Showing posts with label DIRECTORS. Show all posts
Showing posts with label DIRECTORS. Show all posts

Sunday, May 20, 2012

பட்டையை கிளப்பும் புது டைரக்டர்கள் - யார் யார்? அலசல் -

முதல் முத்திரையை அழுத்தமாகப் பதித்த புதிய இயக்குநர்களின் அடுத்த அதிரடி என்ன? இரண்டாவது ஹிட்தான் இண்டஸ்ட்ரியில் இடத்தைத் தக்கவைக்கும் என்பதை உணர்ந்து,  இரு மடங்குப் பாய்ச்சலுடன் இருந்தவர்களிடம் அப்டேட்ஸ் கேட்டேன்...

1. ஈரம்’ அறிவழகன்: ''ஆஸ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 'வல்லினம்’ படம் இயக்குகிறேன். கூடைப்பந்து விளையாட்டுதான் படத்தின் மையம். ஆனா, படம் பொதுவா விளையாட்டுச் சூழலைப் பத்திப் பேசும். நகுல் ஹீரோ. மிருதுளா அறிமுக ஹீரோயின். முக்கியமான கேரக்டர்ல அதுல் குல்கர்னி நடிக்கிறார். 'ஈரம்’ படத்துக்கு மியூஸிக் பண்ண தமன்தான் இந்தப் படத்துக்கும் இசை. சென்னைதான் படத்தின் மைதானம். பொதுவா, இளைஞர்கள் வாழ்க்கையைக் காதல், நட்பு, காமெடினு மூணு விஷயங்கள்ல அடக்கிடுவாங்க. அதையும் தாண்டி இயல்பாவே நாம விளையாட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் சேர்த்துக் கதை பண்ணியிருக்கோம். எல்லாத் தரப்பு மக்களுக் கும் பிடிக்கிற மாதிரி கிளாஸான படமா இருக்கும். ஆட்டத்துக்குத் தயாரா இருங்க!''



2. 'வெங்காயம்’ சங்ககிரி ராச்குமார்: '' 'வெங்காயம்’ படத்தை தெலுங்கு, இந்தியில் ரீ-மேக் பண்றேன். இன்னும் சொல்லப்போனா, 'வெங்காயம்’ படம் ஆந்திராவுக்குத்தான் கச்சிதமா செட் ஆகும். ஆந்திராவில் கடந்த இரண்டு ஆண்டுகள்ல மட்டும் 25 நரபலிகள் நடந்திருக்கு. அங்கே தலக்கோணம் கிராமப் பகுதிகள்ல ஒரு மாசம் தங்கி, அந்த மக்களின் கலாசாரத்தைப் புரிஞ்சுக்கிட்டு, படத்தின் திரைக்கதையில் இன்னும் காரம் சேர்த்திருக்கோம். நரபலிக் கொடூரத்தை இன்னும் உறைக்கிற மாதிரி சொல்லப்போறேன். 30 நாள்ல தெலுங்குப் பட ஷூட்டிங் முடிச்சிடுவோம். அப்புறம் அப்படியே இந்தி ரீ-மேக். அப்புறம்தான் தமிழ்ல படம் இயக்கக் கதை பிடிக்கணும்!''

3. எங்கேயும் எப்போதும்’ சரவணன்: ''லிங்குசாமி சாரின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்கப்போறேன். ஆக்ஷன் படம். கதை தயார் பண்ணிட்டு இருக்கேன். ஹீரோ விஷால். இசை ஜி.வி.பிரகாஷ். இப்போதைக்கு இது மட்டும்தான் ஃபைனல் ஆகியிருக்கு. முழு ஸ்க்ரிப்ட்டும் முடிஞ்ச பிறகுதான், மத்த ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்களை ஃபிக்ஸ் பண்ணணும். பளிச்சுனு இன்னும் எதுவும் தோணலை. அதனால, தலைப்பு இன்னும் வைக்கலை. லிங்குசாமி சார், 'நல்லாப் பண்ணு’னு தட்டிக் கொடுத்து இருக்கார். அவர் கொடுத்திருக்கும் சுதந்திரத்துக்கு சூப்பராப் பண்ணலாம்!''

4. 'மௌனகுரு’ சாந்தகுமார்: '' 'மௌனகுரு’பத்தி பாசிட்டிவ் டாக் வந்த பிறகு, 20தயாரிப் பாளர்களிடம் இருந்துவாய்ப்பு வந்தது. அதில் ஸ்டுடியோ க்ரீனுக்கு மட்டும் கமிட் ஆகி இருக்கேன். ஆக்ஷன் படம். ஸ்க்ரிப்ட் வேலை நடந்துட்டு இருக்கு. படத்துக்குத்தலைப்பு இன்னும் சிக்கலை. ஜீவா, கார்த்தி ரெண்டு பேர்ல ஒருத்தர்தான் ஹீரோ. அது யார்னு ஸ்க்ரிப்ட் முடிஞ்ச பிறகுதான் சொல்ல முடியும்!''

'5. பச்சை என்கிற காத்து’ கீரா: 'நிலா பேசிய கதைகள்’, 'காற்று விடுவதில்லை’, 'வண்ணம்’னு மூணு கதைகள் கைவசம் இருக்கு. 'நிலா பேசிய கதைகள்’ படத்தை என் நண்பர்தான் தயாரிக்கிறார்.  'பச்சை என்கிற காத்து’ ஹீரோ வாசகர்தான் அந்தப் படத்திலும் நாயகன். பிரபலமான ஹீரோயின் மட்டும் ஃபிக்ஸ் பண்ணணும். வனம் சார்ந்த வாழ்க்கை... அதில் கொஞ்சம் காதல்... இதுதான் படம்.  மத்த இரண்டு கதைகளும் பெரிய பட்ஜெட். பெரிய பேனர் தயாரிப்பாளர்கள்கிட்ட முயற்சிகள் தொடருது!''

6.'காதலில் சொதப்புவது எப்படி’ பாலாஜி: '' 'காதலில் சொதப்புவது எப்படி’யை இந்தியில் ரீ-மேக் பண்ற ஐடியா. அதுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்துட்டு இருக்கு. இந்தியில் அதே காதல்-காமெடி ஃப்ளேவர்ல வசனம் எழுதுற வசனகர்த்தா, அந்தக் கலாசாரத்துக்கான அப்டேட்ஸ்னு வேலை ஓடிட்டு இருக்கு. அந்தப் பட வேலைகள் முடிஞ்ச பிறகுதான் தமிழ்ப் படம் பண்ற ஐடியா. இந்தி, தமிழ்னு எந்த மொழியா இருந்தாலும், என் முதல் படத்துக்குக் கை கொடுத்த 'ஒய் நாட் ஸ்டுடியோஸ்’தான் என் இரண்டாவது படத்தையும் தயாரிக்கும்!''

7 ஆரண்ய காண்டம்’ தியாகராஜன் குமாரராஜா: ''ஒய் நாட் ஸ்டுடியோஸ் 'ஆரண்ய காண்டம்’ டிரெய்லர் பார்த்த துமே என்னைவெச்சுப் படம் தயாரிக்க கமிட் பண்ணிட்டாங்க. ஆனா, நான்  இப்போதான் ஸ்க்ரிப்ட் எழுதுறேன். படம் எந்த ஸ்டைல்ல இருக்கணும்னு இப்போ வரை எனக்கே ஐடியா இல்லை. அந்த விஷயத்துல நான் ரொம்ப மெதுவாதான் எழுதுவேன். சீக்கிரம்  மத்த தகவல்களை ஷேர் பண்ணிக்கிறேன் நண்பா!''