அங்கீகாரம் (2026)-தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ்போர்ட்ஸ் ட்ராமா
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் தூய்மைப்பணியாளரின் மகன்.தடகள விளையாட்டில் பல சாதனைகளைப்படைக்கிறான்.ஓட்டப்
நாயகனாக கே ஜி ஆர் அந்தக்கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.ஜிம் போய் பாடியை செம பிட் (fit)ஆக மாற்றி இருக்கிறார்.அவர் உழைப்புக்கு ஒரு சபாஷ்.
அரசுக்கு ஆதரவாக வாதாடும் அட்வகேட் ஜெனரலாக வரும் விஜி வெங்கடேஷின் உடல் மொழி,கம்பீரம்,டயலாக் டெலிவரி,நடிப்பு எல்லாமே பிரமாதம்.
ஜட்ஜ் ஆக வரும் மோகன் ராம் நடிப்பு பாந்தம்.
பயிற்சி யாளராக வரும் வசுந்தரா ,விளையாட்டுத்துறை அதிகாரியாக வரும் அஜித் ஜோஷி,ஸ்போர்ட்ஸ் மினிஸ்டராக வரும் மன்சூர் அலிகான் அனைவர் நடிப்பும் அருமை.
என் உயிர்த்தோழன் புகழ் ரமா நாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார்.கண் கலங்க வைக்கும் நடிப்பு.க்ளைமாக்சில் உருக்கி விட்டார்.
நாயகனின் தங்கயாக வரும் இசபெல்லா கவனிக்க வைக்கிறார் என்றால் விளையாட்டு வீராங்கனை யாக வரும் சிந்தூரி உடற்கட்டு அச்சு அசல் ஸ்போர்ட்ஸ்விமன் போலவே இருப்பது சிறப்பு.
விஸ்வநாத்தின் ஒளிப்பதிவு கச்சிதம்.ஷான் லோகேஷின் எடிட்டிங் ஓக்கே ரகம்.
இசை ஜிப்ரான். பாடல்கள் பாஸ் ரகம்.பின்னணி இசையில் இன்னமும் ஜால வித்தை செய்திருக்கலாம்.
கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் தென்பாதியான்
சபாஷ் டைரக்டர்
1 இந்தியாவின் தேசிய விளையாட்டு கிரிக்கெட்டா?ஹாக்கியா?என்ற விவாதத்தில் ,இந்தியாவுக்கு என தேசிய விளையாட்டே ஒன்று இல்லை என்பதைப்பதிவு செய்த விதம் செம என்றால் அந்த விஷயம் ஜட்ஜூக்கே தெரியாத தகவல் என்பது வியப்பு.
2 வசனகர்த்தா தான் படத்தின் பெரிய பலம் .கலக்கலான வசனங்கள் கை தட்டலைப்பெறுகின்றன.
3 கிரிக்கெட் என்பது விளையாட்டே இல்லை,அது ஒரு போதை என்ற கருத்தைப்பதிவு செய்த விதம்
4 இந்தியாவில் கவனம் பெறாத விளையாட்டுக்கள் பட்டியல் என நாயகன் 35 விளையாட்டுக்களை வரிசையாக சொல்லும்போது தியேட்டரில் அப்ளாஸ்
5 இது ஒரு உண்மை சம்பவத்தின் படமாக்கம் என்பதை க்ளைமாக்சில் சொன்ன விதம் ,அந்த நபரைக்காட்டி கவுரவப்படுத்தியது அருமை.
6 நீதித்துறையில் சாதியப்பாகுபாடு. எப்படி இருக்கிறது என்பதைக்காட்டிய விதம்.
7 இயக்குநர் பா ரஞ்சித்தின் பட்டறையிலிருந்து வந்தவர் என்பதைப்பறை சாற்றும் விதமாய் காட்சி அமைப்புகளில் கவனம் செலுத்திய விதம்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஆவணப்படத்தின் தாக்கம் திரைக்கதையில் தெரிகிறது.இன்னமும் கொஞ்சம் கமர்ஷியலாக சொல்லி இருந்தால் வெகுஜன மக்களுக்கும் போய் சேர்ந்திருக்கும்.
2 இயல்பான கதையோட்டத்தில் க்ளைமாக்சில் சாண்டைக்காட்சி ஹீரோயிசம் செயற்கையாகத்தெரிகிறது
3 நடிகர்கள் வசனம் பேசும்போது லிப் சிங்க் செட் ஆகவில்லை.
4 வட்டார வழக்கு மொழி அங்கங்கே மாறி மாறி வருகிறது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 13+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அழுத்தமான திரைக்கதை,அட்டகாசமான வசனங்கள் ,புதுமையான கோர்ட் ரூம் வாதங்கள் என ஒரு வித்தியாசமான அனுபவத்துக்கு உத்தரவாதம்.ரேட்டிங்க் 3./5
