8/5/2026 முதல் திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இந்தப்படம் இப்போது லயன்ஸ் கேட் ஓடிடி பிளேயில் தமிழ் டப்பிங்கில் 19/6/2026 முதல் காணக்கிடைக்கிறது.
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு பிரபல எழுத்தாளர் உலகில் இருக்கும் டாப் 10 சீரியல் கில்லர்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதுகிறார்.நூறாவது நாள் படம் பார்த்து ஒரு ஆட்டோ சங்கர் உருவான மாதிரி இந்தப்புத்தகத்தைப்படித்தால் கிரிமினல்களுக்கு கோனார் நோட்ஸ் மாதிரி அமைந்து விடும் என போலீஸ் இலாகா கோர்ட்டில் கேஸ் போட்டு தடை வாங்கி விடுகிறார்கள்.
நாயகன் ஹைதராபாத்தில் ஒரு போலீஸ் ஆபீசர் (அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் போலீஸ். நாயகி நக்கீரன், ஜூனியர் விகடன் மாதிரி புலனாய்வுப்பத்திரிக்கையில் பணி புரிபவர்.இருவரும் கணவன் ,மனைவி.
வில்லன் ஒரு சைக்கோ.வில்லனின் அம்மா மிகவும் கஷ்ட ஜீவனம் நடத்தியதால் மனதளவில் பாதிக்கப்பட்டு சைக்கலாஜிக்கல் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டிருப்பன்.இவன் ஒரு நல்ல ஓவியன்.
சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் ஒரு சினிமா ஷூட்டிங்கில் கலந்து கொண்ட போது ஆன் த ஸ்பாட் வில்லன் அவரைக்கொலை செய்து விடுகிறான்.பின் அந்தப்பிணத்தை பிரபல ஓவியம் மாடலில் செட் பண்ணி விட்டு செல்கிறான்.
அடுத்ததாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு வரும் இன்புளூயன்சர் ஜோடி கொலை செய்யப்பட்டு இன்னொரு பிரபல ஓவியம் போசில் கிடத்தி வைக்கப்படுகின்றனர்.
வில்லன் பிரபலமமான ஆட்களைக்கொல்லக்காரணம் அப்போது தான் மீடியாவின் அட்டென்சன் கிடைக்கும் ,மக்கள் பரபரப்பாகப்பேசுவார்கள் என்பதால் தான்.
பொதுமக்கள் மத்தியில் இந்த வழக்கு பரபரப்பாகப்பேசப்படுகிறது.
போலீஸ் ஆபீசரான நாயகன்,க்ரைம் இன்வெஸ்டிகேசன் ஜர்னலிஸ்ட் ஆன நாயகி இருவரும். இணைந்து கொலைகாரனை எப்படிக்கண்டு பிடிக்கிறார்கள் என்பது மீதிக்கதை.
நாயகி ராதாவாக அமெரிக்க நடிகை ஜோ சர்மா கம்பீரமாக நடித்திருக்கிறார்.அவரது மாடர்ன் டிரஸ் ,உடல்மொழி இரண்டும் அக்கரைச்சீமை அழகிய ராணி என்பதைப்பறை சாற்றுகிறது.சில இடங்களில் மட்டும் கவன ஈர்ப்பு ஓவர் ஆக்டிங்க் தெரிந்தாலும் ரசிக்க முடிகிறது.படத்தின் திரைக்கதை ஆசிரியர்கள் மூவரில் இவரும் ஒருவர் என்பதால் புத்திசாலித்தனமாக எல்லாக்க்ளூவையும் இவரே கண்டுபிடிப்பது போல்,இவருக்கு முக்கியத்துவம் இருப்பது போல் தன் கேரக்டர் டிசைனை வடிவமைத்துக்கொண்டார்.
நாயகனாக சம்பீத் ஆச்சர்யா போலீஸ் கம்பீரத்துடன் நடித்திருந்தாலும் இவர் பெரிதாக எந்த வேலையும் செய்த மாதிரி தெரியவில்லை.டம்மி ரோல் தான்.
இவர்கள் போக சுபலேகா சுதாகர் ,சத்யா கிருஷ்ணன் ,பசுநூன் சீனிவாஸ்,கீதா பாஸ்கர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
இசை வசந்த் இசைப்பேட்டை.பின்னணி இசையில் முத்திரை பதிக்கிறார்.
சந்தோஷ் சானாமோனியின் ஒளிப்பதிவில் நாயகியைப்படம் பிடித்த விதம் அழகு.
கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் மோகன் வட்லபட்லா.
சபாஷ் டைரக்டர்
1 கொலைகாரன் கொலை செய்த பின் ஆர்ட் போல வடிவமைக்கிறான் என்ற விஷயம் புதுசு.
2 சைக்கோ கில்லருக்கும் ,பிரபல ரைட்டரின் நாவலுக்கும் என்ன கனெக்சன்?என்ற தொடர்பை சொன்ன விதம் குட்.
3 இடைவேளை ட்விஸ்ட் ,க்ளைமாக்ஸ்க்கு முந்தைய ட்விஸ்ட் ,க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் மூன்றும் அருமை.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பிரபல ரைட்டரை சந்திக்க நாயகனும் ,நாயகியும் தனித்தனி காரில் ஏன் வருகிறார்கள்?ஒரே காரில் வந்திருக்கலாமே?போலீஸ் ஜீப்பும் இல்லை.எதுக்கு வெட்டியா பெட்ரோல் செலவு?
2 சைக்கோ கில்லரின் லொக்கேஷன் தெரிந்ததும் நாயகன் போலீஸ் படையுடன் செல்லாமல் ஏன் தனியாக செல்கிறார்?ஹீரோயிசம் காட்டவா?
3. ரித்திகா என்ற கேரக்டர் பிரின்சிபாலுக்கு ஒரு மெசேஜ் அனுப்புகிறது.இன்ன இடத்துக்கு உடனே வரவும் என.அந்த அர்த்த ராத்திரியில் அந்த லேடி என்ன தைரியத்தில் தனியாக ப்போகிறது?போலீசுக்கு ஏன் தகவல் சொல்லவில்லை ?
4 நாயகி கேஸ் விஷயமாக இன்வெஸ்டிகேஷன் செய்யப்போகும் இடங்களுக்கு எல்லாம் கிளாமராக லோ கட் டாப் பில் செல்வது எதற்கு? டைவர்ட் பண்ணவா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - வித்தியாசமான க்ரைம் திரில்லர் தான் பார்க்கலாம்.ரேட்டிங் 2.5/5,
| Motive For Murder | |
|---|---|
| Directed by | Mohan Vadlapatla |
| Written by | Mohan Vadlapatla Jo Sharma USA Rahul Adabala |
| Screenplay by | Mohan Vadlapatla |
| Story by | Mohan Vadlapatla |
| Produced by | Mohan Vadlapatla |
| Starring |
|
| Cinematography | Santosh Shanamoni |
| Music by | Vasanth Isaipettai |
Production companies | Mohan Media Creations Jo Sharma's McwinGroup USA |
| Distributed by | PVR Inox India JVEL TekFlix USA |
Release date |
|
| Country | India |
| Languages | Telugu Hindi |