Tuesday, May 22, 2012

நாட்டாமைகளும் என் ஆற்றாமைகளும் -சென்னை மெகா ட்வீட்டப் பாகம் 4

 

சமூக வலைத்தளங்களுக்கு வர்றவங்க பல வகை.. டைம் பாஸ்க்காக வர்றவங்க,வீட்டில், பணிபுரியும் இடத்தில் ஏற்படும் மனத்தாங்கல்கள், நெருக்கடிகளை மறக்க வருபவர்கள்,முகம் தெரியாத நட்பை விரும்புவர்கள்,மீடியாக்களின் கவனத்தை ஈர்க்க இதை ஒரு கலனாக ,களனாக கொள்பவர்கள் என சொல்லிக்கிட்டே போகலாம்.. 


நான் முதன்முதலா பிளாக் உலகத்துக்கு வந்தது 2010 ஜூலை 17...அப்போ ட்விட்டர் பற்றி எதுவும் தெரியாது.. பிளாக்கிற்கான லிங்க்கை ஷேர் பண்றதுக்கு மட்டுமே அதை யூஸ் பண்ணிட்டு இருந்தேன்..ஆனந்த விகடன் வலை பாயுதே பகுதியில் ட்விட்டர்களின் ட்வீட்ஸ் தான் என்னை ட்விட்டர் உலகத்துக்கு கொண்டு வந்தது. குறிப்பாக ஆல் தோட்ட பூபதி எனும் கரூர் ஜெகனின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தது.. 

2011 ஜனவரி மாசம் ட்விட்டர் உலகத்துல நான் எண்ட்டர் ஆனேன்.. கிட்டத்தட்ட 18 வருஷங்கள் நான் பத்திரிக்கைத்துறையில் பணி ஆறியதால் ஐ மீன் ஜோக்ஸ் எழுதி வந்ததால் அந்த பழக்கம் அப்படியே வந்தது.. ஜோக் ஃபார்மேட் எனக்கு நல்லா செட் ஆச்சு.. 2 பேர் பேசிக்கற மாதிரி மேட்டர் தான் எனக்கு வந்தது,.,. 

 ஆனா ட்விட்டர் ரொம்ப அட்வான்ஸ்.. நறுக் சுருக் என ஹைக்கூ வடிவத்தில் 140 எழுத்துக்களில் படிப்பவரை கவர வேண்டும் என்ற சவால் என்னை பார்த்து எள்ளி நகையாடியது.. ஆரம்பத்துல ரொம்பவே சிரமப்பட்டேன்.. ( படிக்கறவங்க அதை விட சிரமப்பட்டாங்க)


 இன்னொரு மேட்டர்.. எனக்கு டெக்னிக்கல் நாலெட்ஜ் சுத்தமா இல்லை.. மென்ஷன் பார்க்கத்தெரியாது.. டி எம் அனுப்ப, பார்க்க தெரியாது.. மெயில் ஐ டிக்கு வர்ற டி எம் தான் பார்ப்பேன். ரிப்ளை பண்ணத்தெரியாது.. அதனால ஆரம்பத்துல சிலர் “ இவன் தலைக்கனம் பிடிச்சவனா இருக்கான்.. நோ ரிப்ளை டூ அதர்ஸ்”னு ஒரு டாக் இருந்துச்சு.. 


2011 ஏப்ரல்ல இருந்து தான் கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் கத்துக்கிட்டேன்.. ராஜன் என் ட்விட் ஒண்ணை RT  பண்ணுனாரு.. கலைஞரை நக்கல் அடிக்கும் ட்வீட் அது.. ஆனந்த விகடன்ல வந்த முத ட்வீட் அதுதான்.. 



 அதுக்குப்பிறகு ட்வீட்ஸ்ல  ஒரு ஃபார்முலா வெச்சுக்கிட்டேன். அதாவது கரண்ட் நியூஸ் ஏதாவது 2 லைன்ல எடுத்து போட்டு அதை  பற்றி ஒரு கமெண்ட் அடிப்பது... காதல் கவிதை அல்லது ஏதாவது ஒரு தத்ஸ் , மூணாவதா நம்ம மனசுல என்ன நினைக்கறோமோ அதை அப்படியே எந்த விதமான அலங்காரங்களோ இல்லாம  சொல்றது.. 

 எனக்கு என்ன பிரச்சனைன்னா எங்க வீட்ல நெட் கிடையாது.. ஆஃபீஸ் டைம்ல டைப் அடிச்சாத்தான்.. சமீபத்துலதான் ஆண்ட்ராய்டு ஃபோன் வாங்குனேன்.. அதுவரை பேசிக்  மாடல் சாதா ஃபோன் தான்.. 


 ட்விட்டர் உலகை கூர்மையா கவனிச்சதுல எனக்குத்தோன்றியதை அப்படியே உங்க கிட்டே ஷேர் பண்ணிக்கறேன்.. நல்ல படைப்பு எப்போ வந்தாலும், அதை யார் படைச்சு இருந்தாலும் உடனே அதை மற்றவங்களுக்கு ஷேர் பண்ணிக்குங்க. அதாவது  RT பண்ணுங்க.. நம்மாளுங்க பண்ற 2 மிஸ்டேக்ஸ் என்னான்னா ஐ ஆம் கார்க்கி, பாரத் பாரதி ,ஆல் தோட்ட பூபதி இந்த மாதிரி பிரபல ட்வீட்டர்கள் RT பண்ணுன பிறகு  அவங்களும் RT பண்ணறாங்க.. 

 அது தேவையே இல்லை.. நமக்குப்பிடிச்சிருந்தா உடனே அதை ஆர் டி பண்ணனும்.. ரெண்டாவது நம்ம டைம்லைன்ல ஏதாவது படைப்புகள்  RT ஆனா நம்ம ஆளுங்க அதை படிச்சுட்டு அப்படியே விட்றாங்க. ஆர் டி யின் முக்கிய நோக்கமே புதிய படைப்பாளியை அறிமுகம் செய்வதுதான்.. நல்ல படைப்பு நம்ம டைம்லைன்ல வந்தா உடனே நாம செய்ய வேண்டியது அந்த படைப்பாளியை  ஃபாலோ பண்றதுதான்.. ஆல்ரெடி நாம ஃபாலோ பண்ணி இருந்தா நம்ம ஃபாலோயர்ஸ்க்கு இவர் இந்த வகைல கெட்டிக்காரர், இவரை ஃபாலோ பண்ணுங்க  அப்டின்னு சொல்லிடனும்.. 


ட்விட்டர்ல புது ஃபார்மேட்ல யார் யார் -யார் யாரை ஃபாலோ பண்றாங்க அப்டி ஸ்டேட்டஸ் காட்டுனப்போ ஒரு பிரபல பெண் ட்விட்டர் நக்கலா கமெண்ட் அடிச்சாங்க “ பொண்ணுங்களா தேடித்தேடி போய் ஃபாலோ பண்றாரு”ன்னு.. நான் கேட்டேன்” அதுல என்ன தப்பு? தமிழனின் மொய்க்கு மொய் ஃபார்முலா தெரியுமா? நம்மை யார் ஃபாலோ பண்றாங்களோ அவங்களை நான் ஃபாலோ பண்றேன்.. இதுல கிண்டல் பண்ண என்ன இருக்கு? 



 என்னோட ஃபாலோயர்ஸ் எண்ணிக்கைக்கும் ஃபாலோயிங்க் எண்ணிக்கைக்கும் 524 தான் வித்தியாசம்.. எத்தனை பேரு அப்படி ஃபாலோ பண்றாங்க? 3000 ஃபாலோயர்ஸ் வெச்சிருக்கற பல ட்வீட்டர்ஸ் 300 பேரைக்கூட ஃபாலோ பண்ணாம இருக்காங்க.. அதுக்காக  நான் சொல்ல வர்றது அவங்களை எல்லாமே ஃபாலோ பண்ணனும்கற அர்த்தம் இல்லை.. அது அவங்கவங்க விருப்பம்.. டைம் லைன் நம்பிக்கும்..(நிரம்பிடும்) ஒரு குறிப்பிட்ட அளவு தான்  ஃபாலோ பண்ண முடியும்.. 

நான் ஒரு சாதாரண ஆள் தான். என் ட்வீட்ஸ் எல்லாம் சுமாராத்தான் இருக்கும். இதுவரை 21,900 ட்வீட்ஸ் போட்டிருக்கேன்னா அதுல நல்லாருக்குன்னு தேறுனது 345 தான்.. அதிக  RT பெற்றவை அதாவது 10 டூ 15 ஆர் டி ஆன ட்வீட்ஸ்னு கணக்கெடுத்தா 212 தான் இருக்கும்.. மீதி எல்லாமே மொக்கை தான் .. சும்மா ஜாலிக்கு டைம் பாஸ்க்கு போட்டவை தான்.. 

நான் பாராட்டுக்கோ, அங்கீகாரத்துக்கோ அலையற ஆள் இல்லை.. எல்லாரும் நம்மை , நம்ம படைப்பை பாராட்டனும்னு வெறி இல்லை.. ஆனாலும் மத்தவங்க நம் படைப்பை பாராட்ட்டுனா ஆர் டி செஞ்சா ஒரு சந்தோஷம்.. மன திருப்தி அவ்ளவ் தான்.. 

 ஒரு படைப்பாளிக்கு அதிக  மன திருப்தியை தருவது முகம் அறியாத அன்பு உள்ளங்களின்  அங்கீகாரமும், பாராட்டுமே.. ஏன்னா நம்ம வீட்ல இருக்கறவங்க பெரும்பாலும் நம்ம படைப்பை கண்டுக்க மாட்டாங்க . நம்மையே கண்டுக்க மாட்டாங்க .. அதனால  மத்தவங்க பாராட்டும்போது ஒரு அல்ப சந்தோஷம் அவ்ளவ் தான் .. 

இந்தியாவின் நெம்பர் ஒன் ட்வீட்டர் ஐ ஆம் கார்க்கி என் ட்வீட்ஸ் 18 ஐ இதுவரை ஆர் டி பண்ணி இருக்கார். கமர்ஷியல் ட்வீட்டர் ராஜன் இதுவரை 14 ட்வீட்ஸ் ஆர் டி பண்ணி இருக்கார்..தோட்டா 12 ,  குடத்தில் இட்ட  விளக்குகளை குன்றில் ஏற்றிய தீபங்களாய் ஆக்கும் பாரத் பாரதி இதுவரை 43 ட்வீட்ஸ் ஆர் டி பண்ணி இருக்கார்.. ஆனா ரொம்ப நாளா ஒரு குறை எனக்கு.. ஒரு பிரபல ட்வீட்டர் மட்டும் இதுவரை என் ஒரு ட்வீட்டைக்கூட ஆர் டி செஞ்சதே இல்லை .. அதாவது என் தனிப்பட்ட ட்வீட்.. ( பிளாக் லிங்க் ஷேர் அல்ல )

நானும் இதை முதல்ல கவனிக்கலை.. எனக்கு ஒரு  டவுட்.. நாம தான் ரொம்ப மொக்கை போடறோமா? அல்லது அவர் டைம் லைன்ல இல்லாதப்ப போடறதால அவர் கவனிக்கலையோன்னு .. அதனால நான் என்ன செஞ்சேன்.. அவர் டைம் லைன்ல இருக்கறப்போ ட்வீட் போட ஆரம்பிச்சேன்.. ஆனா அவர் கண்டுக்கலை.. எனக்கு புரிஞ்சிடுச்சு.. அண்ணன் பாலிடிக்ஸ் பண்றார்னு.. 



 இதை அப்படியே விட்டிருப்பேன்.. ஒரு நாள் என்ன செஞ்சாரு? அண்ணன் டைம் லைன்ல “  என்னய்யா ட்வீட் போடறே? ரொம்ப மொக்கையா இருக்கே?” அப்டின்னு கேட்டாரு.. வழக்கம் போல நான் ஸ்மைலி போட்டுட்டு கிள ம்பிட்டேன்.. 

 இது ஒரு டைம் 2 டைம் இல்லை 7 முறை நடந்தது.. அதாவது லேடீஸ் எல்லாம் டைம் லைன் இருக்கற டைமா பார்த்து வேணும்னே நோஸ்கட் பண்ண வேண்டியது.. எனக்கு செம கடுப்பு ஆகிடுச்சு.. என்னை மொக்கைன்னு சொன்னதுக்காக இல்லை.. 

 ஏன்னா என்னை ஆல்ரெடி ட்வீட் உலகின் வெற்றி மாறன் ஐ கிருஷ், கார்க்கி,ராஜன் உட்பட பலர் அப்படி சொல்லி இருக்காங்க.... அவங்க மேல ஏன் எனக்கு வருத்தம் இல்லைன்னா என் நல்ல படைப்பு வந்தப்ப அவங்க ஆர் டி பண்ணி இருக்காங்க.. அவங்க தான்யா உண்மையான் நண்பன்க்கு அடையாளம்.. படைப்பு நல்லா இருக்கறப்போ அங்கீகாரம் கொடு.. நல்லா இல்லைன்னா  திட்டு .. வேணாம்கலை.. 

ஒரு படைப்பாளியை பாராட்டனும்னா அவனை டைம்லைன்ல பாராட்டு.. அவனது குறைகளை சுட்டிக்காட்டனும்னா டி எம் ல சொல்லு.. என் ஃபோன் நெம்பர் இருக்கு மெசேஜ் பண்ணு.. அல்லது கால் பண்ணி சொல்லு.. அதை விட்டுட்டு டைம் லைன்ல எதுக்கு கேவலப்படுத்தனும்?

 அண்ணன் ரெகுலரா கடலை போடும் ஒரு பிரபல பெண் ட்வீட்டர் கிட்டே என் ஆதங்கத்தை டி எம் ல சொன்னேன்.. அவங்க ஒத்துக்கவே இல்லை... அவர் அப்படிப்பட்ட ஆள் கிடையாது. பலரது ட்வீட்சை ஆர் டி பண்ணி இருக்காரு அப்டின்னங்க.. நானும் அதை ஒத்துக்கறேன். ஆனா என் ட்வீட்ஸ் அவர் ஏன் ஆர் டி பண்ணலை?ன்னு கேட்டேன்.. வாக்குவாதம் வளர்ந்தது... 

 நான் சொன்னேன்.. சரி . நான் இதுவரை போட்ட கேவலமான, ரொம்ப மொக்கையான ட்வீட்ஸ் 2 தர்றேன் அதை உங்க ஐ டி ல போடுங்க.. அண்ணன் என்ன பண்றார்?னு பார்க்கலாம்னேன்.. அவங்க  அதுக்கு ஆரம்பத்துல சம்மதிக்கலை.. உங்க ட்வீட்ஸை நான் எப்படி போட முடியும்? அதுவும் என் பேர்ல? வேணும்னா உங்க ட்வீட்டை நான் ஆர் டி பண்ற மாதிரி போடவா?ன்னாங்க


 ம்ஹூம் அது சரிப்படாது.. எனக்குத்தெரிய வேண்டியது./. அவர் படைப்பை பார்த்து ஆர் டி பண்றாரா?  அல்லது ஆளை பார்த்து ஆர் டி பண்றாரா? என்பதே அப்டின்னேன்.. 


 நீண்ட யோசனைக்குப்பின் அந்த பெண் ட்வீட்டர் என் மொக்கையான, படு கேவலமான ட்வீட்ஸ்  ரெண்டையும் போட்டார்.. அந்த ட்வீட்ஸ் 2ம் எவ்வளவு கேவலம்னா தினத்தந்தி குடும்ப மலர்ல கூட வராது அவ்ளவ் கேவலம்,,. அவர் பேருல போட்டுட்டாரு.. 


 ட்வீட் போட்ட 4 வது நிமிஷத்துல அந்த 2 ட்வீட்ஸ்ல ஒண்ணை அண்ணன் ஃபேவரைட் பண்ணினாரு.. ஒண்ணை ஆர் டி செஞ்சாரு,.. சும்மா இல்லை முன் குறிப்பா அவேசம் ட்வீட்  அப்டின்னு.. ஹய்யோ அய்யோ 

 அந்த பெண் ட்விட்டர்க்கு முகமே இல்லை.. எனக்கு படு திருப்தி.. அவரது முக மூடியை கிழிச்சதுல.. 



இப்பவும் நான் அவர் பேரை குறிப்பிட முடியும்.. ஆனா அப்புறம் அவருக்கும் , எனக்கும் வித்தியாசம் இல்லாம போயிடும்.. நான் சொல்ல வருவது  மற்றவர்களை மற்றவர் முன்னிலையில் பாராட்டுங்கள், குறைகளை டி எம்மில் சொல்லுங்கள் என்னும் கருத்தைத்தான்.. மற்றபடி அவரை குறை கூறும் எண்ணம் இல்லை.. 


அடுத்த பதிவில் மதுரை டாக்டர் ரியாஸ் உட்பட 167 பேரை பிளாக் செஞ்ச பிரபல ஆண் ட்வீட்டர் பற்றிய ஒரு அலசல்.. 


சினிமா விமர்சனத்தில் இயக்குநர் பற்றி அவர் படைப்பை பற்றி நீ மட்டும் குறை சொல்லலாமா? என கேட்டுடாதீங்க .. அது வேறு, இது வேறு..அதுவும் இல்லாம சினிமா விமர்சனத்துல இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள், ரசித்த வசனங்கள் எல்லாம் சொல்லிட்டு கடைசியாத்தான் இயக்குநரிடம் சிலகேள்விகள் என லாஜிக் மிஸ்டேக்ஸ் பற்றி கேட்டிருப்பேன்




இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html

 பாகம் 3  -பெண் குயின்ஸ் - http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-3.html



  பாகம் 5 - ஒரு தன்னிலை விளக்கம் http://www.adrasaka.com/2012/05/5.html


பாகம் 6 - பிரபல ட்வீட்டர்களின் இருண்ட பக்கங்கள்-http://www.adrasaka.com/2012/05/6.html
 



உலகின் சிறந்த காதல் வாகனம் எது? ஆராய்ச்சி முடிவு ( ஜோக்ஸ்)

1.பின் சீட் ( கேரியர் ) இல்லாத சைக்கிள் தான் உலகின் சிறந்த காதல் வாகனம்


-----------------------

2. நீ அழகிய காதல் புத்தகம்.. அதற்கான விமர்சனங்கள் என் அன்பு முத்தங்கள்


--------------------------------

3. மருதமலைக்குக்கூட்டிச்செல்லாமலேயே மயில் தோகையை காட்டிச்சென்ற கூந்தல் உன்னுது..உன் அம்மாவின் மடியில் நீ கண்ட நிம்மதியை தரும் அன்பு என்னுது


------------------------------

4.என்னைப் பற்றிப் பேச ஜெயேந்திரருக்கு தகுதி இல்லை - ரஞ்சிதா #  அப்போ  பாட்டாவே படிச்சுடட்டுமா? - ஜெயேந்திரர்



-------------------------------

5.  ஓங்கி மிதித்து என் உயிரைக் காப்பாற்றினார் நித்தியானந்தா - மதுரை ஆதீனம் # ஓங்கி மிதிச்சா வீங்கித்தானே போகும்?


-----------------------------


பிரதமர் துள்ளுவதோ இளமை........... அன்றைக்காவது பேசியிருப்பாரா????


6. ஃபிகருங்க டைட் ஃபிட்டிங்க் டிரஸ் போட்டா பசங்க லூஸ் ஆகிடுவாங்க, லூஸ் ஃபிட்டிங்க்ல டிரஸ் போட்டா பசங்க டைட் ஆகிடுவாங்க # டிரஸ்ஸாலஜி


----------------------

7. அத்தான், உங்க கேர்ள் ஃபிரண்டை மீட் பண்ணனும்னீங்களே?

 அட, இப்போதான் மீட் பண்ணிட்டு வர்றேன்..

என்ன? மீட்டிட்டு வர்றீங்களா? அவ என்ன வீணையா?


---------------------

8. எந்தவிதமான ஆர்ப்பாட்டமும்,கூட்டமும், பரபரப்பும் இல்லாத அழகிய அமைதியான சந்திப்பு நம் விழிகளின் நேர் நோக்கு நாள் # ஒயில் ஜங்க்‌ஷன்

-------------

9. உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர் - ஜிஞ்சிதா #  நல்ல வேளை, ரசிகர்கள்னு சொன்னீங்க.. ஹி ஹி


----------------------------

10.மிஸ், சினிமாவுக்கு போலாமா?

 சாரி, அதுல இண்ட்ரஸ்ட் இல்லை..


அப்போ ஃபைனான்ஸ் கம்ப்பெனிக்குத்தான் போவனும், அங்கே தான் வட்டி தருவாங்க

-------------------------






11. லண்டனில் ஒரு நாளைக்கு எட்டு முறை கண்ணாடி பார்க்கும் பெண்கள் # நல்ல வேளை , தமிழ் நாட்ல இன்னும் சர்வே எடுக்கலை


----------------------

12. தமிழகத்தை ஆள தகுதி வாய்ந்தது பா.ஜ.- இல.கணேசன் # சட்ட சபையை பிட்டு பட சபையா மாத்தவா?



----------------------

13.  விஜய் டி வில சினேகா கல்யாண முகூர்த்தத்தை லைவ்வா ஒளி பரப்புனாங்களாம்.. சன் டி வி போட்டிக்கு வேற ஏதாவது முகூர்த்தம் ஒளிபரப்புவாங்களா?



---------------------------

14. கவர்ச்சியாய் நடிக்க நான் ரெடி...! ரம்யா நம்பீசன்!!# மேடம், ஒண்ணா கவர்ச்சி காண்பிங்க, அல்லது நடிங்க, ஏன்  2 இன் 1?



-------------------------------

15. உன் அழகை யாருக்காக சேமிக்கிறாய்?தினம் தினம் அது கூடிக்கொண்டே போகுதே!



------------------------


Priyadarshini Nehru
16. ஒரு பெண் உன்னிடம் கேள்வி கேட்கிறாள் என்றால் சண்டைக்கு ரெடி ஆகிடு..ஏன்னா லேடீஸோட எல்லா கேள்விகளும் ஃபைட்ல தான் முடியும் # ஜவ்வுமி


-----------------------------

17. அத்தான், இன்னைக்கு பிறந்த நாள் ஸ்பெஷலா என்ன செய்யட்டும்?


 வழக்கம் போல் நான் சமையல் செஞ்சதை நீ பரிமாறுனா போதும் :)


-------------------------------------

18.  சம்சாரம் வெச்ச குழம்புல புருஷன் மோர் கலந்துட்டா அது மோர்க்குழம்பா? ஹி ஹி


--------------------------

19. வெங்காயமும், பெண்களும் ஒண்ணுதான் , கண்ணீருக்கு காரணம் ஆனாலும் நாம் அவர்களை தவிர்க்க முடிவதில்லை



----------------------------------


20. மேடம், மெகா ட்வீட்டப்க்கு வரனும்.



 நமீதா - சாரி, மீ பிசி, நோ கால்ஷீட் . அட்லீஸ்ட் உங்க தலையை மட்டும் காட்டிட்டு போனாக்கூட போதும்

---------------------------------


என்ன இல்லை என்னிடம்......
தடுமாறுகிறேன் உன்னிடம்.....கே ஆர் விஜயன்


Monday, May 21, 2012

கண்டதும் காணாததும் - சினிமா விமர்சனம்



http://i.imgur.com/eEV91.jpgஷேர் ஆட்டோல முன் பின் அறிமுகம் இல்லாத ஹீரோவும் ஹீரோயினும் போறப்ப ஒரு பொறம்போக்கு வேணும்னே ஹீரோயின் மேல இடிக்கறான்.. ஒரு தடவை இடிச்சிருந்தா ஹீரோ சும்மா உட்டிருப்பாரு.. 2 டைம் இடிக்கறான்.. அவனுக்கு ராசியான நெம்பர் 2 போல..உடனே ஹீரோ ஸ்டாப்ல இறங்குனதும் பப்ளிக் டாய்லட்ல அந்த நாயை போட்டு குமுறு குமுறுன்னு குமுறுறாரு.. ஐ மீன் ,அவனை அடிச்சு துவைச்சு காயப்போட்டுடறாரு.. உடனே ஹீரோயினுக்கு ஹீரோ மேல நல்ல  அபிப்ராயம் வந்துடுது..

 ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நூல் அளவு தான் வித்தியாசம்.. வில்லன் டைரக்டா ரேப் பண்ணுவான்.. ஹீரோ  லவ் பண்ணி டூயட் பாடி கரெக்ட் பண்ணி அவ சம்மதத்தோட அதை செய்வான்.. இது புரியாம பல பேக்குங்க ஊர்ல இருக்கு

 ஹீரோவும், ஹீரோயினும்  அடிக்கடி சந்திக்கறாங்க , ஊரை சுத்தறாங்க.. எல்லா ஹோட்டல்லயும் சாப்பிடறாங்க.. ஒரு நாள் ஹீரோ வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிடறாங்க.. ஹீரோ மட்டும் தனியா இருக்காரு.. நானா இருந்தா பிட் படம் பார்த்திருப்பேன்,.. அந்த தத்தி இன்னும் 1998 ல இருந்து வெளில வர்லை. சரோஜா தேவி புக் படிக்குது..

 ஹீரோயின்க்கு பிறந்த நாள்.. அவ தன் காதலை சொல்ல ஹீரோ வீட்டுக்கு வர்றா.. அவளை பார்த்ததும் அந்த தத்தி ஹீரோ அந்த கில்மா புக்கை ஒளிச்சு வைக்கறான்.. நானா இருந்தா கற்றதும் பெற்றதும் உனக்கும் இந்தான்னு குடுத்திருப்பேன்.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்னு..






http://i.indiglamour.com/photogallery/telugu/freshface/2011/Nov13/Swasika/normal/Swasika_20175.jpg

 அப்புறம் திடீர்னு லூஸ் மாதிரி ஹீரோயினை ஹீரோ டைட்டா கட்டிப்பிடிக்கறாரு.. கிட்டத்தட அட்டெம்ப்ட் ரேப் மாதிரி.. ஹீரோயின் மிரண்டு போய் ஓடிடுது..  ஜெயேந்திரர்ட்ட இருந்து தப்பிச்சு ஓடுன எழுத்தாளர் அனுராதா ரமணன் மாதிரி..( பல வருடங்களுக்கு முன் நடந்த உண்மைச்சம்பவம்)

இப்போ 2 பேருக்கும் சண்டை.. பிடிக்கலைன்னா ஃபோன் நெம்பர் மாத்திட்டு போய்ட்டே இருக்கனும்.. அந்த கேனை ஹீரோயின் என்ன பண்றா .. உன்னை எனக்குப்பிடிக்கலை, நீ செஞ்சது தப்பு அப்டினு அடிக்கடி மீட் பண்ணி சொல்றா..

 ஹீரோயினுக்கு வேற பக்கம் நிச்சயம் ஆகிடுது.. மேரேஜ் அன்னைக்கு முந்தின நாள் ஹீரோவோட ஃபிரண்ட் ஹீரோயினை கன்வின்ஸ் பண்ணி “ கடைசியா ஒரு தடவை நீ வந்து பேசு”ன்னு சொல்றான்.. நானா இருந்தா “ டேய் கேனை... எனக்கு மேரேஜ், நான் எப்படி அங்கே வர முடியும், அவனை வேணா மண்டபத்துக்கு கூட்டிட்டு வா”ன்னு சொல்லி இருப்பேன்..

 ஆனா அந்த கேனை ஹீரோயின்  மண்டபத்துல இருந்து எஸ் ஆகி முன்னாள் காதலன் வீட்டுக்கு போறா.. அதுக்குள்ள அந்த அவசரத்துல பிறந்த அவசரக்குடுக்கை ஹீரோ தற்கொலை பண்ணிக்கறார்..இவ ஹேரே போச்சுன்னு நிச்சயிக்கப்பட்ட மாப்ளையை மேரேஜ் பண்ணிக்கறா.. இவ்ளவ் தான் கதை ( ஆனா ஹீரோயினுக்கு ஹீரோ செத்தது தெரியாதுன்னு கேவலமான ட்விஸ்ட் வேற )


ஹீரோ ஆள் ஜம்முன்னு தான் இருக்கார்.. ஆனா கேரக்டர் தான் வீக்.  சாதாரண விஷயத்துக்கு எல்லாம் தற்கொலை பண்ணிக்கற அளவு வீக் மைண்ட்??? டூயட் காட்சிகளில், காதல் கலாய்ப்புக்காட்சிகளில் பாஸ் மார்க் ..


ஹீரோயின் ஆள் கும்முன்னுதான் இருக்கு. 60 மார்க் தேறும். அலங்கார வளைவுகள் பிளஸ் பாயிண்ட்ஸ்.


ஆர் சுந்தர் ராஜன் , புரோட்டா சூரி 2 பேர் இருந்தும் காமெடி வறட்சி. வடிவேல் மாதிரி காரணத்தை சொல்லிட்டு அடிடா எல்லாம் செம கடி.. வடிவேல் மாதிரி பண்ண த்தான் அவர் இருக்காரே?




http://mmimages.mmnews.in/gallery/2012/Apr/3628_L_galvpf.gif


மனம் கவர்ந்த வசனங்கள்


1. எந்த சோப் போட்டு குளிச்சாலும் நீ வெளுக்கப்போறதில்லை, ஏன் ரிஸ்க் எடுக்கறே?


2. இப்போ நான் சொன்ன தத்துவம் அரிஸ்டாட்டில் சொன்னது..


 அதானே. சொந்தமா நீங்க எப்போதான் சொல்லி இருக்கீங்க?



3. BAG  ல பாருங்க....

 ஒண்ணும் தெரியலையே?


 யோவ்.. என்னை சுத்தி சுத்தி வந்து பார்த்தா என்ன தெரியும்? என் ஹேண்ட் பேக்ல பாருய்யா  ( அடங்கோ ,... அடேய் அடேய் அவ்ளவ் அப்பாவியாடா நீ ?)


4. உன் கவிதையை நான் படிக்கறதை விட நீயே படிச்சுக்காட்டினா  ரொம்ப நல்லாருக்கும். ( தக்காளி.. நீ கை நாட்டா?).


5. நமக்கு செய்யப்படும் அதீத வசதிகள் நம்ம குடும்பத்தை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது


6. சிம்மே இல்லாத ஃபோனை வெச்சு சீன் போட்டாலும் பரவாயில்லை, பேட்டரியே இல்லாத ஃபோனை வெச்சு சீன் போடறியே?


7. என்னது? நீ குடிக்க மாட்டியா? இதுக்கு நம்பற மாதிரி ஒரு காரணம் சொல்லு


அப்பா என் மேல வெச்சிருக்கற நம்பிக்கை தான் நான் குடிக்காததுக்கு காரணம்..


8. பிசிராந்தையார் பிசிராந்தையார்னு

 2 பேரா?



ம்ஹூம், ஒருத்தர்தான்.....



9.  டீல நாட்டுச்சர்க்கரை போட்டுக்குடிச்சா நல்லாருக்கும், உடம்புக்கும் நல்லது..


10. அவ யார் கூப்பிட்டாலும் போவா .

 யோவ்!!!!!


நல்லது கெட்டது நடந்தா வீட்டுக்கு யார் கூப்பிட்டாலும் போவான்னேன்.


11. சொல்லாம போயிட்டானேன்னு ஃபீல் பண்ணக்கூடாது/..அதான்..

 ஆமா, இவர் மேல் லோகத்துக்கு போறப்பக்கூட எல்லாரையும் கூப்பிட்டு சொல்லிட்டுத்தான் போவாரு..


http://www.tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_78226435185.jpg
பாரதியார் சொன்னாரே நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை வேணும்னு
 அதை ஃபாலோ பண்றாங்களாம்
12. சாராயம் குடிச்சு செத்தவன் சமாதில சாராயம் வெச்சு படைக்கறாங்க, ஃபிகரால உயிரை விட்டவன் சமாதில அந்த ஃபிகரையா வெச்சு படைக்கறாங்க



13.  நான் ஏன் இப்போ பிராந்தி வாங்கிட்டு வந்திருக்கேன்னா .உன் மனசுல இருக்கற காதல்ங்கற மனப்பிராந்தியை அகற்றத்தான்


14. இந்த விஷயம் முகத்துக்கு முன்னால நின்னு மன்னிப்பு கேட்கற விஷயம் இல்லை.. முதுகுக்கு பின்னால நின்னு கூனிக்குறுகி மன்னிப்பு கேட்கற விஷயம்


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. சாதாரண கதையை வைத்துக்கொண்டு அதை 13 ரீல் இழுத்த தைரியம்.. தயாரிப்பாளரை கன்வின்ஸ் செய்த நுணுக்கம்


2. ஹீரோ  ஹீரோயின் செலக்‌ஷன்.. காதல் காட்சிகளில் கண்ணியம்..




http://www.tamilnow.com/movies/gallery/kandathum-kanathathum/kandathum-kanathathum-6426.jpg


இயக்குநரிடம் காரசாரமாய் சில கேள்விகள், லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1. காதலையே இன்னும் வெளீல சொல்லாத ஒரு பயந்தாங்கொள்ளி காதலன் கில்மா புக்கை படிச்சுட்டு காதலியை மிஸ் யூஸ் பண்ண ட்ரை பண்ணுவானா?


2. காதலி அதாவது ஹீரோயின் முத முதலா ஹீரோ வீட்டுக்கு உள்ளே வர்றா.. நித்தியானந்தா ஆசிரம பெட்ரூமுக்குள்ள வர்ற மாதிரி பெப்பெரெப்பேன்னு வருவாளா?  அப்பா அம்மா வீட்ல இல்லைங்கற மேட்டர் அவளுக்கு தெரியாது.. அப்போ அவ என்ன பண்ணுவா? காலிங்க் பெல் அடிச்சுட்டோ, கதவை தட்டிட்டோ வருவா.. ஆனா ஹால், தாண்டி அவ பாட்டுக்கு உள்ளே வந்துடறாளே?


3. காதலியை பார்த்ததும் கில்மா புக்கை காதலன் ஏன் மறைக்கறான்? அவ தன்னை தப்பா நினைச்சுடக்கூடாதுன்னுதானே? அப்படி நினைக்கறவன் கட்டிப்பிடிச்சு ரேப் பண்ண மட்டும் ட்ரை பண்ணுவானா?

4. சரி, ஆனது ஆகிடுச்சு... பயங்கர கோபத்துல ஹீரோயின் வெளில கிளம்பறா.. போறவ தலைவிரி கோலமா, டிரஸ் எல்லாம் கலைஞ்ச போஸ்ல தெருவே வேடிக்கை பார்க்க அப்படியா போவா?வில்லன்கள் 10 பேரு துரத்தி வர்றாங்களா? காதலன் தானே? அதுவும் அவ முறைச்சதும் அவன் பம்மிக்கிட்டு தேமேன்னு சும்மா தான் நிக்கறான்.. நின்னு நிதானமா தன்னை சரி பண்ணிட்டுத்தானே வருவா?


5. கோவிச்சுக்கிட்டு போனவ  வேற ஊருக்கு போலாம், அல்லது அவனை டோட்டலா அவாய்டு பண்ணி இருக்கலாம், அதை விட்டுட்டு  அடிக்கடி அவனை மீட் பண்ணி உன்னை பார்க்கவே பிடிக்கலை, சாரின்னு அடிக்கடி சொல்லிட்டு இருக்காளே?


http://moviegalleri.net/wp-content/gallery/kandathum-kanathathum-movie-stills/kandathum_kanathathum_movie_stills_1895.jpg


6. இடைவேளைக்குப்பிறகு எப்படி கதையை நகர்த்தறதுன்னு தெரியாம திரு திருன்னு விழிக்கறீங்க.. ஹீரோ சோகப்பாட்டு, சரக்கு அடித்தல்னு செம போரா கதை நகருது..

7. இந்தக்காலத்துல எத்தனையோ தப்பு பண்ணிட்டு குற்ற உணர்ச்சியே இல்லாம வாழும் பலர் மத்தில ஜஸ்ட் கில்மா புக்கை படிச்சதாலும், அதனால உணர்ச்சி வசப்பட்டு காதலியை கட்டிப்பிடிசதாலும் ஒருத்தன் குற்ற உணர்ச்சில தற்கொலை செய்வது எல்லாம் ஓவர்


8. என் ஐடியா என்னான்னா ஹீரோயின் அவ வீட்ல தனியா இருக்கறப்ப பாத்ரூம்;ல குளிக்கறப்ப ஹீரோ எண்ட்டர் ஆகறார்,.. கட்டிப்பிடிக்கறார்னு சீன் வெச்சிருந்தா மேலே சொன்ன அத்தனை லாஜிக் மீறலும் பணால் ஆகி இருக்கும், எங்களுக்கும் ஒரு சீனாவது மிச்சம் ஆகி இருக்கும்..

9. க்ளைமாக்ஸ் மகா சொதப்பல்.. ஹீரோவை ஹீரோயின் ஏத்துக்கிட்டு மேரேஜ் பண்ணி இருக்கனும்.. அதை விட்டுட்டு அவனை தியாகி ஆக்கி ஹீரோயினை துரோகி ஆக்கியது ஓவரோ ஓவர்


10. ஹீரோவோட  ஃபிரண்ட் தலை எல்லாம் களைஞ்சு 2 கிலோ முடியோட கேவலமா இருக்கார்.. அவரை முன்னே பின்னே பழக்கம் இல்லாத  ஹீரோயின் அவரை நம்பி மிட் நைட்ல எப்படி ஆட்டோல கழுத்துல கைல 30 பவுன் நகையோட போவார்? அது கூட தேவலை.. அதே ஃபிரண்ட் அம்போன்னு ஹீரோயினை நீங்க தனியா மண்டபத்துக்கு போய்க்குங்கன்னு அனுப்பறார்.. ஆட்டோ டிரைவர் பாட்டுக்கு கடத்திட்டு போய்ட்டா?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXbq8XlxN9RYhyphenhyphenoo-ktbjJgZYGVrXduwL6AUmw3rFYQezGyiIvtslZ1mxUSBTAo_ae9YmOazzLCNwAtQjI5cJHYPfR0cSH7zEG79j5Rm2iZsc0gtsDHWGHHPFswa1qLdMY7vFjls_rn30/s1600/Kandathum+Kanathathum+Movie+Stills+Photos+Kandathum+Kanathathum+New+Pictures.jpg


விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 37


குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - அய்யய்யோ!!!!


 ஈரோடு சங்கீதாவில் படம் பார்த்தேன்


டிஸ்கி -

பெண் குயின்ஸ் -சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 3

பெண் குயின்ஸ் -சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 3



ஓப்பனிங்க்லயே ஒரு விஷயத்தை ஓப்பனா சொல்லிடறேன் ( சட்டை பேண்ட் போட்டிருக்கேன் ) நாங்க எல்லாம் ஒண்ணாங்கிளாஸ் டூ அஞ்சாங்கிளாஸ் படிச்ச காலத்திலயே  கோ எட் படிச்சவங்க.. அப்புறம்  ஆறாங்கிளாஸ் டூ 10 வது வரை  பசங்க மட்டும் படிக்கற ஸ்கூல்.. அப்புறம் பிளஸ் 1 , பிளஸ் 2 ,  படிக்கறப்ப மீண்டும் கோஎட்.. இந்த கால கட்டத்துல என் படிப்பு கிராஃப் பார்த்தீங்கன்னா கோ எட் படிச்சப்ப மட்டும் என் ரேங்க் பிரமாதம்.. ஹி ஹி 

 பெண்கள் என்றால் ஒரு உற்சாகம் தான்.. எதிர் பால் ஈர்ப்பு வருவது மனித இயல்பு.. சிலர் அதை மென்னு முழுங்குவாங்க.. நான் தேங்காய் உடைச்ச மாதிரி சொல்லிட்டேன்.. அவ்ளவ் தான் வித்தியாசம்.. மெகா ட்வீட்டப்னு சொன்னதும் நான் சந்திக்க விருப்பப்பட்ட பெண் ட்வீட்டர்கள் யார்னு ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடலாம்.. 

 ஆரம்ப கட்டத்துல  ட்விட்டர்க்கு வந்த புதுசுல டைம் லைன் கான்வர்சேஷனை வாட்ச் பண்ணுனப்ப திங்கள் கிழமை காலைல 11 மணிக்கு டி பி கேடி ( இவர் கேடி அல்ல, இனிஷியலே அப்படி ) என்பவர் கூட ஒரு பொண்ணு வாக்குவாதம் பண்ணிட்டு இருந்தது.. அப்புறம் எதேச்சையா வெள்ளிக்கிழமை சாயங்காலம் பார்த்தப்ப இன்னும் அதே பாப்பா அதே ஆள் கிட்டே சண்டை போட்டுட்டு இருந்தது.. அடேங்கப்பா... 

 அதுக்கப்புறம் தான் நோட் பண்ண ஆரம்பிச்சேன்.. பாப்பாவுக்கு பார்ட் டைம் ஜாப்பே  ஃபைட் போடறதுதான்ன்னு.. கன் ஃபைட் காஞ்சனான்னு பேர் வெச்சாங்க ட்விட்டர்ல .. ( யார்னு கேட்காதீங்க அது  சிதம்பர ரகசியம் ).. இவங்க என்ன பண்ணுவாங்கன்னா  டைம் லைன்ல அவங்க பாட்டுக்கு ஏதாவது ஒரு கேள்வியை கேட்டுட்டு  கிளம்பிடுவாங்க.. இருக்கறவங்க விக்கி பீடியா , ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரி, எல்லாம் ரெஃபர் பண்ணி பதில் சொல்வாங்க .. ஆனா ஒரு தாங்க்ஸ் கூட சொல்ல மாட்டார்..

 அமஸ் மேடம்

டைம் லைன்ல யாருக்காவது பிறந்த நாள், 1000 ஃபாலோயர்ஸ் அப்டின்னா ஊரே கூடி தேர் இழுக்கும்.. பாப்பா கண்டுக்காது. யாரையும்... தன்மானத்தை  விட்டு நம்மாளுங்க  “ மேடம்.. எனக்கு பிறந்த நாள் வாழ்த்துங்க”ன்னு கேட்டு வாங்கி பாயாசம்  சாப்பிடுவாங்க.. அதுக்குப்பின் “ தாமதமான பி நா வா” ( பயப்படாதீங்க.. பிறந்த நாள் வாழ்த்து என்பதைத்தான்  அவங்க அப்படி சொல்றாங்க ) சொல்ற லேட் பிக்கப்  லேகா அவங்க 

   டைம்லைன்ல பெண்களை மட்டம் தட்டி, அல்லது கிண்டல் பண்ணி யாராவது  ட்வீட் போட்டா உடனே எம் ஜி ஆர் மாதிரி ஆலமர விழுதெல்லாம் பிடிக்காமயே டைம் லைன் ஆஜர் ஆகி அவன் சட்டையை பிடிச்சு கேள்வி கேட்கும் வைஜயந்தி ஐ பி எஸ் கம் லேடி எம் ஜி ஆர்.. 

 அப்பேர்ப்பட்ட அப்பாடேக்கர்   அஞ்சலி பாப்பா மாதிரி எதுக்கெடுத்தாலும் அவங்கப்பா கிட்டே பர்மிஷன் கேட்கற பச்ச மண்ணுங்க.. 

 மெக ட்வீட்டப் ல கலந்துக்க அவர் அவங்கப்பா கிட்டே பேசறாங்க 

 டாடி.. ட்வீட்டப் நடக்குது.. சென்னை போகனும்.. 

 எத்தனை பேர்ம்மா கலந்துக்கறாங்க?

 200 பேர் டாடி.. ஒரே டைம்ல 200 பேர் கிட்டே சண்டை போடலாம்.. ஜாலி ஜாலி ப்ளீஸ் டாடி போய்ட்டு வர்றேன்.. 

 வேணாம்மா.. இன்னொரு டைம் போய்க்கலாம்..  நானும் கூட வந்தா நல்லாருக்கும்.. போன த டவை  ஆஃபீஸ் ஃபிரண்ட் மேரேஜ்க்கு போனப்ப டி டி ஆர் கூட நீ போட்ட சண்டைக்கே இன்னும் விடை தெரியலை..,. 

 அய்யய்யோ டாடி.. அப்புறம் என் இமேஜ்  என்னாகறது? எல்லாரும் என்னை கிண்டல் பண்ணுவாங்க.. 


 நீ ஏம்மா அப்படி சொல்றே? வழக்கமா ஏதாவது பொய் சொல்வியே ஆஃபீஸ்ல ஒர்க் இருந்துச்சு, லீவ் கிடைக்கலை அப்டி ஏதாவது சொல்லி சமாளி..

 அவங்க விஷயத்தை விடுவோம்.. இப்போ ட்வீட்டப்ல யார் வந்தாங்கன்னு பார்ப்போம்..




 ஹால் ல  நாங்க எல்லாம் கூடி கும்மி அடிச்சுட்டு இருந்தோம்.. அப்போ முதன் முதலா 2 பொண்ணுங்க வந்தாங்க..  அப்போ இலவசமா  கிடைச்சா எதையும் விட்றாதே அங்க்கிள் சூடம் கொளுத்தாம சத்தியம் பண்ணுனாரு.. இவங்க யாரோ புது ட்வீட்டர்.. ரெகுலரா நாம கடலை போடற ஆள் கிடையாதுன்னு.. 

 அவர் சொன்னது உண்மைதான்..  திவ்யான்னு பேரு.. வாழை என்ற அமைப்பை சேர்ந்தவங்க போல .. அவங்க முன் வரிசைல போய் உக்காந்துட்டாங்க.. 

அடுத்தது அமஸ் அப்டினு ஒரு மேடம் வந்தாங்க. டி பில ரெட்டை  ஜடை மாதிரி இருந்தாங்காட்டி நாங்க எல்லாம் டீன் ஏஜ் கேர்ள்னு நினைச்சோம் .. அவ்வ்.. ஆனா அவங்க எல்லார் கிட்டேயும் சகஜமா பேசி ஸ்மைலிங்க் ஃபேஸ் உடன் இருந்தாங்க.. 

ரைட்டர் சுபா தேசிகன் வந்தாங்க.. இவங்க அதிகமா பழக்கம் இல்லை.. இவரோட கணவர் புதிய தலை முறை  இதழில் பணி ஆற்றுபவர்.. அவங்களோட ஃபோட்டோ எடுத்துகிட்டேன்.. 


இப்போ நம்மாளுங்க வருத்தம் எல்லாம் என்னான்னா ரெகுலரா பேசிட்டு இருக்கற லேடி ட்வீட்டர்ஸ் யாரும் வர்லையே என்பதுதான்.. நல்ல வேளை அப்புறமா 3 பேர் ஒண்ணா வந்தாங்க ..


அதீஷாவை பார்ப்பது லேடி ரைட்டர் சுபா தேசிகன், மைக்கர் அதீஷா,யுவகிருஷ்ணா


 மெடிக்கல் ஷாப் மேனகா .. இவரோட கணவர் கஸ்டம்ஸ் ஆஃபீசர்... வீட்டில்  தன் மனைவி  கிட்டே கஷ்டப்படற ஆஃபீசர்.. டைம் லைன்ல எல்லா லேடீஸ்க்கும் சமையல் குறிப்பு பிரமாதமா கொடுப்பார்.. ஆனா சமையல் ஹா ஹா ஹா  அதை எப்படி என் வாயால சொல்வேன்? அவர் கணவர் ஒரு டைம் கேட்டிருக்கார்.. சமையல் டிப்ஸ் எல்லாம் பிரமாதம்.. ஆனா  சமையல் ஏன் இப்படி? என்றால் அதுக்கு அவர் பதில் “ சமைத்துப்பார்” ஜஸ்ட் லுக் இட் .. ஒய் ஈட்டிங்க்? அப்டின்னாராம் .. 

 அவரோட கணவர் எனக்கு க்ளோஸ் ஃபிரண்ட்.. அந்த மேட்டர் மேனகாவுக்குத்தெரியாது.. அடிக்கடி ஃபோன்ல அவர் பண்ற அட்டூழியங்கள், கலாட்டாக்கள் எல்லாம் சொல்லிடுவார்.. 

 இவரோட பிளஸ் பாயிண்ட் என்னான்னா  எல்லார்ட்டயும் சகஜமா பழகறதுதான்..  அவர் வர்ற வரை பெண் ட்வீட்ட்ரகள் பலர் கொஞ்சம் ஃபிலிம் காட்டிட்டு இருந்தாங்க.. இவர் வந்த பின் தான் எல்லாரும் கொஞ்சம் அடக்கி வாசிச்சாங்க.. இவர் எல்லா நண்பர்களிடமும் ஒரே மாதிரி பழகுவார்.. 

 ஆரம்பத்துல  கடலை மட்டும்  போட்டார்.. இப்போ நல்ல ட்வீட்ஸ் எல்லாம் போடறார்.. இவர் மங்கை என்ற பெயரில் இன்னொரு ஐ டியில் கீச்சுவதாக நம்பத்தகாத வட்டாரத்தில் இருந்து நம்பத்தகுந்த தகவல் ஹி ஹி

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், க்கும்ப்பா, ம்க்கும், அஸ்கு புஸ்கு ஸ்பெஷலிஸ்ட்.. ஆனந்த விகடனில் இவர் ட்வீட்ஸ் வந்த அன்னைக்கு அக்கம் பக்கம் எல்லா வீட்டுக்கும் விகடன் புக் வாங்கிக்குடுத்து படிக்கச்சொல்லி எல்லாரையும் டார்ச்சர் செஞ்சதா அருகம் பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு வழக்கு இருக்கு.. 

 இப்பேர்ப்பட்ட தல புராணம் கொண்ட மேனகா  லைட் ரோஸ்  கலர் சுடிதார்ல வந்தார்..தென்றலே என்னைத்தொடு ஜெயஸ்ரீக்கு பொன்னுக்கு வீங்கி வந்தா எப்படி கன்னம் வீங்கி இருக்குமோ அப்படி இருந்தாங்க .. இவங்க ட்விட்டர் ஹேண்டில் “ ராஜகுமாரி” அதுக்கான காரணம். அவரோட ஹவுஸ் ஓனர் ஐ மீன் அவரோட ஆத்துக்காரர் செல் ஃபோன் ரிங்க் டோன் “ ரோஜா மலரே ராஜகுமாரி, ஆசைக்கிளியே அழகிய ராணி” அந்த பாட்டு தன்னை நினைச்சுத்தான் வெச்சிருக்கறதா அவருக்கு ஒரு நினைப்பு


 பியூட்டி பார்லர்ல இருந்து நேரா வந்துட்டார் போல .. ஹய்யோ அய்யோ .. மெடிக்கல் ஷாப் மேனகா பெயர்க்காரணம் - 24 மணி நேரமும் ட்விட்டர்லயே இருப்பவர்..  பயங்கரமான விஜய் ரசிகை.. இவரை சீண்டனும்னா அஜித் பற்றி ஒரு ட்வீட் போட்டா போதும்.. 27 வருஷமா வாக்கிங்க் போகும் பழக்கம் உள்ள இவரது கணவர் மேரேஜ்க்குப்பின் வாக்கிங்க் கூட போறதில்லை.. ஏன்னா நடப்பது அஜித்தின் ஸ்பெஷல்.. அதனால் அவங்க தான் விஜய் ரசிகை ஆச்சே.. எப்படி நடப்பதை அனுமதிப்பார்?

அவங்க பாட்டுக்கு நல்ல பொண்ணு மாதிரியே அமைதியா சீட்ல உக்காந்துட்டாங்க.. எந்த படமும் போடலை.. யார் கிட்டேயும் சரியா பேசலை.. ( அப்புறமா நிகழ்ச்சி முடிஞ்சு சாப்பிடறப்போ பேசுனாங்க.. காரணம் கேட்டதுக்கு வந்த வேலையை முடிக்காம என் கவனத்தை எதுலயும் சிதற விட மாட்டேன்னாங்க )- வந்த வேலை = ஓ சி சாப்பாடு





3வது திருச்சி திருப்பாச்சி, மலைக்கோட்டை மரப்பாச்சி.. ரியல் ரீனு.. இவங்க ட்வீட்ஸ் எல்லாம் செம காமெடியா இருக்கும்.. ஆஃபீஸ்ல நடக்கற அனுபவங்களை, பல்பு வாங்குன அனுபவங்களை சொல்வார். இவரே பல்பு சைஸ் தான்  இருக்கார்..

 இவர் ஸ்கூட்டி பியூட்டி.. .. திருச்சில செகன்ஸ்ல 21 ஆவது ஆளா கை மாறுன ஒரு ஸ்கூட்டியை வெச்சு இது வரை 89 ட்வீட்ஸ் போட்டிருக்கார்..  சென்னை ட்வீட்டப்க்கு வந்த லேடீஸ்லயே அதிக மேக்கப் இவர் தான்.. ஃபேரன் லவ்லி, பேத்தி ஜிவ்லி, ரோஸ் பவுடர்,  மிஸ் பவுடர் எல்லாம் போட்டு ஐ டெக்ஸ் மை டப்பா காலி ஆகற அளவு கண்ல மை வெச்சுக்கிட்டு வந்திருந்தாரு.. ஸ்மைலிங் ஃபேஸ்..







 எனக்கு இப்போதான் ஒரு டவுட் வந்தது.. இவங்க பாட்டுக்கு வந்தாங்க.. உக்காந்திருக்காங்க. யாரும் எதும் கண்டுக்கலையே.. நம்மாளுங்க அம்புட்டு நல்லவங்களா?னு யோசனை பண்ணி ஸ்டேஜ் பின் பக்கமா போய் ஸ்க்ரீன் ஓரமா நின்னு  ஆடியன்சை ஏரியல் வியூ பார்த்தேன்.

 அவங்க 3 பேரும்  ( லேடீஸ்) செல் ஃபோன்ல என்னமோ பண்ணிட்டு இருந்தாங்க... சரி ட்விட்ஸ் தான் போடறாங்க.. ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றாங்கன்னு நினைச்சேன்.. என் ஃபோனை எடுத்து  ட்விட்டர் டைம் லைன் பார்த்தா அவங்க 3 பேர் ட்வீட்ஸ் எதும் வர்லை.. யார்தும் ஆர் டியும் பண்ணலை ..

 அப்புறமாத்தான் கண்டு பிடிச்சேன்.. அவங்க  செல் ஃபோன்ல அவங்க ட்விட்டர் ஃபிரண்ட்ஸ் கிட்டே சேட்டிங்க்னு..




அப்புறம் நிகழ்ச்சி முடியற டைம்ல  பஃபே சிஸ்டம்ல சாப்பாடு போட்டாங்க.. அவங்க எல்லாம் நாசூக்கா சாப்பிட்டாங்க... ரொம்ப கம்மியா. ...பார்த்தா கண் பட்டுடும்னு..

நான்  பெண்களை கண்டுக்காத ஆள் என்பதாலும்,  தாலி கட்டிய மனைவியைத்தவிர வேறு எந்தப்பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்கக்கூடாது என்ற மனோபாவமும்  உள்ளவன் என்பதால் நான் அவங்களை கண்டுக்கலை.. ( அவங்க ளும் என்னை கண்டுக்கலை... தானிக்கு தீனி சரியாப்போச்சு )

சின்னவள்


 இந்த ட்வீட்டப்பில் மக்களால் அதிகம் எதிர்பார்க்கபட்ட பிரபல பெண் ட்வீட்டர்கள் ( மக்களால் மீன்ஸ் என்னால் ஹி ஹி )


1. எப்போ பாரு காலேஜ்க்கே போகாம ஓ பி அடிக்கும் டோரா புச்சி பாப்பா ( டி பில  டோரா புச்சி பாப்பா வெச்சதால எனக்கு மக முறை ) ”சிரி”க்காதே வித்யா

2.  இப்போதான் மேரேஜ் ஆன பெண் என்பதால் எந்த கிண்டலும் பண்ண முடியாத சூழலில்  எஸ் ஆன அந்தா இந்தா  பிருந்தா

3. நூறு நாளில் 1000 ஃபாலோயர்ஸ் பெறுவது எப்படி? என்று மணிமேகலைப்பிரசுரத்துக்காக புக் எழுதும் இன்னல் சுதா சாரி மின்னல் சுதா




4. கணவர் லேப்டாப் தராததால்  கோபிச்சுகிட்டு அம்மா வீட்டுக்கு போய் அடம் பிடிச்ச கவிதை வேங்கை மங்கை ( இவங்க வீட்டுக்குப்போனா ஏகப்பட்ட காலண்டரும், பழைய பாட்டுபுக்ஸும் நிறைஞ்சு இருக்கும்... இன்ஸ்பிரேஷன்... ஹி ஹி )

5. கல்யாண வீட்ல ஒரே நாள்ல 3 புடவை மாத்திடற மாதிரி ட்விட்டர் வரலாற்றில் முதல் முறையாக 3 மாதத்தில் 87 தடவை டி பி மாற்றிய  கேரளத்துக்கிளி மேஹா ஓவியா ( கலகலப்பு ஓவியா நஹி களவாணி ஓவியா )


6. பஸ்ஸில் பிரயாணம் செய்யறப்ப தன் பின்னே ஜஸ்ட் நின்ற ஒரு ஆளை 4 இஞ்ச் நீளமுள்ள கொண்டை ஊசியால் நறுக் என குத்திய வீராங்கனை அய்யய்யோ தமிழச்சி ( மேட்டர் கேள்விப்பட்டதும் மீ அன் ஃபாலோ  ஹெர்.. ஹி ஹி )


7. ஸ்விஸ்-ல் வாழ்ந்தாலும் அடிப்படையில் இலங்கைப்பெண் என்பதால்  எப்போ பாரு கவிதையில் சோக ரசத்தை பிழிந்து புலம்பல் புனிதவதி ஆக இருந்து மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி மாப்பிள்ளை கிட்டே வந்ததும் என்ன நடக்குது அங்கேன்னு ஸ்டேட்டஸ் கேட்டா கமுக்கமா கம்முனு இருக்கும் அமுக்கல் அமராவதி


8. எகத்தாளம் எஃப் எம்  தன்யா - விடிகாலைல 3,.30 டூ 5 இவங்க டைம் லைன் பார்த்தா நீங்க இங்கிலீஷ் கோர்ஸே போகத்தேவை இல்லை.. எனக்கு எதும் புரியாது.. ஆனாலும் குட்மார்னிங்க்.. ஹவ் டூ யூ டூ, ஐ ஆம் பிஸி இப்படி 4 வார்த்தை வெச்சு சமாளிச்சிங்க்..


9. பல்லவ மன்னன், இலவசமா எது கிடைச்சாலும் விட்றாத மாமா இருவரையும் தாடி விட வைத்த லேடி  “ பசு அறிவு”ஊ1 )- ஃபிகருக்கு மே 25 மேரேஜாம்...ட்விட்டர் துக்க நாளா மதுரையும், நெல்லையும் கொண்டாடறாங்களாம்:((


10. அமலா படம் போட்ட டி பி வெச்சிருக்கும் பிரபல பெண் ட்வீட்டர் ( சென்னைல தான் இருக்கார், ஆனா யாருக்கோ மொட்டை அடிக்க திருப்பதி போய்ட்டார்)

11. சென்னையில் வசித்து இப்போது சேலத்தில், கேரளாவில் ரவுண்ட் அடித்துக்கொண்டிருக்கும்  அஹானா, சஹானா,கஹானா. ( இவர் கிட்டே 180 கேள்விகள் கேட்டா 2 வருஷம் கழிச்சு ஹாய் அப்டினு ரிப்ளை வரும்)


12. புதுசா பிரபலம் ஆகிவரும் தேவ சீமா, சங்கீதா,அர்த்த ராத்திரி லேடி டாக்டர்

13.. தன் பையன் கிட்டே வாங்குன பல்ப்ஸ் வெச்சே  ட்வீட்ஸ் தேத்தும் லெமன் ரைஸ் ஸ்பெஷலிஸ்ட் சிங்கை சாந்தி ( இவர் லெமன் ரைஸ் பண்றப்ப மட்டும் கணவர் ஹோட்டல் கோயிங்)

14. தமிழ் பெண் ட்வீடர்களிலேயே அதிக ஃபாலோயர்ஸ் வெச்சிருக்கும் கோவை பாவை அரட்டை கேர்ள்

15. மதுரை உமா கிருஷ்

16. ஆர் டி தோழி எனும் ஃபேக் ஐடியில் உலா வரும் ஒளிக்கதிர், தூத்துக்குடி சாத்துக்குடி, நல்லா பாத்துக்குடி ஜீன்ஸ் போட்ட பீன்ஸ்/.


17. ஆனந்த தொல்லை , அம்மா பிள்ளை, புரோட்டா புவனா ( லவ்வர் கூட எங்கே போனாலும் 8 புரோட்டா சாப்பிடுவாராம் அவ்வ்வ் )


18.  ஐ ஆர் எட்டின் தோல்வி ( இவங்க ஒரு டீச்சர்.. டீச்சர்னாலே மீ பயம்.. ரீசன் ஆல் ஆல்ரெடி யூ நோ.. மை அக்கா, மம்மி, ஹோம் மினிஸ்டர் ஆல் டீச்சர்ஸ்.. சோ நோ வம்பு வித் ஆல் டீச்சர்ஸ்)

19.  டால்ஃபின் குட்டி, ரேணுகா ரெயின்,குந்தவை அனு,ஃபேஸ்புக்கில் 7 மணீ நேரம் டெயிலி குடி இருக்கும் உமா கணேஷ்


20. தலைவன் மொழி என்ற பெயரில் நம்மை எல்லாம் கொலையா கொன்னெடுத்த  வானதி நடனம் ( டெயிலி டான்ஸ் ஆடிக்கிட்டே வாக்கிங்க்கும் போவாங்களாம்) மேரேஜ் இப்போ தான் ஆச்சு






 உஷ் அப்பாடா.. இவங்க போக மீதி இருக்கும் , டைம் லைனில் உலா வரும் அனைவரும் ஃபேக் ஐ டிகள் தான்.. ஏமாந்து விடாதீர்கள் நண்பர்களே..( மொத்தம் 127 பெண் ஐ டி கள் இருக்கு, அதுல ஒரிஜினல்  46 மட்டுமே... எனக்கு பழக்கமானவர்கள் 17 பேர்தான்.. விடு பட்டவர்கள் மன்னிக்க


 ஆல் தோட்ட பூபதி கரூர் ஜெகன் எப்படி ஹால்க்கு வராம பக்கத்துல இருக்கற ஹோட்டல்ல தங்கி அவர் விருப்பப்பட்ட பிரபல ட்வீட்டர்களை மட்டும் செலக்ட் பண்ணி ரூம்க்கு வர வெச்சு சந்திச்சாரோ அதே மாதிரி கனடா டாக்டர் ஐ மம்மி மீ டம்மி, யூ ஜிம்மியும் செஞ்சார்.

 ஏதோ மேரேஜ் அட்டெண்ட் பண்ண தமிழ் நாடு வந்தவர் ஹால்க்கு எவ்ளவ் வற்புறுத்தியும் வரவே இல்லை.. இந்த பதிவில் மற்ற பெண் பதிவர்கள் அவங்க ஃபோட்டோ போட வேணாம் என்று சொல்லீட்டாங்க...


டிஸ்கி -0


இந்த  மெகா ட்வீட்டப் பாகம் 1 படிக்காதவங்க http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-1.html


 பாகம் 2 படிக்காதவங்க

http://www.adrasaka.com/2012/05/chennai-mega-tweet-up-2.html





டிஸ்கி -1 ட்விட்டரில் நடக்கும் பாலிடிக்ஸ்,  சில அதி மேதாவிப்பதிவர்களின் ( கம் ட்விட்டர்)அதிகப்பிரசிங்கித்தனம் பற்றிய என் ஆதங்கங்கள், ட்வீட்டப்பில் நான் பேசிய சர்ச்சையை கிளப்பிய பேச்சு பாகம் 4 ல் செவ்வாய் அன்று.


டிஸ்கி 2 - நாளை வெளி வர இருக்கும் ட்வீட்டப் பாகம் 4 யார் மனதையாவது புண் படுத்தினால் அதுக்கு இப்பவே அட்வான்ஸ் மன்னிப்பு கேட்டுக்கறேன்.. இப்படிக்கு எதையும் முன் கூட்டியே செஞ்சிடும் முன் ஜாக்கிரதை முத்தம் அண்ணா  (துரை)


டிஸ்கி 3 - விடு பட்ட பெண் ட்வீட்டர்கள் பெயர்கள் நினைவு படுத்தினால் சேர்க்கப்படும்.. அதுக்காக டால்ஃபின் குட்டி போலவோ, ரேணுகா ரெயின் போலவோ டி எம்மில் மிரட்டத்தேவை இல்லை :) மீ பயந்த சுபாவம்.. ஹி ஹி


டிஸ்கி - 4 - நேரடியாக மோத தைரியம் இல்லாத சில வீரப்பிரதாபர்கள் சம்பந்தப்பட்ட பெண் ட்வீட்டர்களை டார்ச்சர் பண்ணியும், திட்டியும் இந்த தளத்தில் இடம் பெற்ற சில படங்களை , சில தகவல்களை  நீக்கச்செய்து விட்டார்கள்..அவர்கள் குடும்பத்துடன் நீண்ட நாள் வாழ  வாழ்த்துகிறேன்


NHM ரைட்டர் , CSK ரைட்டர் என்ன ஒற்றுமை?

1.டியர், என்னை கிஸ் பண்றதை ஏன் செல் ஃபோன்ல வீடியோ எடுக்கறீங்க?


 வாழ்கையின் சில அபூர்வ  தருணங்களை மறுபடி கடக்க முடியாது, அதான் ஹி ஹி


----------------------------------

2. தமிழ் ஃபாண்ட்டாக NHM ரைட்டர் இருந்தாலும் “அழகி” தான் வேண்டும் என அடம் பிடித்தால் நீயும் ஒரு தமிழனே!



-----------------------------

3. ராசா வெளியானதை தொடர்ந்து அந்தப்புரம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது



-----------------------------

4. கலப்பு மணம் செஞ்சா வெட்டி தள்ளுங்க - கா.வெ.குரு!  # யாரோ கலப்பு மணம் பண்ணுனா உங்களை ஏன் நாங்க வெட்டனும்?


-----------------------

5. ராசாவுக்கு திமுக துணை நிற்கும் -டி.ஆர்.பாலு  # நீங்க சொன்னது எங்களுக்குப்புரிஞ்சுடுச்சு, தலைவர் ok சொல்லீட்டாரா?ஹி ஹி ,வாழ்க தமிழ் மொழி


---------------------------



மாட்டுச்சாணம், களிமண் கொண்டு தயாரிக்கப்பட்ட
10 டன் போலி டீத்தூள் சிக்கியது......

தேயிலை பயிரிட்ட காலம் போய் ..... தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.....நல்லகாலம் கடையில் நான் தேநீர் அருந்துவதில்லை.....
6. இன்று மாதுரி தீட்சித் பிறந்த நாள், அதை முன்னிட்டு தீட்சிதை பெற மதுரை  வருவாரா? என ஆதீனம் நித்தி எதிர்பார்ப்பு, ஜிஞ்சிதா கலக்கம்


----------------------------


7. ஆண் துணையை நம்பி வாழ வேண்டிய அவசியமில்லை -நயன்தாரா; # அப்போ உங்க அடுத்த டார்கெட் மதுரை ஆதீனமா? அவ்வ்வ்வ்


----------------------------

8. பெண்ணுக்கு முன்னால் நிற்கும் ஆண் குனிந்த தலை நிமிராமல் இருந்தால் அவன் வேறு எதையோ பார்க்கிறான் என பொருள்


---------------------------


9.  .அத்தான், ஒரு பொண்ணோட மனசை படிக்கவே மாட்டீங்களா?


 ம்க்கும், பாட புக்கையே ஒழுங்கா படிக்க மாட்டோம்!


------------------------

10.  நீங்க என் பக்கத்துல இருந்தா படபடப்பா வருது...



 சம்திங்க் ராங்க், கிளுகிளுப்பா வர்லையா? சோ சேடு


---------------------


இதுக்கு எவ்ளோ நேரமாச்சோ???


11. ஜனநாயகத்திற்கு சீர்குலைவு ஏற்பட அனுமதிக்கக் கூடாது-ஜனாதிபதி # ஜனநாயகம்னா ஏதோ டூர் ஸ்பாட்னு நினச்சுட்டார் போல :)


----------------------------------

12. .ஏய் மிஸ்டர்,  பப்ளிக்கா இப்படி காதல் கவிதையா சொல்றீங்களே? கூச்சமா இருக்காதா?


 மேடம்.. மெரீனா பீச் வந்து பாருங்க , லவ் பண்ணவே வெட்கப்படலை


-------------------------------

13. லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட்ஸ் தான் எந்த வித குற்ற உணர்ச்சியும் இன்றி மிஸ்சை சைட் அடிக்க முடியும் # ஸ்டூடண்ட்டாலஜி


---------------------------

14. ஆர்பாட்டமா சீன் போடும் ஃபிகர்ஸை விட,அமைதியான ஃபிகர்ஸ் நாட்டுக்கு, வீட்டுக்கு,ட்வீட்டுக்கு  நல்லது


--------------------------------

15. எங்கிருந்தாலும் வாழ்க என தன் காதலியின் நலனுக்காக பால் காவடி எடுத்தவர்களை அன்னக்காவடி ஆக்குவதே பல பெண்களின் குணம்


------------------------------




16. பேச்சிலர்ஸோட பெரிய சோகம் என்னான்னா அவங்க குடி இருக்க வீடும் சரி, மடில படுக்க சின்ன வீடும் சரி அவ்ளவ் சீக்கிரம் கிடைப்பதில்லை


---------------------------


 17. இக்கரையில் என் தயக்கங்கள், அக்கரையில் உன் வெட்கங்கள், நடுவே ஓடிக்கொண்டிருக்கிறது நாம் நீந்த வேண்டிய  காதல் நதி


-------------------------------


18. காதலியும் சரி, பொண்டாட்டியும் சரி வள வளன்னு பேசிட்டு இருந்தா ஆண்களுக்கு பிடிக்காது


------------------------------

19. ஏய், மிஸ்டர்.. நீ ஏன் என் பின்னாலயே சுத்தறே? நீ என்ன பித்துக்குளியா?


 நோ மிஸ். ஊத்துக்குளி!


------------------------------

20. சேம் பிஞ்ச் என்று சொல்லி நீ கிள்ளும் அந்த செல்லக்கிள்ளலுக்காகவே நீ அணிந்துவரும் நிற உடைகளையே நானும் அணிந்து வருவேன்




---------------------------------


இந்த உண்மை உங்களுக்கு தெரியுமா..?! ;)

Sunday, May 20, 2012

பட்டையை கிளப்பும் புது டைரக்டர்கள் - யார் யார்? அலசல் -

முதல் முத்திரையை அழுத்தமாகப் பதித்த புதிய இயக்குநர்களின் அடுத்த அதிரடி என்ன? இரண்டாவது ஹிட்தான் இண்டஸ்ட்ரியில் இடத்தைத் தக்கவைக்கும் என்பதை உணர்ந்து,  இரு மடங்குப் பாய்ச்சலுடன் இருந்தவர்களிடம் அப்டேட்ஸ் கேட்டேன்...

1. ஈரம்’ அறிவழகன்: ''ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 'வல்லினம்’ படம் இயக்குகிறேன். கூடைப்பந்து விளையாட்டுதான் படத்தின் மையம். ஆனா, படம் பொதுவா விளையாட்டுச் சூழலைப் பத்திப் பேசும். நகுல் ஹீரோ. மிருதுளா அறிமுக ஹீரோயின். முக்கியமான கேரக்டர்ல அதுல் குல்கர்னி நடிக்கிறார். 'ஈரம்’ படத்துக்கு மியூஸிக் பண்ண தமன்தான் இந்தப் படத்துக்கும் இசை. சென்னைதான் படத்தின் மைதானம். பொதுவா, இளைஞர்கள் வாழ்க்கையைக் காதல், நட்பு, காமெடினு மூணு விஷயங்கள்ல அடக்கிடுவாங்க. அதையும் தாண்டி இயல்பாவே நாம விளையாட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் சேர்த்துக் கதை பண்ணியிருக்கோம். எல்லாத் தரப்பு மக்களுக் கும் பிடிக்கிற மாதிரி கிளாஸான படமா இருக்கும். ஆட்டத்துக்குத் தயாரா இருங்க!''



2. 'வெங்காயம்’ சங்ககிரி ராச்குமார்: '' 'வெங்காயம்’ படத்தை தெலுங்கு, இந்தியில் ரீ-மேக் பண்றேன். இன்னும் சொல்லப்போனா, 'வெங்காயம்’ படம் ஆந்திராவுக்குத்தான் கச்சிதமா செட் ஆகும். ஆந்திராவில் கடந்த இரண்டு ஆண்டுகள்ல மட்டும் 25 நரபலிகள் நடந்திருக்கு. அங்கே தலக்கோணம் கிராமப் பகுதிகள்ல ஒரு மாசம் தங்கி, அந்த மக்களின் கலாசாரத்தைப் புரிஞ்சுக்கிட்டு, படத்தின் திரைக்கதையில் இன்னும் காரம் சேர்த்திருக்கோம். நரபலிக் கொடூரத்தை இன்னும் உறைக்கிற மாதிரி சொல்லப்போறேன். 30 நாள்ல தெலுங்குப் பட ஷூட்டிங் முடிச்சிடுவோம். அப்புறம் அப்படியே இந்தி ரீ-மேக். அப்புறம்தான் தமிழ்ல படம் இயக்கக் கதை பிடிக்கணும்!''

3. எங்கேயும் எப்போதும்’ சரவணன்: ''லிங்குசாமி சாரின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்கப்போறேன். ஆக்ஷன் படம். கதை தயார் பண்ணிட்டு இருக்கேன். ஹீரோ விஷால். இசை ஜி.வி.பிரகாஷ். இப்போதைக்கு இது மட்டும்தான் ஃபைனல் ஆகியிருக்கு. முழு ஸ்க்ரிப்ட்டும் முடிஞ்ச பிறகுதான், மத்த ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்களை ஃபிக்ஸ் பண்ணணும். பளிச்சுனு இன்னும் எதுவும் தோணலை. அதனால, தலைப்பு இன்னும் வைக்கலை. லிங்குசாமி சார், 'நல்லாப் பண்ணு’னு தட்டிக் கொடுத்து இருக்கார். அவர் கொடுத்திருக்கும் சுதந்திரத்துக்கு சூப்பராப் பண்ணலாம்!''

4. 'மௌனகுரு’ சாந்தகுமார்: '' 'மௌனகுரு’பத்தி பாசிட்டிவ் டாக் வந்த பிறகு, 20தயாரிப் பாளர்களிடம் இருந்துவாய்ப்பு வந்தது. அதில் ஸ்டுடியோ க்ரீனுக்கு மட்டும் கமிட் ஆகி இருக்கேன். ஆக்ஷன் படம். ஸ்க்ரிப்ட் வேலை நடந்துட்டு இருக்கு. படத்துக்குத்தலைப்பு இன்னும் சிக்கலை. ஜீவா, கார்த்தி ரெண்டு பேர்ல ஒருத்தர்தான் ஹீரோ. அது யார்னு ஸ்க்ரிப்ட் முடிஞ்ச பிறகுதான் சொல்ல முடியும்!''

'5. பச்சை என்கிற காத்து’ கீரா: 'நிலா பேசிய கதைகள்’, 'காற்று விடுவதில்லை’, 'வண்ணம்’னு மூணு கதைகள் கைவசம் இருக்கு. 'நிலா பேசிய கதைகள்’ படத்தை என் நண்பர்தான் தயாரிக்கிறார்.  'பச்சை என்கிற காத்து’ ஹீரோ வாசகர்தான் அந்தப் படத்திலும் நாயகன். பிரபலமான ஹீரோயின் மட்டும் ஃபிக்ஸ் பண்ணணும். வனம் சார்ந்த வாழ்க்கை... அதில் கொஞ்சம் காதல்... இதுதான் படம்.  மத்த இரண்டு கதைகளும் பெரிய பட்ஜெட். பெரிய பேனர் தயாரிப்பாளர்கள்கிட்ட முயற்சிகள் தொடருது!''

6.'காதலில் சொதப்புவது எப்படி’ பாலாஜி: '' 'காதலில் சொதப்புவது எப்படி’யை இந்தியில் ரீ-மேக் பண்ற ஐடியா. அதுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்துட்டு இருக்கு. இந்தியில் அதே காதல்-காமெடி ஃப்ளேவர்ல வசனம் எழுதுற வசனகர்த்தா, அந்தக் கலாசாரத்துக்கான அப்டேட்ஸ்னு வேலை ஓடிட்டு இருக்கு. அந்தப் பட வேலைகள் முடிஞ்ச பிறகுதான் தமிழ்ப் படம் பண்ற ஐடியா. இந்தி, தமிழ்னு எந்த மொழியா இருந்தாலும், என் முதல் படத்துக்குக் கை கொடுத்த 'ஒய் நாட் ஸ்டுடியோஸ்’தான் என் இரண்டாவது படத்தையும் தயாரிக்கும்!''

7 ஆரண்ய காண்டம்’ தியாகராஜன் குமாரராஜா: ''ஒய் நாட் ஸ்டுடியோஸ் 'ஆரண்ய காண்டம்’ டிரெய்லர் பார்த்த துமே என்னைவெச்சுப் படம் தயாரிக்க கமிட் பண்ணிட்டாங்க. ஆனா, நான்  இப்போதான் ஸ்க்ரிப்ட் எழுதுறேன். படம் எந்த ஸ்டைல்ல இருக்கணும்னு இப்போ வரை எனக்கே ஐடியா இல்லை. அந்த விஷயத்துல நான் ரொம்ப மெதுவாதான் எழுதுவேன். சீக்கிரம்  மத்த தகவல்களை ஷேர் பண்ணிக்கிறேன் நண்பா!''


நல்ல தங்காள் ஆட்சி - நல்லவை 10 , அல்லவை 10 - விகடன் கட்டுரை

ரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைத்துவிட்டார் அம்மா! அதற்கான கொண்டாட்டங்களில் மூழ்கி இருக்கிறது அ.தி.மு.க. 80 சாதனைகளைச் சொல்லி, ஜெயலலிதா மகிழ்ச்சியைத் தெரிவிக்க... எத்தனையோ வேதனைகளை அடுக்கி மக்கள் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள். நியாயமாகப் பார்த்தால் இரண்டின் கலவையாகவே முதல் ஆண்டைக் கடந்திருக்கிறார் ஜெயலலிதா!


 நல்லவை  10


தி.மு.க. ஆட்சியில் அதிகாரம், போலீஸைப் பயன்படுத்தி அடித்துப் பிடுங் கப்பட்ட நிலங்களை மீட்க எடுத்த முயற்சி கள், இன்றைய நில அபகரிப்பு மனிதர் களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்தது. வருமானத்துக்கு அதிகமாக, அடித்துப் பிடித்துச் சொத்து சேர்த்த தி.மு.க. மந்திரிகளின் வீட்டுக்குள் லஞ்ச ஒழிப்புத் துறை யைவிட்டு ரெய்டுகள் நடத்தியதும், அதற் கெனத் தனி நீதிமன்றம் அமைக்க முயற்சித் ததும் அனைத்துத் தரப்பினராலும் வரவேற் கப்பட்டது.


சசிகலா குடும்பத்தின் ஆக்டோபஸ் கரங்கள் வெட்டி எறியப்பட்டன. ஜெ. பதவி ஏற்ற மே மாதம் முதல் சசி டிஸ்மிஸ் செய்யப்பட்ட டிசம்பர் மாதம் வரை, இந்தக் குடும்ப உறுப்பினர்கள் செய்த காரியங்களுக்குத் தடை விழாமல் இருந்திருந்தால், 3-வது ஆண்டு விழாவின்போது தமிழ்நாடே தனியார் சிலருக்குச் சொந்தமாகி இருந்துஇருக்கும். இந்தக் கும்பலுக்குத் தடுப்பணை விழுந்தது எல்லோரும் வரவேற்பது.



இரண்டு விஷயங்களில் ஜெ. சிறப்புக் கவனம் செலுத்தினார். ஒன்று, மதுரையை அடாவடி மனிதர்களின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதில் உறுதி காட்டியது. இரண்டாவது, அ.தி.மு.க-வினர் சிலருக்கே பிடிக்காதது. ஆனால், ஜெ. தயக்கம் இல்லாமல் செய்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை முறைகேடு இல்லாத தேர்வு அமைப்பாக மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் இளைஞர்களுக்கு நம்பிக்கை கொடுத்தன.



மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது வேறு. அண்டிப் பிழைப்பது வேறு. பாதகமான காரியங்கள் நடந்தாலும் ஒரு மாநில அரசு சுயாட்சி உரிமைகொண்ட தாகச் செயல்பட வேண்டும் என்பதை நடைமுறையில் காட்டிய தைரியம் ஜெயலலிதாவின் தனித்தன்மையை உறுதிப் படுத்துகிறது.



ஈழத் தமிழர் விவகாரத்தில் கடந்த காலத்தில் இன விரோத நிலைப்பாடுகளை எடுத்தாலும், ஆட்சியைப் பிடித்த பிறகு கொண்டுவந்த தீர்மானங்கள், விடுத்த அறிக்கைகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் முதல்வரின் செல்வாக்கை அதிகரித்து உள்ளது.


தினமும் தலைமைச் செயலகம் வருவது, அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடுவது, முக்கியப் பிரச்னைகள்பற்றி அடிக்கடி ஆலோசிப்பது போன்றவை பழைய ஜெயலலிதாவைவிட இன்றைய ஜெ. உற்சாகமானவர் என்றே காட்டுகிறது. சட்டப் பேரவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்று விவாதங்களில் கலந்துகொண்டு வாத வல்லுநராகவும் திகழ்கிறார்.


தி.மு.க. ஆட்சியில் பல அமைச்சர்கள் தலைகால் புரியாமல் ஆடினார்கள். அந்தச் சூழ்நிலை இப்போது இல்லை. ஆளும் கட்சியினர் காவல் நிலையங்களுக்குச் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்வதும் குறைந்துவருகிறது. 'பதவியை வைத்து ஆடினால், அம்மா ஆப்பு அடித்துவிடுவார்’ என்ற அசரீரிக் குரல் கேட்பதே தப்பைக் குறைக்கிறது.



வெண்மைப் புரட்சிக்கு வித்திடும் வகையில், கறவை மாடுகள், ஆடுகள் வழங் கியதும், ஏழைப் பெண்களின் திருமணத் துக்கு தாலிக்குத் தங்கம் வழங்கியதும் கிராமப்புற மக்களுக்கு நல்ல உதவியாக அமைந்து இருக்கிறது.



கல்வித் துறையிலும் சிறப்புக் கவனம் செலுத்தினார் ஜெ. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்குவதில் தொடங்கி, 55 ஆயிரம் ஆசிரியர் நியமனம் வரை நடந்தால்... தமிழகப் பள்ளிக் கல்வி செழிக்கும்.





தன்னுடைய இலக்கு இதுதான் என்பதை வரையறுத்து 'விஷன் 2023’ வெளியிட்டார் முதல்வர். தன்னுடைய எண்ணங்களை அடுத்த 10 ஆண்டுகளுக்கு உரியதாக சொன்ன தன்னம்பிக்கை அனை வராலும் பின்பற்றத்தக்கது.


அல்லவை  10


சென்ற தி.மு.க. ஆட்சியில் எகிறி வந்த விலைவாசி, கடந்த ஆண்டு ஏகத்துக்கும் ஏறியது. விலைவாசியைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கையில் இல்லை என்ற மெத்தனம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. இதைத் தடுக்க முயற்சிக்காத ஜெ., பால் விலையையும் பஸ் கட்டணத்தையும் தன் பங்குக்கு ஏற்றிவைத்தார்.



மின் வெட்டு முழுமையாக இல்லாத தமிழ்நாட்டை எப்போது பார்க்க முடியும் எனத் தெரியவில்லை. இதற்கான திட்டமிடுதல்களில் ஜெயலலிதா முழுக் கவனம் செலுத்தியதாகவும் தெரியவில்லை. 6 முதல் 8 மணி நேரம் வரை மின் வெட்டு இருந்ததும்... இன்னும் பல இடங்களில் இருப்பதும் வேதனையானது.



தமிழ்நாட்டின் பொதுச் சொத்தான மணல், பட்டப்பகலில் கொள்ளை அடிக் கப்படுகிறது. என்ன சட்டதிட்டப்படி, யார் எடுக்கிறார், எவ்வளவுக்கு விற்கிறார் என்ற வரைமுறையே இல்லாமல் பூட்டு உடைக்கப்பட்ட வீடாக ஆறுகள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இதுபற்றியவெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.



கருணாநிதி கொண்டுவந்தவை என்பதற்காக, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் தலைமைச் செயலகத்தையும் மருத்துவமனை ஆக்க முயற்சித்தார். சமச்சீர்க் கல்வியை என்ன செய்தேனும் ஒழிக்க முயற்சித்தார். செம்மொழி நூலகம் என்ன ஆனது என்றே தெரியவில்லை.


மூன்று தமிழர் தூக்கு, கூடங்குளம் எனப் பல முடிவுகளை மாற்றிக்கொண்டே இருந்தார். அதிகாரிகளும் அமைச்சர்களும் முதல் ஆறு மாதத்தில் பந்தாடப்பட்டே வந்தார்கள். 'எடுத்த முடிவில் எப்போதும் தெளிவானவர்’ என்ற பெயரை ஜெ. இழந்தார்.



ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கும் என்ற நினைப்பில் மண் விழுந்தது. குற்றம் நடக்காத நாளே இல்லை எனலாம். இதற்கு முக்கியக் காரணம், போலீஸ் - குற்றவாளிகள் இடையிலான நட்புதான். இந்தக் கண்ணியை உடைக்காமல், நாட்டில் அமைதியை ஏற்படுத்த முடியாது.



அப்பழுக்கற்ற அரசாங்கம் நடக்கிறது என்று சொல்ல முடியவில்லை. கடந்த ஆட்சியைவிட கமிஷன் சதவிகிதம் உயர்த் திய அமைச்சர்களும் இருக்கிறார்கள். கான்ட்ராக்ட் மனிதர்களின் நடமாட்டமும் தலைமைச் செயலகத்தில் அதிகம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே புரோக்கர்களாக மாறிய அவலமும் தொடர்கிறது.



சசிகலாவைக் கட்சியைவிட்டு நீக்கியபோது உயர்ந்த இமேஜ், அவரை மறுபடியும் சேர்த்துக்கொண்டபோது சரிந்தது. 'சசிகலா செய்தது எதுவும் எனக்குத் தெரியாது’ என்று ஜெ. சொன்ன வாதத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.


சட்டப் பேரவையில் அளவுக்கு மீறி அம்மா புகழ் பாடும் ஜால்ரா சத்தமே கேட்கிறது. ஆளும் கட்சியை விமர்சித்துப் பேச எதிர்க் கட்சிகளை அனுமதிப்பது இல்லை. அமைச்சர்கள் முதல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் வரை அனைவருமே தங்கள் சொந்த அம்மாவைக்கூட இத்தனை தடவை 'அம்மா’ என்று அழைத்திருப்பார்களா என்ற சந்தேகமே எழுகிறது.



முதல்வர் மீது மரியாதை இருக்கலாம். பக்திகூட இருக்கலாம். பயம் இருந்தால், அது அவருக்கேகூடப் பயன்படாது. அதுவும் சில அமைச்சர், அதிகாரிகளுக்கு மரண பயமே இருக்கிறது. இத்தகைய மனிதர்களை வைத்து ஜெயலலிதாவால் நல்லாட்சி தரவே முடியாது. நெகிழ்வுத்தன்மை உள்ளவராக ஜெயலலிதா தன்னை மாற்றிக்கொண்டால் மட்டுமே வெற்றியைத் தக்கவைக்க முடியும்.