ANAGANAGA OKA RAJU(2026)-தெலுங்கு/தமிழ்- சினிமா விமர்சனம் (காமெடி டிராமா)@நெட் பிளிக்ஸ்
அனகனக ஒக்க ராஜூ என்றால் ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தான் என்று அர்த்தம்.இந்த லோ பட்ஜெட் படம் 14/1/2026 முதல் திரை அரஙகுகளில் வெளியாகி முதல் 20 நாட்களில் 100 கோடி வசூலித்த வெற்றிப்படம்.இப்போது 11/2/2026 முதல் நெட் பிளிக்ஸ் ஓ டி டி யில் தமிழ் டப்பிஙகில் காணக்கிடைக்கிறது.குடும்பத்துடன் பார்க்கத்தக்க யு படம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் தாத்தா ஒரு பெரிய ஜமீன்தார்.ஆனால் சத்யராஜ் நடித்த மல்லுவேட்டி மைனர் படத்தில் வருவது போல தனது சொத்துக்களை எல்லாம் ஆசை நாயகிகளுக்கும்,பார்க்கிற பெண்களுக்கும் தானமாகக்கொடுத்து விடுகிறார்.ஜமீன் பங்களா கூட அடமானத்தில் இருக்கிறது.சுருக்கமாகச்சொல்லப்போனால் நாயகன் இப்போது ஒரு டம்மி பீசு.கைவசம் காசில்லை.ஆனால் வெட்டி பந்தாக்களுக்கு மட்டும் குறை இல்லை.
ஊர் மக்களுக்கு இந்த விஷயம் எதுவும் தெரியாது.அதனால் நான்கு அல்லக்கைகளை வைத்து நாயகன் வெட்டி பந்தா பண்ணிக்கொண்டு ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறான்.
ஒரு நாள் நாயகன் தன் அத்தை மகளின் திருமண விழாவுக்கு சென்றபோது அத்தையால் அவமானப்படுத்தப்படுகிறான்.அப்போதே அங்கேயே சவால் விடுகிறான்.நானும் உன்னைப்போல ஒரு பெரிய இடத்தில்,கோடீஸ்வரப்பெண்ணைக்கட்டுகிறேன்,முதல் பத்திரிக்கை உனக்கு வைக்கிறேன் என்கிறான்.
இதற்குப்பின் நாயகன் தீவிரமாகப்பெண் தேடும் படலத்தில் ஈடுபடுகிறான்.அப்போது ஒரு கோவில் விழாவில் நாயகியை சந்திக்கிறான்.நாயகி மிகப்பெரிய ஜமீன் வாரிசு.ஒரு ஏழை அவளிடம் உதவி கேட்க இடுப்பில் கிடக்கும் ஒட்டியாணத்தை சர்வ சாதாரணமாகக்கழட்டி தானமாகத்தருகிறாள்.ஒரு பவுன் ஒரு லட்சத்து 15 ஆயிரம் விற்கும்போது அந்த நகையின் மதிப்பு 3 கிலோ.
நாயகனுக்கு பெரிய ஆச்சரியம்.தான் தேடிய பெண் இவள் தான் எனத்தீர்மானிக்கிறான்.நாயகியைக்கவர ஆபரேஷன் சாரு என்று ஒரு திட்டம் தீட்டுகிறான்.அதன்படி நாயகி கண்ணில் படும் படி தான தர்மம் செய்வது ,வீரசாகசம் செய்வது,உதவுவது என்று டிராமா போடுகிறான்.பிளான் சக்சஸ்.நாயகி நாயகனிடம் காதல் வசப்படுகிறாள்.
நாயகியின் அப்பாவும் சம்மதம் தெரிவிக்க பிரம்மாண்டமாகத்திருமணம் நடைபெறுகிறது.அடுத்த நாள் நாயகனுக்க்ய்ப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.நாயகியின் அப்பா ஊரை விட்டு ஓடி விடுகிறார்.அவர் நாயகனை விடப்பெரிய டுபாக்கூர்.
நாயகிக்கும் ஏகப்பட்ட கடன் இருக்கிறது.நாயகியும் நாயகனைப்போலவே திட்டம் போட்டிருக்கிறாள் என்று தெரிய வருகிறது.
நாயகன்,நாயகி இரு தரப்புக்கடன்களுக்கும் நாயகன் தான் பொறுப்பு என்றும் ,60 நாட்களில் 20 கோடி ரூபாய் கடனை அடைக்க வேண்டும் என எச்சரித்து விட்டுச்செல்கின்றனர் வங்கி அதிகாரிகள்.
இதற்குப்பின் நாயகன் என்ன செய்தான்?அந்த சிக்கலில் இருந்து எப்படி மீண்டான்?என்பது மீதித்திரைக்கதை.மேலே நான் சொன்னது முதல் பாதிக்கதை மட்டுமே.
நாயகன் ஆக நவீன் பாலி ஷெட்டி அருமையாக நடித்திருக்கிறார்.அவருக்கு உடல் மொழி ,காமெடி நன்கு வருகிறது.முதல் பாதி முழுக்கக்காமெடி கலாட்டாதான்.
நாயகி ஆக மீனாட்சி சவுத் ரி அழகுப்பதுமையாக வந்து போகிறார்.நடிக்க அதிக வாய்ப்பில்லை.டூயட்டில் நன்கு நடனம் ஆடுகிறார்.யோகாவில் விருக்சாசனம் கறறவர் மட்டுமே ஆடக்கூடிய ஒரு பிரமாதமான ஸ்டெப்பை அசால்ட் ஆகப்போடுகிறார்.
நாயகியின் அப்பாவாக ராவ் மகேஷ குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்கிறார்.
நாயகனின் அம்மாவாக ப்ரியா ஷைலஜா கச்சிதம்.
வில்லன் ஆக மதுசூதன் ராவ், தலை காட்டுகிறார்.
நாயகனின் நண்பன் ஆக சம்சந்திரா கலகலப்பு ஊட்டுகிறார்.தாரக் பொன்னப்பாவின் நடிப்பு ஓக்கே ரகம்
கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் மாரி.
திரைக்கதையை இயக்குநர் மாரி,நாயகன் நவின் பாலிஷெட்டி ,சின்மய் (நம்ம ஊர் சின்மயி அல்ல) ஆகிய மூவரும் இணைந்து எழுதி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ஜே யுவராஜ்.பாடல்காட்சிகளில் பிரம்மாண்டம் காட்டி இருக்கிறார்.கலர் புல் கலக்கல் ஆர்ட் டைரக்சன் டிசைன்.
இசை மிக்கி ஜெ மேயர்.3 பாடல்கள் தேறுகிறது.பின்னணி இசை கச்சிதம்
எடிட்டிஙக் பக்கா.147 நிமிடங்கள் டைம் டியூரேசன்
சபாஷ் டைரக்டர்
1 முதல் பாதி முழுக்க நாயகன் அண்ட் கோ செய்யும் லூட்டிகள்,காமெடி அலப்பறைகள் அருமை
2 நாயகியின் முக அழகு,ஆடை வடிவமைப்பில் அவர் காட்டும் கண்ணியம்,நடனக்காட்சிகளில் அவர் நளினம் அனைத்தும் அருமை
3 பின் பாதியில் கொஞ்சம் வேகம் குறையும் திரைக்கதை க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் நிமிர்கிறது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஒரு ஊருல ஒரு ராஜ குமாரி படத்தின் கதையைத்தான்ன்பட்டி டிங்கரிங் செய்திருக்கிறார்கள்.முதல் பாதி கதை அதிலிருந்து தான் உருவி இருக்கிறார்கள்
2 பின் பாதி திரைக்கதை சந்தானம் நடிப்பில் வந்த இங்கே நான் தான் கிங்,சத்யராஜ் நடித்த சுயேச்சை எம் எல் ஏ ஆகிய படஙகளைத்தழுவி காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்
4 நாயகன் பஞ்சாயத்து கவுன் சிலர் போட்டியில் போட்டி இடாமல் தடுக்க வில்லன் அவருக்கு 20 கோடி லஞ்சம் தருவது ரொம்ப ஓவர்.
5 கடனை வங்கியில் போய் அடைக்காமல் நாயகன் வங்கி அதிகாரிகளை வீட்டுக்கு வர வைத்து பணம் தருவது நம்ப முடியவில்லை.வங்கியில் போய் பணம் கட்டி ரெஜிஸ்டரில் சைன் செய்ய வேண்டாமா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -13+ குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி டைம் பாஸ் கலகலப்புக்காமெடி ,பின் பாதி மெதுவான திரைக்கதை,மொத்தத்தில் பார்க்கலாம் ரகம்.ரேட்டிங்க் 2.5/5
| Anaganaga Oka Raju | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Maari |
| Written by |
|
| Produced by |
|
| Starring |
|
| Cinematography | J. Yuvraj |
| Edited by | Vamsi Atluri |
| Music by | Mickey J Meyer |
Production companies |
|
Release date |
|
Running time | 147 minutes[1] |
| Country | India |
| Language | Telugu |
| Box office | ₹100.20 crore[2][3] |
.jpg)