6/3/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தத்தெலுங்குப்படம் இப்போது 3/4/2026 முதல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.தமிழ் டப்பிங் இருக்கிறது.ஆங்கில சப் டைட்டில் உண்டு
ஸ்பாய்லர் அலெர்ட்
ஜூனியர் விகடன் ,நக்கீரன்,தராசு மாதிரி புலனாய்வுப்பத்திரிக்கையில் க்ரைம் ரிப்போர்ட்டர் ஆகப் பணியாற்ற நாயகனுக்கு ஆசை.ஆனால் அவனுக்குக்கிடைத்த வேலை என்னவோ பத்திரிக்கை ஆபீசில் விளம்பரம் சேகரிக்கும் பிரிவில்.மனதுக்குப்பிடிக்காமல் வேலை செய்தாலும் மிகத்திறமையாக விளம்பரங்கள் சேகரிப்பதில் நிபுணன்.அது போல நாயகனிடம் ஒரு அதீதத்திறமையும் இருக்கிறது.அபாரமான மெமரி பவர்.ஒரு விஷயத்தைப்பார்த்து விட்டால் நுணுக்கமாக அனைத்தையும் நினைவில் வைத்திருப்பான்.
இழவு விழுந்த வீட்டில் மிகவும் பரிச்சயம் ஆனவன் போல எல்லோரிடமும் அறிமுகம் ஆகி இந்த சாவு அனைவருக்கும் தெரிய பத்திரிக்கையில் விளம்பரம் செய்யலாம் என நைசாகப்பேசி விளம்பரங்கள் பிடிப்பதுதான் நாயகனின் பழக்கம்.இதனால் நாயகன் அடிக்கடி சாவு வீட்டுக்குப்போவது வழக்கம்.
ஒரே பேட்டர்னில் இரு சாவுகள் நடப்பதைப்பார்க்கிறான்.ஒரு வங்கி யில் நடந்த ஊழல் பற்றிப்புகார் கொடுத்த நபர் கரண்ட் ஷாக் அடித்து மரணம் அடைகிறான்.அந்த மரணத்துக்கு முன்பு அதே பேட்டர்னில் கரண்ட் ஷாக் அடித்து இன்னொரு நபர் இறக்கிறான்.இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இது கொலை தான் என்று நாயகன் சந்தேகிக்கிறான்.
நாயகி அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் போலீஸ்.நகரில் நடக்கும் தொடர் கொலைகளை விபத்தாகக்கேசைக் க்ளோஸ் செய்யும்படி நாயகிக்கு மேலிடத்தில் இருந்து பிரஷர் வருகிறது.
நாயகன் ,நாயகி இருவரும் இணைந்து இந்தக்கேசை எப்படி டீல் செய்தார்கள்? சாமார்த்தியமாகக்கொலை செய்யும் பிரில்லியண்ட் ஆன வில்லனை நாயகன் எப்படிக்கண்டு பிடித்தான் என்பது மீதித்திரைக்கதை
நாயகன் ஆக ஸ்ரீ விஷ்ணு ஆள் பார்க்க தாடி வைத்துக்கொண்டு ஒரு மார்க்கமாக இருந்தாலும் புத்திசாலித்தனமான கேரக்டர் டிசைனால் வசீகரிக்கிறார். ஆக்சன் சீக்வன்சிலும் அசத்துகிறார்.
நாயகி ஆக ரெபா மோனிகா ஜான் கம்பீரமாக நடித்திருக்கிறார்.போலீஸ் மிடுக்கு யூனிபார்மில் தெறிக்கிறது.
வில்லன் ஆக ,காண்ட் ராக்ட் கில்லர் ஆக நந்தகோபால் நடித்திருக்கிறார். அருமையான வில்லத்தனம்
கொலை செய்ய காண்ட் ராக்ட் ஹேண்ட்லர் ஆக சத்ரபதி சேகர் நடித்திருக்கிறார்.ஆனால் அதிக வாய்ப்பில்லை.
மற்ற அனைவரும் அவரவர் கேரக்டரை சரியாக செய்திருக்கிறார்கள்.
கால பைரவா வின் இசையில் இரண்டு பாடல்கள் ஓக்கே ரகம்.பின்னணி இசை குட்.
ஒளிப்பதிவு வித்யா சாகர் சிண்ட்டா.கனகச்சிதம்.ஏ ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிஙகில் படம் 119 நிமிடங்கள் ஓடுகிறது
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஸ்ரீ ஹூசைன்சா கிரண்.
சுபாஷ் டைரக்டர்
1. வில்லன் ஒரு கொலை செய்யும் முன் அதற்கான ட்ரெய்லர் ஆக இன்னொரு ஆளை கொலை செய்து பார்த்துக்கொள்கிறான் என்பதும் யாரைக்கொலை செய்ய இருக்கிறானோ அவனைப்போலவே பழக்க வழக்கஙகள் உள்ளவனாகத்தேர்ந்தெடுக்கிறான் என்பதும் பிரமாதமான ஐடியா.
2. வில்லன் கொலை செய்யக்கிளம்பும்போது மாறு வேடத்தில் போகிறான் என்பது நாயகனுக்குத்தெரியாது.வில்லனின் மாறு வேட அங்க அடையாளங்களை வில்லனிடமே கூறி விசாரிக்கும் சீன் செம.பூ விழி வாசலிலே படத்தில் வில்லனை நெருங்கும் பரபரப்பு இதில் கிடைத்தது.
3 நாயகனுக்குத்தான் தேடும் வில்லன் யார் என்று அடையாளம் தெரியாது.ஆனால் வில்லனுக்குத்தன்னைத்தேடும் ஹீரோ யார் என்று தெரியும்.படம் பார்க்கும் ஆடியன்சுக்கு வில்லன் யார் என்பது தெரியும்.இந்த அருமையான பாய்ண்ட்ஸ் ரசிகர்களை சீட் எட்ஜில் அமர வைக்கிறது.
4 வில்லன் பிரில்லியண்ட் ஆனவன்.நாயகன் வில்லனை விட பிரில்லியண்ட்.இந்த கேரக்டர் டிசைனால் கேட் அண்ட் மவுஸ் பார்முலாவில் திரைக்கதை பறக்கிறது.அர்விந்த் சாமி வில்லனாக நடித்த தனி ஒருவன் படத்துக்கு இணையான பலமான திரைக்கதை அம்சம்
5 க்ளைமாக்சில் வில்லனைக்கொலை செய்ய நாயகன் பயன்படுத்தும் ஐடியா செம எனில் வில்லன் நாயகனிடம் என்னை எப்படிக்கண்டு பிடிச்சே? என்று பாராட்டுவதும் அருமை
6 நாயகனின் நண்பர்களாக போஸ்ட் மார்ட்டம் செய்பவர், சுடுகாட்டில் வெட்டியான் , சவ ஊர்வல வண்டி ஓட்டுநர். என சாவு சம்பந்தப்பட்ட ஆட்களே கிடைப்பது கேஸ் டீலிங் செய்ய உபயோகம் எனில் க்ளைமாக்சில் மூவரையும் உபயோகப்படுத்திக்கொள்ளும் ஐடியா அருமை
7 ஒரு கட்டத்தில் இன்வெஸ்டிகேஷன் போர்சன் ல இருந்து விலகி நாயகன் - வில்லன் ஆடு புலி ஆட்டம் என்ற திசையில் திரைக்கதை நகர்ந்தாலும் செம விறுவிறுப்பு
ரசித்த வசனங்கள்
1. எவ்வளவு பிரில்லியண்ட் ஆக ஒருவன் இருந்தாலும் உயரம் ,கண் பார்வை, பழக்க வழக்கம் இவை மூன்றையும் அவனால் மறைக்க முடியாது
2. தோத்துப்போயிடுவேனோ?னு பயமா இருக்கு
தோத்துப்போறது தப்பில்லை.ஆனா தோத்துடுவோமே என்ற பயத்தில் யுத்தம் செய்யாம இருப்பது தான் தவறு
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 ஒருவருக்கு விஷம் அல்லது கெமிக்கல் கலந்து பானம் தந்து கொல்ல நினைத்தால். கூல் டிரிங்க்ஸ், சரக்கு ,சாப்பாடு இவற்றில் ஏதாவது ஒன்றில் கலப்பது தான் சரி.தண்ணீரில் கலந்தால் காட்டிக்கொடுத்து விடாதா?
2. பாங்க்கில் நடந்த ஊழல் தான் கொலைகளுக்கான முக்கியக்காரணம்.அந்த டீட்டெய்லிங்க் படத்தில் அதிகமாக இல்லை.காண்ட் ராக்ட் கில்லர் ,வில்லன்,நாயகன் என திரைக்கதை திசை மாறி செல்கிறது
அடல்ட் கண்ட்டண்ட் வார்னிங். 16+
சிபி எஸ் பைனல் கமெண்ட். - பரபரப்பான ,விறுவிறுப்பான க்ரைம் ஆக்சன் திரில்லர் படம் இது.குடும்பத்துடன் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5