Showing posts with label கார்த்திகா. Show all posts
Showing posts with label கார்த்திகா. Show all posts

Sunday, May 17, 2015

புறம்போக்கு என்கிற பொதுவுடைமை vs 36 வயதினிலே -

'இயற்கை', 'ஈ', 'பேராண்மை' படங்களின் இயக்குநர் ஜனநாதனின் நான்காவது படம் 'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை'. ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி என மூவரும் இணைந்திருக்கும் படம் எந்த மாதிரியான அனுபவத்தைக் கொடுத்தது?
டைட்டில் கார்டில் ஆர்யா பெயருக்கு கிடைக்காத கைத்தட்டல் விஜய் சேதுபதிக்குக் கிடைத்தது.
கைதியாக இருக்கும் ஆர்யாவுக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிடுகிறார். ஆனால், ஆர்யா அதுகுறித்த எந்த சலனமும் இல்லாமல் நீதிமன்றத்தில் ஜாலியாக உட்கார்ந்து கடலை சாப்பிடுகிறார். நீதிபதி தீர்ப்பு கூறியதும், என்னை போர்க்குற்றவாளியாகக் கருதி சுடுங்கள் என்று ஆர்யா கேட்கிறார். அப்போதே ரசிகர்கள் சத்தமில்லாமல் படம் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
ஆர்யாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றும் பொறுப்பு சிறைச்சாலை அதிகாரி ஷாமிடம் ஒப்படைக்கப்படுகிறது. தூக்கில் போடும் அனுபவம்மிக்க ஊழியர் விஜய் சேதுபதியை ஷாம் தேடிப் பிடிக்கிறார். இதற்கிடையில், போராளி கார்த்திகா, ஆர்யாவை தப்பிக்க வைக்க முயற்சிக்கிறார். இதில் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
பாலு என்கிற பாலுச்சாமியாக தீவிரமான கம்யூனிஸ்ட் போராளியாக ஆர்யா கச்சிதமாக நடித்திருக்கிறார். அளவான வசனம், தீர்க்கமான பார்வை, நம்பிக்கையோடு இயங்குதல் என எல்லா தளங்களிலும் தன்னை செதுக்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், மிகப்பெரிய ரயில் கொள்ளையை நடத்திய ஆர்யா எந்த இடத்திலும் புத்திசாலியாகவே காட்டப்படவில்லை.
ஷாம் சிறைச்சாலை அதிகாரி மெக்காலே கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தம். சட்டப்படிதான் எதையும் செய்வேன். சட்டம் தான் குற்றங்களைத் தடுக்கும். ''செஞ்ச தப்புக்கு ஏத்த மாதிரி கையை வெட்டணும், காலை வெட்டணும், தலையை வெட்டணும், தப்பு பண்ணவனை நடுரோட்டுல நிக்க வெச்சு கல்லாலயே அடிச்சு கொல்லணும்'' என்கிற ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக தீவிரமாக நடித்திருக்கிறார். நிதானமான, உறுதியான ஷாமின் நடவடிக்கைகள்தான் படத்தை நகர்த்தவே உதவுகின்றன.
தூக்கில் போடும் ஹேங்மேன் எமலிங்கம் கேரக்டரில் விஜய் சேதுபதி பக்கா ஃபிட். சென்னை பாஷை பேசிக்கொண்டு, சரக்கடித்துவிட்டு சலம்புவதும், எமோஷனில் கரைவதுமாக மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். படம் முழுக்க ஃபெர்பாமன்ஸில் கவனம் ஈர்ப்பது விஜய் சேதுபதிதான்.
போராளியாக கார்த்திகா, குயிலி கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்திருக்கிறார். காதல், கிளாமர், டூயட் என்று இல்லாத அழுத்தமான பாத்திரத்தில் நடித்ததற்காக கார்த்திகாவைப் பாராட்டலாம்.
ஜனாதிபதி தேர்தலில் நின்றதற்கான காரணத்தை விஜய் சேதுபதி சொல்வது, கைதி பல வருடங்களுக்குப் பிறகு நிரபராதி என்று தெரிந்ததும் விடுதலை செய்யப்படுவதும், அந்தக் கைதி குடும்பத்தை இழந்து கண்ணீரில் கரைவதும் என சமகால சூழலை கொஞ்சம் நையப் புடைத்திருக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.
விஜய் சேதுபதி அறிமுகப் படலத்தில் அப்படி ஒரு பாடல் அவசியம்தானா சாரே?
படத்தின் முக்கிய மையமாக இருக்கும் ஆர்யாவின் பின்புலம் என்னவென்றே தெரியவில்லை. கார்த்திகாவுக்கும் அப்படியே.
விஜய் சேதுபதியின் பின்புலமும், கதாபாத்திர வடிவமைப்பும் நேர்த்தியாகவும், இயல்பாகவும் உள்ளது.
எல்லோரையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும், ரகசியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஷாம் எப்படி விஜய் சேதுபதியை மட்டும் கண்காணிக்காமலேயே இருக்கிறார்?
ஷாம் நினைத்திருந்தால் விஜய் சேதுபதிக்குப் பின்னால் இருக்கும் அந்த கூட்டத்தையே பிடித்திருக்கலாமே?
வெள்ளை பேப்பரில் பாலில் எழுதுவது, சமஸ்கிருதத்தில் துப்பு கொடுப்பது, சட்டையில் க்யுஆர் கோடு (QR code) எல்லாம் நல்ல ஐடியா தான். ஆனால், எதுவும் அடடே என ஆச்சர்யப்படுத்தும் அளவுக்கு க்ளிக் ஆகவில்லை.
உலகக் கழிவுகளை இந்தியாவில் கொட்டுவதைக் குறித்து உரக்கப் பேசுகிறார் ஆர்யா. அதற்குப் பிறகு யாருமே அதை கண்டுகொள்வதில்லையே. மரண தண்டனையின் நீட்சியாகவே படம் நீள்கிறதே?
ஷாமும்- ஆர்யாவும் தனியாக பேசும் காட்சி எந்த அளவுக்கு காத்திரமாக இருந்திருக்க வேண்டும்? எதைப்பற்றியும் தெளிவுபடுத்தாமல் காமா சோமோவென்று நகர்வது எந்த விதத்தில் நியாயம்? படத்தின் மொத்த பலமும் அங்கே புஸ்ஸாகிப் போய்விடுகிறது.
செல்வகுமாரின் சிறைச்சாலை செட் 'ரியல்' உணர்வைத் தருகிறது. சிறைச்சாலை குறித்த விதிமுறைகள், கட்டுப்பாடுகள் எல்லாம் இம்மி பிசகாமல் அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால், அதே போல படத்தின் திரைக்கதையை ஜம்ப் ஆகாமல் இருக்கும்படி கவனம் செலுத்தி இருந்தால், வசன ரீதியான பிரச்சாரத்தைத் குறைத்திருந்தால் 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக பட்டா போட்டு அமர்ந்திருக்கும்.
ஆனாலும், அசுத்தம், மரணதண்டனை , கருணை மனு ஆகியவற்றைப் பேசிய விதத்தில் புறம்போக்கு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம்.


ஜோதிகா
ஜோதிகா
ஜோதிகாவின் மறுவருகை என்ற ஒற்றை காரணம் போதாதா '36 வயதினிலே' படத்தைப் பார்க்க?
'மொழி‘ படத்தில் சைகைகளால் அபிநயம் பிடித்த ஜோதிகா 8 வருடங்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். ஜோதிகாவின் வரவேற்பை ஆமோதிப்பதைப் போல தியேட்டரில் குவிந்திருந்தது பெண்கள் கூட்டம்.
'36 வயதினிலே' திரைப்படம் அந்த அளவுக்கு ரசிகர்களை வசப்படுத்தியதா?
வருவாய்த் துறையில் வேலை செய்கிறார் வசந்தி தமிழ்ச்செல்வன் (ஜோதிகா). தமிழ்ச்செல்வன் (ரஹ்மான்) வானொலி அறிவிப்பாளர்.
ரஹ்மானுக்கு அயர்லாந்து செல்ல விருப்பம். அந்த விருப்பத்துக்கு வரும் சில தடைகளால் மனைவி ஜோதிகாவைத் திட்டித் தீர்க்கிறார். கண்ணை மூடித் தூங்கினா எல்லாருக்கும் கனவு வரும். அது இல்லை. வாழ்க்கையில சில உணர்வுகளால விஷனா பார்க்கிற கனவு என்று மனைவியிடம் கோபமுகம் காட்டுகிறார். அதற்குப் பிறகு கணவனாலும் சமூகத்தாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஜோதிகா எப்படி சாதிக்கிறார்?
8 வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்தாலும் 'பேக் டு தி ஃபார்ம்' ஆகி இருக்கிறார் ஜோதிகா. சூர்யா பெயரை டைட்டிலில் போடும்போது எழும் விசில் சத்தத்தைக் காட்டிலும், ஜோ-வை திரையில் பார்க்கும்போது சத்தம் அதிகம் எழுகிறது. ஜோதிகாவின் ஒவ்வொரு ரியாக்‌ஷனுக்கும் பெண்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது அதிசயம்தான்.
டிராஃபிக்கில் சிக்கி ஆபிஸூக்கு லேட்டாக வந்து திட்டு வாங்குவது, தங்கப்பன் பெயரை தங்கப்பெண் என எழுதியதால் டோஸ் வாங்குவது, கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி கூனி குறுகுவது, கிண்டல் செய்பவர்கள் மூக்கை உடைக்க பொறாமையை பொங்க வைக்கும் அளவுக்கு பில்டப் கொடுப்பது, பஸ்ஸில் பயணிக்கும் பாட்டியின் சீட்டை பிடிப்பது, சீட் வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இடித்துவிட்டு பரவாயில்லை என சொல்வது, அயன்பாக்ஸ்ல மூஞ்சியை தேய்க்கிறேன் வா என் பொண்ணா நீ என மகளிடம் கோபப்படுவது என கிடைத்த எல்லா இடங்களிலும் அளவாக ஸ்கோர் செய்கிறார் ஜோதிகா.
ஜோதிகாவின் ஃபெர்பாமன்ஸ் ஆஹா என்று சொல்லவைக்கவில்லை. ஆனால், அவ்வளவு பொருத்தமாக அடக்கமாக இருக்கிறது.
ஜோதிகாவின் கணவராக ரஹ்மானின் நடிப்பு ஓ.கே ரகம். ஆனால் கனவு, வாழ்க்கை, லட்சியம் என்று மூச்சு முட்ட பேசுபவர் வார்த்தைகளில் மட்டு மாடுலேஷன் காட்டுறார். அதை உணர்வாக, நடிப்பாக தரவில்லை என்பதுதான் வருத்தம். எனக்குத் தெரியாதுங்கிற ஒரே ஒரு வார்த்தையை வைச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்றது இந்த உலகத்துலயே நீ ஒருத்திதான் என ரஹ்மான் ஆதங்கப்படும்போது மட்டும் கவனிக்க வைக்கிறார்.
ஜோதிகாவின் தோழியாக அபிராமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அபிராமியின் எனர்ஜி பேச்சுக்கு ரசிகர்கள் கிளாப்ஸ் அடித்தனர்.
டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், பயில்வான் ரங்கநாதன், பிரேம், தேவதர்ஷினி ஆகியோர் சரியான தேர்வு.
திவாகரனின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனி இசையும் படத்துக்குப் பெரும் பலம்.
மலையாளத்தில் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் தமிழில் மறு ஆக்கம் செய்திருப்பது படத்தை எந்த விதத்திலும் சிதைக்காமல் பார்த்துக்கொள்கிறது.
மலையாளத்தில் மஞ்சுவாரியருக்கு அம்மா இருப்பதைப் போலவும், அம்மாவின் கிராமத்துக்குச் சென்று ரிலாக்ஸ் ஆகிவருவதைப் போலவும் காட்சிகள் இருக்கும். தமிழில் ஜோதிகாவுக்கு அப்படிப்பட்ட காட்சிகள் இல்லை.
ஒரு பெண்ணின் கனவுக்கு எக்ஸ்பைரி தேதியை நிர்ணயிப்பது யார்? ஏன்? இதுதான் படத்தின் ஒட்டுமொத்த கேள்வி.
எந்த வயதிலும் சாதிக்க முடியும். அதற்கு வயது தடையல்ல என்று சொன்னதற்காகவும், இயற்கை விவசாயம் என்பதை வலியுறுத்தியதற்காகவும் '36 வயதினிலே' படத்தை வரவேற்கலாம்.
தமிழில் இப்படிப்பட்ட படங்கள் ரீமேக் மூலமாகவாவது வருவது ஆரோக்கியமான விஷயம். முதல் நாள் வரவேற்பு நீடித்தால், தமிழ் சினிமாவில் இந்த சாதகப் போக்கு முழு பலன் தரலாம்thanx - the hindu


 • Mohanraj  
  குட்
  about 22 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
  • எஸ்.கெளதம்  
   இழந்துபோனதாக நான் நினைத்த ஜோதிகா மீண்டும் தன் திறமையை நிலை நாட்ட வந்துவிட்டார் என்ற சந்தோஷத்தில் படத்தை பார்த்தேன். அருமை..
   about 22 hours ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
   anandan  Down Voted
   • Rajkumar  
    அட்டகாசம்.
    a day ago ·   (0) ·   (1) ·  reply (0) · 
    anandan  Down Voted
    • RAJA Mani  
     4stars!!! good movie
     Points
     1220
     a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
     • RAJA Mani  
      I see it!!! its worth to watch ... The whole family movie!!!
      Points
      1220
      a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
      • Manikandan Kpm  
       நல்ல விமர்சனம் வந்துகொண்டு இருக்கிறது தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரைஅரங்கில் படம் பார்த்தவர்களிடம் .........:)
       a day ago ·   (0) ·   (0) ·  reply (0) · 
       • Labam  
        Comeback jo anni

       Friday, April 27, 2012

       என் தங்கச்சி எதை கேட்டாலும் ஓக்கே சொல்லிடுவா - கார்த்திகா பேட்டி - கிடாவெட்டு

       http://4.bp.blogspot.com/-LsXGUl-rRoI/Ta--VGAc4dI/AAAAAAAAEWI/9VZaSdmMUOk/s1600/Karthika-hot-ko-movie-photo-stills-005.jpg 

       கார்த்திகா நடித்து இன்னும் தமிழில் இரண்டாவது படமே வெளியாகவில்லை. அதற்குள் கார்த்திகா தங்கை நடிக்க வருகிறார் என்று செய்திகள். 'அப்படியா?’ என்று கண்ணழகியிடம் விசாரித்தால், 'ஆமாவா... இல்லையா’ என்று புரியாத விதத்தில் அபிநயிக்கின்றன அவரது விழிகள்.  


       சி.பி - இப்போ எனக்கு பயங்கரமான டவுட் என்னான்னா ராதா ஹீரோயினா நடிச்சப்ப நாம சைட் அடிச்சோம், இப்போ அவங்க பொண்ணு நடிக்கறப்ப அதே போல் சைட் அடிக்க முடியுமா? மக முறை ஆகாதா? 

        ''என் தங்கச்சி துளசி இப்பதான் நைன்த் படிக்கிறா. 'படிப்பா, நடிப்பா’னு எதைக் கேட்டாலும் 'ஓ.கே.’னு சொல்ற வயசு. முதல்ல அவ ஸ்கூலிங்கை முடிக்கட்டும். அப்புறம் பார்ப்போம். அதான் வீட்ல சினிமா சீனியர்ஸ் அம்மா, பெரியம்மா, நான்லாம் இருக்கோமே... பார்த்துக்குவோம்.''       சி.பி -  எதைக் கேட்டாலும் 'ஓ.கே.’னு சொல்ற வயசா?. முதல்ல அந்த ஆட்டிட்யூடை மாத்தச்சொல்லுங்க. ரொம்ப டேஞ்சர்.. சினி ஃபீல்டுல.. 


       1. '' 'கோ’ ஹிட்டுக்குப் பிறகு ஹீரோ ஜீவாவே முழுசா மூணு படம் முடிச்சுட்டார். ஒரு ஹீரோயினா நீங்க அந்த வெற்றியைத் தக்கவெச்சுக்கலையே?''


       சி.பி - அவங்க ஹிட் ஆகனும்னா முதல்ல இயற்கையான புருவம் வேணும்.. அது என்னவோ தகிடு தித்தம் பண்ணி வரைஞ்ச மாதிரியே இருக்கு..  ரொம்ப செயற்கையா தெரியுது.. எப்பவும் முகம் கோபமா இருக்கற மாதிரி இருக்கு.. பெரிய மைனஸ்.. 


       ''கரெக்ட்தான். ஆனா, நான் ஒண்ணும் சும்மா இல்லையே... 'மகரமஞ்சு’னு ஒரு மலையாளப் படத்தில் நடிச்சேன். நல்ல பேர் கிடைச்சது. அப்புறம் ஜூனியர் என்.டி.ஆர்.கூட 'தம்மு’னு ஒரு தெலுங்குப் படம் நடிச்சேன்.         சி.பி - ஆமா, இன்னைக்கு காலைல  ரிலீஸ் ஆச்சு.. இன்னைக்கு மாலைல வேற படம் ரிலீஸ் ஆகுதாம், படம் படு குப்பையாம்.


       'கோ’வுக்குப் பிறகு தமிழ்ல பளிச்சுனு பேர் சொல்ற மாதிரி படம் அமையலை. இப்ப 'அன்னக்கொடியும்  கொடிவீரனும்’ படத்துலதான் அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. தேனிப் பக்கம் சந்தோஷமா மாடு மேய்ச்சிட்டு இருக்கேன்!''


       சி.பி - அன்னக்கொடி படம் ரிலீஸ் ஆச்சுன்னா உலகத்துலயே கிராமத்துக்கேரக்டர்ல ஓவர் மேக்கப் போட்ட ஓமனா விருது  உங்களூக்குத்தானாம்..
       2. ''அப்படி என்ன அந்தப் படத்தில் ஸ்பெஷல் ஸ்கோப் இருக்கு?''       சி.பி - அவங்க திறமை முழுசா காட்டறாங்களாம்.  சென்சார் கட் போக ஓரளவுதான் வெளீல வருமாம். 

       ''என்னங்க இது? டைட்டில்லயே என் பேர் இருக்கு. பாரதிராஜா சார் படம். இதுக்கு மேல என்ன வேணும்? சிறுமி, இளம் பெண், மெச்சூர்ட் கேர்ள், அம்மானு நாலு ஸ்டேஜ்ல வர்ற கேரக்டர். படிச்சது, வளர்ந்தது, நடிச்சதுனு எல்லாமே சிட்டியிலேயே இருந்துட்டதால கிராமத்துச் சூழல் ரொம்பவே புதுசா இருந்துச்சு. ரொம்பக் கஷ்டப்பட்டேன்.


        ஆனா, 'உனக்கு அதுதான் ப்ளஸ். அந்தப் புதுச் சூழலுக்கு நீ இயல்பாவே வெட்கப்படுற. அதுதான் உன் கேரக்டரை ரசிக்கவைக்குது’னு அம்மா சொன்னாங்க. மிஸ் பண்ணவே முடியாத படம்.''  


       சி.பி - கோ படத்துல நீங்க வெட்கப்படற சீன் பார்த்து நாங்க எல்லாரும் வெட்கப்பட்டோம் மேடம்.. ரொம்ப கேவலமா இருந்தது.. 

       3. ''என்ன... திடீர்னு அமீர் - இனியா ஜோடியைப் படத்துல இருந்து நீக்கிட்டார் பாரதிராஜா?''        சி.பி - மாற்றம் ஒன்றே இந்த சினிமா உலகில் மாற்றம் இல்லாததுன்னு அவர் நினைக்கறாராம்

       ''அமீர் சாரோட 'கட்டுவிரியன்’ கேரக்டர் ரொம்ப பவர்ஃபுல். அது ஒரு முழுப் படத்தையே தாங்கி நிக்கும். அதை இந்தப் படத்தோட சேர்த்தா, அந்த கேரக்டர் முழுசா வெளிப்படாமல் போயிருமோனு சார் நினைச்சிருப்பார். அப்படித்தான் இருக்கும்னு நான் நினைக்கிறேன். வேற காரணம் எதுவும் எனக்குத் தெரியலை!''

       http://reviews.in.88db.com/images/karthika-gallery/Actress-Karthika-Latest-Stills-Pics-Photoshoot-Gallery-60.jpg


       4. ''சினிமாவில் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா?''       சி.பி - லவ்வர் இருக்காங்களா?ன்னு நேரடியா கேட்க முடியுமா?

       ''என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? 'தம்மு’ படத்தில் த்ரிஷாவும் நானும் சேர்ந்துதான் நடிச்சோம். அப்ப ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். த்ரிஷா ஸோ ஸ்வீட். 10 வருஷத்துக்கும் மேல ஃபீல்டுல இருக்காங்க. ஃப்ரெண்ட்லியா என்ன கேட்டாலும் எல்லா வேலையையும் விட் டுட்டு பண்ணிக்கொடுப் பாங்க. 


       கேரியரிலும் பெர்சனலாவும் அவங்க நல்ல ரோல் மாடல். தமிழ்ல அவங்க இடத்தை நான் பிடிக்கணும். அப்படி நான் யோசிக்கிறப்ப மட்டும் அவங்களை நான் எனிமியா நினைச்சுக்குவேன். அப்பத்தானே அவங்க இடத்தைப் பிடிக்க முடியும்!''


       சி.பி - அப்போ சிம்பு கூடவும், ஆர்யா கூடவும் ரொம்ப ஃபிரண்ட்லியா இருப்பீங்களா? 

       5. ''உங்க உயரம்தான் பல ஹீரோக்களை உங்களுடன் நடிக்கவிடாமப் பண்ணுதாமே?''


       சி.பி - ஆமா, ஆனா ஒரு பயலும் கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலைன்னு சொல்லிட முடியாது.ஏன்னா கைக்கே எட்டலையாம்

       ''உயரம்கிறது என் அடையாளம். தன் மீது நம்பிக்கை உள்ள ஹீரோக்கள் என்கூட சேர்ந்து நடிச்சிருக்காங்க; நடிக்கிறாங்க. அப்படி தன்னம்பிக்கை உள்ள ஹீரோக்கள்கூட நடிச்சாலே எனக்குப் போதும்!''

       http://1.bp.blogspot.com/-FVE-T_shSQQ/TlEaaj4fihI/AAAAAAAAcbI/qipPjtFFj_E/s1600/karthika_Hot_in_white_saree_photo_stills%2B%25281%2529.jpg

       டிஸ்கி -பதிவுலக நண்பர்களுக்கு இன்று புதிய திரட்டி ஒன்றை அறிமுகப்படுத்தப் போகிறேன். இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி வரிசையில் புதிதாக களத்தில் குதித்திருக்கிறது http://www.hotlinksin.com

       இந்த திரட்டியில் பதிவுகளை தொடர்ந்து இணைத்து வந்தால் நம் இணையதளத்திற்கு வருகிற வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது மட்டுமில்லாமல் பிளாக்கின் அலெக்ஸா ரேங்கின் மதிப்பும் உயரும் என்கிறார்கள். நீங்களும் முயற்சித்துத்தான் பாருங்களேன்...       Sunday, May 08, 2011

       பருத்தி வீரன் - ஈரோடு ரஞ்சனி நிச்சயதார்த்தம் - காமெடி கும்மி

        http://goob.mobi/slide/Karthi_first_gift_to_Ranjani-c0cdcb261aff3e31ad7e9c81e4766ee9.jpg


       'இருவருக்கும் ஒரே அலைவரிசை!'' 


       ருத்தி வீரன்’ கார்த்திக்கு ஜூலை 3-ம் தேதி கல்யாணம்!


       சி பி - ஹூம்.. லெமனா இருக்கற நடிகை தவிர அனைவருக்கும் சந்தோஷமே.. 


        ''வாழ்த்துக்களால் என் செல்போன் இன்பாக்ஸ் நிரம்பி வழியுது. ''சிறுத்தை ஷூட்டிங்ல பார்த்தோமே...’ என்று பெரிய நெருக்கம் இல்லாதவர்கள்கூட வாழ்த்து சொல்ல, அறிமுகத்தோடு அழைக்கிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பேச வைக்கிறார்கள். 'ரெண்டு நாளைக்கு செல்போனை ஆஃப் பண்ணித்தான் போடேன்டா’ எனகிறான் நண்பன். எனக்கு
       வாழ்த்து சொல்லியே ஆக வேண்டும் என அவர்களுக்கு என்ன வேண்டுதலா? அவங்க வீட்டுப் பையன் ஒருவனுக்கு நல்லது நடக்கிற மாதிரி, என்னை வாழ்த்தும் ரசிகர்களின் அன்புக்கு நான் அடிமை. அஞ்சே படங்கள் மூலம் நல்ல உயரததுக்கு அழைத்துச் சென்ற நல்ல உள்ளங்களைப் பெற்றுத் தந்த தமிழ் திரையுலகுக்கு நன்றி.''

       1. ''வாழ்த்து, நன்றி எல்லாம் ஓ.கே. ரசிகைகள் சைடு ரெஸ்பான்ஸ் என்ன?''

       சி பி - என்னது சைடு ரெஸ்பான்ஸா? அப்போ செண்ட்டர் ரெஸ்பான்ஸ் பற்றி அடுத்த கேள்வி உண்டா?


       ''ஹலோ, நான் எத்தனை பேரைத்தான் சார் கல்யாணம் பண்ணிக்க முடியும்?

       சி பி - ஹி ஹி அண்ணன் உண்மையை ஒத்துக்கிட்டார்...

       ஆன்லைன் பக்கம் போனால் அதிர்ச்சியா இருக்கு.

       சி பி - ஆமா. பெண் லைன் பக்கம் போனாத்தான் குளிர்ச்சியா இருக்கும். 

       'என்ன மாமா... கல்யாணமா? கங்கிராட்ஸ்’ என சாஃப்ட் டைப்பிலும், 'டேய், என்னை ஏமாத்திட்டில்ல?’ என மிரட்டும் தொனியிலும் ஏகப்பட்ட மெயில்கள்.

        மிரட்டற மெயில் ஐ பி நெம்பரை நோட் பண்ணுனீங்களா? எல்லாமே ஒரே ஆளாத்தான் இருக்கும்.. ஹி ஹி 


       எல்லாருக்கும் பொறுப்பா, பொறுமையாப் பதில் தர ஆசைதான். ஆனால்... நேரம்? இருந்தாலும் நல்ல வார்த்தைகளைத் தேடிப் பிடித்து டைப் பண்ணி அனைவருக்கும் பொதுவா ஒரே கடிதம் மூலம் பதில் அளிக்கலாமான்னு யோசிக்கிறேன். அன்புக்கு நன்றி என்பதைத் தவிர வேறு என்ன நான் சொல்ல?

       சி பி - என்னது அன்புக்கு நன்றி மட்டும் தானா? அப்போ ”அவங்களுக்கு” செட்டில்மெண்ட் ஏதும் இல்லையா? 
       http://www.suryafansclub.com/wp-content/uploads/2011/05/karthi-engagement-photos-06-150x150.jpg
       '2. 'வருங்கால மனைவியுடன் உங்கள் முதல் சந்திப்பு எப்படி இருந்தது?''

       ''எங்கள் வருங்கால மருமகள் இப்படித்தான் இருக்கணும்னு அப்பா - அம்மா ரெண்டு பேரும்  போட்ட ஒரே கண்டிஷன், 'படிச்சவங்களாவும் நம்ம பண்பாடு தெரிஞ்சவங்களாவும் இருக்கணும்.’ என்பதுதான்.

        அப்போ படிக்காதவங்களுக்கு பண்பாடு தெரியாதா? 


       அம்மாவின் தம்பி தங்கராஜ் மாமா மூலமாகத்தான் ரஞ்சனி சம்பந்தம் வந்தது. அவங்களுக்கு ஈரோடு பக்கம் ஒரு விவசாயக் கிராமம்.  படிப்புக்காக, சென்னைக்கு வந்திருக்காங்க.  இன்னும் கிராமத்தில் வீடு நிலபுலன்கள் இருக்கு. கிராமம், விவசாயம் என்ற முதல் தகவலே அப்பாவுக்கு பிடிச்சுப்போச்சு. மீட்டிங் ஸ்பாட் ஈரோடு என்றால் கிராமமே கூடிடும் என்றார்கள். அதனால், சென்னையில் ஒரு பொது நண்பரின் வீட்டில் சந்திப்பு என முடிவானது. போய் ப்பார்த்தோம். பிடிச்சு இருந்தது. அவ்வளவுதான்!''

        அந்த பொது நண்பர் 3 எழுத்துக்காரரா? செம தில்லு தான்..
       http://www.tamil.haihoi.com/Gallery/Downloads/Tamil-Events-Gallery/Karthi-Ranjani-Engagement/Karthi-Ranjani-Engagement-0010.jpg
       3.''இவ்வளவு சுருக்கமாக முடிச்சிட்டீங்க? என்ன பேசினீங்கனு சொல்லுங்க!''

       சி பி - அடடா.. இவங்க தொல்லை தாங்க முடியலையே.. போடறது கடலை.. அதை பப்ளிக்கா ட்வீட்டவா முடியும்?

       ''விட மாட்டீங்களே? உண்மையைச் சொல்லணும்னா, ஒரு படத்தோட ஸ்கிரிப்ட்டையே மூணு நாலு மாசம் ஆறப்போட்டு யோசிச்சு ஒப்புக்கிற ஆள் நான். ஆனா, ரஞ்சனியைப் பார்த்ததும் ஓ.கே. சொல்லிட்டேன். அப்பாகூட, 'எனக்கு அப்பவே தெரியும்டா. நீ போட்டோவைப் பார்த்ததுமே விழுந்துட்ட!’னு கிண்டல் பண்ணினார்.

       ரஞ்சனியும் நானும் ஒரு மணி நேரம் பேசினோம். பேசினோம்கிறதைவிட, நான் பேசினேன் அவங்க கேட்டுக்கிட்டாங்கன்னுதான் சொல்லணும். என்னென்ன பேசணும்னு ஒரு தயாரிப்போடத்தான் போனேன். ஆனா, பார்த்ததும் பதட்டம் வந்துருச்சு. அப்படியே, பேசப் பேச சகஜமாகிட்டேன்.

       ரஞ்சனி எல்லாத் துறைகளைப்பற்றியும் அப்டேட்டடா இருக்காங்க. அவங்க எம்.ஏ., நான் எம்.எஸ். எனக்குப் பிடித்த, நான் பார்த்த அதே ஆங்கிலப் சினிமாக்களை அவங்களும் பார்த்திருக்காங்கனு இருவருக்கும் ஒரே அலைவரிசை. இந்த மனப் பொருத்தம் போதாதா?''
       சி பி - இருவருக்கும் ஒரே அலைவரிசைன்னா ரெண்டு பேரும் ஏர்செல்லா?


        
       4. ''நீங்க நடிச்சதில் ரஞ்சனிக்குப் பிடித்த படம் எதுவாம்?''

       '' 'பருத்தி வீரன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு நான் தாடியும் லுங்கியுமா வந்து கூத்தடிச்ச ரெண்டு படங்களைத்தான் பார்த்து இருக்காங்க. அந்த அழுக்குப் பையன் லுக்தான் அவங்களுக்குப் பிடிச்சிருக்குனு சொன்னாங்க. அவங்களுக்காகவாவது அப்படி ஒரு படம் பண்ணணும்னு இப்பத் தோணுதுங்க!''

       சி பி - அப்போ அமீருக்கு ஒரு தாங்க்ஸை சொல்லி வைங்க.. 

       Friday, April 29, 2011

       ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவிஞர் வாலி

       https://lh4.googleusercontent.com/-FWnZ8RSOqsM/TXj1XVoGkqI/AAAAAAAAtNA/1h_Xwms2ijU/s1600/anushka-hot-vaanam-movie-stills%25281%2529.jpg

       1.ஒழுக்கத்துக்கு சம்பந்தமே இல்லாத சினிமாத் துறை - கவிஞர் வாலி#அடடா.. அதனாலதான் 40 வருஷத்துக்கும் மேலே அங்கேயே இருக்கீங்களா வர மனசில்லாம?

       ---------------------------

       2. பூவா? தலையா? படத்துக்கு பாதி சம்பளம் தான் குடுத்தாங்க-நடிகை ஷெரீன் புகார் #அரை குறையான டிரஸ்ல நடிக்கறதா ஒத்துக்கிட்டு பல்டி அடிச்சீங்களோ?

        --------------------------------
        3. இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை-நடிகை கரண்#40 வயசு ஆன பின்னும் அப்படி ஐடியா இல்லையா? இப்போ இல்லாட்டி எப்போ?

       -----------------------------

       4.பிரான்ஸ் செல்கிறது திருத்தனி டீம்-இயக்குநர் பேரரசு#மொட்டை போட திருப்பதியோ பழநியோ போனா பத்தாதா?

       --------------------------

       5.ஜெனிலியாவுக்கு ஜூலையில் திருமணம்# உங்க கல்யாண வாழ்க்கையில்” ஜெயம்” கிடைக்க வாழ்த்துக்கள்

       ----------------------
       http://2.bp.blogspot.com/_YcU7A6403D0/TUHOrQ1qX6I/AAAAAAAAASo/SDA7_5aiZfU/s1600/kiran003.jpg
       6.ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்# அப்பாடா.. நம்ம ரூட்டு க்ளியர்.. தமனாவுக்கு ஒரு கவிதை எழுதலாம்

       -------------------------------

       7.கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்-கருணாநிதி#உங்க குடும்பத்துல யார் யார் இருக்காங்கன்னு எங்களுக்கே தெரியுமே? நீங்க சொல்லனுமா? தலைவரே,.

       ----------------------

       8.தங்கபாலு-வேட்பாளர் தேர்வு, நான் மட்டும் முடிவு செய்வது அல்ல#ஆமா சம்சாரத்தைக்கேட்காம எந்த முடிவும் எடுக்க மாட்டாரு,ஆனா கவுத்துடுவாரு

       ------------------------

       9.உதயநிதி தனது பெண் குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை தேடிக் கொண்டிருக்கிறார்.#ஜெயான்னு வைங்க.அப்பவாவது அய்யா ஜெ த்வேஷத்துல இருந்து மாறட்டும்
        http://mimg.sulekha.com/sherin/stills/sherin-newhot06.jpg
       _-----------------------------

       10. சிம்பு எழுதிய எவன்டி உன்னை பெத்தான் பாடலை ஒன்றரை மணி நேரத்தில் மெட்டமைத்து உள்ளனர்.#வானம் வந்தா ஏழரை யாருக்குன்னு தெரிஞ்சிடும்?


       -----------------------------

       Saturday, April 23, 2011

       என் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள் கார்த்திகா கில்மா பேட்டி - காமெடி கும்மி

       http://www.dailomo.com/tamil/content_images/1/images1/radha-daughter-karthika-hot/radha-daughter-karthika-pics-1.jpg 

       '1. ' 'கோ’ ரிலீஸ் ஆகப்போகுது. அதில் உங்க பங்கு என்ன?'' 

       ''கே.வி.ஆனந்த் சார் என்னை முதல் முறை சந்திச்சப்போ, 'பரபரன்னு திரியுற ஒரு ஜர்னலிஸ்ட் கேரக்டர். பார்க்கும்போதே 'இவ எதுவும் பண்ணுவா!’னு ஆடியன்ஸ் நினைக்கணும்’னு சொன்னார்.

       ( எதுவும் பண்ணுவா ன்னா?... ஓஹோ.. தமிழ் ரசிகன் அவன் மனசுக்குபிடிச்ச ஃபிகர்னா அவளுக்காக எதுவும் பண்ணுவான்னா.. ஹி ஹி ரைட்டு.. )


       வழக்கமா தமிழ்ப் படங்களில் ஹீரோ பில்டப்தான் அதிகம் இருக்கும். ஆனா, இதில் எனக்குத் தான் பில்ட்-அப் ஜாஸ்தி. 'சொன்னதும் பளிச்னு புரிஞ்சுக்கிறாங்க’னு அப்பப்ப ஷூட்டிங் ஸ்பாட்ல கே.வி சார் என்னைப் பாராட்டும்போது எல்லாம், முறைச்சுப் பார்ப்பார் ஜீவா.

       ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது அம்மணி.. ஆனானப்பட்ட ஐஸ்வர்யாராயே அடக்கிதான் வாசிக்கறாங்க.. நோட் இட்


       எனக்கு ஒரே டார்கெட்தான். நான் சினிமாவுக்கு வந்தது பணம் சேர்க்கணும்னு இல்லை. பெஸ்ட் பெர்ஃபார்மர்னு பேர் வாங்கணும். அதைச் சீக்கிரமே வாங்கணும். அவ்வளவுதான்!''


       2. ''ஜீவா என்ன சொன்னார்?'' 

       ''நிறைய ஹெல்ப் பண்ணினார்.

       ஹி ஹி  நோ  கமெண்ட்ஸ்


       படத்துல அவர் போட்டோ ஜர்னலிஸ்ட். அதனால, எப்பவும் கேமராவும் கையுமாதான் இருப்பார்.

       (ஜப்பான் மொழில கேமரான்னா கார்த்திகான்னு அர்த்தமா? ரைட்டு.. )


       கேமராவில் விளையாட்டா ஸ்டில்ஸ் எடுத்துட்டு இருந்தவர், படம் முடியும்போது புரொஃபஷனல் போட்டோகிராபர் ஆகிட்டார். என்னை வித விதமா, அழகழகா போட்டோக்கள் எடுத்துக் கொடுத்தார்.

       ஓப்பனிங்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஃபினிஷிங்க்ல பிரச்சனை வராம இருந்தா சரி.. எப்படியோ ஜீவா நல்லா டெவலப் பண்ணீட்டார் போல.. ஸ்டில்சை.. 
       http://1.bp.blogspot.com/_k7wJ-LwJIp4/Svuqb05kAEI/AAAAAAAAD-8/K6DCrX6AAws/s400/karthika-hot-sexy2.jpg

       '3. 'தமிழில் கார்த்திக்கின் பையன் கௌதமுடன் மணிரத்னம் படத்தில் அறிமுகம் ஆகப்போறீங்கனு நியூஸ் வந்ததே?'' 


       ''ஆங்... நானும் கேள்விப்பட்டேன். ஆனா, அது உண்மை இல்லை. நான் கௌதமைப் பார்த்ததே இல்லை.


       பார்க்காமயே எப்படி? ஹி ஹி


       அதனால என்ன... சான்ஸ் கிடைச்சா அவர்கூடவும் ஒரு படம் நடிச்சிரலாம். எனக்கு இவர், அவர்னு இல்லை. இப்போ இண்டஸ்ட்ரியில் மாஸா, க்ளாஸா யார் எல்லாம் இருக்காங்களோ, அவங்க எல்லோ ருடனும் நடிக்கணும்!''

        மாஸா க்ளாஸா இருந்தா மட்டும் போதாது.. பார்ட்டி நல்ல பீஸா என பார்த்து நடிங்க.. 
       4''விட்டா... ரஜினி கூட நடிக்கணும்னு சொல்வீங்க போல?'' 

       ''ஏன், நான் நடிக்கக் கூடாதா? எய்ட்டீஸ் ஹீரோ - ஹீரோயின்கள் கெட் டு கெதரின்போது என் அம்மாகிட்ட ரஜினி அங்கிள், 'உன் பொண்ணு படத்தை பத்திரிகையில் பார்த்தேன். அவ கண்ணு சூப்பரா இருக்கு.

       நல்லவேளை.. கண்ணு சூப்பர்ன்னார்.. பொண்ணு சூப்பர்னு சொல்லலை..

       கே.வி நல்லாப் படம் பண்ணுவார். உன் பொண்ணுக்கு நல்ல என்ட்ரி கிடைக்கும்’னு வாழ்த்தினாராம். அம்மா சொன்னதும் அவ்வளவு ஹேப்பியா இருந்தது. அடுத்த தடவை சென்னை வரும்போது எப்படியும் ரஜினி அங்கிளைச் சந்திக்கணும்!''

        ராதா கூட ரஜினியை அங்கிள்னு தான் கூப்பிடுவார்.. நீங்களும் அப்படியே கூப்பிட்டா ... எப்படி?தாத்தா முறை ஆகலை?
       http://img.xcitefun.net/users/2008/08/9441,xcitefun-karthika-5.jpg

       டிஸ்கி -1  ராதா கால ரசிகர்கள் யாரும் கார்த்திகா ஸ்டில்சை ரசிக்காதீங்க.. ஏன்னா மக முறை ஆகுது.. ராதாவையும் ரசிச்சிட்டு கார்த்திகாவையும் ரசிச்சா எப்படி? ஹி ஹி

       டிஸ்கி 2 -பதிவே முடிஞ்ச பின்னால கடைசியா எதுக்கு ஒரு ஸ்டில்லுன்னு கேட்கறவங்களுக்கு மட்டும் ஒரு வார்த்தை.. இதுதான் ஃபினிஷிங்க் டச்.. ஹி ஹி

       Friday, April 22, 2011

       கோ - பொலிட்டிகல் ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

       http://picasamusic.com/musicimg/KO.jpg

       பாலைவன ரோஜாக்கள்,ஊமை விழிகள், சொல்வதெல்லாம் உண்மை போன்ற பட வரிசையில் லேட்டஸ்ட் பிரஸ் ரிப்போர்ட்டர் ஓரியண்ட்டட் ஸ்டோரி லைனில் சுபாவின் கதைக்கருவை  வைத்து கே வி ஆனந்த்  களம் இறங்கி இருக்கும் படம் தான் தலைவன் என்ற அர்த்தம் உள்ள கோ படம்.

       ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே மாறி மாறி ஊழல் பண்ணும் கட்சி என்பதால் ஒரு மாற்று சக்தி வேண்டும் என சில இளைஞர்கள் முன் வந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி போராடுகிறார்கள்...ஆட்சி மாற்றம் வருகிறது.. பின் நடக்கும் சுவராஸ்யமான சம்பவங்கள் தான் கதை.. 
       கேட்கும்போது மறுபடியும் ஒரு அரசியல் படமா ? என யாரும் சலித்துக்கொள்ள தேவை இல்லை.. நீட் ஆக்‌ஷன் கம்ர்ஷியல் தான்.

       படத்தில் முதலில்  நம் மனதைக்கவர்வது பியா தான்.துறு துறுப்பான நடிப்பு,இயல்பான முக பாவனைகள்,செம்பருத்திப்பூ மலர்ந்த மாதிரி உதட்டில் தக்க வைத்த சிரிப்பு என சர்வசாதாரணமாக நம் மனதில் சப்பணம் போட்டு அமர்ந்து விடுகிறார்.அவரது ஹேர் ஸ்டைல் செம அழகு..
       http://www.southdreamz.com/wp-content/uploads/2010/05/Piya-Bajpai.jpg

        இரண்டாவது படத்தின் ஒளிப்பதிவு.. கே வி ஆனந்தின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் இயற்கை அழகை அள்ளுகிறது.. ஆக்‌ஷன் காட்சிகளில் நம்மையும் உடன் அழைத்து செல்லும் லாவகமான கேமரா கோணங்கள்,பல இடங்களில் வெல்டன் சொல்ல வைக்கிறது.

       3 வது கதைக்களன் . பத்திரிக்கை ஆஃபீஸ்-ல் நடப்பதை நம் கண் முன் கொண்டு வந்திருக்கும் ஆர்ட் டைரக்‌ஷன்.ஆரம்பக்காட்சிகளில் குப்பத்தில் குடிசைகளில் கேமரா புகுந்து புறப்பட்டு படம் பிடிக்கும்போது ஒரு படத்துக்கு ஆர்ட் டைரக்‌ஷன் எவ்வளவு முக்கியம் என நிரூபிக்கிறது..

       அடுத்தது ஜீவா.. பிரஸ் ரிப்போர்ட்டரை கண் முண் நிறுத்துகிறார்.. தன்னை சுற்றி எது நடந்தாலும் அவர் உடனே கேமராவை கையில் எடுப்பது அருமை..ஒரு பத்திரிக்கையாளனுக்கு கேமரா மூன்றாவது கை மாதிரி என்ற லைனை கேட்ச் பண்ணி , கேரக்டரை உள் வாங்கி நடித்திருக்கிறார்.

       அடுத்து அஜ்மல்.. இவரது அண்டர்ப்ளே ஆக்டிங்க் நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.. ஆனால் கட்சியின் இளைஞர் படைத்தலைவர் என்ற அளவில் காட்டத்தான் அவர் ஒர்த். அதை மீறி ஒரு கட்சிக்கே தலைவராக காட்டுவதும் சி எம்மாக காட்டுவதும் குருவி தலையில் பனங்காய் கதை தான்.
       http://narumugai.com/wp-content/uploads/2010/11/ko-karthika.jpg
       ஹீரோயின் கார்த்திகா.. ராதாவின் மகள்.ஆள் நல்ல உயரம் தான்.. ஆனால் இவர் தமிழ் சினி ஃபீல்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார். அவரது புருவங்கள் மகா மைனஸ்.. செயற்கையாக வரையப்பட்ட வளைந்த வில் போன்ற புருவங்கள்  பிளஸ் என நினைத்து விட்டார்கள் போல.. அது அவரது முகம் எப்போதும் கோபமாக இருப்பது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர் முகம் ஒரு ட்ரை ( DRY SKIN)ஸ்கின் என்பதால் மேக்கப் போடும்போது பக்கா செயற்கை காட்டுகிறது.. பாப்பாவுக்கு நடிப்பும் வர லேது..  ஸாரி டூ சே திஸ்... 

       படத்தில் சுவராஸ்யமான வசனங்கள்

        1.  ரேஷன் கார்டுல என்ன விசேஷம்?

       நாங்க ஆட்சிக்கு வந்தா ரேஷன் கார்டுக்கு 5 லிட்டர் சாராயம் தருவோம்.

       2.  மிஸ்டர் டாக்டர் பிரகாஷ்.. நீங்க ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆனதும் 10 பேஷண்ட்டை மொத்தமா ஒரே சமயத்துல போட்டுத்தள்ளுனது எப்படி?ங்கறதை விளக்குவீங்களா?

       3. தீ விபத்து நடந்தப்ப  எப்படி தப்பிச்சீங்க?

       என் கிட்டே  4 வாட்டர் பாக்கெட் இருந்தது.. அதை என் மேல பீய்ச்சி அடிச்சுக்கிட்டேன்.

       4. ஜீவா - அர்னாட்ஷா(!!) என்ன சொல்லி இருக்கார்னா நல்ல ஃபிகரா ,டாப்பா இருக்கற பொண்ணுங்களுக்கு டாப் சரியா இருக்காதாம் .. ( மூளை....)

       5. பியா - நான் அந்தப்பொண்ணு கிட்டே பேச்சு குடுத்தேன்.. ஒரே நைட்ல ரூ 30,000 சம்பாதிக்கறாளாம்.. சில சமயம் ரூ 50000 கூட கிடைக்குமாம்.சரி.. ஒரு ஆர்வத்துல கேட்கறேன்.. எனக்கு எவ்வளவு கிடைக்கும்?

        ஜீவா - ம் ம் ஒரு நூத்தம்பது ரூபா?

       பியா - அடப்பாவி.. அடி வாங்கப்போற.. சரி இவளுக்கு... 

       ஜீவா- ஆள் ஹைட் ஜாஸ்தி.. அதுக்காக சும்மா அனுப்பிட முடியுமா..ஏதோ போட்டு குடுத்து அனுப்பலாம்.

       கார்த்தி.-- அடச்சே.. என்ன பேச்சு இதெல்லாம்..
       http://1.bp.blogspot.com/_Uno_emuDLJc/TIsE3nNxllI/AAAAAAAAIC4/hEiuyjjVjN4/s1600/piaa_bajpai_hot_photo_shoot_pics_images_04.jpg
       6.  வில்லன் - தமிழ்ப்பேப்பர்ல தாண்டி வேலை செய்யறீங்க? எதுக்கு இங்கிலீஷ்ல பேசறீங்க?

       7. நான் யாருன்னு உனக்குத்தெர்யுமா?

       அல்லக்கை

       என்ன சொன்னே?

        சாரி,.. அண்ணனோட கை.. 

       8.  ஜீவா - ஏய்.. அதெல்லாம் போகட்டும்.. நீ கடிச்சியே ஒருத்தனை.. அல்சேஷன் நாய் பிச்சை வாங்கனும்.. 

       பியா - !!!!!!!!!!!!!!!!

       9. பிரஸ்னா பாசிட்டிவ் மேட்டர்க்கு அதிக முக்கியத்துவம் தரக்கூடாது.. நெகட்டிவ் மேட்டர் தான் எடுபடும்.. ஒரு கள்ளக்காதல், ஒரு கொலை,இப்படித்தான் நியூஸ் எடுக்கனும்.. 


       10. சார்.. பிரஸ்னா கேவலமா நினைக்காதீங்க.. பத்திரிக்கைக்காரங்களால தான் ஆட்சியே மாறுது.. ( ஆமா.. கருத்துக்கணிப்புன்னு எதையாவது போட்டு மக்களை குழப்பறதே இவங்க தானே?)

       11.  பியா - தூங்காம கண்ணை மூடிக்கிட்டே கனவு காண்பதும் ஒரு சுகம் தான்.. 

       12. நான் ஏன் அவனை லவ் பண்றேன்னா பொண்ணுங்க தானா வந்து பேசுனா பசங்க அடுத்த நிமிஷமே மேல கை போட நினைப்பாங்க.. ஆனா அவன் அப்படி இல்லை...அவன் ஒரு ஜெம்..  ( இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நினைச்சிருக்கலாம்.. அதுக்குள்ள அவசரப்பட்டுட்டியே பொண்ணு.. )

       13. டேய்.. எதுக்குடா கொதிக்கறீங்க? அரிசி மூட்டை இருந்தா அங்கே நாலஞ்சு எலிங்க இருக்கத்தான் செய்யும்.. ஆட்சின்னு ஒண்ணு இருந்தா அங்கே ஊழல் இருக்கத்தான் செய்யும்.. ( நாலஞ்சுன்னா ஓக்கே ஒண்ணே முக்கால் லட்சம் கோடின்னா நாட் ஓக்கே)
       14. நிருபர் - சி எம் சார்.. உங்களுக்கும், இந்த கொள்கைப்பரப்புச்செயலாளர்க்கும் ஏதோ கனெக்‌ஷன்னு பேசிக்கறாங்களே?

       பிரகாஷ்ராஜ் - அவ எம் பொண்ணு மாதிரி.. 

       நிருபர் - அப்போ அவங்கம்மாவுக்கும் உங்களுக்கும் கனெக்‌ஷன்னு நியூஸ் போட்டுக்கலாமா/ சார்?   ( எம் ஜி ஆர் - ஜெ நேரடி அட்டாக் )

       15. இந்த மாதிரி ஆளுங்கட்சிக்கு எதிரா நியூஸ் போட எவ்வளவு வாங்குனீங்க?

       சார்.. நீங்க தான் சொன்னீங்க.. எங்க  நல்லாட்சில எதிர்க்கட்சியே கிடையாதுன்னு.. அப்புறம் எப்படி?

       16.  டியர்.. உன் மன்சுல நான் இல்லைன்னா ஏன் உன் கண்ணு கலங்குது?

       17. பியா - அடேய்.. நீ என்னை லவ் பண்ணலைன்னாலும் பரவாயில்லை.. ஆனா போற வர்றவளை எல்லாம் லவ் பண்றியே அதைத்தான் என்னால தாங்கிக்க முடியல..  ( ஆஹா என்ன ஒரு உயர்ந்த உள்ளம் )
       18. இந்த உலகத்துல பழமையான தொழில் ரெண்டே ரெண்டு தான்.. 

       1. அரசியல் 2. விபச்சாரம்,.

       ஆனா இப்போ அரசியலே விபச்சாரமா போச்சு.. 

       19 தம்பிங்களா.. அரசியல்னா சும்மா இல்ல.. சுறா, திமிங்கலம் எல்லாம் பசியோட உலாவற இடம்.. ஜாக்கிரதையா இருக்கனும்.. இல்லைன்னா ஆளைப்போட்டுத்தள்ளிடும்.. ( சரி விடுங்க,. தெரியாம சுறா பார்த்துட்டோம்.. அதையே சொல்லிக்காண்பிச்சுட்டு)


       20. நம் தலைவர் ஒரு பாயும் புலி.. நடமாடும் சிங்கம்.. அதனால் தான் நடிகை ஷமீதா ஸ்ரீயை தன் கூடவே வைத்திருக்கிறார்.. ( இந்த இடத்துல நமீதாவை அட்டாக்)

        21. ஷமீதா - ஹாய் மச்சான்ஸ்.. உங்க எல்லாருக்கும் தெரியும்.. எனக்கு ரொம்பப்பெரிய..... மனசுன்னு.. ( நல்ல வேளை.. )

        22 - சி எம் - என்னடா நான் பேசறப்ப கூட்டமே இல்லை..?

       தலைவரே .. ஷமீதா போனதும் கூட்டமும் போயிடுச்சு.. நீங்க அவங்க பேசறதுக்கு முன்னாமே பேசி இருக்கனும்..

        அட.. வெளக்கெண்ணெய்.. அதை நீ முதல்லியே சொல்லி இருக்கனும். 

       23  இந்தகாலத்துல இளைஞர்கள் எல்லாம் ஐ டி ல ஒர்க் பண்ணத்தான் விரும்பறாங்க.. ஃபாரீன்ல வேலை கிடைச்சா உடனே நாட்டை அம்போன்னு விட்டுட்டு ஓடிடறாங்க.. 

       . ஏன்.. உனக்கு விசா கிடைக்கலைங்கற கோபத்துல பேசறியா?
        http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1234.jpg

        இயக்குநருக்கு பாராட்டு போகும் இடங்கள் (ALL CREDITS GO TO DIRECTER)
       1. காலேஜ் ஃபிளாஸ்பேக் காட்சியில்  வரும் கனவில் தூங்கு  பாடல் காட்சியில் அஜ்மல், ஆடு இரண்டு பேரும் ஒரே கிளை இலையை ஆளுக்கு ஒரு முனையில் வைத்து தின்பது...
        
       2. அதே பாடல் காட்சியில் காலேஜ் ஃபிகர்களாக வருபவர்கள் நிஜமான காலேஜ் ஃபிகர்ஸாக இருப்பது...

       3.  கார்த்திகா தனிமையில் ரூமில் இருக்கும்போது சடார் என ஒரு உருவம் வருவதை சர்ப்பரைஸ் ஷாட்டாக எடுத்தது.. ( தியேட்டரில் பாதிப்பேர் வீல் என கத்தி விட்டார்கள்)

       4.  ஒரு சேஸிங்க் சீனில் உயரமான பில்டிங்க்ல இருந்து ஜாக்கிசான் போல பைப்பில் சறுக்கிக்கொண்டே ஜீவா வரும் சீனை டூப் இல்லாமல் ,கட் ஷாட் இல்லாமல் லெங்க்த்தி ஷாட்டாக எடுத்தது..( வெல்டன் ஜீவா)

       5. சூப்பர் ஹிட் சாங்கான என்னமோ ஏதோ பாட்டுக்கான லொக்கேஷன், பாடல் படமாக்கப்பட்ட விதம்,கண்ணியமான டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்.( THE PICTURAISATION OF THE SONG IS SO LOVELY)

       இயக்குநருக்கு சில கேள்விகள் ( மைனஸ்)

        1.  படத்தின் ஆதார இடமான மேடையில் குண்டு வெடிக்கும் சீனை பிரம்மாண்டமாக எடுக்காமல் சொதப்பியது ஏன்? அதை லாங்க் ஷாட்டில் துக்ளியூண்டு காட்டி தப்பிச்ட்டீங்களே.. 

       2. மொத்தப்படத்திலும் மனித நேயத்தை புகழ்ந்து விட்டு பாடல் காட்சியில் திருநங்கைகளை கிண்டல் செய்யும் ஷாட் எதற்கு?

       3. என்னதான் ஒரு நிருபர்க்கு கடமை கண்ணாக இருந்தாலும் விபத்து நடந்தாலும் சரி.. கலவரம் நடந்தாலும் சரி.. ஜீவா  மக்களை காப்பாற்றாமல்
       ஃபோட்டோ எடுத்துட்டு இருப்பது ஏன்?

       4. படம் செம ஃபாஸ்ட்டா போய்ட்டிருக்கறப்ப எதுக்கு அந்த வெண்பனியோ பெண்மணீயோ மெலோடி பாட்டு? அதுவும் செகண்ட் ஆஃப்ல...?

       5. தீவிரவாதிகளை பார்க்க சி எம் தான் மட்டும் தனியே போய்ப்பார்க்க வேண்டிய அவசியம் என்ன? மாட்டிக்கவா?

       6. ரிப்போர்ட்டர்க்கான டிரஸ் கோட் படத்தில் ஹீரோ, ஹீரோயின் டாரும் மெயிண்ட்டெயின் பண்ணலையே..? ( ஹீரோ காலர் இல்லாத பனியனுடனும், ஹீரோயின் முதுகில் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடனும் சுத்தறாங்களே?)

       7. செகண்ட் ஆஃப்ல வைத்த ட்விஸ்ட் ஓக்கே.. ஆனா அதுக்கான காரணத்தை ஃபிளாஸ்பேக்ல சொல்லி இருக்கனும்.. 

       இந்தப்படம் ஏ செண்ட்டர்களில் 50 நாட்கள், பி செண்ட்டர்களில் 30 நாட்கள், சி செண்ட்டர்களில் 15 நாட்கள் ஓடும்

       எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 42

       எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க்கிங்க் - நன்று

        ஈரோடு வி எஸ் பி, சண்டிகா , ஸ்ரீ கிருஷ்ணா என 3 தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகி இருக்கு.

       டிஸ்கி 1 - இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை விமர்சனத்தில் யாரும் வெளியிட வேண்டாம் என பிரஸ் மீட்டில் இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.. எனவே விமர்சனம் செய்யும் அன்பர்கள் அதை ஃபாலோ பண்ணுங்க..

        டிஸ்கி 2 - இந்தப்படத்தின் கதைக்களன் பத்திரிக்கைத்துறை என்பதாலும், பிரசஸ்காரங்க நினைச்சா எதையும் சாதிக்க முடியும் என்ற கான்செப்ட் என்பதாலும்  இந்தப்படத்துக்கான பத்திரிக்கை விமர்சனங்கள் கொஞ்சம் ஓவர் பில்டப்போடே இருக்கலாம்..