இந்த வாரம் 2 நேரடித்தமிழ்ப்படங்கள்,ஒரு ஹாலிவுட் தமிழ் டப்பிங்படம்,ஒரு ஹிந்தி தமிழ் டப்பிங் படம் ,ஒரு ரீ ரிலீஸ் தமிழ்ப்படம் என ஆக மொத்தம் 5 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
1. 29
2017ம் ஆண்டு வெளியான மேயாத மான் என்ற வித்தியாசமான படத்தைத்தந்து விமர்சகர்களின் பாராட்டைப்பெற்ற அறிமுக இயக்குநர் ஆன ரத்னக்குமார் 9 ஆண்டுகள் கழித்து களம் இறங்கி இருக்கும் படம் தான் இந்த 29.
இவர் எடுத்த குளுகுளு (2022)ஒரு ஆக்சன் காமெடி மூவி.அமலாபால் நடித்த ஆடை (2019)ஒரு சர்வைவல் திரில்லர்.
இவர் 3 படங்களை இயக்கியது போக விஜய் நடித்த மாஸ்டர்(2021),கமல் நடித்த விக்ரம் (2022),விஜய் நடித்த லியோ (2023),ரஜினி நடித்த கூலி (2025) ,சூர்யா நடித்த கறுப்பு (2026),கார்த்தி நடிக்கும். சர்தார் பாகம் 2 (2026) ஆகிய படங்களில் வசனகர்த்தாவாகப்பணி ஆற்றி இருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் + லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள்.
நாயகன் ஆக விது ,நாயகி ஆக ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கு உருவாகி இருக்கும் ரொமாண்டிக் டிராமா இது.
இயக்குநர் இந்தப்படத்தைப்பற்றி இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் 29 வயதான எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு குழப்பமான மனநிலை இருக்கும்.அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை பிறக்கும் பருவம் இது.
என் பர்சனல் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்துக்கதை அமைத்து இருக்கிறேன் என்கிறார்..
சீன் ரோல்டன் இசையில் 6 பாடல்கள்.அந்த ஆறில் பூ பாடல் ஷங்கர் இயக்கத்தில் ரிலீஸ் ஆன காதலன் படத்தில் வரும் காதலிக்கும் பெண்ணின் கை பாடல் போலவே இருக்கிறது.
ட்ரெய்லரைப்பார்த்தபோது எங்கேஜிங்க் ஆன ரொமாண்டிக் ட்ராமா போல் தெரிகிறது.
ரசித்த வசனங்கள்
1 நான் யாரு?என்னோட அடையாளம் என்ன?இந்த தேவதையோட ஆளு என்பது தான் இப்போதைக்கு என்னோட அடையாளம்.
2 பெரியவனா ஆகும் முன் நீ என்னவா ஆகனும்னு ஆசைப்பட்டே?
பெரியவனா ஆகனும்னு மட்டும் தான் ஆசைப்பட்டேன்.
3 அவன் ஒண்ணும் நமக்காக மாறலை.அவன் நேசித்த பொண்ணுக்காக மாறி இருக்கான்.
4 காதல் என்னைக்கொஞ்சம் கொஞ்சமா பிச்சுத்திங்குது.
5 லவ் பண்ணும்போது கெமிஸ்ட் ரி நல்லா இருந்தாப்போதும்,ஆனா அதுக்குப்பின் மேட்ச் வேணும்
6 அவனுக்குன்னு ஒரு அடையாளமே இல்லாம அழிச்சுக்காமிக்கிறேன்.
நாயகன் விது முக சாயல் ,உடல் மொழி அனைத்தும் தனுஷ் சை நினைவுபடுத்துகிறது.
2. மார்ட்டல் காம்பாட் பாகம் 2. ஆங்கிலம் /தமிழ்
80 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் 2021ல் வெளியான முதல் பாகம் போலவே ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் வெளியாகிறது.
இது மார்ஷியல் ஆர்ட்ஸ் பேண்ட்டசி பிலிம்
ரசித்த வசனங்கள்
1 ஒரு ஹீரோ எப்படி உருவாகிறான் தெரியுமா?விதியினால் இல்லை.சூழ்நிலையால்.
2 பிறக்கும்போது யாரும் ஹீரோ இல்லை.
3 ஒரு உயரத்தைத்தேடிப்போகும்போது தான் நமக்குள்ளேயும் ஒரு ஹீரோ இருந்திருக்கிறான் என நமக்கே தெரிய வரும்
4 நம்ம தலை எழுத்தை மாத்தி அமைக்கப்போறது நம்ம படை பலம் மட்டும் அல்ல.
5 இந்த உலகத்தோட தலை எழுத்தைத்தீர்மானிக்கப்போகும் போர் இது.
6 பொண்ணாச்சேன்னு பார்க்கறேன்.இல்லைன்னா மோதிடுவேன்.
கவலைப்படாத.உன்னால என்னை ஒண்ணும் செய்ய முடியாது.
மாயாஜாலம் ,மந்திரம் மிக்க ஆக்சன் படம் இது
3. Day 11. தமிழ்
இது ஒரு லோ பட்ஜெட் படம்.அட்வென்ச்சர் பேண்ட்டசி திரில்லர் வகை.
ட்ரெய்லரைப்பார்க்கும்போது நான்கு ஆண்கள் ,ஒரு பெண். ஐவரும் ஒரு பேய் பங்களாவில் மாட்டிக்கொள்வது தான் கதை போல் தெரிகிறது.
நடிக ,நடிகையர் அனைவரும் புதுமுகங்கள்.ஆதர்ஷ்,அபிமன்யு, ரவிச்சந்திரன்,ஸ்ரீத்திகா,செல் வா
ரசித்த வசனம்
ஒரு டாக்டரா பிறப்பு,இறப்பு எல்லாத்தையும் பார்க்கறோம்,ஆனா பிறப்பின் போது எல்லை இல்லாத மகிழ்ச்சி கிடைக்குது.இறப்பின் போது சோகம் தான் மிச்சம் நிக்குது.அதை மறக்க நாள் ஆகுது.
கதை,திரைக்கதை,வசனம்,பாடல்கள், இயக்கம் ஸ்ரீத்திகா என்ற பெண் இயக்குநர்
4. கிருஷ்ண அவதாரம் (ஹிந்தி/தமிழ்)
கிருஷ்ண அவதாரம் பாகம் 1 இதயம். என்ற ஹிந்திப்படத்தின் தமிழ் டப்பிங் வெர்சன் இது.
இது ஒரு ஆன்மீகப்படம்.துவாரகையிலிருந்து குருஷேத்திரம் வரையிலான கிருஷ்ண பகவானின் பயணம் குறித்த கதை இது.
அது போக பாமா,ருக்மணி,ராதா ஆகியோருடனான கிருஷ்ணரின் உறவைப்பற்றி சொல்லும் படமும் கூட.
ஹர்திக் கஜ்ஜார் இயக்கத்தில் சித்தார்த் குப்தா (கிருஷ்ணர்)சம்ஸ்க்ருதி ஜயானா,சுஷ்மிதா பட்,நிவாஷியினி கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ட்ரெய்லரைப்பார்க்கும்போது பிரமமாண்டமான தயாரிப்பாய்த்தோன்றுகிறது.ஒளிப் பதிவு,லொக்கேஷன்கள் அருமை.
ட்ரெய்லரில் ஹிந்தி வெர்சன் கட் பிரமாதமாவும்,தமிழ் வெர்சன் கட் சுமாராகவும் இருக்கிறது.
7/5/2026 முதல் ரிலீஸ்
5. மெர்சல்
2017 ம் ஆண்டு தீபாவளி ரிலீஸ் ஆக வந்த படம் இது.120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 250 கோடி வசூல் செய்த படம்.
விஜய் இதில் முதல் முறையாக ,3 வேடங்களில் நடித்திருக்கிறார்.இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவான இந்தப்படம் கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தின் அன் அபிஷியல் ரீ மேக் தான்.
காஜல் அகர்வால்,சமந்தா,நித்யா மேனன் என 3 ஜோடிகள்.எஸ் ஜே சூர்யா வில்லன்.வடிவேலு ,கோவை சரளா காமெடிக்கு.யோகி பாபு ,காளி வெங்கட் உட்பட ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது.
இசை ஏ ஆர் ரஹ்மான்.
ஆளப்போறான் தமிழன் பாட்டு பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆனது.

.jpg)