Thursday, May 14, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி மே 15 தியேட்டர் ரிலீஸ் தமிழ்ப்படங்கள் ஒரு முன்னோட்டப்பார்வை

 1. கறுப்பு





எல் கே ஜி ,மூக்குத்தி அம்மன்  ஆகிய படங்களை இயக்கிய ஆர் ஜே பாலாஜி   வில்லனாக நடித்து  இயக்கி இருக்கும் படம் இது.2022ல் எதற்கும் துணிந்தவன் படத்தின் தோல்விக்குப்பின் சூர்யா நாயகன் ஆகக்களம் இறங்கி இருக்கும் படம் இது.

நாயகி ஆக திரிசா நடிக்க சுவாசிகா,சிவாதா,அனகா மாயா,சுப்ரிதா ,இந்திரன்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்ககில் நடிக்கிறார்கள்.யோகி பாபு காமெடியன் ஆக வருகிறார்.

ட்ரெய்லர் ,டீசர் வைத்துபார்க்கும்போது படத்தில் நாயகன் ,நாயகி ,வில்லன் மூவருமே வக்கீல் ஆக வருகின்றனர் எனத்தெரிகிறது.ஜட்ஜ் ஆக சதுரங்க வேட்டை புகழ்  நட்டி என்கிற நடராஜ் நடித்திருக்கிறார்.

இந்தப்படம் ட்ரெய்லர்  வந்தபோதே அதில் சிவகார்த்திகேதனைக்கலாய்த்திருப்பதாக பரபரப்பாகப்பேசப்பட்டது.

இது சூர்யாவின் 45 வது படம்.படத்தின். ஷூட்டிங் பொள்ளாச்சியில் நடைபெற்றது.

இது ஒரு பக்காவான கமர்சியல் ஆக்சன் திரில்லர்

சாய் அபயங்கர் இசையில் 5 பாடல்கள்.
இந்தப்படம் ஜீ 5 ஓ டி டி தளத்தில் விரைவில் வெளியாகும்.
படம்  14/5/2026 முதல் ரிலீஸ்

படத்தின் ரன்னிங் டைம்  152 நிமிடங்கள்







ரசித்த வசனங்கள்

1  கற்பூரம் காட்டிக்கண்ணில் ஒத்திக்கொள்ளும் சாதாரண சாமி இல்ல,மனசார வேண்டிக்கிட்டு மிளகாய் அரைச்சா உடனே வரம் கொடுக்கும் முரட்டுத்தனமான சாமி

2 என் பேரு சரவணன்,எனக்கு இன்னொரு பேரு இருக்கு....(கருப்பு)

,3 மேரா பாய்,இது நம்ம டைமு.செம்ம அடி அடிக்கப்போறேன்.

4 பேபி..இது டாடிஸ்  ஹோம்


5 இப்படியே எத்தனை நாட்கள் இருக்கப்போறே?ஒரு நாள் இந்த இடம்  மாறாமயா போகும்?

இது என் இடம் ,என் கோர்ட் ,கடவுளே வந்தாலும் எதையும் மூத்த முடியாது.

6 கொஞ்ச நாள் நான் இல்ல,எல்லாருக்கும் பயம் விட்டுப்போச்சு.

7 இந்த மாதிரி நேரத்துல மனுசனுக்கு மனுசன் ஹெல்ப் பண்ணத்தானே கடவுள் நம்மைப்படைச்சிருக்காரு?

8 வெள்ளைக்காரன் சாமியா இருந்தாக்கூட பாவ மன்னிப்புக்கேட்கலாம்.இது கருப்பு.கருப்பண்ணசாமி

9 பீக் சம்பவம் லோடிங்க்

10 கால துப்பாக்கி கிடைச்சா எதிர்ல யார்?என்ன?னே பார்க்காம நீட்டிடுவியோ?( சிவகார்த்திகேயனுக்கு உள் குத்து டயலாக்)

11 இனிமே நீ கிரிக்கெட் கமெண்ட் ரி செய்யத்தான் போயாகனும் ( ஆர் ஜே பாலாஜியை ஆர் ஜே பாலாஜியே சுய பகடி செய்யும் டயலாக்)



2 சட்டென்று மாறுது வானிலை

ஜெய் ,மீனாட்சி கோவிந்தராஜன் நாயகன் ,நாயகி ஆக நடிக்க யோகி பாபு காமெடியன் ஆக வருகிறார்.கருடா ராம் ,ஸ்ரீமன், சத்யன்  போன்றவர்களும் உண்டு.

விஜய் நடித்த சர்கார்,ரஜினி நடித்த தர்பார் ஆகிய படங்களில்
ஏ ஆர் முருகதாசிடம் உதவி இயக்குநர் ஆகப்பணி புரிந்த  பாபு விஜய் இயக்கும் முதல் படம் இது.
இசை கிரீஷ் கோபால கிருஷ்ணன்

இயக்குநர் விஜய் ரசிகர் போல.படம் முழுக்க விஜய் ரெப்ரென்ஸ் கொடிக்கிடக்கின்றன


ட்ரெய்லரைப்பார்த்து யூகித்ததில் நாயகன் ஒரு அனாதை ,நாயகி  அமைச்சரின் மகள்.இருவரும் ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள்.பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.

நாயகன் ஒரு காலத்தில் சைக்கோ பேஷண்ட் என்பது நாயகிக்குத்தெரிய  வருகிறது.

ஊழல் அரசியல்வாதிகள் நாயகியை வைத்து ஒரு சதி செய்கிறார்கள்.அதை நாயகன் முறியடித்தானா?என்பது தான் மீதித்திரைக்கதை.

முதல் பாதி காமெடி ,கலாட்டா,காதல் பின் பாதி ஆக்சன்.



ரசித்த வசனங்கள்

1 நாம் மனசார ஒரு விஷயத்தை விரும்பினால், நாம் கேட்கும் விஷயம் நியாயமாய் இருந்தால் அந்த பிரபஞசமே நாம் கேட்டதை நம்ம கிட்டே கொண்டு வந்து சேர்க்கும்

2 நாமெல்லாம் பி என் டபிள்யூ காரைப்பார்க்க ஆசைபடலாம்,ஆனா அதில் ஏறி உட்கார்ந்து ஓட்டனும்னு ஆசைப்படக்கூடாது.

3 ப்ரோ காபி ?

ப்ரோ காபி நான் குடிக்க மாட்டேன்,ப்ரூ காபி தான் குடிப்பேன்.

4 மேரேஜ் பண்றது நல்ல விஷயம் தான் ,அதைக்கரெக்டா மேனேஜ் பண்ணனும் ,இல்லைன்னா லைபே டேமேஜ் ஆகிடும்

5 இந்தத்துப்பாக்கியைப்பிடிங்க

இது செல்போன்

இதை துப்பாக்கியா நினைச்சுக்குங்க

6 நீ இந்த அளவு யாரையும் லவ் பண்ணி இருக்க மாட்டே-னு உன் கண்ணு சொல்லுச்சு.

7 என் தர்பார்க்குள்ளே நான் நினைக்கறவங்க மட்டும் தான் வர முடியும்,ஏன்னா நான் தான் சக்ரவர்த்தி

8 சிஸ்டம் கரெக்டா இருக்கு,ஆனாலும் சரி பண்ணனும்

9  ஐ ஆம் வெய்ட்டிங்

ம்க்கும்,வந்துட்டார் ,திடீர் தளபதி


இந்தப்படம் 15/5/26 ரிலீஸ்