I WILL FIND YOU (2026)- அமெரிக்கன் வெப் சீரிஸ் - விமர்சனம் (க்ரைம் திரில்லர்)@நெட் பிளிக்ஸ்
--
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு சட்டக்கல்லூரியில் புரொபசராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்.மனைவி ஒரு டாக்டர்.இந்தத்தம்பதிக்கு 3 வயது மகன் இருக்கிறான்.பேஸ்பால் பேட்டால் மகனைக்கொலை செய்ததாக நாயகன் குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு ஆயுள் தண்டனையும் பெறுகிறார்.
கடந்த 5 வருடங்களாக ஜெயிலில் தான் இருக்கிறார்.வாழ்க்கையே வெறுத்தவராக இருக்கிறார்.காரணம் மகனை இவர் கொல்லவில்லை.ஆனால் பக்கத்து வீட்டுப்பெண் இவருக்கு எதிராக சாட்சி சொல்லி இருக்கிறாள்.மகனைக்கொன்ற பேஸ் பால் பேட்டை வீட்டின் பின் புறத்தோட்டத்தில் புதைத்ததை நான் பார்த்தேன் என்கிறாள்.
இதனால் தான் நாயகனுக்கு தண்டனை உறுதி ஆனது.நாயகனின் மனைவி நாயகனின் செயலால் வெறுப்படைந்து வேறு ஒருவனைத்திருமணம் செய்து வேறொரு ஊரில் செட்டில் ஆகி விட்டார்.
நாயகன் ஜெயிலுக்குப்போய் 5 வருடங்கள் கழித்து நாயகனின் மச்சினி ஜெயிலுக்கு நாயகனை சந்திக்க பார்வையாளராக வருகிறாள்.
மனைவியே டைவர்ஸ் வாங்கிட்டு வேற ஒரு வாழ்க்கை தேடிப்போனபின் மனைவியின் தங்கைக்கு இங்கே என்ன வேலை?என நாயகன் முதலில் மச்சினியை சந்திக்க மறுக்கிறான்.
பின் ஜெயில் அதிகாரியின் வற்புறுத்தலுக்கு இணங்க மச்சினியை சந்திக்கிறான்.மச்சினி நாயகனிடம் ஒரு போட்டோ காட்டுகிறாள்.அதில் நாயகனின் மகன் இருக்கிறான்.கொலை செய்யப்பட்டதாகக்கருதப்பட்ட மகன் உயிரோடு இருப்பதை அறிந்த நாயகன் துள்ளிக்குதிக்கிறான்.
வாழ்க்கையில் எந்தப்பிடிமானமும் இல்லாமல் விட்டேத்தியாய் இருந்தவனுக்கு இப்போது இரண்டு விஷயங்கள் புத்துணர்ச்சியை அளிக்கின்றன.
1 இறந்து விட்டதாய்க்கருதப்பட்ட மகன் உயிருடன் இருக்கிறான்
2 தன் மீது சுமத்தப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுக்கு எதிராக ஒரு ஆதாரம் கிடைத்து விட்டது.
நாயகன் ஜெயிலிலிருந்து தப்பி தன் மகனை எப்படிக்கண்டு பிடித்தான்?இந்தப்பொய்க்கேசில் அவனை மாட்ட வைத்தது யார் ?என்பதெல்லாம் மீதித்திரைக்கதை.
மேலே சொன்னவை எல்லாம் முதல் 15 நிமிடங்களில். சொல்லி விடுகிறார்கள்.மீதி அஞ்சே கால் மணி நேரம் இருக்கிறது.
நாயகனாக அவதார் பட நாயகன் சாம் ஒர்த்திங்க் டன் நடித்திருக்கிறார்.அழுத்தமான நடிப்பு.
நாயகனின் மச்சினியாக பிரிட் லோயர் நடித்திருக்கிறார்.
ராபர்ட் ஹல் தான் இயக்கி இருக்கிறார்.இவர் ஒரு தயாரிப்பாளரும் கூட.
Safe,the stranger ,gone for good ,hold tight,fool me once,missing you,run away இவை எல்லாம் இவர் இயக்கிய பிரபல வெப் சீரிஸ்.நெட் பிளிக்சில் இருக்கின்றன.
சபாஷ் டைரக்டர்
1 அடையாளமே தெரியாதவண்ணம் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கிடைக்கும் சிறுவனின் பிணத்துக்கும் ,நாயகனுக்கும் நடந்த டி என் ஏ டெஸ்ட்டில் அது அவரது மகன் தான் என்று உறுதியானது எப்படி? என்ற சஸ்பென்ஸ் வெளிப்படும் இடம்
2 யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்
3 முதல் 30 நிமிடங்களில் கதைக்குள் நம்மை இழுத்துக்கொண்டு எமோஷனல் கனெக்ட்கொடுத்த விதம்.
4 அப்பா ,மகன் செண்ட்டிமெண்ட் சீன்கள் அருமை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 மொத்தம் ஆறு எபிசோடுகளில் முடிக்க வேண்டியதை 8 எபிசோடுகளாக இழுத்து விட்டார்கள்.
2 மெயின் கேரக்டர்களைத்தவிர பல கேரக்டர்களைப்பாதியில் அம்போ என விட்டு விட்டார்கள்
3 தேவை இல்லாமல் ஆடியன்சை சுற்றலில் விடும் காட்சிகள் உண்டு.தவிர்த்திருக்கலாம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 13+ குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பரபரப்பான ,விறுவிறுப்பான திரைக்கதை அம்சம் கொண்ட நல்ல க்ரைம் திரில்லர் இது.பார்க்கலாம்.ரேட்டிங் 3/5
| I Will Find You | |
|---|---|
Promotional poster | |
| Genre | Crime drama |
| Created by | Robert Hull |
| Based on | I Will Find You by Harlan Coben |
| Showrunner | Robert Hull |
| Starring | |
| Theme music composer | Danny Bensi Saunder Jurriaans |
| Country of origin | United States |
| Original language | English |
| No. of episodes | 8 |
| Production | |
| Executive producers |
|
| Production companies | Final Twist Productions I Have an Idea Productions Netflix Worldwide Productions |
| Original release | |
| Network | Netflix |
| Release | June 18, 2026 |