Monday, May 25, 2026

EXAM(2026)- தமிழ்- வெப் சீரிஸ் விமர்சனம் ( க்ரைம் திரில்லர்)@அமேசான் பிரைம்

 

புஷ்பா காயத்ரி தயாரிப்பில் சுழல்,வதந்தி வரிசையில் மூன்றாவதாக வந்திருக்கும் வெப் சீரிஸ் இது.

விமல் நடித்த களவாணி(2010)என்ற மெகாஹிட் கொடுத்த இயக்குநர் சற்குணம் அதைத்தொடர்ந்து  வாகை சூட வா (2011),நையாண்டி(2013),மஞ்சப்பை(2014),சண்டி வீரன்(2015),டோரா(2017),களவாணி 2(2019),பட்டத்து அரசன்(2022),கலாட்டா பேமிலி(2025) என 9 படங்களை இயக்கியவர் 10 வதான படைப்பாக  எக்சாம் வெப் சீரிசை இயக்கி இருக்கிறார்.


தமிழ் நாட்டில் நடந்த க்ரூப் 1  தேர்வில் நடந்த ஊழல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை.சமீபத்தில் இந்தியாவையே அதிர வைத்த நீட் எக்சாம் கொஸ்டீன் பேப்பர் லீக் சம்பவம் கூட இதே டைப் ஊழல் தான்.


இதில் மொத்தம் 7 எபிசோடுகள்.ஒவ்வொரு எபிசோடும் 30 டூ 35 நிமிடங்கள் ,ஆக மொத்தம் மூன்றே முக்கால் மணி நேரம் ஒதுக்கினால் ஒரே  அமர்வில் மொத்த வெப் சீரிசையும் பார்த்து முடித்து விடலாம்.

ஸ்பாய்லர்  அலெர்ட்

வில்லி ஒரு  டி எஸ் பி. ஊட்டி மாதிரி ஒரு மலைவாசஸ்தலத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு ட்ரான்ஸ்பர் ஆகிறார்.டியூட்டியில் ஜாய்ன் பண்ண புது ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் நாயகி வில்லியைக்கடத்தி ஒரு இடத்தில் அவரைக்கட்டிப்போட்டு ஆள் மாறாட்டம் செய்கிறார்.


அதாவது நாயகியே டி எஸ் பி ஆக களம் இறங்குகிறார்.சில காவல் துறை அதிகாரிகளும் ,அரசு  ஊழியர்களும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்.


ஆரம்பத்தில்  வில்லி தான் எல்லாவற்றுக்கும் காரணம் என நினைக்கும் நாயகி அதற்குப்பின்னர் தான் வில்லிக்கும் மேலே ஒரு பாஸ் இருக்கிறான் என்பதைக்கண்டுபிடிக்கிறார்.


இதற்குப்பின் நாயகி எடுக்கும் அதிரடி ஆக்சன்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகி ஆக துஷாரா விஜயன் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.ஆக்சன் சீக்வன்சில் அதகளப்படுத்துகிறார்.செண்ட்டிமெண்ட் சீன்களில் கண் கலங்க வைக்கிறார்.


வில்லி ஆக அதிதி பாலன் கச்சிதம்.நாயகிக்கு குருவாக அப்பாஸ் நடித்து இருக்கிறார்.கெட்டப் ,நடிப்பு இரண்டும் கச்சிதம்.ஜீப் டிரைவர்  ஆக வரும்  சரவணன் சக்தி நடிப்பும் அருமை.


ஒளிப்பதிவு ,எடிட்டிஙக் ,இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சினிமாப்படத்துக்கு உண்டான தரத்தை வெப் சீரிசுக்கும் தந்திருக்கிறது.

திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ஏ சற்குணம்



சபாஷ்  டைரக்டர்

1 நாயகி ஆள் மாறாட்ட மோசடியில் மாட்டி விடுவாரோ என்ற பதை பதைப்பை வைத்தே சஸ்பென்ஸ் ஆகக்காட்சிகளை அடுக்கி முதல் 3 எபிசோடுகளை ஜெட் வேகத்தில் கடத்திய விதம்.

2 நாயகி ,வில்லி இருவருக்குமான கார் பைட் சீன் படமாக்கப்பட்ட விதம்.

3 முக்கியமான கேரக்டர்கள் 5 பேரை மட்டுமே வைத்து படமாக்கியதால் குழப்பம் இல்லாத தெளிவான திரைக்கதை

4 ஒவ்வொரு எபிசோடின் ஆரம்பத்திலும் கொஞ்சம் பிளாஸ்பேக் சொல்லி விட்டுப்பின் மெயின் கதைக்குப்போகும் உத்தி.

5 ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் நாயகி ஒரு சிக்கலில் மாட்டுவதாக முடிப்பது நல்ல சஸ்பென்ஸ்.

6 சாம் சி எஸ் சின் பின்னணி இசை திரில்லர் படத்துக்கான மூட் செட் செய்கிறது


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜெண்டில்மேன் படம் ஆங்காங்கே நினைவுக்கு வருகிறது.

2 அப்பாஸ்  உடைய கேரக்டர் டிசைன் ரமணா விஜய்காந்த் போல் உள்ளது.

3  படத்தின் மெயின் கதையான எக்சாம் ஊழல் கதை நடக்கும் கடைசி 4 எபிசோடுகளை விட படத்தின் சைடு டிராக் ஆன நாயகியின் ஆள் மாறாட்ட மோசடி சீக்வன்ஸ் விறுவிறுப்பாக அமைந்து மெயின் கதையை காலி பண்ணி விட்டது.

4 புதிதாக ட்யூடிக்கு வரும் டி எஸ் பி யின் போட்டோவை வாட்சப்பில் அனுப்ப மாட்டார்களா?


,5 நாயகி ஒரு போர்ஜரி செய்திருக்கிறார்.அது தெரிந்த பின் இன்ஸ்பெக்டர் அவரை அசால்ட் ஆக டீல் செய்யாமல் எஸ் மேடம் ஓக்கே மேடம் என பம்முவது ஏன்?

6 கத்திக்குத்து முதுகில் வாங்கிய பின்னும் நாயகி ஒரு மேத்ஸ் பிராப்ளம் சால்வ் பண்ணுவது எல்லாம் ஓவரோ ஓவர்.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - சமூகத்துக்கு சொல்லப்பட  வேண்டிய ஒரு முக்கியமான விழிப்புணர்வு மெசேஜ் தான்.சொன்ன விதம் பிரமாதமாக இல்லாமல் சராசரி ஆகி விட்டது. ரேட்டிங்க் 2.5/5