Thursday, March 12, 2026

ASSI (2026) -ஹிந்தி - சினிமா விமர்சனம் (கோர்ட் ரூம் ட்ராமா)

               

        20/2/2026 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம்  அனுபவ் சின் ஹா வின் இயக்கத்தில் டாப்சி பன்னு,கனி குஸ்ருதி,ரேவதி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க நேர் கொண்ட பார்வை படம் மாதிரி ஒரு கோர்ட் ரூம் ட்ராமாவாக ,லீகல் திரில்லர் ஆக வெளிவந்திருக்கிறது.இது 24/3/2026 முதல் ஜீ 5 ஓ டி டி தளத்தில்  தமிழ் டப்பிங்குடன் வர இருக்கிறது    


அஸ்சி என்றால் ஹிந்தியில் 80 ( எண்பது-Eighty) என்று அர்த்தம்.இந்தியாவில் ஒரு நாளுக்கு சராசரியாக 80 பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறது என்பதைக்குறிக்கவே 80 என டைட்டில் வைத்திருப்பதாக இயக்குநர் ஒரு பாலிவுட் பத்திரிக்கையில் பேட்டி அளித்திருக்கிறார் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு டீச்சர்.கணவன்,மற்றும் ஒரு மகன் உடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.ஒரு நாள் சக ஆசிரியை வீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு வீட்டுக்குத்திரும்பி வரும் வழியில் அடையாளம் தெரியாத 5 நபர்களால் காரில் கடத்தப்பட்டு  பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்.பிறகு ரயில் தண்டவாளத்தில் போட்டு விட்டு செல்கிறார்கள்.நாயகி ரயிலில் அடிபடாமல் சிரமப்பட்டுத்தப்பிக்கிறார்.

நாயகியைக்காணாத அவள் கணவன் போலீசில் புகார் கொடுக்கிறான்.நடந்த சம்பவம் அறிந்து கோர்ட்டில் இந்தக்கேசை பைல் செய்கிறார்கள்


ஆனால் நாயகி தாக்கப்பட்டதால் தற்காலிகமாக கண் பார்வை தெளிவாக இல்லாததால் ,மன அழுத்தத்திலும் இருந்ததால் நாயகியால் கோர்ட்டில் குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியவில்லை.


பண பலம்,அரசியல் பலம் ஆகியவற்றின் துணை கொண்டு குற்றவாளிகள் எப்படித்தப்பிக்க முனைகிறார்கள்?நாயகி தரப்பு வக்கீல் எப்படி வாதாடி கேசை ஜெயிக்கிறார் என்பது மீதித்திரைக்கதை


நாயகி ஆக கனி குஸ்ருதி பிரமாதமாக நடித்திருக்கிறார்.மொத்தப்படத்தின் சாரத்தையும் இவர் ஒருவரே தாங்கிப்பிடிக்கும் அளவுக்கு இவரது நடிப்பு அபாரம்.


நாயகி சார்பில் வாதாடும் வக்கீல் ஆக டாப்சி பன்னு கச்சிதம்.

ஜட்ஜ் ஆக வரும் ரேவதி தார்மீக ரீதியாக நாயகி பக்கம் இருக்க வேண்டி இருந்தாலும்,சட்டப்படி அது நடக்க முடியாமல் போகும்போது ஏற்படும் மனப்போராட்டத்தை நன்கு வெளிப்படுத்துகிறார்.

நாயகியின் கணவன்,மகன்,எதிர் தரப்பு வக்கீல்,ஆகியோரின் நடிப்பு ,குற்றவாளிகள் ஐவரின் கொடூர வில்லத்தனம் அனைத்தும் கச்சிதம்

ரஞ்சித் பரோட்டின் இசையில் இரண்டு பாடல்கள் ஓக்கே ரகம்.பின்னணி இசை படத்துக்குக்கூடுதல் பலம்.

ஈவன் முல்லிகன் ஒளிப்பதிவு கனகச்சிதம்.அமர்ஜித் சிங்கின் எடிட்டிஙகில் படம் 133 நிமிடஙகள் ஓடுகிறது.பின் பாதி முழுக்க கோர்ட் சீன்கள் தான்.

கவுரவ் சோலஙகி என்பவருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியே இயக்கி இருக்கிறார் அனுபவ் சின்ஹா.



சபாஷ்  டைரக்டர்

1. இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் ஒரு பாலியல் வன் கொடுமை சம்பவம் நடக்கிறது என்ற தகவலை ஆடியன்சின் மனதில் பதிய வைக்க படம் ஓடுகின்ற 133 நிமிடங்களில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை அந்த தகவல் செய்தியை  திரையில் ஓட விடும் ஐடியா, தாட் பிராசஸ் அருமை.

2 நாயகி ஆக வரும் கனி குஸ்ருதியின் பிரமாதமான நடிப்பு படத்துக்குப்பெரிய பிளஸ்.குறிப்பாகக்கண்ணுக்குக்கீழே தையல் போட்ட கெட்டப்பில் அவர் வரும் காட்கள் அனைத்தும் அவரது வலியை சொல்கின்றன

3 இடைவேளை சமயத்தில் வரும் ஒரு ட்விஸ்ட்டும் ,இடைவேளைக்குப்பின் வரும் கோர்ட்டில் வாதாடும் காட்சிகளும் அருமை


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 ஏற்கனவே பாலியல் வன்கொடுமை கோர்ட் ரூம் ட்ராமாக்களாக தமிழில் வெளிவந்த விதி (1984),பிரியஙகா (1994) ஏற்படுத்திய பாதிப்பு அளவுக்கு இதில் ஏற்படுத்த முடியவில்லை.அதே போல ஹிந்திப்படஙகளான செக்சன் 375,பிங்க் (நேர் கொண்ட பார்வை ),டாமினி  போன்ற படஙகளின் திரைக்கதையோடு ஒப்பிட்டால் ஒரு படி கீழே தான்.


2 படத்தின் கதையில் ரசிகர்கள் லயித்து இருக்கும்போது 20 நிமிடஙகளுக்கு ஒரு முறை அந்த ஸ்லைடு காட்டுவது கவனச்சிதறலையும் ,எரிச்சலையும் தருகிறது.

3.  முதல் பாதியில் திரைக்கதை நகராமல் ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டே இருப்பது நமக்கு அசதியைத்தருகிறது.

4 வக்கீல் ஆக வரும் டாப்சி பன்னின் நடிப்பு ஆல்ரெடி இதே இயக்குநரின் படமான(MULK)  முல்க் என்ற படத்தில் இதே வக்கீல் வேடம் என்பதால் அந்தப்படத்தில் அவரது நடிப்பு எந்த அளவு சிறப்பாக இருந்ததோ அதை விட 1% கூட கூடுதலாக இதில் இல்லை.அதே வகை டெம்ப்ளேட் நடிப்பு தான்.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - கோர்ட் ரூம் ட்ராமா ரசிகர்கள்,க்ரைம் ட்ராமா ரசிகர்கள் பார்க்கலாம். ரேட்டிங்க். 3/5.மனதை பாதிக்கக்கூடிய வன்முறைக்காட்சிகள் இருப்பதால் ஏ சர்ட்டிபிகேட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

0 comments: