23/1/2026 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்த லோ பட்ஜெட் படம் வெளியான முதல் 15 நாட்களில் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளது.இப்போது 13/2/2026 முதல் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் தமிழ் டப்பிஙகில் காணக்கிடைக்கிறது.
தொடர்ந்து நான்கு தோல்விப்படஙகள் தந்த நிவின் பாலிக்கு இது ஒரு எதிர் பாராத வெற்றிப்படம்.சர்வம் மாயா ஹிட்டைத்தொடர்ந்து இதுவும் ஹிட் படமே.
சுரேஷ் கோபி+ பிஜூ மேனன் நடித்த கருடன்(2023) என்ற வித்தியாசமான க்ரைம் திரில்லர் படத்தைக்கொடுத்த இயக்குநர் அருண் வர்மாவின் அடுத்த படம் இது.தமிழில் சூரி+எம் சசிகுமார் நடிப்பில் வந்த கருடன்(2024) தமிழ்ப்படத்துக்கும் ,கருடன்(2023) எந்த சம்பந்தமும் இல்லை.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவனனையில் அட்டெண்டர்.ஒரு நாள் அவருடன் பணி புரியும் ஊழியர் அடுத்த நாள் பணிக்குத்தாமதமாக வர இருப்பதாக சொல்கிறார்.
அந்த நாளில் நாயகன் தாமதமாகவே பணிக்கு வருகிறான்.பிறந்து 3 நாட்களே ஆன ஒரு குழந்தை காணாமல் போகிறது.தாமதமாக ட்யூட்டிக்கு வந்ததால் போலீஸ் நாயகனை சந்தேகிக்கிறது ,விசாரிக்கிறது
இதனால் நாயகன் தானாக முன் வந்து காணாமல் போன குழந்தையைக்கண்டுபிடிக்கும் படலம் தான் மொத்தத்திரைக்கதை.
நாயகன் ஆக நிவின் பாலி அடக்கி வாசித்து இருக்கிறார்.ஹீரோ பில்டப் இல்லாத அவரது அண்டர் ப்ளே ஆக்டிஙக் குட்.
நாயகி ஆக வரும் லிஜோ மோல் ஜோஸ் நாயகனுக்கு ஜோடி இல்லை.ஆனாலும் அவரது நடிப்புக்கு இணை படத்தில் வேறு யாரும் இல்லை.குழந்தை பாசத்தில் தவிப்பது,புகுந்த வீட்டில் சிரமஙகளை எதிர்கொள்வது.,கணவனை துணிச்சலாக எதிர்ப்பது என விருதுக்குத்தகுதியான நடிப்பு .
சங்கீத் பிரதாப் க்கு அருமையான ரோல்.படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார்.நாயகனை விட அதிகக்காட்சிகள் வருகிறார்.நடிப்பும் கச்சிதம்.
போலீஸ் ஆபீசர் ஆக வரும் அபிமன் யு நடிப்பு அருமை.ஜாபர் இடுக்கி ஒரு கெஸ்ட் ரோலில் வருகிறார்
சாம் சி எஸ் இசையில் ஒரே ஒரு பாட்டு ஓக்கே ரகம்.பின்னணி இசை சிறப்பு.
பைஸ் சித்திக்கின் ஒளிப்பதிவு அருமை.சையித் குமரனின் எடிட்டிஙகில் படம் 124 நிமிடஙகள் ஓடுகிறது
சபாஷ் டைரக்டர்
1 பாபி-சஞசய் இருவரின் திரைக்கதை அருமை.ஒரு சாதாரண கதைக்கருவை சீட் எட்ஜிஙக் திரில்லராக மாற்றும் வித்தை அவர்களுக்குத்தெரிந்திருக்கிறது(2013ல் வெளியான மும்பை போலீஸ் என்ற மெகாஹிட் க்ரைம் திரில்லர் படத்தின் திரைக்கதை இவர்கள் தான்)
2 காணாமல் போனது ஒரு குழந்தை தானே?அதைக்கண்டுபிடிக்க நாம் ஏன் இவ்வளவு மெனக்கெடனும் என ஒரு போலீஸ் கேட்கும்போது அதற்கு உயர் அதிகாரி சொல்லும் பதில் டச்சிஙக் ( நாளை அதே குழந்தை சிக்னலில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வரலாம்.அதைத்தடுக்கும் பொறுப்பு நமக்கு உண்டு.)
3 நாயகி ஆக வரும் லியோ மோல் ஜோசின் பிரமாதமான நடிப்பு பெண்களை மிகவும் கவரும்
4 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 குழந்தையைக்கட்டைப்பையில் வைத்துக்கடத்தும் காட்சி ஏற்கனவே அதிசா வின் திரைக்கதையில் வெளி வந்த டி என் ஏ (2025) என்ற தமிழ்ப்படத்தில் வந்திருக்கிறது.
2 பின் பாதி திரைக்கதை கொஞ்சம் இழுவை தான் .படமே முடிந்த பின் மீண்டும் 30 நிமிடம் கதையை இழுக்கிறார்கள்.
3 படத்தின் டைட்டில் டிராக் இசை ஸ்கேம் 1992 எ ஹர்சத் மேத்தா படத்தின் டைட்டில் டிராக்கிலிருந்து சுட்டு இருக்கிறார்கள்.
4 கதை ஒரே நேர் கோட்டில் செல்லாமல் அக்கா-தம்பி, ஒரு தம்பதி,நாயகன் என 3 ட்ராக்குகளில் திரைக்கதை அமைவதால் நாம் யாருடன் பயணிப்பது என்ற குழப்பம் வருகிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்-13+ குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குழந்தைக்கடத்தல் ,அம்மா செண்ட்டிமெண்ட்ஸ் இருப்பதால் பெண்களைக்கவரும் படம் இது.ரேட்டிங் 3/5
| Baby Girl | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Arun Varma |
| Written by | Bobby-Sanjay |
| Produced by | Listin Stephen |
| Starring | |
| Cinematography | Faiz Siddik |
| Edited by | Shyjith Kumaran |
| Music by | Sam C. S. |
Production company | |
| Distributed by | Magic Frames |
Release date |
|
Running time | 124 minutes[1] |
| Country | India |
| Language | Malayalam |
| Box office | ₹1.70 crore[2] |
.jpg)
0 comments:
Post a Comment