந்த வில்லன் பங்களாவே திகிலைத்தரும். அந்த மணி அடிக்கும் கிழவி , பாதிரியார் என   மர்மம் கிளப்பும் முகங்கள் அருமை

4.  ஜெய் சங்கரின் பத்திரிக்கை ஆஃபீஸ் ஸை ரொம்ப டீட்டெயிலாக காட்டியது , படத்தோட ஒன்ற வைத்து இருந்த முக்கியக்காரணி 


5. க்ளைமாக்சில் 67 ஜீப்கள் லைனாக வருவது , ஆரம்பத்தில் ஒரே ஒரு லைட்டை மட்டும் காட்டி அது அப்படியே  பிரிந்து  பிரம்மாண்டமான அணி வகுப்பாய் வரும் காட்சி பர பரப்பாக அப்போது பேசப்பட்டது இதுவரை தமிழ் சினிமாவில் அந்த காட்சியை ஓவர் டேக்க இன்னும் எந்தபப்டமும் வரவில்லை



http://padamhosting.com/out.php/i94153_7.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள்( ஆர் அர்விந்த்ராஜ் பிஎஸ் சி டி எஃப் டெக் )



1. படத்துல லேடீசை துரத்தும் குதிரை  க்ளோசப்ல 70 கிமீ வேகத்துல பாயுது , துரத்தப்படும் பெண்கள் 7 கி மீ வேகத்துல ஓடுறாங்க. ஆனா 10 நிமிஷம் அந்த சேசிங்க் சீன் வருது . லாங்க் ஷாட்ல காட்டும்போது வேகம் கம்மியா ஆகிடுது . பார்க்கும்போது திகிலா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சா.... 



2. பத்திரிக்கைக்காரர் அந்த மர்ம பங்களாவுக்கு வந்து அந்த கிழவையை ஃபோட்டோ எடுக்கறதைக்கூட ஒத்துக்கலாம். பாட்டிக்கு விபரம் தெரியாது, படிப்பறிவு இல்லை, அதனால கண்டுக்கலைன்னு . ஆனா அந்த பாதிரியார் படிச்சவர் ஆச்சே .( பாதிரியாரைக்கொன்று பாதிரியார் ஆன வில்லனின் எடுபுடி ) அவர் எப்படி ஃபோட்டோ எடுத்தப்ப எதுவும் சொல்லலை? பிடிங்கி இருக்க வேணாமா? அல்லது அப்போவே போட்டுத்தள்ளி இருக்க வேணாமா? 


3. நேர்மயான , தன் தொழிலை தெய்வமாக மதிக்கும் எடிட்டர் ஜெய்சங்கர் டியூட்டி டைம்ல தம் அடிக்கறார்/ அதுவும் சக பணியாளர்கள் முன். எனக்குத்த்தெரிந்து  விகடன் , குமுதம் உட்பட எந்த ஒரு பத்திரிக்கை எடிட்டரும் ஆஃபீஸ் டைமில் ஆஃபீஸ்க்குள்  அப்படி தம் அடிக்கறதில்லை.



4. அருண் பாண்டியன் கோகிலா கிட்டே இது இது  பத்திரிக்கை நிருபர் வீடுதானே> என கேட்கும் இடம் ரொம்ப அமெச்சூர் நடிப்பு . இயக்குநர் கவனிச்சு அதை ரீ சூட் பண்ணி இருக்கலாம் .



5.  ஹவுஸ் ஓனர் பொண்னு வீட்டில் நைட் சாப்பிடுது . அப்போ அருண் பாண்டியன் பட்டினியா இருப்பதா வசனம் பேசுவது கேட்டு சாப்பிடும் தட்டில் கை கழுவறார்.அத்தனை சாப்பாடும் வேஸ்ட். அதை சாப்பிட்டுட்டு அவருக்கும் சாப்படு எடுத்துட்டுப்போய் கொடுத்தா மேட்டர் ஓவர். அதே சீனில்  ஒரு சின்னக்குண்டாவில் சாப்பாடு இருக்கும். ஒரு டம்ளர் அளவு அரிசியில் சமைச்ச சாப்பாடுதான் இருக்கும். அவங்க அம்மா , அப்பா சாப்பிட அது போதுமா?ன்னு யோசிக்கும்போதே சந்திர சேகர் , அருண் 2 பேரையும் கூப்பிட்டு சாப்பாடு பரிமாறுவாங்க , அதே குண்டா , ஆனா சாப்பாடு மட்டும் நிறைய இருக்கும் 



6. பேங்க் மேனேஜர் ஜெய்சங்கர்க்கு ஃபோன் பண்ணி “ பர்சனல் மேட்டர் 1 பேசனும் , மாலை விட்டுக்கு வா’ன்னு கூப்பிடறார். அங்கே போனதும் “ பேங்க் லோன் டியூ கட்டவே இல்லை , ஒரு வாரம் டைம் , கட்டலைன்னா சீஸ் பண்ணிடுவேன்னு சொல்றார். இதுதான் பர்சனலா? இது பேங்க்  மேட்டர். பேங்க்லயே சொல்லி இருக்கலாமே? 


7. பத்திரிக்கை ஆஃபீஸ்ல கரண்ட் போயிடுது 12 மெழுகுவர்த்தி ஏத்தி வைக்கறாங்க. மீட்டிங்க் நடக்குது. ஆனா அந்த சீனில் லைட்டிங்க் அப்பட்டமா காட்டிக்குடுக்குது. அதே ஷாட்டில் கரண்ட் வந்த பின் வெளிச்சம் அப்படியே தான் இருக்கும் . செம காமெடி 


 8. இளவரசியை ரேப்போ , மர்டரோ அவர் வீட்டிலேயே பண்ணி இருக்கலாம். ஒரு கார் நிறைய ஆள் அனுப்பி பில்டப் கொடுத்து மலேசியா வாசுதேவன் வீட்டுக்கு வர வெச்சு  ரிசைன் லெட்டர் டைப் பண்ணச்சொல்லி அதுக்குப்பின் ரேப் அண்ட் மர்டர் பண்ணுவது ரொம்ப நீலமான சாரி நீளமான காட்சி 


9. கொலை நடந்ததுக்கான சாட்சியா வர்ற விசு படத்துக்கு ஃபைனான்ஸ் உதவி செஞ்சாரா?  அவர் சாதாரண சாட்சி தான் . அவர் எப்படி ஒரு டி எஸ் பி தோள்ல கை போட்டு பாராட்ட முடியும்? பேச முடியும். அது கூடப்பாரவாயில்லை,. டி எஸ் பி  தான் போடும் ரகசிய பிளானை  சந்திரசேகர், ஜெய் சங்கர்க்கு விளக்குவது ஓக்கே ,. ஏன்னா அவங்க ஃபீல்டு ஒர்க் பண்றாங்க . ஆனா சமப்ந்தமே இல்லாம விசு எதுக்கு அங்கே? அதே போல் பிரஸ் மீட்டில் விசு என்னமோ போலீஸ் டிபார்ட்மெண்ட் ஐ ஜி மாதிர் பில்டப் கொடுப்பது ஓவர் . அவர் ஒரு சாட்சி . அவ்ளவ் தான்


10. கார்த்திக்கை தலையில் தாக்கும் வில்லன் அப்படியே அவரை விட்டுட்டு சசிகலாவைதூக்கிட்டுப்போறாரே? அவரை கண்ணால் கண்ட சாட்சியை கொலை பண்ணிட்டு , உயிர் அடங்கியாச்சா?ன்னு செக் பண்ணிட்டுத்தானே போகனும்?


http://i.ytimg.com/vi/gRfRUIAPGW8/0.jpg


11. ஓப்பனிங்க்ல அருண் பாண்டியன் 7 ரவுடிகளை ஒரே ஆளா அடி பின்றார்.சந்தோஷம் . ஆனா க்ளைமாக்ஸ்ல நடக்கும் ஃபைட்ல 4 பேர் அவரை சூழந்த்தும் ஒரு ஆளைக்கூட ஒரு அடி கூட அடிக்கலை .



12.  வில்லன் பொண்ணுங்களை ரேப் பண்றார். இன்னொரு வில்லன் கொலை பண்றார். இதுல என்ன ஆதார டாக்குமெண்ட்ஸ் இருக்கும்? ஜெய்சங்கர் க்ளைமாக்ஸ்ல ஆதார டாக்குமெண்ட்ஸ் பேப்பர்ஸ்னு ஒரு கத்தைப்பேப்பர் எடுத்துட்டு வர்றார். ஆராசா வழக்குல கூட அவ்வளவு டாக்குமெண்ட்ஸ் இருக்காது . டெண்டர் விட்டது ,ரகசிய ஒப்பந்தம்னு இருந்தாலாவது அத்தனை பேப்பர்ஸ் காட்ட அர்த்தம் இருக்கு


13. பத்திரிக்கையாளர் மீட்டிங்க்கில் டி எஸ் பி தீனதயாளன் வழக்கமா உங்க பத்திரிக்கை எப்போ வரும்னு கேட்கும்போது எல்லாருமே அதிகாலை 4.30க்கு லாஸ்ட் நியூஸ் ,  காலை 6 மணிக்கு பேப்பர் வரும்கறார், ஆனா உண்மையில் தினத்த்ந்தி உட்பட எல்லாப்பத்திரிக்கைகளுக்கும் லாஸ்ட் நியூஸ் அப்டேஷன் நடு நிசி 12 மணி , பேப்பர் ரிலீஸ் @ அதிகாலை 3.30 தான்


14. வில்லன் ரவிச்சந்திரன் பொம்பளைப்பித்தன் அல்ல, பெண்ணின் கண்ணை எடுப்பவன். அவனை வலை வீசிப்பிடிக்க சும்மா ஒரு பெண் அந்த ஏரியாவில் போனால் போதும் . எதுக்கு கோகிலாவை ஸ்விம்மிங்க் டிரஸ்ல அனுப்பனும்>



15. எந்தக்காதலனும் தன் காதலியை பகடைக்காயா அதுவும் ஸ்விம் டிரஸ்ல அனுப்ப ஒத்துக்க மாட்டான், அதுவும் படம் பூட்ரா பாவாடை தாவணி அல்லது சேலையில் வரும் மிடில் கிளாஸ் ஃபேமிலி கேர்ள் சிட்டி பொண்ணு மாதிரி எந்த தயக்கமும் இல்லாம ஸ்விம் டிரஸ்ல போக ஓக்கே சொன்னது எப்படி?


16. கொலை வழக்கில் முக்கிய சாட்சியான சசிகலாவை டி எஸ் பி தன் வீட்டில் வெச்சு பாதுகாக்கிறார். கேசில் சமப்ந்தப்பட்ட சந்திரசேகர் கொலை செய்யப்பட்ட பின்பு கூட அவர் உஷார் ஆகி தன் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டாமா? அட்லீஸ்ட் 2 போலீஸ் கான்ஸ்டபிள் கூட பாதுகாப்பு இல்லை அவர் பங்களாவில் . சர்வ சாதாரணமாக வில்லன் குரூப் அவர் மனைவியை கார்னர் பண்ணறாங்க


17. தவறான நடத்தை உள்ள காதலியால் மன நலன் பாதிக்கப்படும் வில்லன் பழி வாங்க அதே போல நடத்தை தவறும் பெண்களை மட்டும் தானே கொல்லனும்? கண்ணுக்கு சிக்குன ஃபிக்ரை எல்லாம் கொலை செய்வது என்ன லாஜிக்?


18 சந்திரசேகர் வயிற்றில் ஆழமான கத்திக்குத்து வாங்குனதும் ஒரே ஒரு பெட்ஷீட்டை செந்தூரப்பூவே கேப்டன் மாதிரி போர்த்திக்கறார். அப்படிப்பண்ணுனா ரத்தம் நிக்குமா? டைட்டா ஒரு துணி போட்டு கட்டவே இல்லை




19. ஆனானப்பட்ட  ஆ ராசாவை அரெஸ்ட் பண்ணவே 10 போலீஸ் தான் போனாங்க. ஆனா வில்லன் சிங்கிளா இருக்கார். அவர் கிட்டே அடியாளுங்க யாருமே இல்லை, அவரை அரெஸ்ட் பண்ண எதுக்கு அத்தனை அமளி துமளி? எதுக்கு 67 ஜீப் ?



20. லாங்க் ஷாட்ல காட்டும்போது 67 ஜீப்பிலும் ஒரே ஒரு டிரைவர் தான் இருக்கார் . ஆனா வில்லன் மாளீகையை எண்ட்டர் ஆனதும் ஒவ்வொரு ஜீப்பில் இருந்தும் 4 போலீஸ் ஆஃபீசர்ஸ் இறங்கறாங்க, எப்படி?



21. ஒரு பேச்சுக்கு 80 போலீஸ் தேவை என்றே வைத்துக்கொண்டாலும் 20 ஜீப் போதாதா?  20 * 4 = 80 .

22. கோகிலா கிட்டே கேப்டன் “ இந்த கேசோட திருப்பு முனையே நீங்க அந்த குதிரைக்காரரை பேச வைப்பதில்தான் இருக்கு” அப்டினு ஒரு பில்டப் டயலாக் விடறார். ஆனா கோகிலா அந்த  குதிரைக்காரரை பார்த்து  எந்த ரிஸ்க்கும் எடுக்காமயே அவர் பாட்டுக்கு பேச ஆரம்பிச்சுடறார்


23. குதிரைக்காரரை வில்லன் ஏன் ஓப்பனிங்க்லயே கொலை பண்ணலை? அவர் பேத்தியை கொலை பண்ணினது அவருக்குத்தெரிஞ்சிடுச்சுன்னு வில்லனுக்குஹ்ட்தெரிஞ்சுடுச்சு . சாட்சியாவோ , பழி வாங்கும் ஆபத்தாகவோ அவர் மாறுவார்னு வில்லனால் யூகிக்க முடியாதா?


24. வீட்ல வயசுப்பொண்ணை வெச்சிருகறவர் பிரம்மச்சாரி சந்திரசேகர்க்கு எப்படி வீடு கொடுத்தார்? சென்னைல பிரம்மச்சாரிக்கு வீடே கிடைக்காது. ஹவுஸ் ஓனருக்கு அழகான சம்சாரமும், வயசுப்பொண்ணும் இருந்தா கேட்கவே வேணாம். ஆனா இவர் சந்திரசேகரையும் அலோ பண்ணி அவரோட ஃபிரண்ட் அருண் பாண்டியனையும் அலோ பண்ணி தன் பொண்ணு கையால சோறெல்லாம் போடறாரு ஹி ஹி


25. படத்துக்கு முக்கியத்திருப்புமுனையே வில்லனோட  காதலி சஹானாவா மாறுவதுதான் , வில்லன் சஹானா வா பார்ப்பதை காட்சியா காட்டி இருகனும் , முதல் 2 கொலையா வில்லனின் காத்லி , அவ கள்லக்காதலன் இருவரையும் கொலை பண்ரதை காட்டி இருக்கனும்

http://img822.imageshack.us/img822/9797/vlcsnap2011111808h24m54.png



சி.பி கமெண்ட் - பார்த்தே ஆக வேண்டிய க்ரைம் த்ரில்லர் படம், பெரும்பாலானோர் பார்த்திருப்பீங்க, பார்க்காதவர்கள் பார்த்துடுங்க .

http://www.shotpix.com/images/58364948498597659820.png
 சில சுவாராஸ்யமான செவி வழித்தகவல்கள்


1. இந்தபடத்தில் ஹீரோவாக நடிக்க உச்ச நட்சத்திரங்கள் இருவரைக்கேட்க ஃபிலிம் ஸ்டூடன்ட்ஸ் என அவர்கள் தயங்க  3 வது  ஆளாக  கேப்டன் ஒத்துக்கொண்டார்.



2. ரவிச்சந்திரன் நடித்த வில்லன் கேரக்டரில் முதலில் புக் ஆனவர் நாகேஷ். சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது . அப்படி நடிச்சிருந்தா அபூர்வ சகோதரர்கள் க்கு முன்பே அவர் வில்லன் ஆகி இருப்பார் .



3. இந்தபப்ட ரிலீசின் போது போஸ்டரில்  விஜய் காந்த் படமே ஸ்டில்ஸாக பேப்பர் விளம்பரங்களில் இருந்தது. படம் மெகா ஹிட் என்றதும் வகை வகையாக அருண் பாண்டியன் - கோகிலா ஸ்டில்ஸ் அதிகம் வந்தது . அது கேப்டனுக்கு பிடிக்கவில்லை



4. கண்மணி நில்லு காரணம்  சொல்லு பாடல் காட்சி  பட ரிலீசின் போது  இல்லை, எடிட்டிங்கில் கட். படத்தின் நீளம் கருதி ( 165 நிமிடங்கள் ) பாட்டை கட் பணிட்டாங்க , பின் 25 வது நாளில் பாடல் இனைக்கப்பட்டு போஸ்டர்களில்  இன்று முதல் இப்பாடல் இணைக்கப்பட்டு என விளம்பரம் வந்தது


5. இந்தப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க கார்த்திக் குக்கு நோ சம்பளம் , அதுக்குப்பதிலாக சசிகலாவுடன் ஸ்டோரி டிஸ்கஷன் ஹி ஹி


6 படத்தின் டைரக்டர் ஆர் அர்விந்த்ராஜ் தான் நடிகை விஜியை லவ் பண்ணி மேட்ட்ரை முடிச்சுட்டு அல்வா குடுத்தவரு , காதல் தோல்வியில் விஜி தற்கொலை பண்ணிக்குச்சு , நல்ல வேளை லெட்டர் எதும் எழுதி வைக்கலை அண்ணன் எஸ் ஆகிட்டாரு


7 . இதன் 2ஆம் பாகமாக மூங்கில் கோட்டை வருவதாக  இருந்தது , சில காரணங்களால் வரவில்லை


http://cdn5.supergoodmovies.com/FilesFive/oomai-vizhigal-to-be-remade-db4bacf7.jpg



Directed by R. Aravindraj
Produced by Abhavanan
Written by Abhavanan
Starring Vijayakanth
Arun Pandian
Chandrasekhar
Jaishankar
Karthik
Music by Manoj Gyan
Cinematography A. Ramesh Kumar
Editing by G. Jayachandran
Release date(s) 15 August 1986
Running time 176 minutes
Country India
Language Tamil
http://www.thiraivideo.com/video/wp-content/uploads/2012/05/Oomai-Vizhigal.jpg

Thursday, August 30, 2012

கேப்டனுடன் கூட்டணி -ஸ்டாலின் சூசக பேட்டி @ ஆனந்த விகடன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYML7yE0zxUeED6eWA_yuDMGHIoCoY352zlsIs3hh_MBD0OeCyvert9X-cnjNagMaaZzEwQsxx2cJCppIqCxc6UQQtqVTHOk3irMrVTIky5_AdmVA-rEHClK7Xpkk93fQWRsABLMxNpdk/s1600/thuglak+dated+14.04.2010.jpg 

நண்பர் விஜயகாந்த் நிச்சயம் ஜெயலலிதாவுக்கு பாடம் கற்பிப்பார்!"


செம பிளான் ஸ்டாலின்
 
ப.திருமாவேலன்
 
படங்கள் : சு.குமரேசன்
 
'தளபதி’ ஸ்டாலினைச் சந்திக்கச் சென்றால், சுட்டி குட்டி சோல்ஜர்கள் சூழ விளையாடிக்கொண்டு இருந்தார்.



 கையில் வைத்திருந்தால், தோளுக்கு மேல் ஏறுகிறாள் தன்மயா. அதைப் பார்த்துவிட்டு முட்டி மோதி தாத்தாவின் மறு தோளில் ஏறுகிறான் நளன். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து நடந்து காட்டும் நிலானி பாப்பாவையும் இழுத்து அணைத்துக்கொள்கிறார். 'என்னையும் சேர்த்துக்கோங்க’ என்று ஓடி வந்து ஒட்டிக்கொள்கிறான் இன்பா.


''பேரன், பேத்திகளுக்கான நேரத்தில் பேட்டிக்கு வந்திருக்கிறீர்களே'' என்று துர்கா ஸ்டாலின் வரவேற்க, ''அரசியல் சூட்டைத் தணிக்கும் சுகமான சுமைகள் இவர்கள்தானே'' என்று அர்த்தம் சொல்லிச் சிரிக்கிறார் ஸ்டாலின்!

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbZAR27ep4ytKPRtL7QtlGoNiCgOJ2Mz504pJufN3mmj821C50PfrT7n4VYqF5aWd7XrE9X8MortC0bC2sw5HsWRKPNs0caaFtGv1z5FtsKj1PQ1_LlyI-6GhCcw6g3EkXZFCFStw2OCQF/s1600/tamilmakkalkural_blogspot_muperum_vizha.jpg

''முதல்வர் ஜெயலலிதா உங்கள் மீது தொடர்ந்து வழக்குகளைத் தாக்கல் செய்து உஷ்ணத்தைக் கூட்டிவருகிறாரே?''



''அவருக்குத் தெரிந்ததே வழக்குப் போடுவதும் கைதுசெய்வதும்தானே. 'இம் என்றால் சிறைவாசம்... ஏன் என்றால் வனவாசம்’ என்பது பிரிட்டிஷார் ஆட்சியில் மட்டும் அல்ல; ஜெயலலிதா ஆட்சியிலும் தொடர்கிறது.


 ஒரு நாட்டின் முதலமைச்சரின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்வதே தவறு, பொதுமக்களுக்கு நிகழும் சுகாதாரக் குறைபாடுகளை எடுத்துச் சொல்லவே கூடாது என்றால், எதிர்க் கட்சிகளே இருக்கக் கூடாது என்று ஜெயலலிதா நினைக்கிறாரா? எதுவும் பேசக் கூடாதா? ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான கருத்துரிமையைக் காலில் போட்டு மிதிக்க முயற்சிக்கிறாரா? இப்போது என்ன மிசா சட்டமா நடைமுறையில் இருக்கிறது?''



''எப்படி இருக்கிறது ஓர் ஆண்டு கால ஜெயலலிதா ஆட்சி?''



''ஜெயலலிதா வந்தால் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று எதிர்பார்த்து இருந்தால் ஏமாற்றம் அடைந்திருப்போம். அவர் ஆட்சிக்கு வந்தால், விலைவாசி உயரும், பேருந்துக் கட்டணம் உயரும், பால் விலை அதிகரிக்கும் என்பது தமிழ்நாட்டின் தலைவிதி. தேர்தல் நேரத்தில் அவர் கொடுக்காத இந்த வாக்குறுதிகளை மட்டும்தான் உடனடியாக நிறைவேற்றுவார். 



தலைமைச் செயலகத்துக்குச் சாதாரணமாக வந்து செல்லும் ஒரு அப்பாவி மனிதனுக்குக்கூடத் தெரியும், அந்தக் கட்டடத்தில் இட நெருக்கடி மிகுந்திருக்கிறது, பலவீனமாக இருக்கிறது என்று. அதனை மாற்றி புதிய தலைமைச் செயலகத்தை சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில், காண்பவர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வடிவத்தில் அமைத்து, அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கையால் திறப்பு விழாவும் நடத்தினார் கலைஞர்.


'அந்தக் கட்டடத்துக்குள் நான் வர மாட்டேன்’ என்று சிறு பிள்ளைத் தனமாகச் சபதம் போட்டு, கோடிக்கணக்கான அரசாங்கப் பணத்தை அப்படியே கேட்பாரற்றுத் தெருவில் கிடக்கட்டும் என்று நினைப்பவர் ஒரு பொறுப்புள்ள மாநில முதலமைச்சராக எப்படி இருக்க முடியும்?


ஆசியாவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறப்பில் அமைக்கப்பட்டது அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகம். அந்தப் பெருமை கலைஞருக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே, அதை மருத்துவமனையாக்கத் துடிக்கிறார்.


தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் வாதப்பிரதிவாதங்களை வைத்து மோதிக்கொள்வதைத் தவிர்க்க முடியாது. ஆனால், ஆட்சியைப் பிடித்த கட்சி, அரசியல் உள்நோக்கங்களை ஒதுக்கிவிட்டு மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். ஜெயலலிதாவிடம் கடந்த இரண்டு முறையும் அது இல்லை. இப்போதும் இல்லை. வந்ததும் நில அபகரிப்பு வழக்குகளைப் போட்டார். இப்போது எதிர்க் கட்சித் தலைவர்கள் மீதும் பத்திரிகைகள் மீதும் அவதூறு வழக்குகளைப் போடுகிறார்.


பழிவாங்கும் நோக்கில் வழக்குகள் - கைதுகள்; சரிந்து, சிதைந்துவரும் சட்டம் - ஒழுங்கு நிலை; குறுவை பொய்த்து டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குமுறல்; விலைவாசி ஏற்றத்தால் பொதுமக்களின் வேதனை; பேருந்துக் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றால் பரிதவிப்பு... இவைதான் இந்த ஓர் ஆண்டு கால ஆட்சியின் சுருக்கம்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja6y-3oPMROkp8KZRsI4Y259Nsm1W869BVx93x_BtXD-F-fhvnwVmSYjx-ulshXIIuYYnhtYQj3wG50K8FEknlIhQd0YwH9K4BEb-BVKm3_zdScedp-RSffJfnqGrw_D8eHccnlWq1LeE/s400/p7b2.jpg


''தி.மு.க. புள்ளிகள் மீது நில அபகரிப்புப் புகார்கள் கொடுத்தது அனைத்துமே பாதிக்கப்பட்டவர்கள்தானே? அரசாங்கமோ, போலீஸோ, இந்த வழக்குகளைப் போடவில்லையே?''


''சம்பந்தப்பட்ட வழக்குகளின் தன்மைக்குள் நான் நுழைய விரும்பவில்லை. ஆனால், தி.மு.க-வினர் மீது புகார் கொடுத்தால் மட்டும் சட்டப்படி முதல் நிலை விசாரணை ஏதும் இன்றி உடன டியாக போலீஸ் கைதுசெய்த ஆர்வத்துக்குப் பின்னால் அரசியல் உள்நோக்கம்தானே இருக்கிறது?


இரண்டு மூன்று புகார்களைச் சேர்த்துக்கொண்டு உடனே குண்டாஸில் கைதுசெய்கிறார்கள். ஜெயலலிதா செய்தது நியாயமான நடவடிக்கை என்றால், குண்டாஸில் கைதான அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்கிறதே... அது எப்படி? இதில் இருந்தே பழிவாங்கும் நடவடிக்கையாகத்தான் இந்தக் கைதுகள் நடக் கின்றன என்று தெரியவில்லையா?''


''கொடநாட்டில் இருந்தாலும், முதல்வர் அங்கிருந்தே அரசு நடவடிக்கைகளைக் கண்காணித்துச் செயல்பட்டு வந்ததாகத்தானே சொல்கிறார்கள்?''


''ஒன்றரை மாத காலம் அவர் கொடநாட்டில் இருந்தது அவரது விருப்புரிமை. அதனை விமர்சிப்பது ஒரு மக்கள் பிரதிநிதியின் கடமை. பொதுமக்களின் எண்ண ஓட்டத்தைத்தான் நாங்கள் பிரதிபலிக்கிறோம்!''


''தேர்தல் தோல்விக்குப் பிறகு தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் சோர்வுதான் அதிகம் தெரிகிறது. எந்த எழுச்சியும் இருப்பதாகத் தெரியவில்லையே?''


''வெற்றி - தோல்விகளைக் கணக்கிட்டுச் செயல் படும் கட்சி அல்ல தி.மு.க. தோல்வியைப் பார்த்து சோர்வு அடைந்திருந்தால், தலைவர் கலைஞர் அறிவித்த சிறை நிரப்பும் போராட்டத்துக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்திருக்க மாட்டார்கள். இந்தத் தோல்விகூட, கழகத் தொண்டனை மேலும் எழுச்சி அடைய வைத்துள்ளது என்றுதான் சொல்வேன்.


அதேபோல், மிகக் குறுகிய இடைவெளியில் டெசோ மாநாட்டுக்குப் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டார்கள். கட்சிப் பொதுக் கூட்டங்கள் அனைத்து ஊர்களிலும் சிறப்பாக நடக்கின்றன. ஆலோசனைக் கூட்டங்கள் சின்னச் சின்னக் கிளைக் கழகங்களில்கூட முறையாக நடக்கின்றன. எனவே, கழகத் தொண்டர்கள் சோர்வு அடைந்து விட்டதாகச் சொல்வது, அவர்களைச் சோர்வுஅடையச் செய்ய வேண்டும் என்று நினைப் பவர்களின் அபவாதம்!''



''தொண்டர்களின் உற்சாகத்தைக் கோஷ்டி அரசியல்தான் குறைத்துவிடுகிறது என்கிறார்களே? ஸ்டாலின் கோஷ்டி, அழகிரி கோஷ்டி, கனிமொழி கோஷ்டி போன்று பிரிந்து செயல்படுவதாகச் செய்திகள் வருகின்றனவே?''



''திராவிட முன்னேற்றக் கழகம் ஒட்டுமொத்தமாக கலைஞர் கோஷ்டி மட்டும்தான். நீங்கள் சொல்வது வெறும் காட்சிப் பிழை. இவை எல்லாம், ஊடகங்களின் கற்பனை.


 'ஒரே தாயின் வயிற்றில் பிறக்க முடியாமல் தனித் தனி வயிற்றில் பிறந்தாலும் நாம் அனைவரும் உடன் பிறப்புகள்தான்’ என்று பிரகடனம் செய்தவர் பேரறிஞர் அண்ணா. கட்சியில் அனைவரும் உடன்பிறப்புகளே என்ற ஒன்றுபட்ட சிந்தனையுடன், பாசத்துடன்தான் அனைவரும் செயல்பட்டுவருகிறோம். பேதங்களுக்கோ, பிரிவினைகளுக்கோ இங்கே இடம் இல்லை!''



''உங்களது தலைமையைக் கட்சியில் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா?''


''கலைஞர் நல்ல ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார். எனவே, இப்படிப்பட்ட கேள்விக்கே இடம் இல்லை!''




''உங்களுக்குத் தலைமைப் பதவியைக் கொடுத்து கருணாநிதி வழிகாட்ட வேண்டும் என்று உங்களது ஆதரவாளர்களில் சிலர் நினைக்கிறார்களே?''



''என்னுடைய ஆதரவாளர்கள் என்று பிரித்துக் கேள்வி கேட்பதே தவறு!''

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXXMIc-ITEjqBKGxaF6nghqb_zY1WSTVKvbphZ02wVTLthLPTRPG0_HbZ204nlzwj3i8s-p5TECzS9ziOkrulmITT3atrGPo9VD1QCbfDDw4SwWQAg57QjDHhdEttEl3O2SP0gqMFzLFXl/s1600/p10.jpg

''அடுத்த தலைமைப் பதவிக்காகத்தான் நீங்கள் ஓடியாடி உழைத்துக்கொண்டு இருக்கிறீர்களா?''



''பகவத் கீதையின் சிந்தனைக்கு நாங்கள் மாறுபட்டவர்கள் என்றாலும், 'கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்பதற்கு ஏற்ப, பலனைப் பற்றிக் கவலைப்படாமல் எனது கடமையை நான் ஆற்றிக்கொண்டு இருக்கிறேன்.



மிகச் சிறு இளைஞனாக கோபாலபுரம் கிளைக் கழகத்தின் சார்பில் நாடகம் நடத்திய காலத்தில் என் உள்ளத்தில் இருந்த உற்சாகம் இன்னமும் இருக்கிறது. கட்சிரீதியாக இளைஞர் அணியில் இருந்தாலும், பொருளாளராகத் தொடர்ந்தாலும், ஆட்சிரீதியாக சென்னை மாநகராட்சி மேயராக இருந்தாலும், துணை முதல்வராக இருந்தாலும் என்னுடைய பொறுப்புகளின் தன்மையை உணர்ந்து நிறைவேற்றி இருக்கிறேன். 


எதிர்க் கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் என்னுடைய பயணங்களை நான் குறைத்துக்கொள்ளவில்லை. கழகத் தலைவர் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு இதுவரை 14 முறை சிறை சென்றுள்ளேன். அனைத்து அடக்குமுறைகளையும் சந்தித்து உள்ளேன். நான் உழைப்பது எனது உணர்வுகளின் வெளிப்பாடே தவிர, எந்தப் பதவியையும் குறிவைத்து அல்ல!''



''தலைவரின் மகன் என்பதால், கழகத்தில் தனி மரியாதை கிடைப்பது இயல்புதானே?''


''தலைவரின் மகன் என்பது பிறப்பால் நான் பெற்றிருக்கும் சிறப்பு. அந்தச் சிறப்பு மட்டுமே தனி மரியா தைக்கான தகுதியைத் தந்துவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்!''

http://img.photobucket.com/albums/v144/annakannan/risingson.jpg



''நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவது இல்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே?''


''அப்படிச் சொல்பவர்களுக்கு பேரறிஞர் அண்ணா சொன்னதை ஞாபகப்படுத்துகிறேன்... 'அதிமாக முறுக்கேறிய கயிறு அறுந்துவிடும்’ என்றார் அந்தப் பெருந்தகை!''



''கட்சித் தொண்டர்களுடன் அதிக நெருக்கம் காட்டுவதில் உங்களுக்குத் தயக்கம் இருக்கிறதா?''


''ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளுடன் உறவாட என்ன தயக்கம் இருக்க முடியும்? வீட்டிலும் அறிவாலயத் திலும் என்னைச் சந்திக்கக் காத்திருக்கும் அனைவருடனும் அன்போடும் நெருக்கமாகவும்  இருக்கிறேன்.


 வெளியூர் பயணங்களில் தொண்டர்கள் துணையுடன்தான் இருக்கிறேன். அவர்களது வீட்டு விசேஷங்கள் அனைத்துக்கும் உரிமையுடன் செல்கிறேன். கட்சித் தோழர்களோடு நெருங்கி இருப்பதை இன்பத்துள் இன்பம் என்று எண்ணி இருப்பவன் நான். அதில் தயக்கமும் இல்லை. கலக்கமும் இல்லை!''


''நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா?''


''தலைவர் கலைஞரின் படை எப்போதும் எந்தப் போட்டிக்கும் தயாராகவே இருக்கும். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றனவே!''




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-4w42h7SXtRO2ri6YyWe9BtoVzTQ5KIMjDvTGBquho4FaqEwXTdgkgsApcQCCxj8KHCeTZFNns-ut5guNgrJw-r6SEBrhN_UE0fF7V4_AND0qGYP2DsEdNIQ_L7vK3UCRagi62ph9qRo/s400/dm25-07-09.jpg

''வெற்றி வாய்ப்பு?''


''சந்தேகம் என்ன... நாங்கள் பெரு வெற்றி பெறுவோம்!''


''ஒரு வலுவான கூட்டணியைச் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா அமைத்தார். அது வெற்றியைக் கொடுத்தது. அப்படிப்பட்ட திட்டம் தி.மு.க-வுக்கு உண்டா? குறிப்பாக, விஜயகாந்தை உங்களது அணிக்குள் இணைத்துக்கொள்வீர்களா?''



''தலைவர் கலைஞர் எப்போதும் வலுவான அணியைத்தான் அமைப்பார். நண்பர் விஜயகாந்தைப் பொறுத்தவரையில் ஏற்கெனவே ஒரு தவறைச் செய்துவிட்டோம் என்று அவரே ஒப்புக்கொண்டு உள்ளார். ஜெயலலிதாவுக்குப் பாடம் கற்பிக்கத் தேவையான அரசியல் முடிவை நாடாளுமன்றத் தேர்தலில் எடுப்பார் என அவரது கட்சியினரே அவரிடம் எதிர்பார்க்கிறார்கள்!''

நன்றி - விகடன் 


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiA9fHwjbkXXMwG_j1rUvZlHntVg43m4iV5N5qoKEZIywFwOSmyFDa_SOFsFftLiEXEt2ycA-kB91QTE1akrgEpT-Di0s7YrfG5sm2VGDDkO537ptqJYQNM0l7OIUE1-cACFoTJY6zL7yw/s1600/216413_178366115546485_100001192933610_417874_940375_n.jpg


டிஸ்கி - ஃபாத்திமா பாபு பேட்டி விரைவில் வர இருக்கு, அதுக்கான முன்னோட்ட படம் தான் மேலே உள்ளது, மற்றபடி  இந்த பதிவுக்கும், படத்துக்கு, எந்த ஒரு சம்பந்தமும் இல்லை ;-0

Saturday, February 11, 2012

வீறு கொண்ட விஜய்காந்த்தின் சிவப்பு மல்லி பேட்டி - காமெடி கும்மி

http://moonramkonam.com/wp-content/uploads/2012/02/Vijayakanth-jayalalitha-jokes.jpgசென்னை: மதுரைக்கே மல்லிகைப் பூவா, திருநெல்வேலிக்கே அல்வாவா, தேமுதிகவுக்கே சவாலா?. எங்க கிட்ட சவால் விடாதீங்க, அதுக்கெல்லாம் பயப்படுபவன் இந்த விஜயகாந்த் இல்லை. தகுதியே இல்லாத அதிமுகவுடன் சேர்ந்ததற்காக நான்தான் வெட்கப்படுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோபாவேசமாக கூறியுள்ளார்.

 சி.பி - வழக்கமா கோபப்படும் நீங்க வெட்கப்படறதைப்பார்த்து நான் துக்கப்படறேன், துயரப்படறேன்.. படறேன்.. றேன்.. 

சட்டசபையிலிருந்து 10 நாள் தடை விதிக்கப்பட்டதத் தொடர்ந்து தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது தனது பாணியில் படு இயல்பாகவும், கோபமாகவும், சாந்தமாகவும், அமைதியாகவும், பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி நீண்ட நேரம் அவர் பேசினார்.

சி.பி - வசனம் எழுதிக்கொடுத்தது லியாகத் அலிகானா?

விஜயகாந்த் பேச்சின் சில துளிகள்...

நாங்களா அதிமுகவுடன் கூட்டணிக்கு அலைந்தோம்.இவர்கள்தான் வந்தார்கள், இவர்கள்தான் கூப்பிட்டார்கள். நாங்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் இவர்கள் ஜெயித்தார்கள். நாங்கள் மட்டுமில்லை, மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்ததால்தான் ஜெயித்தார்கள்.


சி.பி - அண்ணே ஒரு டவுட்.. கூட்டணி உடன்பாடு நடந்தப்ப உங்க வீட்டுக்கு அம்மா வந்தாங்களா? இல்லையே? நீங்க தானே பம்மிக்கிட்டே போயஸ் போனீங்க? 

எங்களைப் பார்த்து திராணி இருந்தால் என்று கேட்கிறார்.இவர் கடந்த ஆட்சியின்போது 13 இடைத்தேர்தலில் ஜெயித்தாரா. 5 தொகுதிகளில் நடந்த தேர்தலில் போட்டியிடப் பயந்து ஓடியவர் இவர்.



சி.பி - அண்ணண் பயமே இல்லாதவர், பாருங்க வெள்ளை சட்டை போட்டிருக்கார், வெள்ளை சட்டை போட்டவர் பயப்பட மாட்டார்.. அண்ணே கேப்டன் அண்ணே  அவ்ளவ் தில் உள்ள ஆள் எதுக்கு கூட்டணி வைச்சீங்க? வழக்கம் போல தண்ணியா நின்னு சாரி தனியா நின்னு டெபாசிட்டை இழந்திருக்கலாமெ?



மதுரைக்கே மல்லிகைப் பூவா என்பார்கள், திருநெல்வேலிக்கே அல்வாவா என்பார்கள். அதுபோல தேமுதிகவுக்கே சவாலா. எங்களைப் பார்த்து சவால் விடாதீர்கள். அதுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்.

சி.பி - ஆமா, கேப்டன் சம்சாரத்தை தவிர யாருக்கும் பயப்படமாட்டார்.. யார் கிட்டே?

தனியாக போட்டியிட தயார். நாளைக்கே நாங்க ராஜினாமா செய்கிறோம், நீங்களும் வாங்க, கவர்னர் ஆட்சியில் தேர்தலை சந்திப்போம். ரெடியா. மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் வரும்.

சி.பி - ஹா ஹா இது எப்படி இருக்குன்னா 2 லட்சம் கைல வெச்சிருக்கறவன் 10 கோடி வெச்சிருக்கரவனை பார்த்து நான் என் சொத்தெல்லாம் தானம் பண்றேன், நீ அதே போல் பண்ண தயாரா? என கேட்பது மாதிரி



சட்டசபையில் சபாநாயகர் சொன்னதும் நான் உட்கார்ந்து விட்டேன். ஆனால் எதிர்த் தரப்பிலிருந்து குரல் கொடுத்ததால்தான் நான் எழுந்து நின்றேன். நான் எழுந்து நின்றதை மட்டும் காட்டினார்களே, எதிர்த் தரப்பிலிருந்து குரல் கொடுத்ததை ஏன் காட்டவில்லை. அதையும் காட்டியிருக்க வேண்டுமல்லவா, அதுதானே நியாயம்.

சி.பி - அண்ணே, அவங்க எல்லாம் ஆளுங்கட்சி, எப்படி காட்டுவாங்க, அதுவும் இல்லாம நீங்க தான் செமயா காட்டு காட்டுன்னு காட்டிட்டீங்களே,,,

நியாயத்தைப் பத்தி இவங்க பேசக் கூடாது. 13 நாளில் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்தியவர் இவர். இவர் நியாயம் பத்திப் பேசலாமா.

 சி.பி - ஆஹா, மாநில அரசியல்ல இருந்து மத்திய அரசியலுக்கு அய்யா குறி வைக்கறாரு.. 

http://www.vikatan.com/news/images/Building.jpg

தேமுதிக சரியில்லை என்று இப்போது சொல்கிறாரே, அதை ஏன் கூட்டணி முடிவானபோது சொல்லவில்லை, தேமுதிக தொகுதிகளை அறிவித்தபோது ஏன் செய்யவில்லை.

சி.பி - ஏன்னா டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கு.. மப்பு இல்லை ஹி ஹி 

நாங்கள் இல்லாவிட்டால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும். கூட்டணி இல்லாமல் ஒருபோதாவது அதிமுக போட்டியிட்டுள்ளதா. எம்.ஜிஆர். இருந்தபோதும் கூட கூட்டணி இல்லாமல் அதிமுக போட்டியிட்டதில்லை.


சி.பி - அண்ணே, இதெல்லாம் ரொம்ப ஓவர்,.. அவங்க சர்வீஸ் என்ன? உங்க சர்வீஸ் என்ன?என்னதான் மப்புல உளறுனாலும் பார்த்து அளவா உளறனும்

ஊர் கூடித்தானே தேர் இழுத்தோம். எல்லாக் கூட்டணியும் கூடித்தானே வெற்றி பெற வைத்தோம். சட்டசபையில் நாங்கள் மக்கள் பிரச்சினைகளைத்தானே பேசப் போனோம். கூட்டணி குறித்து பேசப் போகவில்லை.

சி.பி - மக்களுக்கு நீங்க 2 பேரும் தான் பெரிய பிரச்சனை.. 

என்னைப் பார்த்தால் அறுவறுப்பாக உள்ளது என்கிறார். இவரைப் பார்த்தால் கூடத்தான் அறுவறுப்பாக உள்ளது, அசிங்கமாக இருக்கிறது. நாங்கள் பொறுத்துக் கொள்ளவில்லையா. அமைதியாக இருக்கவில்லையா.

சி.பி - ஹா ஹா ஹி ஹி ஹோ ஹோ சகிப்புத்தன்மை ஜாஸ்தி இருக்கு போல 2 பேருக்கும்

பேசுவதை சர்வாதிகாரமாக தடுக்கிறார்கள். பேச வாய்ப்புக் கொடுத்தால்தானே தங்களைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

தானே புயல் நிலவரம் பற்றிப் பேச விடவில்லை, பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்துப் பேச விடவில்லை.

இன்றைய நிலவரம் என்று போர்டு போடுவார்களே அது போல இன்றைய மந்திரிகள் என்ற நிலையில் இந்த ஆட்சி உள்ளது.


சி.பி - மந்திரிங்க ஏதாவது தப்பு பண்ணா அவங்க பதவியை பறிப்பதில் என்ன தப்பு?



தூர்தர்ஷன் ஒரு சார்பாகவே நடக்கிறது. ஜெயா டிவியில் எடிட் செய்து தருவதை போடாதே, எல்லாவற்றையும் போடு.

நீங்க மட்டும்தான் மக்கள் பத்திப் பேசுவீங்களா, மத்தக் கட்சிக்காரன் பேச மாட்டானா. ஆணவத்தில் இருக்கிறார் ஜெயலலிதா, மமதையில் இருக்கிறார்.


சி.பி - மமதையில் ஜெ, போதையில் கேப்டன் எப்படி டைட்டில்? ஹி ஹி 

எங்களுக்கு இறங்குமுகம் என்று நீங்கள் சொல்லக் கூடாது. மக்கள் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் மட்டும்தான் தொடர்ந்து ஆட்சி புரிந்தவர். நீங்களும், மத்தக் கட்சியும் மாறி மாறித்தான் ஆள முடிந்தது. இப்போதுதானே விஜயகாந்த் வந்துள்ளான், பொறுத்திருந்து பாருங்கள் என்னை.


சி.பி - ஆமா, அண்ணன் தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி புரியப்போறார், ஏலேய் சம்முவப்பாண்டி, அப்பாவை எழுப்பி விடு

2005ல் கட்சி ஆரம்பித்து தொடர்ந்து தனியாகத்தானே தேர்தலை சந்தித்தேன். நான் தலை குணிந்தாலும் உங்களைத் தலை குனிய வைக்க மாட்டேன் என்று சேலத்தில் சொல்ல விட்டுத்தான், தொண்டர்களின் விருப்பத்திற்கேற்பத்தானே கூட்டு சேர்ந்தேன்.

இவங்களை பாராட்டிக்கிட்டே இருக்கனும், இதுக்குப் பெயரா ஆட்சி. பாராட்ட மட்டும் டைம் தர்றீங்கள்ள, விமர்சனம் செய்யவும் டைம் தாங்க. புள்ளி விவரம் இருந்தா பேசுங்க என்கிறார்கள். ஊரைக் கொள்ளையடிச்சதுக்கு உங்க கிட்ட புள்ளி விவரம் இருக்கா.

யார் மந்திரி, யார் ஐஏஎஸ், யார் ஐபிஎஸ் என்று இவர்களுக்கேத் தெரியாது. இவங்கதான் தகுதி இல்லாதவர்.

நான் யாருக்கும் பயப்படவில்லை. மக்கள் மனது வைத்தால்தான் யாராக இருந்தாலும். நான்தான் புலி என்றால், ஆட்சிக்கு நாளை நான் வந்தாலும் இப்படிப் பேச முடியும். அப்ப என்ன சொல்வீங்க.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkham2GAdl3N4R6oiRfFzlv-mLNwBaDNr4LgOUfmosyvItKUsjqEP4m-OUXUooTktRinl9p1oEU4pb1EjQK1VUWQWC3QBJUCsZOPC9Od3dEVVRcTaKCa8cdP9Cj6v7jfWk2tmvNw9rGKk/s400/6.jpg

ஜெயலலிதா திருந்தி விட்டார் என நினைத்தேன், இல்லை, பழைய குருடி கதவைத் திருடி கதைதான். ஜெயலலிதா திருந்தவில்லை, ஆணவத்துடன் இருக்கிறார். போன 5 வருடமாக எங்கே போனீர்கள். தேர்தலை சந்திக்கக் கூட திராணி இல்லையே உங்களுக்கு. நான் பயப்படாமல்தான் சந்தித்தேன்.

ஆவுடையப்பன் சபாநாயகராக இருந்தபோது இவரை 1 மணி நேரம் பேச விட்டார்கள். இவர் பேசலாம், நாங்க பேசக் கூடாதா.

எனக்குப் பயமெல்லாம் கிடையாது. மரியாதைக்கு மரியாதை, அன்புக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். மிரட்டிப் பணிய வைக்க வைத்தால் அது முடியாது.

தகுதி இல்லை என்கிறார்கள். உங்களுக்குத்தான் தகுதி இல்லை. தகுதியில்லாத உங்களுடன் கூட்டணி வைத்ததை நினைத்து நான்தான் வெட்கப்படுகிறேன்.

நன்றி கெட்டவங்க, எப்படிக் கெஞ்சுனாங்க என்று எனக்குத் தான் தெரியும். பேச நினைத்தால் நான் நிறையப் பேசுவேன். பேசக் கூடாதென்று அமைதியாக இருக்கிறேன்.

கேவலப்பட்ட ஒரு அரசாங்கத்தின் கீழ் மக்களை உட்கார வைத்து விட்டார்கள். அந்தமக்களை தூக்கி நிறுத்தத்தான் நான் இனிமேல் போராடப் போகிறேன்.

இப்போது சொல்கிறேன், என்ன திமிராக சொல்கிறான் என்று தப்பாக நினைக்க வேண்டாம். அடுத்த முறை தேமுதிகதான் ஆட்சியைப் பிடிக்கும். பிடிக்கப் போவதைப் பாருங்கள்.

சி.பி - 2012ல உலகம் அழியும்னு சொன்னாங்க, அப்போ நம்பலை, இப்போ நம்பறேன் 

நாளை முதல் எனது கட்சி எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குப் போவார்கள். நான் மக்கள் மன்றத்திற்குப் போகப் போகிறேன் என்றார் விஜயகாந்த்.

சி.பி - அப்போ டாஸ்மாக், எலைட் பார் போக மாட்டீங்களா? 

Saturday, September 24, 2011

விஜயகாந்த்தை வளர்த்துவிட்டது என் தப்பு - ஜெ ஆவேசம், கேப்டன் திகைப்பு!!

http://www.envazhi.com/wp-content/uploads/2009/04/news_88483393193.jpg 
 
மிஸ்டர் கழுகு: ''விஜயகாந்த்தை வளர்த்துவிட்டது தப்பு!''

கார்டனில் கர்ஜித்த ஜெ.!
 
 
சி.பி - டைட்டில்லயே பிரச்சனை ஸ்டார்ட்.. அப்போ கேப்டனுக்கு அம்மா வளர்ப்புத்தாயா?
                      

ச்சி வெயில் உலுப்பி எடுப்பதை கழுகார் முகத்தில் பார்க்க முடிந்தது. வந்ததும், ஐஸ் வாட்டரை அருந்துவதற்குப் பதிலாக தலையில் தெளித்துக்கொண்டார். சூட்டைக் குறைக்கும் ஐடியா! 




''கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் ஜெய லலிதா கை கழுவுவதைத்தான் தண்ணீர் தெளித்து சிம்பாலிக்காகக் சொல்கிறீரோ?'' என்றோம். அவர், மெள்ளச் சிரித்தபடி,

''அ.தி.மு.க. அணியில் நடப்பதைச் சொல்வதற்கு முன்னால் ஒரு சுவாரஸ்யம்... அதைக் கேட்டுவிடும்!'' என்று பீடிகை போட் டார்!

''தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் விஜயகாந்த் மனம் திறந்து பேசியதை உமது நிருபர் விலாவாரியாக எழுதி இருந்தார். இது கட்சிக்குள் பலத்த சலசலப்பைக் கிளப்பியது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டினார் விஜயகாந்த். 'கூட்டம் நடக்குறது வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது. யாரும் காரில் வர வேண்டாம். ஆட்டோவில் வாங்க. வரும் எல்லாரும் கூட்டமா வராதீங்க... தனித்தனியா வந்துடுங்க. வெளியில் யாரும் நின்னும் பேசாதீங்க!’ என்று மாவட்டச் செயலாளர்களுக்குச் சொல்லப்பட்டு இருந்ததாம். 

கூட்டத்தில் விஜய்காந்த் பேசும்போது, 'உங்களை காரில் வர வேண்டாம். கூட்டமா நிற்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லி இருப்பாங்க. எல்லாம் காரணமாகத்தான் சொன்னோம். நம்ம கட்சி ஆபீஸ்ல ஒரு குண்டு ஊசி கீழே விழுந்தாக்கூட, அதைப் பத்திரிகைக்காரங்களுக்கு யாராவதுசொல்றீங்க. 


சி.பி - குண்டு விழுந்தாதான் செய்தி ஆகும், குண்டூசி விழுந்தாலுமா?

நமக்குள் நாம் என்ன வேணும்னாலும் பேசிக்கலாம். அதை சிலர் பத்திரிகைகளுக்கு சொல்லிட்டா, அவங்களும் பரபரப்பா செய்தி வெளியிடுறாங்க. ரகசியக் கூட்டம்னு நடத்திட்டு அதை வெளியில் சொல்றது எப்படி தர்மமாக இருக்கும்? 


சி.பி - அண்ணே, 2 பேர் மட்டும் கலந்துக்கிட்டாதான் அது ரகசியக்கூட்டம்.. மேட்டர் வெளில வராது..   10 பேர் கலந்துக்கறப்ப கறுப்பு ஆட்டை எப்படி கண்டு பிடிப்பீங்க?  



நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா நிர்வாகிகள் கூட்டம் நடத்துறதையே நான் தவிர்க்க வேண்டி இருக்கும். உள்ளாட்சி தேர்தலில் எதுவும் நடக்கலாம். எதைப்பத்தியும் நீங்க கவலைப்பட வேண்டாம். எல்லோரும் உற்சாகமா வேலைகளைப் பாருங்க. கோவை மாநாட்டில் எல்லா விஷயங்களையும் முடிவு பண்ணிக்கலாம். நான் இப்படி எல்லாம் பேசினேன் என்று அதையும் போய் பத்திரிகைகாரங்ககிட்ட சொல்லிடாதீங்க!’ என்று கர்ஜித்து முடித்தாராம்.''

சி.பி - அண்ணன் தண்ணியை போட்டுட்டு  மப்புல உளர்றதெல்லாம் கர்ஜிக்கற கேட்டகிரில வந்துடுமா? டவுட்டு!




''அதையும் சொல்லீட்டாங்களா?'' என்று நாம் கேட்டதும்... சிரிப்பைச் சிந்தியபடி தொடர்ந்தார் கழுகார்.


''உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி விஷயத்தில் என்ன நடக்கிறது என்கிற கதைக்கு அடுத்து வருகிறேன். விஜயகாந்த் மீது அளவில்லாத கோபத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. அதைவிட அவரை தே.மு.தி.க-வுடன் கூட்டணி வைத்துத்தான் ஆக வேண்டும் என்று சொன்னவர்கள் மீதும் ஆத்திரத்தைக் கொட்டுகிறார். 'அவருக்கு அவ்வளவு செல்வாக்கு... இவ்வளவு செல்வாக்குனு சொல்லி என்ன ஏமாத்திட்டீங்க... அவரைத் தேவை இல்லாம நாமதான் வளர்த்துவிட்டுட்டோம். அப்பவே அவரைக் கூட்டணியில் வெச்சிருக்கக் கூடாது’ என்றாராம் ஜெயலலிதா.


 சி.பி - சபாஷ்!!! ஜெ பச்சை தமிழச்சி என்பதை நிரூபிச்சிட்டாங்க.. காரியம் ஆகும் வரை காலைப்பிடி, ஆன பின் கழுத்தைப்பிடி!!


'என்னை அவமானப்படுத்துற மாதிரி பேசினார்னு தெரிஞ்சே கூட்டணி வைக்கக் காரணம், கருணாநிதிக்கு எதிரான ஓட்டு சிதறிடக் கூடாதுங்கற ஒரே நோக்கம்தான். ஆனால், ஜெயிச்சு வந்ததும் நம்மை அவர் மதிக்கவே இல்லை. அத்தோட அவமானப்படுத்துற மாதிரி நடந்துக்கிறார்!’ என்றாராம் ஜெயலலிதா. 

 சி.பி - கேப்டன் எங்கேம்மா அவமானப்படுத்துனாரு? ஓ பன்னீர் செல்வம் அளவுக்கு இல்லைன்னாலும் அவரளவுக்கு பம்மிக்கிட்ட்டே தானே இருந்தாரு..?


இந்தக் கோபமே கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் மொத்தமாக ரியாக்ஷன் காட்டுகிறது!''


''என்னதான் பிரச்னை?''

''உள்ளாட்சித் தேர்தலில் எப்படியாவது கணிச மான இடங்களை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஏகத்துக்கும் அடக்கி வாசித்தது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு போன்ற விஷயங்களில்கூட சட்டசபையில் பெரிய அளவில் கோபத்தைக் காட்டவில்லை. ஆனால், நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் ஒவ்வொரு 'மூவ்’வும் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படிதான் நடக்கிறது. 

சி.பி - அம்மா கூட கூட்டணி வைக்கறப்பவே  எடுக்கறது பிச்சை.. இதுல கவுரம் பார்க்கலாமா எச்சை? என மனசை பக்குவப்படுத்திக்கனும் பங்காளீகளா?

அதற்காக தொகுதி பங்கீட்டை முடிவு செய்வதற்காக ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்தார் ஜெயலலிதா. பேருக்குதான் அது குழு. அந்த குழு மூலமாக, கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குத் தேவையான தொகுதிகளின் பட்டியலை தயார் செய்து காத்திருந்தார்கள். 

சி.பி - அழைப்பு வரும் அம்மாவிடமிருந்து என காத்திருப்பதும் கடவுள் கண்ணைத்திறந்து நம்மை காப்பாற்றுவார் என நினைப்பதும் பேதமை..
http://www.tribuneindia.com/2008/20080225/nat3.jpg


குழு மூலம் பட்டியலைக் கேட்டு ஜெயலலிதா வாங்கிப் பார்ப்பார்... என்று இலவு காத்த கிளியைப்போல கூட்டணிக் கட்சிகள் காத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான், அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்துகொண்டு இருந்தார் ஜெயலலிதா. சட்டசபைத் தேர்தலில்கூட கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளைத் தவிர்த்துதான் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்போதோ மொத்தத் இடங்களையும் வெளியிட்டு கூட்டணிக் கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டார்.''

சி.பி - அதிர்ச்சி வைத்தியம் அளித்ததால் இன்று முதல் டகால்டி  டாக்டர் ஜெ என அழைக்கப்படுவார்!!!


''தே.மு.தி.க.வின் நிலைமை?''

சி.பி - தலைல முக்காடு...  இனி போக்கிடம் சுடுகாடு.. 


''மூன்று மேயர்கள், 30 நகராட்சித் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட நினைத்தது தே.மு.தி.க. ஆனால், மேயர் பதவிகளை தர முடியாது என்று முதலிலேயே கைவிரித்துவிட்டதாம் அ.தி.மு.க. துணை மேயர் பதவிகள் மற்றும் சில நகராட்சித் தலைவர் பதவிகளை வேண்டுமானால் விட்டுக்கொடுப்பதாக சொன்னதாம். இதெல்லாம் அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக இதுவரையில் அதிகாரப் பூர்வமான பேச்சுவார்த்தை தே.மு.தி.க-வுடன் நடத்தவில்லை. 


சி.பி - பேச்சு வார்த்தை நடத்தனுமா? ஆசையைப்பார்த்தியா அண்ணனுக்கு? ஏச்சு கிடைக்காம இருந்தா போதாதா?

பேருக்கு தொகுதி பங்கீட்டுக் குழுவை நியமித்து, பட்டியல்களை எல்லாம் வெளியிட்டு, தேர்தல் தேதியும் அறிவிக்க வைத்து சரியாக காய்களை நகர்த்தி, கடைசி நேரத்தில் கழுத்தை அறுத்துவிட்டார்கள் என்றே நினைக்கிறது தே.மு.தி.க.''


''கம்யூனிஸ்ட்களுக்கு?''

''கம்யூனிஸ்ட்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதிலும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லையாம். திருவொற்றியூர், சிதம்பரம், கோவில்பட்டி ஆகிய நகராட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசம் இருக்கிறது. அதை வாங்கினாலே போதும் என்று போராடுகிறார்கள். இதே நிலைதான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும். இவர்கள் கதியே இப்படி என்றால்... டாக்டர் கிருஷ்ணசாமி, நடிகர் சரத்குமார் பற்றிச் சொல்லித் தெரியவேண்டியது இல்லை அல்லவா!'' என்று சொல்லி மீண்டும் சிரித்தார் கழுகார்!


''கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஷாக்கானதைத் தானே உம்மிடம் சொன்னேன். இப்போது அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியைக் கேளும்!''


''சொல்லும்!''

''போயஸ் கார்டனில் இருந்து ரிலீஸ் ஆன வேட்பாளர் பட்டியலைப் பார்த்து, அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களே அரண்டுபோனார்கள். காரணம், கட்சியின் மா.செ-க்களுக்கும் ஜெ. செக் வைத்திருப்பதுதான். 'நகராட்சித் தொடங்கி ஒன்றிய கவுன்சிலர்கள் வரையிலான பதவிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்துகொடுக்கும்படி கார்டனில் இருந்து மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவு போடப்பட்டது.

சாதி, செல்வாக்கு உள்ளிட்ட சகல விவரங்களையும் கணக்கிட்டு, தர வாரியான மூன்று நபர்களை வரிசைப்படி ஒவ்வொரு பதவிக்கும் தேர்வு செய்து கொடுக்கும்படி கார்டன் தரப்பு சொல்லி இருந்தது. அதற்கேற்றபடி, தங்களது விசுவாசிகளை முதல் இரண்டு இடங்களிலும், ஆகாத ஆட்களை மூன்றாம் இடத்திலும் குறிப்பிட்டு பட்டியல் அனுப்பினார்கள் மாவட்டச் செயலாளர்கள். 


இந்த விஷயம் அம்மாவுக்கு எப்படித் தெரிந்ததோ... மாவட்டச் செய லாளர்கள் கொடுத்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தவர்களின் பெயர்களை மட்டுமே அவர் டிக் செய்ய, மாவட்டச் செயலாளர்கள் மிரண்டுவிட்டனர். அறிவிப்பு வந்த பிறகு ஆட்களை மாற்றச் சொல்லியும் அம்மாவிடம் பேச முடியாது. அதனால், அம்மாவின் டிக் பட்டியலில் உள்ளவர்கள் தங்களுக்கு ஆகாதவர்களாக இருந் தாலும், அவர்களின் வெற்றிக்காக மா.செ-க்கள் போராட வேண்டிய இக்கட்டு உருவாகிவிட்டது!’ எனச் சொல்லும் சீனியர் நிர்வாகிகள், ஜெயலலிதா இப்படி செய்ததற்கான பின்னணிகளையும் விளக்கினார்கள்...''


''அது என்ன?''

''சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் உள்ளாட்சித் தேர்தலில் தீவிரமாக இருக்கும் என்பதை ஜெயலலிதா தெளிவாக அறிந்து வைத்திருந்தார். சசிகலாவின் உறவினர்கள் கைகாட்டும் ஆட்களுக்குத்தான் மாவட்டச் செயலாளர்கள் முதல் இடம் கொடுத்து இருப்பார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அதனால்தான், மூன்றாவது இடத்தில் இருந்த ஆட்களைத் தேர்வு செய்து மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டும் அல்லாது, சசிகலா வகையறாக்களுக்கும் அம்மா செக் வைத்தார் என்கிறார்கள். 

கார்டனில் இருந்து வெளியான பட்டியலில் இப்போது ஒரு சில இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்கள் மாற்றப்படுகின்றனர். அம்மாவிடம் வேறு விதமான காரணங்களைச் சொல்லி, மாற்றப்படும் பட்டியலில் உள்ள பலருமே சசிகலா உறவினர்கள்தானாம்!''


''தி.மு.க. விஷயத்துக்கு வாரும்!''

சி.பி - அதானே? விகடனின் டார்கெட்டே திமுக தானே?

''கனிமொழி ஜாமீன்தானே இப்போதைய தி.மு.க. விஷயம்... கனிமொழியும், சரத்குமாரும் ஜாமீன் மனுத் தாக்கல் செய்ததும், அதிக நம்பிக்கையுடன் இருந்தார்கள். இரண்டொரு நாளில் ஜாமீன் கிடைத்துவிடும் என்பதுதான் அவர்களது நினைப்பு. ஆனால், நீதிபதி சைனி, 'இந்த மனுவைப் படிக்க எனக்கு அவகாசம் தேவை. அக்டோபர் 1-ம் தேதி பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டு எழுந்து சேம்பருக்குள் சென்றதும், நீதிமன்றத்தில் உட்கார்ந்திருந்த ராஜாத்தி அம்மாள் கலங்கிவிட்டாராம். 

சி.பி - ஜட்ஜ் சைனி நல்லா சைன் பண்ணிட்டார் போல.. 

அவரை ஆசுவாசப்படுத்த கனிமொழியால் முடியவில்லையாம். 'நீ சென்னைக்குப் போம்மா... நான் பார்த்துக்கிறேன்’ என்று மகள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும், தாய்க்கு தாளவில்லையாம். நீதிமன்ற வளாகத்துக்குள் இருக்கும் சிறு செல்லில் வைத்திருந்துவிட்டு... திகார் செல்ல வாகனம் தயாரானதும்தான் கனிமொழியை அழைத்துச் செல்வார்கள். அந்த செல்லுக்குள் உள்ளே நுழையும் வரை கனிமொழியும் தைரியமாகத்தான் இருந்துள்ளார். ஆனால், உள்ளே நடந்து போனவர் தலையைத் திருப்பி ராஜாத்தியைப் பார்த்ததும் கண்கலங்கிவிட்டாராம்.''


''வருத்தம் இருக்கத்தானே செய்யும்!''


''கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவர் குறித்தும் கவலைப்பட்டு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை தி.மு.க-விலும், டெல்லியிலும் பலத்த சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. 'ஆ.ராசா உள்ளிட்டவர்களுக்கு ஏதோ ஒரு சம்பந்தம் இருந்தாலும் கனிமொழி, சரத்குமாருக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லையே?’ என்று கருணாநிதி அந்த அறிக்கையில் சொல்லி இருந்தார். 

'ஆ.ராசாவை கருணாநிதி கழற்றிவிடுகிறாரா?’ என்று சிலர் கேட்க ஆரம்பித்துள்ளனர். கருணாநிதியின் இந்த அறிக்கையையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சோனியா கவனத்துக்கு டி.ஆர்.பாலு கொண்டுசென்றதாகவும் சொல்கிறார்கள். சோனியா ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று கருணாநிதி நினைக்கிறார். இதற்கிடையே, ஆ.ராசா மீது கருணாநிதிக்கே சில வருத்தங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்!''


''அது என்ன?''

''செப்டம்பர் 15-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்வதாக நீதிபதி சைனி சொல்லி இருந்தார். அதற்கு மறுநாள் கனிமொழி ஜாமீன் மனுத் தாக்கல் செய்ய தயாராகிக்கொண்டு இருந்தார். ஆனால், அன்று குற்றச்சாட்டு பதிவு செய்யவிடாமல் டிராய் அறிக்கையை முன்வைத்து ஆ.ராசா பேச ஆரம்பிக்க... அதையே மற்றவர்களும் எடுக்க, விவகாரம் நீண்டுகொண்டே போய் அக்டோபரைத் தொட்டுவிட்டது. 

செப்டம்பர் 30-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்ய இருப்பதாக நீதிபதி சொல்லி இருக்கிறார். எனவே கனிமொழி, சரத்குமாருக்கு ஜாமீன் கிடைப்பது வரைக்கும் ஆ.ராசா அமைதியாக இருக்க வேண்டும் என்று கருணாநிதி சொல்லி அனுப்பி உள்ளாராம்!'' என்ற கழுகார் சிறிது இடைவெளிவிட்டு பேசினார்...


''செப்டம்பர் 15-ம் தேதி அன்று, நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஆர்.சௌந்திரபாண்டியனாருக்கு பிறந்தநாள் விழா. சென்னை பாண்டிபஜாரில் உள்ள அவரது சிலைக்கு  முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக ராஜாத்தி அம்மாள் தவறாமல் வருகை தந்தார். ஆனால், இந்தமுறை ஆப்சென்ட். 'நான் வரலை!’ என்று சொல்லிவிட்டாராம். அவர் டெல்லியிலேயே தங்கி இருப்பது கருணாநிதியை இன்னும் வருத்தமடைய வைத்துள்ளது.


கலைஞர் டி.வி-யின் மேலாளர்கள் மூவர், சமீபத்தில் டெல்லிக்குப்போய் இருந்தார்களாம். திகார் ஜெயிலுக்குப்போய் கனிமொழியைச் சந்தித்துப் பேசினார்களாம். சரத்குமார்தான் டல்லாக காணப்பட்டாராம். கனிமொழி உற்சாகமாய் பேசினாராம். 'இந்த மாத இறுதிக்குள் நான் பெயிலில் வெளியே வந்துவிடுவேன்... அப்பாகிட்ட சொல்லுங்க.' என்று தகவல் சொல்லி அனுப்பினாராம். இது ஒன்றுதான் கருணாநிதிக்கு ஆறுதலான விஷயம்!'' என்று கிளம்பத் தயாரான கழுகார்


''சாதித் தலைவர் ஒருவரை போலீஸ் அதிகாரி சந்தித்ததாக ஒரு செய்தியை உமக்குச் சொல்லி இருந்தேன். அந்த இடத்தில் அப்படி ஒரு சந்திப்பு நடக்கவில்லை என்றும் பரமக்குடி விவகாரத்துக்கும் அந்த அதிகாரிக்கும் அப்படி எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சிலர் அடித்துச் சொல்கிறார்கள்!'' என்றார்.

அவரிடம், ''உள்ளாட்சித் தேர்தல் தேதியைப் பார்த்தோம். அக்டோபர் 17, 19... என்று சோ.அய்யர் அறிவித்திருக்கிறார். ஜெயலலிதா பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகும் அக்டோபர் 20-க்கு முன்னதாக தேர்தல் நடந்துவிடும் என்று சொன்னீர். அது மாதிரியே நடந்துள்ளதே!'' என்றோம்.

அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டவராக வானத்தில் மிதந்தபடி வணக்கம் வைத்தார் கழுகார்!


 1.  நரேந்திர மோடியைப் பாராட்டுவதைப் பார்த்தால்... தமிழகத்தை குஜராத் போல வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்துவிடுவாரா ஜெயலலிதா? 
 
  தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த இரண்டு முக்கிய மோட்டார் நிறுவனங்கள்  குஜராத்துக்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டதற்கு உண்மை யான காரணம் என்ன? இந்த நிலை தொடர்ந்தால் தமிழகம் எப்படி முன்னேற்றத்தில் குஜராத் ஆகும்?

சி.பி - குஜராத் போலா? அப்போ மது விலக்கு கொண்டு வர தில் இருக்கா?


  2.பரஞ்சோதி - கே.என்.நேரு? 


ஒருவர் மீது பாலியல் புகார்!
இன்னொவருவர் மீது கிரிமினல் புகார்!
சபாஷ்... சரியான போட்டி!

 சி.பி - ஆமா, இவங்க 2 பேரும் பெரிய ரஜினி  - கமல்?  கம்பேர் பண்றதுக்கு..

  3.அரக்கோணம் ரயில் விபத்துக்கு உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் ஏன் இத்தனை குழப்பங்கள்?
  சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரு ரயிலைக் கடத்திச் சென்று விபத்துக்குள்ளாக்கியவன் யார் என்று இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லையே! ஒரு அரசாங்கத்துக்குப் பல்லாயிரம் கோடிப் பணத்தை ஆண்டுதோறும் சம்பாதித்துக் கொடுக்கும் ஒரு துறை எப்படி பொறுப்பில்லாமல் இயங்குகிறது பார்த்தீர்களா?

சி.பி - கண்டு பிடிச்ச எல்லாத்தையும் வெளில சொல்லிட்டு இருக்க முடியுமா?பல கேஸ்ல பல மேட்டர் தெரிஞ்சாலும் சில பல காரணங்களால் வெளில சொல்ல முடியாத நிலைமை இருக்கும்.. 


4. 'பெட்ரோல் விலை உயர்வை நாங்கள் ஏற்கவில்லை’ என்கிறாரே தங்கபாலு? 

  தமிழகத்தில் இருக்கும் 'துணிச்சலான அரசியல்வாதி' என்று தங்கபாலுவை நான் சும்மா சொல்லவில்லை என்பது இப்போதாவது தெரிகிறதா?

 சி.பி - காமெடி பீஸுன்னா ஜோக் மட்டும் தான் சொல்லனும்.. இதெல்லாம் சொல்லப்படாது..


 5. மதச்சார்பின்மையைப் பற்றிப் பேச நரேந்திர மோடிக்கு அருகதை உண்டா? 

  கடந்த காலத் தவறுகளில் இருந்து மோடி பாடம் கற்கக் கூடாதா? பிராயச் சித்தம் தேடுவதற்கு எல்லா மனிதர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், அவர் திருந்தி விடக் கூடாது என்று சிலர் நினைப்பதுதான் ஏன் என்று புரியவில்லை!


சி.பி - இந்தக்கேள்விக்கு துக்ளக் சோ நல்லா ஜால்ரா அடிப்பார்.. சாரி. நல்லா பதில் சொல்வார்.

  6.உண்மையான இந்தியர்கள், தூக்குத் தண்டனையை ஆதரிக்கவே செய்வார்கள் என்கிறேன் நான்...?


  தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கால்கோள் நாட்டியவர்களில்  இவரும் ஒருவர். சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட அவர் சிறையில் இருந்தபடி தனது அனுபவங்களை எழுதினார். 'சிறையில் தவம்’ என்ற தலைப்பில் அது புத்தகமாக வந்தது. அந்த டைரியில் 21.2.1922-ம் நாளைப் பற்றி அவர் எழுகிறார்..


'அப்பாத்துரை என்ற சமையல்காரரை தூக்கிலிடப் போகிறார்கள். இன்று நான் அதிகாலையில் எழுந்துவிட்டேன். அன்று தூக்கிலிடப்பட இருந்த மனிதனின் நினைவு என்னை முன்னதாக எழுப்பி இருக்க வேண்டும். என் படுக்கையில் உட்கார்ந்தவாறே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். அந்த நிமிஷங்கள் ஒரு யுகம் போலத் தோன்றின. 

அவர்கள், துரதிர்ஷ்டம் பிடித்த அப்பாத்துரையை கைவிலங்கிட்டு அழைத்து வந்தனர். காலடி ஓசையில் இருந்து அவர்கள் வந்ததை உணர்ந்தேன். சில நிமிஷங்களில் தலைமை வார்டர் என் அறையைத் தாண்டிச் சென்றார். அதிலிருந்து அப்பாத்துரையின் வாழ்வு முடிந்தது என்று தெரிந்து கொண்டேன். கடவுள் கொடுத்ததை மனிதன் பகிரங்கமாகப் பறித்துக் கொண்டான். அதைச் சட்டப்படி நியாயம் என்றும் எண்ணிக் கொண்டான்!’


- இப்படி எழுதி இருப்பவர் மூதறிஞர் ராஜாஜி.

 சி.பி - மரண தண்டனை விதிக்கப்பட்டால் எப்போது மரணம் வரும் என்று காத்திருப்பது மரணத்தை விடக்கொடுமையானது..



 7.  யாரையும் கேட்காமல் பட்டியல் வெளியிட்டு விட்டாரே ஜெ.? 

 சி.பி - அவர் எம்ஜியாரையே மதிக்காதவர்.. கறுப்பு எம் ஜி ஆருக்கு அல்வாதான், ஆனா கசக்கும் அல்வா!!


  யாரைக் கேட்க வேண்டும்_ இது ஜெ. வாய் திறந்து சொல்லாத பதில்!


ஒரு உண்மை மட்டும் புரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் கூட்டணிகளுடன் பேசுவதற்கு முன்னதாக ஒரு பட்டியல் வெளியாகிவிட்டது. 'அம்மாவுக்குத் தெரியாது’ என்று அப்போது சிலர் சொன்னார்கள். இன்று நடப்பதைப் பார்த்தால், அதுவும் 'அம்மாவுக்குத் தெரிந்து நடந்ததுதான்’ என்ற முடிவுக்கு வரவேண்டி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே தனித்து நிற்கலாம் என்ற ஐடியா அவருக்கு இருந்திருப்பதும் தெரிகிறது.





  8.அடுத்த மாதம் திருமணம் ஆகப் போகும் எனக்கு உங்களது அறிவுரை? 


சி.பி - இப்படி கண்டவங்க கிட்டேயும் கேட்காம மனைவி பேச்சை மட்டும் கேட்டு நடந்துக்கப்பா..

  கேள்வி கழுகாருக்குதானே.! புதுமணத்தம்பதிக்கு புத்திமதி சொல்லாதே என்கிறது சாஸ்திரம். ஆனால், வி.ஸ.காண்டேகர் தனது கதை ஒன்றில் சொன்ன வாசகம் கவனத்துக்கு வருகிறது.

'திருமணம் என்பது ஒரு போர். என்னதான் லாகவமாகச் செயல்பட்டாலும் சேதாரம் இருக்கத் தான் செய்யும்’.

சி.பி - ஆனா சேதாரம்  நாட் டூ தாரம் , ஆல் லாஸ் டூ ஹஸ்”பெண்டு”

 9 முதல் நாள் அணு உலைக்கு ஆதரவு... மறுநாள் எதிர்ப்பு.. என்ன ஆச்சு ஜெயலலிதாவுக்கு? 


  பேரறிவாளன், சாந்தன், முருகன் விவகாரத்திலும் இப்படித்தான் நடந்து கொண்டார். இனிமேல் ஜெயலலிதா எந்தப் பிரச்னை தொடர்பாகவும் முதல் நாள் எழுதும் அறிக்கையை ரிலீஸ் பண்ணாமல் இருந்து... மறுநாள் யோசித்த பிறகு வெளியே விட்டால் நல்லது!

சி.பி - நிலையான முடிவு எடுக்கும் முன் சில தடுமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும்.. 


  10. ரயில் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் அடைந்தால் முன்பெல்லாம் ரயில்வே மந்திரி பதவி விலகுவார். ஆனால், தற்போதைய மந்திரி, ஆறுதல் மட்டும் கூறிவிட்டு கடமையை முடித்துக் கொள்கிறாரே?


  ஆறுதலாவது சொல்ல வருகிறாரே!  ஆறு மாதங்களுக்கு முன்னால் பீகாரில் ஒரு விபத்து ஏற்பட்டபோது மத்திய மந்திரி போகவே இல்லை. முன்பெல்லாம் எப்பவாவது விபத்து நடக்கும். அது பெரிய விஷயமாகி பதவி விலகுவார். இப்போது மாதம் தோறும் இந்தியாவில் எந்தப் பகுதியிலாவது நடக்கிறது விபத்து. பதவி விலக ஆரம்பித்தால் விலகிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!

சி.பி - பதவி பெற எவ்வளவு சிரமப்படவேண்டியதா இருக்கு..? கண்டவன் கால்லயும் விழ வேண்டியதா இருக்கு.. உங்களுக்கென்னா ஈசியா சொல்லிடுவீங்க.. அவங்களுக்குத்தானே கஷ்ட நஷ்டம் தெரியும்.. ?

11.  வைகோ இன்னும் எவ்வளவு காலம்தான் மைக் பிடித்துக் கொண்டே இருக்கப் போகிறார்? 


  மைக் இருக்கும் வரை..
 
சி.பி - அவர் ஆட்சியைப்பிடிக்கும் வாய்ப்பு 0.001% கூட இல்லை!!!

நன்றி - ஜூ வி

Wednesday, June 01, 2011

விஜயகாந்த் VS கவுண்டமணி காமெடி கலாட்டா சந்திப்பு

http://blog.photosbyjay.com.au/wp-content/uploads/2010/08/BobbyRajkiran-Sangeet-0258.jpg1. எக்சாம் ஹாலில் பசங்க......

1.எத்தனை ஃபிகருங்க இருக்காங்கன்னு எண்ணுவாங்க.. 

2. லேடி சூப்பர்வைசரை சைட் அடிப்பாங்க.. 

3. எக்சாம் ஹால்ல எத்தனை கதவு,ஜன்னல் இருக்குன்னு எண்ணுவாங்க..

4. பேனா கம்பெனி நேம் என்ன?னு பார்ப்பாங்க.. 

5. நேத்து நைட் படிச்சதெல்லாம் வேஸ்ட்டாப்போச்சேன்னு யோசிப்பாங்க.. 

6.அடுத்த எக்சாம்க்காவது ஒழுங்கா படிக்கனும்னு யோசிப்பாங்க..

எக்சாம் ஹாலில் பொண்ணுங்க.. 

எழுதுவாங்க எழுதுவாங்க.. எழுதிட்டே இருப்பாங்க.. தெரியுதோ தெரியலையோ.. அப்படி என்ன தான் எழுதுவாங்களோ..?

--------------------------------------------

2. ஸ்கூல் ஃபர்ஸ்ட் வருவது எப்படி?

விடிகாலை 4 மணிக்கு  எழவும்.. எழுந்து பல் துலக்கவும்.. (விருப்பம் இருந்தா) குளிக்கவும்.. 5 மணி ஆகிடும்.. அம்மாவை எழுப்பினா திட்டிட்டே ஹார்லிக்ஸ் போட்டு தருவாங்க.. அதை குடிச்சுட்டு 6 மணிக்கு கிளம்பி 7 மணிக்கு ஸ்கூலுக்கு போகவும்.. நீங்க தான் ஸ்கூல் ஃபர்ஸ்ட்.. நாளை வாங்க.. ஸ்டேட் ஃபர்ஸ்ட் வர்றது எப்படி?ன்னு சொல்றேன்.. 


--------------------------------

3. இந்தியா ஈஸ் அவர் கண்ட்ரி..  ஆல் சப்பை ஃபிகர்ஸ் ஆர் மை சிஸ்டர்ஸ்.. ஆல் சூப்பர் ஃபிகர்ஸ் ஆர் யுவர் சிஸ்டர்ஸ்/..ஆல் அமெரிக்கன் கேர்ள்ஸ் ஆர் லவ்வர்ஸ். ஆல் ஆப்பிரிக்கன் கேர்ள்ஸ் ஆர் யுவர் லவ்வர்ஸ்.. ஹி ஹி 


-------------------------

http://www.carolineghetes.com/blog/wp-content/uploads/2011/05/034-girls-dancing-at-indian-wedding.jpg

4. மாப்ளே.. இந்தியா ஃபுல்லா நான் சுத்தி பார்த்துட்டேன்.. 

அதுக்காக எல்லாம் தேசிய விருது தர மாட்டாங்க.. தேசம் பூரா சுத்தி பார்த்தா தேசிய விருதுன்னு உனக்கு யார் சொன்னா? 

--------------------------------------------

5.  விஜயகாந்த் - ஏய்.. மஹாத்மாகாந்தி புள்ள பேரு தெரியுமா?

கவுண்டமணி - தெரியலைங் கேப்டன்.. 

விஜயகாந்த் -  தினேஷன்( DINESAN .). இது கூட தெரியல..சின்ன வயசுல டீச்சர் சொல்லித்தரல?மகாத்மா காந்தி ஈஸ் ஃபாதர் ஆஃப் டினேஷன்னு

கவுண்டமணி - அடேய்.. கலரிங்க் தலையா.. அது ஃபாதர் ஆஃப் த  நேஷன் டா

MAHAATHMA GANDHI IS FATHER OF OUR  THE NATION.. NOT  DINESHAN

-------------------------------

6. உன் மனைவி இப்போ தானே உன்னை அறைஞ்சா..? மறுபடி எதுக்கு 2வது டைம் அறையறா?

அவ முதல்ல அடிச்சது இடது கையால.. இப்போ அடிக்கறது வலது கையால.. இடது கை அடிக்கறது வலது கைக்கு தெரியாத மாதிரி அடிப்பா.. ஹி ஹி 


--------------------------

http://mindyandphil.com/wp-content/uploads/2010/12/wedding_girls_indian_reception_nashville.jpg

7. மாப்ளைக்கு குழந்தை மனசுன்னு எப்படி சொல்றீங்க?

முதல் இரவு அறைல பொண்ணு கூட உக்காந்து தாயக்கரம் விளையாடிட்டு இருக்காரே?

-----------------------

8.  ரெண்டு எறும்புங்க கிளாஸ் மேட்டுங்க.. அதுல ஒரு எறும்பு டெயிலி ஒழுங்கா ஸ்கூலுக்கு வந்தது.. இன்னொரு எறும்பு அடிக்கடி கட் அடிச்சுட்டு இருக்கு.. ஏன்?

அது தான் கட் (CUT)டெறும்பு ஆச்சே?

---------------------------------

9. மழைக்காலத்துல போர்  வந்தது தப்பா போச்சா.. ஏன்?

மன்னர் புற முதுகிட்டு ஓடி வர்றதுக்குப்பதிலா.. புற முதுகிட்டு நீந்தி வர்றார்.. 

---------------------------------------

10. விஸ்வரூபம் எடுப்பேன்னு தலைவர் அறிக்கை விட்டிருக்காரே?

அதான் ஏற்கனவே அந்த டைட்டிலை கமல் ரிசர்வ் பண்ணீட்டாரே?விஸ்கி ரூபம்னு வேணா எடுக்கலாம்.

---------------------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9ymaf84iyiJEc9ylwrWL-PFa_ahnjLM1hnius6fCfFnc1fVg5tLuuM3WQ-7rBQhFgaDOyWcAX6FdafAJq1xAWCFCDLlcgX6iVr2aB0mpTLDm0OQVhliIDs9427-fQ30eSoc1QzyH7-R54/s1600/2978026369_2a3dcd55bb_o.jpg

Monday, February 28, 2011

குடிகாரருடன் கூட்டணி ஏன்?


http://sirippu.files.wordpress.com/2007/02/image004.jpg 
1. மோஹனா,  மெரீனா  பீச்ல  வெயிட்  பண்ணு.  6 p.m.-க்கு  நானும் , சதீஷும்  வர்றோம்எங்க  2  பேர்ல  யாரை  லவ்  பண்றேனு  தெளிவா  ஒரு  முடிவு  சொல்லிடு.

ஓக்கேஸ்பெக்ட்ரம் மாதிரி முதலில்  வருபவர்க்கே  முன்னுரிமைமறந்துடாதீங்க?

--------------------------------------------


2. தலைவருக்கு  அரசியல்  செல்வாக்கு  இருந்தும்  ஏன்  பெயில்-  வெளில  வர்லை?

பேப்பர்  நியூஸ்-  தலைவர்  ‘பெயில்’-னு  போடுவாங்கஏற்கனவே  ஸ்கூல்  லைஃப்ல  பல  பல  FAILS  பார்த்தாச்சு.

-----------------------------------------


3. தலைவர்  தி.மு.அவர்  சம்சாரம்  .தி.மு.பையன்  காங்கிரஸ். வீட்ல  சண்டை  வராதா?

அட  நீங்க  வேறமூணு  பேரும்  கட்சில  சீட்  வாங்கிட்டாங்கஇப்ப பாருங்க...  ஒரே  குடும்பத்துல  3  M.L.A.  இதுதான்  ரியல்  அரசியல்  குடும்பம்.

-------------------------------------


4. ரவுடி  அரசியலில்  எனக்கு  நம்பிக்கை  இல்லைனு  தலைவர்  சொல்றாரே?

அவரோட  கட்சில  இருக்கற  ரவுடிகளை  நம்ப  முடியறதில்லையாம். திடீர்  திடீர்னு  கட்சி மாறிடறாங்களாம்.

-----------------------------------------------


5. தலைவர்  ஒரு  கறார்  பேர்வழியாமே.

ஆமா...  20  சீட்டாவது  வேணும்னு சொன்னவர் இப்போ 2 சீட்னாலும் ஓக்கேங்கறார், கூட்டணிக்கு  தயார்ங்கறார்அரசியலில்  நிரந்தர  எதிரி  இல்லைங்கறார்.

----------------------------------------------
 http://thatstamil.oneindia.in/images21/cinema/radhika-300a1.jpg

6. ஆட்சியில்  பங்கு  வேணும்னு  தலைவர்  கேட்கறாரே...  எப்படி  சமாளிக்கப்  போறாங்க...?

நேஷனலிஸ்டு  BANK  (பாங்க்)நாலை  அவர்  பேர்ல  எழுதி  வெச்சு  உடன்படிக்கை ஏற்படற  மாதிரி  பண்றாங்களாம்.

------------------------------------


7. தலைவர்  ஒரு  சந்தர்ப்பவாதியாமே?

ஆமா...   மகளிர்  அணித்தலைவி  கூட  எப்படி  இல்லீகல்  காண்டாக்ட் வெச்சுக்கலாம்னு  சந்தர்ப்பத்தை  எதிர்பார்த்துட்டு  இருக்காரு.

------------------------------------


8. வெற்றி  அல்லது  வீர  மரணம்-னு  தலைவர்  அறிக்கை  விட்டிருக்காரே?

சப்போஸ்  அவரால  தொகுதில  ஜெயிக்க  முடியலைன்னா  எதிர்த்து  நிற்கற  ஆளுக்கு  வீரமரணம்  பரிசா  வழங்கப்  போறாராம்.

--------------------------------------


9. அரசியல்வாதிகள்  ஓட்டுப்பொறுக்கிகள்னு  சொன்னதும்  தலைவர்  கோபப்படறாரே?

ஆமா...  அவர்  சாதாரண  பொறுக்கிதானாம்.

------------------------------------


10. தலைவர்  ஒரு  லேடி  சபலிஸ்ட்-னு  எப்படி  சொல்றே?

என்னைக்  கவர்ந்த  பெண்கள்ங்கற  தலைப்புல  ஒரு  கட்டுரை  கேட்டதுக்கு  12,000  பெண்கள்  லிஸ்ட்  குடுத்தாராம்.

--------------------------------------

11. எப்பவும் போதைலயே இருக்கறவர்னு கேவலமா திட்டிட்டு இப்போ அவர் கூடவே கூட்டணி வெச்சிருக்கீங்களே.. ஏன்?

தண்ணி அடிச்சுட்டு 24 மணி நேரமும் போதைலயே இருப்பாரு.. நம்மை எந்த கேள்வியும் கேட்க மாட்டாரு...இந்த மாதிரி கேள்வியே கேட்காத ஆள்தான்யா கூட்டணிக்கு சவுகர்யம்...
----------------------------------------------

டிஸ்கி 1-  சில நாட்களுக்கு முன் நான் எழுதிய  பதிவான

சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?

 புதிய தலைமுறை இதழ் நிருபரான திரு யுவகிருஷ்ணா அவர்கள் நான் படித்ததிலேயே சிறந்த மொக்கைப்பதிவு இதுதான் என கமெண்ட் போட்டு கூகுள் பஸ்சில் பிரபலப்படுத்தினார். அதுவரை 2300 பேர் மட்டுமே படித்த அந்த இடுகை 3876 பேர் படிக்க உதவினார், அவருக்கு மிக்க நன்றி. தொடர்ந்து என் எல்லா பதிவுகளையும் இதேபோல் திட்டி கமெண்ட் போட்டு என் பதிவுகளை ஹிட் ஆக்கும்படி அவரை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

டிஸ்கி 2 - ஹிட்ஸின் வெற்றி ரகசியம் தெரியாமல் இத்தனை  நாட்களாக மண்டையை  உடைத்துக்கொண்டிருந்த எனக்கு இப்போதான் பதிவுலக சூட்சுமம் புரிந்திருக்கிறது. எனவே இனி ரெகுலராக எனக்கு கமெண்ட் போடும் நண்பர்கள் தங்கள் தளத்திலோ,அல்லது கூகுள் பஸ்ஸிலோ என் பதிவின் லிங்க் கொடுத்து நான் படிச்ச மொக்கை பதிவு, மோசமான பதிவு , ரொம்ப கேவலமான பதிவு என கமெண்ட் போட்டு என் பதிவை பிரபலப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.ஹி ஹி 

டிஸ்கி - 3 : சனி ,ஞாயிறு நெட் பக்கம் வராதவர்களுக்காக 



3. ஆரானின் காவல் -ஹாலிவுட் ரேஞ்ச் - சினிமா விமர்சனம்

 

4. DRIVE ANGRY - ஹாலிவுட் சினிமா விமர்சனம் - 18 +