திரிஷ்யம் (பாபநாசம் ) புகழ் ஜீத்து ஜோசப்பின் தயாரிப்பில் பாடல் ஆசிரியர் ஆன விநாயக் சசிகுமாரின் கதை , திரைக்கதையில் , சுமேஷ் நந்தகுமாரின் இயக்கத்த்தில் உருவான இந்த வெப் சீரிஸ் இப்போது தமிழ் டப்பிங்கில் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் 27/2/2026 முதல் காணக்கிடைக்கிறது .
மொத்தம் 6 எபிசோடுகள் , ஒவ்வொரு எபிசோடும் 25 - 35 நிமிஷங்கள் டைம் டியூரேசன் , ஆக மொத்தம் 180 நிமிடங்கள் , அதாவது 3 மணி நேரத்தில் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ரோஸ்லின் 18 வயது ஆகப்போகும் டீன் ஏஜ் கேர்ள் . அம்மா, அப்பா, ஒரு தம்பி என மொத்தம் நான்கு பேர் கொண்ட குடும்பம் .நல்ல வசதியான பங்களாவில் குடி இருக்கும் செல்வந்தர்கள் தான் இவரது பெற்றோர் . நாயகிக்கு இரவில் அடிக்கடி பயமுறுத்தும் கனவு வருகிறது . பச்சைக்கலர் கண்கள் உடைய ஒரு நபர் துரத்துவது போலக்கனவு காண்கிறார் . அம்மா, அப்பாவிடம் சொன்னால் அவர்கள் அதை பெரிதாக நம்பியது போலத்தெரியவில்லை
கனவில் வரும் பச்சை நிறக்கண்கள் உடைய மர்ம நபர் நாயகியைக்கொலை செய்ய முயற்சிப்பது போல அடிக்கடி கனவு வருகிறது , நூறாவது நாள் படத்தில நளினிக்கு இது போல கனவு வந்து பின் அதே போல் நடக்கும் ., நாயகிக்கு ஒரு குழப்பம் , அது போல எதிர் காலத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளா? இல்லை வேறு ஏதாவதா? என்பதில் குழப்பம்
நாயகியின் அண்ணன் மூன்று வருடங்களுக்கு முன்புதான் இறந்தான் , அதற்கும் , இந்தக்கனவுக்கும் சம்பந்தம் இருக்குமோ ? என்றும் நாயகி நினைக்கிறார் . அண்ணனின் இறப்புக்குத்தான் தான் காரணம் என்ற எண்ணம் நாயகிக்குக்குற்ற உணர்ச்சியாக இருக்கிறது
வீட்டுக்கு கெஸ்ட் ஆக வந்த ஒரு நபருக்கு கனவில் வந்து மிரட்டிய ஆள் போலவே தோற்றம் இருப்பதால் நாயகிக்கு ஒரு பயம் வந்து விடுகிறது
இதற்குப்பின் நடந்த சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை . நாயகி , நாயகியின் உடன் பிறப்பு , அம்மா, அப்பா இந்த நான்கு பேர் , ஒரு வீடு இந்த முக்கியமான நான்கு கதாப்பாத்திரங்களை வைத்தே மொத்த வெப் சீ ரிஸையும் முடித்து விட்டார்கள்
நாயகி ரோஸ் லின் ஆக சஞ்சனா தீபு , அம்மா ஆக மீனா , அப்பா ஆக வினீத் மூவரும் கச்சிதமான நடிப்பு,நாயகியின் அம்மாவின் இளவயது தோற்றத்தில் சிஜா ரோஸ் அழகாக வந்து போகிறார்
சைக்காலஜிஸ்ட் ஆக வரும் சங்கர் ராமகிருஷ்ணன் , ஏஞ்சல் ஆக வரும் மானசா , பாதிரியாராக வரும் டி ஜி ரவி , ஹக்கீம் ஷாஜகான் , அனிஷ்மா அணில் குமார் என அனைவர் நடிப்பும் கனகச்சிதம்
இந்த மாதிரி திரில்லர் மூவிஸ் க்கு பிஜி எம் ரொம்ப முக்கியம் , விஷ்ணு ஷியாம் அதை உணர்ந்து இசை அமைத்து இருக்கிறார் . பி எம் உன்னி கிருஷ்ணனின் ஒளிப்பதிவு தரம் . எடிட்டிங்க் ரி யாஸ் . இன்னமும் கிரிஸ்ப் ஆக ட்ரிம் பண்ணி இருக்கலாம்
சபாஷ் டைரக்டர்
1 கடைசி 2 எபிசோடுகள் அபாரம் . குறிப்பாக க்ளைமாக்ஸ் ட் விஸ்ட் யாராலும் யூகிக்க முடியாத வகையில் ஓரு ஜெர்க் கொடுத்தது
2 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்க்கான க்ளூ வை ஆரம்பத்திலேயே கொடுத்த விதம் அருமை
3 பின்னணி இசை , ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் நச்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பொதுவாக வெப் சீரிஸில் ஒவ்வொரு எபிசோடு முடியும்போதும் ஒரு ட்விஸ்ட் இருக்கும் . அடுத்த எபிசோடில் என்ன ஆகுமோ ? என்ற பரபரப்பு ஆடியன்ஸை தொற்றிக்கொள்ளும் ,. ஆனால் இதில் அவை எல்லாம் மிஸ்ஸிங்க்
2 முதல் 3 எபிசோடுகளில் சொன்ன விஷயத்தை சுருக்கி ஒரே எபிசோடில் முடித்து இருக்கலாம் . நாயகி கனவு காண்பது , பயப்பது , அம்மா, அப்பாவிடம் சொல்வது என்று திருப்பித்திருப்பி ஒரே விதமான காட்சிகள் தான்
3 நாயகிக்கு நிஜமாகவே கனவு தான் வருகிறதா? அல்லது அவளது பிரமையா? கற்பனையா? என்பதில் தெளிவு இல்லை
4 முதல் எபிசோடு , ஐந்தாவது , ஆறாவது எபிசோடு மட்டும் பார்த்தாலே போதும் . மொத்தக்கதையும் புரியும் . 2,3 ,4 ஆகிய 3 எபிசோடுகளைத்தேவை இல்லாமல் இழுத்து விட் டார்கள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -13 + குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் 3 எபிசோடுகளைப்பொறுமையாகக்கடந்து விட் டால் அடுத்த 3 எபிசோடுகள் செம சுவராஸ்யம் . க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் காகப்பார்க்கலாம் . ரேட்டிங்க் 3 / 5
| Secret Stories: Roslin | |
|---|---|
| Genre | Psychological thriller |
| Written by | Vinayak Sasikumar |
| Directed by | Sumesh Nandakumar[1] |
| Presented by | Jeethu Joseph |
| Starring | Sanjana Dipu Meena Vineeth |
| Music by | Vishnu Shyam |
| Country of origin | India |
| Original language | Malayalam |
| No. of seasons | 1 |
| No. of episodes | 6 |
| Production | |
| Producer | Mathew George |
| Cinematography | PM Unnikrishnan |
| Editor | Riyas K Badhar |
| Running time | 25-36 minutes |
| Production company | Central Advertising |
| Original release | |
| Network | JioHotstar |
| Release | 27 February 2026 |
.jpg)