6/3/2026 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் விமர்சகர்களிடையே பாசிட்டிவ் விமர்சனங்களைப்பெற்றாலும் கமர்ஷியல் ஹிட் ஆகவில்லை .இப்போது இந்தப்படம் 4/5/2026 முதல் டெண்ட் கொட்டாய் ஓடிடி யிலும் 8/5/2026 முதல் ஜியோ ஹாட் ஸ்டாரிலும் வெளியாகிறது.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு கோடீஸ்வரி.நாயகன் ஒரு மிடில் கிளாஸ்.இருவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கிறது.திருமணம் நடந்த அடுத்த நாளே நாயகனுக்கு வேலை போய் விடுகிறது இதனால் நாயகன் மன உளைச்சலில் இருக்கிறான்.
நாயகிக்கு திருமணத்துக்கு முன்பே ஒரு காதலன் இருந்தான்.அவனுடன் ஒரு வருடம் லிவ்விங்க் டுகெதர் வாழ்க்கை நடத்தியவள் தான் நாயகி.சில காரணங்களால் காதலன் பிரிந்து போனதால் இப்போது நாயகனைத்திருமணம் செய்திருக்கிறாள் நாயகி.
நாயகி நாயகன் ஆன தன் கணவனிடம் தன் முந்தைய காதல் விஷயத்தைப்பற்றி சொல்லி விடத்துடிக்கிறாள்.பல முறை முயற்சி செய்தும் அவளால் சொல்ல முடியவில்லை.
நாயகன்,நாயகி இருவரும் கொடைக்கானல் வருகிறார்கள்.இந்த சந்தர்ப்பத்திலாவது தன் பழைய வாழ்க்கையை சொல்லி விட வேண்டும் என்ற எண்ணத்தில் நாயகி இருக்கிறாள்.
நாயகியின் முன்னாள் காதலன் ,வேறு ஒரு வேலையாக கொடைக்கானல் வருகிறான்.இவன் தான் இந்தப்படத்தின் வில்லன்.நாயகனும்,வில்லனும் காலேஜ் மேட்ஸ்.
நாயகன் வில்லனைக்கொடைக்கானலில் எதேச்சையாக சந்திக்க வீட்டுக்கு அழைத்து வருகிறான்.
தன் முன்னாள் காதலனை சந்தித்த நாயகி அதிர்ச்சி அடைகிறாள்.
இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதிக்கதை.
நாயகி ஆக நிவேதிதா சதீஷ் அமைதியாக நடித்திருக்கிறார்.இவருக்கு சிரிக்கவேப்தெரியாதா?எனக்கேட்க வைத்தாலும் அந்த கேரக்டர் டிசைன் அப்படி.சிறப்பான நடிப்பு.
நாயகன் ஆக ஆர் அதுல் நடித்திருக்கிறார்.தாழ்வுமனப்பா
வில்லன் ஆக சிபி புவனா சந்திரன் நடித்திருக்கிறார்.அதிக வேலையில்லை.நடிப்பில் சீரியஸ்தனமும் இவரிடம் இல்லை.வித்தியாசமாக காஸ்ட்யூம் ,கெட்டப் ஓக்கே,ஆனால் நடிப்பில் வெரைட்டி காட்டி இருக்க வேண்டாமா?
பட்டாம்பூச்சிகளை வளர்க்கும் நாசர் கவனிக்க வைத்தாலும் அவர் கேரக்டர் வலுவாக எழுதப்படவில்லை.நாயகியின் சகோதரி ஆக வரும் லட்சுமிப்ரபா அமைதியான நடிப்பில் கவர்கிறார்.
குறி ஜோதிடம் சொல்லும் சோடாபுட்டிப்பாட்டி ஆக வரும் கீதா கைலாசம் கவனிக்க வைக்கிறார்.படத்தில் எல்லோரும் அந்தக் கேரக்டரைக்கிழவி எனக்குறிப்பிடுவது ஏனோ?பாட்டி என்று சொல்லி இருக்கலாம்.
ஒளிப்பதிவு வேதராமன் சங்கரன்.கொடைக்கானலின் அழகைக்கூட்டி திரையில் காட்டி இருக்கிறார்.
இசை வைசாக் சோம்நாத்.பாடல்கள் சுமார் ரகம் தான்.பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
எடிட்டிங் புவனேஷ் மணிவண்ணன்.படத்தின் ரன்னிங்க் டைம் 132 நிமிடங்கள். மிக மெதுவான திரைக்கதை.
ஹரீஷ் ராஜகோபால் உடன் இணைந்து திரைக்கதை எழுதி தான் மட்டும் தனியே இயக்கி இருக்கிறார் விஜய் ரங்கநாதன்.
இயக்குநர் அறிமுக இயக்குநர் மட்டுமல்ல ,தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர்.
சபாஷ் டைரக்டர்
1 கத்தி ,பந்து என எந்த விஷயத்தைப்பார்த்தாலும் அது ஆயுதமாக மாறி நாயகிக்குத்தீங்கு விளைவிக்கும் என்ற மனப்பான்மை கொண்ட வித்தியாசமான மன நோய் நாயகிக்கு இருப்பதும் அதை விளக்கும் ஆரம்பக்கட்ட காட்சிகளும் நமக்கு மிகவும் புதுசு.
2 ஒரு பங்களா ,நாயகன்,நாயகி ,வில்லன் என்ற மூன்றே கேரக்டர்கள் என லொக்கேஷன்,ஆர்ட்டிஸ்ட் இரு விஷயத்திலும் சிக்கனம் காட்டி இது மினிமலிஸ்டிக் பிலிம் என்பதை நிரூபித்த விதம். அருமை.
3 ஒரு மனோவியல் தத்துவ அறிஞர் எழுதியது போல பிரமாதமான உளவியல் கூற்று வசனங்கள் படத்தின் பெரும் பலம்.
4 மன உளைச்சலில் இருக்கும் நாயகன் ,குற்ற உணர்ச்சியில் தவிக்கும் நாயகி இருவரது கேரக்டர் டிசைனும் ,நடிப்பும் கன கச்சிதம்
ரசித்த வசனங்கள்
1 நான் போறது பாதை,நீ இருப்பது பள்ளம்
2 உண்மையை சொல்ல சரியான இடம்,சரியான நேரம் என எதுவும் இல்லை.
3. எது எப்போ நடக்கனும்னு இருக்கோ அது அப்போ நடக்கும்.
4 பட்டாம்பூச்சியின் வாழ்நாள் 15 நாட்கள் டூ 30 நாட்கள் தான்
5 காடு காய்ஞ்சா தானாப்பத்திக்கும்.
6 பைக் பொண்ணு மாதிரி ,பொண்ணு பைக் மாதிரி.
கீ கொடுத்தா ஓடனும்,என்னுதுன்னு சொல்லிக்கனும்.சரியான ஆம்பளைத்தனம்
7. உண்மையான லவ் எது?
4 இடத்துல சாப்பிட்டாத்தான் வீட்டு சாப்பாட்டோட அருமை தெரியும்
,8 நீ தப்பிக்க நினைப்பது என் கிட்டே இருந்தா?உன் கிட்டே இருந்தா?
9 அடிபட்ட கொஞ்ச நாளிலேயே அந்த காயத்தை சுத்தி ஒரு அரிப்பு வருமே அது மாதிரி....
10 மனுசங்களுக்கு ஆசை நிறைய இருக்கு.அது தான் நம்மை வழி நடத்தும்.
11 அப்பா சரி இல்லைன்னா பையன் ரொம்ப நல்லவனா இருப்பான்,அல்லது அப்பா மாதிரியே மாறிடுவான்.
12 விதி என்பது நாம் எடுக்கும் சின்னச்சின்ன முடிவுகளால் ஆனது.
13 எதிர்காலத்தைப்பத்திய பயம் எல்லார்க்கும் உண்டு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 வில்லன் நாயகியை எதற்காகப்பிரிந்தான் என்பதை தெளிவாக சொல்லவே இல்லை.
2 நாயகனுக்கு பைக்கில் விபத்து ஏற்படும் காட்சியில் நம்பகத்தன்மையே இல்லை.
3 பட்டாம்பூச்சிகளை வளர்க்கும் நாசர் தான் வளர்த்த பட்டாம்பூச்சியைத்தேடி கானகத்தில் அலைவது எல்லாம் ஓவரோ ஓவர்.
4 க்ளைமாக்சில் வில்லன் நாயகியை விட்டு விட்டு எங்கோ செல்வதிலும் காரணம் சொல்லப்படவில்லை.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - உலகப்படங்கள் பார்த்துப்பழக்கம் உள்ளவர்கள் ,சீரியல் பார்க்கும் பெண்கள் பார்க்கலாம்.பொறுமை மிக அவசியம்.காமெடி டிராக்,டான்ஸ் போன்ற கமர்ஷியல் விஷயங்கள் இல்லை.ரேட்டிங்க் 3/5
| Oh Butterfly | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Vijay Ranganathan |
| Written by | Vijay Ranganathan |
| Produced by | Vennky Anand S Shah Vijay Ranganathan Nisha Patial |
| Starring | |
| Cinematography | Vedaraman Sankaran |
| Edited by | Bhuvanesh Manivannan |
| Music by | Vaisakh Somanath |
Production companies | Anthill Cinema Palampur Talkies |
Release date |
|
Running time | 132 minutes[1] |
| Country | India |
| Language | Tamil |
