Sunday, May 17, 2026

மாட்டுக்கார வேலன்(1970)-தமிழ்- சினிமா விமர்சனம் (கமர்ஷியல் மசாலா)@யூ ட்யூப்

 

14/1/1970 பொங்கல் வெளியீடாக வந்து 175 நாட்கள் ஓடிய வெள்ளி விழாப்படமான இது இப்போது ரீ ரிலீஸ் ஆகி இருக்கிறது.


1966ல் கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற எம்மே தம்மண்ணா படத்தின் அபிஷியல் ரீமேக் இது (தமனாவிற்கும் ,டைட்டிலுக்கும் சம்பந்தம் இல்லை.)

இது பின்பு ஹிந்தியில் 1969ல் ஜிகிரி தோஸ்த் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.லட்சுமிகாந்த் பியாரிலால் இசை அமைத்தார்.அங்கும் படம் மெகா ஹிட்

                              


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு வக்கீல்.நகரத்தில் உள்ள பிரபலமான ஒரு வக்கீலிடம் உதவியாளராக சேர இருக்கிறான்.அவன் அவர் வீட்டுக்கு வருவதாகக்கடிதமும் எழுதி  ,அவனது போட்டோவையும் இணைத்து நாயகனின் அம்மா அனுப்பி இருக்கிறார்.


அந்த பிரபல வக்கீலின் மகளைத்தான் நாயகனுக்காகபெண் பார்த்து இருக்கிறார் நாயகனின் அம்மா.ஆனால் இது நாயகனுக்குத்தெரியாது.


நாயகனைப்போலவே உருவ ஒற்றுமை கொண்ட வேலன் கிராமத்தில் வசிக்கிறான்.அவன் மாடுகளைப்பராமரித்து பால் விற்று ஜீவனம்  நடத்துகிறான்.


வில்லன் வேலனின் வீட்டைத்தீ வைத்துக்கொளுத்தி விடுகிறான்.இது சம்பந்தமாகப்புகார் தந்து கேஸ் பைல் பண்ண வேலன் நகரில் இருக்கும் பிரபல வக்கீல் வீட்டுக்கு வருகிறான்.


வக்கீல் வேலனை நாயகன் ஆன மாப்பிள்ளை என்று நினைத்து உபசரிக்கிறான்.வக்கீலின் மகள் வேலனைக்காதலிக்கிறாள்.


வேலனின் வீட்டைக்கொளுத்திய வில்லனின் மகள் நாயகன் ஆகிய வக்கீலைக்காதலிக்கிறாள்.

இதற்குப்பின் இரு நாயகிகளும் தங்கள் காதலனைப்போலவே உருவ ஒற்றுமை கொண்ட இன்னொரு நபரால் குழப்பம் அடைகிறார்கள்.இதற்குப்பிறகு நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதி திரைக்கதை.


நாயகன் வக்கீல் ஆக ,மாட்டுக்கார வேலன் ஆக இரு வேடங்களில் எம் ஜி ஆர் அசத்துகிறார்.வக்கீல் ஆக வருபவர் டிப் டாப் ஆக கோட் சூட் உடையில் வந்து கை தட்டல் வாங்குகிறார் என்றால் மாட்டுக்கார வேலன் ஆக வரும் எம் ஜி ஆர் கழுத்தில் கொசு அடிப்பது போன்ற ஒரு மேனரிசம்  செய்து ரசிகர்களைக்கவர்கிறார்.


மாட்டுக்கார வேலனின் ஜோடி ஆக ஜெயலலிதா அழகாக நடித்திருக்கிறார்.வில்லனின் மகள் ஆக வந்து வக்கீல் ஜோடி ஆகும் நாயகி ஆக லட்சுமி பணக்காரத்திமிரைப்பிரமாதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.


வில்லன் ஆக அசோகன் மிரட்டி இருக்கிறார். கண்ணுக்கு மை எல்லாம் இட்டு சிரிப்பு மூட்டுகிறார்.அந்தக்கால மேக்கப்.


பிரபல வக்கீல் ஆக வி கே ராமசாமி  கணீர் குரலில் நடித்திருக்கிறார்.வில்லனின் மகனாகக்காமெடி செய்கிறார் துக்ளக் சோ ராமசாமி.

வக்கீல் வி கே ராமசாமியின் மனைவி ஆக எஸ் வரலட்சுமி பாந்தமான நடிப்பு.

உசிலைமணி ஒரு காட்சியில் வந்து போகிறார்.

வி ராமமூர்த்தியின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்புல்லாக இருக்கின்றன.

கே வி மகாதேவன் இசையில்  5 மெகா ஹிட் பாடல்கள்.பின்னணி இசையும் அருமை.

எல் நாராயணன் திரைக்கதை எழுத பி நீலகண்டன் இயக்கி இருக்கிறார்.

படத்தின் ரன்னிங்க் டைம் 173 நிமிடங்கள்.



சபாஷ்  டைரக்டர்

1 கிட்டத்தட்ட  3 மணி நேரம் ஓடும் படத்தில் முதல் ஒண்ணே முக்கால் மணி நேரம் இரு நாயகிகளுடன் காதல் ,டூயட் ,ஆள் மாறாட்டக்காமெடி தான்.நேரம் போவதே தெரியவில்லை.

2 நாயகன் நாயகிக்கு மாட்டிடம் பால் கறக்கக்கற்றுக்கொடுக்கும் காட்சியும் ,நாயகி கற்பனையில் மிதக்கும் காட்சியும்  காதல் ரசம் சொட்டும் காட்சி.

3. வக்கீல் வீட்டில் தங்க வந்த நாயகன் உபயோகப்படுத்தும் சோப்,டூத் பேஸ்ட்,பிரஷ் என எல்லாமே டபுள் ஆக இருப்பது கண்டு நாயகி சந்தேகப்படுவதும் ,நாயகன் சமாளிப்பதும் காமெடிக்கலக்கல்.


செம  ஹிட்  சாங்க்ஸ்


1 சத்தியம் நீயே !தர்மத்தாயே!குழந்தை வடிவே தெய்வமகளே! ( ஹீரோ ஓப்பனிங்க் சாங்க்)

2  ஒரு பக்கம் பார்க்கிறா,ஒரு கண்ணை சாய்க்கிறா ( இரு நாயகர்களும் இணைந்து நாயகியைப்பற்றி சிலாகிக்கும் வர்ணணைப்பாடல்)

3  பட்டிக்காடா? பட்டணமா?ரெண்டும் கெட்டான் லட்சணமா? ( லட்சுமி கலாய் பாட்டு)

4  பூ வைத்த பூவைக்கு பூக்கள் ஒ

சொந்தமோ?( ஜெ டூயட்)

5  தொட்டுக்கொள்ளவா?நெஞ்சில் தொடுத்துக்கொள்ளவா? (ஜெ  டூயட்)


  ரசித்த  வசனங்கள் 


1 வக்கீல் பர்மிஷன் கொடுத்தா எத்தனை பொய் வேணும்னாலும் சொல்லலாம்.

2 ஒரு உயிரை காப்பாற்றுகிற பொய்க்கு உண்மையை விட பத்து மடங்கு பலம் அதிகம்!

3 அம்மா! உலகத்துல பொறக்குற நாள் தெரியுது. போறநாள் தெரியலையேம்மா!

4 இனிமேல் பெரிய வீட்டு பெண்கள் எல்லாம் உருப்படுனும்னா மாட்டுக்காரனுங்க மனசு வச்சா தான் நடக்கும்...
5 கோர்ட் உள்ளே போவது சுலபம்,வெளியே வருவது கடினம்
6 பட்டம் வாங்கிய பின் தான் ஏராளம் படிக்க வேண்டி இருக்கிறது.
7 உன் அறிவுதான் ஊருக்கு சொந்தம்.நீ அம்மாவாகிய எனக்குத்தான் சொந்தம்
8 இந்த 20 வருசத்துல நம்ம வீட்டு மாட்டுக்கு எப்பவாவது தீனி போட்டு இருக்கீங்களா?

அதான் உனக்குப்போட்டு இருக்கேனே?
9 பணக்கார வீட்டுப்பிள்ளை ஏழையைக்காதலிக்கலாமா?என்று நினைக்காதே!இந்தக்காலத்தில் பணக்கார வீட்டுப்பசங்களுக்கு அதுதான் வேலையே!

10 உங்க கைராசி என்னைக்கும் குறையாது.
11 இந்த உலகத்துல எதுக்குமே உதவாதவனை நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு என ஏளனம் செய்வார்கள்.
12 எங்க ஊரில் முதல் மனைவியின் சவ ஊர்வலம் ,இரண்டாவது மனைவியின் திருமண ஊர்வலம் ஒரே சமயத்தில் நடக்கும்.
13 வில்லன் - எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு
காமெடியன் - உனக்கு வெட்கம் ,மானம் ,சூடு ,சுரணை எதுவும் இல்லைன்னு ஊர் மக்கள் பேசிக்கறாங்களே?
14 பணம் இருந்தா பயமும் இருக்கும்,தைரியமும் இருக்கும்.
15 கல்யாணம் ஆகும் வரை லவ் என்ற வார்த்தைக்கு உயிர் இருக்கும்

16 இந்தக்காதலில் என்னவோ இருக்கு.பித்துப்பிடிக்க வைக்குது.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 என்னதான் காமெடி டிராக் என்றாலும் வில்லன் அசோகனை மகன் சோ பெண் வேடம் இட்டு ஏமாற்றுவது ,அவர்  அசடு  வழிவது நன்றாக இல்லை 

2 பெண் வேடம் போட்டால் சொந்த மகனை அப்பாவுக்கு அடையாளம் தெரியாதா?

3  வக்கீல் விகே ராமசாமி + எம் ஜி ஆர் + அசோகன் மூவரும் என்ன பேசினார்கள் என்பதை விஷூவலாகக்காட்டி விட்டுப்பின் அதே வசனங்களை, விபரத்தை விகே ராமசாமி மீண்டும் தன் மனைவியிடம் விலாவாரியாக விளக்குவது போர்.

சில சுவராஸ்யத்தகவல்கள்

1 வைகை அணையில் தான் இந்தப்பாடல் காட்சி எடுத்தது - பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?
2 படத்துக்கு நான்கு பாடல்கள் தான் முதலில் பதிவு செய்யப்பட்டது.இரு நாயகிகளுக்கும் தலா ஒரு டூயட்.ஆனால் ஜெ அடம் பிடித்து தனக்கு ஒரு எக்ஸ்ட்ரா பாட்டு வேண்டும் என எம் ஜியாரிடம் கேட்டுக்கொண்டதால் க்ளைமாக்ஸ் பாட்டு சேர்க்க்கப்பட்டது.

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -

ஜாலியான கமர்ஷியல் மசாலா.பாடல்களுக்காகவே பார்க்கலாம்

ரேட்டிங்க் 3/5


Maattukkara Velan
Theatrical release poster
Directed byP. Neelakantan
Screenplay byA. L. Narayanan
Based on
Emme Thammanna
by A. K. Velan
Produced byN. Kanagasabai
StarringM. G. Ramachandran
Jayalalithaa
Lakshmi
CinematographyV. Ramamoorthy
Edited byK. Narayanan
Music byK. V. Mahadevan
Production
company
Jayanthi Films
Release date
  • 14 January 1970
Running time
173 minutes[1]
CountryIndia
LanguageTamil