அமெரிக்க சினிமா உலகை ஹாலிவுட் எனவும் ,மும்பை சினிமா உலகை பாலிவுட் எனவும் ,தமிழ் சினிமா உலகை கோலிவுட் எனவும் ,தெலுங்கு சினிமா உலகை டோலிவுட் எனவும் அழைப்பது போல் கேரள சினிமா உலகை மல்லுவுட் என அழைக்கிறார்கள்.
சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என ஆசைப்படும் இளைஞன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் தொடர் தோல்விகள் தான் கதை.
முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்(2022) என்ற ஹிட் படத்தின் இயக்குநர் ஆன அபினவ் சுந்தர் நாயக் இயக்கிய படம் இது.இந்த இயக்குநர் தமிழில் குரங்கு பொம்மை ,உறியடி ஆகிய படங்களில் எடிட்டராகப்பணி புரிந்தவர்.
தண்ணீர் மத்தன் தினங்கள் (2019),வரனே ஆவஸ்யமுண்டு(2020)ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் பிரேமலு(2024) லோகா சேப்டர் 1 (2025) ஆலப்புழா ஜிம்கானா (2025) ஆகிய மெகா ஹிட் படங்களில் நாயகனாக நடித்ததால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்ற நஸ்லென் நாயகனாக நடித்ததால் கவனம் பெறும் படம் இது.
5/6/2026 முதல் கேரள திரை அரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தப்படம் இப்போது தமிழகத்திரை அரங்குகளிலும் ஆங்கில சப் டைட்டில் உடன் காணக்கிடைக்கிறது.
ஸ்பாய்லர் அலெர்ட்
மலையாள சினிமா உலகின் சிறந்த இள வயது திகில் பட இயக்குநர் ஆக வேண்டும் என்பதே நாயகனின் லட்சியம்.இந்தியாவில் பிறந்து ஹாலிவுட்டில் கலக்கிய மனோஜ் நைட் ஷியாமளன் போல் புகழ் பெற வேண்டும் என நாயகன் நினைக்கிறார்.
கலைஞர் டி வி யில் நாளைய இயக்குநர் என்ற குறும்படங்களின் தொகுப்பு வெளிவந்த போது அதன் மூலம் குறும்படங்களை இயக்கி பின் பியூச்சர் பிலிம் எடுத்தவர்கள் பலர்.கார்த்திக் சுப்புராஜ் உட்பட பலரை உதாரணமாக சொல்லலாம்.அதுபோல மலையாளத்திலும் ஒரு குறும்பட விழா நடக்கிறது.அதில் ஒரு படத்தை இயக்கி வெளியிட்டால் சினிமா இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என ஒருவர் சொல்ல நாயகன் ஒரு குறும்படம் இயக்கும் முயற்சியில் இறங்குகிறார்.
நண்பனின் உதவியுடன் ஒரு குறும்படத்தை இயக்குகிறார்.தன்னுடைய படம் தான் அந்த விழாவில் கலந்து கொண்ட மிகச்சிறந்த படம் என நினைக்கிறார்.ஆனால் அவருக்கு இரண்டாம் பரிசுதான் கிடைக்கிறது.
முதல் பரிசு பெற்ற இயக்குநர் தான் வில்லன்.வில்லனுக்கு நாயகனை சுத்தமாகப்பிடிக்கவில்லை.
சினிமா உலகில் வில்லனுக்கு இயக்குநர் சான்ஸ் கிடைத்து ஒரு படம் இயக்கி ஹிட் ஆக்குகிறான்.
ஆனால் நாயகனுக்கு கதாசிரியர் ஆக ,இயக்குநர் ஆக வாய்ப்பு கிடைத்தும் நாயகன் எதிரார்த்த அளவு அமையவில்லை.
கூடவே இருந்து குழி பறிக்கும் ஆட்கள் ,முதுகில் குத்துபவர்கள் இண்டஸ்ட்ரியில் அதிகம்.இந்தத்தடைகளை எல்லாம் மீறி நாயகன் ஜெயித்தாரா?என்பது தான் மீதித்திரைக்கதை
நாயகனாக நஸ்லீன் பிரமாதமாக நடித்திருக்கிறார்.நம் பக்கத்து வீட்டுப்பையன் போல எளிமையான தோற்றம் என்பதால் எமோஷனல். கனெக்ட் ஈசியாகக்கிடைக்கிறது.
ஷராப்யுதீப்,வினீத் சீனிவாசன்,சங்கீத் பிரதாப்,கோபிகா ரமேஷ், மீராநாயர் உட்பட மற்ற அனைவர் நடிப்பும் கச்சிதம்.
ஜேக் பிஜோய் தான் இசை.ஆறு பாடல்களில் 4 தேறுகிறது.பின்னணி இசை கச்சிதம்.ஒளிப்பதிவு விஸ்வஜித் ஒடுக்கத்தில்.அருமை.நிதின் ராஜ் அரோல்,அபினவ் சுந்தர் நாயக் இருவரும் இணைந்து எடிட்டிங் செய்திருக்கிறார்கள்.படத்தின் ரன்னிங் டைம் 167 நிமிடங்கள்.
ராமு சுனில் திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர் அபினவ் சுந்தர் நாயக்
சபாஷ் டைரக்டர்
1 நாயகனைத்தவிர படத்தில் வரும் அனைத்துக்கேரக்டர்களும் சுயநல குணம் கொண்டவர்கள் என்ற கான்செப்ட் புதுசு.
2 சினிமா உலகின் கறுப்புப்பக்கங்களை ,அரசியலை விலாவாரியாக விவரித்த விதம் அருமை.புதிதாக சினிமா இண்டஸ்ட்ரிக்குள் நுழைபவர்கள் அவசியம் காண வேண்டிய படம் இது.
3 மலையாள சினிமா இண்டஸ்ட்ரியில் நடக்கும் சம்பவங்களாகக்காட்டப்பட்டு இருந்தாலும் எல்லா மொழி சினிமா இண்டஸ்ட்ரிக்கும் இது பொருந்தும் என்பதால் ஈசியாகக்கனெக்ட் ஆகும்.
4 திரைக்கதை ஆசிரியர் ஒரு படத்தை எப்படி ட்யூன் பண்ணுகிறார்கள் என்பதைக்காட்டும் சீன் செம.
5 பசீல் ஜோசபின் கேமியோ அப்பியரன்ஸ் பிரமாதம்.அவர் வரும் காட்சிகள் எல்லாம் அப்ளாஸ் தான்.
செம ஹிட் சாங்க்ஸ்
1 அப்னா பிரைடே ஆயேகா
2 கோட் சாங்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 படத்தின் மையக்கரு ,திரைக்கதை ,சில காட்சிகள் 1988ல் வெளியான சினிமா பேரடைசோ என்ற இத்தாலியப்படத்தில் இருந்து இன்ஸ்பயர் ஆகி இருக்கிறார்கள்.ஆனால் டைட்டிலில் கிரெடிட் தரவில்லை.
2. டெல்லியில் 2018ல் நடந்த புராரி டெட்ஸ். உண்மை சம்பவத்தில் இருந்து சில காட்சிகள் ,கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பீட்சா படத்தில் இருந்து சில காட்சிகள் உருவப்பட்டு இருக்கின்றனர்.
3 இயக்குநர் வசந்த பாலன் படங்களில் வருவது போல் தோல்வி அடைந்த மனிதனின் கதை தான் இது என்பதால் பின் பாதி திரைக்கதை தொய்வாக செல்கிறது.
4 கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் இந்தப்படம் மிக அயர்ச்சியைத்தருகிறது.பின் பாதியில் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.
5 ஜி கவுதம் வாசுதேவ் மேனன் படங்களில் வருவது போல் வாய்ஸ் ஓவரில் முக்கால் வாசி திரைக்கதை அமைந்திருபதால் சலிப்பு.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சினிமாத்துறையில் சாதிக்க விரும்புபவர்கள் அவசியம் காண வேண்டிய படம் இது.பொது ரசிகர்களுக்குப்பிடிக்காது.ரேட்
| Mollywood Times | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Abhinav Sunder Nayak |
| Written by | Ramu Sunil |
| Produced by | Ashiq Usman |
| Starring | Naslen Sharaf U Dheen Sangeeth Prathap Roshan Shanavas Gopika Ramesh Jagadish |
| Cinematography | Viswajith Odukkathil |
| Edited by | Nidhin Raj Arol Abhinav Sunder Nayak |
| Music by | Jakes Bejoy |
Production company | |
| Distributed by | Central Pictures AP International Home Screen Entertainment |
Release date |
|
Running time | 167 minutes |
| Country | India |
| Language | Malayalam |