இதன் விநியோக உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் 54 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது . கிட் டததட் ட முதலீட்டில் 90% இதன் மூலமாகவே கிடைத்து விட்ட்து . தமிழ் டப்பிங்க் வெர்சனிலும் ரிலீஸ் ஆகி உள்ளது ,கொடூரமான வன்முறைக்காட்சிகளுக்காக ஏ சர்ட்டிகெட் பெற்ற படம் என்பதால் குடும்பத்துடன் பார்க்கத்தகுதி அற்ற படம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர் . எஸ் பி .. சூப்பரிண்டெண்ட் ஆப் போலீஸ் . இவரது அனுமதி இல்லமால் இவரது அப்பா இவருக்குப்பெண்பார்க்க இவரைப்பற்றிய தகவல்களை ஒரு மேட்ரிமோனியல் சைட்டில் பதிவு செய்து விடுகிறார் . நாயகி அதன் மூலம் தொடர்பு கொண்டு நாயகனை நேரில் சந்தித்துப்பேசி அவரது மனம் கவர்ந்து விடுகிறார் .இவரும் ஒரு போலீஸ் ஆஃபீசர் தான் . அது பின்னர் தெரிய வருகிறது .. போலீஸ் ட்ரெயினிங்கிலேயே நாயகனை ரசித்தவர் தான் நாயகி . பின்னாளில் நாயகனின் போலீஸ் டீமிலேயே சேர்ந்து ஆக்சன் அவதாரம் எடுக்கிறார்
பல இடங்களில் பல கொடூரமான கொலைகள் ஒரே பேட்டர் னில் நடக்கிறது . அந்தக்கொலைகளை எல்லாம் செய்வது குறிப்பிடட ஒரு அமைப்பு என்பதும் பயங்கரவாத கும்பல் என்பதும் தெரியவருகிறது .. அவர்களைப்பிடிக்க நாயகன் ஒரு ஸ்பெஷல் டீம் அமைத்து தேடுகிறார் . இந்த சமயத்தில் நாயகனின் டீமில் வேலை செய்யும் ஒரு ஏ எஸ் பி நாயகன் அதே பேட்டர் னில் இரு கொலைகள் செய்ததைக்கண்டு பிடிக்கிறார் . நாயகனை ஜெயிலுக்கு அனுப்புகிறார்
குருதிப்புனல் படத்தில் நாயகன் கமல் எப்படி எதிரியின் கூடாரத்தில் நுழைகிறாரோ அதே டெக்னி க் தான் இதிலும் நாயகன் செய்வது . அதாவது கொடூரமான ஆட்கள் இருவரைக்கொடூரமாகக்கொலை செய்து வெப்சைட்டில் அப்டேட்டுவது . அந்த குறிப்பிடட க்ரூ ப்பில் இணைவது . பின்னர் அவர்களை பிடிப்பது . இதுதான் நாயகனின் திட் டம் . 500 லி ட்டர் ரத்தம் 189 கொலைகள் நடந்தபின் நாயகன் வில்லன் க்ரூப்பைப்பிடிப்பதுதான் மீதிக்கதை
நாயகன் ஆக நான் ஈ புகழ் நாணி . சாக்லேட் பாய் ஆக அதில் இருந்தவர் இதில் தாடி எல்லாம் வைத்து பிச்சைக்காரன் மாதிரி இருக்கிறார் . போலீஸ் ஆபீசர் எப்படி தாடி வைக்கலாம் என லாஜிக் கொஸ்டீன் யாரும் கேட்டு விடக்கூடாது என தீவிரவாதிகளைப்பிடிக்க மாறுவேடம் என சமாளிக்கிறார்கள்
நாயகி ஆக ஸ்ரீநிதி செட் டி அழகாக வந்து போகிறார் . நாயகன் உடனான ரொமாண்டிக் போர்சன் ரசிக்கும்படி இருக்கிறது .இரண்டு இடங்களில் லிப் லாக் சீன்களும் உண்டு . அதற்குத்தனி சம்பளமாம்
நாயகனின் அப்பாவாக சமுத்திரக்கனி வருகிறார் . அதிக வாய்ப்பில்லை . நாயகனை ஜெயிலில் தள்ளும் ஆபீசர் ஆக கோமாளி பிரசாத் நடித்து இருக்கிறார் . இவர் ஒரு லேடி . பெயரே அதுதான் . இவர் கூட கனவில் ஒரு டூயட் எதிர்பார்த்தேன் , ஏமாந்தேன்
மிக்கி ஜெ மேயரின் இசையில் 3 பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன . பின்னணி இசை ஒரே இரைச்சல் . காது வலிக்கிறது .ஷானு ஜான் வர்கீசின் ஒளிப்பதிவு அருமை . ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பிரமிக்க வைக்கிறது கார்த்திகா சீனிவாசன் எடிட்டிங்கில் படம் 156 நிமிடங்கள் ஓடுகிறது . கதை , திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ஷைலேஷ் கொலானு
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் வில்லனால் கத்திக்குத்து பட் டதும் கத்திகுத்து உன் உடலில் படடால் அந்தக்கத்தியை மீண்டும் வெளியே எடுக்க விடாதே என போலீஸ் ட்ரெய்னிங்கில் ஒலித்த குரலை நினைவு கூர்வது , அதைத்தொடர்ந்து வரும் ஆக்சன் சீக்வன்ஸ் அபாரம்
2 வில்லனின் மர்டர் பேட்டர்னில் நாயகன் இரு கொலைகள் செய்வது , ஜெயிலுக்குப்போவது . பின்னர் அவை எல்லாமே மாஸ் டர் பிளான் என தெரிய வருவது
3 மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லை என்றாலும் நாயகியுடனான ரொமான்ஸ் போர்சன் ரசிக்க வைத்தது
ரசித்த வசனங்கள்
1 அன்பு காட்டுவதற்கும், அன்பாப்பேசுவதற்கும் அம்மாவுக்கு மட்டும் தான் தெரியும்
2 உங்க பேசில் இருந்தே அம்மாவின் அன்புக்காக ஏங்குபவர் என்பது தெரியுது
3 உங்களைப்பார்ப்பவர்கள் எல்லாருமே இப்படித்தான் ஓடிப்போவாங்களா?
ஏன் ? நீயும் ஓடிப்போகப்போறயா?
4 எப்போ தான் உன்னோட முத்தம் கிடைக்கும் ?
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்
5 சி டி கே = கேப்சர் டார்ச்சர் கில்லிங்க்
6 உன் வாழ்க்கைக்காக நீ ஓடிக்கொண்டே இரு
7 மனிதனால் கிராஸ் பண்ண முடியாத ஒரு லைன் , ஒரு சர்க்கிள் .. அதைத்தேடிட்டு இருக்கேன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனின் இன்ட் ரோ சீனில் கேன்சர் பேஷண்ட் மாதிரி எதனால் தம் அடித்துக்கொண்டே வருகிறார் ? பரிதாபமாக இருக்கிறது
2 நீ சிரிச்சா அழகா இருப்பே , ஆனா சிரிக்க மாட் டேங்கற என்ற நாயகியின் டயலாக்கைக்கேட்டதும் ரெட்ரோ படம் நினைவு வருகிறது . அதே டெய்லர் அதே வாடகை . ரெண்டு டைரக்டர்களும் வேறு எதோ ஒரு படத்தைப்பார்த்து இன்ஸ்பையர் ஆகி விட் டார்களோ ?
3 நாயகன் படம் முழுக்க 68 முறை தம் அடிக்கிறார் . எதுக்கு ?
4 ஹீரோக்கள் எல்லாம் தாடி வைத்தால் ஸ்டைலிஸாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள் . ராப்பிச்சை மாதிரி தான் இருக்கு
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சிரஞ்சீவி ரசிகர்கள் பார்க்கலாம் . பெண்கள் தவிர்க்கவும் . எங்களுக்கும் சம உரிமை வேண்டும் என நினைப்பவர்கள் பார்த்துத்தொலைக்கவும் . ரேட்டிங் 2 / 5
HIT: The Third Case | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Sailesh Kolanu |
Written by | Sailesh Kolanu |
Produced by | |
Starring |
|
Cinematography | Sanu John Varghese |
Edited by | Karthika Srinivas |
Music by | Mickey J. Meyer |
Production companies | Wall Poster Cinema Unanimous Productions |
Release date |
|
Running time | 157 minutes[1] |
Country | India |
Language | Telugu |
Budget | ₹60–65 crore[2] |
Box office | ₹101 crore[3] |
0 comments:
Post a Comment