100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த மஞ்சு மேல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் தான் இந்தப்படத்தின் இயக்குநர்.ரோமாஞ்சம் (2023) பகத் பாசில் நடித்த ஆவேசம் (2024) ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் தான் இந்தப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்.இவர் தான் நடிகர் சூர்யாவின் 47 வது படத்தின் இயக்குநர்.இந்த 2 விஷயங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டது.
படத்தின் போஸ்டர் டிசைன் இது ஒரு எமிஷனல் டிராமா,அம்மா மகன் செண்ட்டிமெண்ட் கதை என எண்ண வைத்தாலும் படத்தின் ட்ரெய்லர் கட் இது ஒரு மிஸ்ட்ரிக்ரைம் திரில்லர் என்பதை உறுதி செய்ததுடன்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி கர்ப்பமாக இருக்கும்போதே ஒரு குற்றத்துக்கான சிறை தண்டனை பெற்றவர்.6 வருட சிறை வாசம் முடிந்து நாயகி தன் மகனுடன் சிறையிலிருந்து வெளியே வருகிறாள்.
தான் யார்?எதற்காக சிறைக்கு வந்தோம்?என்ற எந்த விஷயமும் வெளியுலகிற்குத்தெரியாத வண்ணம் ஒரு புது வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கிறாள்.அதற்காக நாயகி மேற்கொள்ளும் பயணம் வெற்றிகரமாக அமைந்ததா?என்னென்ன தடைகளை எதிர் கொண்டாள்?ஒரே இடத்தில் ஏன் நாயகியால் சர்வைவ் பண்ண முடியவில்லை.போகும் இடங்கள் ஒவ்வொன்றிலும் ஏன் தன் பெயரை மாற்றி சொல்கிறாள்?என்பதற்கான விடை தான் மொத்தத்திரைக்கதையுமே.
நாயகியாக பர்ஜானா பிரமாதமான நடிப்பு கதைக்கு ஒரு மிஸ்ட்ரியைக்கொண்டு வருவதே இவரது முகமும்,நடிப்பும் தான்.
நாயகியின் மகனாக ஆதிசேஷன் என்ற சிறுவனும்,அதே மகன் வளர்ந்த பின் முகமது வும் நடித்திருக்கிறார்கள்.கச்சிதமான நடிப்பு.ஒவ்வொரு இடம் மாறும் போதும் அம்மா புதுக்கதை சொல்வது கண்டு மகன் அம்மாவிடம் இப்போ என் பேரு என்ன?இப்போ என்ன புதுக்கதை?எனக்கேட்கும் துடுக்குத்தனம் குட்.
நாயகியும் ,மகனும் பிரிய நேரும்போது வரும் சோகம் ஒரு எமோஷனல் கனெக்டைத்தருகிறது.
போலீஸ் ஆபீசராக வரும் ஜின் பால் நடிப்பும் ,உடல் மொழியும் கச்சிதம்.
கெஸ்ட் ரோல் என்றாலும் டோவினோ தாமஸ் பங்களிப்பு அருமை.
பாட்டிக்கான கேரக்டர் டிசைன் அருமை என்றால் பாட்டியாக நடித்தவரின் நடிப்பு பிரமாதம்
படத்தில் வரும் மற்ற சின்னச்சின்ன பாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
இசை சுஜின் ஷாம்.பிரமாதமான பின்னணி இசை படத்துக்கு பலம்
ஒளிப்பதிவு அட்டகாசம்.
சபாஷ் டைரக்டர்
1 முதல் 30 நிமிடங்கள் ஈரானியப்படம் போல் மெதுவான திரைக்கதை ,பின் வேகமெடுக்கும் க்ரைம் திரில்லர் பாணி திரைக்கதை அருமை.
2 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் செம
3 நாயகியின் நடிப்பும்,அந்த சின்னப்பையனின் நடிப்பும் கனகச்சிதம்.
4 ரசிகர்களைக்கவரும் வண்ணம் ட்ரெய்லர் கட் வெளியிட்ட விதம்,வித்தியாசமான போஸ்டர் டிசைன் அமைத்த பாணி
5 பிரமாதமான ஒளிப்பதிவு.ஜெயிலுக்கு உள்ளே யும் சரி வெளியேயும் சரி ஒவ்வொரு பிரேமும் உலக சினிமாவுக்கு நிகர்.
6 பின்னணி இசையும் ,சவுண்ட் டிசைனிங்கும் கலக்கல் ரகம்.
7 கடைசி 15 நிமிடக்காட்சிகள் செம பரபரப்பு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை யாரும் யூகித்து விடக்கூடாது என்பதற்காகவே டோவினோ தாமஸ் கேரக்டரை வைத்து ஆடியன்சைக்குழப்பிய வேலை தேவை இல்லாதது
2 முதல் பாதி பிரமாதமான திரைக்கதை அமைத்து விட்டுப்பின் பாதியில் தலையைச்சுற்றி மூக்கைத்தொடும் குழப்பமான திரைக்கதை அமைத்தது.
3 பல இடஙகளில் மெலோ டிராமா ரேஞ்சுக்கு காட்சிகளை மிக மெதுவாக நகர்த்துவது போர்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - போனவருடம் வந்து செம ஹிட் ஆன எக்கோ என்ற படம் போல இதுவும் ஒரு மாறுபட்ட படமே.அருமையான மேக்கிங்க்காகவே பார்க்கலாம்.ரேட்டிங் 3/5 .இந்தப்படம் பல விருதுகளை வெல்லும் வாய்ப்பும் உண்டுc
| Balan - The Boy | |
|---|---|
| Directed by | Chidambaram |
| Written by | Jithu Madhavan |
| Produced by | Venkat K. Narayana Shailaja Desai Fenn |
| Starring | Adhisheshan K. R. Farzana Palathingal Muhammad Zinaan Tovino Thomas Girish A. D. Jean Paul Lal |
| Cinematography | Shyju Khalid |
| Edited by | Vivek Harshan |
| Music by | Sushin Shyam |
Production company | KVN Productions Thespian Films |
Release date |
|
| Country | India |
| Language | Malayalam |